26-வது தராவீஹ்
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) البروج
இந்த வசனத்திற்கு விளக்கமாக தஃப்ஸீர்களில் பின்வரும் இளைஞரின்
சம்பவம் கூறப்பட்டுள்ளது
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى
عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ
قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ
السِّحْرَ فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا
سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا
أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ فَإِذَا أَتَى السَّاحِرَ
ضَرَبَهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ إِذَا خَشِيتَ السَّاحِرَ
فَقُلْ حَبَسَنِي أَهْلِي وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ حَبَسَنِي السَّاحِرُ
فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتْ النَّاسَ
فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمْ الرَّاهِبُ أَفْضَلُ
فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ
إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ
النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ
فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ
مِنِّي قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنْ
ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ وَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ
وَالْأَبْرَصَ وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الْأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ
لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ مَا
هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي فَقَالَ إِنِّي لَا أَشْفِي
أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ
اللَّهَ فَشَفَاكَ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ
فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ لَهُ الْمَلِكُ مَنْ رَدَّ
عَلَيْكَ بَصَرَكَ قَالَ رَبِّي قَالَ وَلَكَ رَبٌّ غَيْرِي قَالَ رَبِّي
وَرَبُّكَ اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى
الْغُلَامِ فَجِيءَ بِالْغُلَامِ فَقَالَ لَهُ الْمَلِكُ أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ
مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ
فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ
يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ
لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَعَا بِالْمِئْشَارِ فَوَضَعَ الْمِئْشَارَ
فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ
الْمَلِكِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي
مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ
بِالْغُلَامِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ
مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا
بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ
وَإِلَّا فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَرَجَفَ بِهِمْ الْجَبَلُ فَسَقَطُوا
وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ
قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ
اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ فَإِنْ
رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ فَذَهَبُوا بِهِ فَقَالَ اللَّهُمَّ
اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَانْكَفَأَتْ بِهِمْ السَّفِينَةُ فَغَرِقُوا وَجَاءَ
يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ
اللَّهُ فَقَالَ لِلْمَلِكِ إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا
آمُرُكَ بِهِ قَالَ وَمَا هُوَ قَالَ تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ
وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي ثُمَّ ضَعْ
السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ
ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي فَجَمَعَ النَّاسَ
فِي صَعِيدٍ وَاحِدٍ وَصَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ
كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبْدِ الْقَوْسِ ثُمَّ قَالَ بِاسْمِ
اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ
يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ آمَنَّا
بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ
فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ
نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ فَأَمَرَ بِالْأُخْدُودِ فِي أَفْوَاهِ
السِّكَكِ فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ مَنْ لَمْ يَرْجِعْ عَنْ
دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا أَوْ قِيلَ لَهُ اقْتَحِمْ فَفَعَلُوا حَتَّى جَاءَتْ
امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ
لَهَا الْغُلَامُ يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ (مسلم
முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில்
சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி
பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து
விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து
விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த
தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர்
இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக்
கொடுக்கிறேன். என்று கூறினான்.
அவ்வாறே கூர்மையான அறிவுடைய வாலிபன் ஒருவனை
தேடிக்கொண்டு வந்து “நீ தினந்தோறும் இங்குவந்து இவர் கற்றுத்தரும்
கலைகளைக் கற்றுக்கொண்டு செல்ல வேண்டும்“ என்று அரசன் கட்டளையிட்டான். அவ்வாறே அவ்வாலிபன் தன் வீட்டில் இருந்து அந்த
சூனியக்காரன் இருக்கும் இல்லத்திற்கு வந்து கலைகளைக் கற்றுக்கொண்டு வந்தான்.
வாலிபன் தன் வீட்டில் இருந்து சூனியக்காரனுடைய
இல்லத்திற்கு வந்து செல்லும் வழியில் ராஹிப் என்று சொல்லக்கூடிய ஒரு மதப்போதகர்
ஒருவர் இருந்தார் அவரிடம் மார்க்கம் படிப்பதற்காக சிலர் கூடியிருப்பார்கள்
அவர்ஆத்ம ஞானங்களை கற்றுக்கொடுப்பார்.அவ்வாலிபன் அவ்வழியாக சூனியக்காரனிடம்
செல்லும் போதெல்லாம் அந்த ராஹிபிடம் சென்று அவர் கூறுகின்ற ஆத்ம உபதேசங்களையும்
செவியேற்றுச் செல்வான். இதனால் தாமதித்து வருவதற்காக சூனியக்காரனும் வீட்டில்
உள்ளவர்களும் ஏசவும் அடிக்கவும் செய்தனர்.
இச் செய்தியை ராஹிப் என்ற ஞானியிடம் அவன்
தெரியப்படுத்தினான். முஸ்லிம் அல்லாத பையைன் தம்மிடத்தில் வருவதை இருவரும்
கேள்வியுற்றால் இங்கு ஆத்ம ஞானம் கற்றுக்கொள்ளமுடியாதுபோய்விடும் என்பதை அறிந்த
ராஹிப் அவனிடம் “நீ வீட்டுக்குச் சென்றால் சூனியக்காரன்
பிற்படுத்திவிட்டான் எனக்கூறு. தாமதம் பற்றி சூனியக்காரன் கேட்டால் வீட்டில் பிற்படுத்தி விட்டார்கள்
எனக்கூறு என தந்திரம் சொல்லிக்கொடுத்தார் இவ்வாறே அவன் சிலகாலம் செய்து வந்தான்.
ஒரு நாள் அவன் வரும்வழியில் ஒரு பெரிய சிங்கம் ஒன்று
நின்று கொண்டு அவ்வழியே எவரும் செல்ல முடியாவண்ணம் தடுத்து நின்றது. பீதியடைந்த
மக்கள் போகமுடியாமல் அங்கலாய்த்துக் கொண்டு நின்றனர். அடிக்கடி ஏற்படும் இவ்வாறான
துன்பத்திற்கு விடிவுகாண முடியாமல் இருந்தசமயம் இந்த வாலிபனுக்கு ஒரு யோசனை
தோன்றியது சமையவிவகாரத்தில் உண்மை புலப்பட வேண்டும் என விரும்பினான் எனக்கு
சூனியம் படிப்பிக்கும் ஆசான் சிறந்தவரா ஆத்ம ஞானம் கற்பிக்கும் ராஹிப் சிறந்தவரா என
அறிய வேண்டும். என எண்ணியவனாக ஒரு கல்லை எடுத்து “யா அல்லாஹ்“ இந்த ராஹிப் உன்னுடைய விடயத்தில் இந்த சூனியக்காரனை
விட பிரியமானவராக இருந்தால் இந்த மிருகத்தை நீ கொலைசெய்து விடுவாயாக! என்று
கூறியவனாக அக்கல்லை அந்த மிருகத்தை நோக்கி எறிந்தான் கல்பட்டவுடன் அது இறந்து
விட்டது மக்கள் அவ்வாலிபனைப்புகழ்ந்து அவனுக்கு தனிப்பட்ட ஞானம் இருப்பதாக
பேசிக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை றாஹிபிடம் வாலிபன் தெரிவித்தான்.
இதைக்கேட்ட ராஹிப் மகனே! இன்று நீ என்னை விடச்சிறந்தவனாக இருக்கின்றாய் நீ உயர்ந்த
நிலையை அடைந்துள்ளாய் விரைவில் தீய சோதனைக்கு உள்ளாக்கப்படுவாய் அவ்வாறு
நிகழ்கின்ற நேரத்தில் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே! என்று அவனிடம் கூறினார். அதன்
பிறகு அவ்வாலிபன் பல நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவனாக விளங்கினான்.
குஷ்டரோகிகளையும் குணமடையச்செய்தான். மக்கள் சாரிசாரியாக வந்து தங்கள் நோய்களுக்கு
அவனிடம் மருந்த கேட்டுச்சென்றனர்.
அவ்வூரில் அரசனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர்
இருந்தார். அவர் கண்பார்வை இழந்தவர் வாலிபனுடைய செய்தியைக்கேள்விப்பட்டு ஏராளமான
வெகுமதிகள் பணங்களை எடுத்துக்கொண்டு அவனிடம்வந்து நீ என்னுடைய கண்களைப்
பார்வையுடையதாக ஆக்கிவிட்டால் உனக்கு இவைகளைத் தருகிறேன் என்று கூறினார்.
அதற்கு அந்த வாலிபன் “நான் யாருக்கும்
சுகமளிப்பவனல்ல சுகமளிப்பவனெல்லாம் அந்த அல்லாஹ்தான் எனவே உம்முடைய அன்பளிப்புகள்
எனக்குத்தேவையில்லை நீங்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு ஈமான் கொள்வதாகக் கூறினால்
நான் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன். அவன் உமக்குப்பார்வையை அளிப்பான் என்று
கூறினான். அவ்வாறே அவர் ஈமான் கொண்டார் துஆச் செய்ததும் அவருக்கு பார்வை
கிடைக்கப்பெற்று சுகம் கிடைத்தது இறைவனைப் புகழ்ந்தார்.
பார்வை கிடைக்கப்பெற்ற அவர் வழக்கம் போல அரசனிடம் அருகில்
அமர்ந்தார். தட்டுத்தடுமாறி வந்துஅமரும் அவர் திறந்த கண்ணோடு வந்தமர்ந்ததைப்
பார்த்த அரசன் வியப்புற்று உமக்கு பார்வையை அளித்தவர் யார் எனக்கேட்டார் இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்ட பின்தான் பார்வை கிடைத்தது என்றபடியால் எனது இரட்சகன் அல்லாஹ் என்று
கூறினார். எல்லாம் உனக்கு எல்லாம் உனக்கு நானாக இருக்க வேறு அல்லாஹ்வின் பெயர்
கூறுகிறாயா? ஆம் எனக்கும் உமக்கும் றப்பு அல்லாஹ்தான் என்று கூற இவனுக்கு பரிகாரம்
செய்தவனைக்கேட்டுத் துன்புறுத்தினான். வேதனை தாங்கமுடியாமல் வாலிபனைப்பற்றிச்
சொன்னான் உடனே வாலிபனை கொண்டுவரச் செய்து நான் உன்னை சூனியம்படிக்கச் வைத்து அதன்
மூலம் நோய்களைத் தீர்க்கும் வல்லமை உமக்கு கிடைக்க சமயம் மாறி துரோகமிழைத்து
விட்டாய் எனநோவினை செய்தான் அவ்வாலிபன் குணம் கொடுப்பது அல்லாஹுத்தஆலாதான் என்று
கூற உமது குரு யார் இதைக்கற்றுத்தந்தவர் யார் எனக்கேட்டு விடாப்பிடியாக வேதனை
செய்தான்.
அதனால் அந்த றாஹிபையும் சொல்லவேண்டிய நிர்பந்தம்
ஏற்பட றாஹிபும் கொண்டுவரப்பட்டார். அவரையும் மார்க்கத்தை விட்டுவிட வேண்டும் என
துன்புறுத்தப்படவே அவர் மறுத்தார் இவ்வாலிபன் முன்பதாகவே கண்பார்வை கிடைத்தவரையும்
இவரின் ஞானகுரு றாஹிபையும் சிரச்சேதம் செய்து கொண்று விட்டான். உமக்கும் இதே
கதிதான் உனது மார்க்கத்தை விட்டுவிடு எனக்கூறினான். அவன் மறுத்துக் கொண்டே
இருந்தான்.
ஆத்திரமடைந்த அரசன் சேவகர்களில் சிலரைஅழைத்து இவனை
மலைஉச்சிக்கு கொண்டு சென்று நிற்கவைத்து உயிர் போகுமுன் உமது மார்க்கத்தை
விட்டுவிடும் படி இறுதியாகக் கேளுங்கள் ஒப்புக்கொண்டால் அழைத்து வந்து விடுங்கள்.
இல்லையானால் மலை உச்சியில் இருந்து கீழே உருட்டிவிடுங்கள் சிதறி சாகட்டும்
எனசொல்லியனுப்பினான். அவர்கள் அவ்வாலிபனை கட்டி இழுத்துக்கொண்டு மலை உச்சிக்கு
கொண்டு சென்றனர். மலையில் ஏறும் போது அவ்வாலிபன் “யா அல்லாஹ்“ நீ நாடிய விதத்தில் இவர்களுடைய விடயத்தில் எனக்கு
போதமானவனாக இரு றஹ்மானே! என துஆ செய்தான். அக்கணமே மலை அதிர்ந்து அழைத்து வந்த
சேவகர்களும் பாக்கியில்லாமல் மலையில் இருந்து உருண்டு விழுந்து இறந்து போயினர்.
அவ்வாலிபன் எவ்வித ஆபத்துமின்றி அங்கிருந்து மறுபடியும் அரச சபைக்கு வந்தான். அவனை
பார்த்த அரசன் உன்னுடன் வந்தவர்கள் என்னவானார்கள் என்று கேட்டான். “அல்லாஹ்“ அவர்களை அழித்து என்னைக்
காப்பாற்றினான். என்று கூறினான்.
மறுபடியும் அரசன் தன் சேவகர்களில் சிலரை அழைத்து
இவனைக் கொண்டு போய் ஒரு படகில் ஏற்றி நடுக்கடலில் சென்றதும் இவன் தனது மார்க்கத்தை
விட்டு விட்டால் அழைத்துவாருங்கள் மறுத்தால் கடலில் தள்ளிவிடுங்கள் என்று
அனுப்பிவைத்தான்.
அவர்கள் அவ்வாலிபனை ஒரு படகில் ஏற்றி அழைத்துச்
சென்றனர். அவ்வாலிபன் படகில் வைத்து இறைவா நீ நாடியவிதத்தில் இவர்களுடைய விடயத்தில்
எனக்கு நீ போதுமாக்கி விடுவாயாக என்று துஆச் செய்தான். அக்கணமே படகு கவிழ்ந்து
வாலிபன் காப்பாற்றப்பட்டு அவர்கள் அனைவரும் மூழ்ககடிக்கப்பட்டனர்.
எவ்வித ஆபத்துமின்றி மீண்டும் அரசனிடம் வந்தான்
உன்னோடு வந்தவர்கள் என்ன ஆனார்கள் என அரசன் கேட்டபோது “அல்லாஹுத்தஆலா அவர்களை
அழித்து என்னைக் காப்பாற்றினான். என்று கூறினான் வாலிபன். பிறகு அந்த வாலிபன்
அரசனிடம் “நான் சொல்லும் முறைப்படி செய்யாத வரை நீர் என்னைக்
கொல்லமுடியாது“ என்று கூறினான். அது என்ன? என்றான் அரசன். ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட
வேண்டும். அங்கு என்னை ஒரு மரத்தி்ல் ஏற்றி எனது அம்புக்கூட்டில் இருந்து ஒரு
அம்பை எடுத்து
بسم الله ربَ الغلام
“பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி” இவ்வாலிபனுடைய இரட்சகனான அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் என்று கூறி அம்பை
என் மீது எறிந்தால் என்னைக் கொல்லலாம் என்று கூறினார்.
அவ்வாறே அரசன் ஒரு மைதானத்தில் நகர மக்களை எல்லாம்
ஒன்று கூட்டி அவ்வாலிபனை தூக்குமேடையில் நிறுத்தி அவனுடைய அம்புக்கூட்டினுள்
இருந்து ஒரு அம்பை எடுத்து வில்லில் வைத்து பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி என்று கூறி
எய்தினான் அந்த அம்பு அவ்வாலிபனுடைய நெற்றிப்பொட்டில் பட்டது அவன் தன் கையை
அப்பொட்டின் மீது வைத்தவனாக கீழே விழுந்தான் அதே இடத்தில் அவன் உயிர் பிரிந்தது.
இக்காட்சியை கண்ட அங்கிருந்த மக்கள் “இந்தவாலிபனுடைய இரட்சகனைக் கொண்டு நாங்கள் ஈமான் கொள்கிறோம். என்று மூன்று
முறை சப்தமிட்டுக் கூறினார்கள். அரசன்முகத்தில் கரி பூசியதைப்போல் ஒருமித்த
குரலில் அரசனே! நீ எதைப்பயந்தாயோ அது நடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ஏகத்துவத்தை
ஏற்று ஈமான் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். ஆத்திரமடைந்த அரசன் என்னை
எதிர்த்த இப்பயலுக்கு நான் கொடுத்த தண்டனை இது வென்றால் இதைவிட பெரிய தண்டனை
உங்களுக்கு என்று ஊரில் உள்ள விறகுகளை எல்லாம் சேகரித்து பாரிய
நெருப்புக்கிடங்கொன்றை ஏற்படுத்தி அல்லாஹுவை ஈமான் கொண்டவர்களை
நெருப்புக்கிடங்குகளுக் கண்மையில் நிறுத்தி புதிய மார்க்கத்தை விட்டு
விடுகிறீர்களா என்று கேட்டு அதற்கு அவர்கள் மறுத்தால் நெருப்புக்கிடங்கில்
தள்ளிவிட்டு அநியாயமாக கொலைசெய்து கொண்டிருந்தான். நெருப்புக்கு பயந்தவர்களும்
ஈமானில் உறுதியில்லாதவர்களும் விடுதலையளிக்கப்பட்டனர்.
அவர்களின் ஒரு பெண் பால்குடிக்கும் தன் குழந்தையைத்
தூக்கிக் கொண்டு வந்தாள். நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா? என்று அவளிடம் கேட்டபோது அவள் நெருப்புக்குண்டத்தையும் தன் அருமைக்
குழந்தையையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தன் குழந்தைக்காக ஈமானை விட்டுவிட
எண்ணினாள். அப்போது அக்குழந்தை பேசியது. எனது தாயே! நீ சத்தியத்தின் மீது
இருக்கின்றாய். நீ பயப்படவேண்டாம் இதைவிட பெரியநெருப்பை நான் காண்கிறேன். இந்த
நெருப்பில் விழவில்லையானால் அந்த நெருப்பை நீ அணைக்க முடியாது. என்று பேசாத
பச்சிளம் குழந்தை பேசியது. உடனே அப்பெண் அக்குழந்தையுடன் நெருப்புக்குண்டத்தில்
வீழ்ந்து விட்டாள் இவ்வாறு ஈமானில் அதிகமானவர்கள் இருந்தார்கள். ஆக 11பேர்கள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டனர்.
இறை நீதி இவனை சும்மாவைக்கவில்லை திருக்குர்ஆனில்
சூறத்துல் புறுஜில் இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசனும் அவனைச்சேர்ந்தவர்களும்
நெருப்புக்குண்டத்தை சுற்றி உக்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த நெருப்பு
பொங்கி எழுந்து பறந்துவந்து அரசனையும் மற்றவர்களையும் நாசமாக்கிவிட்டது. என “தப்ஸீர் ஸாவீ“ எனும் கிரந்தத்தில்
விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுக்கு முன் நடைபெற்ற இச்சம்பவத்தை றஸுலே கரீம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
கூறியதாக சுஹைப் (றழி) அவர்கள் கூறிய விடயம் முற்றுப்பெற்று உமர்(றழி) அவர்கள்
ஆட்சியின் போது நஜ்ரான் தேசத்தில் அன்று வாழ்ந்த ஒரு மனிதர் ஒரு தேவைக்காக
குழியொன்று தோண்டிக் கொண்டிருந்த போது அங்கு ஒருவாலிபரின் சடலம் இருந்தது. தன்
கையை நெற்றிப்பொட்டின் மீது வைத்தவாறு இரத்தம் கசிய அவ்வாலிபனின் சடலம் இருந்தது.
அவ்வாலிபனின் விரலில் இருந்த மோதிரத்தில்
ربّي اللّه றப்பியழ்ழாஹு எனது இரட்சகன் அல்லாஹ் எனும் வாசகம்
பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை கலீபாவாக இருந்த உமர் (றழி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டபோது அச்சடலத்தை இருந்தபடியே வைத்துவிடுங்கள். அது அப்துல்லாஹிப்னு
தாமிர் எனும் இறைவிசுவாசம் கொண்டு கொல்லப்பட்ட சரித்திரமிக்க வாலிபனின் சடலம்தான்
என விளக்கம் கூறினார்கள். இறைபாதையில் உயிர் நீர்த்தவர்களை மண் பாதுகாப்பாக
வைத்திருக்கும் என்பதற்கு இது சான்றாகும். மேலும் உயிரை இழந்தேனும் ஈமானைக்
காப்பாற்ற வேண்டும் என்பதும் எமக்குப் படிப்பினையாகும்.
மற்றொரு முன்மாதிரியான இளைஞர்
أن
رجلا من الأنصار يقال له : ثعلبة بن عبد الرحمن رضي الله عنه، يخدم النبي صلى الله عليه وسلم في جميع شؤونه وذات يوم بعثه
رسول الله صلى الله عليه وسلم في حاجة له، فمر بباب رجل من الأنصار فرأى امرأة
تغتسل وأطال النظر إليها، ثم بعد ذلك أخذته الرهبة وخاف أن ينزل الوحي على رسول
الله صلى الله عليه وسلم بما صنع، فلم يعد إلى النبي ودخل جبالا بين مكة والمدينة،
ومكث فيها قرابة أربعين يوماً، وبعد ذلك نزل جبريل على النبي صلى الله عليه وسلم
فقال: يا محمد إن ربك يقرئك السلام ويقول لك:إن رجلاً من أمتك بين حفرة في الجبال
متعوذ بي، فقال النبي صلى الله عليه وسلم لعمر بن الخطاب وسلمان الفارسي: انطلقا
فأتياني بثعلبة بن عبد الرحمن فليس المقصود غيره فخرج الاثنان من أنقاب المدينة
فلقيا راعيا من رعاة المدينة يقال له زفافة، فقال له عمر:هل لك علم بشاب بين هذه
الجبال يقال له ثعلبة؟ فقال لعلك تريد الهارب من جهنم؟ فقال عمر: وما علمك أنه
هارب من جهنم قال لأنه كان إذا جاء جوف الليل خرج علينا من بين هذه الجبال واضعا
يده على أم رأسه وهو ينادي يا ليتك قبضت روحي في الأرواح، وجسدي في الأجساد.. ولم
تجددني لفصل القضاء فقال عمر: إياه نريد، فانطلق بهما فلما رآه عمر غدا إليه
واحتضنه فقال: يا عمر هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي؟ قال لا علم لي
إلا أنه ذكرك بالأمس فأرسلني أنا وسلمان في طلبك، قال يا عمر لا تدخلني عليه إلا
وهو في الصلاة فابتدر عمر وسلمان الصف في الصلاة فلما سلم النبي عليه الصلاة
والسلام قال يا عمر يا سلمان ماذا فعل ثعلبة؟ قال: هو ذا يا رسول الله فقام الرسول
صلى الله عليه وسلم فحركه وانتبه فقال له الرسول صلى الله عليه وسلم : ما غيبك عني
يا ثعلبة ؟ قال ذنبي يا رسول الله قال أفلا أدلك على آية تمحو الذنوب والخطايا؟
قال بلى يا رسول الله، قال: قل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا
عذاب النار، قال: ذنبي أعظم، قال الرسول صلى الله عليه وسلم: بل كلام الله أعظم،
ثم أمره بالانصراف إلى منزله فمر من ثعلبة ثمانية أيام ثم أن سلمان أتى رسول الله
فقال: يا رسول الله هل لك في ثعلبة فانه لما به قد هلك؟ فقال رسول الله: فقوموا
بنا إليه ودخل عليه الرسول صلى الله عليه وسلم فوضع رأس ثعلبة في حجره لكن سرعان
ما أزال ثعلبة رأسه من على حجر النبي فقال الرسول صلى الله عليه وسلم له: لم أزلت
رأسك عن حجري؟ فقال لأنه ملآن بالذنوب، قال رسول الله ما تشتكي؟ قال : مثل دبيب
النمل بين عظمي ولحمي وجلدي، قال الرسول الكريم: ما تشتهي؟ قال مغفرة ربي فنزل
جبريل عليه السلام فقال: يا محمد إن ربك يقرئك السلام ويقول لك لو أن عبدي هذا
لقيني بقراب الأرض خطايا لقيته بقرابها مغفرة، فأعلمه النبي بذلك فصاح صيحة بعدها
مات على أثرها فأمر النبي بغسله وكفنه، فلما صلى عليه الرسول عليه الصلاة والسلام
جعل يمشي على أطراف أنامله، فلما انتهى الدفن قيل لرسول الله صلى الله عليه وسلم،
يا رسول الله رأيناك تمشي على أطراف أناملك
قال والذي بعثني بالحق ما قدرت أن أضع قدمي على الأرض من كثرة أجنحة من نزل من
الملائكة لتشييعه رواه ابو نعيم
حديث ضعيف
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்த நபித்தோழர்களில், அன்ஸாரிகளைச் சார்ந்த ஸஅலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் ஒருவர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்றொரு நாள் ஸஅலபா (ரலி) அவர்களை ஏதோ பணி நிமித்தமாக எங்கோ
அனுப்பினார்கள். சென்ற ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அண்ணலாரின் சமூகத்திற்கு வரவே
இல்லை. அண்ணலாரும் அவர் வருவார். நியமித்த பணியை நிறைவேற்றி விட்டு இதோ இன்று
வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.நாட்கள் மட்டும்
அடுத்தடுத்து வந்ததே தவிர ஸஅலபா (ரலி) அவர்கள் இன்னும் வரவில்லை.ஒரு நாள் இரண்டு
நாள் அல்ல, ஒரு வாரம் இரண்டு வாரம் அல்ல நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டது இன்னும் ஸஅலபா
வரவில்லை.எங்கு போனார்? என்ன ஆனார்? அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ”அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்து அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் உங்களது தோழர் ஒருவர் மக்கா, மதீனாவிற்கு இடையே
இருக்கிற மலை முகடு ஒன்றில் இருந்து அல்லாஹ்விடம் கடந்த நாற்பது நாட்களாக
பாவமன்னிப்பையும், நரக ஈடேற்றத்தையும் கேட்டு மன்றாடிக்
கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி
வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச்
சென்றார்கள்.உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த மன்றாட்டத்திற்கு உரியவர் காணாமல் போன ஸஅலபாவாகத் தான் இருக்கும்
என்று தீர்மானித்து விட்டு, உமர் மற்றும் ஸல்மான் (ரலி – அன்ஹுமா) ஆகியோரை அழைத்து
”என்னிடம் ஸஅலபாவைக் கொண்டு வாருங்கள்!” என்று பணித்தார்கள்.இருவரும் ஸஅலபாவைத் தேடி மக்கா, மதீனாவிற்கு இடையே
இருக்கிற மலைப்பகுதியின் அடிவாரத்திற்கு வந்து, அங்கே ஆடு மேய்த்துக்
கொண்டிருந்த துஃபாஃபா என்கிற இடையனிடம் ஸஅலபா குறித்தும், அவரின் மன்றாட்டம்
குறித்தும் கூறி விசாரித்தார்கள்.
அதற்கு, அந்த இடையர் ஆம்! சமீப நாட்களாக இங்கே வசிக்கிற
நாங்கள் “என் ஆன்மாவைக் கைப்பற்றும் ஆற்றல் கொண்டவனே! என் உடலை
மீட்டும் ஆற்றல் பெற்றவனே! நாளை மறுமையில் என்னைத் தண்டித்து விடாதே! எனக்கு
நரகத்தை விட்டும் நீ பாதுகாப்புத் தர வேண்டும்!”என்று ஒருவர் மன்றாடுவதை
கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.நீங்கள் சொன்ன இன்னின்ன அடையாளம் கொண்ட அந்த நபரை
நான் பார்த்திருக்கின்றேன். இதோ இந்த பகுதியில் தான் அவர் இருப்பார். இன்னும்
சற்று நேரத்தில் அவரின் மன்றாட்டம் கேட்கும் என்றனர்
சற்று நேரம் தாமதித்த பின்னர், மலை முகட்டில் இருந்து ஸஅலபா (ரலி) அவர்களின் மன்றாட்டம் ஒலித்தது. ஒலி வந்த
திசையை நோக்கி இருவரும் நடந்து ஸஅலபா (ரலி) அவர்களை அடைந்து கொண்டனர்.
இருவரையும் பார்த்த ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும்
அழுதார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் உம்மை
மன்னிப்பான். உம்மை நரகில் இருந்து பாதுகாப்பான்!” நபி {ஸல்} அவர்கள் உம்முடைய இந்த மன்றாட்ட நிலை குறித்து கேள்வி பட்டு நேற்று
அழுதார்கள். மேலும், உம்மை அழைத்து வருமாறு எங்களிடம் கூறி இங்கே அனுப்பி
வைத்திருக்கின்றார்கள்.” வாருங்கள்! ஸஅலபா செல்வோம்” என்றார்கள்.
இது கேட்ட ஸஅலபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நான் செய்த பாவம் குறித்து அறிந்து
கொண்டார்களா?” என்று வினவினார். இல்லை என்று உமர் (ரலி) பதில் பகர்ந்ததும் அப்படியானால், நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னை அழைத்துச்
செல்லுங்கள்! பாவியான நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களை முகம் பார்த்து பேச வெட்கப்படுகின்றேன்!” என்று கூறினார்கள்.
அவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஸ்ஜிதுன் நபவீக்கு
வந்து இஷாத் தொழுகையின் இகாமத்தை பிலால் (ரலி) அவர்கள் கூறும் வரை காத்திருந்து
பின்னர் தொழுகை ஆரம்பித்ததும் தொழுகையில் இணைந்து கொண்டனர்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் அத் தகாஸுர் சூராவை ஓதினார்கள். முதல் இரு வசனங்களை கேட்ட
மாத்திரத்திலேயே ஸஅலபா (ரலி) மயக்கமாகி கீழே விழுந்து விட்டார்கள்.
தொழுகை முடிந்ததும் உமர் மற்றும் ஸல்மான் (ரலி)
இருவரையும் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் எங்கே ஸஅலபா? என்று கேட்டார்கள்.இதோ!
அல்லாஹ்வின் தூதரே! மயக்கமுற்று கீழே விழுந்து கிடக்கின்றார் என்றார்கள் இருவரும்.முகத்தில்
தண்ணீர் தெளித்து, அருகே அமர வைத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பொழுக “ஸஅலபா! உமக்கு என்ன நேர்ந்து விட்டது? ஏன் இவ்வளவு நாளாக எங்கு சென்றீர்?” என்று கேட்டார்கள்.”லப்பைக்க யாரஸூலுல்லாஹ்!
நான் செய்து விட்ட ஒரு பாவம் தான் அல்லாஹ்வின் தூதரே! காரணம்” என்றார் நா தழுதழுத்தவராக!”யாஅல்லாஹ்!
இவ்வுலகிலகிலும் எனக்கு நீ சிறந்ததைக் கொடு! மறுமையிலும் சிறந்ததைக் கொடு! மேலும், நரக வேதனையில் இருந்து என்னைக் காத்துவிடு!” என்று இறைஞ்சுங்கள்” உமது பாவத்திற்கு பரிகாரமாக அமைந்து விடும் என்றார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.
இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மிகப் பெரியது!
என்றார் ஸஅலபா (ரலி). தோழரே! அல்லாஹ்வின் வார்த்தை அதை விட மிகப் பெரியது! இதைக்
கூறுங்கள் அல்லாஹ் உம் குற்றங்களை மன்னிப்பான்” என்றார்கள்.மீண்டும் அவர் முன்பு போல் கூறவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவரின் வீட்டில் கொண்டு விட்டு வருமாறு
தோழர்களிடம் கூறினார்கள்.
வீட்டிற்குச் சென்ற ஸஅலபா இந்தக் கவலையால் நோய்வாய்ப்
பட்டு படுத்த படுக்கையானார். எட்டு நாட்கள் ஆகியும் அவர் பள்ளிக்கு
வரவில்லை.அப்போது, ஸல்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாம்
சென்று ஸஅலபாவை நலம் விசாரித்து விட்டு வருவோமே! அவர் எட்டு தினங்களாக பள்ளிக்கும்
வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்றார்கள்.நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்த தோழர்களை அழைத்துக் கொண்டு ஸஅலபா
(ரலி) வீட்டிற்கு சென்றார்கள்.படுத்த படுக்கையாய் கிடக்கிற ஸஅலபாவின் தலையை
தங்களது புனித மடியில் கிடத்தி “ஸஅலபாவே! உமக்கு என்ன? நீர் அப்படி என்ன தான்
பாவம் செய்து விட்டீர்? என்று கேட்டார்கள்.அப்போது, ஸஅலபா (ரலி) அவர்கள் “எனக்கு இன்ன வேலையைச் செய்து வருமாறு என்னை நீங்கள் அனுப்பிய போது, அதைச் செய்வதற்காக நான் விரைந்து போய்க்கொண்டிருந்தேன்! மதீனாவின் இன்ன
தெருவைக் கடந்து செல்கிற போது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பெண் குளித்துக்
கொண்டிருந்தார்.
நான் என்னையும் அறியாமல் திரும்பத் திரும்ப
பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அது பாவம் எனத் தெரியவே அங்கிருந்து விலகி
விட்டேன். என்றாலும், அல்லாஹ் என்னுடைய இந்த பாவம் குறித்து, ஏதேனும் இறைவசனத்தை இறக்கி தண்டித்து விடுவானோ என நான் பயந்து மலை
முகட்டுக்குச் சென்று விட்டேன்” என்று கூறினார்.அல்லாஹ்வின் தூதரே! இந்த மாபெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா? என்னையே நான் வெறுக்கின்றேன்! என் உடல் முழுவதும் புழு பூச்சிகள் ஊர்ந்து
செல்வது போல் அருவருப்பாக உணர்கின்றேன் என்றார் ஸஅலபா.அப்போது, அங்கே வருகை தந்தார்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள். தொடர்ந்து “அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் என்னுடைய
அடியான் பூமி முழுவதும் பாவத்தோடு என்னை நெருங்கி வந்தால், அதே பூமி முழுவதும்
மன்னிப்போடு நான் அவனை நெருங்கி வருகின்றேன்” இதோ! இவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.
ஸஅலபாவே! உமக்கு ஒரு விஷயத்தை நான் சொலட்டுமா? என்று கூறிவிட்டு அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். இது கேட்ட ஸஅலபா (ரலி) பெரும் சப்தம் ஒன்றை எழுப்பியவாறு
மரணித்து விட்டார்கள். இன்னாலில்லாஹ்… பின்னர் நபி {ஸல்} அவர்கள் அவருக்கு குளிப்பாட்டுமாறும், கஃபன் செய்யுமாறும்
ஆணையிட்டு விட்டு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.அதன் பின்னர், அவரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்ற நபி {ஸல்} அவர்கள் தங்களின் பெருவிரலால் ஊன்றி, ஊன்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்து முடித்ததும், நபித்தோழர்கள் இது குறித்து வினவிய போது, அவரின் ஜனாஸாவை
மலக்குமார்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். எங்கு நோக்கினும்
வானவர்கள் இறக்கைகளையே நான் கண்டேன். வானவர்களின் இறக்கைகளை மிதித்து விடாதிருக்கவே
நான் அவ்வாறு பெரு விரலால் நடந்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள்.
அல்லாஹ்வுக்கு மிகவும்
பிரியமான தவ்பா ஒரு இளைஞனின் தவ்பா
مَا مِنْ شَيْءٍ أَحَبُّ إِلى الله تَعَالَى
مِنْ شَابَ تَائِبٍ وَمَا مِنْ شَيْءٍ أَبْغَضُ إِلَى الله
تَعَالَى مِنْ شَيْخٍ مُقِيمٍ عَلَى مَعَاصِيهِ ، وَمَا فِي الحَسَنَاتِ حَسَنَةٌ
أَحَبُّ إِلَى الله تَعَالَى مِنْ حَسَنَةٍ تُعْمَلُ فِي لَيْلَةِ جُمُعَةٍ أَوْ
يَوْمِ جُمُعَةٍ وَمَا مِنَ الذُّنُوبِ ذَنْبٌ أَبْغَضُ إِلَى الله تَعَالَى مِنْ
ذَنْبٍ يُعْمَلُ فِي لَيْلَةِ الجُمُعَةِ أَوْ يَوْمِ الجُمُعَةِ (كنز العمال
வாலிப வயதில் இருந்தே வணக்க
வழிபாட்டில் ஈடுபடுபவருக்கு அர்ஷின் நிழல்
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில்
அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான
அரசன், அல்லாஹ்வின்
வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து
அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான்
அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல்
மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில்
இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக