புதன், 21 அக்டோபர், 2026

சமய நல்லிணக்கத்திற்கும் வரையறை உண்டு

 9-10-2026

ரபீஉல் ஆகிர் – 26


சமய நல்லிணக்கத்திற்கும் வரையறை உண்டு 



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


மத நல்லிணக்கத்தைப் பேணுகிறோம் என்ற பெயரில் சில பெயர் தாங்கி முஸ்லிம்கள் முற்றிலுமாக மாற்று மதக் கலாச்சாரத்திற்கே மாறி விடுகின்றனர். ஆயுத பூஜை போன்ற பிற சமய பண்டிகை நேரங்களில் சில முஸ்லிம்கள் தங்களுடைய வாகனங்களுக்கு மாற்றார்களைப் போன்று தனக்குக் கீழ்  வேலை செய்யும் மாற்று மத டிரைவர்களுடன் சேர்ந்து தங்களுடைய வாகனங்களுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கின்றனர். கடந்த காலங்களில் நடந்த வினாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் சிலையை கையில் வைத்துக் கொண்டு சில பெயர் தாங்கி முஸ்லிம்கள் நாங்கள் சமய நல்லிணக்கத்தைப் பேணுகிறோம் என்று பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி மீடியாக்களும் இதைப் பெரிது படுத்தி மாற்றார்களுடன் சேர்ந்து வினாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுபவர்கள் மட்டுமே மத நல்லிணக்கம் பேணுபவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதை விபரிப்பது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமான விஷயமாகும். மத நல்லிணக்கம் மிகவும் தேவை. அதுவும் தற்போது முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரித்துக் காட்டி முஸ்லிம்கள் மீது நல்ல அபிப்ப்பிராயம் கொண்டுள்ள இந்து சகோதரர்களின் மனதையும் மாற்றி வரும் சூழ்நிலையில் மத நல்லிணக்கம் தேவை. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு 

பொதுவான விஷயங்களில் உதவி உபகாரம் போன்றவைகளில் மத நல்லிணக்கம் பேண வேண்டும்

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ  (9)الممتحنة

ஜெரூசலம் வெற்றி கொள்ளபட்ட போதும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் ஆலயங்களும் முழுமையான பாதுகாப்பு உண்டு. என்று எழுதிக் கொடுத்த உமர் ரழி.. அவர்கள் 

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقة ظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهم وطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لا تُسَكَّن كنائسُهم ولا تُهْدَمُ ولا يُنقَضُ منها ولا من صلبانهم ولا شيء من أموالهم ولا يُكْرَهون على دينهم ولا يُضَارّ أحد منهم(دروس التاريخ 

   உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸை வெற்றி கொண்டபோது அங்குள்ள பிற மதத் தலைவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையில் கிறிஸ்தவர்களுக்கு முழுமையான மதச் சுதந்திரம் இங்கு உண்டு எனவும், அவர்களுக்கு விருப்பமான மதக் கோட்பாடுகளை அவர்கள் சுதந்திரமாகப் பின்பற்றலாம் எனவும், அவர்களின் ஆலயங்களுக்கு எந்த இடையூறும் எங்களால் ஏற்படாது எனவும் இரண்டு பத்திரங்கள் எழுதப்பட்டு அதில் ஒன்று முஸ்லிம்களிடமும் இன்னொன்று கிறிஸ்தவ குருமார்களிடமும்  பாதுகாத்து வைக்கப்பட்டன.             

முஸ்லிமுக்கும் யூதனுக்குமான பிரச்சினையில் உண்மை யூதனின் பக்கம் இருந்ததால் அவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்த உமர் ரழி

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رض اخْتَصَمَ إِلَيْهِ مُسْلِمٌ وَيَهُودِيٌّ فَرَأَى عُمَرُ أَنَّ الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ رض بِالدِّرَّةِ(1 (ثُمَّ قَالَ وَمَا يُدْرِيكَ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ إِنَّا نَجِدُ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تَرَكَ الْحَقَّ عَرَجَا وَتَرَكَاهُ   1206مؤطا مالك     

وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟  (دروس التاريخ الاسلامي)

உமர் ரழி அவர்களின் ஆட்சியில் எகிப்தின் ஆளுனராக இருந்த அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மத த்தவரை அடித்து விட்டார். அடி வாங்கிய அவர் நேராக அம்ருப்னுல் ஆஸ் அவர்களிடம் கூற சொல்லாமல் உமர் ரழி அவர்களிடம் வந்து புகார் கூறினார். உடனே உமர் ரழி அந்த மகனையும் அழைத்துக் கொண்டு ஆளுனரையும் உடன் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் ரழி அவர்கள் அடி வாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார். பிறகு ஆளுனரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது ஆளுனரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுனர் அவர்கள் என் மகன் தானே உன்னை அடித்தான் நான் அடிக்கவில்லையே என்று கூற, அவர் சாட்டையைக் கீழே போட்டார். ஆளுனரை அடிக்கவில்லை. பிறகு உமர் ரழி அவர்கள் ஆளுனரையும் அவரது மகனையும் நோக்கி இவர்களின் தாய்மார்கள் இவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என்று கூறி எச்சரித்தார்கள்.                                     

பாதிக்கப்பட்ட மாற்று மதத்தவருக்கு நீதி வழங்குவதில் உமர் ரலி அவர்கள் காட்டிய அவசரம்

لما قارب الخليفة عمر رض بيت المقدس أتاه رجل نصراني (ذمي) وله بستان عنب :وقال له "كرمي هذا تعرضوا له وانا رجل ذمة ,فما كان من عمر الا أن طلب برذونا وركب مسرعا فرأي أبا هريرة يحمل عنبا فقال له وأنت أيضا يا ابا هريرة فقال ياامير المؤمنين أصابتنا مخمصة شديدة فكان أحق من اكلنا من ماله من حاربنا فتركه ثم جاء البستان فوجد الناس فيه فطلب عمر الذمي وقال له "بكم كنت تستغله؟ قال بكذا قال فخل سبيله ودفع له الثمن كما قال وأباحه للعسكر(دروس التاريخ)

உமர் ரழி அவர்களின் படை பைத்துல் முகத்தஸை நெருங்கிய நேரத்தில் ஒரு திம்மீ கிறிஸ்தவரின் தோட்டத்தில் சில முஸ்லிம்கள் பசியின் காரணமாக உள்ளே புகுந்து திராட்சைகளைச் சாப்பிட்டனர். இதுபற்றி அவர் உமர் ரழி அவர்களிடம் புகார் கொடுத்த போது  உடனே உமர் ரழி வேகமாக வர, அபூஹுரைரா ரழி அவர்கள் ஒரு திராட்சைக்குலையை கையில் வைத்திருப்பதைக் கண்டார்கள். கடும் பசியினால் நாங்கள் இப்படிச் செய்தோம் என்று அவர்கள் காரணம் கூற, உடனே உமர் ரழி அந்த திம்மீயிடம் உன் தோட்டத்தில் இவர்கள் பறித்தவற்றின் விலை என்ன என்று கேட்டு அதை தந்தார்கள்.            

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ (الانعام108) حكمها باق في هذه الأمة على كل حال فمتى كان الكافر في منعة وخيف أن يسب الإسلام أو النبي عليه السلام أو الله عز وجل فلا يحل لمسلم أن يسب صلبانهم ولا دينهم ولا كنائسهم ولا يتعرض إلى ما يؤدي إلى ذلك لأنه بمنزلة البعث على المعصية (قرطبي

மராட்டிய மன்னன் சிவாஜியின் மத உணர்வுகளை அவுரங்கசீப் அவர்கள் அரசர் என்ற அடிப்படையில் மதித்து நடந்தது முற்றிலும் அவர்கள் பக்கம் சாய்ந்து விட்டதாக ஆகாது 

இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.                         

இஸ்லாமிய ஆட்சியில் மற்றவர்களுக்கான மத சுதந்திரத்தை வழங்குவது  இணைவைப்புக்குத் துணை போவதாக ஆகாது.



புகாரீ ரஹ் அவர்கள் முஷ்ரிகீன்களிடம் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில்

 மூன்று உதாரணங்களைக் கூறுகிறார்கள்

وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ قَرْيَةً فِيهَا مَلِكٌ أَوْ جَبَّارٌ فَقَالَ أَعْطُوهَا آجَرَ وَأُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ وَقَالَ أَبُو حُمَيْدٍ أَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً بَيْضَاءَ وَكَسَاهُ بُرْدًا وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ (بخاري- بَاب قَبُولِ الْهَدِيَّةِ مِنْ الْمُشْرِكِينَ-

இப்றாஹீம் அலை அவர்களுக்கு ஹாஜரா அலை அவர்களை அன்பளிப்பாகத் தந்த அரசன் 2. கைபர் போரில் நபி ஸல் அவர்களுக்கு யூதப் பெண் விருந்து கொடுத்த போது அதை நபி ஸல் ஏற்றார்கள். 3. அய்லாவின் அரசர் நபி ஸல் அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேரிக் கழுதையை அன்பளிப்புச் செய்தார். நபி ஸல் அவர்கள் அவருக்கு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார்கள் இன்னும் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்ப்பட்டு இருக்கும்படியும் கடிதம் எழுதினார்கள்.  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنْ الْمُلُوكِ أَوْ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ فَقِيلَ دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ قَالَ أُخْتِي ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ لَا تُكَذِّبِي حَدِيثِي فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي وَاللَّهِ إِنْ عَلَى الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ الْأَعْرَجُ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ تُصَلِّي وَتَقُولُ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ فَقَالَ وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً (بخاري

சாரா அம்மையார் பற்றிய சம்பவம் விரிவாக புகாரி ஷரீஃபில் ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும், சாரா அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனது வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம், "இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்; அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினான். அவர்களிடம் சாராவைப் பற்றி, "இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் சகோதரி” என்று பதிலளித்தார்கள். பிறகு சாராவிடம் சென்று, "சாராவே! பூமியின் மேல் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையுடையவர் எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நீ என் சகோதரி என்று நான் அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ என்னைப் பொய்யனாக்கி விடாதே!” என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அவர்கள் அவனிடம் சென்ற போது, அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் தண்டிக்கப்பட்டான். "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப் பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து "நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சாரா அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முடியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப் பெண்ணாக அளித்தான்” என்று கூறினார்கள்.நூல்: புகாரி 3358                     

மாற்றார்களின் பண்டிகை நாட்களில் அவர்களின் அன்பளிப்புகளை வாங்கிய அலீ ரழி

أما قبول الهدية منهم يوم عيدهم فلا حرج فيه؛ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ : أُتِىَ عَلِىٌّ رَضِىَ اللَّهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ : مَا هَذِهِ؟ قَالُوا : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرَوزِ. قَالَ : فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ. (رواه البيهقي في سنن الكبرى

மாற்றார்களின் பண்டிகை அன்று அலீ ரழி அவர்களிடம் அன்பளிப்பு கொண்டு வரப்பட்டது. இது என்ன என்று அலீ ரழி அவர்கள் கேட்க, இன்று எங்களுக்கு பண்டிகை நாள் என்று வந்தவர்கள் கூறியவுடன் அதை ஏற்றார்கள். 

عَنْ قَابُوسَ ، عَنْ أَبِيهِ ؛ أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ : إِنَّ لَنَا أَظْآرًا مِنَ الْمَجُوسِ ، وَإِنَّهُ يَكُونُ لَهُمَ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا ؟ فَقَالَتْ : أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلاَ تَأْكُلُوا ، وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ. (مصنف ابن ابي ٍشيبة)عَنْ أَبِي بَرْزَةَ ؛ أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ ، فَكَانَ يَقُولُ لأَهْلِهِ : مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ. (مصنف ابن ابي ٍشيبة)

ஆயிஷா ரழி அவர்களிடம் ஒரு பெண் வந்து எனக்கு மஜூஸியான பால்குடி உறவினர்கள் உள்ளனர். அவர்களின் பண்டிகை நாளில் அவர்கள் எனக்கு அன்பளிப்புத் தந்தால் வாங்கலாமா என்று கேட்க, அதற்கு ஆயிஷா ரழி அவர்கள் அந்த நாளுக்காக வேண்டி அவர்களே சமைத்திருந்தால் உண்ண வேண்டாம். அவர்களின் மரங்களில் இருந்து பறித்த  பழங்களைத் தந்தால் உண்ணுங்கள் என்றார்கள். அபூ பர்ஜா ரழி அவர்களின் வீட்டில் மஜூஸி அண்டை வீட்டார் குடியிருந்தார்கள். அவர்களின் பண்டிகை நாட்களில் அன்பளிப்புகள் தருவார்கள். அப்போது அந்த சஹாபீ தன் வீட்டாரிடம் ஆயிஷா ரழி கூறியது போன்றே கூறினார்கள்.  (மாற்று மத சகோதரர்கள் அவர்களின் பண்டிகை நாளில் கடைகளில் இருந்து வாங்கி நமக்குத் தந்தால் அது பூஜை செய்யப் படாததாக இருக்கும் என்றால் சாப்பிடலாம் என்பதற்கு இது ஆதாரம்)          عَنِ الْحَسَنِ ، قَالَ : كَانَ يَكْرَهُ أَنْ يَأْكُلَ مِمَّا طَبَخَ الْمَجُوسُ فِي قُدُورِهِمْ ، وَلَمْ يَكُنْ يَرَى بَأْسًا أَنْ يَأْكُلَ مِنْ طَعَامِهِمْ مِمَّا سِوَى ذَلِكَ 

(مصنف ابن ابي ٍشيبة)

அவர்கள் இறைச்சி சமைக்கும் சட்டியில் சமைக்கப்பட்ட உணவுதான் மக்ரூஹ். வேறு உணவுகள் மக்ரூஹ் அல்ல.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَرْضَ الْمُشْرِكِينَ ، فَلاَ نَمْتَنِعُ أَنْ نَأْكُلَ فِي آنِيَتِهِمْ ، وَنَشْرَبَ فِي أَسْقِيَتِهِمْ. 

ஜாபிர் ரழி அவர்கள் கூறினார்கள். நாங்கள் நபி ஸல் அவர்களுடன் இறை மறுப்பாளர்களின் ஊரில் போர் செய்தோம். அப்போது அவர்களின் பாத்திரங்களில் நாங்கள் உண்ணுவதையோ அல்லது நீர் அருந்துவதையோ எங்களுக்கு தடுக்கப்படவில்லை. 

மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டான  முஸ்லிம்கள்

நோபல்பரிசு பெற்ற சமூகசேவகி அன்னைதெரசா அவர்கள் கொல்கத்தாவில் கருணை இல்லம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த இல்லத்தை அன்பளிப்பாக வழங்கியவர் கருணை உள்ளம் படைத்த ஒரு முஸ்லிம் சகோதரரே ஆவார்.

   கப்பலோட்டிய தமிழன் என்னும் மகத்தான சாதனை படைத்த வ.உ.சி அவர்களுக்கு கப்பல் வாங்கித் தந்த வள்ளலும் ஒரு முஸ்லிம் சகோதரரே ஆவார்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவுக்கு பாலூட்டிய செவிலித்தாயும் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார். 

மேலும் பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்து சுமார் நிறையப் பேர் பரிதவித்த சூழ்நிலையில் யூனுஸ் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும்சேர்ந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதில் ஒரு மாற்று மத கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு  பெண் குழந்தை பிறந்த போது அதற்கு யூனுஸ் என்று பெற்றோர் பெயரிட்டனர். பெண் குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கிறீர்களே. அதுவும் நீங்கள் இந்துவாக இருந்து யூனுஸ் என்று  பெயர் வைக்கிறீர்களே என்று கேட்க,  அவர்கள் அந்த யூனுஸ் இல்லையெனாறால் இன்று நாங்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டோம் என்றார்கள்


மேற்காணும் வகையில் சகோதர சமயத்தவர்களுடன் பொதுவான விஷயங்களில் நேசம் பாராட்டுவது நல்லது. ஆனால் அதற்காக அவர்களின் கலாச்சாரமாக நம்முடைய கலாச்சாரம் மாறி விடக்கூடாது.         

மற்றவர்களின் கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும். 

அல்லது வெறுக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.

عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ " إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 ثم قال: كلا، والله لتأمرن بالمعروف، ولتنهون عن المنكر، ولتأخذن على يد الظالم، ولتأطرنه على الحق أطراً، ولتقصرن على الحق قصراً، أو ليضربن الله بقلوب بعضكم على بعضٍ، ثم لَيَلْعَنَنَّكم كما لعنهم رواه أبو داود، 

   பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.    

عن جابر رض  قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ "(بيهقي

முற்காலத்தில் அல்லாஹ் பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.                      

மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பெருமளவில் பின்பற்றும் காலம் வரும் என்பதைப் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ فَقَالَ وَمَنْ النَّاسُ إِلَّا أُولَئِكَ رواه البخاري عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ رواه البخاري

மேற்கத்தியர்கள் உடும்பு பொந்துக்குள் நுழைந்தாலும் நீங்களும் நுழைந்து விடுவீர்கள் என்று கூறியதற்குக் காரணம் உடும்பின் பொந்து என்பது மற்ற பிராணிகளின் வசிப்பிடங்களை விட மிகவும் நாற்றம் உடையதாகவும் இருளானதாகவும் இருக்கும். அதுபோல் மாற்று மதத் தவர்களின் காலாச்சாரங்கள் எவ்வளவு கேவலமானதாக இருந்தாலும் அதை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்பது கருத்தாகும். ஆங்காங்கே கிழிந்து கிடக்கும் ஆடையை ஃபேஷன் என்று கருதுவது போன்று.                                                     

முஷ்ரிகீன்களுடன் ஒப்பாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் கூறப்பட்ட விஷயங்கள் மார்க்கத்தில் ஏராளம் உள்ளன.

عَنْ ابْنِ عُمَرَ  رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ  (البخاري) باب تَقْلِيمِ الأَظْفَارِ-كتاب اللباس

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ (بخاري) باب الْخِضَابِ- كتاب اللباس

சூரிய உதயம்,உச்சம்,அஸ்தம் ஆகிய மூன்றுநேரங்களில் இப்லீஸை சிலர் வணங்குவர் என்பதால் அப்போது தொழக்கூடாது

عن عَبْدَ اللَّهِ بن مسعود رَضِي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عِنِ الصَّلَاةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا (بخاري) عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الشَّمْسَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ أَوْ قَالَ يَطْلُعُ مَعَهَا قَرْنَا الشَّيْطَانِ فَإِذَا ارْتَفَعَتْ فَارَقَهَا فَإِذَا كَانَتْ فِي وَسَطِ السَّمَاءِ قَارَنَهَا فَإِذَا زَالَتْ فَارَقَهَا فَإِذَا دَنَتْ لِلْغُرُوبِ قَارَنَهَا فَإِذَا غَرَبَتْ فَارَقَهَا فَلَا تُصَلُّوا هَذِهِ السَّاعَاتِ الثَّلَاث(ابن ماجة) وزاد البيهقي َ"وحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّار 

குறிப்பிட்ட இடத்தில் பிராணியை அறுப்பதாக நேர்ச்சை செய்திருந்தாலும் அங்கு ஷிர்க் நடைபெறும் என்றிருந்தால் கூடாது

عن ثَابِت بْن الضَّحَّاكِ رضي الله عنه قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ رواه ابوداود

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து நான் புவானா எனும் இடத்தில் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன் அதை அதே இடத்தில் நிறைவேற்றவா என்று கேட்க, அந்த இடத்தில் அறியாமைக் காலத்தின் சிலைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் கூறினார். மீண்டும் அவரிடம் அந்த இடத்தில் ஏதேனும் மாற்றாரின் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்று கேட்க இல்லை என்று அவர் கூறினார்.  அப்போது நபி ஸல் அவர்கள் அப்படியானால் அந்த  நேர்ச்சையை அந்த இடத்தில் நிறைவேற்றுங்கள் என்றார்கள்.                                                          

புது வீடு குடி போகும்போது மாற்றார்களைப் பின்பற்றி முஸ்லிம்களிடமும் பரவியுள்ள மூட நம்பிக்கைகள்.. 

1, வாஸ்து பார்ப்பது 2, இந்துக்களைப்போல் பாலை பொங்க விடுவது 3, திருஷ்டி பொம்மை வைப்பது 4,கட்டிடத் தொழிலாளர்கள் செய்யும் மாற்று மத சடங்குகளை அனுமதிப்பது, 5, பிராணியை அறுத்து அதன் இரத்தத்தை தெளிப்பதும், அதை முச்சந்தியில் வைத்து இரவோடு இரவாக எரிப்பதும் 7, திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது 8,பழங்காலத்தைப்போல் நடு வீட்டுக்குள் விறகு அடுப்பு எரிப்பதை சடங்காக கருதுவது 9, குத்து விளக்கு ஏற்றுவது ஆகிய மூ

வாஸ்து சரியில்லை என்பதற்காக கிராமத்தையே காலி செய்த மக்கள்

ஆந்திர மாநிலம் அனந்த பூர் மாவட்டத்தில் கொண்டி பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 பேர் வசிக்கின்றனர். 50 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் கிழக்கே ஒரு மலை உள்ளதாம். அந்த மலையின் நிழல் இந்த வீடுகளின் மேல் விழுகிறதாம். இது வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லையாம். இதனால் தங்கள் வாழ்க்கை வளமாக இருக்காது என்று கிராம மக்கள் கருதி தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் மனு கொடுக்க அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்பதால் அந்த கிராம மக்கள் அனைவரும் ஊரையே காலி செய்து விட்டுப் போய் விட்டனர்  (தினகரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெண் பிள்ளைகள் மீது கவனம் தேவை

 23-10-2026 ஜமாதுல் அவ்வல்-  11 بسم الله الرحمن الرحيم         பெண் பிள்ளைகள் மீது கவனம் தேவை     https://chennaijamaathululama.blogspot.com...