வியாழன், 30 ஜூலை, 2026

நாவைப் பேணுவோம்

31-07-2026
ஸஃபர் - 16

بسم الله الرحمن الرحيم  
       நாவின் விபரீதங்கள்


https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12) الحجرات
 முன்னுரை- மனிதனின் உறுப்புகளில் மிக முக்கியமானது நாவு. எவ்வாறு ஒரு கத்தியைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து ஒரு உயிரைக் காப்பாற்றவும் முடியும். அதே கத்தியைக் கொண்டு ஒருவரைக் கொலை செய்யவும் முடியுமோ, அவ்வாறே இந்த நாவைக் கொண்டு ஒருவர் சிறந்த நிலையையும் அடைய முடியும் இதைக் கொண்டே ஒருவர் மிக மோசமான நிலையையும்  அடைய முடியும். நாவின் மூலமாக நிறைய பெரும்பாவங்களை நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். பொய், புறம், அவதூறு, சாப வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பாவங்கள் மூலமாக நாம் செய்த நற்செயல்களின் பலன்களை நாம் இழந்து வருகிறோம். எனவே அத்தகைய பாவங்களைப் பற்றி இத்தலைப்பில் காண்பதற்கு முன்பு நாவைப் பற்றி பொதுவாக வந்திருக்கும் எச்சரிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம்.               
நாவை அஞ்சி பயப்படும் மற்ற உறுப்புகள் 
عن ابي سعيد رضي الله عنه رفعه قال : " إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول : اتق الله فينا فإنا نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا " . رواه الترمذي 
கருத்து-ஒவ்வொரு நாளும் ஆதமின் மகன் காலை நேரத்தை அடையும்போது எல்லா உறுப்புகளும் நாவைப் பார்த்து நீ அல்லாஹ்வை அஞ்சி ஒழுங்காக இரு. நீ ஒழுங்காக இருந்தால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும். நீ சறுகி விட்டால் நாங்கள் அதன் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறுமாம்.                                                              
நீ எந்த வார்த்தையை இன்னும் பேசவில்லையோ அந்த வார்த்தைக்கு நீ எஜமான். நீ எந்த வார்த்தையைப் பேசி விட்டாயோ அது உனக்கு எஜமான் என்று ஒரு  தத்துவம் சொல்லப்படுவதுண்டு.   
عن سفيان بن عبد الله الثقفي قال : قلت : يا رسول الله ما أخوف ما تخاف علي ؟ قال : فأخذ بلسان نفسه وقال : " هذا " . (ترمذي
நான் அதிகம் அஞ்ச வேண்டியது எதைக் கண்டு என்று ஒரு நபித் தோழர் கேட்ட போது உடனே நபி ஸல் அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்துக் காட்டி இது தான் என்றார்கள்.                                                   
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ يَضْمَنْ لِى مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ »(بخاري
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” 
நாவின் மூலம் செய்யக் கூடாத தவறுகளில் சில... அவதூறு பேசுவது பெரும்பாவம்
எந்தக் குழந்தையல்லாம் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் பேசியதோ அந்தக் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது பத்தினித் தனமானவர்கள் மீது அவதூறு சுமத்தப் படும்போது அந்த அவதூறை நீக்குவதற்காகவே அக் குழந்தைகள் பேசியுள்ளன.        விபச்சார அவதூறு நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசாக இருந்தால் அவதூறு சொன்னவருக்கு 80 கசையடி 
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا  (4) النور
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلَّا ثَلَاثَةٌ عِيسَى وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ قَالَ لَا إِلَّا مِنْ طِينٍ وَكَانَتْ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ اللَّهُمَّ اجْعَلْ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّ مُرَّ بِأَمَةٍ فَقَالَتْ اللَّهُمَّ لَا تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ وَهَذِهِ الْأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ (بخاري
சுருக்கம்- எப்போதெல்லாம் பத்தினித்தனம் உள்ளவர்களை அவதூறாக சித்தரிக்க மற்றவர்கள் முயற்சி செய்வார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்தஆலா பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைப் பேச வைத்து அவர்களின் பத்தினித்தனத்தைப் பாதுகாத்துள்ளான். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் அன்னை மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள்  அதிசயக் குழந்தையாகப் பெற்றெடுத்த போது அன்னையின் மீது யூதர்கள் அவதூறு சொன்னார்கள்.அப்போது அல்லாஹ் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பேச வைத்து அவர்களின் அன்னை மர்யம் அலைஹஸ்ஸலாம் உத்தமி என்று நிரூபித்தான். அவ்வாறே ஜுரைஜ் என்ற வாலிபர் மீது அநியாயமாக ஒரு பெண் பழி சுமத்தினாள். யாருக்கோ பிறந்த குழந்தையைக் கொண்டு வந்து அது ஜுரைஜுக்கும் தனக்கும் பிறந்ததாக நாடகமாடினாள்.அப்போது அல்லாஹ் அந்தக் குழந்தையை அதாவது பிறந்து சில நாட்களே ஆன அந்தக் குழந்தையைப் பேச வைத்து அவர் உத்தமர் என்று நிரூபித்தான்.அவ்வாறே பனீ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு இளம்பெண் மீது அவதூறு சுமத்தி அவள் விபச்சாரம் செய்ததாகவும் திருடியதாகவும் அவதூறு சுமத்தி இழுத்துக் கொண்டு சென்ற போது செல்லும் வழியில் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் இந்தப் பெண் மாதிரி எனது குழந்தை ஆகி விடக் கூடாது என்று துஆ செய்யும்போது அந்தக் குழந்தை இது மாதிரி என்னை ஆக்கு என துஆச் செய்தது.  பிறந்து சில நாட்களே ஆன அந்தக் குழந்தை பேசியதைக் கண்டு தாய் ஆச்சரியம் அடைந்தார். 
 எனக்கு எதிராக ஏன் நீ துஆச் செய்தாய் என்று குழந்தையிடம் தாயார் கேட்கும்போது அப் பெண்ணின் மீது அவதூறு சுமத்தி  இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி இருக்கும் என்பதால் அவ்வாறு துஆச் செய்தேன் அக் குழந்தை பேசியது. இச்சம்பவம் புகாரியில் விரிவாக உள்ளது. இதனால் நமக்குப் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் பத்தினித்தனமானவர்களைப் பாதுகாப்பதற்கு பிறந்த குழந்தைகளையும் பேச வைத்துள்ளான். 
யூசுஃப் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மீது அவதூறு சுமத்தப்பட்ட போதும் தொட்டில் குழந்தை பேசியது
قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) يوسف عَنِ ابْنِ عَبَّاسٍ، رضي الله عنه " " وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا " ، قَالَ: صَبِيُّ فِي الْمَهْدِ"، وَرُوِيَ عَنِ الْحَسَنِ، وَسَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَالضَّحَّاكِ رضي الله عنهم نَحْوَ ذَلِكَ.(تفسير ابن ابي حاتم
ஆயிஷா ரழி அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட போது அல்லாஹ் கண்டித்து ஆயத்தை இறக்கினான். பார்க்க சூரா நூர்
ஒருவர் மீது இல்லாத அபாண்டத்தை சுமத்துவது உலகத்திலேயே தண்டனையைப் பெற்றுத் தரும் 
 عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَزَلَهُ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لَا يُحْسِنُ يُصَلِّي فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ يَا أَبَا إِسْحَاقَ إِنَّ هَؤُلَاءِ يَزْعُمُونَ أَنَّكَ لَا تُحْسِنُ تُصَلِّي قَالَ أَبُو إِسْحَاقَ أَمَّا أَنَا وَاللَّهِ فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْرِمُ عَنْهَا أُصَلِّي صَلَاةَ الْعِشَاءِ فَأَرْكُدُ فِي الْأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الْأُخْرَيَيْنِ قَالَ ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ فَأَرْسَلَ مَعَهُ رَجُلًا أَوْ رِجَالًا إِلَى الْكُوفَةِ فَسَأَلَ عَنْهُ أَهْلَ الْكُوفَةِ وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلَّا سَأَلَ عَنْهُ وَيُثْنُونَ مَعْرُوفًا حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قَالَ أَمَّا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْدًا كَانَ لَا يَسِيرُ بِالسَّرِيَّةِ وَلَا يَقْسِمُ بِالسَّوِيَّةِ وَلَا يَعْدِلُ فِي الْقَضِيَّةِ قَالَ سَعْدٌ أَمَا وَاللَّهِ لَأَدْعُوَنَّ بِثَلَاثٍ اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ وَأَطِلْ فَقْرَهُ وَعَرِّضْهُ بِالْفِتَنِ وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ قَالَ عَبْدُ الْمَلِكِ فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنْ الْكِبَرِ وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ  (بخاري)
  (கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃது (ரலி) அவர்களை (மதீனாவுக்கு) வரவழைத்து ‘அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என கூஃபாவாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்’ என்று பதிலளித்தார்கள். ‘உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே’ என்று உமர்(ரலி) கூறினார். அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். ‘பனூஅபஸ்’ கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, ‘நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையில் உள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை’ என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்’ என்று கூறிவிட்டு, ‘இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளையும் அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.  பிற்காலத்தில் அவர் அவ்வாறே ஆகி விட்டார். அம்மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால், ‘சோதனைக்கு ஆளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது’ எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் ‘அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். ஆதாரம்; புகாரி 755  ஸஃது இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களால் சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட சிறந்த நல்லடியார். அப்படிப்பட்ட ஸஃது[ரலி] அவர்கள் மீது அபாண்டமாக பொய்யுரைத்ததன் விளைவாக தனக்குத்தானே சோதனையை தேடிக்கொண்ட உஸாமா இப்னு கதாதா என்பவரின் நிலையை பார்த்து, உத்தம சஹாபாக்களை சாதாரணமாக பேசுபவர்களும், அவர்கள் மீது பொய்யுரைப்பவர்களும் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். மேலும் சஹாபாக்கள் மட்டுமன்றி, எந்த தனி நபரின் மீதும் அபாண்டமான புகார்களை கூறுவதிலிருந்தும் நாம் விலகி நடக்க முன்வரவேண்டும்.
நாவின் தீமைகளில் அடுத்தது இரட்டை நாவு அதாவது ஆளுக்குத் தகுந்த நடிப்பது  அறவே கூடாது.
عن عمار بن ياسر، عن النبي صلى الله عليه وسلم قال: "من كان ذا وجهين في الدنيا كان له لسانان من نار يوم القيامة" (دارمي
இங்கே ஒரு பேச்சு அங்கே ஒரு பேச்சு என இரட்டை நாவு கூடாது. மறுமை நாளில் மனிதர்களில் மிகக் கெட்டவர்கள் இரட்டை நாவு கொண்டவர்கள்.இவர்களுக்கு நெருப்பாலான நாவு தரப்பட்டு தண்டிக்கப்படும்.
وعن  المقداد بن الأسود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا رأيتم المداحين فاحثوا في وجوههم التراب  (مسلم
கருத்து- ஒருவரை முன்னால் வைத்துக் கொண்டு அவரிடம் நற்பெயர் பெற வேண்டும் என்பதற்காக முகத்துக்கு முன்னால் புகழ்பவரைக் கண்டால் அவரது முகத்தில் மண்ணை வாரித் தூற்றுங்கள் 
كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)
     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது
புறம்பேசுதல், கோள் சொல்லுதல், சந்தேகப் படுதல் ஆகியவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட செயலாகும்:-
وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12)
புறம் பேசியவருக்கு இந்த உலகில் கிடைக்கும் தண்டனைகள்: 
عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلْ الْإِيمَانُ قَلْبَهُ لَا تَغْتَابُوا الْمُسْلِمِينَ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعُ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعْ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ(ابوداود) 
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்”                       
புறம் பேசியவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: 
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)
 “மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.”அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
புறம் பேசியவர் தன் நற்செயல்களின் நன்மையை யாரைப்பற்றி புறம் பேசினாரோ அவருக்கு தந்து விடுகிறார் 
அதனால் தான் தன்னைப் பற்றிப் புறம் பேசியவருக்கு ஹஸன் பஸரீ ரஹ் சன்மானம் கொடுத்தனுப்பினார்கள் அவர் திகைத்த போது சொன்னார்கள் நீங்கள் என்னைப் பற்றி புறம் பேசி உங்களின் நன்மைகளை எனக்குத் தந்து விட்டீர்கள் உங்களுக்கு நான் சன்மானம் தரக்கூடாதா என்றார்கள்.                                                                    
   عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)
  புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். நூல்: முஸ்லிம்)                                            
புறம் பேசியதற்கான பரிகாரங்களில் ஒன்று
قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول : اللهم اغفر لنا وله " . رواه البيهقي
நீ யாரைப் பற்றி புறம் பேசினாயோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று அல்லாஹ்விடம் நீ மன்னிப்புக் கேட்பது  அவரைப் பற்றி நீ புறம் பேசியதற்கான பரிகாரமாகும்
நமக்கு முன்னால் மற்றவரைப் பற்றி புறம் பேசப்படும்போது நம்மால் முடிந்தால் தடுக்க வேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டும் அகல வேண்டும். மேலும் நாம் அமர்ந்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.                        
عن أبي  الدرداء قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " ما من مسلم يرد عن عرض أخيه إلا كان حقا على الله أن يرد عنه نار جهنم يوم القيامة " . ثم تلا هذه الآية : ( وكان حقا علينا نصر المؤمنين ) رواه في " شرح السنة "  مشكاة
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
யாரையும் எதையும் சபிக்கக் கூடாது. குறிப்பாக நம் பிள்ளைகளை...
  அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்த த் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது. தாயின் சாபம் என்பது பிள்ளை விஷயத்தில் உடனே பலிக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
உன் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று ஒரு முஸ்லிமை நோக்கி கூறியவரின் கதி....
وعن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما " . متفق عليه
عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ فَقَبَضَ أَرْوَاحَهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلْآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ (ابوداود) بَاب فِي النَّهْيِ عَنْ الْبَغْيِ-كِتَاب الْأَدَبِ
பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவர் வணக்கசாலி. மற்றொருவர் பாவி. அவரை பாவம் செய்யும் நிலையில் இந்த வணக்கசாலி பார்க்கும்போதல்லாம் உன்பாவத்தைக் குறைத்துக் கொள் என புத்திமதி கூறுவார். ஒருமுறை ஒரு பாவத்தைச் செய்பவராக அவரைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் உன்னை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான் என சொல்லிவிட்டார். இதன்பின்பு அவ்விருவரும் இறந்த பின்பு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த வணக்கசாலியிடம் அல்லாஹ் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று நீ எப்படி கூற முடியும் என எச்சரித்த பின்பு அந்தப் பாவியிடம் உன்னை நான் மன்னித்து விட்டேன். என் அருளால் நீ சுவனம் செல் என்பான். ஆனால் அந்த வணக்கசாலி அல்லாஹ்வின் சிறப்புத் தன்மையாகிய மன்னித்தல் என்ற சிஃபத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும்படி மலக்குகளிடம் கூறுவான். இதை அறிவிக்கும் அபூஹுரைரா ரழி அவர்கள் கூறும்போது இவரின் ஒரு வார்த்தை அவருடைய இம்மை மறுமை அனைத்தயும் வீணாக்கி விட்டது என்றார்கள். நூல் அபூதாவூத்   
وعن ابن عباس أن رجلا نازعته الريح رداءه فلعنها . فقال رسول الله صلى الله عليه وسلم : " لا تلعنها فإنها مأمورة وإنه من لعن شيئا ليس له بأهل رجعت اللعنة عليه " . رواه الترمذي وأبو داود
பொய் பேசுவது பாவம்
(عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ (بخاري)
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلَاةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ مَنْ رَأَى مِنْكُمْ اللَّيْلَةَ رُؤْيَا قَالَ فَإِنْ رَأَى أَحَدٌ قَصَّهَا فَيَقُولُ مَا شَاءَ اللَّهُ فَسَأَلَنَا يَوْمًا فَقَالَ هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ رُؤْيَا قُلْنَا لَا قَالَ لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخَذَا بِيَدِي فَأَخْرَجَانِي إِلَى الْأَرْضِ الْمُقَدَّسَةِ فَإِذَا رَجُلٌ جَالِسٌ وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ كَلُّوبٌ مِنْ حَدِيدٍ قَالَ بَعْضُ أَصْحَابِنَا عَنْ مُوسَى إِنَّهُ يُدْخِلُ ذَلِكَ الْكَلُّوبَ فِي شِدْقِهِ حَتَّى يَبْلُغَ قَفَاهُ ثُمَّ يَفْعَلُ بِشِدْقِهِ الْآخَرِ مِثْلَ ذَلِكَ وَيَلْتَئِمُ شِدْقُهُ هَذَا فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ قُلْتُ مَا هَذَا.... أَمَّا الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ فَكَذَّابٌ يُحَدِّثُ بِالْكَذْبَةِ فَتُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الْآفَاقَ فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (بخاري
நபி ஸல் அவர்கள் சில சமயங்களில் தொழுது முடித்தவுடன் எங்களை நோக்கி அமர்ந்து உங்களில் யாரேனும் கனவு கண்டீர்களா என்று கேட்டு விட்டு, யாரேனும் தாங்கள் கண்டதாக கூறினால் அதற்கு விளக்கம் கூறுவார்கள். ஒருநாள் வழக்கம் போல் அவ்வாறு கேட்டபோது யாரும் எதுவும் கூறவில்லை. பிறகு நபி ஸல் அவர்கள் நான் கனவு கண்டேன். என்னை இருவர் என் கையைப் பிடித்துக் கொண்டு பரிசுத்தமாக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். மற்றொருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இரும்பாலான கூர்மையான ஒரு கொக்கி இருந்தது. அதைக் கொண்டு அங்கு உட்கார்ந்திருப்பவரின் வாயில் சொருக, அது அவருடைய வாயின் ஒரு பகுதி வழியாகச் சென்று வெளியே வருகிறது. (வாயெல்லாம் இரத்தமாக ஆகி விடுகிறது.) பிறகு வாயின் மற்றொரு பகுதி வழியாக கொக்கியை சொருகி எடுக்கிறார். இதற்குள் முன்பு சொருகி எடுத்த அந்த இடம் சரியாகி விடுகிறது. மீண்டும் அந்த இடத்திலேயே மறுபடியும் அவ்வாறு செய்யப்படுகிறது. இவர் யார் ஏன் இவருக்கு இந்த வேதனை என்று நான் கேட்க, இவர் உலகில் இருக்கும்போது ஒரு பொய்யான செய்தியைப் பரப்புவார். அது உலகம் முழுக்கப் பரவும். அதற்குத் தான் இந்த தண்டனை என்று கூறப்பட்டது. இன்று வலைதளங்கள் மூலமாக பொய்யான செய்திகளைப் பரப்புவோர் மற்றும் முஸ்லிம்களைப் பொய்யான வரலாறுகளை எழுதுவோர் ஆகியோருக்கு இது பொருந்தும்.                     
நன்மைக்காக அதாவது இரண்டு பேரை சேர்த்து வைப்பதற்காக பொய் சொல்பவர் பொய்யர் அல்ல.
وعن أم كلثوم رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " ليس الكذاب الذي يصلح بين الناس ويقول خيرا وينمي خيرا " . متفق عليه

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...