20-03-2026
RAMZAN- 30 بسم الله الرحمن الرحيم
ஜும்ஆ பயான்- இஸ்திகாமத்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
ரமழான் முடிந்தவுடன் மஸ்ஜித்களை மறந்து விடுபவர்களை எச்சரிக்கும் விதமாக இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)المؤمن
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة -
சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்வது தான் அல்லாஹ்வுக்குப் பிடிக்கும்
عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري
قاربوا أي اطلبوا قربة الله وطاعته بقدر ما تطيقونه وقال السيد أي حافظوا القصد في الأمور بلا غلو ولا تقصير وقيل تقربوا الى الله بكثرة القربات وقال الكرماني وقيل أي لا تبلغوا النهاية باستيعاب الأوقات كلها بل اغتنموا أوقات نشاطكم (شرح ابن ماجة
وقوله سددوا أي اطلبوا بأعمالكم السداد أي الصواب بين الإفراط و التفريط وكأنه تأكيد لقاربو (شرح ابن ماجة
கருத்து- வணக்க வழிபாடுகளில் நடுநிலையை கடை பிடியுங்கள். அதாவது சக்திக்கு முடிந்த வரை அமல் செய்யுங்கள். மேலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள். உங்களுடைய அமல் மட்டுமே உங்களை சுவனத்தில் நுழைத்து விடாது. மேலும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்
அமல்கள் மட்டுமே நம்மை சுவனத்தில் நுழைத்து விடாது என்பதிலிருந்து படிப்பினையான சம்பவம்
عن جابر بن عبد الله رضي الله عنهما قال : خرج علينا النبي صلى الله عليه و سلم فقال : خرج من عندي خليلي جبريل آنفا فقال : يا محمد و الذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه و طوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا و البحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية و أخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل و شجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء و أخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز و جل عند وقت الأجل أن يقبضه ساجدا و أن لا يجعل للأرض و لا لشيء يفسده عليه سبيلا حتى بعثه و هو ساجد قال : ففعل فنحن نمر عليه إذا هبطنا و إذا عرجنا فنجده له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز و جل فيقول له الرب : ادخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : يا رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الله عز و جل للملائكة قايسوا عبدي بنعمتي عليه و بعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة و بقيت نعمة الجسد فضلا عليه فيقول : أدخلوا عبدي النار قال : فيجر إلى النار فينادي : ربي برحمتك أدخلني الجنة فيقول : ردوه فيوقف بين يديه فيقول : يا عبدي من خلقك و لم تك شيئا ؟ فيقول : أنت يا رب فيقول : كان ذلك من قبلك أو برحمتي ؟ فيقول : بل برحمتك فيقول : من قواك لعبادة خمس مائة عام ؟ فيقول : أنت يا رب فيقول : من أنزلك في جبل وسط اللجة و أخرج لك الماء العذب من الماء المالح و أخرج لك كل ليلة رمانة و إنما تخرج مرة في السنة و سألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك ؟ فيقول : أنت يا رب فقال الله عز و جل : فذلك برحمتي و برحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام : إنما الأشياء برحمة الله تعالى يا محمد (حاكم) قال الحاكم رحمه الله هذا حديث صحيح الإسناد
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். என்னிடம் என்னுடைய தோழர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சென்றார்கள் அப்போது கூறினார்கள் உங்களை சத்தியத்தின் மீது அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வுடைய அடியார்களின் ஒரு அடியார் முற்காலத்தில் நடுக்கடலில் உள்ள ஒரு 30 அடி உயரம் உள்ள மலை உச்சியில் 500 வருடங்கள் அவர் வாழ்ந்தார். அந்த மலையின் உயரமும் 30 அடி. அதன் அகலமும் 30 அடி.
எப்படி பார்த்தாலும் அவர் கரையை அடைவதாக இருந்தால் எந்த திசையை நோக்கினாலும் ஆயிரம் மைல்கள் தூரம் பயணம் செய்தால் தான் அவர் கரையை அடைய முடியும். அப்படிப்பட்ட நடு தீவிலே அவர் வாழ்ந்தார். அல்லாஹ் அவ்வளவு உப்பு நீருக்கு மத்தியிலே அந்த மலை உச்சியில் ஒரு விரல் அளவுக்கு சுவையான நீர் ஊற்றை வரவழைத்துக் கொண்டிருந்தான். சுய தேவைகளை அவர் மலையின் கீழ் பகுதிக்கு வந்து பூர்த்தி செய்து கொள்வார். மேலும் வருடமெல்லாம் எல்லா சீசனிலும் பழம் தருகின்ற பரக்கத்தான மாதுளை மரத்தை அல்லாஹ் அந்த மலை உச்சியில் வளரச் செய்தான். அவர் அந்த மாதுளையை உண்டு அந்த தண்ணீரை குடிப்பார். உளூச் செய்வதாக இருந்தால் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொள்வார். இவ்வாறாக 500 வருடங்கள் வணக்கத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை கழித்தார். ஒரு நாள் அவருடைய மரண நேரம் நெருங்கிய பொழுது அதை அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்த போது அவர் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ஸஜ்தா செய்த நிலையிலே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் மேலும் என்னுடைய உடல் மண்ணுக்கு இரையாக க் கூடாது. என்னுடைய உடல் கெட்டுவிடக்கூடாது என்று அல்லாஹ்விடம் வேண்டினார். அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். சஜ்தா செய்த நிலையிலே அவருடைய உயிர் பிரிந்தது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும் போது
ஒவ்வொரு முறையும் நாங்கள் பூமிக்கு இறங்கும்போதும் பூமியிலிருந்து விண்ணை நோக்கி செல்லும் போதும் அந்த உடலை நாங்கள் கடந்து செல்வோம். அது அப்படியே பாதுகாப்பாக இருக்கும். அந்த நல்லடியாரைப் பற்றி கியாமத்து நாள் விசாரணையின் போது நடைபெறப் போகும் ஒரு செய்தியை எங்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்திலிருந்து நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த நல்லடியாரை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது மலக்குகளிடம் அல்லாஹ் சொல்லுவான். என்னுடைய இந்த அடியாரை என்னுடைய அருளால் நீங்கள் சுவனத்தில் நுழைவியுங்கள் என்று கூறுவான் அதற்கு அந்த நல்லடியார் ரப்பே என்னுடைய நற்செயலால் நான் சுவனம் நுழைகிறேனே என்று கூறுவார்.
(அதாவது நாம் 500 வருடம் நற்செயல்கள் செய்திருக்கிறோமே என்று அதை பெரிதாக கருதுவார்) அதை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் என்னுடைய அருளால் அவரை சுவனத்தின் நுழையுங்கள் என்று கூறுவான். இவ்வாறாக மூன்று தடவைகளும் அவர் அதையே கூறும்போது
இறுதியாக அல்லாஹ் சொல்வான். என்னுடைய அடியார் என்னுடைய அருளைத் தவிர்த்து அவருடைய அமலால் சொர்க்கம் செல்ல நினைக்கிறார். எனவே அவருடைய அமல் சொர்க்கம் செல்வதற்குப் போதுமானதா என்று கணக்கிடுங்கள் என்று கூறுவான். அப்போது மலக்குகள் கணக்கிடுவார்கள். கணக்கிட்டுப் பார்த்து யா அல்லாஹ் அவருடைய 500 வருட அமல் உலகில் அவருக்கு நீ வழங்கிய கண் பார்வைக்கு மட்டுமே போதுமானதாக ஆகிவிட்டது அவருக்கு நீ வழங்கிய மற்ற அருட்கொடைகளுக்கு கூட அவருடைய அமல்கள் போதாது.
அவருக்கு நீ உடலைத் தந்தாயே இன்னும் பல நிஃமத்துகளைத் தந்தாயே அதற்கெல்லாம் அவருடைய அமல் போதாது என்று சொன்னவுடன் அப்படியானால் அவரை நரகத்திலே நுழைத்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அப்பொழுதுதான் அந்த அடியார் தவறை உணர்ந்து ரப்பே உன்னுடைய அருளாலேயே நான் சுவனம் அடைகிறேன் என்று மன்னிப்புக் கேட்பார்.
அப்போது அல்லாஹ் அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள் என்பான். அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார் அவரிடம் அல்லாஹ் என் அடியானே நீ ஒரு நேரத்தில் இல்லாமல் இருந்தாய் உன்னை படைத்தது யார் என்று கேட்க ரப்பே நீதான் என்று அவர் கூறுவார். அப்போது அல்லாஹ் அது என்னுடைய அருளால் தானே என்று கேட்பான் ஆம் உன்னுடைய அருளால் தான் என்று அந்த அடியார் கூறுவார் 500 வருடங்கள் வணங்குவதற்கு உனக்கு ஆரோக்கியத்தை தந்தது யார் என்று அல்லாஹ் கேட்பான் நீ தான் என்று அந்த அடியார் கூறுவார் மேலும் அல்லாஹ் கேட்பான் இந்த மலை உச்சியிலே அலைகளுக்கு நடுவே என்று அலையும் உம்மைத் தாக்காமல் உன்னை தங்க வைத்து உனக்காக உப்புத் தண்ணீருக்கு மத்தியிலே சுவையான நீரைக் கொடுத்தது மட்டுமன்றி சீசனில் மட்டுமே விளையக்கூடிய மாதுளையை வருடமெல்லாம் தந்தது மட்டுமன்றி நீ கேட்டவாறு சஜ்தாவுடைய நிலையிலே உன்னுடைய உயிரைக் கைப்பற்றியது யார் என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ரப்பே நீ தான் எல்லாம் என்று கூறுவார். இப்படியெல்லாம் அவருக்குப் புரிய வைத்து பிறகு அல்லாஹ் என்னுடைய அருளால் அவரை சுவனத்தில் நுழைய வையுங்கள் என்று கூறுவான் அவ்வாறு அவர் சுவனத்திலே நுழைய வைக்கப்படுவார் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும்போது அனைத்து நிஃமத்துகளும் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு தானே தவிர அடியார்களின் அமலைக் கொண்டு கிடையாது என்று கூறினார்கள்.
மேற்படி சம்பவத்தில் படிப்பினைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் போது நான் உட்பட உலகத்தில் யாரும் அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் சுவனம் அடைய முடியாது என்று கூறினார்கள்
படிப்பினை – 1 நீ கொடுத்ததற்கு நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் என்ற நாகூர் அனிபாவின் பாடலைப் போல நாம் காலமெல்லாம் பல்லாயிரம் வருடங்கள் வணங்கினாலும் அல்லாஹ் கொடுத்த நன்கொடைகளுக்கு நன்றியாக .ஆக முடியாது
படிப்பினை – 2 கண்கள் என்பது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது இந்த கண்களால் 6 ஆயிரம் நிறங்களை நாம் பகுத்துப் பார்க்க முடியும் ஆடு மாடுகளால் குறிப்பிட்ட நிறங்களை மட்டும் தான் பார்க்க முடியும்.
படிப்பினை – 3 இறந்ததற்குப் பிறகும் அழிந்து விடாமல் உடல்கள் பாதுகாக்கப்படுவது நபிமார்கள் விஷயத்தில் உறுதியான விஷயமாகும் அல்லாஹ் மற்ற நல்லடியார்களை அவன் நாடினால் அவ்வாறு பாதுகாப்பான் என்கிற படிப்பினையும் இதில் உண்டு
கடல் என்று சொன்னாலே அவ்வப்போது மாபெரும் அலைகள் தோன்றுவது இயல்பு
எத்தனையோ அலைகள் நூறடி உயரத்திற்கு மேலே கூட உயரும். அவ்வாறு இருக்க முப்பதடி உயரமே இருந்த இந்த தீவில் 500 வருடங்கள் எந்த அலைகளும் அவரை தாக்கி விடாமல் அல்லாஹ் பாதுகாத்திருக்கிறான்
தொடர்படியான அமல் நல்ல மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந்நிலையில் அவரை மவ்த்தாக்குவான்
عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي - كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
மிஃராஜில் சுவனத்தில் பிலால் ரழி அவர்களின் காலடித்தடத்தை நபி ஸல் அவர்கள் காதில் கேட்டதற்கு காரணம் உளூ என்ற நற்செயலை அவர்கள் தொடர்ந்து செய்தது தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ (بخاري
நபி ஸல் அவர்கள் பிலால் ரழி அவர்களிடம் இஸ்லாத்திற்கு வந்த பிறகு நீங்கள் செய்த உயர்ந்த அமலை எனக்குக் கூறும். ஏனெனில் என்னுடைய மிஃராஜ் பயணத்தில் எனக்கு முன்பாக உமது காலடி சப் த த்தை க் கேட்டேன் என்று கூறினார்கள். அதற்கு பிலால் ரழி அவர்கள் நான் அப்படி ஒன்றும் உயர்ந்த அமலை செய்து விடவில்லை. எனினும் நான் எப்போதெல்லாம் உளூச் செய்வேனோ அது இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் உளூச் செய்யும் போதெல்லாம் அல்லாஹ் எனக்கு நாடிய தொழுகையை நான் தொழுவேன் என்றார்கள்
மற்ற மாதங்களிலும் அமல்களை தொடர்ந்து செய்வதற்கான பயிற்சியாகத் தான் ரமழானின் அமல்கள் கடமையாக்கப்பட்டுள்ளது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة) ذَكَرَ كَعْب رضي الله عنه أَنَّهُ مَنْ صَامَ رَمَضَان وَهُوَ يُحَدِّث نَفْسه إِذَا أَفْطَرَ رَمَضَان أَنْ لَا يَعْصِي اللَّه دَخَلَ الْجَنَّة بِغَيْرِ مَسْأَلَة وَلَا حِسَاب (تفسير ابن كثير)
ரமழான் முடிந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டேன் என்ற நல்ல மன உறுதியுடன் யார் ரமழானில் நோன்பு வைப்பாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்.
ஷைத்தான்கள் சிறை பிடிக்கப்படும் மாதமான ரமழானில் அமல்கள் செய்வது வாகன நெரிசல் இல்லாத நேரங்களில் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது போல... இவ்வாறு வண்டி ஓட்டுபவனை டிரைவர் என்று கூற முடியாது. வாகன நெரிசல் உள்ள நேரங்களிலும் வண்டி ஓட்டுபவன் தான் உண்மையான டிரைவர். அதுபோல் ஷைத்தான்கள் அவிழ்த்து விடப்படும் மற்ற மாதங்களிலும் அமல்கள் செய்பவர் தான் உண்மையான வணக்க சாலி ஆவார்.
முனாஃபிக்கின் அடையாளம் எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)
நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும் மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது என்றார்கள்.
விளக்கம்- அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.
எந்த ஒரு அமலிலும் இஸ்திகாமத் வேண்டும்
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)فصلت
சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்தால் தான் பலனைத் தரும்
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ (بخاري)
பல்வேறு விஷயங்களில் சஹாபாக்களின் இஸ்திகாமத்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَيَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ (ابن
ஸஃதுப்னு அபீ வக்காஸ் ரழி இந்த அறிவுரைக்குப் பின்னால் வாழ்நாள் முழுக்க ஹராமை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் கூஃபாவில் இருந்த காலத்தில் அவர்களுடைய ஆடு வெறு ஒருவருடைய தோட்டத்தில் சென்று மேயந்து விட்டது என்பதற்காக அந்த ஆட்டில் இருந்து இனிமேல் பால் கூட நான் கறக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு இஸ்திகாமத்துடன் இருந்தார்கள்.
சின்னச் சின்ன விஷயங்களிலும் இமாம்களின் இஸ்திகாமத்
இமாம் அபூஹனீஃபா ரஹ் வாழ்நாள் முழுக்க யாரைப்பற்றியும்புறம் பேசியது கிடையாது
இமாம் ஷாஃபிஈ ரஹ் வாழ்நாள் முழுக்க ஒரு பொய் கூடபேசியதே கிடையாது
இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் பேசினால் கல்வியைத்தவிர வேறு எதுவும் பேசியதில்லை
இன்றைக்கு எந்த விஷயத்திலும் நம்மிடம் இஸ்திகாமத் இருப்பதில்லை. சில இளைஞர்கள் ஷரீஅத் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் ஊர் நடைமுறை என்பது போன்று விஷயங்கள் குறுக்கே வரும்போது அவர்களின் இஸ்திகாமத் தளர்ந்து விடுகிறது.
வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்போது மட்டும் தொழும் சந்தர்ப்பவாதிகளைப் பற்றி....
சில முஸ்லிம்கள் இப்படியும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தேவை நிறைவறவிருந்தால் மட்டும் தொழுவார்கள் அந்த தேவை நிறைவேறி விட்டால் அல்லது அந்த துன்பம் நீங்கி விட்டால் தொழுகையை மறந்து விடுவார்கள்
ஆழ்கடல் இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர். அதில் ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால் அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர்தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)
நபி யூனுஸ் தன் உம்மத்தினருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறியும் கேட்காததால் அல்லாஹ்விடம் அவர்களின் மீது வேதனையை இறக்க துஆ செய்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டு இந்த நாளில் வேதனை வரும் என்று அறிவித்தான் அதை அப்படியே அந்த மக்களிடம் நபி யூனுஸ் அலை கூறினார்கள் அப்பொழுது அந்த மக்களுக்கு பயம் வந்தது அவர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி பெரியவர்கள், சிறியவர்கள், கால்நடைகள் என எல்லோரும் ஒன்று கூடி துஆ செய்ததால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த வேதனையை அல்லாஹ் ரத்து செய்தான் இதற்கிடையே வேதனை வரும் என்று அறிவித்த நபி யூனுஸ் அலை ஊரை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள் அல்லாஹ் அறிவித்தும் கூட இப்படி வேதனை வராமல் ஆகி விட்டதே என்ற அதிருப்தியுடன் அவர்கள் வெளியேறியதாலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி வெளியேறியதால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான்.
இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும் செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் தான் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன் காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ- آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91يونس)عَنِ ابْنِ عَبَّاسٍ رض إِنَّ جِبْرِيلَ كَانَ يَدُسُّ فِي فَمِ فِرْعَوْنَ الطِّينَ مَخَافَةَ أَنْ يَقُولَ : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.(مسند أحمد, تفسير ابن كثير)
கடைசி நேரத்தில் துன்பத்தின் போது ஃபிர்அவ்ன் கேட்கும் பிரார்த்தனை ஒருவேளை ஏற்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவன் பிரார்த்தனையை முழுமையாக்க விடாமல் அவனுடைய வாயில் ஜிப்ரயீல் அலை மண்ணைப் போட்டு திணித்தார்கள்
ரமழான் முடிந்தவுடன் ஐவேளை தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்
உதாரணம் 1ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப்பற்றி என்ன நினைப்போம்
وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل
قَالَ عَبْد اللَّه بْن كَثِير السُّدِّيّ : هَذِهِ اِمْرَأَة خَرْقَاء كَانَتْ بِمَكَّة كُلَّمَا غَزَلَتْ شَيْئًا نَقَضَتْهُ بَعْد انْبِرَامِهِ (تفسير ابن كثير
மக்காவில் முட்டாள் தனமான இப்படியொரு பெண் இருந்தாள். அழகாக நூல் நூற்று அதை ஒரு கோர்வையாக கஷ்டப்பட்டு ஆக்கிய பின் கடைசியில் அனைத்தையும் கலைத்துப் போட்டு விடுவாள். அதுபோல ரமழானில கஷ்டப்படு அமல் செய்து இறுதியில் அனைத்தையும் வீணாக்கி விடுகிறோம்
உதாரணம் 2 ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி, இரவும், பகலும் விழித்திருந்து, ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
உதாரணம்- 3- ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
உதாரணம்- 4- ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி. அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே ! என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும் ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.
தொழுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)
அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.
விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில் ஏழையாகவே இருப்பான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة
பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக