சனி, 8 ஏப்ரல், 2023

பத்ரு தரும் பாடம்

 

17- ம் தராவீஹ்  பயான்

பொதுவாகவே எந்தப் போராக இருந்தாலும் உயிருக்கு அஞ்சாத நபித்தோழர்களின் துணிவு

عن أنس ، أن النبي صلى الله عليه وسلم شاور حين بلغه إقبال أبي سفيان ، قال : فتكلم أبو بكر رضي الله عنه فأعرض عنه ، ثم تكلم عمر رضي الله عنه فأعرض عنه ، فقام سعد بن عبادة فقال : إيانا تريد يا رسول الله صلى الله عليك ؟ والذي نفسي بيده لو أمرتنا أن نخيضها البحر لأخضناها ، ولو أمرتنا أن نضرب أكبادها إلى برك الغماد لفعلنا ، قال : فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا ، (دلائل النبوة للبيهقي

 பத்ருப் போருக்காக அதாவது அபூ சுஃப்யானுடைய வாணிபக் கூட்டத்தை எதிர் கொள்வது தொடர்பாக நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அபூபக்கர் ரழி, உமர் ரழி ஆகியோர் எழுந்து நாம் செல்ல வேண்டும் என்று ஆதரவுக் கருத்தைத் தெரிவித்த போதும் நபி ஸல் அவர்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. காரணம் இவர்கள் மக்காவாசிகள் என்பதால் மக்காவாசிகளால் துன்புறுத்தப்பட்டவர்கள். இவர்கள் போருக்கு முன் வருவதில் ஆச்சரியம் இல்லை. மதீனாவாசிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய போது அன்சாரி சஹாபியான ஸஃது ரழி அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதரே எங்களின் பதிலைத் தான் தாங்கள் எதிர் பார்க்கிறீர்கள் என்று அறிவோம் தாங்கள்  எங்களை நோக்கி கடலில் குதிக்கச் சொன்னாலும் குதிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்கள் அப்போது தான் நபி ஸல் அவர்களுக்கு ஆறுதல் உண்டானது.             

இந்த ஸஃது ரழி அவர்களைப் போலவே ஹிஜ்ரி 44-ல் பிறந்த தாபிஈ ஸஈத் ரழி அவர்கள் ஹஜ்ஜாஜ் மூலம் ஷஹீதாக்கப்பட்ட போது உயிருக்கு அஞ்சாமல் பேசிய வார்த்தைகள்

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

 ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்தது ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

பத்ருப்போரில் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்களின் வீரம் அபூஜஹ்லை குற்றுயிராக்கியது

عن عَبْد الرَّحْمَنِ بْن عَوْفٍ إِنِّي لَفِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ إِذْ الْتَفَتُّ فَإِذَا عَنْ يَمِينِي وَعَنْ يَسَارِي فَتَيَانِ حَدِيثَا السِّنِّ فَكَأَنِّي لَمْ آمَنْ بِمَكَانِهِمَا إِذْ قَالَ لِي أَحَدُهُمَا سِرًّا مِنْ صَاحِبِهِ يَا عَمِّ أَرِنِي أَبَا جَهْلٍ فَقُلْتُ يَا ابْنَ أَخِي وَمَا تَصْنَعُ بِهِ قَالَ عَاهَدْتُ اللَّهَ إِنْ رَأَيْتُهُ أَنْ أَقْتُلَهُ أَوْ أَمُوتَ دُونَهُ فَقَالَ لِي الْآخَرُ سِرًّا مِنْ صَاحِبِهِ مِثْلَهُ قَالَ فَمَا سَرَّنِي أَنِّي بَيْنَ رَجُلَيْنِ مَكَانَهُمَا فَأَشَرْتُ لَهُمَا إِلَيْهِ فَشَدَّا عَلَيْهِ مِثْلَ الصَّقْرَيْنِ حَتَّى ضَرَبَاهُ وَهُمَا ابْنَا عَفْرَاءَ (بخاري)

முஆத், முஅவ்வித் ரழி செய்த முயற்சியை இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் முடித்து வைத்தார்கள்

மக்காவில் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களுக்கு அபூஜஹ்ல் செய்த கொடுமைக்கு பழிக்குப் பழி

لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ   (العلق)

روى أنه لما نزلت سورة الرحمن {عَلَّمَ الْقُرْءَانَ} قال عليه السلام : لأصحابه من يقرؤها منكم على رؤساء قريش ، فتثاقلوا مخافة أذيتهم ، فقام ابن مسعود وقال : أنا يا رسول الله ، فأجلسه عليه السلام ، ثم قال : من يقرؤها عليهم فلم يقم إلا ابن مسعود ، ثم ثالثاً كذلك إلى أن أذن له ، وكان عليه السلام يبقى عليه لما كان يعلم من ضعفه وصغر/ جثته ، ثم إنه وصل إليهم فرآهم مجتمعين حول الكعبة ، فافتتح قراءة السورة ، فقام أبو جهل فلطمه فشق أذنه وأدماه ، فانصرف وعيناه تدمع ، فلما رآه النبي عليه السلام رق قلبه وأطرق رأسه مغموماً ، فإذا جبريل عليه السلام يجيء ضاحكاً مستبشراً ، فقال : يا جبريل تضحك وابن مسعود يبكي فقال : ستعلم ، فلما ظهر المسلمون يوم بدر التمس ابن مسعود أن يكون له حظ في المجاهدين ، فأخذ يطالع القتلى. فإذا أبو جهل ، مصروع يخور ، فخاف أن تكون به قوة فيؤذيه فوضع الرمح على منخره من بعيد فطعنه ، ولعل هذا معنى قوله : {سَنَسِمُه عَلَى الْخُرْطُومِ} ثم لما عرف عجزه ولم يقدر أن يصعد على صدره لضعفه فارتقى إليه بحيلة ، فلما رآه أبو جهل قال : يا رويعي الغنم لقد ارتقيت مرتقى صعباً ، فقال ابن مسعود : الإسلام يعلو ولا يعلى عليه ، فقال أبو جهل : بلغ صاحبك أنه لم يكن أحد أبغض إلي منه في حياتي ولا أبغض إلي منه في حال مماتي ، فروى أنه عليه السلام لما سمع ذلك قال : "فرعوني أشد من فرعون موسى فإنه قال {ءَامَنتُ} وهو قد زاد عتواً" ثم قال لابن مسعود : اقطع رأسي بسيفي هذا لأنه أحد وأقطع ، فلما قطع رأسه لم يقدر على حمله ، ولعل الحكيم سبحانه إنما خلقه ضعيفاً لأجل أن لا يقوى على الحمل لوجوه : أحدها : أنه كلب والكلب يجر والثاني : لشق الأذن فيقتص الأذن بالأذن والثالث : لتحقيق الوعيد المذكور بقوله : {لَنَسْفَعَا بِالنَّاصِيَةِ} فتجر تلك الرأس على مقدمها ، ثم إن ابن مسعود لما لم يطقه شق أذنه وجعل الخيط فيه وجعل يجره إلى رسول الله صلى الله عليه وسلّم وجبريل بين يديه يضحك ، ويقول : يا محمد أذن بأذن لكن الرأس ههنا مع الأذن (تفسير الرازي 

 அவனுடைய நெற்றி முடியைப் பிடித்து இழுத்து வருவோம் அதாவது இழுக்க வைப்போம். சூரா அலக்

 சுருக்கம்- இந்தப் பொருளின் அடிப்படையில் அபூஜஹ்லுக்கு இந்த உலகிலேயே வழங்கப்பட்டு விட்ட தண்டனையை குறிக்கும் வசனமாக மேற்காணும் வசனம் இருக்கிறது என விரிவுரையாளர்கள் கருதுகின்றனர். அதாவது மக்காவில் முஸ்லிம்களுக்கு பெரும் துன்பம் விளைவித்த அபூஜஹ்ல்  பத்ருப்போரில் கொல்லப்பட்டான். அவனைக் கொலை செய்தவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள்.  இவர்கள் தான் மக்காவில் இருக்கும்போது குர்ஆனை ஓதியதற்காக  அபூஜஹ்லிடம் அடி வாங்கியவர்கள். அதாவது ரஹ்மான் சூரா இறங்கிய நேரத்தில் இதை குறைஷித் தலைவர்கள் முன்னிலையில் யார் ஓதிக் காட்டுவீர்கள் என்று கேட்க, அங்கிருப்பவர்களிலேயே மெலிந்த, குள்ளமான , சிறிய உருவம் கொண்ட இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் முன்வந்து நான் ஓதிக் காட்டுகிறேன் என்றார்கள்.

(இப்னு மஸ்ஊத்ரழி அவர்கள் குள்ளமாகவும் மெலிந்தும் இருப்பவர்கள் ஒருமுறை கடுமையான காற்றடித்து கீழே விழுந்து விட்டார்கள். மற்றவர்கள் அதைக்கண்டு சிரித்தார்கள் என்ற வரலாறும் உண்டு.)

 இவர்களால்  திடகாத்திரமாக இருந்த அபூஜஹ்லிடம் அடி வாங்கும் அளவுக்கு உடல் பலம் இல்லை என்பதால் மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொன்னார்கள். மூன்றாவது முறையும் இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் தான் முன்வந்தார்கள். நபி ஸல் அவர்களுக்கு அவரை அனுப்ப மனம் இல்லை. இருந்தாலும் இப்னு மஸ்ஊத் ரழி கஃபாவைச் சுற்றி இருந்த குறைஷித் தலைவர்கள் முன்னிலையில் குர்ஆனை ஓதிக் காட்ட, அபூஹ்ஹ்ல் எழுந்து இந்த நபித்தோழரை  பலமாக அடித்ததில்  காது கிழிந்து  உடலெங்கும் இரத்தம் சொட்ட நபியவர்களிடம் அவர் வந்த போது, அதைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அழுகை வந்து விட்டது. நான் தான் உங்களை அங்கு போக வேண்டாம் என  தடுத்தேன்அல்லவா? என்று கண்கலங்கிய போது அங்கு வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் சிரித்தார்கள்.  என் தோழர் அடி வாங்கியுள்ள நிலையில் நீங்கள் சிரிக்கிறீர்களே?  என்று நபியவர்கள் வினவ,  இந்த  சிரிப்புக்கான காரணம் விரைவில் புரியும் என  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பதில் கூறினார்கள்.

 அந்த புதிருக்கான விடை தான் பத்ருப்போரில் கிட்டியது. பத்ரில் அபூஜஹ்ல் எங்கே கிடக்கிறான் என்று பார்த்து வரும்படி  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்  ரழி அவர்களை  அண்ணலார் அனுப்பிய போது, அவன் குற்றுயிராக கிடப்பதை  அந்த நபித்தோழர் கண்டார்கள். (முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள் அவனுடைய குதிரையின் கால்களை வெட்டியதில் அவன் சரிந்து சாகும் நிலையில் கிடந்தான்) அவனது தலையை வெட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்ல எண்ணிய இப்னு மஸ்ஊத் ரழி அவர்களால் அந்த தலையைக் கூட தூக்க முடியவில்லை. 

அப்போது அவர்கள் வேறு வழியின்றி, அவனுடைய காதுகளில் ஓட்டை போட்டு, அதில் கயிற்றைக் கட்டி அதை அவனுடைய தலைமுடிகளுடன் பிணைத்து அப்படியே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் இழுத்துக் கொண்டு வர, அவருக்கு முன்னால் வானவர்  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் சிரித்த படி வந்தார்கள். அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் வந்தவுடன், அல்லாஹ்வின் தூதரே!  காதுக்கு பதில் காது இங்கே வந்து விட்டது. ஆனால் தலையும் சேர்ந்தே வந்திருக்கிறது என  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

எதிரிகள் எந்த இடத்தில் வீழ்ந்து மடிவார்கள் என்று நபி ஸல் கோடிட்டுக் காட்டினார்களோ அதற்கு சற்றும் மாற்றமில்லாமல் நடந்தது

قَالَ أَنَسٌ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا وَوَضَعَ يَدَهُ عَلَى الْأَرْضِ وَهَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا وَوَضَعَ يَدَهُ عَلَى الْأَرْضِ وَهَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا وَوَضَعَ يَدَهُ عَلَى الْأَرْضِ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا جَاوَزَ أَحَدٌ مِنْهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخِذَ بِأَرْجُلِهِمْ فَسُحِبُوا فَأُلْقُوا فِي قَلِيبِ بَدْرٍ (ابوداود- بَاب فِي الْأَسِيرِ يُنَالُ مِنْهُ وَيُضْرَبُ وَيُقَرَّرُ- كِتَاب الْجِهَادِ- مسلم- بَاب غَزْوَةِ بَدْرٍ- كِتَاب الْجِهَادِ

பத்ருப் போருக்கு முன்னால் முதல் நாள் நபி ஸல் அவர்கள் நாளை நடைபெறும் போரில் எந்தெந்த எதிரிகள் எந்த இடத்தில் வீழ்ந்து மடிவார்கள் என்று நபி ஸல் தன் விரலை வைத்துக் காட்டினார்கள். அதற்கு சற்றும் மாற்றமில்லாமல் நடந்தது. அவர்களை இழுத்து வர நபி ஸல் ஏவினார்கள். அதன்படி அவர்களின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்து வரப்பட்டு கலீப் என்ற கிணற்றில் போடப்பட்டது. அந்த கிணற்றின் அடையாளங்கள் பத்ரில் இன்றும் உள்ளன.                                    

குறைஷித் தலைவர்களை ஒரே குழியில் போட்டு மூடி அவர்களை முன்னோக்கி நபி ஸல் பேசியது

عَنْ أَبِي طَلْحَةَ رضي الله عنه  أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلًا مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ فَقُذِفُوا فِي طَوِيٍّ مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيثٍ مُخْبِثٍ وَكَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلَاثَ لَيَالٍ فَلَمَّا كَانَ بِبَدْرٍ الْيَوْمَ الثَّالِثَ أَمَرَ بِرَاحِلَتِهِ فَشُدَّ عَلَيْهَا رَحْلُهَا ثُمَّ مَشَى وَاتَّبَعَهُ أَصْحَابُهُ وَقَالُوا مَا نُرَى يَنْطَلِقُ إِلَّا لِبَعْضِ حَاجَتِهِ حَتَّى قَامَ عَلَى شَفَةِ الرَّكِيِّ فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ يَا فُلَانُ بْنَ فُلَانٍ وَيَا فُلَانُ بْنَ فُلَانٍ أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمْ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ مَا تُكَلِّمُ مِنْ أَجْسَادٍ لَا أَرْوَاحَ لَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ قَالَ قَتَادَةُ أَحْيَاهُمْ اللَّهُ حَتَّى أَسْمَعَهُمْ قَوْلَهُ تَوْبِيخًا وَتَصْغِيرًا وَنَقِيمَةً وَحَسْرَةً وَنَدَمًا (بخاري) باب عِدَّةِ أَصْحَابِ بَدْرٍ -كتاب المغازى

ஈமான் வலிமை இருந்தால் எண்ணிக்கையில் குறைந்த முஸ்லிம்களின் படை வெல்லும்

يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ (65)الانفال

ஈமானிய வலிமையுள்ள குறைந்த கூட்டம் பெரும் கூட்டத்தை வெல்லும் என்பதற்கு பத்ருப்போர் சிறந்த உதாரணம். அல்லாஹ் அத்தகைய குறைந்த எண்ணிக்கை கொண்ட கூட்டத்திற்கு ஆதரவாக மலக்குகளை இறக்கினான் என்பதற்கான கண்கூடான சான்று இன்றும் இருக்கிறது. பொதுவாக மலைகள் என்றால் பாறைகள் நிறைந்திருக்கும் என்று நாம் அறிவோம். ஆனால் பத்ருப்போர் நடந்த இடத்தில் உள்ள மலையை இன்றைக்கு நாம் பார்த்தாலும் மணலாக இருக்கிறது. காரணம் மலக்குகள் அந்த மலை மீது இறங்கியதால் என்று கூறப்படுகிறது.

ஈமான் வலிமையுள்ள குறைந்த கூட்டம் வெல்லும் என்பதற்கு பின்வரும் சம்பவமும் உதாரணம்.

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249)البقرة

عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَحَدَّثُ أَنَّ عِدَّةَ أَصْحَابِ بَدْرٍ عَلَى عِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ وَلَمْ يُجَاوِزْ مَعَهُ إِلَّا مُؤْمِنٌ بِضْعَةَ عَشَرَ وَثَلَاثَ مِائَةٍ (بخاري) باب عِدَّةِ أَصْحَابِ بَدْرٍ-كتاب المغازى

ஜாலூத் என்ற சர்வாதிகாரியை அழிக்க ஜோர்டான் நதியை ஒட்டி இஸ்ரவேலர்களை வழி நடத்திச் சென்ற தாலூத் தம் சமுதாய மக்களில் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக அல்லாஹ்வின் உத்தரவின் படி இச் சோதனையை நடத்தினார். புறப்படும்போது கொண்ட பல ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையாக இந்தப் படை புறப்பட்டது. ஆனால் அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டது பத்ருப் போரின் எண்ணிக்கை அளவிலான 313 பேர் மட்டும்தான். அதாவது செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்து செல்லும்போது ஒரு சிரங்கை தண்ணீருக்கு மேல் அருந்தக் கூடாது என்று அல்லாஹ்வின் உத்தரவு இருந்த து. பலர் தங்களின் மனதில் தண்ணீர் நிறைய குடித்தால் தானே தெம்பாக போர் செய்யலாம் என்று எண்ணி  அல்லாஹ்வின் உத்தரவை மீறி நிறைய குடித்தனர். அவ்வாறே குடித்தவர்கள் அனைவரும் அங்கேயே சோர்ந்து விட்டனர். அல்லாஹ்வின் உத்தரவின் படி ஒரு சிரங்கை அளவு மட்டும் குடித்தவர்கள் 313 பேர் தான். அவர்கள் உற்சாகமாக போரிட்டனர். அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.                                        

ஈமான் வலிமையுடன் போரிடுபவர்களுக்கு அறியாப் புறத்தில் இருந்து உதவி வரும்

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا (9)الاحزاب

ஹிஜ்ரி 5-ம் ஆண்டு நடந்த அகழ்ப்போரைப் பற்றி இந்த வசனம் குறிப்பிடுகிறது

يقُول تَعَالَى مُخْبِرًا عَنْ نِعْمَته وَفَضْله وَإِحْسَانه إِلَى عِبَاده الْمُؤْمِنِينَ فِي صَرْفه أَعْدَاءَهُمْ وَهَزْمه إِيَّاهُمْ عَام تَأَلَّبُوا عَلَيْهِمْ وَتَحَزَّبُوا وَذَلِكَ عَام الْخَنْدَق وَذَلِكَ فِي شَوَّال سَنَة خَمْس مِنْ الْهِجْرَة عَلَى الصَّحِيح الْمَشْهُور (تفسير ابن كثير

وَكَانَ سَبَب قُدُوم الْأَحْزَاب أَنَّ نَفَرًا مِنْ أَشْرَاف يَهُود بَنِي النَّضِير الَّذِينَ كَانُوا قَدْ أَجَلَاهُمْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْمَدِينَة إِلَى خَيْبَر مِنْهُمْ سَلَّام بْن أَبِي الْحَقِيق وَسَلَّامُ بْن مشكم وَكِنَانَة بْن الرَّبِيع خَرَجُوا إِلَى مَكَّة فَاجْتَمَعُوا بِأَشْرَافِ قُرَيْش وَأَلَّبُوهُمْ عَلَى حَرْب النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَوَعَدُوهُمْ مِنْ أَنْفُسهمْ النَّصْر وَالْإِعَانَة فَأَجَابُوهُمْ إِلَى ذَلِكَ ثُمَّ خَرَجُوا إِلَى غَطَفَان فَدَعَوْهُمْ فَاسْتَجَابُوا لَهُمْ أَيْضًا وَخَرَجَتْ قُرَيْش فِي أَحَابِيشهَا وَمَنْ تَابَعَهَا وَقَائِدهمْ أَبُو سُفْيَان صَخْر بْن حَرْب وَعَلَى غَطَفَان عُيَيْنَةَ بْن حِصْن بْن بَدْر وَالْجَمِيع قَرِيب مِنْ عَشَرَة آلَاف فَلَمَّا سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِمَسِيرِهِمْ أَمَرَ الْمُسْلِمِينَ بِحَفْرِ الْخَنْدَق حَوْل الْمَدِينَة مِمَّا يَلِي الشَّرْق وَذَلِكَ بِإِشَارَةِ سَلْمَان الْفَارِسِيّ رَضِيَ اللَّه عَنْهُ فَعَمِلَ الْمُسْلِمُونَ فِيهِ وَاجْتَهَدُوا وَنَقَلَ مَعَهُمْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ التُّرَاب وَحَفَرَ وَكَانَ فِي حَفْره ذَلِكَ آيَات وَدَلَائِل وَاضِحَات وَجَاءَ الْمُشْرِكُونَ فَنَزَلُوا شَرْقِيّ الْمَدِينَة قَرِيبًا مِنْ أُحُد وَنَزَلَتْ طَائِفَة مِنْهُمْ فِي أَعَالِي أَرْض الْمَدِينَة .(تفسير ابن كثير

இன்று எண்ணிக்கையில் நாம் அதிகம் இருந்தாலும் ஈமானுடைய வலிமை இல்லாததால் பல தோல்விகள்

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى5 عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا6 فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ7 وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ رواه أبوداود

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும். உலக அளவில் கிறிஸ்தவர்கள் 220 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி. இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி             

கடைசி காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு யுத்தம் நடைபெறும் அதில் இறுதியில் முஸ்லிம்கள் வெற்றியடைவார்கள்.காரணம் அப்போது மஹ்தீஅலை வழி நடத்துவார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 7460

நபி ஸல் கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் கிறிஸ்தவர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும் பொருள் உண்டு)  ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)  எங்களுக்கும், எங்களில் சிறைக் கைதிகளாக   பிடிக்கப்பட்டோருக்குமிடையில் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்பார்கள். ( அதாவது முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர் புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வர்) அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் அதன் பின் ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டு  போர் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடம் தஜ்ஜால் வந்து விட்டான் என்பான். உடனே அவர்கள் தம் குடும்பத்தாரிடம் புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள் சிரியாவுக்கு வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான்.பின்பு அவர்கள்  போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர்செய்து கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அப்போது தான் ஈஸா அலை வானில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு  தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக கரைந்து  அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா அலை அவர்களின் கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள்   முஸ்லிம் 5553                          

 

 

1 கருத்து:

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...