புதன், 21 அக்டோபர், 2026

நோய்களும் நிவாரணங்களும்

 16-10-2026

ஜுமாதல் ஊலா – 4


நோய்களும்  நிவாரணங்களும்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


நோய்கள் இல்லாத இடம் சுவனம் மட்டுமே. உலகில் நாம் வாழும் போது நோய்கள் வருவதும் நீங்குவதும் இயல்பு. எனவே நோய்கள் வந்தால் சிகிச்சை செய்வது தவறல்ல என்பதைப் பற்றியும் அதே நேரத்தில் பேணுதல் அடிப்படையில் நோயை சகித்துக் கொண்டு அதற்குப் பகரமாக அல்லாஹ்விடம் மகத்தான நற்கூலியைப் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும் பல்வேறு நோய்களுக்கு நபி ஸல் கற்றுத் தந்த மருந்துகளைப் பற்றியும் நோய்களை திட்டக்கூடாது என்பதைப் பற்றியும் நோய்களை நீக்கும் பல்வேறு துஆக்கள் பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.  

நோய்கள் இல்லாத உலகம் என்பது சுவனம் மட்டும் தான்.

لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ (الواقعة)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا (مسلم)

சுவனவாதிகளை நோக்கி ஒரு அழைப்பாளர் அழைப்பு விடுத்து இனி எப்போதும் உங்களுக்கு ஆரோக்கியம் தான். நீங்கள் ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள். நிச்சயமாக இனி எப்போதும் உங்களுக்கு வாழ்வு  தான். நீங்கள் ஒருபோதும் மரணமடைய  மாட்டீர்கள்.  நிச்சயமாக இனி எப்போதும் உங்களுக்கு இளமை  தான். நீங்கள் ஒருபோதும்  முதுமடைய  மாட்டீர்கள். நிச்சயமாக இனி எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சி  தான். நீங்கள் ஒருபோதும் கவலைப்பட  மாட்டீர்கள் என்று கூறுவார்.

நோய்கள் ஏற்படாமல் இருக்க தவக்குல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ « سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ ». ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّانِى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ « فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِى الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ».(ترمذي

துஆக்களில் எது சிறந்தது என ஒருவர் கேட்ட போது ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பது என்றார்கள். அடுத்த நாளும் அதே கேள்வியைக் கேட்ட போது அவ்வாறே பதில் கூறினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே கூறி விட்டு, இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தை அல்லாஹ் உனக்குத் தந்து விட்டால் நீ வெற்றியடைந்து விட்டாய் என்றார்கள்.                               

ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதற்கு பதிலாக நோயை அல்லாஹ்விடம் கேட்டவரை  நபி ஸல் கண்டித்தார்கள்.

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ اللَّهُمَّ { آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ } قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ (مسلم) بَاب كَرَاهَةِ الدُّعَاءِ بِتَعْجِيلِ الْعُقُوبَةِ فِي الدُّنْيَا- كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ

கருத்து-ஒரு முஸ்லிமை நபி ஸல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் ஆரோக்கியத்துடன் இருந்தவர் தான். ஆனால் திடீரென்று ஏற்பட்ட நோயால் உடல் சுருங்கி கோழிக்குஞ்சு போலாகி விட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க க் கூடாத ஏதேனும் கேட்டீர்களா என்றார்கள். அதற்கு அவர் ஆம் நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் மறு உலகில் ஏதேனும் தண்டனை கொடுப்பதாக இருந்தால் அதை இந்த உலகிலேயே தந்து விடு என துஆச் செய்தேன் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் சுப்ஹானல்லாஹ் அவ்வாறு கேட்கலாமா.. அவ்வாறு அல்லாஹ் தந்தால் உங்களால் தாங்க முடியுமா.. நீங்கள் அல்லாஹ்விடம் ரப்பனா ஆதினா... யாஅல்லாஹ் இங்கேயும் நலவைத் தா.. மறுமையிலும் நலவைத் தா.. என்று தான் கேட்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே அவர் கேட்டார். நலம் பெற்றார்.                 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري

இரண்டு நிஃமத்துகளை சரியாக பயன்படுத்துவதில் மக்கள் பொடுபோக்காக உள்ளனர்.1.ஆரோக்கியம். 2.ஓய்வு

عَنْ أَبِي هُرَيْرَةَ،  رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"الْمَعِدَةُ حَوْضُ الْبُدْنِ، وَالْعُرُوقُ إِلَيْهَا وَارِدَةٌ، فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ، وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسَّقَمِ". (: المعجم الكبير للطبراني

கருத்து- இரைப்பை குடல் என்பது ஒரு தடாகம் போன்றதாகும். ஒரு குளத்தில் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வது போன்று உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் நரம்புகள் வழியாக சத்துக்கள் சப்ளை ஆகின்றன. தனக்குத் தேவையான சத்துக்களை இந்த இரைப்பையில் இருந்தே நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. இங்கிருந்து தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எனவே இரைப்பை குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரைப்பை கெட்டுப் போய் விட்டால் உடல் உறுப்புக்கள் கெட்டுப்போய் நோய் ஏற்படும். தப்ரானீ                  

கண்ட உணவுகளை உண்டு தன் ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை இதில் கூறப்பட்டுள்ளது

عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ قَيْسٍ الأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ عَلِىٌّ رضي الله عنه وَعَلِىٌّ نَاقِهٌ وَلَنَا دَوَالِى مُعَلَّقَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم يَأْكُلُ مِنْهَا وَقَامَ عَلِىٌّ لِيَأْكُلَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ لِعَلِىٍّ « مَهْ إِنَّكَ نَاقِهٌ ». حَتَّى كَفَّ عَلِىٌّ رض قَالَتْ وَصَنَعْتُ شَعِيرًا وَسِلْقًا فَجِئْتُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَلِىُّ أَصِبْ مِنْ هَذَا فَهُوَ أَنْفَعُ لَكَ ». (ابوداود

 அலி (ரழி) அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அப்போதுதான் குணமடைந்த நிலையில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது பேரீத்தங்காயின் ஒரு கொப்பு வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நபி (ஸல்) உண்ண ஆரம்பித்த போது அலீ (ரழி) அவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து “உமக்கு இப்போது தான் உடல் நலம் சற்று தேறியுள்ளது. நீங்கள் இதை உண்ண வேண்டாம்” என தடுத்தார்கள். பின்பு உம்முல் முன்திர் (ரழி) அம்மையார் அவர்கள் கீரையையும் கோதுமை உணவையும் கொண்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை நோக்கி“இதை உண்ணுங்கள்”இது உமக்குப் பயனுள்ளது என்றார்கள். 

படிப்பினை- குணமடைந்த நோய் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில உணவுகளை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த பல்வேறு வகையான பழங்களைச் சாப்பிட வேண்டும்.

عن علي رضي الله عنه قال: إذا أكلتم الرمان فكلوه بشحمه، فإنه دباغ المعدة.    (كنز العمال)   

அலீ ரழி கூறினார்கள். மாதுளையை நீங்கள் உண்டால் அதன் உட்புறத் தோலுடன் சேர்த்து உண்ணுங்கள். அது குடலை சுத்தப்படுத்தும்.  

عن مرجانة قالت: رأيت عليا يأكل رمانا فرأيته يتتبع ما يسقط منه ويأكله (كنز العمال)    

அலீரழி அவர்களை மாதுளை உண்பதாக நான் கண்டேன். அப்போது அவர்கள் அதில் ஒன்றைக்கூடவீணாக்காமல் கீழே விழுந்ததையும் எடுத்து சுத்தப்படுத்தி உண்பதை நான் கண்டேன் என மர்ஜானா என்ற பெண் கூறினார்கள்    

பேரிக்காய் இதயத்திற்கு நல்லது

عَنْ طَلْحَةَ رض قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ سَفَرْجَلَةٌ فَقَالَ دُونَكَهَا يَا طَلْحَةُ فَإِنَّهَا تُجِمُّ الْفُؤَادَ (ابن ماجة

தல்ஹா ரழிஅவர்கள் பேரிக்காயை கையில் வைத்திருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களிடம் வந்தபோது நபி ஸல் தல்ஹாவே பேரிக்காயை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் அது இதயத்திற்கு உற்சாகத்தைத் தரும் என்றார்கள்.

பிஞ்சு வெள்ளரிக்காயுடன் பேரீத்தங்காயை சாப்பிட்ட நபி ஸல் அவர்கள் 

عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ (ترمذي

அசைவ உணவுகளையும் அவ்வப்போது உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது

عن عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت: لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه  ابن جرير".

عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)

உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது  என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத் என்று குறிப்பிட்டார்கள். 

 நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆட்டிறைச்சிக்கு ஒவ்வொரு கினாயாவான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.


மருந்து உட்கொள்வது தவக்குலுக்கு மாற்றம் அல்ல 

عَنْ أُسَامَةَ بن شَرِيكٍ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَتَاهُ نَاسٌ مِنَ الأَعْرَابِ فَسَأَلُوهُ ، فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، أَنَتَدَاوَى ؟ قَالَ : نَعَمْ ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلا أَنْزَلَ لَهُ شِفَاءً . (طبراني

சில கிராமவாசிகள் நபி ஸல் அவர்களிடம் வந்து நாங்கள் மருந்து உட்கொள்ளலாமா அது தவக்குலுக்கு மாற்றமாக ஆகுமா என்ற சந்தேகத்தை கேட்ட போது நபி ஸல் அவர்கள் நீங்கள் மருந்து உட்கொள்ளுங்கள். அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்றார்கள்.

عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ ».

மேற்படி ஹதீஸைக் கூறும்போது பின்வரும் ஹதீஸையும் கூறுவது கடமையாகிறது

عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : كَانَ نَبِيّ اللَّه سُلَيْمَان عَلَيْهِ السَّلَام إِذَا صَلَّى رَأَى شَجَرَة نَابِتَة بَيْن يَدَيْهِ فَيَقُول لَهَا مَا اِسْمك ؟ فَتَقُول كَذَا فَيَقُول لِأَيِّ شَيْء أَنْتِ فَإِنْ كَانَتْ تُغْرَس غُرِسَتْ وَإِنْ كَانَتْ لِدَوَاءٍ كُتِبَتْ فَبَيْنَمَا هُوَ يُصَلِّي ذَات يَوْم إِذْ رَأَى شَجَرَة بَيْن يَدَيْهِ فَقَالَ لَهَا مَا اِسْمك ؟ قَالَتْ الْخَرُّوب قَالَ لِأَيِّ شَيْء أَنْتِ ؟ قَالَتْ لِخَرَابِ هَذَا الْبَيْت فَقَالَ سُلَيْمَان عَلَيْهِ السَّلَام اللَّهُمَّ عَمّ عَلَى الْجِنّ مَوْتِي حَتَّى يَعْلَم الْإِنْس أَنَّ الْجِنّ لَا يَعْلَمُونَ الْغَيْب فَنَحَتَهَا عَصًا فَتَوَكَّأَ عَلَيْهَا حَوْلًا مَيِّتًا وَالْجِنّ تَعْمَل فَأَكَلَتْهَا الْأَرَضَة فَتَبَيَّنَتْ الْإِنْس أَنَّ الْجِنّ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْب مَا لَبِثُوا حَوْلًا فِي الْعَذَاب الْمُهِين (تفسير ابن كثير

  நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஒருமுறை மலக்குல் மவ்த் அவர்களிடம் தம் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டபோது நீங்கள் சஜ்தா செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு செடி முளைக்கும். அதில் கடைசியாக ஹர்னூபா என்ற முட்செடி முளைக்கும். அன்று தான் உங்களுடைய மரணம் நிகழும் என்று மலக்குல் மவ்த் கூறினார்கள்.அதன் பின் நபி சுலைமான் அலை எங்கெல்லாம் சஜ்தா செய்தார்களோ அங்கெல்லாம் செடி முளைத்தது. அந்தச் செடியிடம் நபி சுலைமான் அலை பேசுவார்கள். முதலாவதாக விளைந்த செடியிடம் நீ யார்? எனக் கேட்க, நான் இன்ன மருத்துவ குணத்திற்காக உருவாக்கப்பட்டேன் என்று கூறியது. அதை எடுத்து மஸ்ஜிதுக்கு வெளியே தோட்டத்தில் நட்டினார்கள்.இவ்வாறு ஒவ்வொரு சஜ்தா செய்யும் போதும் விளைந்த அந்த செடிகளிடம் அதன் பயன்பாடு பற்றி நபி சுலைமான் (அலை) கேட்கஅந்தந்த செடிகள் தனது பயன்பாட்டைக் கூறும்.அதைசுலைமான்(அலை)தோட்டத்தில் நட்டுவார்கள். இப்படியாக ஒரு மூலிகைத் தோட்டமே உருவானது. கடைசியாக ஒரு இடத்தில் அவர்கள் சஜ்தா செய்த போது அந்த முட்செடி உருவானது. நீ யார்? எனக் கேட்க, நான் பைத்துல் முகத்தஸை சேதப்படுத்தவே விளைந்துள்ளேன். எனக் கூறியது. அதைத் தூக்கி தோட்டத்தில் வீசி எறிந்த சுலைமான் (அலை) தனக்கு மவ்த் நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள்.ஆனாலும்அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! பைத்துல் முகத்தஸ் கட்டி முடிக்கப்படும் வரை எனது மவ்த்தை ஜின்களுக்கு காட்டித் தராதே! என துஆ செய்தார்கள்- நூல் தஃப்ஸீர் இப்னு கஸீர்                                                     

இந்த வரலாற்றில் பல்வேறு படிப்பினைகள் உள்ளன. 1.சித்த மருத்துவத்தின் முன்னோடியாக நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இருந்துள்ளார்கள் 2. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடைசி காலத்தில் எத்தனையோ சஜ்தாக்கள் செய்திருக்கலாம். ஒவ்வொரு சஜ்தாவுக்கும் ஒரு மூலிகைச் செடி என்றால் இன்று எதுவெல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளாகவும், கீரைகளாகவும் உள்ளதோ அவற்றில் பல  சுலைமான் (அலை) அவர்களின் சஜ்தாவினால் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம் என அறிய முடிகிறது.               

3. நபி சுலைமான் (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு சஜ்தாவும் ஒரு மருந்தை இந்த உலகுக்குத் தந்திருக்கிறது எனும்போது சஜ்தாவுக்கும் மருந்துக்கும் தொடர்பு உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இன்று அந்த சஜ்தாவுக்கு பஞ்சம் நிகழுவதால் புதிய நோய்கள் பல்வேறு பெயர்களில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மருந்து கண்டு பிடிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அதற்காக மருந்துகள் இல்லை என்பதல்ல. ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள். “எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு.  (மனிதனால் அது கண்டு பிடிக்கப்பட்டு) உரிய முறையில் செலுத்தப் பட்டால் அல்லாஹ்வின் அருளால் நோய் குணமாகும்.-நூல் முஸ்லிம்.


கருஞ்சீரகத்தில் அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு.

عَنْ أَبي هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ (بخاري

மலச்சிக்கலுக்கு நிலாவரைப் பொடியை நபி ஸல் பரிந்துரைத்தார்கள்

عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سَأَلَهَا « بِمَ تَسْتَمْشِينَ ». قَالَتْ بِالشُّبْرُمِ.قَالَ « حَارٌّ جَارٌّ ». قَالَتْ ثُمَّ اسْتَمْشَيْتُ بِالسَّنَا. فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ شِفَاءٌ مِنَ الْمَوْتِ لَكَانَ فِى السَّنَا ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. يَعْنِى دَوَاءَ الْمَشْىِّ.(ترمذي

கருத்து- அஸ்மா பின்த் உமைஸ் ரழி கூறினார்கள்.  என்னிடம் நபி ஸல் அவர்கள் மலச்சிக்கலுக்கு எதைக் கொண்டு நிவாரணம் தேடுகிறீர்கள் என்று கேட்க, நீர் முள்ளிச் செடியைக் கொண்டு.. என நான் பதில் கூறியவுடன் அது உடலுக்கு மிகவும் சூடானது. மேலும் அது பேதியை அதிகமாக்கி விடும் என்றார்கள். பிறகு நான் நிலா ஆவாரைச் செடியைக் கொண்டு  மலச்சிக்கலுக்கு நிவாரணம் பெற்றோம். அதைக் கேட்ட நபி ஸல் அவர்கள் அதைப் பாராட்டி, மரணத்துக்கே நிவாரணம் இருக்கும் என்றால் அது நிலா ஆவாரைச் செடியில் உள்ளது என்றார்கள்.

படிப்பினை- மவ்த்துக்கு எந்த நிவாரணமும் இல்லை என்பது தான் இதன் கருத்தாகும். நிலா ஆவாரைச் செடியில்நிறைய நிவாரணங்கள் உண்டு என்பதைத் தான் அவ்வாறு நபி ஸல் கூறினார்கள். நிலாஆவாரைப் பொடி அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் 

தேனிலும் பல நோய்களுக்கு நிவாரணம் உண்டு

ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ (69) النحل

عَنْ عَبْدِ اللَّهِ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« عَلَيْكُمْ بِالشِّفَائَيْنِ الْعَسَلِ وَالْقُرْآنِ »(حاكم

காலாவதியான மருந்துகளை உட்கொள்வதை விட்டும் நபி ஸல் தடுத்துள்ளார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الدَّوَاءِ الْخَبِيثِ (ابوداود)


பேணுதல் அடிப்படையில் நோய்களை பொருத்துக் கொண்டால் நன்மை உண்டு

عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا (بخاري5652

அதாஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் என்னிடம் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் சுவனவாதியான ஒரு பெண்ணை உமக்குக் காட்டவா என்று கேட்டு விட்டு இதோ இந்த கறுப்பான பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அது நீங்க அல்லாஹ்விடம் துஆ செய்யும்படியும் கூறினார். நபி ஸல் அவர்கள் அப்பெண்ணிடம் நீ இதை பொறுத்துக் கொண்டால் உனக்கு சுவனம் உறுதியாகி விடும் என்றார்கள். அப்போது அந்தப்பெண் சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருப்பதற்கு மட்டும் துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார். அவ்வாறே நபி ஸல் துஆச் செய்தார்கள்.    

மார்க்கத்துக்கு மாற்றமான வகையில் நம்முடைய நோய்களுக்கு நிவாரணம் தேடுவது கூடாது

وعن زينب امرأة عبد الله بن مسعود أن عبد الله رأى في عنقي خيطا فقال : ما هذا ؟ فقلت : خيط رقي لي فيه قالت : فأخذه فقطعه ثم قال : أنتم آل عبد الله لأغنياء عن الشرك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " إن الرقى والتمائم والتولة شرك " فقلت : لم تقول هكذا ؟ لقد كانت عيني تقذف وكنت أختلف إلى فلان اليهودي فإذا رقاها سكنت فقال عبد الله : إنما ذلك عمل الشيطان كان ينخسها بيده فإذا رقي كف عنها إنما كان يكفيك أن تقولي كما كان رسول الله صلى الله عليه وسلم يقول : " أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما " . رواه أبو داود - مشكاة

ஹழ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் மனைவி அறிவித்துள்ளார்கள் என் கணவர் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் என் கழுத்தில் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிற்றைப் பார்த்து விட்டு இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிறு என்று பதில் கூறினேன். உடனே அதைக் கழற்றி விட்டு, இந்த அப்துல்லாஹ்வின் குடும்பத்தினராகிய நீங்கள் ஷிர்க்கை விட்டும் அப்பாற்பட்டவர்கள்.  நபி ஸல் அவர்கள் ஷிர்க்கான வாசகங்கள் மூலம் மந்திரித்தல், ஷிர்க்கான எழுத்துக்களால் கயிறு போடுதல், கணவனுக்கு எதிரான சூனியம் ஆகியவை ஷிர்க் என எச்சரித்துள்ளார்கள் என்று என் கணவர் கூற, அதற்கு நான் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் அறியாமைக் காலத்தில் எனக்குக் கண்வலி இருந்தது. நான் அந்தப் பாதிரியாரிடம் சென்று அந்த தாயத்தை அணிந்தவுடன் அந்த கண் வலி சரியாகி விட்டது. என்று கூற அதற்கு அப்துல்லாஹ் ரழி அவர்கள் இது ஷைத்தானுடைய வேலை தான். அவன் உன்னை அந்தப் பாதிரியாரிடம் செல்ல வைப்பதற்காக உன் கண்ணில் குத்தி விடுவான். நீ அங்கே சென்று அவர் தரும் தாயத்தை அணிந்தவுடன் அவன் குத்துவதை நிறுத்திக் கொள்வான். இனி உனக்கு அந்த மாதிரி ஏற்பட்டால் நபி ஸல் அவர்கள் ஓதியது போல பின்வருமாறு ஓதினால் போதும். என்று அந்த துஆவை சொல்லிக் கொடுத்தார்கள்.


நோயாளிகளுக்கு ஓதிப் பார்ப்பதற்காக கற்றுக் கொடுக்கப்பட்ட துஆக்கள்

عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (مسلم

நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு' பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக! அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி                                                 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ قَالَ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ فَقَالَ لَهُ لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ قَالَ قُلْتُ طَهُورٌ كَلَّا بَلْ هِيَ حُمَّى تَفُورُ أَوْ تَثُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ تُزِيرُهُ الْقُبُورَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَعَمْ إِذًا  (بخاري

ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி(ஸல்) அவர்கள், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் (பரவாயில்லை). 'அல்லாஹ் நாடினால், குணமாகும்' எனக் கூறுவார்கள்.                          

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَوِّذُ بَعْضَ أَهْلِهِ يَمْسَحُ بِيَدِهِ الْيُمْنَى وَيَقُولُ اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (بخاري)

. நபி(ஸல்) அவர்கள், தங்கள் குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது கரத்தை அந்த நோயாளியின் மீது தடவி. மேற்படி துஆவை ஓதுவார்கள். பொருள்: இறைவா! மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கி வைப்பாயாக! நோயைவிட்டு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த நோயையும் விட்டு வைக்காது என்று கூறுவார்கள்.                                                                                                             

عَنْ أَبِي الْيَسَرِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَرَمِ وَالتَّرَدِّي وَالْهَدْمِ وَالْغَمِّ وَالْحَرِيقِ وَالْغَرَقِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا  (نسائ

யாஅல்லாஹ்! தள்ளாமை, கீழே விழுதல், இடிந்து விழுதல், துக்கம், நீரில் மூழ்குதல், தீயில் எரிதல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். யாஅல்லாஹ்! இறக்கும் தருவாயில் ஷைத்தான் என்னை குழப்பத்தில் ஆழ்த்துவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். யாஅல்லாஹ்! விஷ ஜந்துக்களால் கொட்டப்பட்டு இறப்பதிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.                நூல்-நஸயீ

عَنْ أَنَسٍ رض أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئْ الْأَسْقَامِ (ابوداود

பொருள்-யாஅல்லாஹ்! தொழுநோயை விட்டும்,மனநோயை விட்டும், உறுப்புச் சிதைவை விட்டும், கொடிய நோய்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்- அபூதாவூத்

நோய்கள் நீங்க முதலில் அல்லாஹ்விடம் மீளாமல் வேறு எங்கு சென்றாலும் பலனில்லை

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ (243) البقرة

عَنْ اِبْن عَبَّاس قَالَ : كَانُوا أَرْبَعَة آلَاف خَرَجُوا فِرَارًا مِنْ الطَّاعُون قَالُوا : نَأْتِي أَرْضًا لَيْسَ بِهَا مَوْت حَتَّى إِذَا كَانُوا بِمَوْضِعِ كَذَا وَكَذَا قَالَ اللَّه لَهُمْ" مُوتُوا " فَمَاتُوا فَمَرَّ عَلَيْهِمْ نَبِيّ مِنْ الْأَنْبِيَاء فَدَعَا رَبّه أَنْ يُحْيِيَهُمْ فَأَحْيَاهُمْ فَذَلِكَ قَوْله عَزَّ وَجَلَّ " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوف حَذَرَ الْمَوْت " الْآيَة-  ذَكَرَ غَيْر وَاحِد مِنْ السَّلَف أَنَّ هَؤُلَاءِ الْقَوْم كَانُوا أَهْل بَلْدَة فِي زَمَان بَنِي إِسْرَائِيل اِسْتَوْخَمُوا أَرْضهمْ وَأَصَابَهُمْ بِهَا وَبَاء شَدِيد فَخَرَجُوا فِرَارًا مِنْ الْمَوْت هَارِبِينَ إِلَى الْبَرِّيَّة فَنَزَلُوا وَادِيًا أَفْيَح فَمَلَئُوا مَا بَيْن عُدْوَتَيْهِ فَأَرْسَلَ اللَّه إِلَيْهِمْ مَلَكَيْنِ أَحَدهمَا مِنْ أَسْفَل الْوَادِي وَالْآخَر مِنْ أَعْلَاهُ فَصَاحَا بِهِمْ صَيْحَة وَاحِدَة فَمَاتُوا عَنْ آخِرهمْ مَوْتَة رَجُل وَاحِد (تفسير ابن كثير) قال الحسن : أماتهم الله قبل آجالهم عقوبة لهم ثم بعثهم إلى بقية آجالهم وقيل : إنما فعل ذلك بهم معجزة لنبي من أنبيائهم قيل : كان اسمه شمعون -  قال مجاهد: إنهم لما أحيوا رجعوا إلى قومهم يعرفون أنهم كانوا موتى ولكن سحنة الموت على وجوههم، ولا يلبس أحد منهم ثوبا إلا عاد كفنا حتى ماتوا لآجالهم التي كتبت لهم. (قرطبي)

  பனீ இஸ்ராயீல் சந்ததிகளில் 4000 பேர் கொண்ட ஒரு சமூகம் அவர்களின் ஊரில் ஏற்பட்ட காலரா நோயை விட்டும் தப்பிக்க வேறு ஊருக்கு கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள். அந்த ஊருக்குச் சென்றவுடன் அல்லாஹ் அங்கு வைத்து அவர்களை மொத்தமாக மவ்த்தாக்கினான். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை அடைந்து அங்கு வசிப்பிட்டத்தை ஆக்கியவுடன் அங்கு இரு மலக்குகளை அல்லாஹ் நியமித்தான். ஒருவர் அந்த பள்ளத்தாக்கின் மேல் பகுதியிலுருந்தும் மற்றொருவர் அதன் கீழ் பகுதியிலிருந்தும் சப்தமிட்டனர். அவ்வாறு சப்தமிட்டவுடன் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். குர்துபீ தஃப்ஸீரில் அவர்கள் தங்களுடைய மவ்த்துக்கான தவணை வரும் முன்பே தண்டனை என்ற அடிப்படையில் இறந்தனர். பிறகு சில காலங்கள் கழித்து அந்த வழியாகச் சென்ற நபி ஷம்ஊன் அலை அந்த மனிதர்களை மறுபடியும் உயிராக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ் உயிராக்கினான். அந்த நபியின் மூலம் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டவே அல்லாஹ் அந்த மக்களின் ஆயுட்காலம் முடியும் முன்பே மவ்த்தாக்கி பிறகு எழுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிராக்கப்பட்ட அவர்கள் அவர்களின் உண்மையான ஆயுட்காலம் முடியும் வரை வாழ்ந்தாலும் மவ்த்தின் அடையாளம் அவர்கள் மீது இருக்கும் நிலையில் தான் வாழ்ந்தார்கள். பிண வாடையும் அவர்கள் மீது இலேசாக இருந்தது. அவர்கள் எத்தகைய சிறந்த உடை அணிந்தாலும் அது உடனே கஃபனாக மாறி விடும். – குர்துபீ                        

                                     

நோய்களை திட்டக்கூடாது

قال جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيَّبِ فَقَالَ « مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ تُزَفْزِفِينَ ». قَالَتِ الْحُمَّى لاَ بَارَكَ اللَّهُ فِيهَا. فَقَالَ « لاَ تَسُبِّى الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِى آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ (مسلم

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெண் பிள்ளைகள் மீது கவனம் தேவை

 23-10-2026 ஜமாதுல் அவ்வல்-  11 بسم الله الرحمن الرحيم         பெண் பிள்ளைகள் மீது கவனம் தேவை     https://chennaijamaathululama.blogspot.com...