28-09-2026
ரபீஉல் அவ்வல் - 14
بسم الله الرحمن الرحيم
(اُمَّتِي.. اُمَّتِي ) உம்மத்தீ... உம்மத்தீ...
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
வாழ்க்கை முழுவதும் சுயநலவாதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் உத்தம நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்க்கை முழுவதும் இந்த உம்மத்திற்காகவே வாழ்ந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சிந்தித்துப் பார்த்தாலும் அதிலும் உம்மத்தின் நலன் மீது அக்கறை கொண்ட செயலாக அமைந்திருக்கும். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் பல மனைவி களை திருமணம் செய்தது ஏன் என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு திருமணத்தையும் இந்த உம்மத்தின் நலன் கருதியே செய்தார்கள் என்பது தெரிய வரும். அபூசுஃப்யான் அவர்களின் மகளான உம்மு ஹபீபா ரழிஅவர்களைத் திருமணம் செய்ததால் அபூசுஃப்யான் மட்டுமன்றி பலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அது காரணமாக அமைந்தது. வயதில் மூத்தவரான கதீஜா ரழி அவர்களை நபி ஸல் திருமணம் செய்ததும் இந்த உம்மத்தின் மீது கொண்ட அக்கறை தான் காரணம். கதீஜா ரழி அவர்களின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் நபிகளாருக்கு பக்க பலமாக இருந்திருக்க முடியாது.
ஆயிஷா ரழி அவர்கள் மூலம் நபி ஸல் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தகுதி
ஆயிஷா ரழி அவர்களிடம் இல்லை என்பதல்ல. மாறாக கல்விக்காக மட்டுமே அல்லாஹ் ஜோடி சேர்த்து வைத்தான்.
عن عائشة رض قالت : وددت أني كنت ثكلت عشرة مثل الحارث بن هشام و أني لم أسر مسيري مع ابن الزبير [ مستدرك الحاكم ] وفي رواية لو لم اسر مسيري ذلك لكان احب الي من ان يكون لي ستة عشر ذكرا من رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (كتاب : الحسن والحسين –لمحمد رضا)
அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாம் ரழி அவர்கள் சிறு வயதில் இருந்தே மதீனாவில் பிரபலமான ஃபகீஹ். சிறந்த பிள்ளைக்கு அவரை உதாரணம் காட்டுவார்கள். நபி ஸல் அவர்களின் வஃபாத்தின் போது அவருக்கு பத்து வயது. அவரைக் குறித்து ஆயிஷா ரழி அவர்கள் கூறும்போது நபி ஸல் அவர்களிடமிருந்து கல்வியை அதிகமாகப் பெறுவது என்ற என்னுடைய வழியில் மற்றும் இப்னு ஜுபைருடைய வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் நபி ஸல் அவர்கள் மூலம் அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாமைப் போல 10 ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருப்பேன். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல. என்றார்கள்.
இதுமாதிரி ஒவ்வொரு தனிப்பட்ட செயலும் கூட உம்மத்தின் நலனுக்காக வேண்டியே அமைந்தது.
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்க்கையில் தனக்காக அழுததை விட தன் உம்மத்துக்காக அழுத தருணங்கள் அதிகம்.
பத்ருப் போரில் இரவெல்லாம் கண் விழித்து அழுது துஆச் செய்தார்கள்.
பத்ருப் போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள். யாஹய்யு யா கய்யூம் என்பது அந்த நேரத்தில் அவர்களின் பிரதான திக்ராக இருந்த து.
وروى النسائي والحاكم من حديث علي قال: "قاتلت يوم بدر شيئا من قتال، ثم جئت فإذا رسول الله صلى الله عليه وسلم يقول في سجوده: يا حي يا قيوم ، فرجعت فقاتلت، ثم جئت فوجدته كذلك". (فتح الباري
وعن ابن عباس ( - رضي الله عنهما - ) أن النبي صلى الله عليه وسلم - قال وهو في قُبَّةٍ له يوم بدر : " أَنْشُدُكَ عَهْدَك ووَعْدَكَ , اللَّهمَّ إنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ اليَوْم أبداً ". فأخذ أبو بكر بيده وقال : حَسْبُك يا رسول الله قد أَلْحَحْتَ عَلَى رَبِّك وهو في الدِّرع فخرج وهو يقول : سَيُهْزَمُ الجَمْعُ وَيولُّونَ الدُّبُرَ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ (تفسير ابن كثير
عن حارثة بن مضرب ، أن عليا رضي الله عنه قال : « لقد رأيتنا ليلة بدر وما منا أحد إلا وهو نائم إلا رسول الله صلى الله عليه وسلم فإنه يصلي إلى شجرة ويدعو حتى أصبح (دلائل النبوة للبيهقي
சுருக்கம்- பத்ருப் போரில் நபி ஸல் அவர்கள் இரவெல்லாம் அழுது துஆச் செய்தார்கள். யாஅல்லாஹ் நாளை நடைபெறும் போரில் நீ எங்களுக்கு வெற்றியைத் தரா விட்டால் அதற்குப் பிறகு உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அழுது துஆ செய்தார்கள். அருகில் இருந்த அபூபக்கர் ரழி அவர்கள் நபிகளாரின் கரங்களைப் பிடித்தவர்களாக நீங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கெஞ்சி விட்டீர்கள் போதும் யாரஸூல ல்லாஹ் என்று கூறும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் அழுகை இருந்தது. மற்றொரு மற்ற அனைவரும் தூங்கினாலும் நபி ஸல் அவர்கள் மட்டும் விடிய விடிய தூங்காமல் தொழுது அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த உம்மத்தின் நிலையை நினைத்து நபி (ஸல்) அவர்கள் அழுத மற்றொரு தருணம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ نَعَمْ فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى أَتَيْتُ إِلَى هَذِهِ الْآيَةِ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا} قَالَ حَسْبُكَ الْآنَ فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ (بخاري) أي تجري دموعهما رحمة لأمته فإن الشاهد لا يكتم شيئاً، فإذا كلف الشهادة عليهم وهو لا يحبّ لهم إلا الكمال، ومن لازم الشهادة أن يذكر ما فعلوه من النقائص خشي عليهم أن يحلّ بهم العذاب بسبب شهادته، فرق قلبه خوفاً وحزناً عليهم حتى جرت دموعه شفقة عليهم (دليل الفالحين لطرق رياض الصالحين
இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் என்னிடம் நபி ஸல் அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டும்படி கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே தங்கள் மீது தான் குர்ஆன் இறக்கப்படுகிறது. அவ்வாறிருக்க நான் தங்களுக்கு ஓதிக் காட்டுவதா என்று கூற, ஆம் ஓதுங்கள் என்று கூற, நான் நிஸா சூராவை ஓத ஆரம்பித்தேன். மேற்படி வசனம் வந்தவுடன் போதும் என்றார்கள். நான் நிமிரிந்து நபி ஸல் அவர்களைப் பார்த்த போது அவர்களின் காண்கள் இரண்டும் அழுது கொண்டிருந்தன.
விளக்கம்- மறுமை நாளில் ஒவ்வொரு நபிமார்களையும் அவர்களுடைய உம்மத்துமார்களில் மாறு செய்தவர்களுக்கு சாட்சி சொல்ல அழைக்கப்படும் போது இந்த உம்மத்துக்கு சாட்சியாக நான் அழைக்கப்பட்டு இந்த உம்மத்தில் மாறு செய்தவர்களின் விஷயத்தில் நான் சாட்சி சொல்ல வேண்டியதிருக்குமே என்று நினைத்து அழுதார்கள்.
இந்த உம்மத்தின் மீது நபி ஸல் அவர்களின் பாசத்திற்கு மற்றொரு உதாரணம்
ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில் நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில் நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர் மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி விட்டார். அங்கேயும் நேரடியாக நபி ஸல் அவர்கள் கூறவில்லை. காரணம் இந்த உம்மத்தின் மீதான கருணையாகும்.
அல்லாஹ்வே ஆறுதல் கூறும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் உள்ளத்தில் உம்மத்தின் கவலை இருந்தது
தமக்குப் பின் தன் உம்மத் மதம் மாறி விடக்கூடாது. தம் அவர்களில் ஒருவர் கூட நரகம் செல்லக்கூடாது என்ற கவலை பிற நபிமார்களை விட நபி ஸல் அவர்களுக்கு அதிகம். அதனால் அல்லாஹ்வே அவர்களுக்கு பல தடவை ஆறுதல் கூறினான்.
تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ (3) إِنْ نَشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ (4الشعراء)
பொருள்-இவர்கள் ஈமான் கொள்ளவில்லை என்ற கவலையால் உங்களின் உயிரையே மாய்த்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே !
எனக்குப் பின் நீங்கள் மதம் மாறி விடக்கூடாது என்று தம் இறுதிப் பேருரையில் கவலையுடன் உபதேசித்த நபி ஸல் அவர்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ قَالَ فَأَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فَأَعَادَهَا مِرَارًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ فَلْيُبْلِغْ الشَّاهِدُ الْغَائِبَ لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ (بخاري) باب الْخُطْبَةِ أَيَّامَ مِنًى -كتاب الحج
உமர் ரழி கூறியதையும் புறக்கணித்து முனாஃபிக்கின் தலைவனுக்கு நபி ஸல் அவர்கள் தொழ வைத்தது எப்படியேனும் இந்த உம்மத்தில் ஒருவரை நரகத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா ? என்ற கவலையினால் தான்
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً (80التوبة) وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ قَالَ إِنَّهُ مُنَافِقٌ قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ(84التوبة) (بخاري) باب قَوْلِهِ ( اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ-كتاب التفسير
நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
இந்த உம்மத்தில் அதிகமானவர்கள் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நபி ஸல் அவர்களுக்கு எந்த அளவுக்கு இருந்தது
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَلِكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ (بخاري) باب كَيْفَ الْحَشْرُ – كتاب الرقاق
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்த போது எங்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனவாதிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இந்த உம்மத்தாகிய நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா? என்று கேட்டார்கள். ஆம் என்று நாங்கள் கூறிய போது மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனவாதிகளில் மூன்றில் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்றோம் பிறகு மீண்டும் சொர்க்கவாதிகளில் பாதிப் பேர் அளவுக்கு நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா? என்று கூறிவிட்டு என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொர்க்கவாதிகளில் பாதி அளவுக்கு இந்த உம்மத்தினர் இருக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். மேலும் கூறினார்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் கவனித்து இணைவைப்பவர்கள் அனைவரையும் கவனித்து நீங்கள் கருப்பு மாட்டின் உடம்பில் இருக்கக்கூடிய சிறிய வெண்மையைப் போலத்தான் அல்லது சிவப்பு மாட்டில் உடம்பில் இருக்கக்கூடிய கருப்பு முடியை அளவுக்கு தான்.
மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர் என்ற சதவீத த்தில் பாவிகள் பிரிக்கப்படுவார்கள்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ تَعَالَى يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ فَيَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَعِنْدَهُ يَشِيبُ الصَّغِيرُ {وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ} قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَأَيُّنَا ذَلِكَ الْوَاحِدُ قَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْكُمْ رَجُلًا وَمِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا (بخاري
சுருக்கம்- மஹ்ஷர் நாளில் அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி நரகம் செல்லும் கூட்டத்தை தனியாக பிரித்து நிற்க வையுங்கள் என்பான். அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்த சதவீதம் அடிப்படையில் நான் பிரிக்கட்டும் என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் மட்டும் சுவனம். மீதி 999 பேர் நரகம் என்று கூறுவான். இந்த ஹதீஸை நபி ஸல் அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஆயிரம் பேரில் ஒருவர் என்று கூறினீர்களே அப்படியானால் எங்களில் ஒருவர் மட்டும் தான் சுவனம் செல்வாரா என்று கவலையுடன் கேட்ட போது நபி ஸல் அவர்கள் கவலைப் படாதீர்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தையும் சேர்த்துத் தான் அந்தக் கணக்கு என்றார்கள்.
அதாவது கடைசி காலத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் இதுவரை வாழ்ந்த சாதாரண மனிதர்களின் எண்ணிக்கையை விட பெரும் எண்ணிக்கையில் வெளிப்படுவார்கள். அவர்கள் அத்தனை பேரும் நரகவாதிகள் தான். எனவே அவர்களையும் சேர்த்துத் தான் இந்தக் கணக்கு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்த உம்மத்தின் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை எப்படியேனும் நரகத்தை விட்டும் காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடிய சம்பவம்
عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ نُرِيدُ الْمَدِينَةَ فَلَمَّا كُنَّا قَرِيبًا مِنْ عَزْوَرَا نَزَلَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا ذَكَرَهُ أَحْمَدُ ثَلَاثًا قَالَ إِنِّي سَأَلْتُ رَبِّي وَشَفَعْتُ لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا شُكْرًا لِرَبِّي ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي الثُّلُثَ الْآخِرَ فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي (أبوداود) بَاب فِي سُجُودِ الشُّكْرِ- كِتَاب الْجِهَادِ قَالَ التُّورْبَشْتِيُّ: أَيْ فَأَعْطَانِيهِمْ فَلَا يَجِب عَلَيْهِمْ الْخُلُود وَتَنَالهُمْ شَفَاعَتِي فَلَا يَكُونُونَ كَالْأُمَمِ السَّالِفَة (عون المعبود)
மக்காவிலிருந்து மதினாவுக்கு புறப்பட்டோம் நாங்கள் அஜ்வரா என்ற இடத்தை அடைந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கி தொழுதார்கள். பிறகு அல்லாஹ்விடம் நீண்ட நேரம் துஆச் செய்தார்கள். பின்பு சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தார்கள் பிறகு மீண்டும் எழுந்து மீண்டும் துஆ செய்தார்கள் பிறகு மீண்டும் சஜ்தா செய்தார்கள் இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு எங்களிடம் கூறினார்கள் என்னுடைய ரப்பிடம் நான் கோரிக்கை வைத்தேன்.
என்னுடைய உம்மத்துமார்களை சொர்க்கம் அழைத்துச் செல்வதற்கு நான் கோரிக்கை வைத்தேன். அல்லாஹுத்தஆலா என்னுடைய முதல் சஜ்தா மூலம் என்னுடைய உம்மத்தில் மூன்றில் ஒரு பகுதியினரை சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் எனக்கு அனுமதி வழங்கினான் அதற்காக நான் நன்றி செலுத்துவதற்காக ஸஜ்தா செய்தேன் பிறகு மீண்டும் அல்லாஹ்விடம் இன்னும் அதிகமாக கோரிக்கை வைத்தேன். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினரையும் சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் அனுமதி தந்தான். நன்றி செலுத்துவதற்காக நான் சஜ்தா செய்துவிட்டு மறுபடியும் அல்லாஹ்விடம் கேட்டேன் இறுதியாக மூன்றாவது பகுதியினரையும் சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் எனக்கு அனுமதி வழங்கினான் எனவே மூன்றாவது முறையும் நான் சஜ்தா செய்தேன் என்று கூறினார்கள்.
விளக்கம்- வேறு சில நபி மொழிகள் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை மூலம் பெரும் கூட்டம் சொர்க்கம் சென்றாலும் அல்லா நாடிய சில பேர் நரகத்தில் இருப்பார்கள் என்று வந்துள்ளது இந்த ஹதீஸில் அனைத்து முஸ்லிம்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கம் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கான விளக்கம்- பரிந்துரை மூலமாக பெரும் கூட்டம் பெரும்பாலான கூட்டம் பெரும்பாலான முஸ்லிம்கள் சொர்க்கம் சென்றாலும் எல்லா நாடிய சிலர் நரகத்தில் சிலர் கொஞ்ச காலம் தங்கிய பிறகு சுவனத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் அதுவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பரிந்துரை மூலமாக அமையலாம்.
عن ابي هريرة رض عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (في حديثه الطويل) إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ قَدْ امْتَحَشُوا6 فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ (بخاري)بَاب فَضْلِ السُّجُود
மறுமையில் நபிகளாரின் ஷஃபாஅத்தின் மூலம் பலர் சுவனம் சென்றாலும் அல்லாஹ் நாடிய சிலர் நரகத்தில் இருப்பர். அவர்களில் தொழுகையாளிகளும் அடங்குவர். அவர்களையும் வெளியேற்றும்படி அல்லாஹ் உத்தரவு பிறப்பித்த பின் மலக்குகள் அந்த மனிதர்களை வெளியேற்றுவார்கள். அவர்களின் நெற்றியில் உள்ள சஜ்தா அடையாளத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்வார்கள். அல்லாஹ் அந்த அடையாளத்தை மட்டும் நரக நெருப்புக்கு ஹராமாக்கியிருப்பான். மற்ற பகுதிகளையெல்லாம் நரக நெருப்பு தீண்டி கரிக்கட்டைகளைப் போல் இருக்கும் அவர்களை வேளியேற்றி அவர்களின் மீது சுவனத்தின் ஜீவநதி ஊற்றப்படும்.உடனே அவர்கள் சேற்று மண்ணில் விளையும் செடி போன்று புதிய மனிதர்களாக மாறுவார்கள். அவர்களை சுவனத்தில் நுழைக்கப்படும்
மறுமையில் இந்த உம்மத்துக்காக நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுவதைப் பற்றிய நீண்ட ஹதீஸ்
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مَاجَ النَّاسُ بَعْضُهُمْ فِي بَعْضٍ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِإِبْرَاهِيمَ فَإِنَّهُ خَلِيلُ الرَّحْمَنِ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِمُوسَى فَإِنَّهُ كَلِيمُ اللَّهِ فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِعِيسَى فَإِنَّهُ رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَأْتُونِي فَأَقُولُ أَنَا لَهَا فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي وَيُلْهِمُنِي مَحَامِدَ أَحْمَدُهُ بِهَا لَا تَحْضُرُنِي الْآنَ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ وَأَخِرُّ لَهُ سَاجِدًا فَيَقُولُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ أَوْ خَرْدَلَةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيَقُولُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَى أَدْنَى أَدْنَى مِثْقَالِ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْ النَّارِ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ..(بخاري) باب كَلاَمِ الرَّبِّ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الأَنْبِيَاءِ وَغَيْرِهِمْ -كتاب التوحيد
மற்ற நபிமார்களை விட நபி ஸல் அவர்களுக்கு இந்த உம்மத்தின் மீது அதிகமான கவலை
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا أَوْ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ (بخاري) كتاب الدعوات-عَنْ أَبِي هُرَيْرَةَ رضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا (مسلم) كِتَاب الْإِيمَانِ
விளக்கம்- அல்லாஹ் ஒவ்வொரு நபிமார்களுக்கும் பிரத்தியேகமாக வழங்கிய துஆவை வழங்கினான். அதைக் கொண்டு மிகப் பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அந்த துஆவை மற்ற நபிமார்கள் இந்த உலகிலேயே பயன்படுத்தினர். உதாரணமாக நூஹ் அலை 950 வருடங்கள் பிரச்சாரம் செய்து 80 பேர் தவிர பிறர் நிராகரித்த போது.... 2, மூஸா அலை ஃபிர்அவ்னுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். நபி ஸல் மட்டும் அதை மறுமையில் இந்த உம்மத்தின் நரக விடுதலைக்காக அதை பத்திரப்படுத்தி வைத்தார்கள். தாயிஃபில் கல்லால் அடிக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தவில்லை. மக்காவின் 13 வருட சிரமத்திலும் பயன்படுத்தவில்லை. இவை அனைத்தும் இந்த உம்மத்தின் நலனுக்காக.. இந்த உம்மத்தின் நரக விடுதலைக்காக மட்டுமே மறுமையில் பயன்படுத்துவார்கள்.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَرَجَوْتُ أَنْ تَكُونَ أُمَّتِي فَقِيلَ هَذَا مُوسَى وَقَوْمُهُ ثُمَّ قِيلَ لِي انْظُرْ فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ لِي انْظُرْ هَكَذَا وَهَكَذَا فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَمَعَ هَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ فَتَفَرَّقَ النَّاسُ وَلَمْ يُبَيَّنْ لَهُمْ فَتَذَاكَرَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا أَمَّا نَحْنُ فَوُلِدْنَا فِي الشِّرْكِ وَلَكِنَّا آمَنَّا بِاللَّهِ وَرَسُولِهِ وَلَكِنْ هَؤُلَاءِ هُمْ أَبْنَاؤُنَا فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَتَطَيَّرُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَاشَة (بخاري)
சுருக்கம்- அனைத்து உம்மத்துமார்களும் ஒவ்வொரு உம்மத்தாக அந்தந்த நபியுடன் எனக்கு எடுத்துக் காட்டப் பட்டார்கள். ஒரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் ஒருவர் மட்டும் இருந்தார். அதாவது அந்த நபி காலமெல்லாம் தஃவா செய்தும் ஒருவர் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றார். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் இருவர் மட்டும் இருந்தனர். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் சொற்ப நபர்கள் மட்டும் இருந்தனர். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் யாருமே இல்லை. அதாவது அந்த நபி காலமெல்லாம் தஃவா செய்தும் யாருமே இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்கிடையில் ஒரு பெரிய கூட்டத்தைக் கண்டேன். ஆகாயத்தை நிரப்பும் அளவு அக்கூட்டம் இருந்தது.அது என்னுடைய உம்மத்தை இருப்பதை நான் ஆதரவு வைத்தேன். பிறகு என்னிடம் இந்தக் கூட்டம் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களும் அவர்களின் உம்மத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு அதை விட பெரிய கூட்டத்தைப் பார்த்தேன் ஆகாயத்தின் நாலா புறமும் நிரம்பி வழிந்த அக்கூட்டதைப் பற்றி இவர்கள் தான் உங்களுடைய உம்மத் என என்னிடம் கூறப்பட்டதோடு உங்களுடைய உம்மத்தில் 70,000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது என்ற தகவலை நபி ஸல் அவர்கள் கூறி விட்டுச் சென்று விட்டார்கள். அந்த 70,000 நபர்கள் யாராக இருக்கும் என நபித் தோழர்களிடம் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் நபி ஸல் அவர்கள் திரும்பி வந்து கூறினார்கள். அந்த 70,000 நபர்கள் யாரென்றால் அவர்கள் எந்த காரியத்திலும் அல்லாஹ்வை நம்பி காரியத்தை துவங்குவார்கள். சகுணம் பார்க்க மாட்டார்கள். ஷிர்க்கான வகையில் ஓதிப் பார்க்க மாட்டார்கள். சூடு இட்டுக் கொள்ள மாட்டார்கள் அவர்கள் தான் அந்த நபர்கள் ஆவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக