வியாழன், 10 மார்ச், 2022

அமல்கள் செய்ய ஆரோக்கியம் அவசியம்

 


10-03-2022

SHABAN - 7

 

بسم الله الرحمن الرحيم   

அமல்கள் செய்ய ஆரோக்கியம் அவசியம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




வரும் ரமழானில் அதிகம் அமல் செய்வதற்காக இப்போதிருந்தே மனதாலும் உடலாலும் தயாராக வேண்டும் என்பதை உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு. ரஜபிலும் ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்ற துஆவில் கூட ஆஃபியத்தை தருவாயாக என்ற கருத்தும் உள்ளது. ரமழானுக்கு முன்பே ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஆஃபியத்தை நமக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்துக்கும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது.  காரணம் எங்கோ சில பகுதிகளில் யாரோ சிலருக்கு கொரோனா வந்தாலும் எல்லா மஸ்ஜித்களையும் பூட்டுவார்கள். அமல் செய்ய முடியாமல் போய் விடும்.                                      

அமல்செய்ய ஆரோக்கியம் அவசியம் என்பதால் தொழுகைக்குள்ளேயே அதைக் கேட்கும்படி கற்றுத் தந்தார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : بِتُّ عِنْدَ خَالَتِى مَيْمُونَةَ ، فَقَامَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مِنْ نَوْمِهِ ، فَذَكَرَ الْحَدِيثَ فِى صَلاَةِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَفِيهِ : وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ قَالَ :« رَبِّ اغْفِرْ لِى وَارْحَمْنِى ، وَاجْبُرْنِى وَارْفَعْنِى وَارْزُقْنِى وَاهْدِنِى ثُمَّ سَجَدَ ». وعَنْ زَيْدٍ ....  وَعَافِنِى دُونَ قَوْلِهِ وَاجْبُرْنِى وَارْفَعْنِى.  (سنن البيهقي الكبرى )

        عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ، قَالَ : عَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوِتْرِ : اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ، فَإِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ ، وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ(نسائ- ابن خزيمة

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கும் ஆரோக்கியத்தை கேட்கும்படி நபி ஸல் கற்றுத் தருவார்கள்

عن أَبي مَالِكٍ الْأَشْجَعِيُّ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي (مسلم)

ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதற்கு பதிலாக நோயை அல்லாஹ்விடம் கேட்டவரை  நபி ஸல் கண்டித்தார்கள்.

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ اللَّهُمَّ { آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ } قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ (مسلم) بَاب كَرَاهَةِ الدُّعَاءِ بِتَعْجِيلِ الْعُقُوبَةِ فِي الدُّنْيَا- كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ

கருத்து-ஒரு முஸ்லிமை நபி ஸல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் ஆரோக்கியத்துடன் இருந்தவர் தான். ஆனால் திடீரென்று ஏற்பட்ட நோயால் உடல் சுருங்கி கோழிக்குஞ்சு போலாகி விட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க க் கூடாத ஏதேனும் கேட்டீர்களா என்றார்கள். அதற்கு அவர் ஆம் நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் மறு உலகில் ஏதேனும் தண்டனை கொடுப்பதாக இருந்தால் அதை இந்த உலகிலேயே தந்து விடு என துஆச் செய்தேன் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் சுப்ஹானல்லாஹ் அவ்வாறு கேட்கலாமா.. அவ்வாறு அல்லாஹ் தந்தால் உங்களால் தாங்க முடியுமா.. நீங்கள் அல்லாஹ்விடம் ரப்பனா ஆதினா... யாஅல்லாஹ் இங்கேயும் நலவைத் தா.. மறுமையிலும் நலவைத் தா.. என்று தான் கேட்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே அவர் கேட்டார். நலம் பெற்றார்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري

இரண்டு நிஃமத்துகளை சரியாக பயன்படுத்துவதில் மக்கள் பொடுபோக்காக உள்ளனர்.1.ஆரோக்கியம். 2.ஓய்வு

மறுமையில் ஆரோக்கியம் என்ற நிஃமத்தைப் பற்றியே முதலில் விசாரிக்கப்படும்.

عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَمٍ الْأَشْعَرِيِّ قَال سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنْ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ الْبَارِدِ  (ترمذي

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ « سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ ». ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّانِى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ « فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِى الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ».(ترمذي

துஆக்களில் எது சிறந்தது என ஒருவர் கேட்ட போது ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பது என்றார்கள். அடுத்த நாளும் அதே கேள்வியைக் கேட்ட போது அவ்வாறே பதில் கூறினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே கூறி விட்டு, இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தை அல்லாஹ் உனக்குத் தந்து விட்டால் நீ வெற்றியடைந்து விட்டாய் என்றார்கள்.

வரும் ரமழானில் நின்று தொழும் பாக்கியத்தை அல்லாஹ் அனைவருக்கும் தர வேண்டும்.

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا (وفي رواية قالت لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ) فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهُوَ قَائِمٌ ثُمَّ يَرْكَعُ ثُمَّ سَجَدَ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَإِذَا قَضَى صَلَاتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ(بخاري) بَاب إِذَا صَلَّى قَاعِدًا ثُمَّ صَحَّ أَوْ وَجَدَ خِفَّةً تَمَّمَ مَا بَقِيَ -  وَقَالَ الْحَسَنُ :إِنْ شَاءَ الْمَرِيضُ صَلَّى رَكْعَتَيْنِ قَائِمًا وَرَكْعَتَيْنِ قَاعِدًا. بخاري

நபி ஸல் அவர்கள் நஃபிலான தொழுகைகளைக் கூட தங்களின் வயதான காலத்தில் தான் உட்கார்ந்து தொழுதார்கள். அப்போதும் ருகூவு செய்யும் நேரம் நெருங்கியவுடன் எழுந்து நின்று சுமார் 30, அல்லது 40 ஆயத்துகள் ஓதி விட்டு பிறகு ருகூவு செய்வார்கள்

இலேசான சிரமம் ஏற்படும் என்பதற்காக ஃபர்ளான தொழுகையில் நிற்பதை விட்டு விடக் கூடாது

فَإِنْ لَحِقَهُ نَوْعُ مَشَقَّةٍ لم يَجُزْ تَرْكُ ذلك الْقِيَامِ كَذَا في الْكَافِي وَلَوْ كان قَادِرًا على بَعْضِ الْقِيَامِ دُونَ تَمَامِهِ يُؤْمَرُ بِأَنْ يَقُومَ قَدْرَ ما يَقْدِرُ حتى إذَا كان قَادِرًا على أَنْ يُكَبِّرَ قَائِمًا وَلَا يَقْدِرُ على الْقِيَامِ لِلْقِرَاءَةِ أو كان قَادِرًا على الْقِيَامِ لِبَعْضِ الْقِرَاءَةِ دُونَ تَمَامِهَا يُؤْمَرُ بِأَنْ يُكَبِّرَ قَائِمًا وَيَقْرَأَ قَدْرَ ما يَقْدِرُ عليه قَائِمًا ثُمَّ يَقْعُدَ إذَا عَجَزَقال شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى هو الْمَذْهَبُ الصَّحِيحُ وَلَوْ تَرَكَ هذا خِفْتُ أَنْ لَا تَجُوزَ صَلَاتُهُ كَذَا في الْخُلَاصَةِوَلَوْ قَدَرَ على الْقِيَامِ مُتَّكِئًا الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا وَلَا يُجْزِيهِ غَيْرُ ذلك (فتاوي الهندية)  

ஃபர்ளான தொழுகையை நின்று தொழ முடிந்தாலும் உட்கார்ந்து தொழலாம் என வாதிடுபவரின் ஈமான் பறிபோய் விடும்

قال النووي رحمه اللهوَأَمَّا الْفَرْض فَإِنَّ الصَّلَاة قَاعِدًا مَعَ قُدْرَته عَلَى الْقِيَام لَمْ يَصِحّ فَلَا يَكُون فِيهِ ثَوَاب بَلْ يَأْثَم قَالَ أَصْحَابنَا وَإِنْ اِسْتَحَلَّهُ كَفَرَ وَجَرَتْ عَلَيْهِ أَحْكَام الْمُرْتَدِّينَ كَمَا لَوْ اِسْتَحَلَّ الرِّبَا وَالزِّنَا أَوْ غَيْره مِنْ الْمُحَرَّمَات الشَّائِعَة التَّحْرِيم (شرح النووي على صحيح مسلم) (عمدة القاري)

அல்லாமா அமானீ ஹழ்ரத் கூறியதுசிறிது சிரமம் இருந்தாலும் நின்று தொழ முயற்சி செய்பவருக்கு மிக விரைவில் சிரமமின்றியே நின்று தொழுவதற்கு அல்லாஹ் அருள் புரிகிறான். ஆனால் சிறிய சிரமத்தை காரணம் காட்டி உட்கார்ந்து தொழுவதற்கு முற்பட்டு விடுபவர்களை கடைசி வரை உட்கார்ந்தே தொழும் நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விடுகிறான்.  

சேரில் அமர்ந்து தொழும் கலாச்சாரம் வந்த பின்பு அதில் உட்கார்ந்து தொழுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முற்காலத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களால் நின்று தொழ முடியவில்லையே என்று வருந்தியவர்களாக அமர்ந்து தொழுவார்கள். பிற தொழுகையாளிகளும் இவர்களைக் காணும் போது பாவம் நம்மைப் போல இவர்களால் நின்று தொழ முடியவில்லையே என்று பரிதாபப் படுவார்கள். ஆனால் காலில் சிறிய வலி வந்து விட்டால் போதும் தாங்களும் சிம்மாசனத் தொழுகைக்குத் தகுதி பெற்றவர்கள் என கருதி விடுகின்றனர். சிலர் வீட்டிலிருந்து நன்றாக நடந்து வருவார்கள். மஸ்ஜிதில் உயரமான படிக்கட்டுகளிலும் ஏறி உள்ளே வருவார்கள். வீட்டில் சம்மணம் போட்டு சாப்பிடுவார்கள். தரையில் தாம் விரும்பியது போல் உட்காருவார்கள். இலவச மிக்சி, கிரைண்டர் வாங்க, ஆதார் கார்டு, VOTE ID எடுக்க, ரேஷன் வாங்க மணிக்கணக்கில் நிற்பார்கள். கீழே எது விழுந்தாலும் குனிந்து எடுப்பார்கள். ஆனால் பள்ளிவாசலில் தொழ வந்தால் மட்டும் நாற்காலியில் அமருவார்கள்.    

பெரும்பாலானவர்களுக்கு நின்று தொழ ஆசை இருந்தும் அவர்களைத் தடுப்பது மூட்டு வலி

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்-  உடல் அசைவு இல்லாமல் அமர்ந்த இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும் பிற்காலத்தில் மூட்டு வலி ஏற்படும்.

அமர்ந்தே வேலை செய்பவர்கள் தனியாக நேரம் ஒதுக்கி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

 عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« سَافِرُوا تَصِحُّوا وَتَغْنَمُوا ». سنن الكبرى للبيهقي

عَنْ جَابِرٍ ، قَالَ : شَكَا نَاسٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ فَدَعَا بِهِمْ ، وَقَالَ : عَلَيْكُمْ بِالنَّسْلاَنُ ، فَنَسَلْنَا فَوَجَدْنَاهُ أَخَفَّ عَلَيْنَا.(ابن جزيمة)  حاكم – بيهقي -  طبراني      أى الإسراع فى المشى .  والنسلان هو المشي السريع الذي لا يزعح الماشي ففعل ذلك الصحابة فخف عليهم التعب وذهب عنهم ما كانوا  يجدونه من الاعياء

பள்ளிக்கு நடந்து வருவதைப் பற்றி...

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ. - قَالَ - وَالْبِقَاعُ خَالِيَةٌ فَبَلَغَ ذَلِكَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ « يَا بَنِى سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ ». فَقَالُوا مَا كَانَ يَسُرُّنَا أَنَّا كُنَّا تَحَوَّلْنَا. (مسلم)

நபி ஸல் அவர்களிடம் சில சஹாபாக்கள் வந்து நடப்பதில் ஏற்படும் களைப்பைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் தோள்களைக் குலுக்கி நடந்து செல்லுங்கள் என்றார்கள். அவ்வாறே சஹாபாக்கள் அதை கடைபிடித்தார்கள். அதற்குப் பிறகு நடை என்பது அவர்களுக்கு இலகுவாக ஆகி விட்டது.  நூல்- நஸயீ

இமாம் இப்னு கய்யிம் ரஹ் அவர்கள் நடை என்பது பத்து வகை என்று கூறி அதில் சில நடைகள் சுன்னத்தான நடைகளாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளன என்று விபரிக்கிறார்கள்.

قال ابن القيم رحمه الله في زاد المعاد  المشيات عشرة أنواع،  1.مِشية الهَوْنِ والتكفُّؤ. وهي مِشية عبادِ الرحمن، كما وصفهم بها في كتابه، فقال: {وَعِبَادُ الرّحْمَنِ الّذِينَ يَمْشُونَ عَلَىَ الأرْضِ هَوْناً} [ الفرقان: 63]   وهي مِشية رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فإنه مع هذه المِشية كان كأنما ينحط من صبب، وكأنما الأرضُ تُطوى له، حتى كان الماشي معه يُجْهِدُ نفسَه ورسولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غيرُ مُكْتَرِثٍ، وهي مِشية أولي العزم والهِمة والشجاعة، وهي أعدلُ المِشيات وأرواحُها للأعضاء،

இந்த பத்து விதமான நடைகளில் சில நடைகள் சுன்னத்தாகவும் சில நடைகள் வெறுக்கத்தக்கதாகவும் உள்ளன.  முதலாவதாக கூறப்பட்டதாகிறது. உடல் உறுப்புகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகும். ஃபுர்கான் சூராவில் அல்லாஹ் கூறும் நல்லோர்களின் நடையாகும். நபி ஸல் அவர்களின் நடையாகும். நடந்தால் பணிவுடன் அவர்கள் நடப்பார்கள். அதே நேரத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி இறங்குவதைப் போல அவர்களின் நடை இருக்கும். பூமி அவர்களுக்காக வளைந்து கொடுப்பது போல இருக்கும். நபி ஸல் அவர்களுக்கு சரி சமமாக மற்றவர்கள் வர வேண்டுமென்றால் மற்றவர்கள் ஓடி வந்தால் நபி ஸல் அவர்களின் நடைக்கு சரி சமமாக ஆகும்.  அதாவது நபி ஸல் அவர்கள் நடந்து செல்வது போன்று தான் இருக்கும். ஆனால் கடக்க வேண்டிய தூரத்தை மற்றவர்களை விட வேகமாக கடந்து விடுவார்கள். அவர்களுக்கு சரி சமமாக மற்றவர்கள் நடக்க முடியாது.                              

  2. مِشية التماوت : أن يتماوت في مشيه ويمشي قطعة واحدة، كأنه خشبة محمولة، وهي مِشية مذمومة قبيحة،

3.مشية  انزعاج: أن يمشي بانزعاج واضطراب مشي الجمل الأهوج، وهي مِشيةٌ مذمومة أيضاً،

4. والرابع: السعي.  5. والخامس: الرَّمَلَ، وهو أسرعُ المشي مع تقارب الخُطَا، ويسمى: الخَبب، وفي الصحيح من حديث ابن عمر أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَبَّ في طَوافِهِ ثلاثاً، ومشى أربعاً.

6..السادس: النَّسَلان، وهو العَدْو الخفيف الذي لا يُزعج الماشي، ولا يَكْرِثُهُ. وفي بعض المسانيد أن المشاة شَكَوْا إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من المشي في حجة الوداع، فقال: "اسْتَعِينُوا بالنَّسَلاَنِ". 

7. والسابع: الخَوْزَلى، وهي مِشية التمايل، وهي مِشية، يقال: إن فيها تكسرا وتخنثاً.

8.والثامن: القهقرى، وهي المشية إلى وراء.

9.والتاسع: الجَمَزَى، وهي مِشية يَثِبُ فيها الماشي وثباً.

10.والعاشر: مِشية التبختر، وهي مِشية أُولي العجب والتكبُّر، وهي التي خَسَفَ اللهُ سبحانه بصاحبها لما نظر في عِطْفَيْهِ وأعجبته نفسُه، فهو يتجلجلُ في الأرض إلى يوم القيامة. وأعدلُ هذه المِشيات مِشية الهَوْنِ والتكفُّؤ.

இரண்டாவது நடை நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடப்பது இதுவும் நல்லதல்ல.

மூன்றாவது ஒட்டகம் போன்று சாய்ந்து சாய்ந்து நடப்பது. நான்காவது ஓடுதல் இது ஸயீ செய்யும் போது சுன்னத்

ஐந்தாவது  தோள்களை குலுக்கி கால்களை நெருக்க நெருக்கமாக வைத்து நடப்பது. இது வாஜிபான தவாஃபில் முதல் மூன்று சுற்றுக்களில் சுன்னத். ஆறாவதாக தோள்களை குலுக்கி கால்களை  நெருக்கமாக இல்லாமல் விசாலமாக வைத்து நடப்பது. மேற்கூறப்பட்ட நடை ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது. சஹாபிகள் நடையினால் ஏற்படும் களைப்பை முறையிட்ட போது இந்த நடையை நபி ஸல் அறிவுறுத்தினார்கள். ஏழாவது சோம்பலாக நடப்பது உமர் ரழி அவர்கள் ஒரு வாலிபனை சோம்பலாக நடந்து வருவது கண்டு என்ன உடல் நிலை சரியில்லையா என்றார்கள் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றவுடன் அப்படியானால் நன்றாக நட என்று அவரை எச்சரித்தார்கள்.                           

எட்டாவது  பின்புறமாக நடப்பது. ஒன்பதாவது குதித்து குதித்து நடப்பது பத்தாவது கர்வம் பிடித்தவன் போல நடப்பது. காரூன் பூமியில் விழுங்கப்பட்டது இந்த நடையினால் தான். -  

 உடல் பருமனைக் குறைத்தால் மூட்டு வலி குறையும்.உடலின் எடையைத் தாங்கக்கூடியதே மூட்டுகள் தான். எனவே எடை அதிகமானால் அந்த பாரம் அழுத்தும்போது மூட்டுகளில் வலி ஏற்படும்.           

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا (14)المؤمنون

உடல் எடை குறைவதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம்

عن المقدام بن معد يكرب سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الْآدَمِيِّ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ غَلَبَتْ الْآدَمِيَّ نَفْسُهُ فَثُلُثٌ لِلطَّعَامِ وَثُلُثٌ لِلشَّرَابِ وَثُلُثٌ لِلنَّفَسِ (ابن ماجة

கருஞ்சீரகத்தில்  மூட்டு வலிக்கான நிவாரணம் உண்டு.

عن أَبي هُرَيْرة أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ (بخاري

கருஞ்சீரகம்,ஓமம். சீரகம், வெந்தயம், தனியா,  ஆகியவற்றைப் பொடியாக்கி  காய்ச்சிக் குடித்தால் மூட்டு வலி குறையும்.

சோம்பேறித்தனம் பல பேருக்கு பல வியாதிகளை உண்டாக்கி விடுகிறது.

عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ذَاتَ يَوْمٍ فِى خُطْبَتِهِ..... وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِى لاَ زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لاَ يَتْبَعُونَ أَهْلاً وَلاَ مَالاً وَالْخَائِنُ الَّذِى لاَ يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلاَّ خَانَهُ وَرَجُلٌ لاَ يُصْبِحُ وَلاَ يُمْسِى إِلاَّ وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ ». وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكَذِبَ  (مسلم)

சோம்பேறித்தனத்தால் இம்மை, மறுமை இரண்டுக்கும் பாதிப்பு உண்டாகும். சோம்பேறி வாழ்க்கையில் முன்னேற எவ்வித முயற்சியும் செய்ய மாட்டான். நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள்1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன் நூல்- முஸ்லிம்              

சோம்பேறித்தனம் ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُطَاسُ مِنْ اللَّهِ وَالتَّثَاؤُبُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ وَإِذَا قَالَ آهْ آهْ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْ جَوْفِهِ وَإِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا قَالَ الرَّجُلُ آهْ آهْ إِذَا تَثَاءَبَ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ فِي جَوْفِهِ (ترمذي) بَاب مَا جَاءَ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ- كِتَاب

நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகிறது என்றிருக்க இங்கே கொட்டாவியை ஷைத்தானுடன் இணைத்து கூறியதற்கு காரணம் அவன் தான் மனிதனிடம் அதை மிகவும் விரும்புகிறான். பொதுவாகவே நல்ல செயல்களை மலக்குகளுடனும், கெட்ட செயல்களை ஷைத்தானுடனும் இணைத்து கூறுவதற்கு காரணம் இது தான். மிர்காத்

உடல் பலவீனத்தை விட்டும் நபி ஸல் பாதுகாப்புக் கேட்டுள்ளார்கள்.

عَنْ أَنَسِرَضِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي طَلْحَةَ الْتَمِسْ غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي حَتَّى أَخْرُجَ إِلَى خَيْبَرَ فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ مُرْدِفِي وَأَنَا غُلَامٌ رَاهَقْتُ الْحُلُمَ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ فَكُنْتُ أَسْمَعُهُ كَثِيرًا يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ1 وَالْحَزَنِ2 وَالْعَجْزِ3وَالْكَسَلِ4 وَالْبُخْلِ5 وَالْجُبْنِ6 وَضَلَعِ الدَّيْنِ7 وَغَلَبَةِ الرِّجَالِ8...(بخاري) باب مَنْ غَزَا بِصَبِىٍّ لِلْخِدْمَةِ-كتاب الجهاد

1.நடந்ததை எண்ணி கவலைப்படுவது 2.நடைபெறப் போவதை எண்ணி கவலைப்படுவது 3.இயலாமை உடல் பலவீனம் 4.சோம்பேறித்தனம் 5.கஞ்சத்தனம் 6.வீரமற்ற கோழைதத்தனம் 7.கடன் இரட்டிப்பாகுதல் 8.கடன்காரர்களின் அல்லது அநியாயக்கார ர்களின் அடக்கு முறை

அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ அவருடைய மரணத்திற்கு முன்பு நிறைய அமல் செய்யும் வாய்ப்பைத் தருகிறான்

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي) باب مَا جَاءَ أَنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا لأَهْلِ الْجَنَّةِ وَأَهْلِ النَّارِ-كتاب القدر

ஆரோக்கியத்தை சீர் படுத்த அதிகாலை உடற் பயிற்சி.. அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...

நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.                                  

                                                                                     

ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில்  இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள்.                                                         

பெண்களின் வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்                                                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...