வியாழன், 12 டிசம்பர், 2024

நிர்பந்தங்களுக்கும் வரையறை உண்டு

 13-12-2024

جمادي الثانية -  10 بسم الله الرحمن الرحيم  

நிர்பந்தங்களுக்கும் வரையறை உண்டு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106النحل)

தடுக்கப்பட்ட எத்தனையோ விஷயங்களை நிர்பந்தமான சில சூழ்நிலைகளில் நம்முடைய மார்க்கம் சிலதை அனுமதிக்கிறது. அதேநேரத்தில் அதற்கு சில வரையறைகள் உண்டு. எது நிர்பந்தம் என்பதை  நாமே முடிவு செய்து விட முடியாது. மாறாக ஷரீஅத் நிர்ணயித்துள்ளது. உதாரணமாக ஃபர்ளான தொழுகையை சக்திக்கு இயன்ற வரை நின்று தான் தொழ வேண்டும். நின்று தொழ முடியா விட்டால் சேரில் அமர்ந்து தொழுவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை ஷரீஅத் நிர்ணயித்துள்ளது. அதைப் பற்றி விரிவாக பேசும் முன்  நிர்பந்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சில விஷயங்களைப் பார்ப்போம்.                                                      

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (ابن ماجة) كِتَاب الطَّلَاقِ

தங்கம், பட்டாடை ஆண்கள் அணியக்கூடாது என்று தடுத்த போதிலும் நிர்பந்தம் காரணமாக அனுமதித்தார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِحْدَى يَدَيْهِ ثَوْبٌ مِنْ حَرِيرٍ وَفِي الْأُخْرَى ذَهَبٌ فَقَالَ إِنَّ هَذَيْنِ مُحَرَّمٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لِإِنَاثِهِمْ (ابن ماجة) بَاب لُبْسِ الْحَرِيرِ وَالذَّهَبِ لِلنِّسَاءِ- كِتَاب اللِّبَاسِ 

நபி ஸல்அவர்கள் ஒருநாள் எங்களிடம் வந்தார்கள் அவர்களின் ஒரு கையில் பட்டாடையும் மற்றொரு கையில் தங்கமும் இருந்த நிலையில் இந்த இரண்டும் என் உம்மத்தைச் சார்ந்த ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என..

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ أَنَّ جَدَّهُ عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ (ابوداود) بَاب مَا جَاءَ فِي رَبْطِ الْأَسْنَانِ بِالذَّهَبِ-كِتَاب الْخَاتَمِ عَنْ أَنَس بْنَ مَالِكٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَلِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي قَمِيصَيْنِ مِنْ حَرِيرٍ مِنْ وَجَعٍ كَانَ بِهِمَا حِكَّةٍ-(ابن ماجة)  بَاب مَنْ رُخِّصَ لَهُ فِي لُبْسِ الْحَرِيرِ- كِتَاب اللِّبَاسِ

அர்ஃபஜா என்ற சஹாபியின் மூக்கு ஒரு போரில் துண்டிக்கப்பட்டது. அவர் வெள்ளியினால் மூக்கு செய்து அணிந்தார். நாளடைவில் அது அழுகியது. அவரிடம் நபி ஸல் தங்கத்தால் மூக்கு செய்து அணிய ஏவினார்கள்.. குறிப்பு - அந்தக் காலத்தில் தங்கத்தால் மூக்கு செய்தால் மட்டுமே நீடிக்கும் என்ற நிர்பந்தம் இருந்தது

உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை மறந்து ஒருவர் குஃப்ருடைய வார்த்தையை உபயோகித்து விட்டால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்

عن أنس رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ (مسلم -كِتَاب التَّوْبَة

அல்லாஹ் ஒருவரின் தவ்பாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்பதை கீழ்காணும்  உதாரணத்தைக் கூறி நபி (ஸல்) விபரிக்கிறார்கள். உங்களில் ஒருவர் ஒரு வனாந்தரத்தில் வாகனத்தில் பயணித்த நிலையில் திடீரென அவரது வாகனம் காணாமல் ஆகி விட்டது. அதில் தான் அவரது உணவு தண்ணீர் என அனைத்தும் இருக்கும் நிலையில் அவர் அதைத் தேடி மிகவும் அலைந்து கடைசியில் நிராசையாகி ஒரு மரத்திற்குக் கீழே படுத்தார். திடீரென அவரது வாகனம் அனைத்துப் பொருட்களுடன் அவருக்கு முன்னால் வந்து நின்றது அவர் அதைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் யாஅல்லாஹ் நீ எனது அடியான் நான் உனது ரப்பு என்று கூறி விட்டார். அவருக்கு எந்த அளவுக்கு சந்தோஷம் இருந்திருந்தால் மனதில் ஈமான் உள்ள நிலையிலும் வார்த்தை தடுமாற்றத்தால் இந்த வார்த்தையைக் கூறியிருப்பாரோ அவரைவிட அல்லாஹ் தன்அடியான் திருந்தி தவ்பா செய்யும்போது மகிழ்கிறான்.                                        

எதிரிகளிடம் சிக்கிய முஃமின் நிர்பந்தம் காரணமாக உயிருக்கு பயந்து குஃப்ரு வார்த்தை கூறினால்

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106النحل) عَنْ أَبِي عُبَيْدَة مُحَمَّد بْن عَمَّار بْن يَاسِر قَالَ أَخَذَ الْمُشْرِكُونَ عَمَّار بْن يَاسِر فَعَذَّبُوهُ حَتَّى قَارَبَهُمْ فِي بَعْض مَا أَرَادُوا فَشَكَا ذَلِكَ إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " كَيْف تَجِد قَلْبك؟" قَالَ مُطْمَئِنًّا بِالْإِيمَانِ قَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنْ عَادُوا فَعُدْ "(وَلِهَذَا اِتَّفَقَ الْعُلَمَاء عَلَى أَنَّ الْمُكْرَه عَلَى الْكُفْر يَجُوز لَهُ هذا وَيَجُوز لَهُ أَنْ يَأْبَى كَمَا كَانَ بِلَال رَضِيَ اللَّه عَنْهُ يَأْبَى عَلَيْهِمْ ذَلِكَ)(تفسير ابن كثير)

அம்மார் ரழி அவர்களை எதிரிகள் சிறைப் பிடித்த போது அவரைக் கடுமையாக வேதனை செய்தார்கள். அவர் வேறு வழியின்றி அவர்கள் நாடிய (நிர்பந்தித்த) சில வார்த்தைகளைக் கூறும் நிலைக்கு நெருங்கி விட்டார். இது விஷயமாக அந்த சஹாபி நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் உனது உள்ளத்தை அப்போது நீ எப்படி பெற்றுக் கொண்டாய் என்று கேட்டார்கள். அதற்கு அந்த சஹாபீ என் உள்ளம் ஈமானால் நிம்மதி பெற்றிருந்தது என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் மீண்டும் உனக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டு மற்றொரு முறையும் நீ அந்த வார்த்தையை கூறினாலும் தவறில்லை என்று கூறினார்கள். இதை வைத்து இமாம்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மனதால் முஃமினாக இருக்கும் ஒருவர் குஃப்ருடைய வார்த்தையைக் கூறி ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் தவறில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் பிலால் ரழி அவர்களைப் போன்று உயிரே போனாலும் நான் அந்த வார்த்தையைக் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருப்பது அவரது அந்தஸ்தை அதிகப்படுத்தும். -  

போட்டோ உருவப்படம் தான் ஷிர்க் உடைய அஸ்திவாரம் என்பதால் அதை அடியோடு ஒழிப்பதற்காக 

இஸ்லாம் போட்டோவை தடை செய்கிறது நிர்பந்தம் இருந்தாலே தவிர...

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ (مسلم) 

  நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் அலை குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தார்கள் ஆனால் அந்த நேரம் வந்த பிறகும் ஜிப்ரயீல் அலை வரவில்லை. (அதற்கான காரணம் தெரியாமல் மிகவும் கவலையில் இருந்த) நபி ஸல் அவர்கள் தன் கையில் இருந்த குச்சியைக் கீழே போட்ட படி அல்லாஹ்வோ அவனது தூதர்களோ (மலக்குகளோ) ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள் (ஆனால் இன்று என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லையே) என்று கூறினார்கள். இந்நிலையில் நாய்க்குட்டி கட்டிலுக்குக் கீழே இருந்த து. உடனே ஆயிஷா ரழி அவர்களிடம் இது எப்போது வந்த து என்று கேட்க எனக்குத் தெரியாது என அவர்கள் பதில் கூறினார்கள். உடனே நபி ஸ்ல அதை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். அதன் பின்பு ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.  அப்போது நபி ஸல் அவர்கள் நீங்கள் என்னிடம் வருகை தருவதாக வாக்களித்திருந்தீர்கள் உங்களுக்காக நான் காத்திருந்தேன் நீங்கள் வரவில்லையே என்று கூற, அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் என்னை அந்த நாய் தடுத்து விட்டது. உருவப்படமும் நாயும் இருக்கும் வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று கூறினார்கள்.                                                               

பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களிலும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் அரசுத் துறைகளிலும், மற்றும் இதுபோன்றவைகளில் போட்டோ தவிர்க்க முடியாததாகும். எனினும் இன்று சோப்பு முதல் சீப்பு வரை எந்தப்பொருள் வாங்கினாலும் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே நாம் அந்தப் பொருட்களை வாங்கிய பின்பு அதன் மேல் உறைகளை உடனே அப்புறப்படுத்தி குப்பைக்கூடையில் போடலாம். உருவப்படங்கள் குப்பையில் அல்லது காலில் மிதிபடும் வகையில் இருந்தால் தவறில்லை.                           

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவோ பணம் கொடுத்தால் அது இலஞ்சம் அல்ல

الرِّشْوَة مَا يُعْطَى لِإِبْطَالِ حَقّ أَوْ لِإِحْقَاقِ بَاطِل أَمَّا إِذَا أُعْطِيَ لِيُتَوَصَّل بِهِ إِلَى حَقّ أَوْ لِيَدْفَع بِهِ عَنْ نَفْسه ظُلْمًا فَلَا بَأْس بِهِ -رُوِيَ أَنَّ اِبْن مَسْعُود رضي الله عنه أُخِذَ بِأَرْضِ الْحَبَشَة فِي شَيْء فَأَعْطَى دِينَارَيْنِ حَتَّى خُلِّيَ سَبِيلُهُ (بيهقي) وَرُوِيَ عَنْ جَمَاعَة مِنْ أَئِمَّة التَّابِعِينَ قَالُوا: لَا بَأْس أَنْ يُصَانِع عَنْ نَفْسه وَمَاله إِذَا خَافَ الظُّلْم (كنز العمال) (عون المعبود) (تحفة الاحوذي) (شرح السنة) (تفسير سنن أبي داود) )شرح ابن ماجة للسيوطي

இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் அபீசீனியாவில் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டார்கள். அப்போது இரண்டு தீனார்கள் கொடுத்தார்கள் அதனால் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். தாபிஈன்களின் பலரின் கருத்துப்படி தனது உயிருக்கோ உடைமைக்கோ வேண்டுமென்றே அநியாயம் ஏற்படுவதை பயந்தால் அப்போது நிர்பந்தம் காரணமாக இலஞ்சம் தருவது கூடும் என்று கூறியுள்ளனர். நூல்- ஷரஹ் இப்னுமாஜா

ஆனால் நிர்பந்தம் இன்றி தன் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக கொடுத்தால் அது இலஞ்சம். அது பாவம். உதாரணமாக அரசிடம் இருந்து பெற வேண்டிய ஒரு ID எப்படியும் வந்து விடும் ஆனால் சற்று தாமதம் ஆகும் என்பதற்காக இலஞ்சம் கொடுத்து அதை சீக்கிரமாக அடைய முயற்சிப்பது போன்ற செயல்கள் பாவமானதாகும்.

 சிகிச்சைக்காக ஆண் டாக்டரிடம் செல்லவேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டால்..

المشروع للمرأة أن تعالج عند طبيبة مسلمة فإن لم توجد فعند امرأة غير مسلمة فإن لم توجد طبيبة فتعالج عند طبيب مسلم عند الضرورة وإن لم يمكن فطبيب غير مسلم فيجوز لها أن تذهب بشروط الأول أن يكون معها محرم لها لقوله عليه السلام:لا يخلون رجل بامرأة إلا مع ذي محرم -الثاني: أن لا يرى منها إلا بقدر الحاجة فإذا احتاجت إلى الكشف على عين أو سِنّ فتُبدي ما يحتاج إلى كشف (فتاوي العامة) النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُبْرِزْ فَخِذَكَ وَلَا تَنْظُرَنَّ إِلَى فَخِذِ حَيٍّ وَلَا مَيِّتٍ(ابوداود

ஒரு பெண் முடிந்த வரை முஸ்லிமான பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்வது நல்லது. அது முடியா விட்டால் முஸ்லிம் அல்லாத பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்யலாம். அதுவும் முடியாத நிர்பந்த நிலையில் முஸ்லிமான ஆண் டாக்டரிடம் செல்லலாம். அதுவும் முடியாத நிர்பந்த சூழ்நிலையில் முஸ்லிம் அல்லாத ஆண் டாக்டரிடம் செல்ல நேரிட்டால் மஹ்ரமுடன் செல்ல வேண்டும். காட்ட வேண்டிய உறுப்பை மட்டும் காட்ட வேண்டும். மற்ற உறுப்புகளை மூடிக் கொள்ள வேண்டும்.                                          

வங்கியுடன் தொடர்பு ஒரு நிர்பந்தம்-

لا يجوز للمسلم أن يودع أمواله في البنوك الربوية، وكذا تحويل راتبه عليها، لما في ذلك من إعانتها على الاستمرار في العمل وإقرار ما هي عليه من حرب الله، إلا إذا اضطر المرء لذلك، فإن الضرورة تبيح المحظور، ومثال الاضطرار: الخوف على المال من الضياع، أو الإلزام من جهة العمل بتحويل الراتب على هذا البنك ونحو ذلك، وينبه إلى أنه في حالة الاضطرار يوضع المال ويُحول الراتب على الحساب الجاري، (فتاوي الشبكة الاسلامية)

வீட்டில் இருந்தால் பணத்துக்கு பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலையில் வங்கியில் சேமிப்பது கூடும். எனினும் அதன் மூலம் வருகிற வட்டியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்து விட வேண்டும். வண்டி இன்ஸூரன்ஸ் என்பதும் ஒரு நிர்பந்தம் எனினும் அல்லாஹ்வின் விதிப்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டு  நமக்கு அதிகப்படியான பணம் வந்தால் நாம் கட்டிய தொகை அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்துவிட வேண்டும். அதுபோல் P.F பணத்தில் அதாவது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கமே பிடித்தம் செய்து ஓய்வு பெறும்போது திருப்பித்தரும் பணத்தில் நமக்குரிய தொகை எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை யாருக்கேனும் தந்து விட வேண்டும். Fixed deposit, L.I.C போன்றவையும் கூடாது. ஒருவர் கடந்தகாலத்தில் மார்க்க அறிவின்மையால் அதில் இணைந்திருந்தால் அதிலிருந்து நீங்குவதுடன் வரக்கூடிய பணத்தில் அவர் செலுத்திய தொகை போக மீதியை யாருக்கேனும் நன்மையை நாடாமல் தந்து விட வேண்டும்.                                                                   

வங்கியின் மூலம் வருகிற பணத்தில் என்னென்ன செய்யக் கூடாது. 

வங்கியின் மூலம் வருகிற பணத்தில் கழிவறை, கப்ருஸ்தான் சுவர் கட்டுவது, வண்டி இன்ஸூரன்ஸ் கட்டுவது கூடாது. இவற்றில் பலன் நமக்கு கிடைப்பதால் அவ்வாறு செய்வது கூடாது. 

கேள்வி- அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை இதில் செலுத்தலாமா?  பதில் - நம் நாட்டில் வரி இரு வகை உண்டு. 1,ஜப்ரீ என்னும் நிர்பந்த வரி. 2,வாஜிப் என்னும் அவசியமான வரி. ஜப்ரீ என்ற அநியாயமான வரியை வங்கியின் வட்டிப்பணத்தில் கொடுக்கலாம். ஆனால் தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற அவசியமான வரியை  வங்கியின் வட்டிப் பணத்தில் கொடுக்கக் கூடாது  (ஃபதாவா மஹ்மூதிய்யா)

தொழில் தொடங்க  அல்லது வீடு கட்ட நினைக்கும் சிலர் லோன் வாங்கினால் தானே என்னால் வீடு கட்ட முடியும் தொழில் தொடங்க  முடியும் இல்லை யென்றால் என்னால் எப்படி வீடு கட்ட முடியும். தொழில் தொடங்க  முடியும்  என்று கூறுவர். முடிந்த வரை வட்டியை விட்டும் விலகி இருக்க நினைத்தால் அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான் 

ومن ترك شيئا لله عوضه الله خيرا منه، قال الله سبحانه: [ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجاً وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ ] (الطلاق: 3)

திருமணம் செய்ய வசதி இல்லை என்று சிலர் கூறிய போது நோன்பு வைக்க நபி ஸல் ஏவினார்கள். தவறு செய்ய அனுமதிக்கவில்லை

قَالَ  رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (بخاري)

மாற்றார்களோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நிரந்தர நரகம் என்று முடிவு செய்யப்பட்டவர்களும் நாமும் சமமல்ல..மாற்றார்கள் லோன் வாங்கி வீடு கட்டலாம். தொழில் தொடங்கலாம் ஆனால் இஸ்லாமிய நெறியுடன் வாழும் முஃமினுக்கு இது எளிதில் சாத்தியம் அல்ல

ففي صحيح البخاري  عن عمر في حديثه الطويل  فَأَذِنَ لِي......وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ مَا يُبْكِيكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمْ الدُّنْيَا وَلَنَا الْآخِرَةُ (بخاري) - باب ( تَبْتَغِى مَرْضَاةَ أَزْوَاجِكَ )كتاب التفسير

நபி ஸல் அவர்கள் ஈச்சம் பாயில் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அந்தப் பாய்க்குமிடையில் எந்த விரிப்பும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக்கீழே ஈச்ச நார்களால் நிரப்பப்பட்ட தலையனை இருந்தது. கால்களுக்கு அருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டிருந்தது.(இந்த எளிய நிலை ஒரு புறமிருக்க) அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு பதிந்திருப்பதைக் கண்டு நான் அழுது விட்டேன். ஏன் அழுகிறீர் என்று காரணம் கேட்ட போது அல்லாஹ்வின் பாரசீக, ரோம் மன்னர்கள் சகல வசதிகளுடன் இருக்கும்போது அல்லாஹ்வின் தூதரான உங்களின் நிலை ஏன் இப்படி?  என்றெண்ணி அழுகிறேன் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு உலகம் தான் எல்லாம்.. நமக்கு மறுமை தான் என்றார்கள். புகாரீ-4910 (அதாவது அவர்களுக்கு எல்லா இன்பங்களும் இங்கேயே முடிந்து விடும். நமக்கு அவ்வாறல்ல..

عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ (ترمذي)

காயத்தை தண்ணீர் படாமல் பாதுகாப்பது போல் அல்லாஹ் தனக்குப் பிரியமான அடியானை துன்யாவின் சுக போகங்களை விட்டும் பாதுகாப்பான் -

 முடியாத நிலையில் அமர்ந்து தொழுவது பற்றி... 

ஃபர்ளான தொழுகைகளை முடிந்த வரை நின்று தான் தொழ வேண்டும்

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238)البقرة عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ (بخاري) بَوَاسِيرُமூலநோய்

இம்ரானுப்னு ஹுஸைன் ரழிஅவர்கள் கூறினார்கள் எனக்கு மூலநோய் இருந்தது. அதற்காக நபி ஸல் அவர்களிடம் (அமர்ந்து) தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் முடிந்த வரை நின்று தொழு. முடியா விட்டால் உட்கார்ந்து தொழு. அதுவும் முடியா விட்டால் படுத்துத் தொழு என்று கூறினார்கள்.

நிற்க முடியாது ஆனால் அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்ய  முடியும் என்றிருந்தால் சேரில் அமருவதை விட அவ்வாறு அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்வது சிறப்பாகும். அவ்வாறு அமர்ந்த பிறகும் ருகூவு, சுஜூது இயல்பாக செய்ய முடியா விட்டால்  தரையை நோக்கி எவ்வளவு தூரம் குனிய முடியுமோ அவ்வளவு தூரம் தரைக்கு நெருக்கமாக குனிவது சிறப்பாகும்.  இருக்கும் நிலை தான் சிறப்பாகும். காரணம் எப்போது  கியாம் என்பது முடியாமல் ஆகுமோ அப்போது  சஜ்தாவுக்கு நெருக்கமான நிலை தான் சிறப்பானது. 

وَإِنْ عَجَزَ عن الْقِيَامِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ وَقَدَرَ على الْقُعُودِ يُصَلِّي قَاعِدًا بِإِيمَاءٍ وَيَجْعَلُ السُّجُودَ أَخْفَضَ من الرُّكُوعِ كَذَا في فَتَاوَى قَاضِي خَانْ حتى لو سَوَّى لم يَصِحَّ كَذَا في الْبَحْرِ الرَّائِقِ -وَإِنْ كان بِجَبْهَتِهِ جُرْحٌ لَا يَسْتَطِيعُ السُّجُودَ عليه لم يُجْزِئْهُ الْإِيمَاءُ وَعَلَيْهِ أَنْ يَسْجُدَ على أَنْفِهِ وَإِنْ لم يَسْجُدْ على أَنْفِهِ وَأَوْمَأَ لم تَجُزْ صَلَاتُهُ (فتاوي الهندية) -  وإن قدر على القيام وعجز عن الركوع والسجود يومئ قاعدا وهو قاعدا أفضل من الإيماء قائما لكون رأسه فيه أقرب إلى الأرض (فتح القدير)

நபி ஸல் அவர்கள் நஃபிலான தொழுகைகளைக் கூட தங்களின் வயதான காலத்தில் தான் உட்கார்ந்து  தொழுதார்கள். அப்போதும் ருகூவு செய்யும் நேரம் நெருங்கியவுடன் எழுந்து நின்று சுமார் 30, அல்லது 40 ஆயத்துகள் ஓதி விட்டு பிறகு ருகூவு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا (وفي رواية قالت لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ) فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهُوَ قَائِمٌ ثُمَّ يَرْكَعُ ثُمَّ سَجَدَ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَإِذَا قَضَى صَلَاتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ(بخاري) بَاب إِذَا صَلَّى قَاعِدًا ثُمَّ صَحَّ أَوْ وَجَدَ خِفَّةً تَمَّمَ مَا بَقِيَ -  وَقَالَ الْحَسَنُ :إِنْ شَاءَ الْمَرِيضُ صَلَّى رَكْعَتَيْنِ قَائِمًا وَرَكْعَتَيْنِ قَاعِدًا. بخاري

குறிப்பு- உட்கார்ந்து தொழுது கொண்டிருக்கும்போதே சிரமம் குறைந்தால் அப்படியே எழுந்து தொழலாம் என்பதற்கு இது ஆதாரம்

கருத்து-- வயதான காலத்தில் மட்டும் நபி ஸல் அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அப்போதும் கூட ருகூவுக்கு நெருக்கமான நேரம் ஆகி விட்டால் அதாவது ருகூவுக்கு இன்னும் 30 அல்லது 40 ஆயத்துகள் மிச்சமிருக்கும்போது எழுந்து நின்று அந்த ஆயத்துகளை நின்ற படி ஓதி பிறகு ருகூவு செய்வார்கள். 2-வது ரக்அத்திலும் இதே மாதிரி செய்வார்கள். தொழுகை முடிந்தவுடன் என்னைப் பார்ப்பார்கள் நான் விழித்திருந்தால் மட்டுமே என்னிடம் பேச்சுக் கொடுப்பார்கள். நான் தூங்கி விட்டால் என்னை எழுப்ப மாட்டார்கள்.

சுன்னத்தான தொழுகைகளை நிற்க முடிந்த ஒருவர் உட்கார்ந்து தொழுதால் நன்மை குறையும்

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ فَقَالَ مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ . .(بخاري) 

உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரில் பாதி நன்மை. படுத்துத் தொழுதால் இன்னும் பாதியாகக் குறையும். இது யாருக்கு என்றால் எவர் நிற்க முடிந்தும் நஃபிலான தொழுகைக்கு உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு என்று கருதி உட்கார்ந்து தொழுவாரோ அவருக்குத் தான். முடியாத நிலையில் அமர்ந்து தொழுபவருக்கு நின்று தொழுத நன்மை உண்டு. 

 وقال سفيان الثوري في هذا الحديث من صلى جالسا فله نصف أجر القائم قال هذا للصحيح ولمن ليس له عذر فأما من كان له عذر من مرض أو غيره فصلى جالسا فله مثل أجر القائم وقال النووي إذا صلى قاعدا صلاة النفل مع القدرة على القيام فهذا له نصف ثواب القائم وأما إذا صلى النفل قاعدا لعجزه عن القيام فلا ينقص ثوابه بل يكون ثوابه كثوابه قائما (عمدة القاري)

ஃபர்ளான தொழுகைகளை நின்று தொழ இயலாத நிலை என்பதற்கு விளக்கம்

إذَا عَجَزَ الْمَرِيضُ عن الْقِيَامِ صلى قَاعِدًا يَرْكَعُ وَيَسْجُدُ هَكَذَا في الْهِدَايَةِ وَأَصَحُّ الْأَقَاوِيلِ في تَفْسِيرِ الْعَجْزِ أَنْ يَلْحَقَهُ بِالْقِيَامِ ضَرَرٌ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا في مِعْرَاجِ الدِّرَايَةِ وَكَذَلِكَ إذَا خَافَ زِيَادَةَ الْمَرَضِ أو إبْطَاءَ الْبُرْءِ بِالْقِيَامِ أو دَوَرَانِ الرَّأْسِ كَذَا في التَّبْيِينِ (فتاوي الهندية)

நின்று தொழ முடியவில்லை என்பதன் அளவுகோல். நின்று தொழுதால் நோய் அதிகமாகி விடும் அல்லது நோய் நீங்குவது தாமதமாகி விடும் அல்லது தலை சுற்ற ஆரம்பித்து என்பது போன்ற காரணங்கள் தான்.                          

இலேசான சிரமம் ஏற்படும் என்பதற்காக ஃபர்ளான தொழுகையில் நிற்பதை விட்டு விடக் கூடாது

فَإِنْ لَحِقَهُ نَوْعُ مَشَقَّةٍ لم يَجُزْ تَرْكُ ذلك الْقِيَامِ كَذَا في الْكَافِي وَلَوْ كان قَادِرًا على بَعْضِ الْقِيَامِ دُونَ تَمَامِهِ يُؤْمَرُ بِأَنْ يَقُومَ قَدْرَ ما يَقْدِرُ حتى إذَا كان قَادِرًا على أَنْ يُكَبِّرَ قَائِمًا وَلَا يَقْدِرُ على الْقِيَامِ لِلْقِرَاءَةِ أو كان قَادِرًا على الْقِيَامِ لِبَعْضِ الْقِرَاءَةِ دُونَ تَمَامِهَا يُؤْمَرُ بِأَنْ يُكَبِّرَ قَائِمًا وَيَقْرَأَ قَدْرَ ما يَقْدِرُ عليه قَائِمًا ثُمَّ يَقْعُدَ إذَا عَجَزَ قال شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى هو الْمَذْهَبُ الصَّحِيحُ وَلَوْ تَرَكَ هذا خِفْتُ أَنْ لَا تَجُوزَ صَلَاتُهُ كَذَا في الْخُلَاصَةِ وَلَوْ قَدَرَ على الْقِيَامِ مُتَّكِئًا الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا وَلَا يُجْزِيهِ غَيْرُ ذلك (فتاوي الهندية) 

சற்று நேரம் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். ஒருவரால் தக்பீர் தஹ்ரீமா கட்டிய பின் சிறிது நேரம் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நின்று தொழ வேண்டும். அல்லது தக்பீர் தஹ்ரீமா அளவுக்கு மட்டும் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். இந்த அளவுக்கு முடிந்தும் ஒருவர் உட்கார்ந்து தொழுதால் அவரது தொழுகை கூடாது என்று இமாம்கள் கூறுவர் 

قَالَ شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ : وَإِنْ قَدَرَ عَلَى الْقِيَامِ مُتَّكِئًا ، الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا ، وَلَا يُجْزِيهِ غَيْرُ ذَلِكَ ، وَكَذَلِكَ إذَا قَدَرَ أَنْ يَعْتَمِدَ عَلَى عَصًا أَوْ كَانَ لَهُ خَادِمٌ لَوْ اتَّكَأَ عَلَيْهِ قَدَرَ عَلَى الْقِيَامِ . (العناية

ஏதேனும் ஒன்றின் மீது சாய்ந்து நிற்க முடியும் என்றிருந்தால் அல்லது பணியாளர் ஒருவர் இவரைத் தாங்கிப் பிடித்த நிலையில் நிற்க முடியும் என்றிருந்தால் அப்படியேனும் நின்று தொழ வேண்டும்.

ஃபர்ளான தொழுகையை நின்று தொழ முடிந்தாலும் உட்கார்ந்து தொழலாம் என வாதிடுபவரின் ஈமான் பறிபோய் விடும்

قال النووي رحمه الله وَأَمَّا الْفَرْض فَإِنَّ الصَّلَاة قَاعِدًا مَعَ قُدْرَته عَلَى الْقِيَام لَمْ يَصِحّ فَلَا يَكُون فِيهِ ثَوَاب بَلْ يَأْثَم قَالَ أَصْحَابنَا وَإِنْ اِسْتَحَلَّهُ كَفَرَ وَجَرَتْ عَلَيْهِ أَحْكَام الْمُرْتَدِّينَ كَمَا لَوْ اِسْتَحَلَّ الرِّبَا وَالزِّنَا أَوْ غَيْره مِنْ الْمُحَرَّمَات الشَّائِعَة التَّحْرِيم (شرح النووي على صحيح مسلم) (عمدة القاري)

வீட்டில் தொழுதால் நின்று தொழ முடியும். வெளியில் தொழுதால் நின்று தொழ முடியாது என்றால் வீட்டில் தொழுவதே சிறப்பு

الْمَرِيضُ إذَا صلى في بَيْتِهِ يَسْتَطِيعُ الْقِيَامَ وإذا خَرَجَ لَا يَسْتَطِيعُ اخْتَلَفَ الْمَشَايِخُ رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى فيه الْمُخْتَارُ أَنَّهُ يُصَلِّي في بَيْتِهِ قَائِمًا وَبِهِ يُفْتَى هَكَذَا في الْمُضْمَرَاتِ (فتاوي الهندية)   

அதாவது வீட்டில் தொழுதால் ஒருவரால் நின்று தொழ முடியும். ஆனால் பள்ளிக்கு வருகிறேன் என விரும்பி அவர் வந்தால் அதற்காக அவர் நடந்தால் அவர் பலவீனமாகி விடுவார். அதனால் அவர் பள்ளிவாசலில் நிற்க முடியாது என்றிருந்தால் வீட்டில் நின்று தொழுவது நல்லது. 

தமிழகத்தின் தலை சிறந்த ஆலிமான அமானீ ஹழ்ரத் கூறியது

சிறிது சிரமம் இருந்தாலும் நின்று தொழ முயற்சி செய்பவருக்கு மிக விரைவில் சிரமமின்றியே நின்று தொழுவதற்கு அல்லாஹ் அருள் புரிகிறான். ஆனால் சிறிய சிரமத்தை காரணம் காட்டி உட்கார்ந்து தொழுவதற்கு முற்பட்டு விடுபவர்களை கடைசி வரை உட்கார்ந்தே தொழும் நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விடுகிறான். அமானீ ஹழ்ரத் தனது பெரிய ஹழ்ரத் சரித்திரம் என்ற நூலில் அண்ணல் அஃலா ஹழ்ரத் பற்றி எழுதும் போது அண்ணார் அவர்கள் தனது 93 வயதிலும் கூன் விழுந்த நிலையில் நின்றே தொழுதார்கள் எனக் குறிப்படுகிறார்கள். ஆரணிபாவா கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் தன் 80 வயதுவரை நின்றே தொழுதிருக்கிறார்கள்.                                                                           

 சேரில் அமர்ந்து தொழும் கலாச்சாரம் வந்த பின்பு உட்கார்ந்து அதில் உட்கார்ந்து தொழுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முற்காலத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களால் நின்று தொழ முடியவில்லையே என்று வருந்தியவர்களாக அமர்ந்து தொழுவார்கள். பிற தொழுகையாளிகளும் இவர்களைக் காணும் போது “பாவம்” நம்மைப் போல இவர்களால் நின்று தொழ முடியவில்லையே என்று பரிதாப ப் படுவார்கள். ஆனால் காலில் சிறிய வலி வந்து விட்டால் போதும் தாங்களும் சிம்மாசனத் தொழுகைக்குத் தகுதி பெற்றவர்கள் என கருதி விடுகின்றனர்.  

சேரில் அமர்ந்து தொழுவதைப் பற்றிய ஃபத்வாக்களில் ஒன்று..

 جواب:والسائل يقرر أنه لا يستطيع الجلوس إلا على كرسى وأنه لا يستطيع الركوع، وفى هذه الحالة يصلى وهو جالس على الكرسى ويومىء للركوع برأسه ويسجد فعلا إن كان يستطيع السجود فإن لم يستطعه أيضا أومأ له برأسه كالركوع وجعل إيماءه للسجود أخفض من الركوع وصلاته صحيحة مادام العذر قائما فإن زال عنه المرض وجب عليه أن يصلى وهو قائم بركوع وسجود لعدم وجود العذر حينئذ(فتاوي الازهر

வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு சுஜூது செய்து தொழுபவர்கள் இருக்கும் வரை அல்லாஹ் இவ்வுலகை அழிக்க மாட்டான்.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا (سنن الكبري للبيهقي)

இறையச்சமுள்ள இளைஞர்களும் மேய்ந்து திரியும் கால்நடைகளும் வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு செய்து தொழுபவர்களும் பால் குடிப்பருவத்திலுள்ள குழந்தைகள் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

சேரில் அமர்ந்து தொழுபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்

சேரில் அமர்ந்து சைக்கினை செய்து தொழும்போது தலையை சிறிது கீழே கொண்டு செல்வது ருகூவு. இன்னும் சற்று கீழே கொண்டு செல்வது சுஜூது. இது அல்லாமல் எந்த அசைவும் தேவையில்லை. சிலர் கைகளை முன் புறமாக கொண்டு செல்வார்கள். அது தவறாகும்.  ருகூவு சுஜூதுக்காக குனியும் போது கைகள் தொடைகளின் மீது தான் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...