வியாழன், 14 நவம்பர், 2024

பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதும் ஒழுக்கம் கற்பிப்பதும்

 15-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 12    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் நவம்பர் 20-ம்தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டுக்கு முன் வரை  அக்டோபர் மாதம் உலகக் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. 1959-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுதகள் சபையின் பொதுக்குழு முடிவின்படி, நவம்பர் 20-ல் ஒவ்வோரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் தினமாக  கொண்டாடப்படுகிறது.இந்த  நாள் சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டதன் குறிக்கோள், உலகம் முழுவதும் உள்ள      குழந்தைகளிடையே சமூக மாற்றத்திற்கான வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலனுக்கான  செயல்பாடுகளைக் கொண்டு வருவதுமேயாகும்.

1989 ல்  குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் 191 நாடுகள் கையெழுத்திட்ட நாளும் இந்த நாளேயாகும்.

இந்தியாவில் குழந்தைகள் தினம் நாட்டின் முதல் பிரதமரான நேரு பிறந்த நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால் அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الْأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ(بخاري)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري)

நபி ஸல் அவர்கள் தமது பேரக் குழந்தைகளை முத்தமிட்ட போது அந்த இடத்தில் அக்ரஃ இப்னு ஹாபிஸ் என்ற நபித் தோழர் இருந்தார்கள்.  அந்த நபித் தோழர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பத்து  குழந்தைகள் இருக்கிறார்கள் நான் இதுவரை ஒருவரைக் கூட முத்தமிட்டதில்லை என்று கூற, அவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் யார் (பிள்ளைகள் மீது) இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இதுபோன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. அப்போது நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி உமது உள்ளத்திலிருந்து அல்லாஹ் இரக்க குணத்தை எடுத்து விட்டதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறினார்கள். 

عن أَبي قَتَادَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَ وَإِذَا رَفَعَ رَفَعَهَا(بخاري)

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வருகை தந்த போது உமாமா என்ற சிறு பெண் குழந்தை அவர்களின் தோள் புஜத்தின் மீது இருந்தது. அவ்வாறே நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். ருகூஉ செய்யும்போது மட்டும் கீழே இறக்கி விடுவார்கள். மேலே எழும்போது மறுபடியும் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொள்வார்கள்.                    

عَنْ بُرَيْدَةَ رضقَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ إِذْ أَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ 1 فَنَزَلَ وَحَمَلَهُمَا فَقَالَ صَدَقَ اللَّهُ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ رَأَيْتُ هَذَيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فِي قَمِيصَيْهِمَا فَلَمْ أَصْبِرْ حَتَّى نَزَلْتُ فَحَمَلْتُهُمَا (نسائ

நபி ஸல் அவர்கள் மிம்பரின் மீது இருந்த படி குத்பா ஓதிக் கொண்டிருக்கும்போது  அவர்களின் பேரப் பிள்ளைகளான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் வருகை தந்தார்கள் அவ்விருவர் மீதும் சிவப்பு சட்டைகள் இருந்தன. அவ்விருவரும் நடந்து வருவதைக் கண்ட நபி ஸல் அவர்கள் மிம்பரை விட்டும் கீழே இறங்கி அவ்விருவரையும் தோளில் சுமந்த படி நிச்சயமாக உங்களின் சொத்துக்களும் பிள்ளைகளும் சோதனைகள் தான் என்று அல்லாஹ் கூறியது உண்மையாகி விட்டது.  இவ்விருவரும் நடந்து வரும்  அழகைக் கண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால்   கீழே இறங்கி அவர்களை தோளில் சுமந்தேன் என்றார்கள்.                                                               

குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதுடன் அவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்க வேண்டும்

ஒழுக்கம் கற்பிக்காமல் மகனை வளர்த்த தந்தைக்கு ஏற்பட்ட கதி.

يُروَى أن أحد العلماء جاءه رجل، فقال له: ابني ضربني، قال: تعال بابنك، فأتى به فإذا هذا الابن كبير سمين بدين كأكبر ما يكون من الرجال، فقال له: أضربتَ أباك؟ قال: نعم.ضربتُه، قال: لِمَ ضربتَه؟ قال: وهل يحرم أن يضرب الابن أباه؟ أي: هل في الشريعة أنه لا يجوز ضرب الابن لأبيه؟ قال العالم للأب: أعلَّمتَ ابنك شيئاً من القرآن؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من السنة؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من آداب السلف ؟ قال: لا.قال: فماذا صنعت معه في حياته؟ قال: أطعمتُه وسقيتهُ وآويتُه حتى كَبُر، قال: تستحق أن يضربك؛ لأنه ظن أنك. بقرة؛ فضربك فاحمدِ الله حيث لم يكسر رأسك (دروس للشيخ 

முற்கால மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஒரு நபர் வந்து என் மகன் என்னை அடிக்கிறான் என்று கூற, உமது மகனை அழைத்து வா என்றார்கள். அவர் அழைத்து வந்தார். அப்போது அந்த மகனை அந்த ஆலிம் பார்த்த போது கொழுத்த உருவத்தில் வயதுக்கு மீறிய வளர்ச்சி உடையவனாக கண்டார்.  அவனிடம் உன் தந்தையை அடித்தாயா என்று கேட்க, ஆம் அடித்தேன் என்று கூற, ஏன் அடித்தாய் என்று அந்த ஆலிம் கேட்டதற்கு தந்தையை மகன் அடிப்பது கூடாதா என்று அந்த மகன் திருப்பிக் கேட்டான். அப்போது தான் தவறு  யார் மீது உள்ளது என்பதை அறிந்த அந்த ஆலிம் அந்த மகனின் தந்தையை நோக்கி  நீ உன் மகனுக்கு குர்ஆன் சிறிதளவேனும் கற்றுத் தந்தாயா என்று கேட்க, அவர் இல்லை என்றார். நபிகளாரின் நடைமுறைகளில் எதேயேனும் நீ உன் மகனுக்கு  கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார்.  முன்னோர்களின் நல்ல நடைமுறைகளில் நின்றும் எதேயேனும் நீ உன் மகனுக்கு  கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார். பிறகு என்ன தான் உன் மகனுக்குச் செய்தாய் என்று கேட்க, அதற்கு அவர் அவனுக்கு  எந்தக் குறையும் இல்லாமல் உண்ண உணவும்  அருந்துவதற்கும் நீரும்  தந்து  அவனை  நன்கு வளர்த்து ஆளாக்கினேன்  என்றார். அப்போது அந்த ஆலிம்  சொன்னார். அவன் உன்னை அடித்த து சரி தான். ஏனென்றால் அவன் உன்னை மாடு என்று நினைத்து விட்டான் போலும். உன் மண்டையை உடைக்காமல் விட்டு வைத்தானே அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்து நன்று செலுத்து என்று கூறினாராம்.            

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ (بخاري) باب مَا قِيلَ فِى أَوْلاَدِ الْمُشْرِكِينَ-كتاب الجنائز -دَلَّ الحديث على أن المولود لو ترك مع فطرته الأصلية لما كان على شيء من الأديان الباطلة  وأنه إنما يقدم على الدين الباطل لأسباب خارجية ، وهي سعي الأبوين في ذلك 

இன்றைய காலத்தில்  வாலிபர்களின் ஒழுக்கம் மிகவும் சீரழிந்துள்ளது. 6-ம் வகுப்பு மற்றும்  7-ம்  வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலர் இன்று பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி  ஒழுக்கத்தைத் தொலைத்து வாழ்ந்து வருகின்றனர் எனவே  ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.   

பிள்ளைகளின் மனதில் சிறிதளவும் கெட்ட எண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காக 

தொலை நோக்கு சிந்தனையுடன் நபி (ஸல்) சொல்லித் தந்த அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ -بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ-كتاب الصلاة يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء لا تحمد عقباه.(شرح ابي داود)

கருத்து- உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் பத்து வயதைக் கடந்தவுடன் தனித்தனியாகப் படுக்க வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன காரணம் குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் பிள்ளைகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மூலம் சில இனம் புரியாத  உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. அந்த உணர்ச்சிகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு  நபி ஸல் கூறினார்கள்.  

 

كاد الأدب أن يكون ثُلُثي الدِّين"قال عبد الله بن مبارك رحمه الله  

“ஒழுக்கம் தீனுல் இஸ்லாமின் மூன்றில் இரண்டு பங்காக விளங்கும் அளவிற்கு ஆகிவிட்டது. 

 பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் விதிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு தம் சுதந்தரத்திற்கு இடையூறாகவும், மகிழ்ச்சிக்கு தடைக் கற்ககலாகவும் இருப்பதாக மாணவர்களும், குழந்தைகளும் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறு. வளர்கின்ற மரம், செடி கொடிகளை அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை காடாகவும், முட் புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடி கருகிவிடும். அவற்றை ஒழுங்கு படுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்த ஒரு பொருளும் இரும்பு உட்பட, கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாக கெட்டுவிடும்.எனவே, ஒரு பொருளை உருவாக்கி பாதுகாப்பதற்கு தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம்.பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயர பறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது  என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல்  நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயர பறந்த பட்டம், நூல் அறுந்த போது  மண்ணில் முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும். அதுபோல் தான், மாணவர்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியைநோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள்.       

ஆடு, மாடு போல் உண்பதும், உறங்குவதும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் தான் வாழ்க்கையா?

وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ (12سورة محمد) وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (الاعراف179)

ஒழுக்கம் கற்பிக்காமல் படிப்பை மட்டும்  போதிக்க நினைப்பது கழுதையின் முதுகில் சுமத்தும் பொதி போன்றது

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا (الجمعة5)أَيْ كَمَثَلِ الْحِمَار إِذَا حَمَلَ كُتُبًا لَا يَدْرِي مَا فِيهَا فَهُوَ يَحْمِلهَا حَمْلًا حِسِّيًّا وَلَا يَدْرِي مَا عَلَيْهِ وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمْ الْكِتَاب الَّذِي أُوتُوهُ حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَتَفَهَّمُوهُ (تفسير ابن كثير)

நம்முடைய வாழ்வின் நேரங்கள் வீணாக கழியும் போது அது ஷைத்தானின் செயல்களின் பால் இட்டுச் செல்லும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري) اول الحديث مِنْ باب ما جاء في الصحة والفراغ وأن لا عيش إلا عيش الآخر-كتاب الرقاق وقال الحسن البصري  رحمه الله (يا ابن آدم إنما أنت أيام فإذا ذهب يومك ذهب بعضك)وقال (أدركت أقواما كانوا على أوقاتهم أشد منكم حرصا على دراهمكم ودنانيركم) والنفس البشرية جُبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر. وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب:الوقت وأهميته في حياة المسلم)

ஒழுக்கம் தவறிய சிறுவர், சிறுமிகளைப் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையில் கல்லூரி மாணவர்களில் 60 சதவீதம் பேர் பீடி அல்லது சிகரெட்டுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 40 பேரிடம் கூடவே மது அருந்தும் பழக்கமும் உண்டு.

மேலை  நாடுகளில் மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் சீரழிந்துள்ளது இங்கிலாந்தில் 15 வயதுக்கு முன்பே உடலுறவு கொண்ட மாணவர்கள் 20 சதவீதம் பேர். பள்ளிகளிலேயே கருக்கலைப்பு மையங்கள் பெருமளவில் இருப்பது இங்கிலாந்தில் தான். மேலும் ஆண்டு தோறும் 12 ஆயிரம் பள்ளிப் பருவ பிரசவங்கள் ஒட்டு மொத்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிரான்ஸ் அரசாங்கம் பள்ளி, கல்லூரிகளில் நர்சு ஒருவரை நியமித்து கருத்தடை மாத்திரைகளை வழங்குகின்றனர்.                

    மனிதனிடம் தன் மன இச்சைக்குக் கட்டுப்படும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது. குறிப்பாக மாணவப் பருவத்தில் மனம், கேளிக்கை மற்றும் வீண் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு கொள்ளும்.  மேலும்,  சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்து மீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம்  போன்ற காரணிகள் மாணவர் உள்ளங்களை மாசுபெறச் செய்கின்றன.                 

எந்த நபியும் பிள்ளை வரம் கேட்கும்போது ஸாலிஹான பிள்ளையைத் தா! என்றே கேட்டார்கள்

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38)ال عمران

நம்மையும் அவ்வாறே கேட்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான்

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)الاحقاف وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)الفرقان

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருபவர் அவர்களை நரக நெருப்பை விட்டும் காப்பாற்றுகிறார் என்பதால் தான் ஒழுக்கம் கற்பிப்பதை விட ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பெரிய அன்பளிப்பை தந்து விட முடியாது என்றார்கள்

عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ (ترمذي)

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பல லட்சம் செலவில் கார் வாங்கிக் கொடுத்தால், அல்லது விமானம் வாங்கிக் கொடுத்தால் அவர் உயிரோடு இருக்கும் வரை தான் அவரை இவன் புகழுவான். (MY DADY,S  GIFT  தன் காரில் எழுதி வைப்பது போல.) ஆனால் ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தால் தந்தை இறந்த பிறகும் அவருக்காக துஆ செய்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٌ جَارِيَةٌ وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ (ترمذي)عن سعيد بن المسيب يقول : إن الرجل ليرفع بدعاء ولده من بعده . وقال بيده فرفعها إلى السماء (مؤطا مالك- باب الدعاء-أبواب السير) إن الرجل ليرفع أي في درجاته ومنزله- أي أشار ابن المسيب بيده فرفعها إلى السماء تفهيما لعلو درجات الرجل 

பிள்ளைகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

  ஒரு சிறுவர் தன் வீட்டில் தன் தாய் அருகில் இருந்த போது அந்த அன்னை வீட்டில் அடுப்பெரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய சுள்ளிகளை விறகுகளை முதலில் எரிய விட்டு அதன் பிறகு பெரிய விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினார். அது சிறிய வீடு. ஒரே ஒரு அறை மட்டுமே. புகை மூட்டம் அதிகமாக இருந்த து. அப்போது அந்த சிறுவர் அழுது கொண்டிருக்கிறார். அந்த அன்னை தன் பிள்ளையிடம் மகனே புகை மூட்டம் அதிகம் இருப்பதால் கண் எரிகிறதா நீ வேண்டுமானால் அம்மாவின் அடுப்பு வேலை முடியும் வரை வெளியே நின்று கொள் மகனே என்று அன்புடன் கூற அது கேட்ட அந்த மகன் இவ்வாறு கூறினார். அன்னையே நான் புகை மூட்டத்தைக் கண்டு நான் அழவில்லை. மாறாக நீங்கள்  முதலில் சிறு சுள்ளிகளை வைத்து அடுப்பு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரிய விறகுகளை வைத்தீர்கள் அல்லவா அப்போது என் மனதில் குர்ஆனின் வசனம் நினைவுக்கு வந்தது  நரகத்தின் எரி கொள்ளிகள் என மனிதர்களையும் கற்சிலைகளையும் அல்லாஹ் கூறியுள்ளான் நீங்கள் சிறு சுள்ளிகளை ஆரம்பத்தில் வைத்ததைப் போன்று அல்லாஹ்வும் எங்களைப் போன்ற சிறுவர்களை முதலில் நரகில் போட்டு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரியவர்களைப் போடுவானோ என்ற அச்சம் எனக்குள் வந்தது அதனால் அழுகிறேன் என்றார்கள் அந்த அளவுக்கு பிஞ்சு உள்ளத்தில் இறையச்சம் இருந்தது. அவர்கள் தான் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ் அவர்கள்.                               

  இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                                    

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)                                                        

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது

பாவங்களுக்கெல்லாம் தாய் என போதை வஸ்துக்களை உஸ்மான் ரழி அவர்கள் வர்ணித்தார்கள்

عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ  (نسائ

    உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு  நடத்தை  கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.  ஒருநாள் அவள்  தன் பணிப் பெண்ணை அனுப்பி  ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் தனக்காக சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு வந்தார்.  ஆனால் அவர் வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில் அவள் இருக்க அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது.   அப்போது அப்பெண்  அவரிடம் சாட்சி சொல்ல உம்மை அழைக்கவில்லை. மாறாக நீ  என்னிடம் உறவு கொள்ள வேண்டும். அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல வேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று கூற, அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர்  மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித் தரக்கூறினார். சற்று நேரத்தில் போதை  ஏறியவுடன்  அவளிடம் உறவும் கொண்டு விட்டார். போதையில் அக்குழந்தையையும் கொன்று விட்டார்.  எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக  ஈமானும்  மதுப்பழக்கத்தில் மூழ்குவதும்  ஒரு மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என உஸ்மான் ரழி கூறினார்கள்.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதும் ஒழுக்கம் கற்பிப்பதும்

  15-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 12     ★    ஹிஜ்ரி :1446      ★     بسم الله الرحمن الرحيم   ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் நவம்பர் 20-ம்...