25-02-2022 Rajab- 23 |
|
بسم
الله الرحمن الرحيم மிஃராஜ்
படிப்பினை விடுமுறை
இல்லாத தொழுகை |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
மிஃராஜ் இரவு அல்லது பராஅத் இரவு என்றாலே முழுவதும் மிஃராஜைப் பற்றியே அல்லது பராஅத் பற்றியே பேச வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக அதிலிருந்து சில தேவையான படிப்பினைகளை எடுத்துப் பேசுவது தவறில்லை. ஒரு வகையில் அல்லாஹ்வின் வழிமுறையும் இது தான்.
நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறை
வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகவே கூறும் அல்லாஹ் உடன் இருந்தவர்களுக்கு ஏகத்துவம் பற்றி உபதேசம் செய்ததை
விரிவாகக்கூறியுள்ளான். அதுதான் தேவை என்பதால்....
قَالَ
لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ
قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ
مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ
(37) وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا
كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ
عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) يَا
صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ
الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا
أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ
إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ
الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) تفسير ابن كثير
குகைவாசிகளின் எண்ணிக்கையைக்கூட கூறாத அல்லாஹ் அவர்களைப்
பற்றி தேவையான படிப்பினையான விஷயங்களை மட்டும் விபரித்துக் கூறியுள்ளான்.
سَيَقُولُونَ
ثَلَاثَةٌ رَابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ
رَجْمًا بِالْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُلْ رَبِّي
أَعْلَمُ بِعِدَّتِهِمْ (الكهف
தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில்
தொழுகையைப் பற்றி விபரித்துப் பேசுவது பொருத்தமானது.
قَالَ
ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً
فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ
لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلَاةً قَالَ فَارْجِعْ إِلَى
رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا
فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ
أُمَّتَكَ لَا تُطِيقُ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا فَرَجَعْتُ إِلَيْهِ
فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ
فَرَاجَعْتُهُ فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ
لَدَيَّ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَقُلْتُ اسْتَحْيَيْتُ
مِنْ رَبِّي (بخاري) وقال القاضي عياض المراد
بالشطر ههنا الجزء وهو الخمس (شرح)
خمس
وهي خمسون يعني خمس من جهة العدد في الفعل وخمسون باعتبار الثواب(عمدة القاري)
ஐம்பதை ஐந்து ஐந்தாக
குறைத்து கடைசியில் ஐந்து மட்டும் மிச்சமிருக்கும்போது அல்லாஹ் இது ஐந்து தான். அதாவது
எண்ணிக்கையில் ஐந்து. ஆனால் நன்மையில் ஐம்பது 50 நேரத்தொழுகையின் நன்மை கிடைக்கும்
என்று கூறினான்.
عَنْ
ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلَا مِنْ
الْأُمَمِ مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ وَإِنَّمَا
مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا
فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ
فَعَمِلَتْ الْيَهُودُ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ
قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى
قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتْ النَّصَارَى مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ
الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ صَلَاةِ
الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ أَلَا
فَأَنْتُمْ الَّذِينَ يَعْمَلُونَ مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ
الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ أَلَا لَكُمْ الْأَجْرُ مَرَّتَيْنِ
فَغَضِبَتْ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ
عَطَاءً قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لَا
قَالَ فَإِنَّهُ فَضْلِي أُعْطِيهِ مَنْ شِئْتُ (بخاري3459
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதாரணம்.(அதாவது அந்தஸ்தில் வேறுபாடாகிறது)ஒருவரால் கூலிக்கு நியமிக்கப்பட்ட மனிதர்களாவர்! ‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து)
நடுப்பகல் நேரம்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள்
ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலைசெய்தார்கள்.
பிறகு,அஸரிலிருந்து
சூரியன் மறையும் வரை, இரண்டிரண்டு கீராத் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான்
வேலை செய்கிறீர்கள்; யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமுற்று, ‘அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது
எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?’ என்று கேட்டனர். அதற்கு அவர் ‘உங்களுக்கு உரியதை நான்
குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்டார். அவர்கள் ‘இல்லை!”என்றனர். ‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது என்னுடைய அருட்
கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!”என்று அம்மனிதர் கூறினார். அம்மனிதருக்கு உதாரணம்
அல்லாஹ்வாகும். அவன் குறைந்த அமல் மூலமாக நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித்
தருகிறான்.
தொழுகைக்கு ஒரு
போதும் விடுமுறை இல்லை.
கடந்த சில வாரங்களுக்கு
முந்தைய குறிப்பில் தஜ்ஜாலைப் பற்றிய ஹதீஸில் தஜ்ஜால் இருக்கும் நேரத்தில்
ஆறு மாதங்கள் பகலாக இருக்கும் நிலையில் அந்த ஆறு மாத காலத்தில் மொத்தமாக இரண்டு
தொழுகை தொழுதால் மட்டும் போதுமா என்று கேட்கும்போது நபி ஸல் அவர்கள் இல்லை.
நேரத்தைக் கணக்கிட்டு தினமும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள்.
தொழுகைக்கு விதி விலக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.
عن
النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا
رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ
كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ
كَأَيَّامِكُمْ قُلْنَا يَا رَسُولَ
اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ
قَالَ لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم
விளக்கம்- தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக
நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள்
பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம்
நாள் ஒரு மாதம் போன்றும், மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம்
நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள்
கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு
மாதம் பகலாகவே இருக்கும்போது இரண்டு
தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது. மாறாக
சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது
தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர் தொழுது கொண்டிருப்போம். நன்கு இருட்டு இருக்கும். லுஹர் தொழுது கொண்டிருப்போம்.
போர்க்களத்தில்
எதிரிகளின் நிறைந்த, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொழுகை விதி விலக்கு இல்லை
وَإِذَا كُنْتَ
فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ
مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا
مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا
مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ
تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ
مَيْلَةً وَاحِدَةً.. (102) النساء
- أَنَّ
عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ فَوَازَيْنَا الْعَدُوَّ
فَصَافَفْنَا لَهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُصَلِّي لَنَا فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ تُصَلِّي وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى
الْعَدُوِّ وَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْ
مَعَهُ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي
لَمْ تُصَلِّ فَجَاءُوا فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِهِمْ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ كُلُّ
وَاحِدٍ مِنْهُمْ فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً وَسَجَدَ سَجْدَتَيْنِ (بخاري)
இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்புகள் வழியாக வந்துள்ளது. நபி ஸல் அவர்களுடன்
தாத்துர் ரிகாஉ போரில் பங்கெடுத்த சஹாபி கூறினார்கள். அப்போரில் நபி ஸல் அவர்கள்
போர்க்களத்தொழுகை தொழுதார்கள். (ஆயுதங்களை கீழே வைத்து விடாமல் அவற்றை சுமந்தபடியே தொழ வேண்டும்.)நபி ஸல் அவர்களுடன் இருப்பவர்கள் முதல் ஒரு ரக்அத்தை இமாமுடன் தொழும் வரை
மீதிப் பேர் எதிரிகளை நோக்கி நிற்பர். நபி ஸல் அவர்கள் ஒரு ரக்அத்தை முதல்
அணிக்குத் தொழ வைத்து விட்டு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து சற்று நேரம் நிற்பார்கள்.
அதற்குள் இந்த முதல் அணியினர் தங்களுக்கு மீதமுள்ள ஒரு ரக்அத்தை தனியாக சீக்கிரம் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு
எதிரிகளை நோக்கி நின்று கொள்வார்கள். உடனே இரண்டாம் அணியினர் வந்து நபி ஸல்
அவர்களுடன் இரண்டாம் ரக்அத்தில் இணைவார்கள். அவர்களுடன் நபி ஸல் அவர்கள் தன்னுடைய
இரண்டாவது ரக்அத்தை தொழ வைத்து ஸலாம் கொடுத்தவுடன் அந்த அணியினர் தங்களுக்கு
விடுபட்ட ஒரு ரக்அத்தை தனியாக எழுந்து தொழுது ஸலாம் கொடுப்பார்கள்.
படிப்பினை- போர்க் காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள்
தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
ஜமாஅத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து
தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியதை
வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விட்டு
விடப்படும் அமல் தொழுகை தான். லாக்டவுனில் மஸ்ஜித்கள் மூடப்பட்டபோது பலர் தொழவே
இல்லை
உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இஸ்லாத்தில்
தொழுகை முக்கியம்.
عَنِ ابْنِ
عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ
لَهُ وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ
وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ
إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ
الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ
مَسْعُودٍ رضي الله عنه قَالَ:
مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ
الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ(رواه
البيهقى فى شعب الإيمان) (كنز العمال)
மறுமை நாளில் முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவர் தொழுகையில் பேணுதலாக இருக்கவும்
عن أبي سعيد رضي الله عنه أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض
شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته
منهم راكع ومنهم ساجد(كنز العمال)
தொழுகையை விட சிறந்த வேறு வணக்கம் இருந்திருக்கும் என்றால் அல்லாஹ்
மலக்குகளுக்கு அவற்றைச் செய்யும்படி உத்தரவிட்டிருப்பான். ஆனால் மலக்குகள் ருகூவு
சுஜூது போன்ற தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களை மட்டுமே அல்லாஹ்வுக்கு செலுத்தி
வருகின்றனர்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ
رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا
فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ فِيَّ
والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் நான் பூமியில்
உள்ளவர்களை அவர்களின் பாவத்தின் காரணமாக தண்டிக்க நாடும்போது எனது வீட்டை (மஸ்ஜிதை எப்பொழுதும்) வணக்கத்தால் நிலை நிறுத்துபவர்களையும், அல்லாஹ்வுக்காக ஒருவரொருவர் நேசிப்பவர்களையும்
சஹரில் எழுந்து பாவமன்னிப்புத் தேடுபவர்களையும் பார்த்து என் வேதனையை மக்களை
விட்டும் திருப்பி விடுகிறேன்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் காலத்தில் முஸ்லிம்கள் தொழுகையைவிட தொழிலை
பெரிதாக கருதவில்லை
قَالَ عَمْرو بْن دِينَار
الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ
نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة
وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى
أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة " رِجَال
لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه"(النور)ثُمَّ
قَالَ هُمْ هَؤُلَاءِوَقَالَ مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ
وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء وَمِيزَانه فِي يَده خَفَضَهُ
وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (ت: ابن كثير)
அம்ர் ரஹ் கூறினார்கள். நான் ஸாலிம் ரஹ் அவர்களுடன்
மஸ்ஜிதுக்குச் செல்லும்போது கடைவீதியைக் கடந்து செல்வோம். மஸ்ஜிதில் தொழுகைக்காக
மக்களெல்லாம் நின்றிருப்பார்கள். ஆனால் கடை வீதிகளில் அப்படி அப்படியே பொருட்களை
துணியால் மூடிய நிலையில் மட்டும் வைத்து விட்டு அனைவரும் தொழுகைக்குச்
சென்றிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் ஸாலிம் ரஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை
ஓதினார்கள்.
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவரது ஒட்டு மொத்த சொத்து
சுகங்களும் பறிபோனதற்குச் சமம்
عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ
صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري)
தொழுவதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே அல்லாஹ் ஆக்கி
விடுவான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ
تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا
تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள்- அடியானே என்னை
வணங்குவதற்கு நீ நேரம் ஒதுக்கு. உன் மனதில் எல்லாவற்றிலும் மனநிறைவை உண்டாக்கி,
உன் வறுமையை நீக்குவேன். அவ்வாறில்லாமல் எனக்கு நேரமில்லை என்று நீ தட்டிக்
கழித்தால் உனக்கு நேரமே பற்றாத அளவுக்கு உன் கை நிறைய வேலைகளை நான் திணித்து
விடுவேன். உனக்கு மன நிறைவையும் நான் ஏற்படுத்த மாட்டேன்.
உடுத்த உடை இல்லாத நிர்பந்தமான
சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது
ومن لم يجد ثوبا صلى عريانا قاعدا يومئ بالركوع والسجود فإن
صلى قائما أجزاه والأول أفضل (مختصر القدوري
உளூச் செய்த தண்ணீர் இல்லாத
நிர்பந்தமான சூழ்நிலையிலும் தொழுகை கடமை நீங்காது
وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ
أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ
تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا (6) المائدة
தொழுகையை நியமமாக தொழாமல்
விட்டு விட்டு தொழுபவர்களைப் பற்றி...
இறைநேசர் சிர்ரிய்யுச் சிக்திய்யீ
ரஹ் அவர்கள் ஒரு மரத்திடம் பேசினார்கள். அந்த
மரம் கூறியது
ان
الذين يرمونني بالاحجار
என்னைக் கல்லைக் கொண்டு
எரிகிறார்கள் ஆனால் நான் அவர்களுக்கு பழங்களையே தருகிறேன். நான் பல விதங்களிலும்
மனிதர்களுக்கு பயன்படுகிறேன் என்று தன் பெருமைகளைக் கூறிய போது
அப்போது அந்த இறைநேசர் கேட்டார் நீ
இவ்வளவு தூரம் மனிதர்களுக்காக அற்பணிக்கிறாய் ஆனால் உன்னைப் போய் எரிக்கிறார்களே அப்போது
அந்த மரம் கூறியது.நான் செய்வதெல்லாம் சரி தான். ஆனால் என்னிடம் ஒரு தவறு உள்ளது
நான் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து விடுவேன் அதனால் தான் என்னை எரிக்கிறார்கள்
என்றது
فامليت بالهوي هكذا هكذا
அதுபோல் மனிதர்களில் சிலர் ஒரு
நிலையில்லாமல் இப்படியும் அப்படியும் சாய்பவர்களாக சில நேரம் நல்ல மனம் இருந்தால்
தொழுவது சில நேரம் தொழுகையை விடுவது இப்படி இருப்பதால் தான் நரகம்.
உலகில்
வேறு யாரும் தொழாத இடத்தில் தொழுகை நடத்திய மாமனிதர்.
மீன்
வயிற்றுக்குள் இருந்தும் தொழுகையை விடவில்லை
قَالَ اِبْن
مَسْعُود وَابْن عَبَّاس وَغَيْرهمَا رضي الله عنهم
وَذَلِكَ أَنَّهُ ذَهَبَ بِهِ الْحُوت فِي الْبِحَار يَشُقّهَا حَتَّى اِنْتَهَى
بِهِ إِلَى قَرَار الْبَحْر فَسَمِعَ يُونُس تَسْبِيح الْحَصَى فِي قَرَاره
فَعِنْد ذَلِكَ وَهُنَالِكَ قَالَ "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي
كُنْت مِنْ الظَّالِمِينَ" وقيل" فَلَمَّا اِنْتَهَى بِهِ إِلَى أَسْفَل
الْبَحْر سَمِعَ يُونُس حِسًّا فَقَالَ فِي نَفْسه مَا هَذَا ؟ فَأَوْحَى اللَّه
إِلَيْهِ وَهُوَ فِي بَطْن الْحُوت إِنَّ هَذَا تَسْبِيح دَوَابّ الْبَحْر قَالَ
وَسَبَّحَ وَهُوَ فِي بَطْن الْحُوت وَقَالَ عَوْف الْأَعْرَابِيّ لَمَّا صَارَ
يُونُس فِي بَطْن الْحُوت ظَنَّ أَنَّهُ قَدْ مَاتَ ثُمَّ حَرَّكَ رِجْلَيْهِ
فَلَمَّا تَحَرَّكَتْ سَجَدَ مَكَانه ثُمَّ نَادَى يَا رَبّ اِتَّخَذْت لَك
مَسْجِدًا فِي مَوْضِع لَمْ يَبْلُغهُ أَحَد مِنْ النَّاس وَقَالَ سَعِيد بْن
أَبِي الْحَسَن الْبَصْرِيّ مَكَثَ فِي بَطْن الْحُوت أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير
ஆழ் கடலுக்குள் கடல் வாழ் உயிரினங்களின் தஸ்பீஹை யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
கேட்டார்கள். அந்த நேரத்தில் லாஇலாஹ இல்லா அன்த்த... என்ற தஸ்பீஹை ஓதினார்கள்.
அந்த இருட்டான, இறுக்கமான இடத்தில் தொழ முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு
இருந்தது. முதலில் கை, கால்களை அசைத்துப் பார்த்தார்கள். அசைந்தன. மகிழ்ச்சியுடன் தொழுகையை
நிறைவேற்றினார்கள். பிறகு அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் உலகில் வேறு யாருக்கும்
ஏற்படுத்திக் கொள்ளாத மஸ்ஜிதை நான் ஏற்படுத்திக் கொண்டேன் என்று சந்தோஷத்துடன்
கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக