வியாழன், 28 நவம்பர், 2024

தொழுகையில் ஷைத்தான் ஏற்படுத்தும் இடையூறுகள்

 29-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 26    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ والمنكر(العنكبوت45)

நிச்சயமாக தொழுகை பாவங்களை பாவங்களை விட்டும் தடுக்கும் என்று அல்லாஹ் கூறியிருக்க இன்று எத்தனையோ பேர் தொழுகையாளிகளாக இருந்தும் பாவம் செய்கின்றனர். காரணம் அவர்களின் தொழுகை மன ஓர்மையுடன் கூடிய தொழுகையாக இல்லை என்பதே முக்கிய காரணம். ஆகவே தொழுகையில் மன ஓர்மையைக் கெடுக்கும் ஷைத்தானின் சாதனங்களை கண்டறிந்து அவற்றை விட்டும்  தற்காத்துக் கொள்ள வேண்டும்.                                       

எத்தனை ரக்அத் தொழுதோம் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்.

عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُذِّنَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ فَلَا يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى (بخاري)

தொழுகைக்கு அதான் சொல்லப் பட்டால் அந்த அதானை கேட்காமல் இருப்பதற்காக பின்புறம் காற்று வெளியாகும் அளவுக்கு ஷைத்தான் விரண்டோடுவான். முஅத்தின் பாங்கை முடித்து அமைதியானதும் மீண்டும் வருவான். இகாமத் சொல்லப் பட்டால் மறுபடியும் விரண்டோடுவான் இகாமத்தை முடித்த பின் மீண்டும் ஒவ்வொரு மனிதரிடமும் வருவான். மற்ற நேரங்களில் அவருக்கு ஞாபகத்தில் வராத விஷயங்கள் அனைத்தையும் தொழுகையில் அவருக்கு ஞாபகமூட்டி அதை நினைத்துப் பார் என  அவருக்குள் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான். இறுதியில் எத்தனை ரக்அத் தொழுதோம் என்பதை அறிய மாட்டார். மறந்து விடுவார்.                                      

தொழுகையில் இடையூறு செய்யும் ஷைத்தானுக்கு கின்ஜப் என்று பெயர்.

عَنْ أَبِي الْعَلَاءِ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خَنْزَبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي (مسلم

   நபி (ஸல்) அவர்களிடம் உஸ்மான் இப்னு அபில் ஆஸ் (ரழி) என்ற ஸஹாபி வந்து அல்லாஹ்வின் தூதரே! “(நான் தொழுது கொண்டிருக்கும் போது) எனக்கும் என்  தொழுகைக்கும் எனது ஓதலுக்கும் இடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் அவன் தான் )தொழுகையில் குழப்பத்தை ஏற்படுத்தும்(  கின்ஸப் (خنزب) என்னும் ஷைத்தான் ஆவான்”........ என்று கூறினார்கள். 

உளூவில் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தானுக்கு வலஹான் என்று பெயர். 

எனவே உளூவில் வஸ்வாஸை தவிர்த்துக் கொள்ளுங்கள்

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ (ابن ماجة

நபி அவர்களின் தொழுகையிலும் ஷைத்தான் இடையூறு செய்ய முயன்றான். ஆனால் முடியவில்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى صَلَاةً قَالَ إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي فَشَدَّ عَلَيَّ لِيَقْطَعَ الصَّلَاةَ1 عَلَيَّ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَذَعَتُّهُ2 وَلَقَدْ هَمَمْتُ أَنْ أُوثِقَهُ إِلَى سَارِيَةٍ حَتَّى تُصْبِحُوا فَتَنْظُرُوا إِلَيْهِ فَذَكَرْتُ قَوْلَ سُلَيْمَانَ عَلَيْهِ السَّلَام رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي (سورة ص35)} فَرَدَّهُ اللَّهُ خَاسِيًا (بخاري) باب مَا يَجُوزُ مِنَ الْعَمَلِ فِى الصَّلاَةِ

 என் தொழுகையில் ஷைத்தான் இடையூறு செய்ய முயன்றான். அல்லாஹ் எனக்கு ஷைத்தானை வசப்படுத்திக் கொடுத்ததால் அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து  காலையில் எல்லோரும் அவனை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் சுலைமான் அலை செய்த துஆ நினைவுக்கு வந்தது. யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யாருக்கும் தர மாட்டாயே அத்தகைய ஆட்சியை எனக்குத் தா என்று கேட்டதன் அடிப்படையில் ஷைத்தான்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்படும் நிலையை அல்லாஹ் வைத்தி ருந்தான். அதில் தலையிடக்கூடாது என்று எண்ணி அவனை அவிழ்த்து விட்டு விட்டேன். ஏமாற்றம் அடைந்தவனாக திரும்பிச் சென்றான்.   

தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டங்களை தடுப்பது எப்படி ?

1, அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி, உளத்தூய்மையுடன் வணங்குவது

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ (5البينة)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ مَا الْإِيمَانُ قَالَ الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَبِلِقَائِهِ وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ قَالَ مَا الْإِسْلَامُ قَالَ الْإِسْلَامُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلَا تُشْرِكَ بِهِ وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ قَالَ مَا الْإِحْسَانُ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ مَتَى السَّاعَةُ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتْ الْأَمَةُ رَبَّهَا وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الْإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ فِي خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ ثُمَّ تَلَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ}الْآيَةَ ثُمَّ أَدْبَرَ فَقَالَ رُدُّوهُ فَلَمْ يَرَوْا شَيْئًا فَقَالَ هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ قَالَ أَبُو عَبْد اللَّهِ جَعَلَ ذَلِك كُلَّهُ مِنْ الْإِيمَانِ (بخاري)

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, ‘ஈமான் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு,‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும்,

மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து,‘இஸ்லாம் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு அவர்கள் கூறினார்கள்.‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்” என்று கூறினார்கள். அடுத்து,‘இஹ்ஸான் என்றால் என்ன?‘ என்று அவர் கேட்டதற்கு அவர்கள் கூறினார்கள்:‘(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்’ அடுத்து,‘மறுமை நாள் எப்போது?‘ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்;  மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல்.ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். ‘அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, ‘இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” 

முகஸ்துதிக்காக தொழுபவர்களிடம் உளத்தூய்மை இருக்காது.

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ فِي جَهَنَّم لَوَادِيًا تَسْتَعِيذ جَهَنَّم مِنْ ذَلِكَ الْوَادِي فِي كُلّ يَوْم أَرْبَعمِائَةِ مَرَّة أُعِدَّ ذَلِكَ الْوَادِي لِلْمُرَائِينَ مِنْ أُمَّة مُحَمَّد لِحَامِلِ كِتَاب اللَّه وَلِلْمُصَّدِّقِ3 فِي غَيْر ذَات اللَّه وَلِلْحَاجِّ إِلَى بَيْت اللَّه وَلِلْخَارِجِ فِي سَبِيل اللَّه (تفسير ابن كثير)(طبراني)

நரகத்தில் ஒரு பகுதி உள்ளது. அதை விட்டும் பாதுகாக்கும்படி ஜஹன்னம் ஒவ்வொரு நாளும் 400 தடவை பாதுகாப்புத் தேடும். அது இந்த உம்மத்தில் முகஸ்துதிக்காக  செயல்படுபவருக்கென்றே  அது தயார்செய்யப்பட்டுள்ளது. இறை வேதத்தை சுமந்தவர்களிலும் அல்லாஹ்வுக்காக  அல்லாமல் வேறுநோக்கத்திற்காக தர்மம் செய்தவருக்காக முகஸ்துதிக்காக ஹஜ் செய்தவருக்காக முகஸ்துதிக்காக போருக்குச் சென்றவருக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.                         

முகஸ்துதிக்காக தொழுபவர்களைப் பற்றி  இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியது:

     அல்லாமா இப்னுல் கைய்யிம்  ரஹ் அவர்கள்  கூறியுள்ளார்கள். தொழுகையாளிகள் ஐந்து வகையினர். 1.தொழுகையில் அநியாயக்காரர்கள் இவர்கள் விட்டு விட்டு தொழுவார்கள். அல்லது ஜும்ஆ ஈத் ஆகிய முக்கிய தினங்களில் மட்டுமே தொழுவார்கள். தொழுகை தவறியதற்காக கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு. 2.இவர்கள் தவறாமல் தொழுபவர்கள். பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்கு வருபவர்கள். எனினும் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை சிந்தனைகள் வெளியே இருக்கும். அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவர்களும் மிகக் கடுமையாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள். 3. இவர்களும்  தவறாமல் தொழுபவர்கள் தான். இவர்களுக்கு தொழுகையில் வேறு சிந்தனைகள் சில நேரம் வரும். எனினும் அதை கட்டுப்படுத்த முடிந்த வரை முயற்சிப்பார்கள். இவர்களுக்கு தொழுகையின் நன்மைகள் கிடைக்காவிட்டாலும் இவர்களின் சிறுபாவங்கள் மன்னிக்கப்படலாம். 4.இவர்களும் தொழுகையாளிகள் தான். ஆனால் முழுக்க முழுக்க தொழுகையில் வெளி சிந்தனைகள் இன்றி கவனமாக தொழுவார்கள். இவர்கள் தான் தொழுகைக்கான நன்மைகள் வழங்கப்படுபவர்கள்.  5.இவர்கள் இறைநேசர்கள் இவர்கள் தொழ ஆரம்பித்தால் அல்லாஹ்வின் அன்பில் முற்றிலுமாக மூழ்கி அல்லாஹ் தன் முன் இருப்பது போன்று தொழுவார்கள் இவர்களே  மற்ற அனைவரையும் விட மேலானவர்கள்- நூல் வாபிலுஸ் ஸய்யிப்       

தொழுகையில் தேவையில்லாத செய்ல்களில் ஈடுபடுவது கூடாது.

رَأَى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ رَجُلاً وَهُوَ يَعْبَثُ بِلِحْيَتِهِ فِي الصَّلاَة ، فَقَالَ : لَوْ خَشَعَ قَلْبُ هَذَا لَخَشَعَتْ جَوَارِحُهُ.

  ஒருமுறை ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர் தொழுகையில் தனது தாடியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் இவருடைய உள்ளம் ஒர்மைப்பட்டிருந்தால் இவரின் உறுப்புகளும் ஒர்மை அடைந்திருக்கும் என்று கூறினார்கள். (கன்ஜுல்உம்மால்)

உள்ளச்சமும், மனஒர்மையும் இல்லாத ஒருவரின் தொழுகை பெயரளவில் தொழுகையாக இருக்குமே  தவிர இறைவன் கூறும் தொழுகையாக ஆகாது. 

وَرَوَى مُحَمَّدُ بْنُ نَصْرٍ الْمَرْوَزِيِّ فِي كِتَابِ تَعْظِيمِ قَدْرِ الصَّلَاةِ فِي حَدِيثٍ مُرْسَلٍ { لَا يُقْبَلُ مِمَّنْ عَمِلَ عَمَلًا حَتَّى يَشْهَدَ قَلْبُهُ مَعَ بَدَنِهِ }

  (طرح التثريب)

உடலும், உள்ளமும் ஓர்மைப்படாத ஒருவரின் தொழுகையை அல்லாஹ் அறவே கண்டு கொள்ள மாட்டான்.

இமாம் ஓதும் கிராஅத்தை செவி சாய்த்து கேட்பதாலும் கவனம் சிதறாது.

قال الله تعالي وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ(204الاعراف) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا (ابوداود)

எப்போதாவது ஒருமுறை கவனம் சிதறுவது இயல்பு. அதுவும் நல்ல விஷயங்களுக்காக...

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة

அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.              

இஷாவில் நபி ஸல் என்ன சூரா ஓதினார்கள் என அபூஹுரைரா நினைவில் வைத்திருந்தார்கள். ஆனால் இன்னொருவருக்கு நினைவில் இல்லை.

عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ رَجُلًا فَقُلْتُ بِمَا قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لَا أَدْرِي فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ

தொழுகையில் கவனம் சிதறாமல் இருப்பதற்காக தடுக்கப்பட்ட சில விஷயங்கள்.

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وُضِعَ عَشَاءُ5 أَحَدِكُمْ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلَنَّ حَتَّى يَفْرُغَ مِنْهُ (مسلم) بَاب كَرَاهَةِ الصَّلَاةِ بِحَضْرَةِ الطَّعَامِ الَّذِي يُرِيدُ أَكْلَهُ فِي الْحَالِ وَكَرَاهَةِ الصَّلَاةِ مَعَ مُدَافَعَةِ الْأَخْبَثَيْنِ- كتاب المساجد

இகாமத் சொல்லப்பட்டு விட்டாலும் இரவு உணவு தயாராக இருக்கும் நிலையில் நல்ல பசியும் இருந்தால் முதலில் அஷாவை அதாவது உணவை முடித்து விட்டு பிறகு இஷா தொழுங்கள். காரணம் இதே பசியுடன் தொழுதால் இஷா தொழுகை அனைத்தும் உணவு சிந்தனையாக மாறி விடும்.

 عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَعَسَ6 أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لَا يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ(بخاري) وَقَالَ أَبُو الدَّرْدَاءِ مِنْ فِقْهِ الْمَرْءِ إِقْبَالُهُ عَلَى حَاجَتِهِ حَتَّى يُقْبِلَ عَلَى صَلاَتِهِ وَقَلْبُهُ فَارِغٌ (بخاري)

உங்களில் ஒருவர் இரவுத் தொழுகை தொழுது கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால் சற்று தூங்கிக் கொள்ளட்டும். ஏனெனில் தூக்க க் கலக்கத்தில்  உங்களில் ஒருவர் தொழுதால் அவர் தனக்காக இஸ்திஃபார் செய்கிறாரா அல்லது திட்டுகிறாரா என்பது அவருக்குத் தெரியாது.                                                                          

உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவதால் கவனம் சிதறும்.

عَنْ أَنَسٍ رضي الله عنه  قال كَانَ قِرَامٌ لِعَائِشَةَ رضي الله عنها سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمِيطِي عَنَّا قِرَامَكِ7 هَذَا فَإِنَّهُ لَا تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلَاتِي(بخاري

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஒரு வண்ண மயமான துணி இருந்தது. அதன் மூலம் தன் வீட்டின் ஒரு பகுதியை மறைத்திருந்தார்கள். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள்  நம்மை விட்டும் இந்த த் துணியை நீக்கு.. ஏனெனில் அதிலுள்ள வண்ணங்கள் என்னுடைய தொழுகையில் இடையூறு செய்கின்றன என்றார்கள்.                                 

வண்ண மயமான ஆடையை அணிந்து தொழுததால் கவனம் சிதறியது என்பதற்காக அதை திருப்பிக் கொடுத்த நபி ஸல்.

عَنْ عَائِشَةَ رض قالت أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ8 لَهَا أَعْلَامٌ فَنَظَرَ إِلَى أَعْلَامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ9 أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلَاتِيوفي رواية كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلَاةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي(بخاري وجه تخصيص أبي جهم بإرسال الخميصة إليه أنه هو الذي أهداها له {صلى الله عليه وسلم} ، فلذلك ردها عليه (مرقاة

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நபி ஸல் அவர்கள்  வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து தொழுதார்கள். அப்போது அதன் வேலைப்பாடுகளை சற்று கவனித்தார்கள். தொழுகை முடிந்து திரும்பியவுடன் இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வண்ணம் இல்லாத ஆடையை வாங்கி வாருங்கள் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இந்த வண்ணங்களின் பால் என் கவனம் செல்கிறது அது என்னுடைய தொழுகையில் இடையூறு செய்கின்றது என்றார்கள்.

தொழுபவர்களின் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்பதில் நபி ஸல் அவர்களின் பேணுதல்.

عن أَنَس رضي الله عنه قَالَ بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلَاةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ فَتَبَسَّمَ يَضْحَكُ وَنَكَصَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الْخُرُوجَ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلَاتِهِمْ فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلَاتَكُمْ فَأَرْخَى السِّتْرَ وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ (بخاري)باب هَلْ يَلْتَفِتُ لأَمْرٍ يَنْزِلُ بِهِ-كتاب الاذان

 நபி ஸல் அவர்களின் கடைசி நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் ஃபஜ்ருத்தொழுகை ஜமாஅத் நடைபெற்றது. திரையை விலக்கி தோழர்களைப் பார்த்தார்கள். நபி ஸல் அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் தோழர்களின் சிந்தனைகள் தடுமாறுவதைக் கண்ட நபி ஸல் தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள் என்று கூறி திரையை மூடிக் கொண்டார்கள். அது தான் கடைசியாக தோழர்களை நபி ஸல் அவர்கள் பார்த்த பார்வையாகும் அன்றே வஃபாத்தாகி விட்டார்கள்.             

தொழுகையில் ஏற்படும் மறதிக்கான பரிகாரங்கள்

இந்த உம்மத்துக்கு கற்றுத் தருவதற்காக நபி ஸல் அவர்களின் தொழுகையில் சில தடவைகள் மறதி ஏற்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقَصُرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَدَقَ ذُو الْيَدَيْنِ فَقَالَ النَّاسُ نَعَمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ (بخاري

நபி ஸல் அவர்கள் ஒருமுறை நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் இரண்டு ரக்அத் மட்டும் தொழுது விட்டு திரும்பினார்கள். அப்போது துல்யதைன் என்ற பெயர் கொண்ட நபித்தோழர் வந்து நபி ஸல் அவர்களிடம் தொழுகை குறைக்கப் பட்டு விட்டதா அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா என்று கேட்டார். இவர் சொல்வது உண்மையா என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். உடனே நபி ஸல் அவர்கள் மீதமுள்ள இரண்டு ரக்அத்துகளை மட்டும் தொழுது  கடைசியில் ஸலாம் கொடுத்து பிறகு மீண்டும் ஸஜ்தா ஸஹ்வு செய்தார்கள். அந்த ஸஜ்தா தொழுகையின் சஜ்தா போன்றோ அல்லது சற்று நீளமாகவோ இருந்தது.                                                                      

மேற்காணும் தவறு போன்று நமக்கு ஏற்பட்டால் ஸலாம் கொடுத்த பின்பு எதுவும் பேசாமல் நெஞ்சைத் திருப்பாமல் இருக்கும் வரை இது போன்று விடுபட்ட ரக்அத்துகளை மட்டும் தொழுது ஸஜ்தா ஸஹ்வு செய்யலாம். ஆனால் சில வார்த்தைகள் பேசி விட்டால் மீண்டும் தொழு வேண்டும். அப்படியானால் மேற்படி ஹதீஸின் விளக்கம் என்ன என்பதற்கு பதில் பின்வருமாறு-

وحديث ذي اليدين منسوخ بحديث مسلم إن صلاتنا هذه لا يصلح فيها شيء من كلام الناس (الدر المختار

மேற்படி ஹதீஸின் சட்டம் மற்றொரு ஹதீஸின் மூலம் மன்ஸூஹ் அதாவது மாற்றப்பட்டதாகும்.   

عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَا ثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَيَّ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي قَالَ إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ (مسلم

தொழுகையில் ஏற்படும் எல்லா மறதிகளுக்கும்  ஸஜ்தா ஸஹ்வு அவசியமில்லை.

والسهو يلزم إذا راد في صلاته فعلا من جنسها ليس منها أو ترك فعلا مسنونا أو ترك قراءة فاتحة الكتاب أو القنوت أو التشهد أو تكبيرات العيدين أو جهز الإمام فيما يخافت أو خافت فيما يجهر  (مختصر القدوري)

ومن سها عن القعدة الأولى ثم تذكر وهو إلى حال القعود أقرب عاد فجلس وتشهد وإن كان إلى حال القيام أقرب لم يعد ويسجد للسهو ومن سها عن القعدة الأخيرة فقام إلى الخامسة رجع إلى القعدة ما لم يسجد وألغى الخامسة ويسجد للسهو وإن قيد الخامسة بسجدة بطل فرضه وتحولت صلاته نفلا وكان عليه أن يضم إليها ركعة سادسة وإن قعد في الرابعة قدر التشهد ثم قام ولم يسلم يظنها القعدة الأولى عاد إلى القعود ما لم يسجد في الخامسة ويسلم وإن قيد الخامسة بسجدة ضم إليها ركعة أخرى وقد تمت صلاته والركعتان له نافله وسجد للسهو  ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وكان ذلك أول ما عرض له استأنف الصلاة فإن كان الشك يعرض له كثيرا بنى على غالب ظنه إن كان له ظن فإن لم يكن له ظن بنى على اليقين ( القدوري

சில குறிப்பிட்ட தவறுகளுக்கு மட்டும் தான் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். மறதி என்பது தொழுகையில் பல்வேறு வகைகளில் ஏற்படலாம்.

தொழுகை சார்ந்த ஏதேனும் ஒரு அமலை அதிகப்படுத்துவதாலும் தவறு ஏற்படும். அதிகப்படுத்துதல் என்பது சொல்லாலும் இருக்கலாம். செயலாலும் இருக்கலாம்.செயலால் கூடுதல் என்பது ஸஜ்தா, ருகூஉ போன்றதை அதிகப்படியாக செய்வதாகும். சொல்லால் கூடுதல் என்பது கிராஅத், திக்ரு போன்றவற்றை அதற்குரிய இடத்தை அன்றி வேறு இடத்தில் மாற்றி ஓதுவதாகும்.

    தொழுகையில் வாஜிபான காரியங்களை மறதியாக விடுவதால் ஸஜ்தா ஸஹ்வு அவசியமாகும். உதாரணமாக நான்கு அல்லது மூன்று ரக்அத் உள்ள தொழுகையில் நடு அத்தஹிய்யாத்துக்கு அமருவது வாஜிப். இதை விட்டு விட்டு மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்து விட்டால் அதற்காக  ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். ஒருவேளை அவனுக்கு விடுபட்ட வாஜிபான காரியம் தப்பிய நிலைக்கு நெருக்கமான சமயத்தில் ஞாபகம் வந்து விட்டால் அந்த (தப்பிய) நிலையை அவன் பெற்று கொள்ள வேண்டும். உதாரணமாக நடு அத்தஹிய்யாத் அமருவதை விட்டு விட்டு எழ ஆரம்பிக்கும்போது பாதி தூரம் கூட எழாத நிலையில் ஞாபகம் வந்து விட்டால் உடனே உட்கார்ந்து கொள்ளலாம். அதற்கு ஸஜ்தா ஸஹ்வு தேவையில்லை. இவ்வாறு வாஜிபை விட்டாலும் வாஜிபில் கூடுதல் குறைவு செய்தாலும் இவ்விரண்டு நிலைகளிலும் ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜிப் (கட்டாயம்) ஆகும்.

عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِيَ قَائِمًا فَلْيَجْلِسْ فَإِنْ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَيْ السَّهْوِ (ابوداود

நடுஅத்தஹிய்யாத்தை விட்டு விட்டு மறதியாக ஒருவர் எழுந்து விட்டால் நன்றாக எழுந்து நிற்பதற்கு முன் ஞாபகம் வந்தால் உடனே அமரட்டும். நன்கு எழுந்து விட்டால் அவர் மீண்டும் அமருவது கூடாது மாறாக தொடர்ந்து தொழுது இறுதியில் சஜ்தா ஸஹ்வு செய்யட்டும் 

 சந்தேகம் வந்தால்

  عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحْ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ....  (مسلم

யாருக்கேனும் தொழுகையில் எத்தனை ரக்அத் தொழுதோம் என்பதில் சந்தேகம் வந்தால் அதாவது மூன்றாவது ரக்அத்தா? அல்லது நான்காவது ரக்அத்தா? என்ற சந்தேகம் வந்தால் சந்தேகத்தை விட்டுவிட்டு உறுதியானதை எடுத்துக் கொள்ளவும் அதாவது மூன்று என்று முடிவு செய்து தொழுது விட்டு கடைசியில் ஸஜ்தா ஸஹ்வு செய்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...