வியாழன், 17 பிப்ரவரி, 2022

செய்த தவறையே மீண்டும் செய்கிறோம்

 


17-02-2022

10-06-1443

 

بسم الله الرحمن الرحيم 

செய்த தவறையே மீண்டும் செய்கிறோம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com 

  என்ற 

முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்









உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட தலைப்பு



قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி விட்டது. சிலருக்கு பட்டாலும் புத்தி வராது என்பது போன்று வழக்கம் போல ஒரே ஏரியாவில் ஏழெட்டு முஸ்லிம்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டி. இலகுவாக எதிரிகளை ஜெயிக்க வைக்கும் யுக்தி எப்போதும் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வார்டில் ஆறு முஸ்லிம்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டனர். 1.ஹயாத் கான். இவர் வாங்கிய ஓட்டுகள் 32.   2. ரசூல் கான் இவர் வாங்கிய ஓட்டுகள் 75.   3.முஸ்ரஃப் அலி. இவர் வாங்கிய ஓட்டுகள்  184.   4. அக்பர் காஜி இவர் வாங்கிய ஓட்டுகள் 239.  5.மன்ஷீகான் இவர் வாங்கிய ஓட்டுகள் 378.   6.காஜி அமீன் இவர் வாங்கிய ஓட்டுகள் 528.  இவர்கள் எல்லோருடைய ஓட்டுகளையும் இணைத்தால் மொத்தம் 1406.  ஆனால் ஜெயித்த து யார் தெரியுமா  மற்ற சமுதாயத்தின் ஒற்றுமை வேட்பாளர் தர்மேந்திரா 589 வாக்குகள் பெற்று ஜெயித்தார். இது ஒரு உதாரணம்தான். இதுதான் நாடெங்கும் முஸ்லிம் வேட்பாளர்களின் நிலை.   

ஒற்றுமை இல்லாததால் எத்தனையோ தோல்வி அனுபவங்கள் கிடைத்த போதும் நம் சமுதாயம் திருந்தவில்லை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ (بخاري) وَقَالَ مُعَاوِيَةُ لاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ (بخاري)

விஷ ஜந்துக்களின் ஒரே பொந்துக்குள் இரண்டு தடவை கை விட்டு முஃமின் கடி வாங்க மாட்டான்.

அனுபவம் என்ற மருத்துவரை விட மிகப் பெரும் மருத்துவர் இல்லை.

விளக்கம்- ஒரு தடவை ஒரு பொந்துக்கள் கையை விட்டு அங்கிருக்கும் பூச்சி கடித்த பின் மற்றொரு முறையும் முஃமின் அங்கேயே திரும்பவும் கையை விட்டு கடி வாங்க மாட்டான். சுதாரித்துக் கொள்வான் என்பது இதன் மேலோட்டமாக விளக்கமாகும். ஆனால் பல்வேறு விஷயங்களுக்குப் பொருந்தும். ஒரு தடவை ஏமாந்தவன் இன்னொரு முறையும் ஏமாற மாட்டான். ஒரு தொழிலில் ஒரு தடவை ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்தவன் ஒரு இன்னொரு தடவையும் அதே முறையில் அத்தொழிலை செய்து ஏமாற மாட்டான். ஒருவனிடம் காசு கொடுத்து ஏமாற்றப்பட்ட பின்பு மீண்டும் அவனிடமே காசு கொடுத்து ஏமாற மாட்டான். என்பது போன்ற பல்வேறு விளக்கங்கள் இதற்கு உண்டு.                                                                

الْمُرَاد الْخِدَاع فِي أُمُور الْآخِرَة دُون الدُّنْيَا . قَالَ : وَسَبَب الْحَدِيث مَعْرُوف ، وَهُوَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَسَرَ أَبَا عَزَّة الشَّاعِر يَوْم بَدْر ، فَمَنَّ عَلَيْهِ ، وَعَاهَدَهُ أَلَّا يُحَرِّض عَلَيْهِ وَلَا يَهْجُوهُ ، وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ، ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيض وَالْهِجَاء ، ثُمَّ أَسَرَهُ يَوْم أُحُد ، فَسَأَلَهُ الْمَنّ ، فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِن لَا يُلْدَغ مِنْ جُحْر مَرَّتَيْنِ "  (شرح النووي علي مسلم)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو عَزَّةَ يَوْمَ بَدْرٍ : يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَعْرَفُ النَّاسِ بِفَاقَتِى وَعِيَالِى وَإِنِّى ذُو بَنَاتٍ قَالَ فَرَّقَ لَهُ وَمَنَّ عَلَيْهِ وَعَفَا عَنْهُ وَخَرَجَ إِلَى مَكَّةَ بِلاَ فِدَاءٍ فَلَمَّا أَتَى مَكَّةَ هَجَا النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَحَرَّضَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُسِرَ يَوْمَ أُحُدٍ أُتِىَ بِهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ : وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ ».  (السنن الكبرى للبيهقي)

ABOO  IZZAA   என்ற கவிஞன் நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடுபவன். அவனை பத்ருப்போரில் நபி ஸல் அவர்கள் சிறை பிடித்தார்கள். அப்போது அவன் என்னை மன்னித்து விடுங்கள். நான் வறியவன். பெண் குழந்தைகளை வைத்திருப்பவன் என்றெல்லாம் கெஞ்சிய போது அவன் மீது இரக்கப் பட்டு அவனிடம் ஃபித்யாவும் வாங்காமல் விட்டு விட்டார்கள். அவன் மக்காவுக்கு வந்த பின் மீண்டும் இணை வைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடினான். மீண்டும் அவன் உஹதில் பிடிபட்டான். அப்போதும் அவன் முன்பு போல கெஞ்சிய போது நபி ஸல் அவர்கள் அப்போது ஒரு முஃமின் இரண்டு தடவை ஏமாற மாட்டான் என்ற வார்த்தையைச் சொன்னார்கள்.

 இந்த ஹதீஸுக்கு ஏற்றவாறு இன்று முஸ்லிம் சமூகம் செய்த தவறையே மீண்டும் செய்து தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

 

கடந்த தேர்தலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் கூட சங்பரிவார் கட்சி ஜெயிப்பதற்குக் காரணம்-அங்கு முஸ்லிம் வேட்பாளர் மூன்று நான்கு கட்சிகளில் தனித்தனியாக போட்டியிட்டார்கள் அது எதிரிகளுக்கே சாதகமாக அமைந்தது. சங்பரிவார் வேட்பாளர் பெற்ற வாக்குளை விட அம்மூன்று முஸ்லிம்களும் சேர்ந்து பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பல மடங்கு அதிகம். எனினும் வாக்குகள் சிதறியதால் எந்த முஸ்லிமும் வெற்றி பெற முடியவில்லை. உபி.யில் முஸ்லிம்கள் நிறைந்த தேவ்பந்த் பகுதியிலும், கேரளாவில் பல இடங்களிலும் இதே தான் நடந்தது. சங்பரிவார் கட்சியைச் சார்ந்த முக்கியப்புள்ளியிடம் இந்த தேர்தலில் நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது முஸ்லிம் அமைப்புகளை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வோம் அதுவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறக்காரணம்முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் பெரும்பாலும் உள்ளது.அந்த நிலை உருவாக விடக்கூடாது என்பதற்காக இத்தகைய சூழ்ச்சி நடைபெறுகிறது. அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக-  

ஒன்றிணைந்து துஆ செய்தால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுமோ

அவ்வாறே ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا 89)يونس -   قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة (تفسير ابن كثير)قَالَ أَبُو الْعَالِيَة وَأَبُو صَالِح وَعِكْرِمَة وَمُحَمَّد بْن كَعْب الْقُرَظِيّ وَالرَّبِيع بْن أَنَس دَعَا مُوسَى وَأَمَّنَ هَارُون أَيْ قَدْ أَجَبْنَاكُمَا فِيمَا سَأَلْتُمَا مِنْ تَدْمِير آلِ فِرْعَوْن .وَقَدْ يَحْتَجّ بِهَذِهِ الْآيَة مَنْ يَقُول إِنَّ تَأْمِين الْمَأْمُوم عَلَى قِرَاءَة الْفَاتِحَة يُنَزَّل مَنْزِلَة قِرَاءَتهَا لِأَنَّ مُوسَى دَعَا وَهَارُون أَمَّنَ وَقَالَ تَعَالَى " قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا " (تفسير ابن كثير)

ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் சொன்னால் ஆமீன் சொன்னவரும் அதே துஆவை ஓதியதாக கருதப்படுவார். எனவே தான் மேற்படி வசனத்தில் மூஸா அலா மட்டும் தான் துஆ செய்தார்கள். ஹாரூன் அலை ஆமீன் மட்டுமே கூறினார்கள். இருப்பினும் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவும் ஏற்கப்பட்டது என்று கூறினான். 

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஞாபகப்படுத்த வேண்டிய நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.

இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி

 

ஒரு விடுமுறை நாளில் முல்லா நஸ்ருத்தீன் இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக் கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். அருகிலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி  என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக்கொண்டு ஓடியது தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் பதறினார்கள். நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை. ஓடவுமில்லை. குறுக்கே வந்த ஒருவர் ஏன்ம்பா.. நாய் உன் இறைச்சிப் பையை தூக்கிக் கொண்டு போகிறது. நீ பதறாமல் நிற்கிறாயே..? என்று கேட்டார். முல்லா சொன்னாராம். நாய் கறியைக் கொண்டு போனாலும் செய்முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.                                               

இதுபோல் இன்று முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களின் அவல நிலையை, குறிப்பாக அரசியலில் உரிய பங்களிப்பு இல்லாததை மேடை தோறும் பேசுகிறார்களே தவிர அதை சீர்படுத்த ஒரே அணியில் ஒன்றாக இணைவது தான் ஒரே வழி என்பதை சிந்திப்பதில்லை.                                          

முடிந்த வரை முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டாலே தீய சக்திகள் நெருங்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் பிரிந்து கிடப்பது போல் நடிக்கிறார்கள்.  உள்ளுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால் உள்ளுக்குள் பிரிந்து கிடக்கிறோம்.     

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                                                              

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

அபூரஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம். ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும்  21 பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் அந்தப் பிரயாணத்த்தில் இருந்த அனைவரும் சாப்பிட்டோம். அதன் பின்பு நபிஸல் அவர்களிடம் அந்தப் பையை என்னிடம் தந்து காலமெல்லாம் இதை நீ பத்திரமாக வைத்துக் கொள். பசி ஏற்படும்போது சாப்பிடு. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கவிழ்த்து எடுக்க க்கூடாது கையை விட்டு மட்டும் எடுக்க வேண்டும் என்று கூறி என்னிடம் தந்தார்கள் அந்தப் பையை நான் நீண்ட காலம் பத்திரமாக வைத்திருந்தேன் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் காலம், ஹழ்ரத் உமர் ரழி அவர்களின் காலம் ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்களின் காலம் வரை பத்திரமாக வைத்திருந்தேன் ஹழ்ரத் உஸ்மான் ரழி அவர்கள் என்று கொல்லப்பட்டார்களோ அதே நாளில் அந்தப் பையும் தொலைந்து விட்டது. ஒற்றுமை சிதைந்த தால் பரக்கத் பறி போனது.       

உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்கள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...