வியாழன், 5 மே, 2022

மக்தப் மதரஸா ஆரம்பம்

 


06-05-2022

SHAWWAL - 4

 

بسم الله الرحمن الرحيم 

மக்தப் மதரஸா ஆரம்பம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





   









எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகிவிடும் -  உர்தூ கவிதை

குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رضي الله عنهعَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلَا رِيحَ لَهَا(ابن ماجة)

குர்ஆனை ஓதுகின்ற முஃமினுக்கு உதாரணம் உத்ருஜ்ஜா பழத்தைப் போன்றது. அதன் மணம் நறுமணமாகும். அதன் சுவையும் இனிமையானதாகும்.குர்ஆனை ஓதாத முஃமினுக்கு உதாரணம் ஈத்தம்பழத்தைப் போன்றதாகும். அதற்கு நறுமணம் கிடையாது அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதக் கூடிய நயவஞ்சகனுக்கு உதாரணம் ரைஹானா பழத்தைப் போன்றதாகும். அதன் மணம் நல்லது அதன் சுவை கசப்பானது. குர்ஆனை ஓதாதவனுக்கு உதாரணம் ஹன்லலா பழததைப் போன்றதாகும்.  அதற்கு நறுமணமில்லை அதன் சுவை கசப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்)குர்ஆனுடன் வாழும் ஒரு முஸ்லிம் நறுமணம் வீசும் ஒரு முஸ்லிமாகவே எப்போதும் காட்சியளிப்பார்.நிச்சயமாக குர்ஆனின் மூலமே உள்ளங்கள் உயிர் பெறுகின்றன.குர்ஆனை ஓதுபவன் நிஃபாக் உடையவனாக இருந்தாலும் அவனையும் நபி ஸல் அவர்கள் நறுமணமுள்ள மலருக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.                                                                                                                                                                 

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة)

جاء شخص وعليه علامات الانكماش إلى أمير المؤمنين علي رضي الله عنه وقال له: أحس في نفسي أني أموت بعد ساعة، فقال له علي رضي الله عنه: (الموت ليس مشكلة، كلنا نموت).فقال له: ماذا أعمل في هذه الساعة؟قال (علي رضي الله عنه (اطلب العلم).

ஹழ்ரத் அலீ ரழி அவர்களிடம் ஒருவர் வந்து எனக்குள் மவ்த்துடைய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதுஎன்றார். அதற்கு அலீ ரழி இது எல்லோருக்கும் வருவது  தானே என்றுகூற, அதற்கு அவர் நான் இறுதிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க,கல்வியை கற்றுக் கொள் என்றார்கள்.                                             

நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லைஇது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.                  

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

عن قيس قال : قال خالد بن الوليد : لقد منعني كثيرا من القراءة الجهاد في سبيل الله  (مسند ابي يعلي

வேறு அறிவிப்புகளில் இச்சம்பவம் சற்று விரிவாக உள்ளது. காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் கடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என அழுதபடி அவர்களின் உயிர் பிரிந்தது                                                 

குர்ஆனை கற்று பின்பு மறந்தவர்களைப் பற்றி....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டபோது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும்.அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டதுகுர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்..

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதியவரை அல்லாஹ் மறுமையிலும் சங்கைப் படுத்துவான்

قال الله تعالي وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5)المزملترتيل القراءة : التأني فيها والتمهل وتبيين الحروف

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை மறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். ஓத ஓத அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) قَالَ كَانَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ عَلِّمُوا أَوْلادَكُمْ وَأَهَالِيكُمَ الْقُرْآنَ فَإِنَّهُ مَنْ كُتِبَ لَهُ مِنْ مُسْلِمٍ يُدْخِلُهُ اللَّهُ الْجَنَّةَ أَتَاهُ مَلَكَانِ فَاكْتَنَفَاهُ فَقَالا لَهُ : إقرأ وَارْتَقِ فِي دَرَجِ الْجَنَّةِ حَتَّى يَنْزِلانهِ حَيْثُ انْتَهَى عِلْمُهُ مِنَ الْقُرْآنِ(مصنف ابي شيبة)عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي)

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து கூடும்               

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

மார்க்கக் கல்வியை கற்றவரின்  சிறப்பைப் பற்றி இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறும் அற்புதமான சம்பவம்

قال ابن بطال في شرح صحيح البخاري: أول ما حدثنى مالك بن أنس حين أتيته طالبًا قال : قدم المدينة غلام من أهل الشام بحداثة سنك فكان معنا يجتهد ويطلب حتى نزل به الموت ، فلقد رأيت على جنازته شيئًا لم أر مثله على أحد من أهل بلدنا ، لا طالب ولا عالم ، فرأيت جميع العلماء يزدحمون على نعشه ، فلما رأى ذلك الأمير أمسك عن الصلاة عليه ، وقال : قدموا منكم من أحببتم ، فقدم أهل العلم ربيعة ، ثم نهض به إلى قبره ، قال مالك : فألحده فى قبره ربيعة ، وزيد بن أسلم ، ويحيى بن سعيد ، وابن شهاب ، وأقرب الناس إليهم محمد بن المنذر ، وصفون بن سليم ، وأبو حازم وأشباههم وبنى اللَّبِن على لحده ربيعة ، وهؤلاء كلهم يناولوه اللَّبِن ، قال مالك : فلما كان اليوم الثالث من يوم دفنه رآه رجل من خيار أهل بلدنا فى أحسن صورة غلام أمرد ، وعليه بياض ، متعمم بعمامة خضراء ، وتحته فرس أشهب نازل من السماء فكأنه كان يأتيه قاصدًا ويسلم عليه ، ويقول : هذا بَلَّغنى إليه العلم ، فقال له الرجل : وما الذى بلغك إليه ؟ فقال : أعطانى الله بكل باب تعلمته من العلم درجة فى الجنة ، فلم تبلغ بى الدرجات إلى درجة أهل العلم ، فقال الله تعالى : زيدوا ورثة أنبيائى ، فقد ضمنت على نفسى أنه من مات وهو عالم سنتى ، أو سنة أنبيائى ، أو طالب لذلك أن أجمعهم فى درجة واحدة فأعطانى ربى حتى بلغت إلى درجة أهل العلم ، وليس بينى وبين رسول الله ( صلى الله عليه وسلم ) إلا درجتان ، درجة هو فيها جالس وحوله النبيون كلهم ، ودرجة فيها جميع أصحابه ، وجميع أصحاب النبيين الذين اتبعوهم ، ودرجة من بعدهم فيها جميع أهل العلم وطلبته ، فسيرنى حتى استوسطتهم فقالوا لى : مرحبًا ، مرحبًا ، سوى ما لى عند الله من المزيد ، فقال له الرجل : ومالك عند الله من المزيد ؟ فقال : وعدنى أن يحشر النبيين كلهم كما رأيتهم فى زمرة واحدة ، فيقول : يا معشر العلماء ، هذه جنتى قد أبحتها لكم ، وهذا رضوانى قد رضيت عنكم ، فلا تدخلوا الجنة حتى تتمنوا وتشفعوا ، فأعطيكم ما شئتم ، وأشفعكم فيمن استشفعتم له ، ليرى عبادى كرامتكم علىَّ ، ومنزلتكم عندى . فلما أصبح الرجل حدث أهل العلم ، وانتشر خبره بالمدينة ، قال مالك : كان بالمدينة أقوام بدءوا معنا فى طلب هذا الأمر ثم كفوا عنه حتى سمعوا هذا الحديث ، فلقد رجعوا إليه ، وأخذوا بالحزم ، وهم اليوم من علماء بلدنا ،

இமாம் மாலிக் ரஹ் கூறியதாக அவர்களின் மாணவர் இப்னு பத்தால் ரஹ் கூறியுள்ளார்கள் ஷாமில் இருந்து ஒரு இளம் வயது மாணவர் கல்வி கற்க மதீனா வந்தார். முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்றார். இந்நிலையில் அவருக்கு மரணம் வந்து விட்டது. அவருடைய ஜனாஸாவில்  கலந்து கொண்டு கொண்ட கூட்டத்தைப் போல் வேறு யாருடைய ஜனாஸாவிலும் நான் கூட்டத்தை நான் காணவில்லை. அப்போதைய அமீர் கூட்டத்தை நோக்கி நீங்கள் யாரை விரும்பவீர்களோ அவர் இவருக்கு தொழ வைக்கட்டும் என்று கூற, ரபீஆ ரஹ் அவர்கள் தொழ வைத்தார்கள். அடுத்து அவரை அடக்கும் பணியில் முக்கியமான பெரும் பெரும் தாபியீன்கள் ஈடுபட்டார்கள். அடக்கம் செய்த மூன்றாவது நாள் அவரை அழகான தோற்றத்தில் மதீனாவின் மிகச் சிறந்த நல்லடியார் கனவில் பார்த்தார். வெண்மையான உருவத்தில் தலைப்பாகையுடன் அழகான குதிரையில் வானத்தில் இருந்து இறங்கி வருபவரைப் போல கண்டு, அவரிடம் அது பற்றி விசாரிக்க, என்னுடைய இல்மின் காரணமாக அல்லாஹ் இந்த நிலையை எனக்குத் தந்தான். நான் கற்ற ஒவ்வொரு கல்வியில் ஒவ்வொரு தலைப்புக்கும் பகரமாக சுவனத்தில் ஒரு அந்தஸ்து விதிக்கப்பட்டது. பிறகும் அல்லாஹ் மலக்குகளிடம் எனது நபிமார்களின் வாரிசாகிய இவருக்கு இன்னும் அந்தஸ்தை அதிகப் படுத்துங்கள். ஏனெனில் எனது நபிமார்களின் சுன்னத்தை கற்று அறிந்தவராக வந்துள்ளார் என்று கூற என் அந்தஸ்து இன்னும் அதிகமாக்கப்பட்டது. இறுதியாக எனது அந்தஸ்துக்கும் நபி ஸல் அவர்களின் அந்தஸ்துக்கும் இடையே இரண்டு படித்தரங்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். முதல் படித்தரம் அதில் நபி ஸல் அவர்களைச் சுற்றி நபிமார்கள் இருந்தார்கள். இரண்டாவது படித்தரம் சஹாபாக்கள் இருந்தார்கள். 3ம் தரஜாவில் இல்மும் அமலும் கொண்ட உலமாக்களும், அவர்களின் மாணவர்களும் இருந்தனர். அவர்களுக்கு நடுவில் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைக் கண்டவுடன் மர்ஹபா மர்ஹபா என்றுகூறி அனைவரும் வரவேற்றனர். மேலும் உலமாக்களே இதோ உங்களுக்கான சுவனம். நான் உங்களை பொருந்திக் கொண்டேன். சுவனத்தில் நீங்கள் விரும்பியதை நான் தருவேன். நீங்கள் யாருக்கு சிபாரிசு செய்கிறீர்களோ அவர்கள் விஷயத்தில் உங்களுடைய சிபாரிசை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அல்லாஹ் கூறியதாக சொல்லி விட்டு கனவை விட்டும் மறைந்து விட்டார்.இந்தக் கனவைக் கண்ட நல்லடியார் அதிகாலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல அந்தச் செய்தி மதீனா முழுவதும் பரவியது. எதுவரையெனில் இமாம் மாலிக் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சிலர் தீனுடைய கல்வியை கற்று பாதியோடு நிறுத்தியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் இச் சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் தங்களுடைய கல்வியை தொடர்பவர்களாக நான் கண்டேன்.                                               

பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அக்கறை காட்டும் பல  பெற்றோர்கள் தீனுடைய கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் கல்வி பெற்றவராவார்.  இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்தர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.ஆனால் இன்று ஸ்கூல், மதரஸா இரண்டையும் தனித்தனியாக பிரித்து விட்ட காரணத்தாலும், மதரஸாவுடைய கல்வியை கற்க முடியாத அளவுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் நேரங்கள் அதைத் தொடர்ந்து வீட்டுப் பாடங்கள் என துன்யாவின் தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் பாவம்.. நம் பிள்ளைகளில் எத்தனையோ பேருக்கு முறையாக தீனுடைய கல்வி கிடைக்காமலேயே இருக்கிறது.                             

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மாரக்கக் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவருடைய தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும்அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம் அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும்.                                                                   

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று எண்ணி சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்                                                                  

மார்க்கக்கல்வியால் உயர்ந்த மற்றொரு மாமேதை இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களைப் பற்றி...

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத் தாய்  என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்ல என்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது

 

 

இளம் வயதிலேயே கல்வியை கற்பது சிறந்தது

عن موسى بن علي عن أبيه:أن لقمان الحكيم قال لابنه :يا بني اِبتغ العلم صغيرا فإن ابتغاء العلم يشق على الكبير يا بني إن الموعظة تشق على السفيه كما يشق الوعث الصعود على الشيخ الكبير (الفقيه والمتفقه للخطيب البغدادي)عن ابن عباس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم حِفظُ الغلامِ كالوَشم في الحَجر عن الحسن البصري  قال:التعلم في الصغر كالنقش في الحجر-قال ابن بشران وحفظ الرجل بعدما كبر كالكتاب على الماء-قال علقمة :ما حفظتُ وأنا شاب فكأني أنظر إليه في قرطاس أو ورقة- عن معمر قال :جالست قتادة وأنا ابن أربع عشرة سنة فما سمعت منه شيئا وأنا في , ذلك السن إلا وكأنه مكتوب في صدري (الفقيه والمتفقه للخطيب البغدادي)

சிறு வயதில் தீன் கல்வி கற்பது சிற்பத்தில் செதுக்கும் ஓவியம் போல ...

ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறினார்கள் முதிய வயதில் மனப்பாடம் என்பது தண்ணீர் மீது எழுதுவது போல என்று கூறினார்கள்.  அல்கமா ரழி கூறினார்கள். இளம் வயதில் நான் கற்ற கல்வி என் மனதில் பதிந்தது. நான் பார்க்காமல் ஓதும்போது பேப்பரில் உள்ளதைப் படிப்பது போன்று இருக்கும். மஃமர் ரஹ் அவர்கள் கூறும்போது நான் 14 வயதில் கதாதா ரழி அவர்களிடம் கல்வி கற்றேன். அப்போது  நான் கற்ற அனைத்தும் என் மனதில் அப்படியே பதிந்தது.                                       

முடிவுரை - எந்தப் பொருளை வாங்கினாலும் எதில் பயன்பாடு அதிகம் என்று பார்க்கிறோம். ஒன்றுக்கு ஒன்றுக்கு free  என்றால் கியூவில் நின்று வாங்குவோம். அப்படியானால் உலகக் கல்வி உலக வாழ்வின் நன்மைக்கு மட்டுமே பயன்படும். தீன் கல்வி ஈருலகிலும் பயன்படும்.                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...