18-03-2022 SHABAN - 14 |
|
بسم
الله الرحمن الرحيم பராஅத் இரவும் பாவ
மன்னிப்பும் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
தற்போது முஸ்லிம்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் விஷச் செடிகளைப் போன்று வளர்ந்து வரும் பாசிச சக்திகள் தான். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சோதனைகளுக்கு பாசிச சக்திகள் தான் காரணம் என்று நாம் கூறினாலும் அதுவெல்லாம் வெளிப்படையான காரணங்கள் தான். உண்மையான காரணம் நமது பாவங்கள் தான். நமக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் என்னும் காயத்திற்கு மருந்தாக நாம் நடத்தும் அறப்போராட்டங்கள், அறிக்கைகள் அனைத்தும் வெளி மருந்தாக அமையுமே தவிர அந்தக் காயத்திற்கு உள் மருந்து ஒன்று உள்ளது. அதுதான் தவ்பா. உள் மருந்து செலுத்தப் படாமல் வெளி மருந்தை மட்டுமே பயன்படுத்துவதால் தான் அது பலனற்றுப் போய் விடுகிறது.
إِنَّ
اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
(11)الرعد
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ:"أَنَا
اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا، مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ، قُلُوبُ
الْمُلُوكِ فِي يَدِي، وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ
مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ، وَإِنَّ الْعِبَادَ إِذَا
عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ
فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ، فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى
الْمُلُوكِ، وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ
مُلُوكَكُمْ (طبراني)
அல்லாஹ் பேசுகிறான்
உங்களை ஆளுபவர்களின் உள்ளங்கள் என் கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் எனக்குக்
கட்டுப்பட்டு நடந்தால் உங்களை ஆளுபவர்களின் உள்ளங்களை உங்களுக்கு சாதகமாக
திருப்புவேன். நீங்கள் எனக்கு மாறு செய்தால் உங்களை ஆளுபவர்களின் உள்ளங்களை
உங்களுக்கு எதிராக திருப்புவேன். எனவே ஆட்சியாளர்களை திட்டுவதில் உங்களின்
நேரங்களை வீணாக்காமல் எனக்கு நீங்கள் பணிந்து நடப்பதில் ஈடுபடுங்கள். உங்களின்
அநியாயக்கார அரசர்களை நான் பார்த்துக் கொள்வேன்.
முஸ்லிம்
பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே செல்வதும் பாவம். இந்தப் பாவத்தை விட்டும்
திருந்தி முஸ்லிம் பெண்கள் அனைவரிடமும் ஹிஜாப் அணியும் பழக்கம் வந்து விட்டால்
எவனும் அதற்கு எதிரான பிரச்சினை எதையும் கொண்டு வர முடியாது. உதாரணமாக
சீக்கியர்கள் அனைவருமே தாடி வைத்துள்ளனர். அவர்களில் தாடி வைக்காத யாரையும்
பார்க்க முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய அடையாளங்களுடன் எப்பேற்பட்ட அரசாங்க
வேலைகளில் பணியாற்ற முடிகிறது. ஆனால் அதுவே தாடி வைத்த முஸ்லிம்களில் பலருக்கு
எத்தனையோ அரசாங்க உத்தியோகங்கள் மறுக்கப் படுகின்றன. காரணம் சீக்கியர்கள்
தங்களுடைய மதச் சடங்காக பின்பற்றும் அளவுக்கு முஸ்லிம்களிடம் தாடி என்ற சுன்னத்
பின்பற்றப் படுவதில்லை. இதுபோல் ஹிஜாப்.
நமக்கு மத்தியிலே நிகழும் குழப்பங்களும் கூட பாவங்களுக்காக அல்லாஹ் கொடுத்த
தண்டனை
قُلْ هُوَالْقَادِرُ
عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ
أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ
بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ (65)الانعام
பராஅத் இரவில் அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்க
வேண்டும்.
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ
إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ
لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ (ابن ماجة
அறிந்தோ, அறியாமலோ
பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதிலிருந்து திருந்தி தவ்பா செய்பவனே
முஃமின்
عن
أَبي هُرَيْرَةَ رضي الله عنه قُلْنَا
يَا رَسُولَ اللَّهِ إِنَّا إِذَا رَأَيْنَاكَ رَقَّتْ
قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ وَإِذَا
فَارَقْنَاكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ
قَالَ لَوْ تَكُونُونَ أَوْ قَالَ لَوْ أَنَّكُمْ تَكُونُونَ عَلَى كُلِّ حَالٍ
عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي لَصَافَحَتْكُمْ
الْمَلَائِكَةُ بِأَكُفِّهِمْ وَلَزَارَتْكُمْ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ
تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ يُذْنِبُونَ كَيْ يَغْفِرَ لَهُمْ رواه
أحمد وفي رواية مسلم "وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ
فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ (مسلم)
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ
أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ
لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ
وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ
ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ
فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ
وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ
أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ
أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ
رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي
ثَلَاثًا....(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا
كَلاَمَ اللَّهِ ) كتاب التوحيد
عَنْ
أَنَس رضي الله عنه قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:كُلُّ
بَنِى آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ (ابن ماجة)
باب ذكر التوبة- كتاب الزهد
பாவத்தின் மீதே நிலைத்திருப்பதின் தீமைகள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عَمْرِو بْنِ الْعَاصِ رض عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ.. وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ
يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (احمد)عَنْ أَبِى هُرَيْرَةَ
رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْمُؤْمِنَ إِذَا
أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِى قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ
صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِى ذَكَرَهُ اللَّهُ
فِى كِتَابِهِ (كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ(المطففين14)
ابن ماجة- بَاب ذِكْرِ الذُّنُوبِ-كِتَاب الزُّهْدِ
மரணம் வரும் வரை பாவங்களை நிறைய செய்து
விட்டு மரண வேளையில் தவ்பா செய்தால் ஏற்கப்படுமா ?
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ
يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي
تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ
عَذَاباً أَلِيماً (النساء18قال الله في قصة فرعون)حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ
قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ
مِنَ الْمُسْلِمِينَ-آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ
مِنَ الْمُفْسِدِينَ(الانفال
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்
தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு தேடுவது
عَنِ عَبْدِ
اللَّهِ رضي الله عنه قَالَ قال رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَلَّهُ
أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ مِنْ رَجُلٍ فِى أَرْضٍ
دَوِيَّةٍ مَهْلَكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَنَامَ
فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ ثُمَّ
قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِى الَّذِى كُنْتُ فِيهِ فَأَنَامُ حَتَّى أَمُوتَ
فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ
رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ فَاللَّهُ أَشَدُّ
فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ
وَزَادِهِ رواه مسلم-باب التوبة
عن النّبي - صلّى الله عليه وسلّم - قال
الله تعالى: (يا ابن آدم إنّك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي، يا
ابن آدم لو بلغت ذُنوبك عنان السّماء، ثمّ استغفرتني غفرت لك، يا ابن آدم لو
أتيتني بقراب الأرض خطايا، ثمّ لقيتني لا تشرك بي شيئاً، لأتيتك بقرابها مغفرةً)
رواه الترمذي وقال الحسن: (أكثروا من الاستغفار في بيوتكم، وعلى موائدكم، وفي
طرقكم، وفي أسواقكم، وفي مجالسكم، وأينما كنتم، فإنّكم ما تدرون متى تنزل
المغفرة). .
قال رسول الله صلّى الله
عليه وسلّم: من لزم الاستغفار جعل الله له من كلّ همّ فرجاً، ومن كلّ ضيق مخرجاً،
ورزقه من حيث لا يحتسب) رواه أبو داودفقد قال حذيفة رضي الله عنه للنّبي صلّى الله عليه وسلّم:
(كان في لساني ذرب على أهلي - أي حدّة - فذكرت ذلك للنّبي - صلّى الله عليه وسلّم
- فقال: أين أنت من الاستغفار يا حذيفة) رواه أحمد
قال النّبي
- صلّى الله عليه وسلّم - في الحديث الصّحيح: (يا أيها النّاس توبوا إلى ربّكم،
فوالذي نفسي بيده إنّي لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرّةً).
وكان يقول: (اللهم اغفر لي خطئي وعمدي...).
ஷைத்தானை கதிகலங்கச் செய்யும் இஸ்திஃபார்
عن أبي بكر
رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:عليكم بلا إله إلا الله والاستغفار
فأكثروا منهما فإن إبليس قال: أهلكتُ الناس بالذنوب وأهلكوني بلا إله إلا الله
والاستغفار فلما رأيتُ ذلك أهْلَكتُهم بالأهواء فهم يحسبون أنهم
مهتدون"(تفسيرابن كثير) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَن النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "قَالَ إِبْلِيسُ أَيْ رَبِّ لَا
أَزَالُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ فَقَالَ
الرَّبُّ عَزَّ وَجَلَّ لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي (احمد)
سَيِّدُ الِاسْتِغْفَارِ
اللَّهُمَّ
أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا
عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ
أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي
فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
யாஅல்லாஹ் நீ தான் எனது ரப்பு. உன்னைத் தவிர
வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. இன்னும் நான் இயன்ற
வரை உனக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன்.
நான் செய்த பாவங்களின் தீய விளைவுகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ
எனக்கு செய்த அருட்கொடைகளை உண்மையென நான்
விண்ணப்பிக்கிறேன். என் பாவங்களை மன்னிக்கவும் உன்னிடமே
முறையிடுகிறேன். என்னை மன்னிப்பாயாக.
நிச்சயமாக மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை
யார் இந்த வாசகங்களை மனதால் நம்பி இதை தினமும்
காலையிலும், மாலையிலும் ஓதி வருவாரோ அவர் அவர் இறந்தால் அவர் சுவனவாதி ஆவார்.
நபிமொழி நூல் புகாரீ ஒரு மனிதர் நபிகள்
நாயகம் ஸல் அவர்களிடம் வந்து நான் மிகப்பெரும் பாவம் செய்து விட்டேன் என்று இரண்டு
மூன்று தடவைகள் கூறிய போது நபி ஸல் அவர்கள் அந்த மனிதரிடம் பின்வரும்
பாவமன்னிப்பின் வாசகங்களை கூறும்படி ஏவினார்கள்
اَلّلهُمَّ مَغْفِرَتُكَ أَوْسَعُ مِنْ ذُنُوْبِيْ
وَرَحْمَتُك أَرْجَى عِنْدِيْ مِنْ عَمَلِيْ
யாஅல்லாஹ் உன்னுடைய
மன்னித்தல் எனும் குணம் என் பாவங்களை விட மிக விசாலமானது. நான் ஈடேற்றம் பெறுவதற்கு என்னுடைய அமல்களை விட
உன்னுடைய பேரருள் தான் மிகவும் ஆதரவுக்குரியதுஎன்ற துஆவை அவர் ஓதியவுடன் மீண்டும்
ஒருமுறை ஓதும்படி ஏவினார்கள். மீண்டும் அவர் ஓதினார்இவ்வாறு மூன்று தடவைகள் அவர்
ஓதிய பின் நபி ஸல் அவர்கள் இப்போது நீர் எழுந்து செல்லும் உம் பாவங்கள்
மன்னிக்கப்படு விட்டன என்றார்கள்
பஞ்சத்தை நீக்க, கவலைகளைப் போக்க, குழந்தை பாக்கியம் பெற, வீடு,தோட்டம்
செழிக்க இஸ்திஃபார் தான் சிறந்த வழி
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا
رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ
قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود- فَقُلْتُ اسْتَغْفِرُوا
رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ
بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح
பாவங்களை விட்டும்
இஸ்திஃபார் செய்வது அனைத்து விஷயங்களுக்கும் தீர்வாக இருக்கிறது
قال مقاتل:
لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة
فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا
ربكم إنه كان غفارا -قال الشعبي:خرج عُمَررض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع
فأُمْطِرُوا فقالوا مارأيناك
استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا
ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي قال الأوزاعي :خرج الناس يستسقون فقام فيهم
بلال بن سعد فحمد الله وأثنى عليه ثم قال: اللهم إنا سمعناك تقول: }ما
على المحسنين من سبيل{ )التوبة91
وقد أقررنا بالإساءة فهل تكون مغفرتك إلا لمثلنا ؟ اللهم اغفر لنا وارحمنا واسقنا
فرفع يديه ورفعوا أيديهم فسُقُوْا (تفسير
القرطبي) وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ
الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن
يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له:
استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا (القرطبي) عَنْ
حُذَيْفَةَ قَالَ كَانَ فِى لِسَانِى ذَرَبٌ عَلَى أَهْلِى وَكَانَ لاَ
يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِىِّ صلى الله عليه وسلم
فَقَالَ أَيْنَ أَنْتَ مِنَ الاِسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِى الْيَوْمِ
سَبْعِينَ مَرَّةً رواه ابن ماحة (الذرب : الفحش)
وقال قتادة رحمه الله القرآن يدلكم عن دائكم ودوائكم أما داؤكم فالذنوب وأما
دواؤكم فالاستغفار (احياء علوم الدين)
பாவங்களால் மனித
வாழ்க்கையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதைப்பற்றி
1.அமலுடன் கூடிய
பயனுள்ள கல்வி நம்மை விட்டும் தடுக்கப்படும். கல்வி மட்டும் இருப்பது
புண்ணியமில்லை. இன்னும் சொல்வதானால் அது கல்வியே அல்ல. வெறும் தகவல்கள் என்பது
மட்டும் தான். ஏனெனில் இன்றைக்கும் எத்தனையோ பாதிரிமார்கள் அரபியை சரளமாக பேசுவது
மட்டுமன்றி நாம் குர்ஆன் ஓத அவர்கள் அதற்கு விளக்கம் தருவார்கள். அவர்களிடம்
இருப்பது வெறும் தகவல் மட்டுமே. கல்வி அல்ல. MARMADUKE PICKTHALL என்பவர் குர்ஆனை
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்பு அவர்
இஸ்லாத்தை ஏற்றார். எனவே தகவல்கள் எல்லோரிடமும் இருக்கும். அது பயனுள்ள கல்வி அல்ல.
مثل
الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل اسفارا
மனன சக்தியில் குறைவு
ஏற்படும்
இமாம் ஷாஃபிஈ ரஹ்
அவர்கள் தன் ஆசிரியர் வகீஃ அவர்களிடம் தன் மனன சக்தியின் குறையை முறையிட்ட போது
பாவம் செய்யாதீர் என்று அறிவுரை கூறினார்கள். முற்காலத்தில் இலட்சம் ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்யும்
மாணவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது பாவங்களின் காரணமாக மன ன சக்தியில்
மிகப் பெரும் குறைவு ஏற்படுள்ளது.
சம்பாத்தியத்தில்
பாதிப்பு ஏற்படும்
பாவங்களின் காரணமாக
ஹலாலான சம்பாத்தியத்தில் நெருக்கடி ஏற்படும். ஹராமான வருவாய் நிறையவே கிடைக்கும். இலட்சக் கணக்கில்
கொடுக்கல் செய்வார். ஆனாலும் கடனும் இலட்சக் கணக்கில் இருக்கும். வங்கிக் கடன்,
வட்டிக்கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற பல கடன்கள் சூழ்ந்திருக்கும். இவர்
பார்ப்பதற்கு பெரும் அந்தஸ்தில் உள்ளவர் போல இருப்பார்.
عن ثوبان عن النبي صلي الله
عليه وسلم لا يزيد في العمر الا البر ولا يرد القدر الا الدعاء ان الرجل ليحرم الرزق
باالذنب يصيبه (ابن ماجة
அல்லாஹ்வை விட்டும்
தூரமாகுதல்
பாவம் செய்பவர்களின்
உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இவர்களைப்
பொறுத்த வரை மஸ்ஜிதில் அமருவதும், தீனுடைய பேச்சுக்களை கேட்பதும் பெரும் சுமையாக
இருக்கும். பலர் பள்ளிக்கு அருகில் இருந்தும் பள்ளிக்குள் வருவதற்கு அவர்களுக்கு
மனம் வராது. முஸ்லிம் ஒருவர் மீனை வாங்கி அதை சுமந்து செல்ல ஒரு கூலிக்காரரை அழைத்தார். அந்த
கூலிக்காரர் நான் உங்கள் வீடு வரை சுமந்து வருகிறேன். ஆனால் இடையில் தொழுகை நேரம்
வந்தால் தொழச் சென்று விடுவேன் என்று நிபந்தனையிட்டார். அவரும் அதை ஏற்றுக்
கொண்டார். சுமந்து செல்லும்போதே தொழுகை நேரம் வந்தது. அந்த கூலிக்காரர் சொன்ன
மாதிரி தொழச்சென்று விட்டார். ஆனால் அந்த மனிதர் உள்ளே வராமல் மீனை வைத்துக்
கொண்டு வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். மக்கள் தொழுது விட்டு வெளியில் வர, அந்த
கூலிக்காரர் சீக்கிரம் வரவில்லை. இதைப் பார்த்த அந்த நபர் கோபமடைந்து வெளியில்
இருந்த படியே உம்மை வெளியில் வருவதை விட்டும் தடுத்தது எது என்று சப்தமிடவே அந்த
கூலிக்கார ர் உள்ளே இருந்த படி உன்னை யார் பள்ளிக்குள் வர விடாமல் தடுத்தானோ அவனே
என்னை வெளியே வருவதை விட்டும் தடுக்கிறான் என்றார். பாவம் செய்யும் மனிதர்களுக்கு
பல பாக்கியங்கள் தவறிப்போகும். சில அறிவிப்புகளில் அத்தகைய மனிதர்கள் அதிகாலையில்
எழுந்து தொழ நினைத்தாலும் அல்லாஹ் மலக்குகளிடம் இவனை எழுப்பாதீர்கள் இவன் தொழுது
என்ன ஆகப் போகிறது என்று கூறுவானாம்.
மனிதர்கள் மீதும்
வெறுப்பு ஏற்படும்
பாவத்தின் காரணமாக அவனுக்கு மனிதர்கள் மீது ஒரு
வித வெறுப்பு ஏற்பட்டு உற்றார் உறவினர்களிடம் சேர்ந்து வாழ்வது அவனுக்கு பெரும்
சுமையாக தெரிகிறது. அவன் உள்ளம் இறுகி விடுகிறது
வேலைகளில் தடை
ஏற்படுதல்
பாவத்தின் காரணமாக வெற்றிகளுக்கு வாய்ப்பிலாமல்
அதன் வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விடுகிறது. அல்லது இலகுவாக செய்ய வேண்டிய
வேலையை அவனுடைய பாவங்களால் அல்லாஹ் கடினமாக
ஆக்கி விடுகிறான்.
ومن يتق الله يجعل له مخرجا – سورة الطلاق - ففي حديث القدسي – تفرغ لعبادتي املا صدرك غني ....
அடியானே உன் நாட்டம் நிறைவேற நீ என்ன தான்
முயற்சி செய்தாலும்(நீ எனக்கு கட்டுப்படா
விட்டால்) நான்
உன்னை களைப்படையச் செய்திடுவேன். உன் நாட்டத்தையும் நிறைவேற்ற மாட்டேன். ஆனால்
அதற்கு மாற்றமாக நீ எனது நாட்டத்தை, கட்டளையை நிறைவேற்ற பாடுபட்டால் உன் வேலையில்
நானே உனக்குப் போதுமானவனாக ஆகி விடுவேன். உன் விருப்பத்தையும் நிறைவேற்றித்
தருவேன்.
heபாவங்களின் காரணமாக உள்ளத்தில் தாக்கம் ஏற்படுவதில்லை.
உள்ளத்தில் தாக்கம் ஏற்படாத தால் பாவம் செய்வது
தவறு என்றே தெரிவதில்லை. எனவே எல்லா விதமான பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் தவ்பா
செய்து மீள வேண்டும்
பராஅத் இரவு
பயானில் ஷிர்க் செய்பவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற தலைப்பில் பின்வரும்
அம்சங்கள்
தன் தவறை திருத்திக் கொள்ளாத நிலையில்
பராஅத் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படாத இரு சாரார்
فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ مشرك: إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ
بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا(48)النساء وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا
يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ (36) وَهُمْ
يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي
كُنَّا نَعْمَلُ (فاطر) إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ
نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا
غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ(56) النساء
ஊசி முனையில் ஒட்டகம் நுழைந்தாலும்
ஷிர்க் உடையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள்
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا
تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ
(40الاعراف)
ஷிர்க் உடைய தீமைகளைப் பற்றி மக்களுக்கு
உதாரணத்துடன் விபரித்த யஹ்யா அலை
عَنِ الْحَارِثِ
الأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ أَوْحَى إِلَى
يَحْيَى بْنِ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهِنَّ وَيَأْمُرَ
بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ فَكَأَنَّهُ أَبْطَأَ بِهِنَّ
فَأَتَاهُ عِيسَى فَقَالَ: إِنَّ اللَّهَ أَمَرَكَ بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ تَعْمَلَ
بِهِنَّ وَيَأْمُرُ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ فَإِمَّا أَنْ
تُخْبِرَهُمْ وَإِمَّا أَنْ أُخْبِرَهُمْ فَقَالَ يَا أَخِي لاَ تَفْعَلْ فَإِنِّي أَخَافُ
أَنْ تَسْبِقْنِيَ بِهِنَّ أَنْ يُخْسَفَ بِي أَوْ أُعَذَّبَ قَالَ
فَجَمَعَ بَنِي إِسْرَائِيلَ بِبَيْتِ الْمَقْدِسِ حَتَّى امْتَلأَ الْمَسْجِدَ
وَقَعَدُوا عَلَى الشُّرُفَاتِ ثُمَّ خَطَبَهُمْ فَقَال إِنَّ اللَّهَ أَوْحَى
إِلَيَّ بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ أَعْمَلَ بِهِنَّ وَآمُرَ بَنِي إِسْرَائِيلَ
أَنْ يَعْمَلُوا بِهِنَّ:أَوَّلُهُنَّ
أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا فَإِنَّ
مَثَلَ مَنْ أَشْرَكَ بِاللَّهِ كَمَثَلِ رَجُلٍ اشْتَرَى عَبْدًا مِنْ خَالِصِ
مَالِهِ بِذَهَبٍ أَوْ وَرِقٍ ثُمَّ أَسْكَنَهُ دَارًا فَقَالَ اعْمَلْ وَارْفَعْ
إِلَيَّ فَجَعَلَ يَعْمَلُ وَيَرْفَعُ إِلَى غَيْرِ سَيِّدِهِ فَأَيُّكُمْ يَرْضَى
أَنْ يَكُونَ عَبْدُهُ كَذَلِكَ؟ فَإِنَّ اللَّهَ خَلْقَكُمْ
وَرَزَقَكُمْ فَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَإِذَا
قُمْتُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ تَلْتَفِتُوا فَإِنَّ اللَّهَ يُقْبَلُ
بِوَجْهِهِ إِلَى وَجْهِ عَبْدِهِ مَا لَمْ يَلْتَفِتْ,وَآمُرُكُمْ بِالصِّيَامِ
وَمَثَلُ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ فِي عِصَابَةٍ مَعَهُ صُرَّةُ مَسْكٍ كُلُّهُمْ
يُحِبُّ أَنْ يَجِدَ رِيحَهَا وَإِنَّ الصِّيَامَ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ
رِيحِ الْمِسْكِ وَآمُرُكُمْ بِالصَّدَقَةِ وَمَثَلُ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ أَسَرَهُ
الْعَدُوُّ فَأَوْثَقُوا يَدَهُ إِلَى عُنُقِهِ وَقَرَّبُوهُ لِيَضْرِبُوا
عُنُقَهُ فَجَعَلَ يَقُولُ: هَلْ لَكُمْ أَنْ أَفْدِيَ نَفْسِيَ مِنْكُمْ
؟وَجَعَلَ يُعْطِي الْقَلِيلَ وَالْكَثِيرَ حَتَّى فَدَى نَفْسَهُ وَآمُرُكُمْ
بِذِكْرِ اللهِ كَثِيرًا وَمَثَلُ ذِكْرِ اللهِ كَمَثَلِ رَجُلٍ طَلَبَهُ
الْعَدُوُّ سِرَاعًا فِي أَثَرِهِ حَتَّى أَتَى حِصْنًا حَصِينًا فَأَحْرَزَ
نَفْسَهُ فِيهِ وَكَذَلِكَ الْعَبْدُ لاَ
يَنْجُو مِنَ الشَّيْطَانِ إِلاَّ بِذِكْرِ اللهِ (ابن خزيمة)
திருமண வீடுகளில் ஷிர்க்கும்,
பித்அத்தும்
நாம் வாழும் தேசம் ஷிர்க் மலிந்து
கிடக்கும் நாடு என்பதால் மற்றவர்களுடன் பழகி நம் இந்திய முஸ்லிம்களிடமும் ஷிர்க்
உடைய சாயல் கொண்ட எத்தனையோ செயல்கள் நடைமுறைகள் உள்ளன. திருமணத்தில் நாள்,
நட்சத்திரங்கள் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், நேரம், காலம் பார்ப்பது, வளர் பிறை,
தேய்பிறை பார்ப்பது இவை அனைத்தும்
ஷிர்க்குக்கு இணையான பாவங்களாகும். இவை தவிர இன்னும் சில விஷயங்கள் ஷிர்க்குக்கு
இணையாக இல்லா விட்டாலும் பித்அத் என்ற வகையிலும், ஹராம் என்ற வகையிலும், வீண்
விரயம் பாவங்கள் எத்தனையோ உள்ளன.
திருமணங்களில் பரக்கத்தான திருமணம் குறைந்த செலவில்
நடத்தப்படும் திருமணம் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கும்போது இன்றைய திருமண
நிகழ்ச்சிகளில் நாம் செலவழிக்கும் ஆடம்பரமான, வீண் விரயமான செலவுகள் அல்லாஹ்வுடைய
சாபத்தைத் தான் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்க
வேண்டிய நம்முடைய திருமண சபைகள் அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றுத் தரக் கூடியதாக
மாறுவது நமது ஆடம்பர செலவுகளால் தான். திருமண மண்டபங்களுக்கான ஒரு நாள் வாடகைக்கே
பல இலட்சக்கணக்கில் செலவுசெய்கிறோம் இது தவிர... மணவிழா மேடைகளை வண்ண வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிப்பதில், பல ஆயிரம், அந்நியர்களுக்கு நம் குடும்பப் பெண்களின்
அழகைக் காட்டுவதற்காக எடுக்கப்படும் வீடியோவுக்காக பல ஆயிரம், ஆடியோவுக்காக பல
ஆயிரம், பந்தல் போடுவதற்கு பல ஆயிரம் (திருமணத்திற்கு வருபவர்கள் அமருவதற்காக,
நிழலுக்காக, தேவையான அளவுக்கு பந்தல் போடுவது குற்றமல்ல.) மார்க்கத்தில்
இல்லாத மாவிலைத் தோரணங்கள் கட்டுவதற்கும், வாழை மரங்கள் நடுவதற்கும், வாழைமரம்
நடுவதற்காக சடங்குகள் செய்வதற்கும், பாட்டுக்கச்சேரிகளுக்கும் பல ஆயிரம்,
மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு பல ஆயிரம், ஒரு திருமணத்திற்கே நான்கு விருந்து
போடுவதற்கும் பல ஆயிரம்..... ஆக பல இலட்சங்கள்
நம்முடைய திருமணங்களில் செலவழிக்கப்படுகிறது. பகட்டுக்காகவும்,
பெருமைக்காகவும் நடத்தப்படும் திருமணங்களில் இன்னும் நிறைய பணங்கள்
வீணாக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மிச்சப்படுத்தி ஏழைக்குமர்களுக்கு திருமணம்
செய்து வைத்தால் நன்மையாவது மிஞ்சும். இது தவிர மணமகன் தங்கம் அணிவது,
நிச்சயதார்த்தம் என்ற பெயரில் வீண் செலவுகள், இத்தனை பேருக்கு விருந்து கொடுக்க
வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை நிர்பந்திப்பதும், மொய் என்ற
அன்பளிப்பை கட்டாயமாக்குவதும், மார்க்கத்தில் இல்லாத செயல்களாகும்
புதுவீடு குடிபோவதில் ஷிர்க்கும்,
பித்அத்தும்
1, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது 2, இந்துக்களைப் போல்
பாலை பொங்க விடுவது 3, திருஷ்டி பொம்மை வைப்பது 4, கட்டிடத் தொழிலாளர்கள்
செய்யும் மாற்று மத சடங்குகளை அனுமதிப்பது 5, ஏதேனும் பிராணியை அறுத்து அதன்
இரத்தத்தை வீட்டுக்கள் தெளிப்பது. 6, அந்தப் பிராணியை முச்சந்தியில் வைத்து இரவோடு இரவாக எரிப்பது 7,
திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது 8, கேஸ் இருந்தும் பழங்காலத்தைப்போல் நடு
வீட்டுக்குள் விறகு அடுப்பு எரிப்பது 9, இந்துக்களைப் போல் குத்து விளக்கு ஏற்றுவது
மேற்காணும் விஷயங்களில் சில ஷிர்க் இல்லா விட்டாலும்
அதற்கு நெருக்கமானதாக இருப்பதால் அத்தகைய விஷயங்களையும் நாம் தவிர்த்துக் கொண்டால்
தான் பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப் படுபவர்களின் பட்டியலில் அல்லாஹ்
நம்மையும் சேர்ப்பான்
வாஸ்து சரியில்லை என்பதற்காக கிராமத்தையே காலி செய்த
மக்கள்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கொண்டி பள்ளி
கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 பேர் வசிக்கின்றனர். 50 வீடுகள் உள்ளன. இந்த
கிராமத்தின் கிழக்கே ஒரு மலை உள்ளதாம். அந்த மலையின் நிழல் இந்த வீடுகளின் மேல்
விழுகிறதாம். இது வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லையாம். இதனால் தங்கள் வாழ்க்கை
வளமாக இருக்காது என்று கிராம மக்கள் கருதி தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்
தருமாறு அதிகாரிகளிடம் மனு கொடுக்க அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்பதால் அந்த
கிராம மக்கள் அனைவரும் ஊரையே காலி செய்து விட்டுப் போய் விட்டனர்
مشاحن: عَنْ أَنَسِ رضي الله عنها أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا
تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا
يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ (بخاري) عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ
فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ
عَلَيْهِ السَّلَامَ فَقَدْ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ
عَلَيْهِ فَقَدْ باءَ بِالْإِثْمِ زَادَ أَحْمَدُ وَخَرَجَ الْمُسَلِّمُ مِنْ
الْهِجْرَةِ (ابوداود) وفي رواية بن أبي شيبة وإن هو سلم فلم يرد عليه ولم يقبل سلامه رد عليه الملك ورد على ذلك الشيطان (مصنف بن أبي شيبة) عَنْ
ابْنِ عَبَّاسٍ
رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَرْتَفِعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا
رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ (ابن ماجة)
பராஅத் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படாத
ஆறு நபர்கள்
عن عائشة رض......
قال رسول الله صلّى الله عليه وسلّم
.... لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ،
وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ
لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ " (رواه البيهقي في شعب الايمان)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக