08-11-2024
بسم الله الرحمن الرحيم
இஸ்லாமிய வெறுப்பை
விதைக்கும் ஊடகங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6) الحجرات
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரங்களை பாசிச வாதிகள் செய்து வருகிறார்கள். திரைப் படங்கள் மூலமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர். இதுவரை அத்தகைய எத்தனையோ திரைப் படங்கள் வந்து விட்டன. சில தினங்களுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. நாளுக்கு நாள் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய ஜும்ஆ பயானின் தலைப்பாகும்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சதி வேலை என்றைக்கோ துவங்கி விட்டது
இந்தியா, பாகிஸ்தான் பிரிந்த பின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்ட போது அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்செய்தி காந்திஜீக்கு சொல்லப்பட்ட போது காந்திஜீ அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலை தம்மை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்படுவது பற்றித்தான் அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட பட்டேல் “காந்திஜீக்கு கிடைத்த தகவல் மிகைப்படுத்தப்பட்டவை” என்றும் “முஸ்லிம்கள் அந்த அளவுக்கு கொல்லப்படவில்லை” என்றும் பதில் கூறி அனுப்பினார்.
அபுல் கலாம் ஆசாத் கூறுகிறார்- நானும், நேருவும், பட்டேலும் காந்திஜீயுடன் பேசிக்கொண்டிருந்த போது நேருஜீ கவலையுடன் “முஸ்லிம்களை நாய்களையும், பூனைகளையும் கொல்வது போல கொல்கிறார்கள். அதைத் தடுக்க தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று வருத்தப்பட்ட போது அருகில் இருந்த பட்டேல் நேருவின் புகார்கள் அனைத்தும் ஆதாரமாற்றவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. என்று கூறி உண்மையை மறைத்து பதில் கூறினார். காந்திஜீயால் ஒன்றும் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு பட்டேல் என்ன செய்தார் தெரியுமா ? முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று காட்டுவதற்காக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆபத்தான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், டில்லியில் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும் தாக்குவதற்காக அவைகளை முஸ்லிம்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் சில நாட்கள் கழித்து செய்தி வெளியிட்டார். நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு சென்ற போது சர்தார் பட்டேல் எங்களை நோக்கி முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடுத்த அறையில் உள்ளன. அதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தை ஆரம்பிப்போம் என்றார். நாங்கள் அங்கு சென்று மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தோம். அங்கு துருப்பிடித்த சமையலறைக் கத்திகள், தண்ணீர் குழாய்கள், தடுப்பு வேலியிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிகள் ஆகியவை இருந்தன. அவைகளைக் காட்டி இவை சீக்கியர்களையும், இந்துக்களையும் கொலை செய்ய முஸ்லிம்களால் திரட்டி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என்றார் பட்டேல். அப்போது அங்கிருந்த மவுன்ட் பேட்டன் பிரபு அந்தக் கத்திகளை எடுத்துப் பார்த்துக் கொண்டே கிண்டலாகவும், கேலியாகவும் சொன்னாராம் “இந்த ஆயுதங்களை சேகரித்தவர்களுக்கு அபாரமான கற்பனை வளம் உள்ளது. இவைகளைக் கொண்டு டில்லியைக் கைப்பற்றலாம் என்று கற்பனை செய்கிறார்கள் போலும்” என்றார்.
(மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய நூலில் இருந்து.. நன்றி சமநிலைச் சமுதாயம்)
அன்று வல்லபாய் பட்டேல் செய்த வேலையைத் தான் அப்போதிருந்து இன்று வரை ஆட்சியாளர்களில் பலரும், ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. இது போதாதென்று கடந்த பல வருடங்களாக திரைப்படங்களின் மூலமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர். சமீபத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படத்திலும் கூட முஸ்லிம்களின் மீது அவதூறுப் பிரச்சாரங்கள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன. இந்த நடிகர் அந்த நடிகர் என்று இல்லாமல் அனைத்து நடிகர்களுமே இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை வைத்துத் தான் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்
பிஞ்சு உள்ளங்களிலும் நஞ்சை விதைக்கும் விஷமிகள்
முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள்.
வெறுப்புப் பிரச்சாரங்கள் செயலற்றுப் போவதற்கு நாம் செய்ய வேண்டியவை
1. இஸ்லாம் கூறும் மனித நேய கருத்துக்களை நமக்குள்ளே மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மஹல்லா தோறும் சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தி பிற மதத் தலைவர்கள் மூலமாக நமது இஸ்லாத்தைப் பற்றி பேச வைக்க வேண்டும்
தாயிஃபில் இருந்து கவலையுடன் நபி ஸல் அவர்கள் திரும்பிய போது நடந்த சம்பவம்
وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته .وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت .وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)
நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாட்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலேவந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.
عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ (بخاري
பத்ருப் போரின் கைதிகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது இப்போது முத்இம்பின் அதி உயிரோடு இருந்து இந்த நாற்றமெடுத்தவர்கள் விஷயத்தில் சிபாரிசு செய்திருந்தால் அவருக்காக இவர்களை நான் விடுதலை செய்திருப்பேன்
படிப்பினை- நமக்கு ஆதரவாக பிற மதத்தவர்களைப் பேச வைக்கும் விதமாக நபி ஸல் அவர்கள் நடந்து கொண்டார்கள்
2. மாற்று சமூகத்தாருடன் நம்முடைய நட்புறவை மேலும் பலப்படுத்த வேண்டும்
عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا (بخاري)
கருத்து- நபி ஸல் அவர்களுடைய இஃதிகாஃபின் போது மனைவி சஃபிய்யா ரழி வந்தார்கள். திரும்பிச் செல்லும்போது இரவு நேரமாக இருந்ததால் தெருமுனை வரை நபி ஸல் அவர்கள் உடன் சென்றார்கள். இதை தூரத்தில் இருந்து இருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். நபி ஸல் அவர்கள் தன் மனைவியை அனுப்பி வைத்து விட்டு அவ்விருவரை நோக்கி சற்று நில்லுங்கள் என்றார்கள். பிறகு அவ்விருவரிடமும் இவர் வேறு யாருமல்ல. என் மனைவி சஃபிய்யா தான் என்றார்கள். அதற்கு அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ் நாங்கள் உங்களைப் பற்றி தவறாக எதுவும் எண்ணவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இப்போது உங்கள் மனதில் எதுவும் இல்லாதிருக்கலாம் ஆனால் ஷைத்தான் உங்கள் மனதில் ஏதேனும் எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.
படிப்பினை- இச்சம்பவம் பல படிப்பினைகளை உள்ளடக்கியது. நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை தீய சக்திகள் பரப்புவதற்கு முன்பே நாம் உஷாராகி, நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
3. மதரஸாக்களில், மஸ்ஜித்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என மார்க்கத்தைப் பற்றியும் மஸ்ஜித்களைப் பற்றியும் தவறாகக் கருதுபவர்களை அழைத்து வந்து நமது மஸ்ஜிதை காட்ட வேண்டும்.
4. மதப் பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்க உதவ வேண்டும் கிறிஸ்தவ சமுதாயம் வளர்ந்தது இவ்வாறு தான்
5. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11) الرعد
சோதனைகளின் போது நமது பாவம் என்ன என்பதை சிந்திப்பது சிறந்த முஃமினின் அடையாளம்
ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை. அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது. அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.
قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)
கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ
அல்லாஹ் கூறுகிறான் என் அடியார்களே உங்களில் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் கூடி விடப்போவதில்லை. உங்களில் மிக மோசமான உள்ளம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என் அந்தஸ்து கடுகளவும் குறையப்போவதில்லை.உங்களில் முதல் மனிதர் முதல்கடைசி மனிதர்வரை அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி நின்று நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு அதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற எனது கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும். உங்களின் அமல்கள் உங்களுக்குத் தான். அவற்றைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அதன் நற்கூலியை நிரப்பமாக தருவேன். நல்லதைப் பெற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள். கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்கள்.
முஸ்லிம்களிடம் பதவி ஆசையும் பண ஆசையும் பெருகும்போது
இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள் பெருகிக் கொண்டு தான் இருக்கும்
عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)
விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன் யாரஸூலல்லாஹ் அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ் பலவீனம் என்றால் என்ன என்று கேட்ட போது உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.
உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.
இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½ கோடி
இறையச்சமுள்ள வாலிபர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இல்லா விட்டால் எப்போதோ உலகம் அழிந்திருக்கும்
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا
இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்) ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்
وهو على أنطاكية لما قدمت منهزمة الروم: ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم؟ قالوا: بلى. قال: فأنتم أكثر أم هم؟ قالوا: بل نحن أكثر منهم أضعافاً في كل موطن. قال: فما بالكم تنهزمون؟ فقال شيخ من عظمائهم: من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض. فقال: أنت صدقتني.
ஹிஜ்ரி 15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்க்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20
நல்ல விஷயங்களை பதிவிட்டமைக்கு நன்றி
பதிலளிநீக்கு