06-12-2024
جمادي الثانية 3
بسم الله الرحمن الرحيم
மஸ்ஜித்களை பாதுகாப்போம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
ஒவ்வொரு இயக்கத்திற்கும் பைழா எனப்படும் செயல் திட்டங்கள் உண்டு. அவற்றை அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்றும் கூறுவர். அந்த வகையில் இந்தியாவில் பாசிசவாதிகள் தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கும் ரகசிய சுற்றறிக்கையின் 12-வது விதியில் இந்துக்கள் அல்லாதவர்களுடைய வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் சில படிமங்களையும், சிலைகளையும் வைப்பது முன்பு போலவே தொடர வேண்டும்.முஹமதியரின் தொழுகை இடங்களும்,நினைவுத்தூண்களும் பழைய கோவில்கள் என நிரூபிக்க நம் தலைமையகத்தை அணுக வேண்டும் என்று உள்ளது.
மேற்படி செயல் திட்டத்தை சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர். பாபரி மஸ்ஜிதின் வரிசையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், தற்போது உ.பி. சம்பால் மாவட்டம் சாந்தவ்ஸி நகரில் உள்ள ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் என இன்னும் 3000 மஸ்ஜித்கள் இவர்களின் திட்டத்தில் உள்ளன.அவர்களின் திட்டத்தை ஒவ்வொன்றாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் சற்றும் சமூக சிந்தனை இல்லாமல் தங்களுடைய சுயநல வாழ்க்கையிலேயே
எத்தனை மஸ்ஜித்களை திட்டமிட்டு அவர்கள் அழிக்க நினைத்தாலும்
அல்லாஹ் அதற்குப் பதிலாக எண்ணற்ற மஸ்ஜித்களை உருவாக்கிக் கொண்டேயிருப்பான்.
உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கிறது என்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும்.
அதுமட்டுமல்ல. உலகம் முழுவதும் முஸ்லிம்களே கிடையாது என்று சொல்லப்பட்ட பல நாடுகளில் இன்று முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்ததாகக் கூறுவார்கள். ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 24,000 மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். ஃபிரான்ஸில் 2014 ம் ஆண்டுகளுக்கு முன்பு 20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் உள்ளன. ஜெர்மனியில் 1999- ல் 40 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று 4000 மஸ்ஜித்கள் உள்ளன. இங்கிலாந்தில் 1890- ல் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் உள்ளன. இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார்.
ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸேஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது
அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது மேலும், பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாக அங்கு காணலாம்
இவ்வாறு உலகம் முழுவதும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது என்பதற்காக நமது மஸ்ஜித்களில் ஒரு மஸ்ஜிதுக்கு எதிரிகள் மூலம் ஆபத்து வந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் முஃமினல்ல.
மஸ்ஜித்களை இடிக்க வேண்டும் என்றெண்ணியவர்களை அல்லாஹ் அழித்த வரலாறுகள் நிறைய உண்டு
அவர்களின் அழிவு உடனே நடைபெறும். அல்லது பல காலங்கள் கழித்தும் நடக்கும்.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (4) فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (5)
وَأَرْسَلَ أَبَرْهَة يَقُول لِلنَّجَاشِيِّ إِنِّي سَأَبْنِي كَنِيسَة بِأَرْضِ الْيَمَن لَمْ يُبْنَ قَبْلهَا مِثْلهَا فَشَرَعَ فِي بِنَاء كَنِيسَة هَائِلَة بِصَنْعَاء رَفِيعَة الْبِنَاء عَالِيَة الْفِنَاء مُزَخْرَفَة الْأَرْجَاء سَمَّتْهَا الْعَرَب الْقُلَّيْس لِارْتِفَاعِهَا لِأَنَّ النَّاظِر إِلَيْهَا تَكَاد تَسْقُط قَلَنْسُوَته عَنْ رَأْسه مِنْ اِرْتِفَاع بِنَائِهَا وَعَزَمَ أَبَرْهَة الْأَشْرَم عَلَى أَنْ يَصْرِف حَجّ الْعَرَب إِلَيْهَا كَمَا يُحَجّ إِلَى الْكَعْبَة بِمَكَّة وَنَادَى بِذَلِكَ فِي مَمْلَكَته فَكَرِهَتْ الْعَرَب الْعَدْنَانِيَّة وَالْقَحْطَانِيَّة ذَلِكَ وَغَضِبَتْ قُرَيْش لِذَلِكَ غَضَبًا شَدِيدًا حَتَّى قَصَدَهَا بَعْضهمْ وَتَوَصَّلَ إِلَى أَنْ دَخَلَهَا لَيْلًا فَأَحْدَثَ فِيهَا وَكَرَّ رَاجِعًا فَلَمَّا رَأَى السَّدَنَة ذَلِكَ الْحَدَث رَفَعُوا أَمْره إِلَى مَلِكهمْ أَبَرْهَة وَقَالُوا لَهُ إِنَّمَا صَنَعَ هَذَا بَعْض قُرَيْش غَضَبًا لِبَيْتِهِمْ الَّذِي ضَاهَيْت هَذَا بِهِ فَأَقْسَمَ أَبَرْهَة لَيَسِيرَنَّ إِلَى بَيْت مَكَّة وَلَيُخَرِّبَنَّهُ حَجَرًا حَجَرًا .
ذَكَرَ الْوَاقِدِيّ بِإِسْنَادِهِ أَنَّهُمْ لَمَّا تَعِبُوا لِدُخُولِ الْحَرَم وَهَيَّئُوا الْفِيل جَعَلُوا لَا يَصْرِفُونَهُ إِلَى جِهَة مِنْ سَائِر الْجِهَات إِلَّا ذَهَبَ فِيهَا فَإِذَا وَجَّهُوهُ إِلَى الْحَرَم رَبَضَ وَصَاحَ وَجَعَلَ أَبَرْهَة يَحْمِل عَلَى سَائِس الْفِيل وَيَنْهَرهُ وَيَضْرِبهُ لِيَقْهَر الْفِيل عَلَى دُخُول الْحَرَم
அப்ரஹா தனது யானைப் படைகளை ஹரமை நோக்கி அனுப்ப முயன்ற போது அந்த யானைகள் அந்த திசையில் செல்லாமல் அடம் பிடித்தன. மற்ற திசைகளில் செலுத்தினால் அடம் பிடிக்கவில்லை. ஹரமின் பக்கம் செலுத்த முனைந்த போது மட்டும் முரண்டு பிடித்தன. அப்ரஹா எப்படியேனும் தனது யானையை ஹரமின் பக்கம் செலுத்துவதற்காக அதனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தான் அல்லாஹ் அபாபீல் பறவைகளை அனுப்பினான்.
وَأَرْسَلَ اللَّه عَلَيْهِمْ طَيْرًا مِنْ الْبَحْر أَمْثَال الْخَطَاطِيف وَالْبَلَسَان . مَعَ كُلّ طَائِر مِنْهَا ثَلَاثَة أَحْجَار يَحْمِلهَا : حَجَر فِي مِنْقَاره وَحَجَرَانِ فِي رِجْلَيْهِ أَمْثَال الْحِمَّص وَالْعَدَس لَا يُصِيب مِنْهُمْ أَحَدًا إِلَّا هَلَكَ وَلَيْسَ كُلّهمْ أَصَابَتْ وَخَرَجُوا هَارِبِينَ يَبْتَدِرُونَ الطَّرِيق
அவை கடலில் இருந்து கிளம்பி வந்தன. சிறிய அளவில் இருந்த அந்த ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் இரு நெருப்புக் கற்கள், அதன் வாயில் ஒரு கல் என, ஒவ்வொரு பறவையுடனும் மூன்று கற்கள் இருந்தன. அதை அப்பறவைகள் யானைக் கூட்டத்தின் மீது வீசின. அந்தக் கற்கள் வெறும் துவரம் பருப்பு அல்லது சிறிய கொண்டைக் கடலை அளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அவை பட்டு யாருடைய உடம்புக்குள் சென்றதோ அவர்கள் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
وَقَالَ اِبْن إِسْحَاق فَخَرَجُوا يَتَسَاقَطُونَ بِكُلِّ طَرِيق وَيَهْلِكُونَ عَلَى كُلّ مَنْهَل وَأُصِيبَ أَبَرْهَة فِي جَسَده وَخَرَجُوا بِهِ مَعَهُمْ يَسْقُط أُنْمُلَة أُنْمُلَة حَتَّى قَدِمُوا بِهِ صَنْعَاء وَهُوَ مِثْل فَرْخ الطَّائِر فَمَا مَاتَ حَتَّى اِنْصَدَعَ صَدْره عَنْ لُبّه فِيمَا يَزْعُمُونَ.
அபாபீல் பறவைகள் வீசிய நெருப்புக் கற்கள் உடலுக்குள் ஊடுருவி சென்றவுடன் உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழுந்து பலர் இறந்தனர். (யானைகளின் உடலுக்குள்ளும் அவை ஊடுருவி அவை மதம் பிடித்து அங்குமிங்கும் அங்குமிங்கு ஓடி இறந்தன.) அப்ரஹாவின் உடம்பிலும் நெருப்புக் கல் விழுந்த து. அவனை அல்லாஹ் உடனே சாகடிக்கவில்லை. அவனுடைய உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழும் நிலையில் அவனோடு இருந்த மற்றவர்கள் அதாவது கல் யார் மீது விழவில்லோயோ அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து யமன் வரை அவனைத் தூக்கி வந்தார்கள். மிகவும் வேதனைப் பட்டு கோழிக் குஞ்சு போன்று எலும்பும் தோலுமாக ஆகி விட்ட நிலையில் அவன் கடைசியில் இறந்தான். அவனுடைய வாய் வழியாக அவனுடைய இருதயம் வெளியே வந்த நிலையில் அவன் இறந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
படிப்பினை- இறையில்லத்தை பாழ்படுத்த வந்தவனின் நிலையை அல்லாஹ் இப்படித் தான் ஆக்கினான்
புக்து நஸ்ர் என்பவன் பைத்துல் முகத்தஸை நாசமாக்கினான். இறுதியில் அவருக்கு ஏற்பட்ட கதி..
وَقَالَ سَعِيد عَنْ قَتَادَة : قَالَ أُولَئِكَ أَعْدَاء اللَّه النَّصَارَى حَمَلَهُمْ بُغْض الْيَهُود عَلَى أَنْ أَعَانُوا بُخْتُنَصَّرَ الْبَابِلِيّ الْمَجُوسِيّ عَلَى تَخْرِيب بَيْت الْمَقْدِس وَقَالَ السُّدِّيّ : كَانُوا ظَاهَرُوا بُخْتُنَصَّرَ عَلَى خَرَاب بَيْت الْمَقْدِس حَتَّى خَرَّبَهُ وَأَمَرَ أَنْ تُطْرَح فِيهِ الْجِيَف (تفسير ابن كثير
ஸுலைமான் (அலை) மரணித்த பின்பு யூதர்களின் கை வசம் பைத்துல் முகத்தஸ் இருந்த து அப்போது அதை மஜூஸியான புஹ்து நஸ்ர் என்பவன் அதைக் கைப்பற்றி மாபரும் அழிவை ஏற்படுத்தினான். பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி தீக்கிரையாக்கினான். தவ்ராத் வேதமும், பத்துக் கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும், மூஸா (அலை) அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை அவனது ஆட்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர். புக்துநஸர் கையில் அகப்படாமல் யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் இப்போதைய மதீனாவிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக 40 ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்தஸ் இருந்தது.
புக்து நஸ்ரின் மோசமான அழிவு பற்றி பல விதமான அறிவிப்புகள் உள்ளன.
وقوله تعالي : {ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ... (سورة الاسراء} وعذب بختنصر بالمسخ سبع سنين ومسخ الله تعالى بختنصر من الدوابّ كلها، فجعل من كل صنف من الدوابّ رأسه رأس سبع من السباع الأسد، ومن الطير النسر، (تفسير الطبري
அல்லாஹ் புக்து நஸ்ரின் உருவத்தை வன விலங்குகளின் ஒன்றின் உருவத்தைப் போல மாற்றியமைத்தான் என மேற்படி அறிவிப்பு...
மற்றொரு அறிவிப்பில் நம்ரூதைப் போல அவனது மூளையில் கொசு புகுந்து வேதனை செய்த து என்றும் கூறப்பட்டுள்ளது
ثم لما أراد الله هلاك بختنصر انبعث فقال لمن في يده من بني إسرائيل: أرأيتم هذا البيت الذي خربته والناس الذين قتلت منهم؟ وما هذا البيت؟ قالوا: هذا بيت الله وهؤلاء أهله كانوا من ذراري الأنبياء فظلموا وتعدوا فسلطت عليهم بذنوبهم وكان ربهم رب السموات والأرض ورب الخلق كلهم يكرمهم ويعزهم فلما فعلوا ما فعلوا أهلكهم الله وسلط عليهم غيرهم فاستكبر وظن أنه بجبروته فعل ذلك ببني إسرائيل. قال: فأخبروني كيف لي أن أطلع إلى السماء العليا فأقتل من فيها وأتخذها ملكا لي فإني قد فرغت من الأرض، قالوا: ما يقدر عليها أحد من الخلائق قال: لتفعلن أو لأقتلنكم عن آخركم، فبكوا وتضرعوا إلى الله تعالى فبعث الله عليه بقدرته بعوضة فدخلت منخرة حتى عضت بأم دماغه فما كان يقر ولا يسكن حتى يوجأ له رأسه على أم دماغه فلما مات شقوا رأسه فوجدوا البعوضة عاضة على أم دماغه ليري الله العباد قدرته (تفسير البغوي)
சுருக்கம்- பைத்துல் முகத்தஸை நாசப்படுத்திய புக்து நஸ்ரை அல்லாஹ் உடனே அழிக்கவில்லை. அவன் கடைசி காலத்தில் மிகவும் அட்டூழியம் செய்தான். அவனுக்குள் பெருமை குடி கொண்டது. மோசமான கூட்டமான யூதர்கள் விஷயத்தில் நிறைய யூதர்களைக் கொன்றதன் மூலம் நபிமார்களால் செய்ய முடியாத செயலை தாம் செய்ததாக அவன் பெருமை கொண்டான். அதனால் இன்னும் நிறைய அநியாயம் செய்தான். அப்போது பனீ இஸ்ராயீல் சமூகத்தில் சில நல்லவர்கள் அவனது அழிவுக்காக துஆ செய்தனர். இறுதியில் அவனுடைய மூளைக்குள் ஒரு கொசு புகுந்தது. அது அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் அவன் இறந்தான். அவன் இறந்த பின் அவனது தலையை பிளந்து பார்த்த அவனது மூளையை தாக்கிக் கொண்டிருந்த கொசு கண்டு பிடிக்கப்பட்டது.
கடைசி காலத்தில் இறையில்லமான கஃபாவை தாக்க வரும் கும்பலை அல்லாஹ் அழிப்பான் என்ற முன்னறிவிப்பு
عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري
கடைசி காலத்தில் கஃபாவை தாக்க ஒரு கும்பல் படையெடுத்து வரும் அப்போது அவர்கள் வரும் வழியிலேயே பூமி பிளந்து உள்வாங்கப் படுவார்கள். அப்போது அந்தக் கும்பல் மட்டுமல்லாமல் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் உட்பட அனைவரும் அழிந்து விடுவார்கள். இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறிய போது அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கெட்டவர்கள் அழிக்கப்படுவது நியாயம் தான் ஆனால் நல்லவர்களும் ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று காரணம் கேட்கும்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். தீயவர்கள் அழிக்கப்படும்போது நல்லவர்களும் அழிக்கப்படுவார்கள். பின்பு அவரவர் நிய்யத்துக்குத் தகுந்த மாதிரி எழுப்ப ப் படுவார்கள் என்று கூறினார்கள். அதாவது அதற்குத் தகுந்த நற்கூலி வழங்கப் படுவார்கள்.
இறையில்லத்தின் கண்ணியம் தெரியாமல் கஃபாவுக்குள் வைத்தே தவறு செய்த
ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் கல்லாக மாற்றினான்
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا (158)البقرة
ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا وَلِهَذَا.... (تفسير كثير)
முற்காலத்தில் சிரியாவில் இருந்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் கஃபாவுக்குள் வைத்து தவறாக நடந்து கொண்டனர். முத்தமிட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது அவர்களின் பெயர் இஸாஃப், நாஇலா என்று கூறப்படுகிறது. உடனே அல்லாஹ் அவர்களை கல்லாக மாற்றி விட்டான். கல்லாக மாற்றப்பட்ட அவ்விரு சிலைகளும் சில காலம் கஃபாவுக்குள்ளேயே இருந்தன. சில காலங்களுக்குப் பிறகு அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு சஃபா மர்வா என்ற இரு மலைகளில் வைக்கப்பட்டன. அதாவது சஃபாவில் ஒன்றும் மர்வாவில் ஒன்றும் வைக்கப்பட்டது. காலப்போக்கில் மக்கள் அதையும் வணங்க ஆரம்பித்து விட்டனர். பின்னர் சில நல்லவர்களின் முயற்சியால் அது அங்கிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டது. இச்சம்பவம் நடந்த காரணத்தால் சஹாபாக்களுக்கு இந்த சஃபா, மர்வா இடையே ஸயீ செய்வதில் ஒரு நெருடல் இருந்தது என்ன இருந்தாலும் சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என்று தயங்கினார்கள். அதனால் அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான்.
ஒவ்வொரு உம்மத்திலும் இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களை தகர்க்கும் வெறி கொண்டவர்கள் இருந்துள்ளார்கள் அப்போது அல்லாஹ் முஸ்லிம்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரத்தை தந்து பாதுகாத்துள்ளான்
قال الله تعالي وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(الحج)
أي لولا ما شرعه الله تعالى للانبياء والمؤمنين من قتال الاعداء، لاستولى أهل الشرك وعطلوا ما بينته أرباب الديانات من مواضع العبادات، ولكنه دفع بأن أوجب القتال ليتفرغ أهل الدين للعبادة. (تفسير القرطبي) ومعنى الآية: ولولا دفع الله الناس بعضهم ببعض لهدم في شريعة كل نبي مكان صلاتهم، لهدم في زمن موسى الكنائس، وفي زمن عيسى البيع والصوامع، وفي زمن محمد صلى الله عليه وسلم المساجد.(تفسير البغوي) سورة الحج:40
அப்ரஹாவுக்கு அல்லாஹ் அழிவைத் தந்த து போன்று, புஹ்துநஸ்ருக்கு அல்லாஹ் அழிவைத் தந்தது போன்று இன்று மஸ்ஜித்களை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளுக்கும் அல்லாஹ் தண்டனை தருவான். முஃமின்கள் ஒருபோதும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. தொடர்ந்து துஆச் செய்ய வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு போராடவும் வேண்டும்
ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா அலை துஆ செய்து 40 வருடங்களுக்குப் பின்பு தான் அவனை அழித்தான்
وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (89يونس) قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة وَقَالَ مُحَمَّد بْن كَعْب وَعَلِيّ بْن الْحُسَيْن أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير)
அநீதம் செய்யும் அனைவரையும் அல்லாஹ் உடனே தண்டிக்க ஆரம்பித்தால் பூமியில் எவரும் மிஞ்ச முடியாது
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا (45فاطر)
உலகையே ஆட்சி செய்யும் அதிகாரத்தை இரு முஸ்லிம்களுக்கு வழங்கியது போன்று இரண்டு காஃபிர்களுக்கும்..
قَالَ مُجَاهِد:مَلَكَ الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة: مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ سُلَيْمَان عليه السلام وَذُو الْقَرْنَيْنِ وَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه أَعْلَم
இந்த தலைப்பில் துவக்கத்தில் கூறப்பட்டது போன்று நம்முடைய முன்னோர்கள் கோவிலை இடித்து விட்டு மஸ்ஜித்கள் கட்டியதாக பொய்யான வரலாறுகளை உருவாக்கியும் மஸ்ஜித்களில் யாருக்கும் தெரியாமல் சிலைகளை புதைத்து வைத்தும் அந்த மஸ்ஜித்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர்
நம்முடைய முன்னோர்களின் ஆட்சியில் அனைவருக்கும் சம நீதி என்ற அடிப்படையில்
கோவில்கள் கட்ட உதவிய வரலாறுகள் நிறைய உண்டு
காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன. காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்தரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப் பட்டது. கோவிலை இடித்து மீண்டும் கட்டித் தர அனுமதி கேட்டனர். மாமன்னர் அதை அனுமதித்தார். இதைத் தான் ஒளரங்கசீப் கோவிலை இடிக்கச் சொன்னார் என்று பொய்யுரைக்கிறார்கள்.
காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் அதிகரிக்கலாம்.
தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ...... وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ. (ابن ماجة)
அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. ....
தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.
மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர், தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)
தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم
தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.
படிப்பினை- முஃமின்கள் தங்களை திருத்திக்கொண்டால் சோதனைகளை அல்லாஹ் மாற்றிக் காட்டுவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக