வெள்ளி, 7 ஏப்ரல், 2023

தாப்பதுல் அர்ள்

 16- ம் தராவீஹ்  பயான்

حُذَيْفَة بْن أُسَيْد الْغِفَارِيّ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ أَشْرَفَ عَلَيْنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غُرْفَة وَنَحْنُ نَتَذَاكَر السَّاعَة فَقَالَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَا تَقُوم السَّاعَة حَتَّى تَرَوْا عَشْر آيَات : طُلُوع الشَّمْس مِنْ مَغْرِبهَا وَالدُّخَان وَالدَّابَّة وَخُرُوج يَأْجُوج وَمَأْجُوج وَخُرُوج عِيسَى اِبْن مَرْيَم وَالدَّجَّال وَثَلَاثَة خُسُوف : خَسْف بِالْمَشْرِقِ وَخَسْف بِالْمَغْرِبِ وَخَسْف بِجَزِيرَةِ الْعَرَب وَنَار تَخْرُج مِنْ قَعْر عَدَن تَسُوق النَّاس - أَوْ تَحْشِر النَّاس - تَبِيت مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَتَقِيل مَعَهُمْ حَيْثُ قَالُوا "  (ابن ماجة

மறுமை நாளின் கடைசி பத்து அடையாளங்களில் ஒன்று  தாப்பதுல் அர்ள்  அல்குர்ஆனும், நபிமொழியும் இதற்கு இப்பெயரையே கூறுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பு பூமியின் மிருகம் என்பதாகும்.

 وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل

தண்டனை நிகழும் என்ற வார்த்தை அவர்கள் மீது உறுதியாகி விடும்போது நாம் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளியாக்கி விடுவோம். மக்கள் எமது அத்தாட்சிகளை உறுதியாக நம்பிக்கை கொண்டோராயிருக்கவில்லை என்று அவர்களுக்கு அது சொல்லும்.” (ஸூரா நம்ல் : 82)

தாப்பதுல் அர்ழ் என்றவார்த்தை குர்ஆனில் மற்றொரு இடத்தில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவத்தில் கரையான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப் படுகிறது

فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض } الأرضة { تأكل منسأته } عصاه  }سبأ 12 - 14 /

சூரியன் மேற்கில் உதயமாகுவதும் இந்த மிருகம் தோன்றுவதும் அடுத்தடுத்து நடைபெறும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَوَّلُ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى ». قَالَ عَبْدُ اللَّهِ فَأَيَّتُهُمَا مَا خَرَجَتْ قَبْلَ الأُخْرَى فَالأُخْرَى مِنْهَا قَرِيبٌ (ابن ماجة

  அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் மனனமிட்டேன். இன்னும் நான் அதனை மறக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்வதை நான் கேட்டேன். அடையாளங்களில் முதலாவது வெளியாவது சூரியன் மேற்கில் உதிப்பதும், முற்பகல் நேரத்தில் அம்மிருகம் தோன்றி மக்களிடம் வருவதும் தான். இவற்றில் எது முதலில் தோன்றுகிறதோ அடுத்தது அதனையடுத்து கிட்டடியிலேயே தோன்றி விடும். (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)

சூரியன் மேற்கில் உதயமாகுதல்

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ». (ابن ماجة

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அவ்வாறு அது உதித்து மக்கள் அதனைக் கண்டால் அவர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் அப்போது ஈமான் கொள்ளல் எந்த ஆண்மாவுக்கும் (அது ஏற்கனவே ஈமான் கொண்டு இல்லாவிட்டால்) பயன் கொடுக்க மாட்டாது. அல்லது தன் ஈமானில் அது எந்த நன்மையை சம்பாதிக்கவும் மாட்டாது.

விளக்கம் தவ்பாவுக்கு இரண்டு விதமான எல்லைகள் உண்டு என்று சொல்லப்படும் 1. தனி மனிதனைக் கவனித்து அதாவது உயிர் பிரியும் கடைசி நேரம் வந்து விட்டால் தவ்பா ஏற்கப்பட்டாது இது ஒவ்வொரு தனி மனிதனைக் கவனித்து 2. ஒட்டு மொத்த மக்களைக் கவனித்து. இது தான் சூரியன் மேற்கில் உதயமாகுவதாகும்

 

சூரியன் மேற்கில் உதயமாகி விடால் தவ்பாவின் வாசல் அடைக்கப்படும் என்பதால் அதற்கு அடுத்து இந்த மிருகம் வந்து ஒவ்வொருவரின் நெற்றியிலும் இவர் முஃமின் இவர் காஃபிர் என அடையாளமிட பொருத்தமாக இருக்கும்.

தாப்பதுல் அர்ழ் வெளியானவுடன் அது ஒவ்வொருவரின் நெற்றியிலும் அடையாளமிடும்

 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة

معانى بعض الكلمات : تجلو : تنوِّر -    الحواء : البيوت المجتمعة من الناس على ماء  -  تخطم : تسم

 தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும்.  எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர்.

 அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும்  பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே  எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு.

தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்

عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا.  (ابن ماجة

புரைதா ரழி அவர்கள் கூறினார்கள் என்னை நபி ஸல் அவர்கள் மக்காவுக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அந்த இடம் முற்றிலும் காய்ந்து கிடந்தது. அதைச் சுற்றி மணல் இருந்த து அங்கு வைத்து நபி ஸல் அவர்கள் இங்கிருந்து தான் தாப்பதுல் அர்ழ் வெளியாகும் என்றார்கள் அப்போது அங்கே ஒரு கைத்தடி இருந்த து. என புரைதா ரழி கூறினார்கள் பிற்காலத்தில் புரைதா ரழி தன்னுடைய மகனுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற போதும் அந்த கைத்தடியைக் காட்டினார்கள்

عَنْ أَبَان بْن صَالِح قَالَ سُئِلَ عَبْد اللَّه بْن عَمْرو عَنْ الدَّابَّة فَقَالَ الدَّابَّة تَخْرُج مِنْ تَحْت صَخْرَة بِجِيَادٍ وَاَللَّه لَوْ كُنْت مَعَهُمْ أَوْ لَوْ شِئْت بِعَصَايَ الصَّخْرَة الَّتِي تَخْرُج الدَّابَّة مِنْ تَحْتهَا قِيلَ فَتَصْنَع مَاذَا يَا عَبْد اللَّه بْن عَمْرو فَقَالَ تَسْتَقْبِل الْمَشْرِق فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الشَّام فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْمَغْرِب فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْيَمَن فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَرُوح مِنْ مَكَّة فَتُصْبِح بِعُسْفَانَ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ لَا أَعْلَم (تفسير ابن كثير

சுருக்கம்- அது வெளியானவுடன் கிழக்கு நோக்கி ஒரு சப்தமிடும். ஷாமை நோக்கி ஒரு சப்தமிடும். மேற்கு நோக்கி ஒரு சப்தமிடும். யமன் நோக்கி ஒரு சப்தமிடும். மக்கா நோக்கி ஒரு சப்தமிடும்.

மக்களெல்லாம் மினாவில் இருக்கும்போது இரவு நேரத்தில் வெளியாகும் என்ற நபிமொழி

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ لَيْلَةَ جَمْعٍ وَالنَّاسُ يَسِيرُونَ إِلَى مِنًى فَتَحْمِلُهُمْ بَيْنَ عَجُزِهَا وَذَنَبِهَا فَلاَ يَبْقَى مُنَافِقٌ إِلاَّ خَطَمَتْهُ ، قَالَ : وَتَمْسَحُ الْمُؤْمِنَ ، قَالَ : فَيُصْبِحُونَ وَهُمْ أَشَرُّ مِنَ الدَّجَّالِ. (مصنف ابن شبية

யஃஜூஜ், மஃஜூஜ் பற்றி...

حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ (96)

 யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் திறந்து விடப்படுகையில், அவர்கள் அனைத்துப் புறமிருந்தும் விரைந்து வருவார்கள். அந்த சத்திய வாக்குறுதி நிறைவேறல் நெருங்கி விட்டது. அப்போது நிராகரிப்பாளர்களின் பார்வைகள் இமைக்காது நோக்கியவாறு இருக்கும். (ஸூரா அன்பியா : 96, 97)

கஹ்ஃப் ஸூராவில் அல்லாஹ் துல்கர்னைன் என்ற மன்னன் பற்றிக் குறிப்பிடும் போது இந்த யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் பற்றிக் குறிப்பிடுகிறான். துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன் மறையாத இடங்களுக்கெல்லாம் பிரயாணம் செய்தபோது நாகரீகத்தில் பின்தங்கியிருந்த ஒரு சமூகத்தினரையும் சந்தித்தார். இவ்வினத்தினரின் அநியாய அட்டூழியங்களிலிருந்து காக்க இரு மலைகளிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பியதாகவும் அல்லாஹ் அங்கு விளக்குகிறான். ஸூரா கஃபில் 94 முதல் 99 வரையுள்ள வசனங்களில் விளக்

புகை மூட்டம் பற்றி...

قَالَ حُذَيْفَة رَضِيَ اللَّه عَنْهُ يَا رَسُول اللَّه وَمَا الدُّخَان ؟ فَتَلَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَة " فَارْتَقِبْ يَوْم تَأْتِي السَّمَاء بِدُخَانٍ مُبِين يَغْشَى النَّاس هَذَا عَذَاب أَلِيم " - يَمْلَأ مَا بَيْن الْمَشْرِق وَالْمَغْرِب يَمْكُث أَرْبَعِينَ يَوْمًا وَلَيْلَة وَأَمَّا الْمُؤْمِن فَيُصِيبهُ مِنْهُ كَهَيْئَةِ الزُّكْمَة وَأَمَّا الْكَافِر فَيَكُون بِمَنْزِلَةِ السَّكْرَان يَخْرُج مِنْ مَنْخِرَيْهِ وَأُذُنَيْهِ وَدُبُره"  (تفسير ابن كثير

விளக்கம்- உலகம் முழுக்க ஏற்படும் மிகப் பெரிய புகை மண்டல். இது முஃமினுக்கும் காஃபிருக்கும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முஃமின் இலேசான தலைவலி போன்ற நிலை மட்டுமே ஏற்படும். ஆனால் காஃபிருக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு மயக்க நிலையில் கொண்டு போய் விட்டு விடும்

இந்த பூமியின் மத்தியப் பகுதியான அரபுலகிலும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகிலும் இந்தியாவை உள்ளடக்கிய கிழக்குப் பகுதியிலும் வரலாறு காணாத மூன்று பூகம்பங்கள் ஏற்படும்

தஜ்ஜாலைப் பற்றி விரிவாக நபிமொழிகள் உள்ளன
 
நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்தஎந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றிதமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும்அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக்கண் என்பதில்இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண்ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லைநிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.அல்லாஹ் ஒரு
கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும் என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்
 
தஜ்ஜால் என்பவன் இடதுகண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து
விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பலஅடையாளங்களும் உள்ளன.ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இருகண்களுக்கிடையே காஃபிர்  என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும்படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.
அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள்நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள் நூல்: அஹ்மத்  2707, 2041
தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக் கொன்றுமுரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடுஇல்லை.ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும் அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப்பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டுசிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம்குறிப்பிடுகிறோம்எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ளவேண்டும  திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம்ஸல்) கூறியுள்ளார்கள்.  நூல்: புகாரி 3441, 7026, 7128
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச்செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார்கள்.  ஒவ்வொருவரும்தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன்கூட்டினேன் என்பதை அறிவீர்களா என்று கேட்டார்கள்.  அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ ஆர்வமூட்டவோஉங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார்.அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர்கூறியதாவது: லக்ம் ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள்அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில்ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போதுஅதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள்இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எதுசிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை. அப்பிராணியிடம்  உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணிஎன்று கேட்டோம்.  >நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது.நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும்அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கேபருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலைசேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான்.  உனக்குக் கேடு உண்டாகட்டும்.ஏனிந்த நிலை என்று நாங்கள் கேட்டோம்.அதற்கு அம்மனிதன்என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள்.
எனவே நீங்கள் யார்என எனக்குக் கூறுங்கள் என்றான்நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம்
கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம்.அடர்ந்த மயிர்களைக் கொண்டஒரு பிராணியைக் கண்டோம்."அப்பிராணி நான்ஜஸ்ஸாஸா  ஆவேன்". இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்றுஅஞ்சினோம் எனக்
கூறினோம்.பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவாஎன எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன்  விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்கா
மல் போகலாம் என்றான்.தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக்கூறுங்கள்! அதில் தண்ணீர்உள்ளதா என்று அவன் கேட்டான்.   அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம்.அந்தத்தண்ணீர் விரைவில்வற்றிவிடக்கூடும்என்று
அவன் கூறினான்.ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர்உள்ளதா அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால்விவசாயம் செய்கிறார்களா   என்று அவன்கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்!தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம்
செய்து வருகின்றனர் என்றோம் உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலைஎன்னஎன்பதை எனக்குக்
கூறுங்கள்என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்
அவருடன் அரபுகள் போர் செய்தார்களா என்று அம்மனிதன் கேட்டான்.நாங்கள் ஆம் என்றோம்.   போரின் முடிவு எவ்வாறு இருந்தது  என்றுஅவன் கேட்டான். அதற்கு நாங்கள்  அவர் தன்னை அடுத்துள்ளஅரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்  என்று அவன் கூறினான்.
நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன்.  நான்தான் தஜ்ஜால்ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதிவழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும்பயணம் செய்வேன். (நான பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்தஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும் மக்கா மதீனா ஆகிய
இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன.அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன்கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார்.அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்என்று அம்மனிதன் கூறினான்.இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி இது
(மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா இது தைபா எனக் கூறினார்கள்.இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவாஎன்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள்  ஆம் என்றனர்
அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கி றான்  அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான்  இல்லை
இல்லை அவன் கிழக்குத்திசையில் இருக்கிறான் எனமும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்  5235.
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி ருந்தே
ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய
ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
 
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம்
தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டு
ள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான்.
ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார்.  அல்லாஹ்வின் தூதர்
அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்
என்று அவர் கூறுவார்.  இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால்
(நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா என்று அவன்
கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான்.
பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் முன்பி
ருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்  என்று கூறுவார்.
உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது
என்று நபி(ஸல்) கூறினார்கள்.  நூல்: புகாரி  7132, 1882
 
இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும்
இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல
இயலவில்லை.
இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால்
செய்ய இயலும் தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று
அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு
செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறியதாக அன்ஸாரித்
தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.    நூல்: அஹ்மத்  22573
 
அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில்
இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம்
இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொ
ன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மை
யில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்
க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள்
பார்க்கும் வகையில் மழை பெய்யும். இதைக் கடவுளைத் தவிர வேறு யா
ம் செய்ய முடியுமா என்று கேட்பான் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
கூறினார்கள்.  நூல்: அஹ்மத் 14426
 
தஜ்ஜாலிடம் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர்
என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை
நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்
களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில்
விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி).   நூல்: புகாரி  7130
 
தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை
இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம்
போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில்
இருப்பான்.
தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்  என்று நாங்கள் கே
ட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு
நாள் ஒரு வருடம் போன்றும்  ஒரு நாள் ஒரு மாதம் போன்றும்  ஒரு நாள்
ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும்
என்று விடையளித்தார்கள்.   நூல்: முஸ்லிம்  5228
 
தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்
இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும்சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)    நூல்: புகாரி  7125

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...