வியாழன், 24 செப்டம்பர், 2026

மேற்கத்திய கலாச்சாரம்

 25-09-2026

ரபீஉல் ஆகிர்-  12


بسم الله الرحمن الرحيم  

      மேற்கத்திய கலாச்சாரம்

  



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


இன்றைய இளைஞர்களிடம் இளம் பெண்களிடமும் மேற்கத்திய கலாச்சாரம் பரவிக் கிடப்பதைப் பார்க்கிறோம். அண்ணல் நபி ஸல் அவர்களின் வழியைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்இளம் தலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றுகின்ற னர். உடுத்தும் உடை, கிழிந்த ஃபேண்ட், தலைமுடி ஸ்டைல், பர்த்டே கொண்டாட்டம், வெள்ளியால் கழுத்துச் செயின், வெள்ளியால் கை செயின் அணிதல், இசை போன்ற மேற்கத்திய கலாச்சாரம் அதிகம் பரவிக் கிடப்பதைப் பார்க்கிறோம். இதன்பாதிப்பை அவர்கள் உணருவதில்லை. (வெள்ளியால் மோதிரம் மட்டும் அணியலாம். அது சுன்னத்.)                                      

முஸ்லிம்களுக்கென்று இருந்த உலகளாவிய தலைமை வீழ்ந்த காரணமே மேற்கத்திய கலாச்சாரம் தான்.

  உமர் ரழி அவர்களின் காலத்தில் இந்த உலகில் பெரும் பகுதி முஸ்லிம்களின் ஆளுமைக்குக் கீழ் வந்து அதற்குப் பிறகு அப்படியே விரிவடைந்து சுமார் ஆயிரம் வருடங்கள் வரை முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் உலகில் நீடித்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாமிய  இளம் தலைமுறையினரின் உள்ளத்தில்  மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி, அவர்களை குர்ஆனை விட்டும் தூரமாக்கி  இறுதியாக முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்களையே தூண்டி விட்டு இஸ்லாமிய ஆட்சியை அப்புறப்படுத்தினார்கள்.                                                       

 பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது.அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதற்குப் பின் 120 வருடங்களில்  அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டார்கள். அதன் துவக்கமாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது சுமார் 15 வயதுள்ள இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் குர்ஆனில் இருபத்தைந்து ஜுஸ்வு மனப்பாடம் செய்து விட்டேன். எனினும் ஆங்கிலேயர்களுடன் போர் புரிய நினைக்கிறேன் ஆனால் எனது தாயார் சம்மதிக்கவில்லை நீ முழு குரஆனையும் முடித்து விட்டு போருக்குப் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்று அவன் கூற இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்குத் தோல்வி தான் மிஞ்சும் எதுவரை முஸ்லிம்கள் அவர்தகளின் வேதத்துடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதுவரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என முடிவு செய்தார்கள். அதற்குப் பின்பு இருபது வருடங்கள் கழித்து ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்கு வெற்றி கிடைக்கும் முஸ்லிம்கள் அவர்களின் வேதத்துடன் தொடர்பை குறைத்துக் கொண்டது நல்ல சந்தர்ப்பம் என்று முடிவு செய்து போருக்கு வந்தார்கள். வென்றார்கள். அவர்கள் நினைத்தது போன்று ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு துடைத்தெறிந்தார்கள்.        


மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எச்சரிக்கை...

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ  (ابوداود)

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟   (بخاري)

   கருத்து- யூத, கிறிஸ்தவ (மேற்கத்தியர்களின்) கலாச்சாரத்தை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் புகுந்தாலும் நீங்களும் புகுந்து விடூவீர்கள் – புகாரீ

قال النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ..(بخاري

  என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய விபச்சாரத்தையும், பட்டாடையையும், மதுவையும், இசைக்கருவிகளையும் ஹலாலாக்கி விடுவார்கள்  - நூல் புகாரீ 

விளக்கம் – மேற்படி ஹதீஸ்களின் படி  இன்றைக்கு முஸ்லிம் நாடுகளிலேயே மேற்கத்திய கலாச்சாரங்கள் மலிந்து விட்டன. ஜித்தா  கடற்கரையில் ஆண்களும் பெண்களும்  அரைகுறை ஆடையுடன் ஒன்றாக குளிக்கிறார்கள். இன்னும் சொல்வதானால் இந்திய முஸ்லிம்களிடம் இருக்கும் பேணுதல் கூட சில முஸ்லிம் நாடுகளில் உள்ள பலரிடம் இல்லை. குறிப்பாக சவூதி மன்னர் சல்மான் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  சினிமா தியேட்டர்கள், மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றை எதிர்த்த பல உலமாக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  இப்படியாக மெல்ல மெல்ல ஷரீஅத் சட்டங்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய கலாச்சாரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெறும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில் கூட அமெரிக்காவுக்கு சாதகமாகவே சவூதி செயல்படுகிறது. 

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي (ترمذي)

எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காத  வரை மறுமை நாள் ஏற்படாது. நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.                                                

قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ (بخاري

 'தவ்ஸ்' இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். 

விளக்கம் -அபூஹுரைரா(ரலி)அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே. இக்குலத்தினர் கடைசி காலத்தில்  இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட 'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).

சில வருடங்கள் முன்பு அபுதாபியில் நமது இந்திய பிரதமர் ஒரு கோவிலை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


இந்தியாவில் இளம் தலைமுறையினரிடம் மேற்கத்திய கலாச்சாரம்

ஆடை அணிவதில்  மேற்கத்திய கலாச்சாரம்

  இன்றைய நம்முடைய இஸ்லாமிய இளைஞர்களிடம் ஆடைக் கலாச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஒரு புறம் அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு முழங்கால் தெரிய நிறைய பேர் வலம் வருகிறார்கள் என்றால் மறுபுறம் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும் இளைஞர்களில் சிலர் குட்டையான டி-ஷர்ட் மட்டுமே அணிந்து வந்து அத்துடன் தொழுகின்றனர். அவர்கள் ருகூவு செய்வதற்காக குனியும்போது கட்டாயம் மறைக்கவேண்டிய பின்பகுதி அப்படியே வெளியே தெரிகிறது.இதனால் அவர்களின் தொழுகை கூடாது என்பதைக் கூட அறிந்து கொள்வதில்லை எனவே ஆடை சம்பந்தமாக அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

فَقَالَ اللَّه تَعَالَى " خُذُوا زِينَتكُمْ عِنْد كُلّ مَسْجِد دلت الآية على وجوب ستر العورة كما تقدم. وذهب جمهور أهل العلم إلى أنها فرض من فروض الصلاة. وقال الأبهري هي فرض في الجملة، وعلى الإنسان أن يسترها عن أعين الناس في الصلاة وغيرها. وهو الصحيح؛ (قرطبي)

   மேற்படி ஆயத்தின் விளக்கமாக அவ்ரத்தை மறைப்பது தொழுகையில் மட்டுமா அல்லது மற்ற நேரத்திலுமா என்பதில்  இமாம்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. பல இமாம்கள் மற்ற நேரங்களிலும் கூட தொப்புள் முதல் முட்டுக்கால் வரையிலான அவ்ரத்தை மறைப்பது கட்டாயம் என்று கூறுகின்றனர்.

عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ إِزَارٌ خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً (مسلم)                       

மிஸ்வரா ரழி என்ற நபித்தோழர் கூறினார்கள். நான் ஒரு கனமான கல்லை சுமந்து வந்தேன். என் மீது இலேசான கீழாடை இருந்தது. என்னுடைய கீழாடை நழுவியது. நான் அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் வைக்கும் வரை கீழாடையை எடுத்து உடுத்த முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் என்னிடம் முதலில் உமது ஆடையை எடுத்து உடுத்துவீராக நிர்வாணமாக நடக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

عن جَرْهَد كَانَ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ : جَلَسَ عِنْدَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفَخِذِى مُنْكَشِفٌ فَقَالَ خَمِّرْ عَلَيْكَ أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ  (سنن الكبري للبيهقي

    ஜுர்ஹுத் ரழி அவர்கள் கூறினார்கள் எங்களுடன் நபி ஸல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது எனது தொடை திறந்திருந்த து. அப்போது நபி ஸல் அவர்கள் உமது தொடையை மூடுவீராக தொடை  கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி என்பது உமக்குத் தெரியாதா என்று கூறினார்கள்.                                                          

தலை முடி விஷயத்தில் மேற்கத்திய கலாச்சாரம்

  நபி வழியைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியை பின்பற்றி தங்களுடைய ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள். கரடிகளைப் போன்றும் நரிகளைப் போன்றும் தலைமுடிகளை அமைத்துக் கொண்டு அதையே ஸ்டைல் என்ற நினைக்கிறார்கள்.                                                     

தலை முடியையும், தாடி முடியையும் அழகு படுத்த வேண்டும். ஆனால் அது நபி வழியில் இருக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ (ابوداود)

யாருக்கு முடி இருக்கிறதோ அதை அவர் சிறப்பாக வைத்துக் கொள்ளட்டும்

பரட்டைத் தலையுடன் இருப்பவரை ஷைத்தானுக்கு ஒப்பிட்டுக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

 عن عَطَاءَ بْنَ يَسَارٍرضقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرَ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ أَنْ اخْرُجْ كَأَنَّهُ يَعْنِي إِصْلَاحَ شَعَرِ رَأْسِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ الرَّجُلُ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ ثَائِرَ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَانٌ (مؤطا)

ஒரு மனிதர் தலைமுடியும் தாடி முடியும் கலைந்த நிலையில் வந்தார். அவரைக் கண்ட நபி ஸல் அவர்கள் கைகளால் சைக்கினை காட்டி வெளியே சென்று அவற்றை சீர்செய்து கொண்டு உள்ளே வருமாறு கட்டளையிட்டார்கள். அவர் அவ்வாறே தலைமுடியையும் தாடி முடியையும் சீர் செய்து விட்டு  திரும்பி வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று பரட்டைத் தலையுடன் வருவதை விட  இது எவ்வளவு சிறப்பானதாக  இருக்கிறதல்லாவா என்றார்கள்.                       

                    

عَنْ يَحْيَى بْنِ سَعِيد أَنَّ أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ لِمَا قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا(مؤطا)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூ கதாதா ரழி அவர்கள் எனக்கு தோள் புஜம் வரை முடி  (கிர்தா) இருக்கிறது. அதை நான் அழகு படுத்தி வாரிக் கொள்ளட்டுமா என்று கேட்க, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் அதை அழகு படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள்.அதனால் அபூகதாதா ரழி அவர்கள் ஒருநாளைக்கு இருமுறைஎண்ணெய் தேய்த்து அழகு படுத்துவார்கள்.

படிப்பினை- கிர்தா போன்ற முடி வைப்பதில் தவறில்லை என்பது மேற்படி ஹதீஸ் மூலமாக தெரிய வருகிறது. ஆனால் அதற்கு பெண்கள் போன்று கிளிப் போடுவது கூடாது. அப்படியே தொங்க விட வேண்டும். தொழும்போது  அந்த முடிகள் முன்னால் வந்து விழும் என்பதற்காக சிலர் கிளிப்  மாட்டுவார்கள். அது கூடாது.  பின்வரும் ஹதீஸில் அவ்வாறு  தடை வந்துள்ளது

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ أُمِرْنَا أَلَّا نَكُفَّ شَعَرًا وَلَا ثَوْبًا  (ابن ماجة) 

عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« يَا عَلِىُّ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِى ، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِى. لاَ تَقْرَأْ وَأَنْتَ رَاكِعٌ ، وَلاَ وَأَنْتَ سَاجِدٌ ، وَلاَ تُصَلِّ وَأَنْتَ عَاقِصٌ شَعْرَكَ فَإِنَّهُ كِفْلُ الشَّيْطَانِ ، (سنن الكبري للبيهقي )

ஆண்கள் பெண்களைப் போல் தலைவாருவதும், பெண்கள் ஆண்களைப் போல் தலைவாருவதும் கூடாது. பாப் கட்டிங் உட்பட

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فلُانَةَ (بخاري) عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا(ترمذي)وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا يَرَوْنَ عَلَى الْمَرْأَةِ حَلْقًا وَيَرَوْنَ أَنَّ عَلَيْهَا التَّقْصِيرَ(ترمذي)

குறிப்பு-மேற்காணும் ஹதீஸின் படி ஆண்கள் நீளமாக முடி வளர்த்து பெண்களைப் போல் பின்னல் (ஜடை) போட்டுக் கொள்வதும், அதுபோல் பெண்கள் தங்களின் கூந்தலை வெட்டி பாப் கட்டிங் என்ற பெயரில் ஆண்களைப் போல் தலைவாரிக்கொள்வதும், அல்லது தங்கள் பெண்குழந்தைகளுக்கு (குளிக்க வைக்க சங்கடப்பட்டு) அவ்வாறு முடி வெட்டி விடுவதும் கூடாது.               

டோப்பா, அல்லது ஒட்டு முடி வைப்பதும் கூடாது

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ (مسلم)عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي زَوَّجْتُ ابْنَتِي فَتَمَرَّقَ شَعَرُ رَأْسِهَا وَزَوْجُهَا يَسْتَحْسِنُهَا أَفَأَصِلُ يَا رَسُولَ اللَّهِ فَنَهَاهَا(مسلم

عن جَابِر رضي الله عنه يَقُولُ زَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ بِرَأْسِهَا شَيْئًا(مسلم) عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ(مسلم)

நரைத்த முடிக்கு கறுப்புச் சாயம் பூசுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மருதாணி இட்டு சிவப்பாக்குவது சுன்னத்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (نسائ- عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ

சில மக்கள் புறாவின் ஈரல் கறுப்புச் சாயத்தைக் கொண்டு பூசிக் கொள்வார்கள் அவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்

டை அடிப்பதால் அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் தலையில் உள்ள தோலினுள் இறங்கி தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலையில் சொரசொரப்பு ஏற்பட்டு தலையின் தோல் சிதில் சிதிலாக ஆக்கப்படுகிறது. அந்த இரசாயனத்தால் கண்பார்வை குறைகிறது. சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது என மருத்துவ மேதைகள் குறிப்பிடுகின்றனர்

وعن جابر قال : أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا فقال النبي صلى الله عليه وسلم : " غيروا هذا بشيء واجتنبوا السواد " . رواه مسلم

அழகுக்காக புருவ முடிகளையும், மற்ற அங்க அவயங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?

وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا-وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ..(119)النساء

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالنَّامِصَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ.. (مسلم)

அல்லாஹ்விடம் இப்லீஸ் கூறியது போல இன்று பிளாஸ்டிக் சர்ஜரி என்ற பெயரில் அழகுக்காக உடல் உறுப்புக்களில் சிறியதை பெரிதாக்குவதும், பெரியதை சிறிதாக்குவதும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆணையே பெண்ணாக மாற்றும் சாதனங்கள் பெருகி உள்ளன.


போலீஸ் கட்டிங் போன்று தலையில் பாதி முடியும், பாதி மொட்டையுமாக இருப்பது கூடாது

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ. قَالَ قُلْتُ لِنَافِعٍ وَمَا الْقَزَعُ قَالَ يُحْلَقُ بَعْضُ رَأْسِ الصَّبِىِّ وَيُتْرَكُ بَعْضٌ (مسلم)  عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى غُلامًا قَدْ حُلِقَ بَعْضُ رَأْسِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذلِكَ قَالَ : إِمَّا أَنْ تَحْلِقُوا كُلَّهُ وَإِمَّا أَنْ تَتْرُكُوا كُلَّهُ (شرح السنة)وفي رواية قال فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ(شرح السنة)

தாடி வைப்பது சுன்னத். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதும் போது அவர்களின் தாடி அசையும்

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)

عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)

கையால் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்திருந்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي (94)سورة طه

முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)

நபி ஸல் அவர்களின் சட்டைக்கை மணிக்கட்டு வரை இருந்தது.


மெழுகுவர்த்தி ஏற்றி, பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடும் இளைஞர்களைப் பற்றி... 

 பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய வயது துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும்.  ஒருவரின் 80 வருட வாழ்க்கையில் 20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. அதே நேரத்தில் இதுபோன்ற பிறந்த நாள் தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணி, நல்ல நடைமுறைகளைத் துவங்குவதற்கான கணக்காக இந்த நாட்களை ஆக்கிக் கொள்வதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை.                                                                 

மற்றவர்களின் கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும். 

அல்லது வெறுக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.

عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ " إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 .......رواه أبو داود، 

   பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.    

عن جابر رضي ا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ "(شعب الايمان

முற்காலத்தில் அல்லாஹ் பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.                      

عنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِذَا اسْتَحَلَّتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ التَّلَاعُنُ، وَشَرِبُوا الْخُمُورَ، وَلَبِسُوا الْحَرِيرَ، وَاتَّخذُوا الْقِيَانَ ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ "  (بيهقي في شعب الايمان- الترغيب والترهيب

  என் சமூகத்தினர் ஐந்து காரியங்களை ஆகுமாக்கிக் கொண்டால் அவர்களை அழிவு சூழ்ந்து கொள்ளும். 1.ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டால் 2.மது அதிகரித்தால் 3.பட்டாடைகளை அணிந்தால் 4.இசைக் கருவிகளை பொழுது போக்காக ஆக்கிக் கொண்டால் 5.ஆண் ஆணோடும் பெண் பெண்ணோடும் ஜோடி சேர ஆரம்பித்தால்.                                                  

பட்டாடை அணியக் கூடாது என்று உலமாக்கள் தடுத்தும் கேட்காத மன்னர் ஷாஜஹான்

  மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேற்கத்திய கலாச்சாரம்

 25-09-2026 ரபீஉல் ஆகிர்-  12 بسم الله الرحمن الرحيم         மேற்கத்திய கலாச்சாரம்    https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரி...