திங்கள், 2 மே, 2022

அனைவரிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய பெருநாள்




03-05-2022

ஷவ்வால்- 1

 

بسم الله الرحمن الرحيم  

அனைவரிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய பெருநாள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்







ஈதுப் பெருநாள் என்பது ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நாளாக இருப்பதுடன் அனைவரிடமும் முக மலர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நாளாகவும் உள்ளது. மனஸ்தாபத்தால் பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர வேண்டிய நாளாகவும், நாமாக வலியச் சென்று உடைந்த உறவுகளை ஒட்ட வைக்க வேண்டிய நாளாகவும் மற்ற மனிதர்களின் மீதான நேசத்தை வெளிப்படுத்த வேண்டிய நாளாகவும் உள்ளது.                  

மனிதர்களின் மீதான நேசத்தை விட பொருட்களின் மீதான நேசம் தற்போது அதிகமாகி விட்டது

மனிதர்களை நேசிக்க வேண்டும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்று அப்படியே தலைகீழாக மாறி பொருட்களை நேசிக்கிறார்கள். மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். தன் சொத்துக்களை பாதுகாப்பதற்காக மனிதர்களை மாடுகள் போல கருதி வேலை வாங்குபவர்கள் பலர் உண்டு. சில நேரங்களில் பெற்ற பிள்ளைகளின் மீதான நேசத்தை விட பொருட்களின் மீதான நேசம் தான் அதிகமாக இருக்கிறது வெளிநாட்டில் ஒரு பெண் தனது குழந்தையை தானே கொன்று விட்டாள் அதற்குக் காரணம் அந்தக் குழந்தை இவளுடைய T.V. யை கீழே தள்ளி உடைத்து விட்டது என்பதற்காக... அந்தப் பொருளின் மீதான நேசம் பிள்ளை மீது இல்லை.

நகைச்சுவையாக கூறுவார்கள்- ஒருவர் தன் மகனிடம் பக்கத்து வீட்ல போய் ஆணி அடிக்க சுத்தியல் வாங்கிட்டு வாடா!  என்று சொல்லியனுப்ப.. அவன் போய் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்து அப்பா பக்கத்து வீட்ல  சுத்தியல் இல்லைன்னு சொல்லிட்டாங்கப்பா.. என்றான். உடனே தந்தை சரி பரவாயில்லை.. எதுக்கும் இன்னொரு பக்கத்து வீட்லயும் கேட்டுட்டு வா.. என்று அனுப்ப அங்கேயும் இல்லைன்னு மகன் திரும்பி வர.. அப்போது தான் தந்தை  சொன்னாராம் சரி பரவாயில்ல... என்ன பன்றது... நம்ம சுத்தியலையே எடு!

அற்பமான உதவிகளைக் கூட தானும் செய்யாமல் பிறரையும் தடுப்பவனைப் பற்றிய கண்டனம்

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ - فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ - وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3) فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6) وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7) عَنْ أَبِي الْعُبَيْدَيْنِ أَنَّهُ سَأَلَ اِبْن مَسْعُود عَنْ الْمَاعُون فَقَالَ هُوَ مَا يَتَعَاطَاهُ النَّاس بَيْنهمْ مِنْ الْفَأْس وَالْقِدْر وَالدَّلْو وَأَشْبَاه ذَلِكَ (تفسير ابن كثير)

 மற்ற மனிதர்களுக்கு நாம் செய்யும் சின்னச் சின்ன உதவிகளும் பெரும் நன்மையைப் பெற்றுத் தரும்.

عَنْ عَائِشَةَ رضي الله عنها  أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة) - بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ – كِتَاب الْأَحْكَامِ

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும்  சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள  நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.

பிரிந்த உறவினர்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பிக்க வேண்டிய நாள் ஈதுப் பெருநாள்.

மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் பேசாமல் இருப்பது கூடாது. குறைந்த பட்சம் ஸலாம் கூறுவதாலும் அந்தப் பாவம் நீங்கும்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم ( شرح الأربعين النووية للإمام النووي رحمه الله) -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

விளக்கம்- தன் சொந்த விஷயத்திற்காக பகையுடன் இருப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது. தீனுடைய விஷயத்திற்காக சில நாட்கள் ஒருவரிடமும் பேசாமல் இருப்பது தவறல்ல. நபி ஸல் அவர்கள் வேண்டுமென்றே போருக்கு வராமல் பின் தங்கிய சிலரிடம் பேசாமல் இருந்தார்கள்.                                                             

தன் சகோதரரிடம் ஒரு வருடம் பேசாமல் இருப்பது  அவரைக் கொன்று இரத்தத்தை ஓட்டுவதற்குச் சமம்.

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) أي المجازي غيره بمثل فعله

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

மிஸ்தஹ் என்பவர் அபூபக்கர் ரழி அவர்களின் சிறிய தாயாரின் மகன் ஆவார். இவருக்கு மாதாமாதம் உதவித் தொகையை அபூபக்கர் ரழி அவர்கள் வழங்கி வந்தார்கள். இவர் ஆயிஷா ரழி அவர்கள் மீதான அவதூறு விஷயத்தில் இவரும் தலையிட்டு விட்டார். பின்பு தவ்பா செய்தார். அவதூறுக்காக தண்டனையும் தரப்படு விட்டது. இருந்தாலும் தன்னிடம் உதவித் தொகை பெற்று வந்த நிலையிலும் தன் மகள் மீது அவதூறு சொன்னதால் இவர் மீது  அபூபக்கர் ரழி அவர்களுக்கு ஏற்பட்ட வருத்தம் காரணமாக இவருக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி நீங்கள் ஒரு தவறு செய்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்புவீர்கள் அல்லவா.. உங்களைப் போன்றவர்கள் இவ்வாறு சத்தியம் செய்யக் கூடாது என்றவுடன் உடனே அபூபக்கர் ரழி அவர்கள் தான் சொன்னதை வாபஸ் பெற்று தொடர்ந்து உதவி செய்தார்கள்

கண் கூடாக பார்க்காமல் பிறரைப் பற்றி தவறாக எண்ணுவதும் பகைமையை உண்டாக்கும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ (الحجرات12) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا (بخاري)

عَنْ حَارِثَةَ بن النُّعْمَانِ قَالَ:قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثٌ لازِمَاتٌ لأُمَّتِي :الطِّيَرَةُ وَالْحَسَدُ وَسُوءُ الظَّنِّ فَقَالَ رَجُلٌ :مَا يُذْهِبُهُنَّ يَا رَسُولَ اللَّهِ مِمَّنْ هُوَ فِيهِ ؟ قَالَ:إِذَا حَسَدْتَ فَاسْتَغْفَرِ اللَّهَ، وَإِذَا ظَنَنْتَ فَلا تُحَقِّقْ ،وَإِذَا تَطَيَّرْتَ فَامْضِ (طبراني

ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்து பழகுவதாலும் பகைமை நீங்கி உறவு மலரும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ تَهَادَوْا تَحَابُّوا (حاكم) وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ (ترمذي) عَنْ أَنَسٍ :أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  لَوْ أُهْدِىَ إِلَىَّ كُرَاعٌ لَقَبِلْتُ وَلَو دُعِيتُ إِلَى ذِرَاعٍ لأَجَبْتُ وَكَانَ يَأْمُرُنَا بِالْهَدِيَّةِ صِلَةً بَيْنَ النَّاسِ (بيهقي)

நற்குணத்தின் அடையாளங்களில் ஒன்று மலர்ந்த முகம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الْأَذَى (ترمذي

நற்குணம் என்பது மலர்ந்த முகத்துடன் இருப்பது, உபகாரம் செய்வது, யாருக்கும் தீங்கு தராமல் இருப்பது என அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறினார்கள்.                             

மனிதனுக்கு மட்டும் அல்லாஹ் தந்த மிகப் பெரும் அருட்கொடைகள்தான் புன்சிரிப்பு, முக மலர்ச்சி ஆகியவை. மற்ற ஜீவராசிகளிடம் இந்த அருட்கொடைகளைப் பார்க்க முடியாது. ஒரு முஃமின் மற்ற மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடன், இன்முகத்துடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.                         

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18) فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ (19)النمل

இறைத்தூதர் சுலைமான் (அலைஹி வஸல்லம்) அவர்கள் எறும்பு பேசியதைக் கேட்டு சிரித்ததாக குர்ஆன் கூறுகிறது.அவர்கள் எறும்புப்புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே!உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாதுஎன்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்அலை) புன்னகை சிந்தி சிரித்தார்கள். (அல்குர்ஆன் 27 :18)       

இந்த எறும்பு தனது கூட்டத்தையும் மதிக்கும் வகையில் யாஅய்யுஹ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மட்டுமன்றி, சுலைமானும் அவரது படையினரும் தெரியாமல் நம்மை மிதித்து விடலாம். தெரிந்தே மிதிக்க மாட்டார்கள் என்று கூறி மனிதர்கள் மீதும் நன்மதிப்பை வெளிப்படுத்தியது.                     

மலக்குகள் விண்ணுலகில் நபி ஸல் அவர்களை வரவேற்ற போது முக மலர்ச்சியுடன் வரவேற்றார்கள்

قَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي بَعْضُ أَهْلِ الْعِلْمِ عَمّنْ حَدّثَهُ عَنْ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنّهُ قَالَ تَلَقّتْنِي الْمَلَائِكَةُ حِينَ دَخَلْت السّمَاءَ الدّنْيَا ، فَلَمْ يَلْقَنِي مَلَكٌ ؟ إلّا ضَاحِكًا مُسْتَبْشِرًا ، يَقُولُ خَيْرًا وَيَدْعُو بِهِ حَتّى لَقِيَنِي مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ . فَقَالَ مِثْلَ مَا قَالُوا ، وَدَعَا بِمِثْلِ مَا دَعَوْا بِهِ إلّا أَنّهُ لَمْ يَضْحَكْ وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ مَا رَأَيْت مِنْ غَيْرِهِ . فَقُلْت لِجِبْرِيلَ يَا جِبْرِيلُ مَنْ هَذَا الْمَلَكُ الّذِي قَالَ لِي كَمَا قَالَتْ الْمَلَائِكَةُ وَلَمْ يَضْحَكْ ( إلَيّ ) ، وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ الّذِي رَأَيْتُ مِنْهُمْ ؟ قَالَ فَقَالَ لِي جِبْرِيلُ : أَمَا إنّهُ لَوْ ضَحِكَ إلَى أَحَدٍ كَانَ قَبْلَك ، أَوْ كَانَ ضَاحِكًا إلَى أَحَدٍ بَعْدَك ، لَضَحِكَ إلَيْك ، وَلَكِنّهُ لَا يَضْحَكُ هَذَا مَالِكٌ خَازِنُ النّارِ (سيرة ابن هشام

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் முதல் வானில் நான் நுழைந்த போது என்னை சந்தித்த மலக்குகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். எனக்காக துஆ செய்தனர். அவர்களில் ஒரு மலக்கு மட்டும் எல்லோரையும் போல் வாழ்த்தினார் ஆனால் அவர் முகத்தில் மட்டும் முகமலர்ச்சியைக் காண முடியவில்லை அதற்கு நான் காரணம் கேட்டபோது அவர் தான் நரகத்தின் காவலாளி மாலிக் அலைஹ்ஸ்ஸலாம் அவர் இதற்கு முன்பு யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்தாலோ அல்லது இதற்குப் பின்பும் யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்திருந்தால் நிச்சயம் உங்களைக் கண்டு சிரித்திருப்பார். அவர் இதுவரை சிரித்த தில்லை. காரணம் நரகத்தைக் கண்டதில் இருந்து அவர் சிரித்ததில்லை. என்று பதில் கூறப்பட்டது.                                    

நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்

عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லைஎன்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்குஎன்று பிரார்த்தனை செய்தார்கள்.                                    

நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي)عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம்.(அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).

அநாகரீகமாக நடந்து கொண்ட கிராமவாசியிடமும் புன்னகையை வெளிப்படுத்தியநபி ஸல்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري) باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ-كتاب اللباس 5809

அனஸ் ரழி கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான்நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்தஒரு கிராமவாசிநபி ஸல் அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். நூல்: புகாரி 5809

தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள்தான் அதிகம் உண்டு.

عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا : حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ : كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى

ஜைதுப்னு தாபித் ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.) நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன் இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348

ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும்.அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள்.நூல்: புகாரி 2348

முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல் யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.

عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள்.

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் உப் (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. 

அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.                  

பொதுவாக நற்குணத்தின் சிறப்பு

இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي

 

நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]

உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின்அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.

படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம்

திருமணம் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிய வருகிறது

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...