21-04-2023 RAMZAN – 29 |
|
بسم الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
29-ம் நாளில் முடிவில் பிறையைத் தேட வேண்டும்.
ஏனெனில் இஸ்லாமிய மாதம் என்பது 29 நாட்களாகவோ அல்லது முப்பது நாட்களாகவோ இருக்கும்
عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا
فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ فَقِيلَ لَهُ
إِنَّكَ حَلَفْتَ أَنْ لَا تَدْخُلَ شَهْرًا فَقَالَ إِنَّ الشَّهْرَ يَكُونُ
تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا (بخاري
நபி ஸல் அவர்களிடம் சக்திக்கு மீறிய ஜீவனாம்சம்
கேட்ட காரணத்தால் ஒரு மாதம் தன் மனைவிமார்களிடம் பேச மாட்டேன் என நபி ஸல் சத்தியம்செய்திருந்தார்கள்.
பின்பு அல்லாஹ் அந்த மனைவிமார்களைக் கண்டித்து ஆயத்தை இறக்கினான் தவ்பா
செய்தார்கள்.
அதன் பின்பு நபி ஸல் அவர்கள் சத்தியம் செய்து
ஒரு மாதம் முடிவடையாத நிலையில் 29 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் மனைவிமார்களிடம்
பேசினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு மாதம் என சத்தியம் செய்திருந்தீர்களே
என்று கேட்டதற்கு ஒரு மாதம் என்பது 29 ல் கூட முடிந்து விடும் அல்லவா என்று பதில்
கூறினார்கள்
فقه: وإذا كان
بالسماء علةٌ قبل الإمام شهادة الواحد العدل في رؤية الهلال رجلاً كان أو امرأةً
حراً كان أو عبداً فإن لم يكن بالسماء علةٌ لم تقبل شهادته حتى يراه جمعٌ كثيرٌ
يقع العلم بخبرهم وإذا كان بالسماء علة لم تقبل في هلال الفطر إلا شهادة رجلين أو
رجل وامرأتين وإن لم يكن بالسماء علة لم تقبل إلا شهادة جمع كثير يقع العام بخبرهم
(مختصر القدوري)
وإذا كان بالسماء علة لم يقبل في هلال الفطر
إلا شهادة رجلين أو رجل وامرأتين لأنه تعلق به نفع العبد وهو الفطر (هداية
மேக மூட்டமாக
இருக்கும்போது ரமழானுக்கான பிறையை ஒருவர் வந்து சொன்னாலும் காஜி ஏற்கலாம் காரணம்
அவர் நோன்பு வைப்பதற்காக தகவல்
கூறுகிறார். பசியுடன் இருப்பது என்பது வணக்கம். எனவே பொய் சொல்ல வாய்ப்பில்லை.
ஆனால் மேக மூட்டமாக இருக்கும்போது ஷவ்வாலுக்கான பிறையை இருவர் வந்து சொன்னால் தான்
காஜி ஏற்க வேண்டும் காரணம் அவர் நோன்பை
விடுவதற்காக தகவல் கூறுகிறார். அதில்
மனிதர்களுக்கு பிரயோஜனம் உள்ளது என்பதால் வணக்கம்
என்பதில் சேராது – ஹிதாயா
ஒருநாள்
கேரளாவில் பெருநாளை முடித்து விட்டு அன்றே மதியத்திற்குள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
அல்லது இங்கிருந்து கடைசி நோன்பு வைத்தவராக அங்கே செல்கிறார் அவரின் சட்டம் என்ன?
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ
وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ (ترمذي) وَفَسَّرَ
بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ فَقَالَ إِنَّمَا مَعْنَى هَذَا أَنَّ
الصَّوْمَ وَالْفِطْرَ مَعَ الْجَمَاعَةِ وَعُظْمِ النَّاسِ (ترمذي)
إذا ابتدأ الصيام في
بلد ثم سافر إلى بلد صاموا قبلهم أو بعدهم فإن حكمه حكم من سافر إليهم فلا يفطر
إلا بإفطارهم ولو زاد عن ثلاثين يوما لقوله صلى الله عليه وسلم الصوم يوم تصومون
والإفطار يوم تُفطرون " ، وإن نقص صومه عن تسعة وعشرين يوما فعليه إكماله بعد
العيد إلى تسعة وعشرين يوما لأن الشهر الهجري لا ينقص عن تسعة وعشرين يوما .
(من فتاوى الشيخ
عبدالعزيز بن باز : فتاوى الصيام)
கேரளாவில் பெருநாளை
முடித்து விட்டு அன்றே மதியத்திற்குள் தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றால் அவர்
இங்கு உள்ளவர்களைப் போன்று நோன்பாளி மாதிரி இருக்க வேண்டும். அவர் முப்பது
நோன்புகளையும் வைத்திருந்தாலும் சரியே. அடுத்த நாள் பெருநாள் தொழுகையில் கலந்து
கொள்ளலாம். அவருக்கு அது நஃபிலாக ஆகி விடும். இங்கிருந்து கடைசி நோன்பு வைத்தவராக
அங்கே செல்கிறார் என்றால் அங்கு பெருநாளாக இருக்கிறது என்றால் அவர் அந்த நோன்பை
அன்று விட்டு விட வேண்டும். அங்குள்ளவர்களுடன் இணைந்து பெருநாளாக அதை அனுசரிக்க
வேண்டும். ஆனால் அடுத்த நாள் அந்த நோன்பைக் களாச் செய்ய வேண்டும்
ரமழான் 29 நோன்புகளுடன்
முடிவதால் நாம் பாக்கியசாலிகள் இல்லை என்றாகி விடுமா?
عَنِ ابْنِ مَسْعُودٍ
، قَالَ : لَمَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْتُ مَعَهُ ثَلاَثِينَ. (صحيح ابن خزيمة
இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் நபி ஸல்
அவர்கள் இருக்கும்போது நாங்கள் முப்பது நோன்புகள் வைத்ததை விட 29 நோன்புகள்
வைத்ததே அதிகம்.- நூல் இப்னு குஜைமா
படிப்பினை - நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் அதிகமாக 29 நோன்புகள் தான்
அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றால் முப்பதாவது நோன்பைப் பெறாதவர்கள்
பாக்கியமற்றவர்கள் என்று கருதுவதற்கு இடமில்லை.
ரமழான் ஆரம்பத்திலும் இதே நிலை தான்
عَنْ أَبِي الْبَخْتَرِيِّ قَالَ خَرَجْنَا
لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ
فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ
لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا
الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ
هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا
لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ
رَأَيْتُمُوهُ (مسلم)
அபூல் பக்தரீ ரஹ்
அவர்கள் கூறினார்கள் நாங்கள் உம்ராவுக்காகச் சென்று கொண்டிருந்தோம் அது ரமழானுக்காக
பிறை தேட வேண்டிய நேரம் பிறையைக் கண்டோம் எங்களில் சிலர் இது மூன்றாவது நாள் பிறை
போல் பெரிதாக உள்ளது (நமக்கு இரண்டு நோன்புகள் தவறி விட்டது) என்று பேசினார்கள். வேறு சிலர் இது இரண்டாவது நாள் பிறை போல் உள்ளது (நமக்கு ஒரு நோன்பு தவறி விட்டது) என்று பேசினார்கள்.
அப்போது எங்களுடன் இருந்த இப்னு அப்பாஸ் ரழி அவர்களைச் சந்தித்து விஷயத்தைச்
சொன்னபோது அவர்கள் எங்களிடம் பிறையை எப்போது பார்த்தீர்கள் என்று கேட்க,
குறிப்பிட்ட இரவை நாங்கள் கூறினோம். அப்போது இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். நபி
ஸல் அவர்கள் பிறையை நாம் எப்போது பார்க்கிறோமோ அதைத் தான் கணக்காக
ஆக்கியுள்ளார்கள். (எனவே பிறை எப்படியோ இருக்கட்டும்.
உங்களுக்கு இது தான் முதல் பிறை என்றார்கள்)
ஈதுப் பெருநாளின் சில
சுன்னத்தான செயல்கள் முதல் நாள் மஃரிபில் இருந்தே துவங்கி விடுகின்றன
وَلِتُكْمِلُوا
الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ
تَشْكُرُونَ (185)البقرة - معناه الحض
على التكبير في آخر رمضان في قول جمهور أهل التأويل. واختلف الناس في حده، فقال
الشافعي: روي عن سعيد ابن المسيب وعروة وأبي سلمة أنهم كانوا يكبرون ليلة الفطر
ويحمدون، قال: وتشبه ليلة النحر بها. وقال ابن عباس: حق على المسلمين إذا رأوا
هلال شوال أن يكبروا وروي عنه: يكبر المرء من رؤية الهلال إلى انقضاء الخطبة،
ويمسك وقت خروج الإمام ويكبر بتكبيره. وقال قوم: يكبر من رؤية الهلال إلى خروج
الإمام للصلاة (قرطبي
மேற்படி வசனத்தில்
அல்லாஹ் ரமழான் கடைசி நேரத்தில் தக்பீர் கூறுவதைத் தூண்டுகிறான் என பெரும்பாலான
விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இன்னும் விரிவாக இமாம் ஷாஃபிழஈ ரஹ் அவர்கள்
கூறும்போது பெருநாள் இரவு தக்பீர் கூற வேண்டும் என்று கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக
இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழி
அவர்கள் கூறினார்கள். ஷவ்வால் பிறையைப் பார்த்து விட்டால் முஸ்லிம்கள் தக்பீர்
கூறவேண்டும். மறுநாள் காலை வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தக்பீர் கூறலாம். இமாம்
பெருநாள் தொழுகைக்காக வெளியேற பின் அவரும் இணைந்து சிறிது நேரம் கூறுவார். அத்தோடு
அதற்கான நேரம் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு தக்பீர் கிடையாது. அதாவது ஈதுத்
தொழுகை முடிந்த பிறகு கிடையாது.
وكان الشافعي يقول إذا رأى هلال شوال: أحببت
أن يكبر الناس جماعة وفرادى، ولا يزالون يكبرون ويظهرون التكبير حتى يغدوا إلى
المصلى وحين يخرج الإمام إلى الصلاة، وكذلك أحب ليلة الأضحى لمن لم يحج (قرطبي.
ஈதுகாவுக்குச் செல்லும்
வழியிலும் தக்பீர் சொல்வது ஸாஹிபைன் ரஹ் அவர்களின் கூற்றுப்படி சுன்னத்
ولا يكبر عند أبي حنيفة رحمه الله في طريق
المصلى وعندهما يكبر اعتبارا بالأضحى
(هداية
ஈதுடைய இரவில் முடிந்தவரை
தனித்தனியாக வணக்கங்களில் ஈடுபடுவது நல்லது
இதற்காக ஜமாஅத்
வைப்பது ஹனஃபி மத்ஹபில் மக்ரூஹ்
( و ) ندب ( إحياء ليلة العيدين ) الفطر
والأضحى لحديث " من أحيا ليلة العيد أحيا قلبه يوم تموت القلوب " ويستحب
الإكثار من الاستغفار بالأسحار وسيد الاستغفار " اللهم أنت ربي لا إله إلا
أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء
لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت " والدعاء
فيها مستجاب (مراقي الفلاح حنفي
عَنْ أَبِي أُمَامَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ
الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ
(ابن ماجة
أَيْ لِكَثْرَةِ الذُّنُوب وَالْمُرَاد إِنْ
أَدْرَكَهُ ذَلِكَ الْيَوْم يَكُون هُوَ مَخْصُوصًا مِنْ بَيْن النَّاس بِحَيَاةِ
الْقَلْب ظَاهِره أَنْ يُحْيِي كُلّ
اللَّيْلَة بِالْعِبَادَةِ وَالْمَرْجُوّ أَنَّ قِيَام التَّهَجُّد يَكْفِي (حاشية السندي)
( ويكره الاجتماع على إحياء ليلة من هذه الليالي ) ومعنى القيام أن
يكون مشتغلا معظم الليل بطاعة وقيل بساعة منه يقرأ أو يسمع القرآن أو الحديث أو
يسبح أو يصلي على النبي صلى الله عليه و سلم (مراقي الفلاح حنفي فقه)
நபி ஸல் கூறினார்கள் எவர் இரு
பெருநாட்களில் இரவை முடிந்த வரை விழித்திருந்து வணங்குவாரோ அவருடைய சிறப்பாகிறது
மற்ற உள்ளங்கள் பாவங்களின் காரணமாக மரணித்து விடும் நாளில் இவரின் உள்ளம் மட்டும்
ஹயாத்தாக இருக்கும்.அதாவது உள்ளம் மரணித்து விட்டவர்களின் பட்டியலில் இவர் சேர
மாட்டார். அன்று இரவு தஹஜ்ஜுத் தொழுது விட்டாலே அதுவே இந்த சிறப்புகளை அடைய
வாய்ப்பைத் தரும். பெருநாள் இரவில் ஸய்யிதுல் இஸ்திஃபாரை அதிகம் ஓதுவது
நல்லது
ஐந்து இரவுகளில் வணக்கம் புரிவது நல்லது
وقال صلى الله عليه و سلم " من أحيا
الليالي الخمس وجبت له الجنة ليلة التروية وليلة عرفة وليلة النحر وليلة الفطر
وليلة النصف من شعبان " (مراقي
الفلاح حنفي فقه)
ஈதுப் பெருநாளுக்காக குளிப்பதும், புத்தாடைகள் உடுத்துவதும் சுன்னத்தான செயல்
عن فَاكِهِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ وَيَوْمَ
عَرَفَةَ وَكَانَ الْفَاكِهُ يَأْمُرُ أَهْلَهُ بِالْغُسْلِ فِي هَذِهِ
الْأَيَّامِ رواه ابن ماجة
عَنْ أَبِي رِمْثَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ
رواه النسائ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى
حُلَّةً سِيَرَاءَ - يَعْنِى تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ - فَقَالَ يَا
رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ
وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ (وفي رواية البخاري "تَجَمَّلْ
بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ") فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِى الآخِرَةِ ثُمَّ
جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ
الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا يَا رَسُولَ اللَّهِ
وَقَدْ قُلْتَ فِى حُلَّةِ عُطَارِدَ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم إِنِّى لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ
مُشْرِكًا بِمَكَّةَ.رواه ابوداود (السيراء : ثياب من الحرير)
இமாம் புகாரீ ரஹ் அவர்கள் ஈதுப்
பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மேலும் தன்னை சந்திக்க வருபவர்களுக்காக
அழகிய ஆடைகளை உடுத்துவது மாற்றார்களுக்கு அன்பளிப்பு வழங்குவது போன்ற பல்வேறு
தலைப்புகளின் கீழ் கீழ்காணும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்கள்.
கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை
மஸ்ஜிதின் வாசலில் பட்டு கலந்த ஆடை விற்கப் படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே
நீங்கள் இதை விலைக்கு வாங்கிக் கொண்டால் ஈதுப் பெருநாளுக்காகவும் தங்களைச்
சந்திக்க வருபவர்களுக்காகவும் இதை அணிந்து கொள்ளலாமே என்று கேட்க அதற்கு நபி ஸல்
அவர்கள் மறுமையில் யாருக்கு எவ்வித நற்கூலியும் இல்லையோ அவர் தான் இதை வாங்குவார்
என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்பு சில தினங்கள் கழித்து அதே போன்ற பட்டாடை
நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டதோ அதை உமர் ரழி அவர்களுக்குக்
கொடுத்தனுப்பினார்கள். உடனே உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை
வேண்டாம் என்று தடுத்தீர்கள். இப்போது நீங்களே இதை எனக்கு அணியக்
கொடுத்தனுப்பியுள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இதை உமக்காக
நான் கொடுத்தனுப்பவில்லை. மக்காவில் இருக்கும் உமது காஃபிரான சகோதரருக்கு கொடுத்து
விடுங்கள் என்றார்கள்.
இதில் படிப்பினைகள் நிறைய உள்ளன. எனினும்
முக்கியமான படிப்பினை ஈதுப்
பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவதை நபி ஸல் அவர்கள் விரும்பியதால் தான் இதை
தாங்கள் வாங்கிக் கொள்ளலாமே என உமர் ரழி அவர்கள் கேட்டார்கள். ஆனாலும் பட்டு
என்பதால் நபி ஸல் மறுத்தார்கள்.
ஈதுப் பெருநாளில் செய்ய வேண்டிய சுன்னத்தான
செயல்களில் இன்னும் சில...
தொழ வரும்போது ஒரு பாதையிலும் செல்லும்
போது வேறு பாதையிலும் செல்வது சுன்னத்
عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ
الطَّرِيقَ ربخاري) عَنْ ابْنِ عُمَر رضي الله عنهما أَنَّهُ كَانَ يَخْرُجُ إِلَى
الْعِيدِ فِي طَرِيقٍ وَيَرْجِعُ فِي أُخْرَى وَيَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ (ابن ماجة)
முடிந்த வரை நடந்து
வருவது சுன்னத். பார்க்கிங் வசதி இல்லாத மஸ்ஜித்களுக்கு இதுவே நல்லது
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ إِلَى الْعِيدِ
مَاشِيًا وَيَرْجِعُ مَاشِيًا (ابن ماجة)
عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ إِنَّ مِنْ السُّنَّةِ أَنْ يُمْشَى إِلَى
الْعِيدِ ابن ماجة
நபி ஸல் அவர்கள் ஈதுத்
தொழுகைக்கு வரும்போது நடந்து வருவார்கள் போகும்போது நடந்து செல்வார்கள்
நகர்ப்புறங்களில் பல
மஸ்ஜித்களில் பார்க்கிங் வசதி இல்லை. அவ்வாறிருக்க சிலர் நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு தொழ
வருவதால் பொது மக்களுக்கு நிறைய இடையூறுகள் உள்ளது.
عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه -
عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - « يُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ
صَدَقَةٌ (بخاري
மக்களுக்கு நோவினை
தரும் பொருட்களை நடைபாதையில் இருந்து அப்புறப்படுத்துவது சுன்னத் என்றிருக்க நாம்
அதற்கு நேர் மாற்றமாக நடைபாதையில் வண்டியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
செய்தால் நம் தொழுகைக்கும் பலனிருக்காது
ஈதுப் பெருநாளில் சாப்பிட்டு விட்டு வருவது
சுன்னத்
عَنْ بُرَيْدَةَ قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ
الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى
يُصَلِّيَ(ترمذي) وَقَدْ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ لَا
يَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا وَيُسْتَحَبُّ لَهُ أَنْ
يُفْطِرَ عَلَى تَمْرٍ (ترمذي)
ஈதுத் தொழுகைக்கு முன்னும் பின்னும்
நஃபில் தொழுவது மக்ரூஹ். தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்த பின் தொழுகலாம்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ
لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا وَمَعَهُ بِلَالٌ رواه البخاري
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ
شَيْئًا فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ رواه ابن ماجة
ஈத், ஜும்ஆவில் ஓதுவதற்கு ஏற்றமான
சூராக்கள். ஹனஃபியில் அதையே வழமைப் படுத்துவது மக்ரூஹ்
عَنْ النُّعْمَانِ بْنِ
بَشِيرٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي
الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ
حَدِيثُ الْغَاشِيَةِ قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ
فِي يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ- عَنْ أَبِي
هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقْرَأُ
فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ الم تَنْزِيلُ وَهَلْ أَتَى رواه مسلم فقه حنفي
: يكره أن يتخذ شيئا من القرآن حتما في صلاة لا يقرأ فيها غيره فربما يظن
ظان أنه لا تجوز تلك الصلاة إلا بقراءة تلك السورة (المبسوط)
ஈதுப் பெருநாளில் அனுமதிக்கப்பட்ட
விளையாட்டுக்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي
جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ
الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُو
بَكْرٍ أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا
وَهَذَا عِيدُنَا رواه البخاري
ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் நான்
வீட்டில் இருந்த போது என் தந்தை வந்தார்கள். அது ஈதுப்பெருநாளாக இருந்தது. அப்போது இரண்டு சிறுமிகள் அக்காலத்து
அன்சாரிகளுடைய பாட்டுப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அதைக் கண்ட
அபூபக்கர் ரழி அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இறைத்தூதரின் வீட்டில் இசையா என்ற
கண்டித்தபோது நபி ஸல் அவர்கள் அதைத் தடுத்தார்கள். அபூபக்கரே ஒவ்வொருவருக்கும் ஒரு
பெருநாள் உண்டு இது நமக்குப் பெருநாள் (எனவே விடுங்கள் பாடட்டும்) என்றார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِحِرَابِهِمْ
إِذْ دَخَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَهْوَى إِلَى الْحَصْبَاءِ يَحْصِبُهُمْ
بِهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُمْ يَا عُمَرُ- مسلم باب الرُّخْصَةِ فِى
اللَّعِبِ الَّذِى لاَ مَعْصِيَةَ فِيهِ فِى أَيَّامِ الْعِيدِ. (حِرابபோர்க் கருவிகள்
மற்றொரு நேரத்தில் நபி ஸல்
அவர்களின் முன்னிலையில் நீக்ரோ இளைஞர்கள் அம்பெறிந்து விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்து கண்ட உமர் ரழி அவர்களுக்கு கோபம்
ஏற்பட்டது. சிறு கற்களை எடுத்து அவர்கள் மீது வீச முயற்சித்த போது நபி ஸல் அவர்கள்
அதைத் தடுத்தார்கள். உமரே விடுங்கள் விளையாடட்டும் என்றார்கள்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قالت َكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ
بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ
نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا
بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ
فَاذْهَبِي(بُخاري)وفي رواية مسلم وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي وَالْحَبَشَةُ
يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَيْ أَنْظُرَ إِلَى
لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ
فَاقْدِرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ
(مسلم)
கருத்து-ஆயிஷா ரழி அவர்கள்
கூறினார்கள் ஈதுப் பெருநாளில் நீக்ரோ இளைஞர்கள் அம்பெறிந்து விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறாயா என நபி ஸல்
என்னிடம் கேட்க, நான் ஆம் என்றேன். நபி ஸல் அவர்களின் முதுகுக்குப் பின்னால் நான்
நின்று கொண்டேன் அவர்களின் கண்ணத்தோடு என் கண்ணங்கள் ஒட்டி நின்றபடி வேடிக்கை
பார்த்தேன். நானாக போதும் என்று சொல்லும் வரை என்னுடன் நபி ஸல் நின்றார்கள். ஒரு
சின்னப் பெண் எவ்வளவு நேரம் அந்த விளையாட்டை ரசித்திருப்பார் என நீங்களே
கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள்.
படிப்பினை- ஈதுப் பெருநாளில்
அனுமதிக்கப்பட்ட வகையிலான சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம். சினிமா போன்ற
அனுமதிக்கப்படாதவற்றுக்குச்
செல்லக்கூடாது. சில ஊர்களில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்புக் காட்சி என
போஸ்டர் ஓட்டுவார்கள் அந்த அளவுக்கு வாலிபர்கள் பெருநாளில் அங்கு கூடுகிறார்கள் என
அர்த்தம் ஈதுப் பெருநாளில் பெண்களுக்கு உபதேசம் செய்வது
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ إِنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَبَدَأَ بِالصَّلَاةِ ثُمَّ خَطَبَ
النَّاسَ بَعْدُ فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى
يَدِ بِلَالٍ وَبِلَالٌ بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِي فِيهِ النِّسَاءُ صَدَقَةً
قُلْتُ لِعَطَاءٍ أَتَرَى حَقًّا عَلَى الْإِمَامِ الْآنَ أَنْ يَأْتِيَ
النِّسَاءَ فَيُذَكِّرَهُنَّ حِينَ يَفْرُغُ قَالَ إِنَّ ذَلِكَ لَحَقٌّ
عَلَيْهِمْ وَمَا لَهُمْ أَنْ لَا يَفْعَلُوا رواه البخاري
ஈத்காஹ் என்பது இல்லா விட்டாலோ, அல்லது
மழை பெய்து கொண்டிருந்தாலோ பள்ளியில் தொழலாமா ?
عَنْ
أَبِى هُرَيْرَةَ أَنَّهُ أَصَابَهُمْ مَطَرٌ فِى يَوْمِ عِيدٍ فَصَلَّى بِهِمُ النَّبِىُّ
-صلى الله عليه وسلم- صَلاَةَ الْعِيدِ فِى الْمَسْجِدِ رواه ابوداود
ஈகைத் திருநாளில் மற்ற உபரியான தான தர்மங்களையும்
அதிகமாகச் செய்ய வேண்டும்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجَ
رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى فَمَرَّ عَلَى النِّسَاءِ
فَقَالَ يَا مَعْشَرَ
النِّسَاءِ
تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ يَا
رَسُولَ اللَّهِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ مَا رَأَيْتُ
مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ
إِحْدَاكُنَّ قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ
قَالَ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ قُلْنَ
بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ
تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا
(بخاري) باب تَرْكِ الْحَائِضِ الصَّوْمَ- كتاب الحيض
தன் சொத்துக்களில் மூன்றில் ஒரு பகுதியை தர்மம்
செய்தவருக்கென அல்லாஹ் தனிப்பட்ட முறையில் மழையை இறக்கியுள்ளான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ
بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ
فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ
مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ
الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ
بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ
لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ
تَسْأَلُنِي عَنْ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي
هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا
قَالَ أَمَّا إِذْ قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا
فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا
ثُلُثَهُ (مسلم) بَاب الصَّدَقَةِ فِي الْمَسَاكِينِ- كِتَاب الزُّهْدِ
وَالرَّقَائِقِ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக