28-வது தராவீஹ்
(சூரா
மாஊன் விரிவுரை)
அற்பமான உதவிகளைக் கூட தானும் செய்யாமல் பிறரையும் தடுப்பவனைப் பற்றிய கண்டனம்
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ - فَذَلِكَ الَّذِي يَدُعُّ
الْيَتِيمَ - وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3) فَوَيْلٌ
لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ
يُرَاءُونَ (6) وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7) عَنْ أَبِي الْعُبَيْدَيْنِ أَنَّهُ سَأَلَ اِبْن مَسْعُود عَنْ الْمَاعُون فَقَالَ هُوَ مَا
يَتَعَاطَاهُ النَّاس بَيْنهمْ مِنْ الْفَأْس وَالْقِدْر وَالدَّلْو وَأَشْبَاه
ذَلِكَ (تفسير ابن كثير)
வாழ்க்கையில் நாம் பிறருக்குச் செய்யும் உதவி, உபகாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை
இரண்டு விதமாக பிரிக்கலாம். சில உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்று நாடி அதற்கான
சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் தேடிச் செல்வோம். சில நேரங்களில் நாம் சாதாரணமாக
இருக்கும்போது பிறருக்கு உதவி செய்யும்
சூழ்நிலைகளை தானாக அமையும். அவைகளை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது அவைகளை
சந்தர்ப்பமாக கருதி அந்த உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக டிக்கெட் முன்பதிவு
செய்யுமிடத்தில் ஒருவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல்
தடுமாறுகிறார் அவருக்கு அதை பூர்த்தி செய்து தருவது. ஒருவர் பேனாவை மறந்து வைத்து
விட்டு வந்து நம்மிடம் பேனாவைக் கேட்பார். அவருக்கு சிறிது நேரம் பேனா கொடுத்து
உதவுவது (அதிலும் சிலர் விபரமாக பேனா மூடியை
கழற்றி தம்மிடம் வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் தருவார்கள். 5 ரூபாய் பேனாவை இவர்
அவ்வளவு கவனமாக பாதுகாக்கிறாராம்..) மேலும் வண்டியில் இருந்து இறங்க சிரமப் படுபவரை
இறக்கி விடுவது. பைக்கில் போகும்போது ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுச்
செல்பவருக்கு அதை எடுத்துக் கொடுப்பது இது மாதிரி எதார்த்தமான முறையில் உதவி
செய்யும் வாய்ப்புகள் தானாக வந்து அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சில வகையான சின்னச் சின்ன
உதவிகளுக்கு அல்லாஹ் தரும் பெரிய பெரிய நன்மைகள்
عَنْ عَائِشَةَ رضي الله
عنها أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ
اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ
وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ
فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا
فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى
مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى
مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ
رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ
فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة)ضعيف- بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي
ثَلَاثٍ – كِتَاب الْأَحْكَامِ
அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன்.
நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது
எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல்
அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர
மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு.
ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற
காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக
ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன
சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல்
உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம்
சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர்
தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர்
ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர்
தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.
பிறருக்கு உதவும் எண்ணம் நீங்கி, மனிதனை மனிதனாகவே கருதாத காலம் இப்போது...
மனிதர்களை நேசிக்க வேண்டும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்று
அப்படியே தலைகீழாக மாறி பொருட்களை நேசிக்கிறார்கள். மனிதர்களை
பயன்படுத்துகிறார்கள். தன் சொத்துக்களை பாதுகாப்பதற்காக மனிதர்களை மாடுகள் போல
கருதி வேலை வாங்குபவர்கள் பலர் உண்டு. சில நேரங்களில் பெற்ற பிள்ளைகளின் மீதான
நேசத்தை விட பொருட்களின் மீதான நேசம் தான் அதிகமாக இருக்கிறது வெளிநாட்டில் ஒரு
பெண் தனது குழந்தையை தானே கொன்று விட்டாள் அதற்குக் காரணம் அந்தக் குழந்தை இவளுடைய
T.V. யை கீழே தள்ளி உடைத்து விட்டது என்பதற்காக... அந்தப் பொருளின் மீதான நேசம்
பிள்ளை மீது இல்லை
நகைச்சுவையாக கூறுவார்கள்- ஒருவர் தன் மகனிடம் பக்கத்து வீட்ல போய் ஆணி அடிக்க
சுத்தியல் வாங்கிட்டு வாடா! என்று சொல்லியனுப்ப.. அவன் போய் கொஞ்ச
நேரத்துல திரும்பி வந்து அப்பா பக்கத்து வீட்ல
சுத்தியல் இல்லைன்னு சொல்லிட்டாங்கப்பா.. என்றான். உடனே தந்தை “ சரி பரவாயில்லை..
எதுக்கும் இன்னொரு பக்கத்து வீட்லயும் கேட்டுட்டு வா.. என்று அனுப்ப அங்கேயும்
இல்லைன்னு மகன் திரும்பி வர.. அப்போது தான் தந்தை
சொன்னாராம் சரி பரவாயில்ல... என்ன பன்றது... நம்ம சுத்தியலையே எடு!
சில நேரங்களில் நாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை அல்லது பேப்பரை
யாரேனும் இரவலாக கேட்கலாம். அதைப் படிக்கக் கொடுப்பதும் சிறிய உதவி தான். எனினும்
அதை வாங்குபவர்கள் சரியாக திருப்பித் தர வேண்டும். இன்றைய காலத்தில் யாருக்கேனும்
இரவலாக கொடுத்தால் திரும்பி வராத பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள் தான் அதிகம்
முதியவர்களில் யாரேனும் பாதையைக் கடக்க
சிரமப்பட்டாலோ, அல்லது பஸ்ஸில் இருந்து இறங்க சிரமப்பட்டாலோ அவருக்கு உதவுவது,
இதுவும் சின்னச் சின்ன உதவிகள் தான்
عنْ أَنَسِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا
قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ (ترمذي) -بَاب مَا جَاءَ فِي إِجْلَالِ الْكَبِيرِ-الْبِرِّ وَالصِّلَةِ
ஒரு
வாலிபர் தன்னுடைய வயதில் மற்றொரு முதியவரை அவருடைய வயதின் காரணமாக
கண்ணியப்படுத்தினால் அல்லாஹ் இவருக்கு
வயதாகும்போது இவரை கண்ணியப்படுத்துபவர்களை அல்லாஹ் ஏற்படுத்துவான்
சின்னச் சின்ன உதவிகள் நாற்பது வகை உண்டு என்பதைப்
பற்றியும், அவற்றில் உயர்ந்தது எது என்பதைப் பற்றியும்
عن عبْد اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَرْبَعُونَ خَصْلَةً
أَعْلَاهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ
بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلَّا
أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ
مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ
فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ
عَشْرَةَ خَصْلَةً (بخاري) فَضْلِ الْمَنِيحَةِ-كتاب الهبة 2629 منيحة:الشاة أو الناقة التي
تعطي للغير ليحلبها وينتفع بلبنها ثم يردها على صاحبها وقد تكون عطية مؤبدة بعينها
ومنافعها كالهبة .
நாற்பது
நற்காரியங்கள் உண்டு அவற்றில் ஒன்றை அதன் நன்மையை நாடியும், அதற்கென
வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்தால் அதன் காரணத்தால் அல்லாஹ்
அவரை சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை
வெள்ளாட்டை பால் கறந்து கொள்வதற்காக குறிப்பிட்ட நாள் இரவல் தருவதாகும் என்று நபி
ஸல் அவர்கள் கூறினார்கள். ஹஸ்ஸான் ரழி கூறுகிறார்கள் மனீஹத்தையும் விடவும் குறைவான அந்த நாற்பது
சிறிய நற்காரியங்கள் என்னென்ன என்று நாங்களும் கணக்கிட்டுப் பார்த்தோம் எங்களால்
15 – க்கு மேல் கணக்கிட முடியவில்லை
அந்த நாற்பது சின்ன சின்ன நற்காரியங்களை
நபி ஸல் அவர்கள் ஏன் தெளிவு படுத்திக்கூறவில்லை
أَنَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ عَالِمًا
بِالْأَرْبَعِينَ الْمَذْكُورَة وَإِنَّمَا لَمْ يَذْكُرهَا لِمَعْنًى هُوَ
أَنْفَع لَنَا مِنْ ذِكْرهَا وَذَلِكَ خَشْيَة مِنْ اِقْتِصَار الْعَامِلِينَ
عَلَيْهَا وَزُهْدهمْ فِي غَيْرهَا مِنْ أَبْوَاب الْخَيْر
அந்த நாற்பது
நற்காரியங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்று ஒவ்வொன்றையும் தேடிப்
பார்த்து செய்வதற்காக அந்த நாற்பதையும் தெளிவு படுத்திக் கூறவில்லை
அந்த நாற்பதில் சிலவற்றைப் பற்றி ஹதீஸ்
விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளவை
فَمَا زَادَهُ : إِعَانَة الصَّانِع, وَالصَّنْعَة
لِلْأَخْرَقِ ، وَإِعْطَاء شِسْع النَّعْل وَالسَّتْر عَلَى الْمُسْلِم وَالذَّبّ عَنْ عِرْضه وَإِدْخَال السُّرُور
عَلَيْهِ ، وَالتَّفَسُّح لَهُ في الْمَجْلِس، وَالدَّلَالَة عَلَى الْخَيْر
وَالْكَلَام الطَّيِّب وَالْغَرْس وَالزَّرْع وَالشَّفَاعَة وَعِيادَة الْمَرِيض
وَالْمُصَافَحَة وَالْمَحَبَّة فِي اللَّه وَالْبُغْض لِأَجْلِهِ وَالْمُجَالَسَة
لِلَّهِ ، وَالتَّزَاوُر وَالنُّصْح
وَالرَّحْمَة والسَّعْي عَلَى ذِي رَحِم قَاطِع وَإِطْعَام جَائِع وَسَقْي
ظَمْآن وَنَصْر مَظْلُوم وَكُلّهَا فِي الْأَحَادِيث الصَّحِيحَة (عون المعبود)
ففي الصحيح وَاللَّهُ فِي
عَوْنِ الْعَبْدِ
مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ (مسلم
கவலையில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதும்
ஒரு வகையான உதவியாகும். குறிப்பாக மய்யித் வீட்டில்..
عن عَمْرِو بْنِ حَزْمٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ قَالَ مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ
اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ (ابن ماجة) بَاب
مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَزَّى مُصَابًا- كِتَاب مَا جَاءَ فِي الْجَنَائِزِ- فيه
أن التعزية سنة مؤكدة وأنها لا تختص بالموت فإنه أطلق المصيبة وهي لا تختص به إلا
أن يقال إنها إذا أطلقت إنما تنصرف إليه لكونه أعظم المصائب ، والتعزية في الموت
مندوبة قبل الدفن وبعده ، وقال الشافعية : ويدخل وقتها بالموت ويمتد ثلاثة أيام
تقريبا بعد الدفن ويكره بعدها إلا إذا كان المعزي أو المعزى غائبا. (فيض القدير)
கவலையில் இருப்பவருக்கு ஆறுதல்
கூறுபவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான் இமாம்
ஷாஃபிஈ ரஹ் கூறினார்கள் ஒருவர் இறந்த பின் தாமதமாகவே நமக்குத் தகவல் தெரிய வந்தால்
மூன்று நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிப்பது நல்லது. ஆறுதல் சொல்லப்பட
வேண்டியவர் வெளியூர் சென்று விட்டால் அப்போது இது பொருந்தாது
சந்தோஷம் என்பது பிறரிடம் பகிர்ந்து கொள்வதால்
அதிகரிக்கும். துக்கம் என்பது பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் குறையும்
இறந்தவரைப் பற்றிய கவலையில் உணவு சமைக்கக்கூட
முடியாமல் இருக்கும் மய்யித் வீட்டினருக்கு உணவு சமைத்துக் கொடுப்பது
عن أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ قَالَتْ لَمَّا
أُصِيبَ جَعْفَرٌ رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى
أَهْلِهِ فَقَالَ إِنَّ آلَ جَعْفَرٍ قَدْ شُغِلُوا بِشَأْنِ مَيِّتِهِمْ فَاصْنَعُوا لَهُمْ
طَعَامًا (ابن ماجة) بَاب مَا جَاءَ فِي الطَّعَامِ يُبْعَثُ إِلَى أَهْلِ الْمَيِّتِ- كِتَاب مَا جَاءَ فِي
الْجَنَائِزِ
நபி
ஸல் அவர்களின் சிறிய தகப்பனார் ஜஃபர் ரழி
அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நேரத்தில் நபி ஸல் அவர்கள் தனது குடும்பத்தாரிடம் வந்து
இன்று ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ள சோகம் அவர்களை சமைக்க
முடியாமல் ஆக்கியுள்ளது எனவே நீங்கள் உணவு சமைத்துக் கொடுங்கள் என்றார்கள்
சிரமப்படுபவருக்கு கடன் கொடுத்து உதவுவது,
மேலும் அவருடைய கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் தருவது தர்மமாகும்
عن حُذَيْفَةَ
رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ تَلَقَّتْ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ
فَقَالُوا أَعَمِلْتَ مِنْ الْخَيْرِ شَيْئًا قَالَ لَا قَالُوا تَذَكَّرْ قَالَ
كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَآمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا الْمُعْسِرَ وَيَتَجَوَّزُوا عَنْ
الْمُوسِرِ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَجَوَّزُوا عَنْهُ (مسلم) بَاب فَضْلِ إِنْظَارِ
الْمُعْسِرِ- كِتَاب الْمُسَاقَاةِ وفي رواية فَقَالَ اللَّهُ أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ تَجَاوَزُوا عَنْ عَبْدِى
(مسلم)
عَنْ عِمْرَان بْن حُصَيْن رَضِيَ اللَّهُ عَنْه قَالَ قَالَ رَسُول
اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ مَنْ كَانَ لَهُ عَلَى
رَجُل حَقّ فَأَخَّرَهُ كَانَ لَهُ بِكُلِّ يَوْم صَدَقَة (تفسير ابن كثير)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக