21-09-2026
ரபீஉல் அவ்வல் - 7
بسم الله الرحمن الرحيم
நபி (ஸல்) அவர்களுடைய பிறப்பின் அதிசயங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
நபி(ஸல்) பிறந்த மாதம் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் ரபீஉல் அவ்வல் என்பது பெரும்பாலானோரின் கூற்று.
عن جابر وابن عباس رضي الله عنهما أنهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات وهذا هو المشهور عند الجمهور والله أعلم(السيرة النبوية - لابن كثير رح)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பு தீய சக்திகளுக்கு பெரும் பேரிடியாக இருந்த து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்
وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى عليه السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)
நான்கு தடவைகள் ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். 1.அவன் சபிக்கப்பட்ட போது 2. அவன் இறக்கப்பட்ட போது 3. நபி ஸல் அவர்கள் பிறந்த போது 4. அல்ஹம்து சூரா இறக்கப்பட்ட போது மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறப்பதற்கு முன்பு ஏழு வானங்கள் வரை சென்று வருவதற்கு சக்தி தரப் பட்டிருந்த ஷைத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பின்பு மூன்றாவது வானத்தைக் கடந்து நான்காவது வானம் வரை மட்டுமே செல்ல அவனால் முடிந்தது. பிறகு நபி ஸல் என்றைக்கு பிறந்தார்களோ அன்று முதல் வானத்திற்கு மேல் செல்ல அவனால் முடியவில்லை. முதல் வானத்தை நெருங்கினாலே தீப்பந்தங்கள் மூலம் எரியப்படும்
நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு இறைச் செய்தி அருளப்பட்டது என்று விடையளித்தார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-
இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். திங்கட்கிழமையில் நபி ஸல் பிறந்தார்கள். திங்கட்கிழமையில் நபியாக ஆக்கப்பட்டார்கள். திங்கட்கிழமையில் தான் வஃபாத்தானார்கள். திங்கட்கிழமையில் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள். திங்கட்கிழமையில் மதீனா வந்தடைந்தார்கள். நபிகளாரின் 35 வது வயதில் குரைஷிகள் கஃபாவை புதுப்பித்துக் கட்டிய போது அனைவரும் திருப்தியடையும் விதமாக தீர்ப்பு வழங்கி ஹஜருல் அஸ்வதை எடுத்து கஃபாவில் பொருத்தியதும் திங்கட்கிழமையில் தான்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (ترمذي
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (திர்மிதீ
பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை
عن ابن عباس رضي الله عنه أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية) عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)
ஆமினா அம்மையார் கூறினார்கள். பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை நான் அனுபவிக்கவில்லை. மேலும் என் வயிற்றிலிருந்து குழந்தை வெளியான போது அத்துடன் ஒரு பிரகாசம் தோன்றியது. அதனால் பூமி முழுவதும் பிரகாசம் அடைந் த து. மேலும் என் குழந்தை தரையின் மீது இரு கைகளையில் ஊன்றிய நிலையில் அதாவது சஜ்தா செய்த நிலையில் பிறந்தார். மேலும் அப்போதே பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து விண்ணை நோக்கி தலையை உயர்த்தினார்.
நபி ஸல் அவர்கள் பிறக்கும்போதே பல சோதனைகளை சந்தித்தார்கள்
தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையை இழந்தார்கள்
عن أيوب بن عبد الرحمن قال: خرج عبد الله بن عبد المطلب إلى الشام إلى غزة في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينة وعبد الله بن عبد المطلب يومئذ مريض فقال أتخلف عند أخوالى بنى عدى بن النجار.فأقام عندهم مريضا شهرا ومضى أصحابه فقدموا مكة فسألهم عبد المطلب عن ابنه عبد الله فقالوا:خلفناه عند أخواله بنى عدى بن النجار وهو مريض فبعث إليه عبد المطلب أكبر ولده الحارث فوجده قد توفى ودفن في دار النابغة فرجع إلى أبيه فأخبره فوجد عليه عبد المطلب وإخوته وأخواته وجدا شديداورسول الله صلى الله عليه وسلم يومئذ حمل ولعبد الله بن عبد المطلب يوم توفى خمس وعشرون سنة(السيرة النبوية - لابن كثير
வியாபார விஷயமாக மற்றவர்களுடன் அப்துல்லாஹ் அவர்கள் ஷாம் சென்ற போது வரும் வழியில் மதீனாவைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டதால் நான் மதீனாவில் என் மாமன்மார்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு வருகிறேன் என்றார் மற்றவர்கள் மக்கா திரும்பினர். அப்துல் முத்த்தலிப் மகனைப் பற்றி விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை கேட்டு அப்துல் முத்தலிப் கவலைப்பட்டு தன் மூத்த மகன் ஹாரிஸை மதீனாவிற்கு அனுப்பினார். அங்கு வந்த பின்பு தான் அப்துல்லாஹ் இறந்த விபரமும் அவரை தாருன் னாபிஙா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்தது அவ்விஷயத்தை கேட்டு அப்துல் முத்தலிப் அவர்களும் மற்றவர்களும் மிகவும் கவலைப்பட்டனர். அந்நேரத்தில் அவரின் வயது 25 மட்டுமே. மேலும் அந்நேரத்தில் நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார்கள்.
படிப்பினை- இன்றைக்கும் பலர் சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலும் பொறுமையிழந்து ஈமானுக்கு மாற்றமான வார்த்தைகளைக் கூற ஆரமபித்து விடுகின்றனர் அத்தகையவர்கள் நபி ஸல் அவர்களின் வாழக்கையை சிந்திக்க வேண்டும். பிறக்கும் முன் தந்தையை இழந்து, பிறந்த பின் ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டனாரையும் எட்டு வயதில் இழந்தார்கள்
பின்பு நபி ஸல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்தனர். மற்ற நான்கு பெண் மக்களில் மூன்று பேர் நபி ஸல் அவர்களின் ஜீவிய காலத்திலேயே இறப்பெய்தினர். ஆக இவ்வளவு சோதனைகள்ஏற்பட்ட்டன. இத்தனைக்கும் அவர்கள் தான் படைப்பினங்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்
இன்று இரவு ஒரு நபி பிறப்பார் என தவ்ராத் வேதத்தைக் கற்ற யூதர் சொன்ன சுபச்செய்தி
عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ ..
فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)
ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள், “மக்காவில் ஒரு யூதர் இருந்தார், பிறந்த இரவில் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, “உங்களில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று குரைஷிக் குடும்பத்தைக் கேட்டார் மக்கள் இல்லை என்றார்கள். அவன் சொன்னான்“நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! இன்று இந்த உம்மத்தின் கடைசி தீர்க்கதரிசி பிறந்து விட்டார். நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.ஓ குரேஷ் பழங்குடியினரே! அவர் உங்களிடமிருந்து வந்தவர்" அவரது தோள்களில் தீர்க்கதரிசன முத்திரை உள்ளது. இந்த விஷயங்கள் பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளுக்குச் சென்று கேளுங்கள்” குரேஷி மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்,விரைவில் அவர்கள் அனைவரும் அப்துல் முத்தலிபுக்கு ஒரு பேரப்பிள்ளையை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் அவரது பிறப்பில் பல இயற்கைக்கு மாறான விஷயங்கள் மற்றும் அதிசயங்கள் நடக்கின்றன என்றும் அறிந்து கொண்டு, அவர்கள் மிக விரைவில் அவரிடம் திரும்பி வந்து,“நீங்கள் சொல்வது சரிதான். அப்துல்முத்தலிபுக்கு ஒரு பேரன் இருக்கிறார்”. என் சொந்தக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் அங்கு சென்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பார்த்தார் அப்போது அக்குழந்தையின் முதுகை நீக்கி காட்டப்பட்ட போது அவர்களின் முத்திரையைச் பார்த்து மயங்கி விழுந்து விட்டார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் காரணம் கேட்க, வருத்தத்துடன் கூறினார்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபித்துவம் பனீ இஸ்ரவேலிலிருந்து போய்விட்டது” ஓ குரேஷ் பழங்குடியினரே! நிச்சயமாக பிற்காலத்தில் இவரின் புகழ் இந்த பூமியின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பரவும்.
என்றுமே தோன்றாத ஒரு நட்சத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பிறந்த தினத்தில் தோன்றிய போது இன்று ஒரு நபி பிறந்துள்ளார் என ஜுபைர் என்ற மாபெரும் யூத அறிஞர் சொன்னார்
قال الزبير بن باطا:قد طلع الكوكب الاحمر الذى لم يطلع إلا لخروج نبى أو ظهوره ولم يبق أحد إلا أحمد وهذا مهاجره.قال أبو سعيد فلما قدم النبي صلى الله عليه وسلم أخبره أبى هذا الخبر فقال رسول الله صلى الله عليه وسلم لو أسلم الزبير لاسلم ذووه من رؤساء اليهود إنما هم له تَبَعٌ (السيرة النبوية - لابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ تَابَعَنِي عَشَرَةٌ مِنْ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلَّا أَسْلَمَ (مسلم)
நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு, அந்த ஆண்டு அரேபியர்கள் மழையின்றி பசி மற்றும் தாகத்தால் கடும் நெருக்கடியில் இருந்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறப்புடன் எல்லாமே மாறியது. மழை பெய்தது. நிலம் பசுமையாகி பயிர்கள் ஆரோக்கியமாக இருந்தன. "அதனால்தான் அந்த ஆண்டு "வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டு" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அதற்கு முன்பு பானோ குரேஷ் நெருக்கடியில் இருந்தார். அப்போது நிலம் பசுமையாக இருந்தது. மரங்கள் பசுமையாக இருந்தன, எங்கும் திருப்தியும் செல்வமும் இருந்தது” (சீரத் ஹல்பியா, 1:47)
நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்
قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك (السيرة النبوية لابن كثير)
மூட நம்பிக்கையை ஆரம்பத்திலேயே உடைத்தெறிந்த நபிகளார் ஸல் அவர்கள்
عن أبى الحكم التنوخى.قال: كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح يكفأن عليه برمة،1 فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة فكفأن عليه برمة، فلما أصبحن أتين فوجدن البرمة قد انفلقت عنه باثنتين ووجدنه مفتوح العينين شاخصا ببصره إلى السماء.فأتاهن عبد المطلب فقلن له: ما رأينا مولودا مثله، وجدناه قد انفلقت عنه البرمة، ووجدناه مفتوحا عينيه شاخصا ببصره إلى السماء.فقال: احفظنه فإنى أرجو أن يكون له شأن، أو أن يصيب خيرا. (السيرة النبوية - لابن كثير
குரைஷிகள் ஒருவருக்கு இரவில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை குரைஷிப் பெண்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அக்குழந்தயின் மீது ஒரு பானையை அதில் காற்றுப் புகும் வகையில் ஓட்டை போட்டு அக்குழந்தை மீது கவிழ்த்து வைத்து விடுவார்கள் காலையில் தான் அதை எடுப்பார்கள். குழந்தை வானம் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் இது போன்று செய்வார்கள் அதேபோன்றே நபி ஸல் பிறந்த போதும் அப்துல் முத்தலிப் அந்தப் பெண்களிடம் குழ்ந்தையை கொடுத்தார் அப்பண்கள் வழமை போலவே செய்தனர் ஆனால் காலையில் வந்து பார்த்த போது அந்தப் பானை இரண்டாக உடைந்து கிடந்ததுடன் அக்குழந்தை வானத்தின் பக்கம் கண்களை செலுத்திக் கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன் ஆச்சரியமடைந்தனர் இதை அப்துல் முத்தலிபிடம் கூறிய போது அவர் மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு சிறந்த எதிர் காலம் உண்டு எனவே இக்குழந்தையை பத்திரமாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا، فلما أكلوا قالوا: يا عبد المطلب، أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه، ما سميته ؟ قال: سميته محمدا.قالوا: فما رغبتَ به عن أسماء أهل بيته ؟ قال: أردتُ أن يحمده الله في السماء وخَلْقُه في الارض.(السيرة النبوية لابن كثير)
பின்பு குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆடு அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார் அப்போது அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதான பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே இந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க முஹம்மத் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாரும் வைக்கவில்லையே என்று கேட்டனர் அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் உலக மக்கள் அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.
பெயர் சூட்டுதல் மற்றும் அகீகா பற்றிய சட்டங்களும் சுன்னத்துகளும்
குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அழகிய பொருள் பொதிந்த பெயரைச் சூட்டவேண்டும்.
عن أبي الدرداء عن النبي صلى الله عليه و سلم قال : ( إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فحسنوا أسمائكم )
(رواه أحمد، أبوداودو،مشكوة ص 408)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா (ரழி) அறிவித்துள்ளார்கள். மறுமை நாளில் உங்களின் தந்தையர் பெயருடன் சேர்த்து நீங்கள் அழைக்கப்படுவீர்கள். எனவே உங்கள் பெயர்களை அழகானதாக சூட்டுங்கள். (அஹ்மத்,அபூதாவூத்,மிஷ்காத், பக். 408)
عنْ سَمُرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى (ابن ماجة)
ஒவ்வொரு குழந்தையும் அதன் அகீகாவைக கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை பிறந்ததும் ஏழாவது நாள் அகீகா செலுத்தப்பட வேண்டும். குழந்தையின் தலை முடி களையப்பட வேண்டும். பெயர் சூட்டப்பட வேண்டும். நூல்: திர்மிதி. குழந்தை பிறந்து இறந்து விட்டாலும், அகீகா கொடுப்பதும் அதற்குப் பெயர் வைப்பதும், விழுகட்டிகளுக்கும் கூட பெயர் வைப்பதும் சுன்னத்தாகும்.
அகீகா:
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِكَبْشَيْنِ كَبْشَيْنِ
விளக்கம்- பிறந்த குழந்தை அதற்குரிய அகீகாவைக் கொண்டு ஈடுவைக்கப்பட்டிருக்கிறது' என்றால் அகீகாவை செலுத்தும் வரை மறுமை நாளில் பெற்றோருக்காக பிள்ளைகள் மன்றாட மாட்டார்கள் (ஷபாஃஅத் செய்யமாட்டார்கள்) என்பது பொருளாகும்' என்று அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் விளக்கம் தருகிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்காக அகீகா கொடுப்பது பெற்றோர்களுக்கு சுன்னத்தாகும். பிள்ளை பிறந்து பருவ வயதை அடையும் வரை இந்த அகீகாவை செலுத்துவது பெற்றோர் மீது சுன்னத்தாகும்.
குழந்தை பிறந்ததும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நிஃமத்தை எடுத்தும் காட்டும் வகையில் ஆடோ, மாடோ, ஒட்டகமோ அறுத்துப்பலியிடுவதற்கு அகீகா என்று பெயர். 'ஆண்குழந்தை பிறந்ததற்காக (குர்பானிக்கு) தரமான இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தை பிறந்ததற்காக ஓர்ஆட்டையும் அறுத்து கொடுக்கவேண்டும்' என அண்ணலார் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி.
நபித்துவத்திற்குப்பின் “அகீகா” தொடர்ந்து நடைமுறையில் இன்று வரை உள்ளது. அதன் இரத்தத்தை குழந்தையின் தலையில் தடவும் சம்பிரதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அகற்றி இஸ்லாமிய நடைமுறையை மட்டும் அறிமுகப்படுத்தினார்கள். மகிழ்ச்சியை இப்படி வெளிப்படுத்துவது தவறல்ல! ஆனால் சடங்கு, சம்பிரதாயங்கள், வீண் செலவுகள் செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பிறந்த குழந்தைக்கு பாங்கு சொல்வதன் நோக்கம்
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தனது பேரர் ஹஸன் (ரழி) பிறந்த போது அவர்களுடைய காதில் பாங்கு சொன்னதைப் பார்த்ததாக அபூராஃபிஃ (ரழி) கூறுகின்றார்கள். (திர்மிதி, அபூதாவூத்)
பைஹகீ என்னும் நூலில் உள்ள அறிவிப்பில் “குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்லப்பட்டால் ஷைத்தானிடமிருந்து குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மனிதனுடைய வாழ்வு பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் உள்ள இடைவெளி அளவுதான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், ஷைத்தானுடைய தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்தான் குழந்தை பிறந்தவுடனேயே அதன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்லப்படவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. பாங்கும் இகாமத்தும் உரத்தகுரலில் சொல்லப்படவேண்டும் என்பதல்ல. மாறாக மெதுவாகவும் சொல்லலாம்.
மேலும், இமாம் (தொழுகை நடத்துபவர்)தான் பாங்கு சொல்ல வேண்டும் என்பது கிடையாது. மாறாக, குழந்தை பிறக்கும் போது அருகில் உள்ள முஃமின்கள் யாராக இருப்பினும் கூறலாம். முஃமினான ஆண்கள் யாருமே இல்லையென்றால் சுத்தமாக உள்ள பெண்கள் கூறினாலும் போதுமாகி விடும். இந்த பாங்கிற்காக காதுகளில் விரல்களை வைத்துத் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்றோ, கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்றோ நிபந்தனைகள் எதுவும் இல்லை. பாங்கின் வாசகத்தில் ஏகத்துவம், நபியின் நுபுவ்வத், தூதுத்துவம் ஆகியவை இருக்கிறது. இதன் கருத்துக்கள் குழந்தையின் மூளையின் பதிந்து அதன் பிரதிபலிப்பு வாழ்வில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகவேதான், குழந்தை பிறந்தவுடன் உலகப்பேச்சுகளைக் கேட்பதற்கு முன்னால் ஏகத்துவம், தூதுத்துவம் பற்றிக் கேட்க வைக்கப்படுகிறது.
முடிந்த வரை 7-ஆம் நாளில் பெயர் சூட்டுதல்.தலைமுடி களைவது. “அகீகா”கொடுப்பது. தலைமுடி எடை அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை தர்மம் செய்வது.கத்னா (சுன்னத்) செய்வது. ஆகியவற்றைச் செய்யவேண்டும்
7-ஆம் நாள் செய்ய முடியா விட்டால்?
“அகீகா”வை 7-ஆம் நாள் கொடுக்கவேண்டும்.அதற்கு முடியா விட்டால் 14-ஆம் நாள் கொடுக்கலாம். அதற்கும் இயலாவிட்டால் 21- ஆம் நாள் கொடுக்கவேண்டும். (நூல் -பைஹகீ, தப்ரானி) அதற்கும் இயலாவிட்டால் எப்போது வசதி ஏற்படுகிறதோ, அப்போது குழந்தை பிறந்த கிழமையிலிருந்து ஏழாவது நாளைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டும். அல்லது அக்குழந்தை பருவ வயதை அடையும் வரை கொடுக்கலாம் என்றும் சில உலமாக்கள் கூறியுள்ளனர். ஆனால், எவ்விதக் காரணமும் இன்றி பிற்படுத்துவது கூடாது என ஃபத்ஹுல் பாரி என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ளது.
ஆடு கொடுக்க இயலாவிட்டால்
“அகீகா”கொடுக்கும் நிய்யத் வைத்து குர்பானியின் காலத்தில் குர்பானிப் பிராணியில் தனக்குத் தேவையான பங்கில் கூட்டு சேர்ந்து கொள்வதும் கூடும்.
முன் வேதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்புகள்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்ராத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் 29- ல் கூறப்பட்டுள்ளது. இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.
وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6
மர்யமின் குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப் பவனாகவும்; எனக்குப் பின் வரவிருக்கும் ”அஹ்மத் ” என்னும் பெயருடைய தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறியதை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக!
1. நபி ஸல் அவர்களின் பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த துஆவின் பலன்
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ(129البقرة)
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன்களாக குர்ஆனில் கூறப்பட்டவர்கள் இரண்டு மகன்கள். 1. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் இவர்கள் அன்னை ஸாரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். 2. இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இவர்கள் அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். இந்த இருவரில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் தான் நிறைய நபிமார்கள் வந்தார்கள். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் வந்த ஒரே நபி நம்முடைய நபி ஸல் அவர்கள் மட்டும் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக