22-11-2024
ஜமாதுல் ஊலா- 19
بسم الله الرحمن الرحيم
மறதியின் வகைகளும்
மறதி நீங்குவதற்கான வழி முறைகளும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا (البقرة)
மனிதனிடம் உள்ள பலவீனங்களில் ஒன்று மறதி. இந்த மறதியைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றியும் எந்தெந்த காரணங்களால் அதிகமான மறதி ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் அத்தகைய மறதி நீங்குவதற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போம்
பல விஷயங்களில் மறதிக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (ابن ماجة)
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهْوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري)
عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ نَسِىَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا ، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ »(بخاري)
யார் தொழுகையை முற்றிலுமாக மறந்த நிலையில் ஏதேனும் வேலையில் ஈடுபட்டாரோ அவர் ஞாபகம் வந்தவுடன் தொழ வேண்டும்
இயல்பாக ஏற்படும் மறதிக்கு தண்டனை கிடையாது என்றால் பின்வரும் வசனத்தில் இறைவா நாங்கள் மறந்து செய்த தவறுக்காக எங்களை தண்டித்து விடாதே என்று அல்லாஹ் கற்றுக் கொடுப்பதற்கு என்ன காரணம்
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا (البقرة) قال الكلبي : كان بنو إسرائيل إذا نسوا شيئاً مما أمروا به أو أخطؤوا عجلت لهم العقوبة ، فحرم عليهم شيء من مطعم أو مشرب على حسب ذلك الذنب ، فأمر الله المؤمنين أن يسألوه ترك مؤاخذتهم بذلك وقد قال رسول الله صلى الله عليه وسلم "رفع عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه".(تفسير الخازن)-
பனீ இஸ்ராயீல் சமூகத்தார் ஏதேனும் மறதியாக பாவம் செய்து விட்டாலும் அதற்காக தண்டிக்கப்பட்டார்கள் அந்தப் பாவம் அளவுக்கு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவுகள் நிறுத்தப்படும். அதுபோன்று எங்களின் நிலையை ஆக்கி விடாதே என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். இந்த உம்மத்தைப் பொறுத்த வரை மறதியும் நிர்பந்தமும் பெரும்பாலும் மன்னிக்கப்படும்.
மறதி பல வகை 1, அல்லாஹ்வே ஏற்படுத்தும் மறதி
அது இந்த உம்மத்தின் நன்மைக்காக இருக்கலாம். லைலத்துல் கத்ரு எது என்பதை தெரியப்படுத்தி பின்பு அல்லாஹ்வே மறக்கடித்தது போல. அல்லது முன்பிருந்த சட்டத்தை விட சிறந்த சட்டத்தை கொண்டு வருவதற்காக... அல்லது தமது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا ألَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (106) أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ (البقرة107)
- مِثْل قَوْله "الشَّيْخ وَالشَّيْخَة إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّة " وَقَوْله " لَوْ كَانَ لِابْنِ آدَم وَادِيَانِ مِنْ ذَهَب لَابْتَغَى لَهُمَا ثَالِثًا (ت-ابن كثير
கிழவனும் கிழவியும் வபிச்சாரம் செய்தால் அவ்விருவரையும் கல்லால் எரிந்து கொள்ளுங்கள் என்ற மேற்படி குர்ஆன் வசனம் இறக்கப்பட்டு பின்பு அல்லாஹ்வே அதை மாற்றி விட்டான். அவற்றில் சில வசனங்களை அல்லாஹ்வே மறக்கடித்து விட்டான். அல்லாஹ் எதற்காக அவன் இறக்கிய வசனத்தை அவனே மாற்றுகிறான் என்பதற்கு 107 வது வசனத்தில் பதில் உள்ளது. அதாவது அவனுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அவன் செய்யும் ஆற்றல் உடையவன்.
عَنْ سَالِم عَنْ أَبِيهِ قَالَ : قَرَأَ رَجُلَانِ سُورَة أَقْرَأهُمَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَا يَقْرَآنِ بِهَا فَقَامَا ذَات لَيْلَة يُصَلِّيَانِ فَلَمْ يَقْدِرَا مِنْهَا عَلَى حَرْف فَأَصْبَحَا غَادِيَيْنِ عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ لَهُ فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّهَا مِمَّا نُسِخَ وَأُنْسِيَ فَالْهُوا عَنْهَا "(تفسير ابن كثير)
இரு நபித் தோழர்களுக்கு நபி ஸல் அவர்கள் சில சூராக்களை கற்றுத் தந்தார்கள் பின்பு அந்த சூராக்களை அவ்விருவரும் ஒரு தொழுகையில் ஓத முயன்றபோது அதில் ஒரு எழுத்தைக் கூட ஓத முயியவில்லை. நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அதை அல்லாஹ்வே மறக்கடித்து விட்டான் விட்டு விடுங்கள் என்றார்கள்
2. மனிதர்களின் நற்செயல்களை கெடுப்பதற்காக ஷைத்தான் ஏற்படுத்தும் மறதி
நபி மூஸா அலை அவர்களின் சம்பவம். கல்வி கற்பதற்கான பயனத்தில் இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் வந்தால் என்னிடம் சொல் என்று தன்னோடு வந்த இளைஞரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். அவ்வாறு இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் வந்து அவர்கள் வைத்திருந்த மீனுக்கு உயிர் வந்து அது நீருக்குள் பாய்ந் தைக் கண்டும் அந்த இளைஞர் அதை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எழுப்பி சொல்ல மறந்து விட்டார். அதனால் அதைக் கடந்து நீண்ட தூரம் சென்று விட்டார்கள். பிறகு மூஸா அலைஹிஸ்ஸலாம் எழுந்து கேட்ட பின்பு அவர் கூறினார், அவ்விருவரும் வந்த வழியே திரும்பி வந்த போது அந்த மீன் தண்ணீருக்குள் விழுந்த இடத்தில் ஒரு சுரங்கம் போன்று தண்ணீர் விலகி காட்சியளித்தது........
قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا (63)
தொழுகை என்ற நற்செயலைக் கெடுப்பதற்காக ஷைத்தான் ஏற்படுத்தும் மறதி
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ الْأَذَانَ فَإِذَا قُضِيَ الْأَذَانُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى ثَلَاثًا أَوْ أَرْبَعًا فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ .(بخاري) باب إِذَا لَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلاَثًا أَوْ أَرْبَعًا- كتاب السهو
3. பாவங்களால் ஏற்படும் மறதி.
உதாரணமாக ஒருவர் குர்ஆனைக் கற்று அதை அடிக்கடி ஓதா விட்டால் அல்லாஹ்வே அதை மறக்கடிப்பான்
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ (بخاري) عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ الْإِبِلِ فِي عُقُلِهَا (بخاري) ) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ .- فضائل القرآن
ஒட்டகத்தை அவிழ்த்து விடப்பட்டால் பிடிக்க முடியாதது போன்று குர்ஆனை ஓதி மறந்து விட்டால் எளிதில் அதை மீட்க முடியாது
هذا ذم، وسببه ما فيه من الإشعار بعدم الاعتناء بالقرآن، إذ لا يقع النسيان إلا بكثرة التغافل وترك التعاهد، فإذا قال الإنسان نسيت آية كذا وكذا فقد شهد على نفسه بالتفريط، فيكون متعلق الذم ترك الاستنكار والتعاهد لأنه الذي يورث النسيان، قاله القرطبي،
இன்றைக்கும் பலர் குர்ஆனை சிறு வயதில் கற்றிருப்பார்கள். பிறகு பல்வேறு அலுவல்கள் காரணமாக அதை முற்றிலுமாக மறந்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்
4. இயல்பாக ஏற்படும் மறதி
عَنْ سَعِيد بْن جُبَيْر عَنْ اِبْن عَبَّاس قَالَ : إِنَّمَا سُمِّيَ الْإِنْسَان لِأَنَّهُ عُهِدَ إِلَيْهِ فَنَسِيَ (تفسير ابن كثير)
இன்ஸான் என்ற வார்த்தையே நிஸ்யான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது- தஃப்ஸீர் இப்னு கஸீர்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ (ترمذي) باب- السلام عليكم تحية ادم وذريته - كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ
விளக்கம்- அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து ரூஹை அவர்களுக்குள் ஊதினான். ரூஹ் மூக்குப் பகுதியை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்லும்படி அல்லாஹ்விடமிருந்து சொல்லித் தரப்பட்டது. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்ஹம்து லில்லாஹ் சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வே யர்ஹமுகல்லாஹ் சொன்னான். பிறகு உடல் முழுவதும் ரூஹ் ஊதப்பட்டவுடன் அல்லாஹ் முதன் முதலாக நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி அதோ அங்கே மலக்குகள் இருப்பார்கள். அவர்களுக்கு ஸலாம் சொல்லுவீராக என்று ஏவ, அவ்வாறே நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸலாம் சொன்னார்கள். அப்போது மலக்குகள் வஅலைகஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் என பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ் இது தான் இனி உமது சந்ததிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சொல்ல வேண்டிய வாழ்த்துச் செய்தியாகும் என்றான்.
அல்லாஹ் பிறகு தன் இரு கைகளையும் காட்டி இரண்டில் ஒன்றைத் தொடும்படி கூறினான். ரஹ்மானின் இரு கரங்களுமே பரக்கத்தானது தான். எனினும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் வலது கையைத் தேர்ந்தெடுத்தார்கள். அக்கையை அல்லாஹ் விரித்த போது அத்தனை சந்ததிகளும் அதில் இருந்தனர். நாம் உட்பட.. மற்றொரு அறிவிப்பில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகைத் தடவி அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரையும் அல்லாஹ் வெளியாக்கிக் காட்டினான் என்றும் உள்ளது. அதில் ஒருவரின் பிரகாசம் அதிகம் காணப்பட்டது. யார் இவர் என கேட்ட போது இவர் உமது சந்ததிகளில் தோன்றப் போகும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் என்று அல்லாஹ் கூற, அவரின் வயது என்ன என்று கேட்க, நாற்பது என்று அல்லாஹ் சொன்னான். தன்னுடைய வாழ்நாளில் இருந்து 60 ஐ அவருக்குத் தந்து அதை 100 ஆக பூர்த்தியாக்க அல்லாஹ்விடம் கோரிய போது அல்லாஹ் அதை ஏற்றான்.
பிறகு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். சரியாக 1000 வயதிற்கு 60 வயது மிச்சம் இருக்கும்போது மலக்குல் மவ்த் வந்து உயிரைக் கைப்பற்ற அனுமதி கேட்டார்கள். எனக்கு இன்னும் 60 வயது மிச்சம் உள்ளதே என நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற, மலக்குல் மவ்த் நடந்த தை நினைவு படுத்திய போது அதை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஏற்க மறுத்தார்கள். அதாவது மறந்து விட்டார்கள். முதன் முதலில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள். இன்றும் அவர்கள் பிள்ளைகள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். மற்றொரு அறிவிப்பில் அன்றிலிருந்து தான் அல்லாஹ் இனிமேல் முக்கியமான ஒப்பந்தங்களில் வாய் வார்த்தை கிடையாது எழுத்துப் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டளையிட்டான். எனவே தான் சில தஃப்ஸீர்களில் பகரா சூராவின் கடன் பற்றிய வசனத்திற்கு விளக்கமாக இச்சம்பவம் கூறப்பட்டுள்ளது.
படிப்பினை- 1. உலகின் முதல் மனிதர் பேசிய முதல் வார்த்தை ஸலாம் ஆகும்.
2. உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் மட்டுமே அனுமதி கேட்கப்படும்.
நபி ஸல் அவர்களுக்கு தொழுகையில் ஏற்பட்ட மறதி இந்த உம்மத்துக்கு சட்டங்களை சொல்லித் தருவதற்கே
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ أَوْ الْعَصْرَ فَسَلَّمَ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ أَحَقٌّ مَا يَقُولُ قَالُوا نَعَمْ فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ.. (بخاري
முடிந்த வரை மறதி நீங்குவதற்கு சில வழிமுறைகள்
நல்லோர்களின் துஆவினாலும். அதிகமாக குர்ஆனை ஓதுவதாலும் மறதி நீங்கலாம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا لَنْ يَبْسُطَ أَحَدٌ مِنْكُمْ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ ثُمَّ يَجْمَعَهُ إِلَى صَدْرِهِ فَيَنْسَى مِنْ مَقَالَتِي شَيْئًا أَبَدًا فَبَسَطْتُ نَمِرَةً لَيْسَ عَلَيَّ ثَوْبٌ غَيْرُهَا حَتَّى قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَالَتَهُ ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ مِنْ مَقَالَتِهِ تِلْكَ إِلَى يَوْمِي هَذَا وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ شَيْئًا أَبَدًا {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى إِلَى قَوْلِهِ الرَّحِيمُ} (بخاري) باب مَا جَاءَ فِى الْغَرْسِ- كتاب المزارعة
அபூ ஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள். என்னைப் பற்றி மற்ற மக்கள் இவர் அதிகமான நபிமொழிகளை அறிவிக்கிறார் என்று கூறுகிறார்கள். அதற்கான மீளுமிடம் அல்லாஹ் தான். அதாவது அல்லாஹ்வே மிக அறிந்தவன். என்னுடைய தோழர்களான முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் ஏன் அதிகமான நபிமொழிகளை அறிவிக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்னுடைய தோழர்களான முஹாஜிரீன்களுக்கு கடைவீதியில் அவர்கள் செய்து வந்த வியாபாரம் அவர்களை அதிலேயே ஈடுபடுத்தி விட்டது. என்னுடைய தோழர்களான அன்சாரிகளுக்கு அவர்கள் செய்து வந்த விவசாயம் அவர்களை அதிலேயே ஈடுபடுத்தி விட்டது. ஆனால் நானோ என்னுடைய வயிற்றுப் பசிக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே அண்டியிருப்பேன். மற்றவர்கள் இல்லாத நேரத்திலும் நான் இருப்பேன். மற்றவர்கள் மறந்த விஷயங்களை நான் நினைவு படுத்திக் கொள்வேன்.
அவ்வாறிருக்கும்போது ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் எவரேனும் தனது துண்டை விரித்தால் அதில் எனது வார்த்தைகளைக் கொட்டுவேன். அதை அவர் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டால் அதற்குப் பிறகு நான் சொல்லும் சொல்லை ஒருபோதும் மறக்க மாட்டார் என்று கூறினார்கள். நான் என் மீது இருந்து ஒரு துண்டை விரித்தேன். அதைத் தவிர வேறு துண்டு என்னிடம் இல்லை. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது வார்த்தைகளை கொட்டினார்கள். அதை அவர் நான் என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். அல்லாஹிவின் மீது சத்தியமாக அதற்குப் பிறகு அவர்கள் சொல்லும் எந்த சொல்லையும் நான் ஒருபோதும் மறக்கவில்லை.
மறதியை உண்டாக்கும் சில விஷயங்கள்
اكل الحامض وسؤر الفار ونبذ القمل يورث النسيان –(تفسير روح البيان)
புளிப்பானதை அதிகம் உண்பதும் எலி வாய் வைத்த உணவை உண்ணுவதும் பேனை நசுக்காமல் தூக்கி வீசுவதும் மறதியை உண்டாக்கும் என தஃப்ஸீர் ரூஹுல் பயானில் கூறப்பட்டுள்ளது.
وروي عن علي رضي الله عنه أنه قال :طهروا بيوتكم من نسج العنكبوت فإن تركه يورث الفقر (تفسير روح البيان)
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உங்களுடைய வீடுகளை சிலந்தி வலைகளை விட்டும் சுத்தப் படுத்துங்கள். அதாவது சுத்தமாக வைத்திருங்கள். ஏனெனில் ஒட்டடைகளை அப்புறப்படுத்தாமல் விட்டு வைப்பது வறுமையை உண்டாக்கும்
أن الأولى لا ينظر كل واحد منهما إلى عورة صاحبه لقول رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { إذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ فَلْيَسْتَتِرْ مَا اسْتَطَاعَ وَلَا يَتَجَرَّدَانِ تَجَرُّدَ الْعِيرِ}" وَلِأَنَّ ذَلِكَ يُورِثُ النِّسْيَانَ لِوُرُودِ الْأَثَرِ (المبسوط) (هداية
தம்பதிகளில் ஒருவர் மற்றவரின் மர்மஸ்தானத்தைப் பார்க்காமல் இருப்பது சிறந்த தாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் சேர்ந்தால் முழு நிர்வாணமாக ஆகி விடாமல் முடிந்த வரை மறைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
மேலும் அவ்வாறு தம்பதிகள் ஒருவர் மற்றவரின் மர்மஸ்தானத்தை அடிக்கடி பார்ப்பது மறதியை உண்டாக்கும். நூல்- ஹிதாயா
சில விஷயங்களை மறக்க வேண்டும். சில விஷயங்களை மறக்கக் கூடாது
நமக்கு யாரேனும் உபகாரம் செய்திருந்தால் அதை மறக்காமல் அவர்களுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும். ஆனால் யாரேனும் நம்மை எதுவும் பேசியிருந்தால் திட்டியிருந்தால் அதை மறந்து மன்னிக்கும் குணம் வர வேண்டும்.
இது போன்றவைகளை மறக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மறதியை மனிதனுக்குள் ஏற்படுத்தியுள்ளான்.
ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.
وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)
கருத்து- மிஸ்தஹ் என்பவர் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் ஏழை உறவினர் ஆவார். அவருக்கு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வந்தார்கள். அதைத் தவிர வேறு வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. இந்நிலையில் ஆயிஷா ரழி உடைய அவதூறு விஷயத்தில் இவரும் சம்பந்தப்பட்டு விட்டார். ஆனால் பிறகு தவ்பா செய்து விட்டார். அதற்காக தண்டனை அவருக்குத் தரப்பட்டு விட்டது. எனினும் அபூபக்கர் ரழி அவர்கள் மனச் சங்கடம் காரணமாக இனிமேல் நான் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான். நீங்கள் ஒருதவறு செய்த பின் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா அதுபோல் நீங்களும் அவரை மன்னித்து விடுங்கள் என்ற ஆயத் இறங்கியவுடன் அவரை மன்னித்து எப்போதும் போல உதவித்தொகை வழங்க ஆரம்பித்தார்கள்.
இன்னா செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவர் சொன்னது போல தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வதால் பகைமை நீங்கும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ(مسلم)معناه كأنما تطعمهم الرماد الحار
எப்போதோ உள்ள பகையை இப்போதும் மனதில் வைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)
மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினை வெறு(த்து பேசாமல் இரு)ப்பது கூடாது. குறைந்த பட்சம் இருவரும் சந்தித்து இவரோ அல்லது அவரோ முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர் யார் முதலில் ஸலாம் கூறிப் பேச்சைத் துவங்குகிறாரோ அவர் தான் சிறந்தவர். அதே நேரத்தில் ஒருவரை தீன் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெறுத்தால் அது தவறல்ல. போருக்கு வராமல் சிலரிடம் நபி ஸல் அவர்கள் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.
அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல
أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) مُكَافِئِ أي المجازي غيره بمثل فعله
அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்போன உறவுகளையும் வலியச் சென்று மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்.
عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)
மக்கள் எனக்கு நல்லது செய்தால் நானும் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தால் நானும் அவர்களுக்கு கெடுதல் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். மாறாக உங்களில் உள்ளத்தை பின்வருமாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எனக்கு நல்லது செய்தாலும் நான் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தாலும் நான் அவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டேன் என்று....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக