04-03-2022 RAJAB-30 |
|
بسم
الله الرحمن الرحيم மெல்ல மெல்ல வளர்ந்து
வரும் தாமரை விழிப்புணர்வு இல்லாத
முஸ்லிம் சமூகம் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
இஸ்லாமிய எதிரிகளிடம் விழிப்புணர்வோடு இருக்கும்படி இஸ்லாம்
வலியுறுத்துகிறது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ أَوِ انْفِرُوا
جَمِيعًا (71) النساء - خُذُوا
حِذْركُمْ" مِنْ عَدُوّكُمْ أَيْ احْتَرِزُوا مِنْهُ وَتَيَقَّظُوا لَهُ
(تفسير الجلالين
எதிரிகளின்
பலம், வியூகம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் முஸ்லிம் சமூகம் பின்தங்கியே உள்ளது.
ஆனால் நபி ஸல் அவர்கள் எதிரிகளின் நிலைகளை
கண்காணிக்க பல்வேறு தந்திரங்களை கையாண்டார்கள்.
எதிரிகளிடம்
இருக்கும் ஒற்றுமை, விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. உதாரணத்திற்கு ஒன்று
சேரன் மகா தேவி பேரூராட்சியில்
ஐந்து முஸ்லிம்கள் போட்டியிட்டனர். அவர்களின் வாக்குகளை ஒன்று சேர்த்தால் 362
வரும் ஆனால் 186 வாக்குகள் பெற்ற எதிர் அணியைச் சார்ந்தவர் வெற்றி பெற்றார். ஐந்து
முஸ்லிம்களும் தோல்வி.
தமிழகத்திலும்
மெல்ல மெல்ல வேரூன்றி வரும் தாமரை
கடந்த உள்ளாட்சித் தேர்தலில்
தாமரைக் கட்சி வெளித் தோற்றத்தில் தோற்றது
போன்று தெரிந்தாலும் அவர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை.
ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களின் ஓட்டு சதவீதம் தமிழ்நாட்டிலும் சிறிது சிறிதாக
அதிகரித்து வருகிறது. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்கள் பல்வேறு வகையாக உள்ளன.
சாதாரண இந்துக்களாக, பொது சிந்தனையுடன் வாழும் பிற சமய சகோதரர்களிடம்
முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பு மெல்ல மெல்ல விதைக்கப்படுகிறது. நம்மைப் பற்றிய
நல்ல எண்ணம் கொண்டவர்களிடம் தவறான நம்மைப் பற்றிய தவறான எண்ணங்கள்
விதைக்கப்படுகின்றன. இன்னும் பத்து வருடங்கள் இந்த நிலை நீடித்தால் இன்று
யாரெல்லாம் நமது உடன் பிறவா சகோதரர்களாக பழகி வருகிறார்களோ அவர்களில் பலர் நமக்கு
எதிராக ஆகி விடலாம். ஆகவே இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு. இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்கெனவே இந்த சதிக்கு ஆளாகி பல வருடங்கள் ஆகி
விட்டது. அந்த மாநிலங்களில் முஸ்லிம்களுக்கும் மாற்றார்களுக்கும் எந்த விதமான
ஒட்டு உறவும் கிடையாது. அண்டை வீட்டில் ஐம்பது வருடங்கள் வசித்தாலும் அவரது
பெயரைக் கூட தெரியாத அளவுக்கு விரிசல் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கும்
மாற்றார்களுக்கும் மத்தியில் நிலவுகிறது. இதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட வேண்டும்
என பாசிச சக்திகள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் வழி விடக்கூடாது.
எந்த மாற்றார்களிடம் நம்மைப் பற்றிய
வெறுப்புணர்வு விதைக்கப்படுகின்றதோ அதே மாற்றார்களிடம் நம்மைப் பற்றிய நல்ல
எண்ணங்களை விதைக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உண்டு.
1.பள்ளிவாசல்
தோறும் சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தி இஸ்லாம் பற்றிய நல்ல கருத்துக்களைப் பரப்ப
வேண்டும்.
عَنْ
صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ
فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ
أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ
حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ
يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي
قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا (بخاري)
கருத்து- நபி ஸல் அவர்களுடைய இஃதிகாஃபின் போது
மனைவி சஃபிய்யா ரழி வந்தார்கள். திரும்பிச் செல்லும்போது இரவு நேரமாக இருந்ததால்
தெருமுனை வரை நபி ஸல் அவர்கள் உடன் சென்றார்கள். இதை தூரத்தில் இருந்து இருவர்
பார்த்துக் கொண்டிருந்தனர். நபி ஸல் அவர்கள் தன் மனைவியை அனுப்பி வைத்து விட்டு
அவ்விருவரை நோக்கி சற்று நில்லுங்கள் என்றார்கள். பிறகு அவ்விருவரிடமும் இவர் வேறு
யாருமல்ல. என் மனைவி சஃபிய்யா தான் என்றார்கள். அதற்கு அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ்
நாங்கள் உங்களைப் பற்றி தவறாக எதுவும் எண்ணவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி
ஸல் அவர்கள் இப்போது உங்கள் மனதில் எதுவும் இல்லாதிருக்கலாம் ஆனால் ஷைத்தான்
உங்கள் மனதில் ஏதேனும் எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் நான் முந்திக்
கொண்டேன் என்றார்கள்.
படிப்பினை-
இச்சம்பவம் பல படிப்பினைகளை உள்ளடக்கியது. நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை தீய
சக்திகள் பரப்புவதற்கு முன்பே நாம் உஷாராகி, நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகளை
விதைக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
நம்மைப் பற்றி நல்ல சிந்தனைகளை உருவாக்குவதில் பின்வரும்
சம்பவம் முக்கியமானது.
இந்தியா
பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில்
காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா
அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது
பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது
பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள்
கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக்
கொள்வோம் ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான காரியம் செய்ய வேண்டும்.உங்கள்
நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நல்ல
விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத
உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள்
பணம் தரா விட்டாலும் பரவாயில்லை.
2.
முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதில் மீடியாக்களுக்கு பெரும் பங்கு உண்டு.
எனவே முஸ்லிம்களில் பெரும் பெரும் செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இணைந்து
நமக்கென்று சில மீடியாக்களை,சேனல்களை உருவாக்கலாம். நமக்கென்று மீடியாக்கள்
இல்லாததால் அவர்கள் சொல்லும் செய்திகளையே நம்பும் நிலை நீடிக்கிறது.
மீடியாக்களில் வரும் எல்லா செய்திகளையும் உண்மையென
நம்பி விடக்கூடாது
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ
فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا
فَعَلْتُمْ نَادِمِينَ (6)سورة الحجرات
عن ابن عباس في هذه الآية قال: كان رسول الله صلى الله عليه وسلم بَعَثَ
الوليد بن عقبة بن أبي مُعَيْط إلى بني المصطلق ليأخذ منهم الصدقات، وإنهم لما
أتاهم الخبر فرحوا وخرجوا يتلقون رسولَ رسولِ الله صلى الله عليه وسلم، وأنه لما حُدِّثَ
الوليد أنهم خرجوا يتلقونه، رجع الوليد إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا
رسول الله، إن بني المصطلق قد منعوا الصدقة. فغضب رسول الله صلى الله عليه وسلم من
ذلك غضبا شديدا، فبينا هو يحدث نفسه أن يغزوهم إذ أتاه الوفد فقالوا: يا رسول
الله، إنا حُدِّثْنا أنَّ رسولك رجع من نصف الطريق، وإنا خشينا أن ما رده كتاب جاء منك لغضب غضبته علينا، وإنا نعوذ بالله من غضبه وغضب رسوله. وإن النبي صلى الله
عليه وسلم استغشهم وهمّ بهم، فأنزل الله
عذرهم في الكتاب، فقال: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ
بِنَبَإٍ فَتَبَيَّنُوا } إلى آخر الآية (تفسير ابن كثير)
பனூ முஸ்தலக் என்ற கூட்டத்தினரிடம்
ஜகாத் வசூலிப்பதற்காக வலீத் என்பவரை நபி ஸல் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். வசூலகர்
வருகிறார் என்று தெரிந்து தங்களுக்கான ஜகாத்தை அவர்கள் தயாராக வைத்திருந்தார்கள் ஆனால்
அவர் அங்கு செல்லவேயில்லை. அவருக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள பகை காரணமாக
அங்கு செல்லாமலேயே நபி ஸல் அவர்களிடம் வந்து நான் சென்று கேட்டேன் அவர்கள் ஜகாத்
தர மறுத்து விட்டார்கள் என்று பொய் சொன்னார். அதை நம்பி நபி ஸல் அவர்கள் நடவடிக்கை
எடுக்கவும் தயாராகி விட்ட பிறகு அவர்களே நேரடியாக வந்து அல்லாஹ்வின் தூதரே
உங்களில் தூதர் வருவார் என நாங்கள் பொறுமை காத்தோம். அவர் வராததால் நாங்களே கொண்டு
வந்தோம் என்று கூறிய பின்பு தான் உண்மை புரிந்தது. இந்த வசனமும் அப்போது
இறங்கியது.
முஸ்லிம்களை பாசிச வாதிகள் துன்புறுத்தும்
காட்சிகளை நாமே பரப்புவதால் ஏற்படும் விளைவுகள்
முஸ்லிம்களைத் துன்புறுத்தும் காட்சிகளை பாசிச
வாதிகள் மற்றவர்களுக்குப் பகிருவதில் இன்னொரு நோக்கமும் உள்ளது. அதாவது அவர்கள்
தங்களின் சகாக்களுக்கு நீங்களும் இப்படித்தான் உங்களின் பகுதிகளில் முஸ்லிம்களிடம்
நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதும் நோக்கமாகும்.
நபி ஸல் அவர்களுக்கு
சூனியம் செய்யப்பட்ட போது அல்லாஹ்வின் அருளால் அது நீங்கிய பின் அந்த சூனியப்
பொருட்களை வெளியே எடுத்து மக்களிடம் காட்டியிருக்கலாம் அல்லவா என்று ஆயிஷா ரழி அவர்கள்
கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் வேண்டாம். அதை நான் வெளியே காண்பித்தால்
தீயவர்களுக்கு இப்படித்தான் சூனியம் செய்ய வேண்டுமோ என வழி காண்பிப்பதாக ஆகி
விடும் என்று கூறினார்கள். அது மட்டுமல்ல பிறகு அந்தக் கிணறு அப்படியே போட்டு
மூடப்பட்டது. நபி ஸல் அவர்கள் எந்த தவறு நடைபெறக்கூடாது என்று கருதி மறைத்தார்களோ
அதே தவறை நாம் செய்கிறோம்.நமக்கு எதிரான வன்முறைக்காட்சிகளை பலருக்கும் அனுப்பி
பாசிச வாதிகளுக்கு கற்றுத் தருகிறோம்.
عَنْ
عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ يُخَيَّلُ
إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ
دَعَا وَدَعَا ثُمَّ قَالَ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ
شِفَائِي أَتَانِي رَجُلَانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ
رِجْلَيَّ فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ
قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ قَالَ فِيمَا ذَا قَالَ فِي
مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ
ذَرْوَانَ فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ فَقَالَ
لِعَائِشَةَ حِينَ رَجَعَ نَخْلُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ فَقُلْتُ
اسْتَخْرَجْتَهُ فَقَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ وَخَشِيتُ
أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا ثُمَّ
دُفِنَتْ الْبِئْرُ (بخاري) 3268شَرًّاأي في إظهاره كتذكر السحر
وتعلمه .
இந்தியா, பாகிஸ்தான்
பிரிந்த பின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்ட போது அதில்
பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்செய்தி காந்திஜீக்கு சொல்லப்பட்ட
போது காந்திஜீ அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலை தம்மை வந்து பார்க்குமாறு
சொல்லி அனுப்பினார். முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்படுவது பற்றித்தான்
அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட பட்டேல் “காந்திஜீக்கு கிடைத்த தகவல்
மிகைப்படுத்தப்பட்டவை” என்றும் “முஸ்லிம்கள் அந்த
அளவுக்கு கொல்லப்படவில்லை”
என்றும் பதில் கூறி அனுப்பினார். அபுல் கலாம் ஆசாத் கூறுகிறார்- நானும், நேருவும்,
பட்டேலும் காந்திஜீயுடன் பேசிக்கொண்டிருந்தபோது நேருஜீ கவலையுடன் “முஸ்லிம்களை
நாய்களையும், பூனைகளையும் கொல்வது போல கொல்கிறார்கள். அதைத் தடுக்க தம்மால்
ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று வருத்தப்பட்ட போது அருகில் இருந்த
பட்டேல் நேருவின் புகார்கள் அனைத்தும் ஆதாரமாற்றவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக
சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. என்று கூறி உண்மையை மறைத்து பதில் கூறினார்.
காந்திஜீயால் ஒன்றும் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு பட்டேல் என்ன செய்தார்
தெரியுமா
? முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று காட்டுவதற்காக
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆபத்தான ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டதாகவும், டில்லியில் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும்
தாக்குவதற்காக அவைகளை முஸ்லிம்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் சில நாட்கள் கழித்து
செய்தி வெளியிட்டார். நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு சென்ற போது சர்தார்
பட்டேல் எங்களை நோக்கி முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடுத்த
அறையில் உள்ளன. அதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தை ஆரம்பிப்போம் என்றார்.
நாங்கள் அங்கு சென்று மேஜையில்
வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தோம். அங்கு துருப்பிடித்த சமையலறைக்
கத்திகள், தண்ணீர் குழாய்கள், தடுப்பு வேலியிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிகள்
ஆகியவை இருந்தன. அவைகளைக் காட்டி இவை சீக்கியர்களையும், இந்துக்களையும் கொலை செய்ய
முஸ்லிம்களால் திரட்டி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என்றார் பட்டேல். அப்போது அங்கிருந்த
மவுன்ட் பேட்டன் பிரபு அந்தக் கத்திகளை எடுத்துப் பார்த்துக் கொண்டே கிண்டலாகவும்,
கேலியாகவும் சொன்னாராம் “இந்த
ஆயுதங்களை சேகரித்தவர்களுக்கு அபாரமான கற்பனை வளம் உள்ளது. இவைகளைக்கொண்டு
டில்லியைக் கைப்பற்றலாம் என்று கற்பனை செய்கிறார்கள் போலும்” என்றார்.
(மெளலானா
அபுல் கலாம் ஆசாத் எழுதிய நூலில் இருந்து..
நன்றி சமநிலைச் சமுதாயம்)
3.கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்
வியாபாரிகளிடம் உள்ள கசப்பான உண்மை என்னவெனில் மார்வாடிகள் வளருவதற்கு முஸ்லிம்களே
காரணமாக அமைந்து விடுகிறார்கள். மார்வாடியும் முஸ்லிமும் ஒரே தெருவில் கடை
வைத்திருந்தாலும் அவன் இலாபம் குறைவாக விற்று வாடிக்கையாளர்களை கவரும் வித்தையை
முஸ்லிம் அறியாதவராக இருக்கிறார். முஸ்லிம்களே கூட மார்வாடியிடம் சென்று பொருள்
வாங்கும் நிலையை இந்த முஸ்லிம் உருவாக்கி விடுகிறார். இவரின் சாமார்த்தியமின்மை
தான் இதற்குக் காரணம். சென்னையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல குடியிருப்புகள்
மார்வாடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதில் அபாயம் என்னவெனில்
சமீபத்தில் மார்வாடிகள் சிலர் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் கடையில் பொருள் வாங்க
மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
عَنْ عُمَرَ
بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ
رواه ابن ماجة (الجالب :الذي يبيع السلع بربح يسير) عن
اليسع بن المغيرة ، قال : مرَّ رسول الله صلى الله عليه وسلم برجل بالسوق يبيع
طعاما بسعر هو أرخص من سعر السوق ، فقال
تبيع في سوقنا بسِعْر هو أرخص من سعرنا ؟
قال : نعم ، قال : صبرا واحتسابا
؟ قال : نعم قال : أبْشِرْ ، فإن الجالب
إلى سوقنا كالمجاهد في سبيل الله
والمحتكر في سوقنا ، كالملحد في
كتاب الله رواه الحاكم في المستدرك
(سِعْرالسوقமார்க்கெட் விலை) (المحتكرபதுக்குபவன்)
நபி
ஸல் கூறினார்கள். மக்களின் நலன் கருதி குறைந்த இலாபத்திற்கு பொருளை விற்பவர்
அல்லாஹ்வின் மூலம் மறைமுகமாக ரிஜ்க் வழங்கப்படுவார். இதற்கு மாற்றமாக விலை
ஏறட்டும் என்று பொருளை பதுக்குபவர் சபிக்கப்பட்டவர்.
நபி ஸல் அவர்கள் கடை வீதியைக்
கடந்து செல்லும்போது ஒருவர் மற்றவர்களை விட குறைந்த விலைக்கு உணவுப் பொருளை
விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் நபி ஸல் அவர்கள் மற்றவர்களை விட குறைந்த
விலைக்கு நீங்கள் உணவுப் பொருளை விற்கிறீர்களா என்று விசாரித்தார்கள். ஆம் என்று
அவர் கூற, அல்லாஹ்விடம் நன்மையை எதிர் பார்த்து இதை செய்கிறீர்களா என்று
கேட்டார்கள். அதற்கும் அவர் ஆம் என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் உண்மையில் இது
ஜிஹாதுக்கு ஒப்பான நன்மையைப் பெற்றுத் தரும். இதற்கு மாற்றமாக விலை ஏறட்டும் என்று
பொருளை பதுக்குபவர் இறை வேதத்தில் வரம்பு மீறுபவருக்கு ஒப்பானவர் என்று
கூறினார்கள்.
கஸ்டமர்களிடம் மென்மையாக நடப்பது, கடனை
திருப்பிச் செலுத்த முடியாத ஏழைகளுக்கு கடனை தள்ளுபடி செய்வது
عَنْ جَابِرِ
رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا
إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى (البخاري)2076
عن أَبي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ
لِفِتْيَانِهِ تَجَاوَزُوا عَنْهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا
فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ رواه
البخاري2078 سمحاதாராளமாக நடந்து கொள்பவர்
முற்காலத்தில் ஒரு முஸ்லிம் வியாபாரி இருந்தார். தன்னிடம்
பொருள் வாங்கும் ஏழை வாடிக்கையாளர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து தாராளமாக நடந்து
கொள்ளும்படி அவர் தனது கடை பணியாளர்களிடம் கூறுவார். அதனால் அல்லாஹ் அவரின்
பாவங்களை மன்னித்து அவரிடம் தாராளமாக நடந்து கொண்டான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
4.வசதியுள்ள செல்வந்தர்கள் இலாப நோக்கம் இல்லாத முறையில கல்வி
நிறுவனங்களை உருவாக்கி அதில் மாற்று மத சகோதரர்களுக்கும் கல்வியை எளிதாக ஆக்கி
முஸ்லிம்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை மாணவ மாணவிகளிடம் உருவாக்கலாம். இதை
முஸ்லிம்கள் செய்யாத தால் நம்முடைய பிள்ளைகளே பலர் பிற மத கல்லூரிகளில் சேர்ந்து
ஈமானை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. வித்யாலயா என்ற பெயரில் மட்டும் சுமார் 16,000
பள்ளிகள் உள்ளன.
6. எல்லாவற்றுக்கும் மேலாக நம்
அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினால் எதிரிகளை வெல்ல முடியும்.
இதைத் தான் ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறும்போது
இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என அதிகமாக உரத்து
முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டு விலகி
இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப்
பாதுகாப்பதற்கு....இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின்
அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப்
படுவீர்கள் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு விடும்
பெண்களை கருவியாக ஆக்கி பல சதிகள்
செய்யப்படுவதால் பெண்களுக்கு ஈமானிய உணர்வை அதிகரிக்க வேண்டும்.
عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ اتَّخَذَتْ
يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَآهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا
رَسُولَ اللَّهِ هَذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خِنْجَرٌ فَقَالَ لَهَا رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا
هَذَا الْخِنْجَرُ قَالَتْ اتَّخَذْتُهُ إِنْ دَنَا مِنِّي أَحَدٌ مِنْ
الْمُشْرِكِينَ بَقَرْتُ بِهِ بَطْنَهُ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ قَالَتْ يَا رَسُولَ
اللَّهِ اقْتُلْ مَنْ بَعْدَنَا مِنْ الطُّلَقَاءِ انْهَزَمُوا بِكَ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أُمَّ سُلَيْمٍ إِنَّ
اللَّهَ قَدْ كَفَى وَأَحْسَنَ (مسلم
ஹுனைன் போரில் அனஸ் ரழி அவர்களின் தாயார் உம்மு
ஸுலைம் ரழி அவர்களிடம் ஒரு கத்தி இருந்தது. அவரிடம் நபி ஸல் இது எதற்கு என்று
கேட்க, காஃபிர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் இதைக் கொண்டு அவனது வயிற்றைக்
கிழித்து விடுவேன் என்றார்கள். அப்பெண்ணின் வீரம் கண்டு நபி ஸல் சந்தோஷத்துடன்
சிரித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக