வியாழன், 12 மே, 2022

குர்ஆனைக் கற்பது எளிதானது

 


13-05-2022

SHAWWAL - 11

 

بسم الله الرحمن الرحيم 

 குர்ஆனைக் கற்பது எளிதானது

(கடந்த வாரத் தொடர்)

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



உலகின் மற்ற வேதங்களை விட குர்ஆன்  கற்றுக் கொள்வதற்கும் மனனம் செய்வதற்கும் எளிதானது

குர்ஆனுடைய மொழியான அரபு மொழியும் மற்ற மொழிகளை விட எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر أي سهلناه للحفظ   وأعنا عليه من أراد حفظه فهل من طالب لحفظه فيعان عليه (قرطبي

மற்ற மொழிகள் காலத்திற்குத் தகுந்தாற்போல மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கும். ஆனால் அரபு மொழி அவ்வாறல்ல. உதாரணமாக தமிழ் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பேசிய, எழுதிய தமிழுக்கும் அதே பகுதியில் இப்போது வசிக்கும் மக்கள் பேசும், எழுதும் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் எழுதிய சுழி எழுத்துக்கள் இப்போது இல்லை. அத்தகைய தாத்தா ஒருவர் நமக்கு தமிழ் கற்றுத் தந்தால் உங்க தமிழ் எங்களுக்கு வராது என்று சொல்வோம்.

ஆங்கிலத்திலும் கூட கழிவறைக்கு ஒருநேரத்தில் டாய்லெட் என்றார்கள்.தற்போது REST ROOM என்று மருவியுள்ளது. இன்னும் பல வருடங்கள் கடந்தால் டாய்லெட், பாத்ரூம் என்பதெல்லாம் மறந்து விட வாய்ப்புண்டு.               

  ஆனால் அரபு மொழி ஆரம்ப காலத்தில் எவ்வாறு பேசப்பட்டதோ எழுதப்பட்டதோ அவ்வாறே இப்போதும் உள்ளது.   

மற்ற மொழிகளில் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக ஒரு டீ கடைக்குச் சென்று தேநீர் தாருங்கள் என்று ஒருவர் கேட்டால் அவனை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். காரணம் டீ என்ற ஆங்கிலம் தமிழாகவே மாறிப்போனது. பேருந்து என்பதற்கு பதிலாக பஸ் என்ற ஆங்கிலம் தமிழாகவே மாறிப்போனது. ஆனால் அரபி அப்படியல்ல. சஹாபிகளில் எவரேனும் ஒருவரை கப்ரில் இருந்து எழுப்பி அல்லாஹ் இப்போது பேச வைத்தாலும் அவர்கள் பேசும் அரபி இப்போதுள்ள அரபிகளுக்குப் புரியும்.                                                             

கற்றுக் கொள்ள இலகுவான மொழி அரபு மொழி

அரபியில் SMALL  லட்டர் BIG  லட்டர் இடையே வடிவங்கள் மாறுவதில்லை. 29 அரபி எழுத்துக்களைக் கற்று அவை எவ்வாறு இணைகிறது என்று மட்டும் தெரிந்தால் போதும். அது மட்டுமல்ல அந்த 29 எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஒரே வடிவம் கொண்டவை. புள்ளிகள் மட்டுமே மாறும். உதாரணமாக

ب ت ث                     - س ش -                       ج  ح خ -                    د ذ  -                   ر ز                      -  ع غ   -     ض ص-           ط ظ

எழுத்துக்கள் வெவ்வாறாக இருந்தாலும் வடிவங்கள் ஒன்று ஆனால் ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. A என்ற எழுத்து SMALL ஆக எழுதும்போது வடிவமே மாறுகிறது. எழுத்துக்கள் ஒன்று. வடிவங்கள் வெவ்வேறு. காரணம் ஆங்கிலத்தில் SMALL  லட்டர்  BIG  லட்டர் என இரு வகை உண்டு. இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள். இரண்டும் சேர்த்து 54 எழுத்துக்கள்.  அதன் வடிவங்களும் மாறும்.  54 எழுத்துக்களையும் கற்க வேண்டும். ஆனால் அரபி அப்படியல்ல. ஐந்து அல்லது வடிவங்களை மட்டுமே அறிந்து புள்ளிகளையும், ஹரகத்துகளையும் அறிந்தால் போதும்.

மனப்பாடம் செய்வதற்கும் குர்ஆன் எளிதானது

குர்ஆனை மனனம் செய்யப் படுவது போன்று  வேறு எந்த வேதமும் மனனம் செய்யப்படவில்லை.

திருக்குறளை மனனம் செய்தவர்களை எண்ணி விடலாம். ஆனால் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை எண்ணுவது எளிதல்ல.

தவ்ராத் வேதத்தை முழுமையாக மனனம் செய்தவர்கள் நான்கு பேர் மட்டும் தான்

وقال سعيد بن جبير: ليس من كتب الله كتاب يقرأ كله ظاهرا إلا القران؛ وقال غيره: ولم يكن هذا لبني إسرائيل، ولم يكونوا يقرؤون التوراة إلا نظرا، غير موسى وهارون ويوشع بن نون وعزير صلوات الله عليهم، (تفسير القرطبي)

குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள் எத்தனை சிரமமான பாடங்களையும் படித்து விடுவார்கள். அவர்களிடம் மனதில் உள்ள குர்ஆன் கடினமான பாடங்களையும் அவர்களுக்கு இலகுவாக்கி விடும். எனவே தான் வட மாநிலங்களில் மேற்படிப்புக்கான சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்யும்போது ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தருவதுடன் அவர்களுக்கான கட்டணங்களிலும் சலுகை வழங்குகிறார்கள். காரணம் முழுக் குர்ஆனையும் மனப்பாடம் செய்த இவர் கல்லூரியின் பாடங்களையும் நன்றாகப் படித்து நமது கல்லூரிக்கு நற்பெயர் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை தான் இந்த முன்னுரிமைக்குக் காரணம். இதற்கு உதாரணமாக கர்நாடகாவில் உள்ள ஷாஹின் கல்லூரியைக் கூறலாம். இங்கு ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.                   

தவ்ராத்தை யூதர்களின் உள்ளங்களில் இருந்து  அல்லாஹ் முழுமையாக மறக்கடித்து உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளத்தில் மட்டும் அற்புதமாக அதை பதிய வைத்ததால் தான் அவரை கடவுள் என்று யூதர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்

وفي تفسير القرطبي في قوله تعالي "وقالت اليهود عزير ابن الله"أن سبب ذلك القول أن اليهود قتلوا الانبياء بعد موسى عليه السلام فرفع الله عنهم التوراة ومحاها من قلوبهم، فخرج عزير يسيح في الارض، فأتاه جبريل فقال: (أين تذهب) ؟ قال: أطلب العلم، فعلمه التوراة كلها فجاء عزير بالتوراة إلى بني إسرائيل فعلمهم.وقيل: بل حفظها الله عزيرا كرامة منه له، فقال لبني إسرائيل: إن الله قد حفظني التوراة، فجعلوا يدرسونها من عنده.وكانت التوراة مدفونة، كان دفنها علماؤهم حين أصابهم من الفتن والجلاء والمرض ما أصاب وقتل بختنصر إياهم.ثم إن التوراة المدفونة وجدت فإذا هي متساوية لما كان عزير يدرس فضلوا عند ذلك وقالوا: إن هذا لم يتهيأ لعزير إلا وهو ابن الله (تفسير القرطبي

பனீ இஸ்ராயீல் சமூகம் பல நபிமார்களைக் கொன்றதால் அல்லாஹ் அவர்கள் அனைவரின் உள்ளங்களில் இருந்தும் தவ்ராத் வேதத்தை எடுத்து விட்டான். அப்போது உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தஸ்பீஹ் செய்தவர்களாகபுறப்படுவதைக் கண்டு எங்கே செல்கிறீர்கள் என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்க, நான் கல்வியைத் தேடிப் புறப்படுகிறேன். என்று கூறியவுடன் அவர்களுக்கு மட்டும் தவ்ராத்தை வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கற்றுத் தந்தார்கள்.பின்பு தன் சமூகத்திடம் வந்த உஜைர் அலைஹிஸ்ஸலாம் அதை பிறருக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். தவ்ராத்தின் ஏடுகள் பாதுகாப்பிற்காக சில நல்லவர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு புதைக்கப்பட்ட ஏடுகளின் வரிகளும் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தன. யாருக்கும் தெரியாத தவ்ராத்தை உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் இதை மாபெரும் அற்புதம் என மக்கள் கருதியதால் ஒரு கட்டத்தில் மக்கள் இந்த அற்புதம் இறைவனின் மகனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என தவறாக விளங்கி உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

குர்ஆனை மனனம் செய்யப்பட்டது போன்று வேறு எந்த வேதங்களும் மன்னம் செய்யப்பட்டதில்லை

எனவே நபி ஸல் அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை குர்ஆனின் ஒரு புள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது. கவனக் குறைவால் அவ்வாறு நிகழ்ந்தால் அதைத் திருத்த உலகம் முழுவதும் நிறைய ஹாஃபிழ்கள் இருக்கிறார்கள்.

قال الامام الرازي في تفسير هذه الاية" فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا(77الكهف) رأيتُ في كتب الحكايات أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاؤوا إلى رسول الله صلى الله عليه وسلم بحمل من الذهب وقالوا: يا رسول الله نشتري بهذا الذهب أن تجعل الباء تاءاً حتى تصير القراءة هكذا: فأتوا أن يضيفوهما أي أتوا لأن يضيفوهما أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول الله صلى الله عليه وسلم وقال:إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام الله  وذلك يوجب القدح في الإلهية . » فعلمنا أن تغيير النقطة الواحدة من القرآن يوجب بطلان الربوبية والعبودية  (تفسير الرازي)

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் பற்றி குர்ஆன் கூறும் சம்பவத்தில் அன்தாகியா என்ற ஊருக்குச் சென்றார்கள். வெளியூர்வாசிகளை விருந்தாளிகளாக ஏற்க வேண்டும் என்பது அக்காலத்தில் கடமை போன்றே இருந்த து. ஆனால் அவ்வூர் வாசிகள் இவர்களை விருந்தாளிகளாக ஏற்கவில்லை. இதை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இச்சம்பவம் நடந்து நீண்ட காலங்களுக்குப்பின் அவ்வூர்வாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்கத்தால் பெரும் குவியலைக் கொண்டு அல்லாஹிவின் தூதரே இதை ஏற்றுக் கொண்டு அந்த வசனத்தில் உள்ள பா என்ற எழுத்தின் புள்ளியை மட்டும் மேலே மாற்றியமைத்து தா வாக  ஆக்கி விடுங்கள். அதாவது உணவு தர மறுத்தார்கள் என்பதற்கு பதிலாக உணவு தர முன் வந்தார்கள் என மாற்றியமைத்தால் எங்களின் ஊருக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் நீங்கி விடும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை மறுத்து இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்தியதாக ஆகி விடும். அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்துவது அல்லாஹ்வை பொய்ப் படுத்தியதாக ஆகி விடும் என்றார்கள்.       

சிறு வயதிலேயே குர்ஆனையும் மனனம் செய்து அதன் உட்கருத்துக்களையும் அறியும் ஆற்றல் பெற்ற சஹாபிகள்

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ وَقَدْ قَرَأْتُ الْمُحْكَمَ (بخاري) بَاب تَعْلِيمِ الصِّبْيَانِ الْقُرْآنَ- كتاب فضائل القرآن- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ فِي {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لَا نَدْرِي أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ لَا قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلَامَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ (بخاري) باب (فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا )كتاب التفسير

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவின் போது எனக்கு பத்து வயது. அப்போதே குர்ஆனை நான் மனப்பாடம் செய்து விட்டேன்.               

மற்றொரு அறிவிப்பில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தம் ஆலோசனைக் குழுவில் இருந்த மூத்த பத்ரிய்யீன்களுடன் என்னையும் அமர வைப்பார்கள். அப்போது அவர்களில் சிலர் சிறுவரை நம்முடன் அமர வைக்கிறார்களே.. அவருடைய வயதில் நமக்கு மகன்கள் இருக்கிறார்களே என இயல்பான வருத்தமாக வருத்தமடைந்த போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் கல்வியில் சிறந்தவர் என்று கூறி அமைதிப் படுத்தினார்கள். இதை நிரூபிப்பதற்காக ஒரு நேரத்தில் என்னையும் மற்றவர்களையும் அழைத்து சூரத்துன் நஸ்ரை ஓதிக் காட்டி இதன் கருத்து என்ன என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து கொண்டிருக்கிறது. எனவே அதிகம் தஸ்பீஹ் செய்யுங்கள் என்பது தான் இதன் கருத்து என்றார்கள். வேறு சிலர் இதன் விளக்கம் தெரியாது என்றார்கள். வேறு சிலர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை அழைத்து நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள். அப்போது நான் இந்த சூரா மக்கா வெற்றி ஏற்பட்டு விட்டது என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உலக வாழ்வு முடிவையும் அறிவிக்கும் முன்னறிவிப்பு என்றேன். அதற்கு உமர் நீர் விளங்கியது போன்று தான் நானும் விளங்கினேன். (அதை மற்றவர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தவே இவ்வாறு  செய்தேன்) என்றார்கள்.         

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ كَالرَّجُلِ الْمُسْلِمِ لَا يَتَحَاتُّ وَرَقُهَا وَلَا وَلَا وَلَا,- تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ قَالَ ابْنُ عُمَرَ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ لَا يَتَكَلَّمَانِ فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ (وفي رواية فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ) فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ يَا أَبَتَاهُ وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ قَالَ لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا قَالَ عُمَرُ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا (بخاري) باب قوله تعالي( يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ )كتاب التفسير

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள்போலவே இப்னுஉமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களும் சிறு வயதிலேயே குர்ஆனின் உட்கருத்துக்களை அறியும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். இதுபற்றி அவர்கள் கூறும்போது ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் நாங்கள் இருந்த போது மரங்களில் ஒரு மரம் உள்ளது. அது சிறந்த முஃமினுக்கு ஒப்பானது. அதன் இலைகள் உதிராது. எல்லா நிலையிலும் பலன் தரும் அது எந்த மரம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது என்னுடைய மனதில் அது பேரீத்த மரம் என எண்ணம் உதித்த து. ஆனால் அபூபக்கர் உமர் ரழியல்லாஹுஅன்ஹும் போன்ற மூத்தவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் இருந்த போது நான் முந்துவதற்கு வெட்கப்பட்டேன். எனினும் யாரும் பதில் சொல்லாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அது பேரீத்த மரம் என்று பதில் கூறினார்கள். அந்த மஜ்லிஸை விட்டும் நாங்கள் எழுந்த போது நான் என் தந்தையிடம் என் தந்தையே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கும்போது எனக்கு அந்த பதில் தெரியும். என்றேன். அப்போது என் தந்தை நீ அங்கேயே ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்க, அதற்கு நான் நீங்கள் யாரும் பதில் சொல்லாத தால் நான் சொல்லவில்லை என்றேன். அதற்கு என் தந்தை நீ சொல்லியிருந்தால் நான் சந்தோஷம் அடைந்திருப்பேனே என்றார்கள்.                                                          

படிப்பினை- இந்த விளக்கம் குர்ஆனில் இருந்து பெறப்படுகிறது. சஹாபாக்கள் குர்ஆனுடைய விளக்கங்களையும் கற்று சிறு வயதிலேயே கற்று வைத்திருந்ததுடன் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் சஹாபாக்கள் சிறு வயதிலேயே கற்று வைத்திருந்தார்கள். இக்காலத்தில் இந்த இரண்டும் பெரும்பாலும் இல்லை. ஒரு பிரபலமான டிவி ஷோ நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட எல்லா பொதுக் கேள்விகளுக்கும் உடனே பதிலளித்தாள். ஆனால் கடைசியாக இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு கேள்வியாக குரஆனில் ஒரு பெண்ணுடைய பெயரில் ஒரு சூரா உள்ளதே அது எந்த சூரா என்று கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாம் தெரிந்த அவளுக்கு இஸ்லாம் பற்றி அறவே தெரிந்திருக்கவில்லை. இன்று பல பிள்ளைகளின் நிலை இவ்வாறு உள்ளது

இன்றைய காலத்தில் அல்ஹம்து சூராவைக் கூட ஓதத் தெரியாததால் தந்தையின் ஜனாஸாவில் கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்குபவர்கள் நிறைய உள்ளனர்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)

பாழடைந்த வீட்டில் கெட்ட ஜின்களும், ஷைத்தான்களும் தான் குடியிருப்பர். அதுபோல் குர்ஆனின் எந்த வசனமும் மனதில் இல்லாதவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் குடியிருப்பான்

குர்ஆனின் மிக முக்கியமான சூராவான அல்ஹம்து சூரா கூட பலருக்கு சரிவர ஓதத்தெரியவில்லை

منزلة سورة الفاتحة : عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى قَالَ كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي فَقَالَ أَلَمْ يَقُلْ اللَّهُ {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} ثُمَّ قَالَ لِي لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ تَخْرُجَ مِنْ الْمَسْجِدِ ثُمَّ أَخَذَ بِيَدِي فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ قُلْتُ لَهُ أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ قَالَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ (بخاري) باب { فَضْلِ } فَاتِحَةِ الْكِتَابِ- كتاب فضائل القرآن

அல்ஹம்து  சூராவை சரியாக ஓதத் தெரியாதவர்கள்  எத்தனை பேர். ஷாஃபீ மத்ஹபில் அல்ஹம்து சூராவை நன்கு ஓதத் தெரிந்த ஒருவர் அதில் உள்ள 155 எழுத்துக்களில் ஒரு எழுத்தை விட்டாலும், அல்லது உச்சரிப்பை மாற்றி ஓதினாலும், அல்லது அதில் உள்ள 14 ஷத்துகளில் ஒன்றை விட்டாலும் தொழுகை கூடாது

குர்ஆனை நாமும் ஒதி, நம் பிள்ளைகளைகளுக்கும் பயிற்சி அளிப்பதால் நம்முடைய மவ்த்துக்குப் பின் நமக்காக குர்ஆன் ஓதி, துஆ செய்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். அதற்கு மாற்றமாக நம்முடைய ஜனாஸாவில் கூட கலந்து கொள்ள தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கி விடக் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ (مسلم)

عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا(ابواود)

குர்ஆனைக் கற்று அதன்படி அமல் செய்தவரின் பெற்றோருக்கு நாளை மறுமையில் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படும். பெற்றோருக்கே இவ்வளவு மரியாதை என்றால் அமல் செய்தவருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்பதே நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்

عَنْ عَائِشَةَ رضي الله عنها عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ فَلَهُ أَجْرَانِ (ابوداود) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ تَعَالَى يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ  (ابوداود)

அழகிய முறையில் உளத்தூய்மையுடன் குர்ஆனை ஓதுபவருக்காக மலக்குகள் விண்ணில் இருந்து இறங்குவார்கள்

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ قَالَ بَيْنَمَا هُوَ يَقْرَأُ مِنْ اللَّيْلِ سُورَةَ الْبَقَرَةِ وَفَرَسُهُ مَرْبُوطَةٌ عِنْدَهُ إِذْ جَالَتْ الْفَرَسُ فَسَكَتَ فَسَكَتَتْ فَقَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَسَكَتَ وَسَكَتَتْ الْفَرَسُ ثُمَّ قَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَانْصَرَفَ وَكَانَ ابْنُهُ يَحْيَى قَرِيبًا مِنْهَا فَأَشْفَقَ أَنْ تُصِيبَهُ فَلَمَّا اجْتَرَّهُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ حَتَّى مَا يَرَاهَا فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ قَالَ فَأَشْفَقْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ تَطَأَ يَحْيَى وَكَانَ مِنْهَا قَرِيبًا فَرَفَعْتُ رَأْسِي فَانْصَرَفْتُ إِلَيْهِ فَرَفَعْتُ رَأْسِي إِلَى السَّمَاءِ فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ الْمَصَابِيحِ فَخَرَجَتْ حَتَّى لَا أَرَاهَا قَالَ وَتَدْرِي مَا ذَاكَ قَالَ لَا قَالَ تِلْكَ الْمَلَائِكَةُ دَنَتْ لِصَوْتِكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَنْظُرُ النَّاسُ إِلَيْهَا لَا تَتَوَارَى مِنْهُمْ (بخاري)كتاب فضائل القرآن

உஸைத் இப்னு ஹுழைர் ரழியல்லாஹு அன்ஹு என்ற சஹாபீ  பகரா சூராவை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை யஹ்யா வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் அவரது குதிரை கட்டப்பட்டிருந்த து. இவர் ஓத ஓத குதிரை துள்ள ஆரம்பித்த து. இவர் ஓதுவதை நிறுத்தினால் குதிரையும் துள்ளுவதை நிறுத்தியது.  குழந்தைக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயம் இவருக்கு ஏற்பட குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு இவர் வெளியில் எழுந்து வந்து விட்டார். அப்போது அருமையான காட்சியைப் பார்த்தார். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபரித்துச் சொன்னார். நான் வானத்தில் பார்த்தபோது வானமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது போன்றும் மேகம் நிழல் தருவது போன்றும் நான் கண்டேன். அதைக் கண்டு என் குதிரை துள்ளியிருக்கிறது என்று சொன்ன போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் உம்முடைய குர்ஆனின் சப்தத்திற்காக மலக்குகளின் வருகை தான் நீர் பார்த்த காட்சியாகும். நீர் இன்னும் நிறுத்தாமல் ஓதியிருந்தால் நீங்கள் பார்த்த காட்சியை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று கூறினார்கள்.                                 

இன்றும் உளத்தூய்மையுடன் குர்ஆன் ஓதினால் மலக்குகள் வருகை தருகிறார்கள். ஆனால் அந்த ஒரு தடவை மட்டும் அல்லாஹ் கண்கூடாக காட்டித் தந்துள்ளான்.

குர்ஆனின் விளக்கத்தை எவ்வளவு தெரிந்து கொண்டாலும் அது போதாது என்று கருதிய சஹாபாக்கள்

عَنْ مَسْرُوقٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بن مسعود- رضى الله عنه - وَاللَّهِ الَّذِى لاَ إِلَهَ غَيْرُهُ مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ وَلاَ أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّى بِكِتَابِ اللَّهِ تُبَلِّغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ . (بخاري)

குர்ஆனின் எந்த ஒரு வசனமும் இறங்கினாலும் அது எங்கே இறங்கியது எதற்காக இறங்கியது என்பது பற்றி நான் தெரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டேன். இது பற்றி என்னை விட அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அவரிடம் சென்று அந்த விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு நான் சங்கடப்பட மாட்டேன்.- இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு   குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ  أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) شَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை மன ஓர்மையுடன் ஓத வேண்டும். சிந்தனை தடுமாறிய நிலையில் குர்ஆன் ஓதுவதை விட நிறுத்தி விடுவது நல்லது

عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله  عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ  فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ (بخاري

குர்ஆனைக் கற்று பின்பு அதன் தொடர்பு இல்லாமல் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ قَالَ النَّبِىُّ  صلى الله عليه وسلم مَا لأَحَدِهِمْ يَقُولُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ . بَلْ هُوَ نُسِّىَ (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

வயதான காலத்தில் தனக்கு மறந்து விட்ட சூராவை கற்றுத் தரும்படி பெருமானாரிடம் வேண்டிய சஹாபீ

عن عبد الله بن عمرو أن رجلا أتى النبي صلى الله عليه و سلم فقال : يا رسول الله أقرئني القرآن قال : ( اقرأ ثلاثا من ذوات ألر ) قال الرجل : كبر سني وثقل لساني وغلظ قلبي قال رسول الله صلى الله عليه و سلم : ( اقرأ ثلاثا من ذوات حم ) فقال الرجل مثل ذلك ولكن أقرئني يا رسول الله سورة جامعة فأقرأه رسول الله صلى الله عليه وسلم { إذا زلزلت الأرض } حتى بلغ : { من يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره } قال الرجل : والذي بعثك بالحق ما أبالي أن لا أزيد عليها حتى ألقى الله... (صحيح  ابن حبان)

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் மனப்பாடம் செய்வதற்கு சூராவை சொல்லும்படி வேண்டினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அலிஃப் லாம்  ரா  என்று ஆரம்பிக்கும் மூன்று சூராவைச் சொன்ன போது அவர் எனக்கு வயதாகி விட்டது. நாவும் தடுமாறுகிறது. மனதில் மனன சக்தியும் கடினமாகி விட்டது என்றார். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாமீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களைப் பரிந்துரைத்த போது அப்போதும் அவரின் இயலாமையைத் தெரிவித்தார். அதன் பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜில்ஜால் சூராவை கற்றுத் தந்தார்கள். அதைக் கற்றுக் கொண்ட அவர் நான் அல்லாஹ்வை சந்திக்கும் வரை இதுவே எனக்குப் போதும் என்று கூறிச் சென்றார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...