27-வது தராவீஹ்
கூட்டத்திற்கு மத்தியில் அழுவதை விட தனிமையில்
இறையச்சத்தால் அழுவது சிறப்பு
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ
الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ
مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا
عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ
وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا
تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا
فَفَاضَتْ عَيْنَاهُ (بخاري) باب الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ-كتاب الرقاق,
باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ – كتاب المحاربين
ஏழு சாரார் அர்ஷின் நிழல் தவிர் வேறு நிழலே இல்லாத மறுமை
நாளில் இவர்கள் மட்டும் அர்ஷின் நிழலில் இருப்பார்கள். 1.நீதமான முஸ்லிம் அரசர்
2.இளமைப் பருவத்தில் இருந்தே வணக்க வழிபாட்டிலேயே வளர்ந்தவர் 3.எங்கிருந்தால்
மஸ்ஜிதின் பக்கம் எவருடைய உள்ளம் பிணைக்கப்
பட்டிருக்குமோ அவர் 4.அல்லாஹ்வுக்காகவே ஒன்றிணைந்து அல்லாஹ்வுக்காகவே
பிரிந்த இரு 5. நல்ல வம்சமும் அழகும் உள்ள தனிமையில் அழைத்தும் நான் அல்லாஹ்வை
அஞ்சுகிறேன் என்று கூறி அப்பெண்ணின் ஆசைக்கு இணங்க மறுத்தவர் 6.வலது கரத்தால்
செய்த தர்மத்தை இடது கரம் கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மறைத்து முகஸ்துதி
இல்லாமல் தர்மம் செய்தவர் 7.தனிமையில் இருக்கும்போது அல்லாஹ்வை அஞ்சி யாருக்கு கண்ணிலிருந்து
கண்ணீர் வந்ததே அவர்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ
حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ
اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الْبُكَاءِ مِنْ
خَشْيَةِ اللَّهِ- كِتَاب الزُّهْدِ
கறந்த பால் மீண்டும் மடியில் புகுவது எவ்வாறு சாத்தியம்
இல்லையோ அவ்வாறே இறையச்சத்தால் அழுத கண்கள் நரகம் செல்லாது. மார்க்கப் போருக்காக
புறப்பட்டு அதனால் ஏற்பட்ட புழுதியும் நரகப் புகையும் ஒருவரின் விஷயத்தில் ஒன்று
சேராது. அதாவது அந்தப் புகையை சந்தித்தவர் இந்த நெருப்பை சந்திக்க மாட்டார்
عن
عبد الله بن شقيق العقيلي قال : سمعت كعبا يقول : لان أبكي من خشية الله تعالى حتى
تسيل دموعي على وجنتي أحب إلي من أن أتصدق بوزني ذهبا والذي نفس كعب بيده ما من
عبد مسلم يبكي من خشية الله حتى تقطر قطرة من دموعه على الارض فتمسه الناس أبدا
حتى يعود قطر السماء الذي وقع إلى الارض من حيث جاء ولن يعود أبدا.(مصنف ابن ابي
شيبة)
இறையச்சத்தால் என் நான் அழுது என் கண்ணம் வரை
கண்ணீரால் நனைவது என்னுடைய எடை அளவுக்கு தங்கம் தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.
கஃப் ரழி கூறினார்கள் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீதுள்ள பயத்தால் அழுது அந்தக்
கண்ணீர் தரையை அடைந்தால் அவரை நரகம் தீண்டுவது சாத்தியமில்லை. எவ்வாறு வானில்
இருந்து பொழிந்த மழை நீர் மீண்டும் வானத்திற்குச் செல்வது எவ்வாறு சாத்தியமில்லையோ
அவ்வாறு என கஃப் ரழி கூறினார்கள்
சிறிய தவறுக்காக அதிகம் அழுத இரு நபிமார்களில்
முதலிடம் நபி ஆதம் அலை அவர்களுக்கு.. عَنِ
ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا
عَدَلَهُ وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد
وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا
عَدَلَهُ (مصنف
ابن ابي شيبة
உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும்
நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின்
அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை
அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.
மூன்று கண்களை நரகம் தீண்டாது
عَنْ أَبِى
رَيْحَانَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ : خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى
الله عليه وسلم- فِى غَزْوَةٍ فَأَوْفَى بِنَا عَلَى شَرَفٍ فَأَصَابَنَا بَرْدٌ
شَدِيدٌ حَتَّى إِذَا كَانَ أَحَدُنَا يَحْفِرُ الْحَفِيرَ ثُمَّ يَدْخُلُ فِيهِ
وَيُغَطِّى عَلَيْهِ بِحَجَفَتِهِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه
وسلم- ذَلِكَ مِنَ النَّاسِ قَالَ :« أَلاَ رَجُلٌ يَحْرُسُنَا اللَّيْلَةَ
أَدْعُو اللَّهَ لَهُ بِدُعَاءٍ يُصِيبُ بِهِ فَضْلاً ». فَقَامَ رَجُلٌ مِنَ
الأَنْصَارِ فَقَالَ : أَنَا يَا رَسُولَ اللَّهِ فَدَعَا لَهُ. قَالَ أَبُو
رَيْحَانَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ : أَنَا فَدَعَا لِى بِدُعَاءٍ هُوَ
دُونَ مَا دَعَا بِهِ لِلأَنْصَارِىِّ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه
وسلم- :« حُرِّمَتِ النَّارُ عَلَى عَيْنٍ دَمَعَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ
حُرِّمَتِ النَّارُ عَلَى عَيْنٍ سَهِرَتْ فِى سَبِيلِ اللَّهِ ». قَالَ وَنَسِيتُ
الثَّالِثَةَ قَالَ أَبُو شُرَيْحٍ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ
وَسَمِعْتُهُ بَعْدُ أَنَّهُ قَالَ :« حُرِّمَتِ النَّارُ عَلَى عَيْنٍ غُضَّتْ
عَنْ مَحَارِمِ اللَّهِ أَوْ عَيْنٍ فُقِئَتْ فِى سَبِيلِ اللَّهِ ». (سنن الكبرى للبيهقي
அபூ ரைஹானா ரழி
கூறினார்கள் நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஒரு போருக்குப் புறப்பட்டோம். அப்போது
கடும் குளிர் எங்களைத் தாக்கியது. குளிரை விட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக
எங்களில் ஒருவர் ஒரு பள்ளம் தோண்டி அந்தப் பள்ளத்தில் இருந்து கொண்டு பள்ளத்திற்கு
மேலே பெரிய தோல் விரிப்பைப் போட்டு மூடிக் கொள்வார்.இத்தகைய குளிர் இருக்கும்
நிலையில் நபிஸல் அவர்கள் எங்களை அழைத்து உங்களில் யார் இன்று இரவு விழித்திருந்து
எதிரிகளை விட்டும் படைகளைப் பாதுகாக்க எல்லையில் காவல் காக்க முன்வந்தால் நான்
அவருக்காக பிரத்தியேகமாக துஆச் செய்வேன். அதன் சிறப்பை அவர் அடைவார் என்று கூற,
அந்தக் குளிருக்கு மத்தியிலும் ஒரு அன்சாரி சஹாபி எழுந்து நான் முன் வருகிறேன்
என்று கூற, அவருக்காக நபி ஸல் துஆச் செய்தார்கள்.
அபூ ரைஹானா ரழி
கூறினார்கள் பின்பு நான் எழுந்து நானும் முன்வருகிறேன் என்று கூற, எனக்காகவும் நபி
ஸல் துஆச் செய்தார்கள். ஆனால் அது முந்திய துஆவை விடக் குறைவாக இருந்த து.
அதற்குப் பிறகு நபி ஸல் கூறினார்கள். மூன்று கண்களை நரகம் தீண்டுவது ஹராமாக்கப்
பட்டுள்ளது. 1.எந்தக் கண்கள் இறையச்சத்தால்
அழுது கண்ணீர் வடித்ததோ அந்தக் கண்கள். 2. எந்தக் கண்கள் மார்க்கப் போரில் காவல்
காப்பதற்காக விழித்திருந்ததோ அந்தக் கண்கள். 3.எந்தக் கண்கள் அந்நியப் பெண்களை
பார்ப்பதை விட்டும் கண்ணை மூடிக் கொண்டதோ அந்தக் கண்கள் அல்லது மார்க்கப் போரின்
போது பறிக்கப்பட்ட கண்கள். (இது
அறிவிப்பாளரின் சந்தேகம்)
கப்ரின் அருகாமையில் இருந்த படி மறுமையை நினைத்து தரை
நனையும் அளவுக்கு நபி ஸல் அழுதார்கள்
عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى
حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا (ابن ماجة
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம்.
அப்போது கப்ரின் அருகாமையில் அமர்ந்த படி மறுமையை நினைத்து தரை நனையும் அளவுக்கு
நபி ஸல் அழுதார்கள் பிறகு எங்களிடம் என் தோழர்களே இது போன்ற நிலைமை தான் உங்களுக்கும் எனவே அதற்காக உங்களைத் தயார்
படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள்.
குர்ஆனை ஓதுவதைக் கேட்டு தேம்பி அழுத நபி (ஸல்)
عَنْ عَبْدِ اللَّهِ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ
قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ
أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ
{فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى
هَؤُلَاءِ شَهِيدًا} قَالَ لِي كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ
تَذْرِفَانِ (بخاري
அப்துல்லாஹ் இப்னு
மஸ்ஊத் ரழி கூறினார்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எனக்குக்
குர்ஆனை ஓதிக் காட்டுங்கள் என்றார்கள் உடனே நான் உங்கள் மீது குர்ஆன் இறக்கப்படும்
நிலை இருக்க நான் எப்படி உங்களுக்கு ஓதிக் காட்டுவது என்றேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் மற்றவர் ஓதி
அதை நான் கேட்பதை விரும்புகிறேன் என்றார்கள். நான் ஓத ஆரம்பித்தேன். நிஸா சூராவில்
மேற்படி வசனத்தை அடைந்த போது போதும் என்றார்கள். அப்போது நான் பார்த்தேன்
அவர்களின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் வடிந்து கொண்டுருந்தது.
மனதில் கவலை உள்ளது.
ஆனால் அழுகை வரா விட்டால் என்ன செய்வது
عَنْ سَعْدِ بْنِ
أَبِى وَقَّاصٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ابْكُوا
فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا ».(ابن ماجة
அழுகை வரா விட்டால்
அழுகிற மாதிரி பாவனை செய்யுங்கள். அதாவது அழுவதற்கு முயற்சி செய்யுங்கள்
தரை நனையும் அளவுக்கு
இல்லா விட்டாலும் ஒரே ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் போதும்
عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ
عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يَخْرُجُ
مِنْ عَيْنَيْهِ دُمُوعٌ وَإِنْ كَانَ مِثْلَ رَأْسِ الذُّبَابِ مِنْ خَشْيَةِ
اللَّهِ ثُمَّ تُصِيبُ شَيْئًا مِنْ حُرِّ وَجْهِهِ - إِلاَّ حَرَّمَهُ اللَّهُ عَلَى
النَّارِ ».».(ابن ماجة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த ஒரு முஃமினின் கண்ணில் இருந்து ஒரு ஈயின் சிறிய தலை அளவுக்கு சிறிதளவு
கண்ணீர் வந்து அது அவருடைய கண்ணத்தில் பட்டு விட்டால் போதும் அல்லாஹ் அவர் மீது
நரகத்தை ஹராமாக்கி விடுவான்.
அழுகையும் வராத, கவலையும் ஏற்படாத கல் நெஞ்சக்காரர்களாக ஆகி விடக்கூடாது
وَلَا يَكُونُوا
كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ
فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ (16)الحديد
ثُمَّ قَسَتْ
قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً
وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا
لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ
خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (74)البقرة
பாவ மன்னிப்பு பல பிரச்சினைகளைத் தீர்க்கும்
இஸ்திஃபாரை
அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ்
ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான்
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ
وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال
கருத்து – இரண்டு விதமான
பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள்
நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது
சாத்தியம்.
பஞ்சம் நீங்க, கவலைகள்
தீர, குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம்
செழிக்க இஸ்திஃபார் தான் சிறந்த வழி
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا
رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة
هود
فَقُلْتُ اسْتَغْفِرُوا
رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ
مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ
وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا
زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم
وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان
غفارا –(القرطبي)
நபி நூஹ் அலை அவர்களை
அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள்
அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.
கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம்
முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள்.
அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான்.
தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள்
கூறினார்கள்.
وقال ابن صبيح : شكا رجل إلى
الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له :
استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله
وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ
من عندي شيئا إن الله تعالى يقول في
سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً.
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ
بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي)
ஒருவர்
இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது
அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று
கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது
அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று
கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம்
கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம்
மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள்.
மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம்
மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும்
இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என்
சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம்
கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.
قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد
طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم
مدرارا(القرطبي
உமர் ரழி அவர்கள் மழைத்
தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும்
கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம்
சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது
என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்கு முன் அதன்
அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம்
மழையை வேண்டினேன். அல்லாஹ் மழையை இறக்கினான் என்றார்கள்
عَنِ
الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ
بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا
مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ
نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ: " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ
" وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ
فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ،
فَسُقُوا". (تفسير ابن ابي حاتم
திமிஷ்க் நகரில் ஏற்பட்ட
பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால்
இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள்
உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள்
நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள்
யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர
வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம்
முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும்
கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை
இறக்கினான்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ حَدَّثَهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ
الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ
هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابوداود
யார் இஸ்திஃபாரை
அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை
அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில்
இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.
عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي
ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ
لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ
الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)
கருத்து-ஹுதைபா ரழி
அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம்
திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்
كان
الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ
أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول:
"رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2
- ص- 478).
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில்
சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி
இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன்
பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் என் தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக
இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.
قال علي بن خشرم: "رأيت وكيع بن الجراح وما
رأيتُ بيده كتابًا قط، إنما هو يحفظ، فسألتُه عن دواء الحفظ، فقال: تركُ المعاصي،
ما جرَّبْتُ مِثلَه للحفظ"؛ (تهذيب التهذيب - لابن حجر العسقلاني - ج- 2 - ص-
129).
வகீஃ ரஹ் அவர்களை நான் கையில் கிதாப் இல்லாமலேயே மனப்பாடமாக
பல விஷயங்களைக் கூறுவதை அவர்களின் மனன சக்திக்கான காரணத்தை நான் கேட்டேன். அதற்கு
அவர்கள் பாவங்களை விடுவது தான் மனன சக்திக்கு முக்கியக்காரணம் என் அனுபவத்தில் இதை
விட முக்கியக் காரணத்தை கண்டதில்லை என்றார்கள்.
قال مالك
بن أنس للشافعي: "إن اللهَ ألقى على قلبك نورًا، فلا تُطفئه بظُلمة
المعصية"؛ (تهذيب الأسماء - للنووي - ج- 1 - ص- 47).
قال الشافعي: شكوتُ إلى
وكيعٍ سوءَ حِفظي فأرشَدني إلى ترك المعاصي وأخبَرني بأن العلمَ
نورٌ ونورُ الله لا يُهدى لعاص(ديوان الشافعي
மனப்பாடம் என்பது அல்லாஹ் உள்ளத்தில் உருவாக்கும் பிரகாசம்.
அதை உனது பாவத்தால் இருளாக்கி விடாதே என மாலிக் ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்
அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். மேலும் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது
நான் வகீஃ ரஹ் அவர்களிடம் என மன ன சக்தியின் குறைபாட்டை விபரித்த போது பாவங்களை
விட்டு விடும்படி கூறியதுடன் மனனம் என்பது அல்லாஹ் ஏற்படுத்தும் பிரகாசம்.
பிரகாசத்தை அல்லாஹ் பாவிக்குத் தர மாட்டான்.
قال ابن عباس رضي الله عنه
(إن للحسنة ضياء في الوجه ونوراً في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في
قلوب الناس. وإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً
في الرزق وبغضاً في قلوب الناس).
இப்னு
அப்பாஸ் ரழி கூறினார்கள். நன்மை செய்வதால் முகத்திலும், உள்ளத்திலும் ஒளி
ஏற்படும். ரிஜ்கில் பரக்கத், உடல் வலிமை, மக்களின் பிரியம் ஆகியவை ஏற்படும். ஆனால்
பாவம் செய்வதால் இதற்கு மாற்றமான நிலை தான் ஏற்படும்.
இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த
நல்லடியாரின் வரலாறு
كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه
أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن
يمكث فيه فقال الإمام سوف أنام موضع قدمي
فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجد وكان الإمام أحمد شيخا وقورا
تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر
لينام في منزله، فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم
بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال
هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار
فوائد عظيمة، فقال له هل وجدت لاستغفارك هذا ثمرة، فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما
عدا دعوة واحدة، قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟
قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبل فقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟
இமாம் அஹ்மது இப்னு
ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று
நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை
யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதாலும் அவர் இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க்
கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது
கண்ட முஅத்தின் காலைப் பிடித்து இழுத்து
வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச்
சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன்
காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச்
சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம்
அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின்
இஸ்திஃபார் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த
து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை
மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று
கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும்
துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு
வருத்தத்துடன் நான் பல வருடமாக கேட்டும்
ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள்
கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய
கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக அவர்களைக்
காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று
கூறிய போது இமாம் அவர்கள் மிகவும்
ஆச்சரியத்துடன் நான் தான் அஹ்மதுப்னு
ஹன்பல் அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து
இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்
தவ்பா
செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய
வைப்பதாகும்.
قال
الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى
يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة
السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً
قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح،
وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ
راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه
نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى
يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على
الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا
من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من
الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).
இமாம்
இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப்
பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப்
பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான்
முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா
செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய
வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற
நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.
(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப்
போன்றாகும்.) ஒரு
நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று
கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய்
என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து
விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன்
செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு
பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே
எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ
அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம்
செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய
நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு
மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல இடையூறுகள்
செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த
சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்
தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை
தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ- وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ- لَيْلَةُ الْقَدْرِ
خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ
رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ- سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
عَنْ اِبْن عَبَّاس رضي الله عنهقَالَ: نَزَلَ الْقُرْآن
فِي شَهْر رَمَضَان فِي لَيْلَة الْقَدْر إِلَى هَذِهِ السَّمَاء الدُّنْيَا جُمْلَة وَاحِدَة وَكَانَ
اللَّهُ يُحْدِث لِنَبِيِّهِ مَا يَشَاء
லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான
காரணங்கள் பற்றி....
أنه تعالى أخفى هذه الليلة لوجوه أحدها: أنه
تعالى أخفاها كما أخفى سائر
الأشياء فإنه أخفى رضاه في الطاعات حتى يرغبوا في الكل وأخفى الإجابة في الدعاء ليبالغوا في كل الدعواتوأخفى الاسم الأعظم ليعظموا
كل الأسماء وأخفى في الصلاة الوسطى ليحافظوا على الكل وأخفى قبول التوبة ليواظب
المكلف على جميع أقسام التوبة وأخفى وقت الموت ليخاف المكلففكذا أخفى هذه الليلة ليعظموا جميع ليالي رمضان وثانيها
: كأنه تعالى يقول : لو عينت ليلة القدر وأنا عالم بتجاسركم على المعصية فربما دعتك الشهوة في تلك الليلة إلى المعصية
فوقعت في الذنب فكانت معصيتك مع علمك أشد من معصيتك لا مع علمك فلهذا السبب أخفيتها عليك روي أنه عليه السلام دخل المسجد فرأى نائماً
فقال : يا علي نَبِّهْه ليتوضأ فأيقظه
علي ثم قال علي: يا رسول الله إنك سباق
إلى الخيرات فلم لم تنبهه؟ قال : لأن رده عليك ليس بكفر ففعلت ذلك لتخف جنايته لو
أبى فإذا كان هذا رحمة الرسول فقس عليه رحمة الرب تعالى فكأنه تعالى يقول: إذا
علمت ليلة القدر فإن أطعت فيها اكتسبت ثواب ألف شهر وإن عصيت فيها اكتسب عقاب ألف
شهر ودفع العقاب أولى من جلب الثواب ثالثها:أني أخفيت هذه الليلة حتى يجتهد
المكلف في طلبها فيكتسب ثواب الاجتهاد ورابعهاأن العبد إذا لم يتيقن ليلة
القدر فإنه يجتهد في الطاعة في جميع ليالي رمضان على رجاء أنه ربما كانت هذه
الليلة هي ليلة القدر فيباهي الله تعالى
بهم ملائكته يقول:كنتم تقولون فيهم يفسدون ويسفكون الدماء (تفسير
الرازي
1. அ.. அல்லாஹ் சிலவற்றை சிலவற்றில் மறைத்து வைத்துள்ளான்.
எத்தனையோ வணக்க வழிபாடுகள் நாம் செய்தாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு
அல்லாஹ்வின் திருப்தி நம் மீது உண்டாகும். அது எந்த அமல் என்பது
மறைக்கப்ப்பட்டுள்ளது. இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் வஃபாத்தான பின்பு அவர்களைக்
கனவில் கண்ட போது அல்லாஹ் உங்களின் எந்த செயலைக் கொண்டு பொருந்திக் கொண்டான் என்று
கேட்டபோது நான் ஒருமுறை பேனாவைக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த போது அதில் உள்ள மையை
உறிஞ்சுவதற்காக ஒரு ஈ வந்து அமர்ந்தது. நான் அந்த ஈ தானாக பறந்து போகும் வரை அந்த
பேனாவை சற்றும் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தேன். இதனால் அல்லாஹ் என்னைப்
பொருந்திக் கொண்டான் என்றார்கள்.
ஆ.
துஆக்களில் எந்த துஆ ஏற்கப்படும் என்பதை மறைந்து வைத்துள்ளான். ஒரே கோரிக்கையை பல
முறை கேட்கிறோம்.ஒவ்வொரு துஆவையும் இஜாபதுக்குரியதாக கருதி துஆ செய்ய வேண்டும்
என்பதற்காக...
இ. இஸ்முல்
அஃழமை மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு திருநாமத்தையும் இஸ்முல் அஃழமாக கருதி துஆ
செய்வதற்காக.
ஈ.
நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு தொழுகையையும
நடுத்தொழுகையாக கருதி தொழ வேண்டும். முதல் நாள் மஃரிப் முதல் மறுநாள் மஃரிப் வரை என்ற கணக்கில்
பார்த்தால் ஃபஜ்ர் நடுத்தொழுகை. ஜிப்ரயீல் அலை முதலில் கற்றுத் தந்தது லுஹர் என்ற
கணக்கில் பார்த்தால் மஃரிப் நடுத்தொழுகை. இப்படி ஒவ்வொரு தொழுகையும்
நடுத்தொழுகையாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ
وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) البقرة
உ. தவ்பா
கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரம் மன்னிப்பு வழங்கப்படும்
என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்
ஊ. மவ்த்தை
மறைத்து வைத்துள்ளான். எந்த நேரமும் மவ்த் வரலாம் என்று அஞ்சி நடக்க வேண்டும்
என்பதற்காக.
இதே மாதிரி
லைலத்துல் கத்ரை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ராக
இருக்கலாம் என்று எண்ணி அமல் செய்வதற்காக....
2.
லைலத்துல் கத்ரு எது என்று அறிவித்துத் தரப்பட்டு அது சிறந்த இரவு என்று தெரிந்தே
ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அவன் மீது தண்டனைகள் அதிகமாகி விடுமல்லவா அல்லாஹிவின்
விதியில் ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல
மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில்
நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில்
நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி
அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே
நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க,
அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர்
மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு
நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை
அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில்
ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி
விட்டார்.
3. லைலத்துல் கத்ரைத் தேடி ஒவ்வொரு இரவிலும் அமல் செய்பவர்
அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்
4. மனிதர்களின் அமல்களை மலக்குகளிடம் காட்டி அல்லாஹ்
மனிதனைப் பெருமைப் படுத்துவற்காக...
மலக்குகள்
இறங்குகிறார்கள் என்பதன் விளக்கம் - நாம் நுத்ஃபா வாக இருக்கும்போது நம்மைக் கழுவி
அப்புறப்படுத்தும் பெற்றோர்கள் நம்மை அழகிய உருவில் பார்க்கும்போது கொஞ்சுகின்றனர்.
அதுபோல் மனிதனை முதலில் அல்லாஹ் படைத்த போது பாவம் செய்யும் தோற்றத்தில் கண்டு
இவர்களை ஏன் படைக்கிறாய் என்று கேட்ட மலக்குகள், மனிதனின் அழகிய வணக்க
வழிபாடுகளைக் கண்டு வாழ்த்துகின்றனர்.
قوله تعالى : { تَنَزَّلُ الملائكة والروح فِيهَا }
وفيه مسائل :المسألة الأولى : اعلم أن نظر الملائكة على الأرواح ونظر البشر على
الأشباح ثم إن الملائكة لما رأوا روحك محلاً للصفات الذميمة من الشهوة والغضب ما
قبلوك فقالوا : أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء وأبواك لما رأوا قبح صورتك
في أول الأمر حين كنت منياً وعلقة ما قبلوك أيضاً بل أظهروا النفرة واستقذروا ذلك
المني والعلقة وغسلوا ثيابهم عنه ثم كم احتالوا للإسقاط والإبطال ثم إنه تعالى لما
أعطاك الصورة الحسنة فالأبوان لما رأوا تلك الصورة الحسنة قبلوك ومالوا إليك فكذا
الملائكة لما رأوا في روحك الصورة الحسنة وهي معرفة الله وطاعته أحبوك فنزلوا إليك
معتذرين عما قالوه أولاً(تفسير الرازي)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக