13-11-2026
JAMADUL AAHIR - 2
بسم الله الرحمن الرحيم
நிகாஹ் கவுன்சிலிங் - காலத்தின் கட்டாயம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
குடும்ப வாழ்க்கை என்பது வெறும் உடலுறவோடு, பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு முடிந்து விடும் விஷயமல்ல. அதையும் தாண்டி பல்வேறு நலவுகளை உள்ளடக்கியதாக, பல்வேறு முன்னேற்றப் பாதைகளின் படிக்கட்டுகளாக அமைந்துள்ளது. ஆனால் இன்று பலர் இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் திருமணம் செய்வதால் விரைவில் அவை விவாகரத்தில் முடிந்து விடுகின்றன. இந்தியா முழுவதும் குடும்பநல கோர்ட்டுகளில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித் துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தேங்கியுள்ளன. தமிழக அளவில் சுமார் 31,655 முதல் 33,000 வரை குடும்ப நல நீதி மன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 40 % தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுடையது. மேலும் பலரது அன்பு,அரவணைப்பு, பாதுகாப்பைப் பெற கூட்டு வாழ்க்கை சிறந்தது. அது இல்லாமல் பெற்றோரை விட்டும் பிரிந்து நடைபெறும் காதல் திருமணங்களில் சுமார் 50% திருமணங்கள் கோர்ட்டுக்கு வருகின்றன. ஒரு மூத்த ஆலிம் தமது பயானில் கூறினார். திருமணமாகி சில நாட்களிலேயே ஒரு பெண் விவாகரத்துக் கேட்டாராம். அதற்கு அவள் கூறிய குற்றச்சாட்டு என்னவென்றால் கணவனின் குடும்பத்தார்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி விடுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறாள் என்றால் அவள் தனது வீட்டில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கும் வழமை இருந்திருக்க வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும்.
இந்த உலகில் ஒவ்வொரு துறைக்கும் பயிற்சி உண்டு. மருத்துவம் செய்ய வேண்டுமானால் அதற்கும் பயிற்சி உண்டு. கட்டிடக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமானால் அதற்கும் பயிற்சி உண்டு. இமாமத் செய்ய வேண்டுமானால் அதற்கும் பயிற்சி உண்டு. அவ்வாறே குடும்ப வாழ்க்கைக்கும் பயிற்சி உண்டு. ஒவ்வொரு மஹல்லாவிலும் திருமணத்திற்காக பதிவேடு கேட்டு வரும் போதே அவர்களுக்கு நிகாஹ் கவுன்சிலிங் நடத்திய பிறகே நிகாஹ் பதிவேடு தருவோம் என்ற நிபந்தனையை அந்தந்த ஜமாஅத் முன் வைக்க வேண்டும். அத்துடன் தகுந்த ஆலிம்கள் மூலம் நிகாஹ் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். அதுபோன்று திருமணம் முடித்த தம்பதிகளுக்குள் மனக்கசப்பு இருந்தால் அதை சமரசம் செய்து வைக்கவும் ஜமாஅத்தார்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நிகாஹ் கவுன்சிலிங் நடத்துபவர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொண்டு அறிவுரை கூற வேண்டும்
குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதைப்பற்றியும் தாம்பத்ய உறவில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளைப் பற்றியும் அறிவுரை கூற வேண்டும். திருமணத்தில் அனாச்சாரங்களை, வீண் செலவுகளை தவிர்க்குமாறு அறிவுரை கூற வேண்டும். நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை ஒரு தடவை மட்டும் பார்ப்பதற்கு அனுமதி உள்ளதே தவிர, அடிக்கடி பேசுவதும் வெளியில் அழைத்துச் செல்வதும் கூடாது என அறிவுறுத்த வேண்டும். கணவனைப் பொறுத்த வரை முதலிடம் பெற்றோருக்குத் தான். பிறகு தான் மனைவி என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை நினைவு படுத்த வேண்டும். அதே நேரத்தில் அவன் மனைவியிடம் நல்ல விதமாக நடந்து கொள்வதைப் பார்த்து தனது கணவன் தனக்குத் தான் முதலிடம் தருகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல மனைவியைப் பொறுத்த வரை முதலிடம் கணவனுக்குத் தான். பிறகு தான் பெற்றோர் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை நினைவு படுத்த வேண்டும்.
نُعِي إليها أخوها عبد الله بن جحش فاسترجعت واستغفرت له، ثم نعي لها خالها حمزة بن عبد المطلب، فاسترجعت واستغفرت، ثم نعي لها زوجها مصعب بن عمير، فصاحت وولوت، فقال رسول الله صلى الله عليه وسلم "إن زوج المرأة منها لبِمَكان" (الرحيق المختوم)
உஹதுப் போர் முடிந்தவுடன் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உன் சகோதரர் அப்துல்லா போரில் ஷஹீதாகி விட்டார் என்று கூறப்பட்ட போது, அந்தப் பெண் சோகத்தை அடக்கிக் கொண்டு இன்னா லில்லாஹ்... கூறியவராக தனது சகோதரருக்காக துஆச் செய்து பொறுமையுடன் இருந்தார்கள். மறுபடியும் அந்தப்பெண்ணிடம் உன்னுடைய தாய்மாமா ஹம்ஜா ரழி இறந்து விட்டார்கள் என்று கூறப்பட்ட போது சோகத்தை அடக்கிக் கொண்டு துஆச் செய்து பொறுமையுடன் இருந்தார்கள். இறுதியாக உன்னுடைய கணவர் இறந்து விட்டார் என்று கூறப்பட்ட போது தான் அந்த பெண்மணியால் துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சப்தமிட்டு அழுதார்கள். இதைக் கண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன தான் இருந்தாலும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவரது கணவன் தனித்துவமான இடத்தைப் பெற்று விடுகிறார் என்று கூறினார்கள். (நூல்-அர்ரஹீக்)
குடும்ப வாழ்க்கையின் தத்துவம் தெரியாமல் சிறு விஷயங்களுக்கெல்லாம் இன்று விவாகரத்துகள் பெருகி விட்டன
விவாகரத்து வழக்குகள் பெருகுவது, தம்பதிகள் பிரிவது ஷைத்தான்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியாக இருக்கும்
عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ (مسلم)
விளக்கம்- தலைமை இப்லீஸ் தனது சிம்மாசனத்தை கடலில் மீது அமைத்து மனிதர்களை வழி கெடுக்க தன் படைகளான ஷைத்தான்களை (நாலா புறமும் ) அனுப்பி வைப்பான். அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் திரும்பி வந்து நான் இன்னாரைக் கெடுத்தேன் என ஒவ்வொருவரும் கூறும்போது எந்த ஒன்றும் தலைமை ஷைத்தானுக்கு திருப்தியைத் தராது. பிறகு ஒரு ஷைத்தான் வந்து நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மானைவியைப் பிரித்து வைத்தேன் என்று கூறும்போது அந்த ஷைத்தான் தான் தலைமை ஷைத்தானுக்கு மிக நெருக்கமானவனாக இருப்பான்.
பிரிந்த தம்பதிகளை ஒன்றிணைக்க குழு அமைத்து ஒவ்வொரு மஹல்லாவிலும் முயற்சிகள் வேண்டும்
பிரிந்த உள்ளங்களை ஒட்ட வைப்பவன் அல்லாஹ் மட்டும் தான். எனினும் அதற்கான முயற்சிகள் மட்டுமே நம்முடையது
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (الانفال63)
பிரிந்த கணவன்,மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35النساء)
عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ: " " إِنْ يُرِيدَا إِصْلاحاً يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا " قَالَ: وَكَذَلِكَ كُلُّ مُصْلِحٍ يُوَفِّقُهُ اللَّهُ لِلْحَقِّ وَالصَّوَابِ".ابن ابي حاتم
பிரிந்த கணவன், மனைவியை சேர்த்து வைப்பதற்காக பொய் சொல்வதும் கூடும்
عن أُمّ كُلْثُومٍ بِنْت عُقْبَةَ سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا (بخاري-كتاب الصلح
தம்பதிகளுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்காக பொய் சொல்வது தவறில்லை.
عن أُمَّ كُلْثُومٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا(بخاري)
உண்மையைச் சொல்லி பிரித்து வைப்பதை விட பொய்யைச் சொல்லி சமாதானம் செய்து வைப்பது எவ்வளவோ மேலானது.
ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதைப்பற்றி அறிவுரை கூறுவது
وكان الامام أحمد بن حنبل رحمة الله عليه يثني علي زوجتها وماتت وهو حيٌّ فيقول أقامت امّ صالح معي عشرين سنة فما اختلفت انا وهي في كلمة (طبقات الحنابلة)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்களின் மனைவி உம்மு ஸாலிஹ் அவர்கள் இறந்த போது இமாம் அவர்கள் மிகவும் அழுதார்கள். பிறகு கூறினார்கள். நான் என் மனைவி உம்மு ஸாலிஹுடன் 30 வருடம் குடும்பம் நடத்தியுள்ளேன். ஒரு தடவை கூட எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்ததில்லை. இன்னும் சில அறிவிப்புகளில் இமாம் அவர்கள் கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் என் மனைவி அமைதியாக இருந்து விடுவார். என் மனைவிக்கு கோபம் வந்தால் நான் அமைதியாக இருந்து விடுவேன் என்று கூறினார்கள்.
(فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا) نساء
வாயாடியான மனைவியை முடிந்த வரை அனுசரித்துத் தான் வாழ வேண்டும்
عن لقيط بن صبرة ..قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا يَعْنِي الْبَذَاءَ قَالَ فَطَلِّقْهَا إِذًا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً وَلِي مِنْهَا وَلَدٌ قَالَ فَمُرْهَا يَقُولُ عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ أُمَيَّتَكَ (ابوداود) بَاب فِي الِاسْتِنْثَارِ- كِتَاب الطَّهَارَةِ البذاء : الفحش
சுருக்கம்-லகீத் ரழி என்ற நபித்தோழர் நபி ஸல் அவர்களிடம் என் மனைவி அதிகமாக திட்டுகிறாள் என்று கூறிய போது அப்படியானால் அவளை தலாக் கூறி விடு என நபி ஸல் அவர்கள் (அவர் நாவில் என்ன பதில் வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக) சொல்லிப் பார்த்தார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே எனக்கு அவள் மீது பாசம் உள்ளது. எங்கள் இருவருக்கும் குழந்தை உள்ளது என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் அப்படியானால் அவளுக்கு உபதேசம் கூறு. அவள் நல்ல பெண்ணாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வாள். அதற்கு மாறாக உன் மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடிக்காதே என்று கூறினார்கள்.
மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் அவளிடமுள்ள வேறு
சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு அனுசரித்து வாழ்வது
روي أن رجلا جاء إلى [عمر بن الخطاب] رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا) (عشرة النساء للنسائي)
உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.
கணவனுக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் பற்றி பெண்களுக்கும் அறிவுரை கூற வேண்டும்
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (34) سورة النساء
மேற்படி வசனத்தில் மனைவி என்பவள் வீட்டைப் பாதுகாப்பவள் என்பதற்குத் தகுந்த மாதிரி தமிழில் கணவன், மனைவி என்ற வார்த்தைகள் அதே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன. கணவன் என்பது கண்- அவன் என்ற வார்த்தையில் இருந்து மருவி கணவன் என்று மாறியதாகும் என தமிழ் அறிஞர்கள் கூறுவர். அதாவது ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை கண்ணைப் போல் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு அந்த வார்த்தைகள் உருவானது என்பார்கள். அதுபோல மனைவி என்பது மனை- அவி என்ற இரு வார்த்தைகளில் இருந்து மருவியது என தமிழ் அறிஞர்கள் கூறுவர். மனை என்றால் வீடு என்று பொருள். அவி என்றால் வேலி என்று பொருள். வீட்டுக்கு வேலியாக இருந்து வீட்டைப் பாதுகாப்பவள் என்ற பொருளில் அவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. குர்ஆன் கூறும் வார்த்தைகள் பெயராக உள்ளன. அதுபோல் நாத்தனார் என்பதும் நாவுக்குத் துணையார் என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வரும் மனைவியுடன் கணவனின் சகோதரியான நாத்தனார் நாவுக்குத் துணையாக என்பதே இதன் நோக்கமாகும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ (مسلم)
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ ( ابن ماجة)
கணவனின் சூழ்நிலையை அனுசரித்து வாழ்ந்த மனைவிக்கு சில எடுத்துக்காட்டுகள்
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكٍ وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِي النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَنِي (بخاري
ஒரு பெண்ணைப் பொறுத்த வரை முதலில் கணவன் பிறகு தான் பெற்றோர்கள் என்பது இஸ்லாமிய கோட்பாடு. ஆனால் பல குடும்பங்களில் மனைவி தன் கணவனை விட, தன் தாய் தந்தையை பெரிதாக கருதுவதால் பிரச்சினை உருவாகிறது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ النَّاسَ جُلُوسًا بِبَابِهِ لَمْ يُؤْذَنْ لِأَحَدٍ مِنْهُمْ قَالَ فَأُذِنَ لِأَبِي بَكْرٍ فَدَخَلَ ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَاسْتَأْذَنَ فَأُذِنَ لَهُ فَوَجَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا حَوْلَهُ نِسَاؤُهُ وَاجِمًا سَاكِتًا قَالَ فَقَالَ لَأَقُولَنَّ شَيْئًا أُضْحِكُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَ بِنْتَ خَارِجَةَ (أي زوجة عمر) سَأَلَتْنِي النَّفَقَةَ فَقُمْتُ إِلَيْهَا فَوَجَأْتُ عُنُقَهَا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ هُنَّ حَوْلِي كَمَا تَرَى يَسْأَلْنَنِي النَّفَقَةَ فَقَامَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ يَجَأُ عُنُقَهَا فَقَامَ عُمَرُ إِلَى حَفْصَةَ يَجَأُ عُنُقَهَا كِلَاهُمَا يَقُولُ تَسْأَلْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَيْسَ عِنْدَهُ فَقُلْنَ وَاللَّهِ لَا نَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَيْسَ عِنْدَهُ ثُمَّ اعْتَزَلَهُنَّ شَهْرًا أَوْ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ{ يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ -حَتَّى بَلَغَ- لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا } قَالَ فَبَدَأَ بِعَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ إِنِّي أُرِيدُ أَنْ أَعْرِضَ عَلَيْكِ أَمْرًا أُحِبُّ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَشِيرِي أَبَوَيْكِ قَالَتْ وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ فَتَلَا عَلَيْهَا الْآيَةَ قَالَتْ أَفِيكَ يَا رَسُولَ اللَّهِ أَسْتَشِيرُ أَبَوَيَّ بَلْ أَخْتَارُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ وَأَسْأَلُكَ أَنْ لَا تُخْبِرَ امْرَأَةً مِنْ نِسَائِكَ بِالَّذِي قُلْتُ قَالَ لَا تَسْأَلُنِي امْرَأَةٌ مِنْهُنَّ إِلَّا أَخْبَرْتُهَا إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا وَلَا مُتَعَنِّتًا وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا (مسلم) باب بيان أن تخيير امرأته لا يكون طلاقا إلا بالنية - كتاب الطلاق
சுருக்கம்- நபி ஸல் அவர்களிடம் சக்திக்கு மீறிய ஜீவனாம்சத்தை மனைவிமார்கள் கேட்டார்கள் என்பதை ஹஃப்ஸா ரழி அவர்களின் தந்தையான உமர் ரழி அறிந்த போது தன் மகளை கண்டித்தார்கள். அபூபக்ர் ரழி அவர்களும் தன் மகளை கண்டித்தார்கள். இதுவே நம் காலமாக இருந்தால் மகள் என்ன தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்திப் பேசுவார்கள். மேலும் விவாகரத்து விஷயமாக உன் தந்தையிடம் ஆலோசனை கேள் என நபி ஸல் கூறிய போது உங்கள் விஷயத்திலா நான் என் தந்தையிடம் ஆலோசனை கேட்பேன் என ஆயிஷா ரழி கூறியது ஒவ்வொரு பெண்களும் கணவனுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது.
ஒரு பெண் தன்னுடைய கணவனின் பெற்றோரை தன் பெற்றோரைப் போல் பாவிக்க வேண்டும். கணவனின் சகோதரிகளை தன் சகோதரிகளாக பாவிக்க வேண்டும். இந்த நிலை நீடித்தாலே குடும்பத்தில் பிரச்சினைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம்
عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ نَكَحْتَ يَا جَابِرُ قُلْتُ نَعَمْ قَالَ مَاذَا أَبِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ لَا بَلْ ثَيِّبًا قَالَ فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ كُنَّ لِي تِسْعَ أَخَوَاتٍ فَكَرِهْتُ أَنْ أَجْمَعَ إِلَيْهِنَّ جَارِيَةً خَرْقَاءَ مِثْلَهُنَّ وَلَكِنْ امْرَأَةً تَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ قَالَ أَصَبْتَ (بخاري) بَاب {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ –كتاب المغازى
படிப்பினை – ஒரு பெண் தன் கணவனின் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றிருந்தால் நபி ஸல் அவர்கள் நீ எப்படி இன்னொரு வீட்டுப் பெண்ணை அவள் உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்கு தலை வாரி விடுமாறு கூறலாம் என்று கேட்டிருப்பார்கள். மாறாக நீ செய்தது சரி தான் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே கணவனின் சகோதரிகளை கவனிப்பது பொறுப்பு எனும்போது கணவனின் தாய், தந்தைக்கு உபகாரமாக நடப்பதும் பொறுப்பாகும். ஆனால் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக்கூடாது. மருமகள் என்பதற்காக எல்லா வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக் கூடாது மாமியாரும் தன் மருமகளை மகளாக கருத வேண்டும். இரு தரப்பினரும் அல்லாஹ்வை பயந்து நடந்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்
மாமியார் மருமகள் சண்டையால் நிம்மதி இழக்கும் ஆண்கள்
மனைவியை கண்டாலே வெளியில் சென்று திரும்பும் கணவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என நபி ஸல் கூறியிருக்க இன்று பல வீடுகளில் கணவன் வீட்டுக்குள் வந்தவுடன் உங்க அம்மா பேசிய கேட்டீங்களா ? உங்கம்மா பண்ணுற வேலையை கண்டும் காணாமல் இருக்கிறீர்களே என்று எள்ளும், கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது அக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு மேலதிகாரிகளின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாகி மனச்சுமையோடு வீடு திரும்புபவராக இருப்பார் அல்லது காலை முதல் மாலை வரை உழைத்து களைத்தவராக வருவார். அல்லது சரியாக படிக்காத மாணவர்களிடம் பகல் முழுவதும் மாரடித்து விட்டு வீடு திரும்பும் ஆசிரியராக இருப்பார். இப்படிப்பட்டவர்கள் மன அமைதியை நாடி வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்
சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் கணவன் தலாக் கூறுவதும், மனைவி தலாக் கேட்பதும் மாபெரும் குற்றம்
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ (ابن ماجة
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ رواه ابن ماجة
وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا (34) وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا (35النساء)
முதல்நடவடிக்கை-மனைவிக்கு அறிவுரைகள் கூறுவது. எங்கெல்லாம் பெண்களுக்கான சொற்பொழிவுகள் நடைபெறுமோ, அந்த பயான்களில் கலந்து கொள்ள வைப்பதும் இதில் அடங்கும். அதற்கு இவரும் ஒழுக்கமுள்ளவராக மனைவியின் உரிமைகளைப் பேணுபவராக இருக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட நடவடிக்கை...அதாவது பலமுறை அறிவுரை கூறியும் திருந்தா விட்டால்..
وَاهْجُرُوهُنَّ: عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه: الْهَجْر هُوَ أَنْ لَا يُجَامِعهَا وَيُضَاجِعهَا عَلَى فِرَاشهَا وَيُوَلِّيهَا ظَهْره (تفسير ابن كثير)
3-ம் நடவடிக்கை-கணவன் அருகில் இருந்தும் தொடவில்லையெனில் திருந்தும் வாய்ப்பு நிறைய உண்டு. அதிலும் திருந்தாத போது
وَاضْرِبُوهُنَّ عَنْ جَابِر رضي الله عنه عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي حَجَّة الْوَدَاع..فَاتَّقُوا اللَّهَ فِى النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ (مسلم) باب حَجَّةِ النَّبِىِّ صلى الله عليه وسلم- كتاب الحج
அடுத்த கட்ட நடவடிக்கை. அறவே ஒத்து வரா விட்டால் இரு குடும்பத்தைச் சேர்ந்த நீதமான நடுவரை நியமித்து பஞ்சாயத்து..
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا.
மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்குப் பிறகு தான் தலாக் என்ற பேச்சுக்கு இடமுண்டு. அப்போதும் ஒரு தலாக் கூற இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அப்போது தான் இத்தா முடியும் முன் அவள் திருந்தி வந்தால் இருவரும் சேர்ந்து வாழலாம் பின்பு மீண்டும் 2-ம் தடவை தலாக் கூறினால் அப்போதும் இச்சலுகை உண்டு. மூன்றாம் தடவை தலாக் கூறினால் இச்சலுகை இல்லை
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ (229النساء)
கணவனுக்கும், மனைவிக்கும் ஒத்துப் போகா விட்டால் முடிந்த வரை விவாகரத்து என்ற பேச்சுக்கு இடமில்லாமல் மாதாந்திர சிலவுக்கு மட்டும் கணவன் கொடுப்பதற்கு இருவரும் உடன்பட்டால் அவ்வாறே செய்யலாம்
عَنْ اِبْن الْمُسَيِّب أَنَّ بِنْت مُحَمَّد بْن مُسْلِم كَانَتْ عِنْد رَافِع بْن خَدِيج فَكَرِهَ مِنْهَا أَمْرًا إِمَّا كِبَرًا أَوْ غَيْره فَأَرَادَ طَلَاقهَا فَقَالَتْ:لَا تُطَلِّقنِي وَاقْسِمْ لِي مَا بَدَا لَك فَأَنْزَلَ اللَّه "وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ (النساء 128 وَالظَّاهِر مِنْ الْآيَة أَنَّ صُلْحهمَا..خَيْر مِنْ الْمُفَارَقَة بِالْكُلِّيَّةِ كَمَا أَمْسَكَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَة بِنْت زَمْعَة عَلَى أَنْ تَرَكَتْ يَوْمهَا لِعَائِشَة رَضِيَ اللَّه عَنْهَا وَلَمْ يُفَارِقهَا. وَلَمَّا كَانَ الْوِفَاق أَحَبّ إِلَى اللَّه مِنْ الْفِرَاق قَالَ وَالصُّلْح خَيْر بَلْ الطَّلَاق بَغِيض إِلَيْهِ سُبْحَانه وَتَعَالَى (تفسير ابن كثير)
கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது.
قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم (الكتاب : عشرة النساء للنسائي)
இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.
وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)
யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.
நிச்சயிக்கப்பட்ட, அல்லது நிச்சயிக்கப்படவிருக்கும் பெண்ணை மணமகன் பார்ப்பது கூடுமா?
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا فَلْيَفْعَلْ قَالَ فَخَطَبْتُ جَارِيَةً فَكُنْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى رَأَيْتُ مِنْهَا مَا دَعَانِي إِلَى نِكَاحِهَا وَتَزَوُّجِهَا فَتَزَوَّجْتُهَا رواه ابوداود
ஒருவர் ஒரு பெண்ணை பெண் பேசினால் அவளைத் திருமணம் செய்வதின் பால் தூண்டும் வகையில் ஒருமுறை அவளைப் பார்த்துக் கொள்ளட்டும் இதை அறிவிக்கும் ஜாபிர் ரழி கூறினார்கள் நான் ஒரு பெண்ணை பெண் பேசியிருந்தேன். அவரை நான் மறைந்திருந்து பார்த்தேன். அது அவரைத் திருமணம் செய்யத் தூண்டும் வகையில் அமைந்து அவரைத் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا رواه مسلم (بَاب نَدْبِ النَّظَرِ إِلَى وَجْهِ الْمَرْأَةِ وَكَفَّيْهَا لِمَنْ يُرِيدُ تَزَوُّجَهَا)மணப்பெண்ணை
பார்க்காமலேயே திருமணம் செய்ததால் விவாகரத்து வரை சென்று விட்ட வழக்குகள் நிறைய உள்ளன.
عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ قَالَ خَطَبْتُ امْرَأَةً فَجَعَلْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى نَظَرْتُ إِلَيْهَا فِي نَخْلٍ لَهَا فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَلْقَى اللَّهُ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةَ امْرَأَةٍ فَلَا بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا ابن ماجة
முஹம்மது இப்னு மஸ்லமா ரழி ஒரு பெண்ணை பெண் பேசியிருந்தார்கள். அந்தப் பெண்ணை அவர் மறைந்திருந்து பார்த்த போது நபித்தோழராக இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் நான் நபி ஸல் கூற கேட்டுள்ளேன். ஒரு பெண்ணை பெண் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் உங்களின் மனதில் போட்டால் அவளை ஒருமுறை பார்ப்பது தவறில்லை
عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَأَتَيْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ وَإِلَّا فَأَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا رواه ابن ماجة
ஆயிஷா நாயகியை திருமணத்திற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்களா?
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ رواه البخاري5078
ஆயிஷாவே உன்னை திருமணம் செய்யும் முன்பு கனவில் உன்னை எனக்கு காட்டப்பட்டது. ஒரு வானவர் பெரிய பட்டுத்துணியில் உன்னைச் சுமந்தவாறு வந்து இவர் தான் உங்களுடைய வருங்கால மனைவி என்று கூற, அதற்கு நான் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதாக இருந்தால் அது நடக்கட்டும் என்றேன்.
திருமணத்தில் அனாச்சாரங்களைத் தவிர்க்கும்படி அறிவுரை கூற வேண்டும். வரதட்சனை கூடாது என அறிவுரை கூற வேண்டும்
மாப்பிள்ளைக்கு மருதாணி இடுவது கூடாது மருதாணி என்பது பெண்களுக்கு மட்டும் உரித்தானது
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ (ترمذي)
வெளியே செல்லும்போது ஆண்கள் தடவும் திரவியங்களில் வாசனை இருக்கலாம் ஆனால் நிறம் இருப்பது கூடாது அதற்கு நேர் மாற்றமாக ஒரு பெண் வெளியே செல்லும்போது அவள் தடவும் திரவியங்களில் நிறம் இருக்கலாம் ஆனால் வாசனை இருப்பது கூடாது.
மணமகனுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது கூடுமா ?
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا ابوداود
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் காப்பை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க மோதிரம் அணிவிக்கட்டும்
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் மாலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க மாலை அணிவிக்கட்டும்
எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் வளையலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க வளையல் அணிவிக்கட்டும்
விருந்துகளில் முதன்மையானது வலீமா விருந்து. அதைக் கூட ஆடம்பரம் இல்லாமல் வசதிக்கு ஏற்ப செய்ய வேண்டும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ مَا هَذَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ فَبَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ رواه البخاري5155
عَنْ أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ رواه البخاري5171
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثًا يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ أُمِرَ بِالْأَنْطَاعِ فَأَلْقَى فِيهَا مِنْ التَّمْرِ وَالْأَقِطِ وَالسَّمْنِ فَكَانَتْ وَلِيمَتَهُ رواه البخاري5085 اقطபாலாடைக்கட்டி
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيُجِبْ رواه مسلم عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري5177
இன்றைய திருமண விருந்துகளில் பஃபே சிஷ்டம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வருவதைப் பற்றி......
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ رواه البخاري3456 جحر ضبஉடும்பின் பொந்தில் நுழைந்தாலும்
[திருமண மண்டபங்களில் வசதி படைத்தவர்களும் கூட தட்டை கையில் ஏந்திய படி வரிசையில் நின்று தேவையானதை வாங்கி வந்து அதை நின்று கொண்டே சாப்பிடும் அளவுக்கு மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் ஊடுருவி உள்ளது]
آداب الضيافة في الاسلام - قال الله تعالي هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27) سورة الذاريات وهذه الآية انتظمت آداب الضيافة؛ فإنه جاء بطعامه من حيث لا يشعرون بسرعة، ولم يمتن عليهم أولا فقال: "نأتيكم بطعام؟" بل جاء به بسرعة وخفاء، وأتى بأفضل ما وجد من ماله، وهو عجل فتي سمين مشوي، فقربه إليهم، لم يضعه، وقال: اقتربوا، بل وضعه بين أيديهم، ولم يأمرهم أمرا يشق على سامعه بصيغة الجزم، بل قال: { أَلا تَأْكُلُونَ } على سبيل العرض والتلطف، كما يقول القائل اليوم: إن رأيت أن تتفضل وتحسن وتتصدق،فافعل ابن كثير)