20-12-2024
جمادي الثاني 17 بسم الله الرحمن الرحيم
நான்கு நற்பாக்கியங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
நான்கு விஷயங்கள் யாருக்கு நல்லதாக அமையுமோ அவர் பாக்கியசாலி என நபி ஸல் கூறினார்கள் 1. நல்ல மனைவி 2.நெருக்கடியில்லாத வீடு. 3. சிறந்த அண்டை வீட்டார். 4. விபத்தை ஏற்படுத்தாத நல்ல வாகனம். இவற்றை விரிவாக காண்போம்
عن مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ،رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْبَعٌ مِنَ اَلسعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ ألوَاسِعُ ، وَاَلجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ اَلهَنِيءُ ، (مسند الجامع)
1. நல்ல மனைவி அமைவது பெரும் பாக்கியமாகும்
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (21) الروم
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (34) سورة النساء
மேற்படி வசனத்தில் மனைவி என்பவள் வீட்டைப் பாதுகாப்பவள் என்பதற்குத் தகுந்த மாதிரி தமிழில் கணவன், மனைவி என்ற வார்த்தைகள் அதே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன. கணவன் என்பது கண்- அவன் என்ற வார்த்தையில் இருந்து மருவி கணவன் என்று மாறியதாகும் என தமிழ் அறிஞர்கள் கூறுவர். அதாவது ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை கண்ணைப் போல் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு அந்த வார்த்தைகள் உருவானது என்பார்கள். அதுபோல மனைவி என்பது மனை- அவி என்ற இரு வார்த்தைகளில் இருந்து மருவியது என தமிழ் அறிஞர்கள் கூறுவர். மனை என்றால் வீடு என்று பொருள். அவி என்றால் வேலி என்று பொருள். வீட்டுக்கு வேலியாக இருந்து வீட்டைப் பாதுகாப்பவள் என்ற பொருளில் அவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. குர்ஆன் கூறும் வார்த்தைகள் பெயராக உள்ளன.
அதுபோல் நாத்தனார் என்பதும் நாவுக்குத் துணையார் என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வரும் மனைவியுடன் கணவனின் சகோதரியான நாத்தனார் நாவுக்குத் துணையாக என்பதே இதன் நோக்கமாகும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ (مسلم)
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ ( ابن ماجة)
கணவனின் சூழ்நிலையை அனுசரித்து வாழ்ந்த மனைவிக்கு சில எடுத்துக்காட்டுகள்
وكان الامام أحمد بن حنبل رحمة الله عليه يثني علي زوجها وماتت وهو حيٌّ فيقول أقامت امّ صالح معي ثلاثين سنة فما اختلفت انا وهي في كلمة (طبقات الحنابلة)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்களின் மனைவி உம்மு ஸாலிஹ் அவர்கள் இறந்த போது இமாம் அவர்கள் மிகவும் அழுதார்கள். பிறகு கூறினார்கள். நான் என் மனைவி உம்மு ஸாலிஹுடன் 30 வருடம் குடும்பம் நடத்தியுள்ளேன். ஒரு தடவை கூட எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்ததில்லை.
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكٍ وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِي النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَنِي (بخاري
அஸ்மா பின்த் அபீபக்கர் ரழி அவர்கள்
2. சிறந்த வீடு அமைவதும் பாக்கியமாகும்
விசாலமான வீடு அமைய நபி ஸல் அவர்கள் கற்றுத் தந்த துஆ (உளூவின் நடுவில் ஓதும் துஆ)
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قال أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ فَكَانَ الَّذِي وَصَلَ إِلَيَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي قَالَ فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا (ترمذي)
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இரவில் ஒரு துஆவை ஓதினீர்களே என்று மேற்படி துஆவை சுட்டிக் காட்டினார். மற்றொரு அறிவிப்பில் உளூச் செய்யும்போது நபி ஸல் இதை ஓதினார்கள் என்றும் அதைப் பற்றி அவர் கேட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு நபி ஸல் அவர்கள் நான் அந்த துஆவில் கேட்க வேண்டிய எதையும் விட்டு விட்டதாக நீர் காண்கிறீரா என்று கேட்டார்கள்.
நெருக்கடி இல்லாத விசாலமான வீட்டைத் தா என்ற மேற்படி துஆவுக்கு இரண்டு விதமான விளக்கங்கள்...
(ووسع لي في داري) محل سكني في الدنيا لأن ضيق مرافق الدار يضيق الصدر ويشتت الأمتعة ويجلب الهم ويشغل البال أو المراد القبر : إذ هو الدار الحقيقية ،(فيض القدير)
இந்த உலகில் நாம் வாழும் வீடு என்றும் கப்ரு என்றும் இரு விதமான விளக்கங்கள் உண்டு. யாருக்கு ஏற்கெனவே விசாலமான வீடு ஏற்கெனவே உள்ளதோ அவரைப் பொருத்த வரை இந்த துஆ கப்ரு விசாலமாகுவதை எடுத்துக் கொள்ளும். மற்றவர்களைப் பொறுத்த வரை கப்ரு விசாலமாகுதல் வீடு விசாலமாக இருக்குதல் என்ற இரண்டையும் எடுத்துக் கொள்ளும்.
என்ன தான் வெளியில் பல சவுகரியங்கள் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் கிடைக்கும் நிம்மதி..
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ..(80)النحل
பல்வேறு அலுவல்களுக்காக வெளியே செல்லும் ஆண்களுக்கு வீட்டுக்கு வந்தால் ஒரு நிம்மதி ஏற்படுவது இயல்பு. சில நேரம் வீட்டிலுள்ளவர்களுடைய தீயகுணத்தால் நிம்மதி இல்லாமல் போகலாம். அதற்கு இவ்வசனம் முரணல்ல.
ஹராமான சம்பாத்தியத்தில் வீடு கட்டினால் அதனால் நிம்மதி இல்லாமல் போகலாம்
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اتَّقُوا الْحَرَامَ فِي الْبُنْيَانِ فَإِنَّهُ أَسَاسُ الْخَرَابِ(شعب الايمان)أي لخراب الدين أو البنيان
வீடு கட்டுவதில் ஹராமை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அழிவுக்கான அஸ்திவாரமாகும்.
ஒவ்வொரு முஃமினும் சொந்த வீட்டுக்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் பொருளாதாரத்திலும் இன்ன பிற துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம் இன்று பல வகையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின் வருமானத்தை விட முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில் வசித்த முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சோம்பேறித்தனம்.
சோம்பேறித்தனத்தை விட்டும் நபி ஸல் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்
عَنْ أَنَسِ رَضِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي طَلْحَةَ الْتَمِسْ غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي حَتَّى أَخْرُجَ إِلَى خَيْبَرَ فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ مُرْدِفِي وَأَنَا غُلَامٌ رَاهَقْتُ الْحُلُمَ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ فَكُنْتُ أَسْمَعُهُ كَثِيرًا يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ1 وَالْحَزَنِ2 وَالْعَجْزِ3 وَالْكَسَلِ4 وَالْبُخْلِ5 وَالْجُبْنِ6 وَضَلَعِ الدَّيْنِ7 وَغَلَبَةِ الرِّجَالِ8...(بخاري) باب مَنْ غَزَا بِصَبِىٍّ لِلْخِدْمَةِ-كتاب الجهاد
1.நடந்ததை எண்ணி கவலைப்படுவது 2.நடைபெறப் போவதை எண்ணி கவலைப்படுவது 3.இயலாமை உடல் பலவீனம் 4.சோம்பேறித்தனம் 5.கஞ்சத்தனம் 6.வீரமற்ற கோழைதத்தனம் 7.கடன் இரட்டிப்பாகுதல் 8.கடன்காரர்களின் அல்லது அநியாயக்காரர்களின் அடக்கு முறை
சோம்பேறித்தனம் மனிதனை நரகத்தின் பால் கொண்டு செல்லும்
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ذَاتَ يَوْمٍ فِى خُطْبَتِهِ ....... - وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِى لاَ زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لاَ يَتْبَعُونَ أَهْلاً وَلاَ مَالاً وَالْخَائِنُ الَّذِى لاَ يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلاَّ خَانَهُ وَرَجُلٌ لاَ يُصْبِحُ وَلاَ يُمْسِى إِلاَّ وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ ». وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكَذِبَ «(مسلم)
ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்-(இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன் நூல்- முஸ்லிம்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபொழுது வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எவ்வித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், சஅத்பின்ரபீஆ(ரழி) அவர்களுடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் அவருக்காக எவ்வளவோ உதவிகள் செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களோ அதை ஏற்காமல் சஃதே! அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு கடைவீதியை காட்டுங்கள். எனது ரிஜ்கை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்றார்கள். அதன் படி அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அல்லாஹ் அவரது வியாபாரத்தில் அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்தன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்தான். இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பாத்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும்,அவற்றில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை.
இவ்வாறு அவர்கள் நிறைய தர்மம் செய்த போதும் அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார்கள்.
ஒவ்வொரு முஃமின்களின் வீடுகளிலும் தொழுகைக்கு தனி அறை PREYER HALL, அல்லது தனி இடம் ஏற்படுத்த வேண்டும்
عن مَحْمُود بْن الرَّبِيعِ الْأَنْصَارِيّ رضي الله عنه أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنْ الْأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي فَإِذَا كَانَتْ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي فَأَتَّخِذَهُ مُصَلًّى قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْ الْبَيْتِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ فَقُمْنَا فَصَفَّنَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ(بخاري)667باب الْمَسَاجِدِ فِى الْبُيُوتِ- كِتَاب الصَّلَاةِ
இத்பான் இப்னு மாலிக் என்ற நபித்தோழர் பத்ருப் போரில் கலந்து கொண்ட அன்சாரித்தோழர் ஆவார். அவர் நபிஸல் அவர்களிடம் வந்து என்னுடைய கண்பார்வை குறைந்து விட்டது. நான் என்னுடைய சமூக மக்களுக்குத் தொழ வைக்கிறேன். மழை வந்தால் நான் செல்லும் வழியிலுள்ள பள்ளத்தாக்குகளில் வெள்ளம் ஓடுகின்றன. நான் அவர்களின் மஸ்ஜிதுக்கு வந்து தொழ வைக்க முடியாமல் ஆகி விடுகிறேன். எனவே தாங்கள் ஒரு நேரம் எனது வீட்டுக்கு வந்து ஒரு இடத்தில் தொழுதால் அந்த இடத்தை என்னுடைய தொழுமிடமாக ஆக்கிக் கொண்டு வீட்டில் தொழுது கொள்ள நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும் என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இன்ஷா அல்லாஹ் அவ்வாறே செய்கிறேன் என்றார்கள். இத்பான் இப்னுமாலிக் ரழி அவர்கள் கூறினார்கள்ஒருநாள் காலையில் நபி ஸல் அவர்களும் அபூபக்கர் ரழி அவர்களும் என் வீட்டிற்கு வந்து அனுமதி கேட்க,நான் அனுமதி தந்தேன். அவர்கள் அமரவில்லை. மாறாக உங்களின் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்க, நான் வீட்டின் ஒரு ஓரத்தை சுட்டிக்காட்டினேன். நபி ஸல் அவர்கள் அங்கு நின்று தக்பீர் கட்டினார்கள். நாங்களும் நின்றோம் எங்களின் வரிசைகளை சரி செய்து இரு ரக்அத் தொழ வைத்தார்கள் பின்பு ஸலாம் கொடுத்தார்கள். (பின்பு அந்த இடத்தை என் தொழுமிடமாக ஆக்கிக் கொண்டேன்.)
குறிப்பு- தொழுகை அறையை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. வீட்டில் தொழுகையும் நடைபெற வேண்டும்
3. நல்ல அண்டை வீட்டார் அமைவதும் பாக்கியமாகும்
عن مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ،رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْبَعٌ مِنَ اَلسعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ ألوَاسِعُ ، وَاَلجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ اَلهَنِيءُ ، (مسند الجامع)
பழங்காலத்தின் கதைகளில் ஒன்று-ஒரு வேட்டைக்காரனும் ஒரு ஆட்டு மந்தை வைத்திருப்பவரும் அருகருகே வசித்தார்கள். அவ்விருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதாவது வேட்டைக்காரன் வைத்திருக்கும் நாய் அடிக்கடி இவருடைய ஆட்டுக் குட்டிகளைக் கடித்து விடும். இவர் சென்று உன் நாயைக் கட்டி வை என்று கூறினால் அவர் கண்டு கொள்ள மாட்டார். ஒருமுறை அவ்வாறு நடந்த போது இவர் பொறுக்க முடியாமல் அவரிடம் சென்று நியாயம் கேட்க, அதற்கு அவர் நாய் என்றால் கடிக்கத் தான் செய்யும். நீ வேண்டுமானால் உன் ஆட்டுக் குட்டிகளைக் கட்டி வைத்துக் கொள் என்று பேசினான். இவர் உடனே ஊர்த் தலைவரிடம் சென்று நடந்த தை முறையிட்டார். ஊர்த் தலைவர் இந்த விவசாயின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் தன் நண்பருக்கு மிகவும் பயனுள்ள ஒரு ஆலோசனை கூறினார்கள். அதாவது நான் உடனே அவனை அழைத்து தண்டிக்க முடியும். ஆனால் அது உங்களிருவருக்கிடையில் பெரும் பகையாக உருவாகி விடும். நீங்கள் இருவரும் தினமும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்க முடியாது. எனவே உமக்கு நான் வித்தியாசமான ஆலோசனை கூறுகிறேன் என்று ஒரு ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனையைக் கேட்டவுடன் அந்த விவசாயிக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. ஊர்த் தலைவர் சொன்ன ஆலோசனை அடிப்படையில் அந்த விவசாயி தனது அண்டை வீட்டாருக்கு அதாவது வேட்டைக்காரன் வீட்டில் என்றைக்காவது ஏதேனும் நிகழ்ச்சி நடக்குமா என்று எதிர் பார்த்தார். விரைவில் அவனுடைய மகனுக்கு ஒரு வைபவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இந்த விவசாயி தன்னுடைய ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த வேட்டைக்காரன் வீட்டுக்குச் சென்று என்னுடைய சார்பில் உங்களுடைய மகனுக்கு இதைப் பரிசாகத் தருகிறேன் என்றார். அந்த வேட்டைக்காரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நான் எவ்வளவோ உங்களை வேதனைப் படுத்தியிருந்தும் நீங்கள் அதை மனதில் வைக்காமல் என் மகனுக்குப் பரிசாக இந்த ஆட்டுக் குட்டியைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று மனம் நெகிழ்ந்தார். ஆனால் விவசாயியின் சூட்சுமம் அவருக்குப் புரியவில்லை. அதற்குப் பிறகு வேட்டைக்காரனின் நாய் மூலம் எவ்வித தொந்தரவுகளும் இவருடைய ஆடுகளுக்கு ஏற்படவில்லை காரணம் தன்னுடைய வீட்டிலேயே ஒரு ஆட்டுக் குட்டி இருப்பதால் அந்த ஆட்டுக் குட்டியைப் பாதுகாக்க வேட்டைக்காரன் தன் நாயைக் கட்டிப் போட ஆரம்பித்தான். பிரச்சினை ஓய்ந்த து
படிப்பினை- ஒரு ஆபத்து என்று வரும்போது முதலில் வந்து காப்பாற்றும் நிலையில் உள்ளவர்கள் அண்டை வீட்டார் தான். எனவே அவர்களை ஒருபோதும் பகைத்துக் கொள்ளக் கூடாது. நல்ல அண்டை வீட்டார் அமைய, நீடிக்க துஆ செய்ய வேண்டும்
4. விபத்தை ஏற்படுத்தாத நல்ல வாகனம் அமைவதும் பாக்கியமாகும்
அந்தக் காலத்திலும் வாகன விபத்துகள் நிகழ்ந்தன
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ وَلَا تُحَنِّطُوهُ وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا .(بخاري) باب الْحَنُوطِ لِلْمَيِّتِ .-كتاب الجنائز
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் நபி ஸல் அவர்களுடன் அரஃபா மைதானத்தில் தங்கியிருந்தார் திடீரென அவர் தம் வாகன ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார் அது அவரது கழுத்தை மிதித்து முறித்து விட்டது அவர் இறந்து விட்டார் அப்போது நபி ஸல் அவர்கள் அவரது இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி அவருக்கு இரு துணிகளைக் கொண்டு கஃபனிடுங்கள் ஆனால் அவருக்கு நறுமணம் பூச வேண்டாம் அவரது தலையை மறைக்க வேண்டாம் ஏனெனில் மறுமை நாளில் தல்பியா சொன்ன நிலையில் அவரை அல்லாஹ் எழுப்புவான் எனவே அவர் எந்த இஹ்ராமுடைய நிலையில் ஷஹீதானாரோ அதே நிலையில் அவரை அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் – புகாரீ – 1266 –
இஹ்ராம் அணிந்தவர் தலையை மறைக்கக்கூடாது என்பதும், நறுமணம் தடவக் கூடாது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே..
அடிக்கடி வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நபிகளாரிடம் துஆவைப் பெற்ற சஹாபி
عَنْ جَرِيرٍ رضي الله عنه قال ....وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسٍ بَعْدُ.... (بخاري)
ஜரீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” (அடிக்கடி குதிரையில் இருந்து கீழே விழுந்து விடுகிறேன்) என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். நபி ஸல் அவர்களின் முபாரக்கான கரங்கள் (என் நெஞ்சின் பதிந்து) அதன் பிரதிபலிப்பை நான் என் நெஞ்சில் பார்த்தேன். அதற்குப் பிறகு நான் ஒருபோதும் குதிரையில் இருந்து கீழே விழுவதில்லை.
சரியான வாகனம் இன்றி சிரமப்பட்ட சஹாபிக்கு வாகனம் அமைத்துக் கொடுக்க நபி ஸல் காட்டிய அக்கறை
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَغَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاضِحٍ لَنَا فَأَزْحَفَ الْجَمَلُ فَتَخَلَّفَ عَلَيَّ فَوَكَزَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَلْفِهِ قَالَ بِعْنِيهِ وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ فَلَمَّا دَنَوْنَا اسْتَأْذَنْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ ثَيِّبًا أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ جَوَارِيَ صِغَارًا فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ ثُمَّ قَالَ ائْتِ أَهْلَكَ فَقَدِمْتُ فَأَخْبَرْتُ خَالِي بِبَيْعِ الْجَمَلِ فَلَامَنِي فَأَخْبَرْتُهُ بِإِعْيَاءِ الْجَمَلِ وَبِالَّذِي كَانَ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَكْزِهِ إِيَّاهُ فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَوْتُ إِلَيْهِ بِالْجَمَلِ فَأَعْطَانِي ثَمَنَ الْجَمَلِ وَالْجَمَلَ وَسَهْمِي مَعَ الْقَوْم (بخاري 2405
(பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது வாகனித்தவனாக நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்து கொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கிவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அறைந்தார்கள் அவர்களின் கை பட்ட பரக்கத்தால் அது நன்றாக முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது பின்பு நபி ஸல் 'இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன் மீது சவாரி செய்து நீ வரலாம்' என்றார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, யாரஸூலல்லாஹ்! சமீபத்தில்தான் திருமணம் நடந்தது' என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? வாழ்ந்த அனுபவமுள்ள (விதவையான அல்லது விவாகரத்து பெற்ற) பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், 'வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாக்கப்பட்டுவிட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'உன் வீட்டாரிடம் போ!' என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய்மாமனிடம் ஒட்டகத்தை விற்றுவிட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்து விட, நபி(ஸல்) அவர்கள் அதைப் (பின்பக்கத்தில்) அறைந்ததையும் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச்செல்வங்களை வழங்கும்போதுஅதில் என் பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.
படிப்பினை- ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாகனப் பயன்பாடுக்கு நல்ல ஒரு ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்பது நபி ஸல் அவர்களின் எண்ணம். அதை வெளிக்காட்டாமல் அவரிடம் விலைக்கு வாங்குவது போல் வாங்கி அன்பளிப்பாக தந்தார்கள்
அவசியத் தேவையின்றி புதிது புதிதாக வாகனங்களை வட்டிக்கு வாங்காதீர்கள்.
வட்டிக்கு கடன் வாங்கி வாகனம் வாங்கி அதனால் பரக்கத் இல்லாமல் போகலாம். அதனாலும் விபத்துகள் ஏற்படலாம் விபத்தை ஏற்படுத்தாத வாகனமும் நான்கு அருட்கொடைகளில் ஒன்று என்ற நபிமொழியில் இதுவும் அடங்கும்.
வேகம் தவிர்த்தல் – சாலை விபத்தின் முக்கியமான காரணம் வேகம்
عن سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ – ترمذي
நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது
தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். புயல் பூகம்பம் சுனாமி போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு ஐந்தாவது இடம்.
வாகனத்தைப் பராமரிப்பதும் சுன்னத்
عَنْ الشَّعْبِيِّ يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا (ابوداود
قالوا : وهذا إذا كان ترك صاحبها لها على إباحته إياها لمن أخذها ،(تهذيب الاثار)
ஒருவர் தனது வாகனத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட நிலையில் அது அழியும் நிலைக்குச் சென்ற பின்பு அதை இன்னொருவர் காப்பாற்றினால் எவர் காப்பாற்றினாரோ அவருக்கு அந்த அந்த வாகனம் உரியதாகும். விளக்கம்- இது அதன் உரிமையாளர் சம்மதித்து விட்டுக் கொடுத்து விட்டால் ஜாயிஸாகும். குறிப்பு- யாரேனும் ஒருவர் அதைப் பராமரிப்பது நல்லது என்பதை இது வலியுறுத்துகிறது.
வாகனத்தில் ஏறும்போதெல்லாம் வாகனத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்த
வல்ல நாயனுக்கு நன்றி செலுத்த வேண்டும்
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ (ترمذي)
நபி ஸல் அவர்கள் பிரயாணம் புறப்படும் போது வாகனத்தில் ஏறினால் மூன்று முறை தக்பீர் கூறுவார்கள். பிறகு துஆ ஓதுவார்கள். எங்களால் வசப்படுத்த முடியாத இந்த வாகனத்தை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவன் மிகவும் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாம் அனைவரும் அவன் பக்கமே மீளவேண்டியவர்களாக இருக்கிறோம். யாஅல்லாஹ் இப்பிரயாணத்தில் நான் இறையச்சத்தையும் நலவையும் உன்னிடம் வேண்டுகிறேன். உனக்குப் பிடித்தமான செயலை மட்டுமே நான் செய்யும் பாக்கியத்தை உன்னிடம் வேண்டுகிறேன். யாஅல்லாஹ் இப்பிரயாணத்தின் தொலை தூரத்தை எனக்கு இலேசாக்குவாயாக. பூமியின் தூரத்தை சுருக்கித் தருவாயாக. யாஅல்லாஹ் நீ தான் எங்களின் பிரயாணத் தோழன்.நீ தான் எங்களது இல்லங்களின் பிரதிநிதி. நாங்கள் பிரயாணத்தில் ஆகி விட்டோம். எங்களது இல்லங்களின் பிரதிநிதியாக நீ ஆகி விடுவாயாக... என்று நபி ஸல் துஆ ஓதுவார்கள். பிரயாணம் முடிந்து திரும்பி வந்தவுடனும் துஆ ஓதுவார்கள்.
குறிப்பு- பாதுகாப்பான பயணத்திற்கு மேற்படி துஆவை ஒவ்வொரு முஃமினும் மனப்பாடம் செய்து அவரது நாவினால் ஓதுவது அவசியமாகும். வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும்போது வாகனம் ஓதுவது போன்று ஆடியோ பொருத்தி வைப்பது சுன்னத்தைக் கடைபிடிப்பதாக ஆகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக