20-05-2022 Shawwal-17 |
|
بسم
الله الرحمن الرحيم திருமணங்களில் தவிர்க்க வேண்டிய
விஷயங்கள் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஷவ்வால்
மாதத்தில் அதிகம் திருமணங்கள் நடப்பதை முன்னிட்டும் ஷவ்வால் மாதத்தில் திருமணம்
செய்வது நபி ஸல் அவர்களின் சுன்னத்தாக இருப்பதை வைத்தும் இந்தத் தலைப்பு
எடுக்கப்பட்டுள்ளது.
عَنْ
عَائِشَةَ رضي الله عنها قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي
قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ
(مسلم
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
கூறினார்கள் -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷவ்வால் மாதத்தில் என்னைத் திருமணம்
செய்தார்கள். சில வருடங்களுக்குப் பின்பு ஷவ்வால் மாதத்தில் தான் தாம்பத்ய உறவை
ஆரம்பித்தார்கள். ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்ததால் நான் எந்த விதத்திலும்
மற்ற மனைவிகளை விட குறைந்து விடவில்லை. என்னை விட யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு உவப்பாக இருந்துள்ளார்கள். என்று ஆயிஷா நாயகி கூறினார்கள்.
மேலும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தான் சார்பில் திருமணம் செய்து
வைக்கும் பெண்களை கணவனிடம் அனுப்பி வைக்கும் வைபவத்தை ஷவ்வாலில் நடத்துவதையே
விரும்புவார்கள்.
فيه استحباب التزويج
والتزوج والدخول في شوال وقد نص أصحابنا على استحبابه واستدلوا بهذا الحديث وقصدت
عائشة بهذا الكلام رد ما كانت الجاهلية عليه وما يتخيله بعض العوام اليوم من كراهة
التزوج والتزويج والدخول في شوال وهذا باطل لا أصل له وهو من آثار الجاهلية كانوا
يتطيرون بذلك لما في اسم شوال من الاشالة والرفع [ شرح النووي على صحيح مسلم ]
ஷவ்வால் என்ற பெயரில் ஊனம் என்ற பொருளும்
இருப்பதால் அந்த வார்த்தையை பீடையாக கருதிய அறியாமைக்கால மக்கள் அம்மாதத்தில்
திருமணம் செய்வதை பீடையாக கருதினார்கள். அந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள்.
இன்றைய காலத்திலும் சிலர்
குறிப்பிட்ட சில மாதங்களில் அல்லது குறிப்பிட்ட சில கிழமைகளில் திருமணம் செய்வதை பீடையாக கருதுகின்றனர். இதுவும் அறியாமைக்
காலத்தின் மூட நம்பிக்கையாகும்.
திருமணங்களை எளிமையாக நடத்துவது சுன்னத்தாகும்.
عَنْ
عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (أحمد
அதற்காக யாருக்கும் தெரியாமல் நடத்துவது சுன்னத்துக்கு மாற்றமாகும்
عَنْ
عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ
بِالدُّفُوفِ (ترمذي
عَنْ مُحَمَّدِ بْنِ
حَاطِبٍ الْجُمَحِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَصْلُ مَا بَيْنَ الْحَرَامِ وَالْحَلَالِ الدُّفُّ وَالصَّوْتُ (ترمذي
ஹராமான முறையில் ஒரு
பெண்ணை அடைவதற்கும் ஹலாலான முறையில் ஒரு பெண்ணை அடைவதற்கும் வித்தியாசம் தஃப்
சப்தமாகும். விளக்கம்- ஹராமான முறையில் ஒரு பெண்ணை அடைபவன் அதை விளம்பரப் படுத்த
மாட்டான். அது போன்றதாக திருமணம் அமைந்து விடக்கூடாது. அதே நேரத்தில் ஊரையே
அழைத்து விருந்து வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
المراد الترغيب إلى إعلان أمر النكاح بحيث لا يخفى على الأباعد
فالسنة إعلان النكاح بضرب الدف وأصوات الحاضرين بالتهنئة أوالنعمة في إنشاد الشعر
المباح (مرقاة
திருமண வைபவங்களில் சலங்கை இல்லாத தஃப் அடிப்பது அக்காலத்தில் வழமையாக இருந்துள்ளது. அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அனுமதித்தார்கள். மஸ்ஜிதில் வைக்கச் சொன்னதின் நோக்கங்கள் பல. 1.
சுன்னத்தான நிகழ்வு மஸ்ஜிதில் நடத்துவது நல்லது. 2. மஸஜிதில் நடத்தினால்
அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் குறையும். 3. இன்ன ஆணுக்கும் இன்ன பெண்ணுக்கும்
திருமணம் நடந்து விட்டது என்று தெரிந்தால் தான் அந்தப் பெண்ணைப் பெண் பார்க்க
யாரும் முயற்சிக்க மாட்டார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலீமா விருந்துக்கு அதிக
முக்கியத்தும் தந்துள்ளார்கள்
عَنْ
أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى
شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ (بخاري
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ
جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهِ أَثَرُ
صُفْرَةٍ فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ
إِلَيْهَا قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ (بخاري
இக்காலத்தில் பல மாப்பிள்ளை வீட்டினர்கள் திருமண நாளின்
செலவுகளை முற்றிலுமாக பெண் வீட்டாரின் தலையில் கட்டி விட்டு தாங்கள் செய்ய வேண்டிய
வலீமாவை மிக மிக சுருக்கமாக நடத்தி விடுகின்றனர். நியாயப் படி திருமண நாளில் இரு
வீட்டாரும் கலந்து கொள்வதால் அதை இருவரும் சேர்ந்து செலவு செய்வதே நியாயம். பெண்
வீட்டார் வசதிக் குறைவாக இருந்தால் அதை முழுவதுமே மாப்பிள்ளை வீட்டார்
பொறுப்பேற்றுக் கொள்வது சிறப்பு. திருமண நாளிலேயே வலீமாவையும் வைத்து இரு வீட்டார்
இணைந்து செலவு செய்யும் பழக்கம் இன்று உள்ளது. அதில் சில கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் சில நிபந்தனைகளுடன் அதுவும் கூடும் என்பது பல மூத்த ஆலிம்களின் ஃபத்வா.
விருந்துகளில் மிகக் கெட்ட விருந்து செல்வந்தர்கள் மட்டும்
அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ
طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ
وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ (بخاري
வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்வது
சுன்னத்தாகும்
وَمَنْ
تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ (بخاري
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ
فَلْيَأْتِهَا (بخاري
وعن جابر : قال : قال
رسول الله صلى الله عليه وسلم : " إذا دعي أحدكم إلى طعام فليجب وإن شاء طعم
وإن شاء ترك " .( مسلم
அங்கு சென்று விட வேண்டும். ஆனால் சாப்பிடுவதும் சாப்பிட முடியாத நிலையை
விருந்தளிப்பவரிடம் கூறுவதும் அவர் விருப்பம்
عن ابن مسعود رضي
الله تعالى عنه: أن النبي صلى الله عليه وسلم قال:
(أجيبوا الداعي، ولا تردوا الهدية، ولا تضربوا المسلمين (بخاري).
عن ابن مسعود
رضي الله تعالى عنهم: أن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال: (إذا دعي أحدكم
إلى طعام فليجب، فإن كان مفطر
ا فليأكل، وإن
كان صائما فليدع بالبركة) (الطبراني) وفي
أخرى للطبراني: (إذا دخل أحدكم على أخيه المسلم فأراد أن يفطر فليفطر إلا أن يكون
صومه رمضان أو قضاء رمضان أو نذرا).
அழைக்கப்பட்ட விருந்துக்காக
நஃபிலான நோன்பை விடுவது தவறல்ல
அழைக்கப்படாத விருந்துக்குச் செல்வது பாவமாகும்
عَنْ
نَافِعٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دُعِيَ فَلَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ
وَرَسُولَهُ وَمَنْ دَخَلَ عَلَى غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ
مُغِيرًا (أبوداود
அழைக்கப்படாத ஒருவர் விருந்துக்கு வந்து அதை
பிறகு விருந்து கொடுப்பவர் அனுமதித்தால்
கூடும்.
عَنْ
أَبِي مَسْعُودٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ يُكَنَّى أَبَا شُعَيْبٍ قَالَ
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَفْتُ فِي
وَجْهِهِ الْجُوعَ فَأَتَيْتُ غُلَامًا لِي قَصَّابًا فَأَمَرْتُهُ أَنْ يَجْعَلَ
لَنَا طَعَامًا لِخَمْسَةِ رِجَالٍ قَالَ ثُمَّ دَعَوْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَامِسَ خَمْسَةٍ وَتَبِعَهُمْ رَجُلٌ فَلَمَّا بَلَغَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَابَ قَالَ هَذَا قَدْ
تَبِعَنَا إِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ وَإِلَّا رَجَعَ فَأَذِنَ لَهُ (مسند احمد
அபூ ஷுஐப் ரழி அவர்கள்
நபி ஸல் அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியை உணரந்து தன்னுடைய பணியாளரிடம்
விருந்து தயார் செய்யச் சொல்லி குறிப்பிட்ட ஐந்து நபர்களை விருந்துக்கு அழைத்தார்.
அவர்களில் நபி ஸல் அவர்களும் ஒருவர். அவ்வாறு அவரது அழைப்பின் பேரில் நபி ஸல்
அவர்கள் வந்த போது அழையா விருந்தாளியாக மற்றொருவர் நபிகளாரின் பின்னால் வந்தார்.
நபி ஸல் அவர்கள் வீட்டுக்கு அருகே வந்தவுடன் அபூ ஷுஐப் ரழி அவர்களிடம் இவர்
எங்களைப் பின் தொடர்ந்து வந்தார். நீங்கள் விரும்பினால் இவரை அனுமதிக்கிறோம் என்ற
போது அந்த சஹாபீ அந்த மனிதருக்கும்
சேர்ந்து அனுமதி தந்தார்.
சில நேரங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண்
வீட்டாரிடம் நாங்கள் இத்தனை பேர் வருவோம் என கட்டாயப்படுத்தி அதற்கான பரிபூரண சம்மதம் இல்லாமல் பெண் வீட்டார்
நிர்பந்த த்தின் அடிப்படையில் செலவு செய்தால் அந்த விருந்தில் பெண் வீட்டாரின்
அழைப்பின்றி கலந்து கொள்வது நல்லதல்ல.
ஒரே நேரத்தில் இரண்டு
பேர் விருந்துக்கு அழைத்தால் ஏதேனும் ஒன்றில் மட்டுமே நம்மால் கலந்து கொள்ள
முடியும் என்றிருந்தால் அதில் யார் நெருங்கிய அண்டை வீட்டாராக இருப்பாரோ அவரது
விருந்தில் கலந்து கொள்வது நல்லது
இருவரில் ஒருவர் முதலில்
அழைத்திருந்தால் யார் முதலில் அழைத்தாரோ அவரது விருந்தில் கலந்து கொள்ளலாம்.
عَنْ حُمَيْدِ بْنِ
عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِذَا
اجْتَمَعَ الدَّاعِيَانِ فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا فَإِنَّ أَقْرَبَهُمَا
بَابًا أَقْرَبَهُمَا جِوَارًا وَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبْ الَّذِي سَبَقَ
(أبو داود
வலீமா விருந்தில் அனாச்சாரங்கள் நடந்தால்
கலந்து கொள்வது கூடுமா
وفي
الهداية قال ومن دعى إلي وليمه أو طعام
فوجد ثمة لعبا أو غناء فلا بأس بأن يقعد ويأكل قال أبو حنيفة رحمه الله ابتليت
بهذا مرة فصبرت وهذا لأن أجابة الدعوة سنة قال عليه الصلاة والسلام من لم يجب
الدعوة فقد عصى أبا القاسم فلايتركها لما اقترنت به من البدعة من غيره كصلاة
الجنازة واجبة الإقامة وإن حضرتها نياحة فإن قدر على المنع منعهم وإن لم يقدر يصبر
وهذا إذا لم يكن مقتدى به فإن كان مقتدى ولم يقدر على منعهم يخرج ولا يقعد لأن في
ذلك شين الدين وفتح باب المعصية على المسلمين والمحكى عن أبي حنيفة رحمه الله في
الكتاب كان قبل أن يصير مقتدى به ولو كان ذلك على المائدة لا ينبغي أن يقعد وإن لم
يكن مقتدى لقوله تعالى { فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين } وهذا كله بعد
الحضور ولو علم قبل الحضور لا يحضر لأنه لم يلزمه حق الدعوة بخلاف ما إذا هجم عليه
لأنه قد لزمه (هداية
சுருக்கம்- ஒரு விருந்தில் அனாச்சாரங்கள்
நடப்பது தெரியாத நிலையில் அங்கு ஒருவர் சென்று விட்டால் வேறு வழியின்றி அங்கு
சாப்பிடுவது சாதாரண மனிதருக்கு அதாவது அவாம்களுக்கு அது தவறல்ல. ஆனால்
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நபராக இருந்தால் அவர் அதைப் புறக்கணிக்க
வேண்டும். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் ஒரு நேரத்தில் இது போன்று
சோதிக்கப்பட்டார்கள். வேறு வழியின்றி அங்கு சாப்பிட்டார்கள். இது அவர்கள் பிரபலமாக
ஆகுவதற்கு முன்பு நடந்த சம்பவமாகும். மக்களிடம் பிரபலம் அடைந்து முன்னுதாரணமான
நபராக ஆன பின்பு அவர்கள் இது போன்ற விருந்துகளில் கலந்து கொள்ள்ளவில்லை. அங்கு
செல்லும் முன்பே அனாச்சாரங்கள் நடப்பது தெரிந்தால் அந்த விருந்தில் கலந்து கொள்வது
கட்டாயமில்லை. அனாச்சாரங்கள் நடப்பது தெரியாத நிலையில் அங்கு ஒருவர் சென்று
விட்டால் வேறு வழியின்றி அங்கு சாப்பிடுவது சாதாரண மனிதருக்கு அதாவது அவாம்களுக்கு
அது தவறல்ல. அதுவும் கூட அனாச்சாரங்கள் நடப்பது வேறு சபையில் இவர் சாப்பிடுவது
இன்னொரு பகுதியில் என்றிந்தால் தான். இவர் உணவு உண்ணும் இடத்திலேயே நடந்தால் அதில்
கலந்து கொள்ளக்கூடாது.
தன் மகள்
விருந்துக்கு அழைத்த போது மகள் வீட்டில் உருவப்படமுள்ள ஸ்கிரீனைப் பார்த்து
திரும்பி விட்டார்கள்
إِجَابَةِ الدَّعْوَةِ إِذَا حَضَرَهَا مَكْرُوهٌ عَنْ
سَفِينَةَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ رض أَنَّ رَجُلًا أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي
طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَ مَعَنَا فَدَعُوهُ فَجَاءَ
فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَيْ الْبَابِ فَرَأَى الْقِرَامَ(5) قَدْ ضُرِبَ
بِهِ فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْهُ
فَانْظُرْ مَا رَجَعَهُ فَتَبِعْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا رَدَّكَ
فَقَالَ إِنَّهُ لَيْسَ لِي أَوْ لِنَبِيٍّ أَنْ يَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا(6)
ابوداود3263
ஹராமான தொழில் செய்பவர்களின் விருந்தில் கலந்து
கொள்வது கூடுமா
عَنْ
عِمْرَانَ بن حُصَيْنٍ، قَالَ:"نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَنْ إِجَابَةِ طَعَامِ الْفَاسِقِينَ". (طبراني
ஒரு திருமணத்திற்கே இரண்டுக்கும் மேற்பட்ட
விருந்துகள் வைக்கலாமா
عَنِ
ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « طَعَامُ
أَوَّلِ يَوْمٍ حَقٌّ وَطَعَامُ يَوْمِ الثَّانِى سُنَّةٌ وَطَعَامُ يَوْمِ
الثَّالِثِ سُمْعَةٌ وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ».(ترمذي
முதல் நாள் விருந்து தேவையானது. இரண்டாம் நாள்
விருந்து சுன்னத். மூன்றாம் நாள் விருந்து பெருமைக்காக செய்யப்படுவதாகும்.
பெருமையடிப்பவரை அல்லாஹ் மறுமையில் கேவலப்படுத்துவான்.
أَنَّ سَعِيدَ
بْنَ الْمُسَيِّبِ دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّانِيَ
فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَقَالَ أَهْلُ سُمْعَةٍ
وَرِيَاءٍ ابوداود
விருந்து
முடிந்தவுடன் விருந்தாளியின் வீட்டில் நீண்ட நேரம் இருந்து அரட்டை அடித்துக்
கொண்டிருப்பது கூடாது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ
يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا
دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ
لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ
وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ (53)
ஒன்று சேர்ந்து
சாப்பிடுவது நல்லது.
الاجتماع الي
الطعام حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ
حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رض أَنَّ أَصْحَابَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا
نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ
فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبارك لكم
فيه أبو داود 3272 قَالَ أَبُودَاوُد إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ
فَوُضِعَ الْعَشَاءُ فَلَا تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ
الدَّارِ
3272
உணவைக் குறை கூறக்கூடாது.
ذم
الطعام عَنْ أَبِي
هُرَيْرَةَرض قَالَ مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
طَعَامًا قَطُّ إِنْ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَه ابوداود 3271
மஸ்ஜித்கள்
தோறும் மணமக்களுக்கு கவுன்சிலிங் தருவது காலத்தின் கட்டாயம்
எதற்கெல்லாமோ
இன்றைக்கு கவுன்சிலிங் பயிற்சிகள் தரப்படுகிறது ஆனால் கணவன் மனைவி இருவரும்
இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அனுசரித்து வாழ வேண்டும் என்ற பயிற்சி இல்லாத தால்
பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. எனவே மஸ்ஜித்கள் தோறும் மணமக்களுக்கு
கவுன்சிலிங் தருவது காலத்தின் கட்டாயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக