22-04-2023 ஷவ்வால்– 1 |
|
بسم الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
إِنَّ الَّذِينَ
قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ
تُوعَدُونَ (30)المؤمن
يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ
قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة - عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ
عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا
وَإِنْ قَلَّ (بخاري
சிறிதளவு செய்தாலும்
தொடர்ந்து செய்வது தான் அல்லாஹ்வுக்குப் பிடிக்கும்
தொடர்படியான அமல் நல்ல
மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து
நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந்நிலையில் அவரை மவ்த்தாக்குவான்
عَنْ أَنَسٍ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ
بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ
اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي - كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
மற்ற மாதங்களிலும் அமல்களை தொடர்ந்து
செய்வதற்கான பயிற்சியாகத் தான் ரமழானின் அமல்கள் கடமையாக்கப்பட்டுள்ளது
يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ
قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة) ذَكَرَ كَعْب رضي الله عنه أَنَّهُ مَنْ صَامَ رَمَضَان
وَهُوَ يُحَدِّث نَفْسه إِذَا أَفْطَرَ رَمَضَان أَنْ لَا يَعْصِي اللَّه دَخَلَ
الْجَنَّة بِغَيْرِ مَسْأَلَة وَلَا حِسَاب (تفسير ابن كثير)
ரமழான்
முடிந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டேன் என்ற நல்ல மன உறுதியுடன்
யார் ரமழானில் நோன்பு வைப்பாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்.
ஷைத்தான்கள் சிறை
பிடிக்கப்படும் மாதமான ரமழானில் அமல்கள் செய்வது வாகன நெரிசல் இல்லாத நேரங்களில்
வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது போல... இவ்வாறு வண்டி ஓட்டுபவனை டிரைவர் என்று கூற
முடியாது. வாகன நெரிசல் உள்ள நேரங்களிலும்
வண்டி ஓட்டுபவன் தான் உண்மையான டிரைவர். அதுபோல் ஷைத்தான்கள் அவிழ்த்து விடப்படும்
மற்ற மாதங்களிலும் அமல்கள் செய்பவர் தான் உண்மையான வணக்க சாலி ஆவார்.
முனாஃபிக்கின் அடையாளம்
எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான
அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்
إِنَّ الْمُنَافِقِينَ
يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ
قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا
(142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ
والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ
عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ
مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ
بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ
أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا
يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)
நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும்
மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள்
உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு
யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு
யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது
என்றார்கள்.
விளக்கம்- அக்காலத்தில்
மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர
மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.
வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்போது மட்டும் தொழும்
சந்தர்ப்பவாதிகளைப் பற்றி....
சில முஸ்லிம்கள் இப்படியும்
இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தேவை
நிறைவறவிருந்தால் மட்டும் தொழுவார்கள் அந்த தேவை நிறைவேறி விட்டால் அல்லது அந்த
துன்பம் நீங்கி விட்டால் தொழுகையை மறந்து விடுவார்கள்
ஆழ்கடல்
இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர். அதில் ஒருவரின்
பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும்
அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால்
அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர்கள் தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ
عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ
إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)
நபி யூனுஸ் அலை தன் உம்மத்தினருக்கு இஸ்லாமை எடுத்துக்
கூறியும் கேட்காததால் அல்லாஹ்விடம் அவர்களின் மீது வேதனையை இறக்க துஆ செய்தார்கள்.
அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டு இந்த நாளில் வேதனை வரும் என்று அறிவித்தான் அதை
அப்படியே அந்த மக்களிடம் நபி யூனுஸ் அலை கூறினார்கள் அப்பொழுது அந்த மக்களுக்கு
பயம் வந்தது அவர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி பெரியவர்கள்,
சிறியவர்கள், கால்நடைகள் என எல்லோரும் ஒன்று கூடி துஆ செய்ததால் கண்ணுக்கு எட்டிய
தூரத்தில் இருந்த வேதனையை அல்லாஹ் ரத்து செய்தான் இதற்கிடையே வேதனை வரும் என்று
அறிவித்த நபி யூனுஸ் அலை ஊரை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள் அல்லாஹ்
அறிவித்தும் கூட இப்படி வேதனை வராமல் ஆகி விட்டதே என்ற அதிருப்தியுடன் அவர்கள்
வெளியேறியதாலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி வெளியேறியதால் அல்லாஹ் அவர்களை
தண்டித்தான்
இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும்
செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை
காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன்
காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை
அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது
சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த
மாட்டான்.
சீசன்
தொழுகையாளிகளிடம் சில கேள்விகள்
வியாபாரிகளுக்குக் கூட சீசன் இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நேரங்களில்
சாதாரணமாக வியாபாரம் நடைபெறும். சீசன் நேரங்களில் அதிகமாக வியாபாரம் நடைபெறும்
ஆனால் இங்கே ஒரு கேள்வி? ஒரு வியாபாரி சீசன் நேரத்தில் மட்டுமே கடையை
திறக்கிறார். மற்ற நேரங்களில் அவர் கடையை மூடியே வைத்திருக்கிறார். கடையை
திறப்பதில்லை. இவருக்கு சீசன் வியாபாரம் கை கொடுக்குமா? நிச்சயமாக கை கொடுக்காது மற்ற நேரங்களில்
வியாபாரம் செய்து பழகியவர் சீசனிலும் வியாபாரம் செய்தால் அதிக பலனைப்
பெறலாம்அதேபோல ரமழான் அல்லாத நேரங்களிலும் வணங்கியவர், ரமழானிலும் வணங்கினால் அதிக
நன்மைகளைப் பெறலாமே தவிர, ரமழானில் மட்டும் அதிகம் வணங்கி, ரமழான் முடிந்தவுடன்
பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் நன்மைகளைப் பெற முடியாது
ஒரு முதலாளியாக நாம்
இருந்து கற்பனை செய்து பார்க்கிறோம் - நம்மிடம் ஒரு தொழிலாளி வேலை
செய்கிறான் மாதத்தில் எல்லா வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று நாம்
கட்டளையிட்டிருக்கும் நிலையில், ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அவன் வரா விட்டால்
பொறுத்துக் கொள்வோம். ஆனால் அவன் வருவதே மாதத்தில் மூன்று நாட்கள் தான். அல்லது
வாரத்தில் ஒரு நாள் தான் என்றால் நாம் அவனை என்ன செய்வோம். அவனை மிரட்டுவோம் வாரத்தில்
ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வதற்கு நீ என்ன பெரிய அதிகாரியா?
ஒழுங்காக வேலைக்கு வரா
விட்டால் நீ நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்வோம் அல்லவா?
சம்பளம் மட்டுமே கொடுக்கும்
நமக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது நம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கட்டளை
தினமும் ஐந்து வேளை என்றிருக்க, POINT
to POINT மாதிரி
ஜும்ஆ to ஜும்ஆ என்ற நிலையை அல்லாஹ் பொறுத்துக் கொள்வானா?
ரமழான்
முடிந்தவுடன் ஐவேளை தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்
உதாரணம் 1- ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி,
பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு
புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும்
அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப்பற்றி என்ன
நினைப்போம்
وَلَا
تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل
قَالَ عَبْد اللَّه بْن
كَثِير السُّدِّيّ : هَذِهِ اِمْرَأَة خَرْقَاء كَانَتْ بِمَكَّة كُلَّمَا
غَزَلَتْ شَيْئًا نَقَضَتْهُ بَعْد انْبِرَامِهِ
(تفسير ابن كثير
மக்காவில் முட்டாள்
தனமான இப்படியொரு பெண் இருந்தாள். அழகாக நூல் நூற்று அதை ஒரு கோர்வையாக
கஷ்டப்பட்டு ஆக்கிய பின் கடைசியில் அணைத்தையும் கலைத்துப் போட்டு விடுவாள். அதுபோல
ரமழானில கஷ்டப்படு அமல் செய்து இறுதியில் அனைத்தையும் வீணாக்கி விடுகிறோம்
உதாரணம் 2 ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக
கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே
அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி, இரவும், பகலும் விழித்திருந்து, ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக
எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து
அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
உதாரணம்- 3- ஒருவர்
மாடியிலிருந்து கீழே விழுந்து, காலில்
எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள்
கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய
வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி
செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற
முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ
ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு
மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை
உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன
நினைப்போம்
உதாரணம்- 4- ஒருவர் நடந்து செல்லும் போது
சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி.
அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ
காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை
அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !
என்று எச்சரித்து அனுப்ப,
அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப்
பற்றி நாம் என்ன நினைப்போம்
ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும்
ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை
மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.
சம்பவம் - இறைநேசர் சிர்ரிய்யுச் சிக்திய்யீ
ரஹ் அவர்கள் ஒரு மரத்திடம் பேசினார்கள். அந்த
மரம் கூறியது . என்னைக் கல்லைக் கொண்டு எரிகிறார்கள் ஆனால்
நான் அவர்களுக்கு பழங்களையே தருகிறேன். நான் பல விதங்களிலும் மனிதர்களுக்கு
பயன்படுகிறேன் என்று தன் பெருமைகளைக் கூறிய போது அப்போது அந்த இறைநேசர் கேட்டார்
நீ இவ்வளவு தூரம் மனிதர்களுக்காக அற்பணிக்கிறாய் ஆனால் உன்னைப் போய்
எரிக்கிறார்களே அப்போது அந்த மரம் கூறியது. நான்
செய்வதெல்லாம் சரி தான். ஆனால் என்னிடம் ஒரு தவறு உள்ளது நான் காற்றடிக்கும்
பக்கம் சாய்ந்து விடுவேன் அதனால் தான் என்னை எரிக்கிறார்கள் என்றது. அதுபோல் மனிதர்களில் சிலர் ஒரு நிலையில்லாமல் இப்படியும் அப்படியும்
சாய்பவர்களாக சில நேரம் நல்ல மனம் இருந்தால் தொழுவது சில நேரம் தொழுகையை விடுவது
இப்படி இருப்பதால் தான் நரகம்
ரமழானில்
மட்டும் தொழுபவர்களிடம் ஒரு கேள்வி
? ? நீங்கள் ரமழானை வணங்குகிறீர்களா ? அல்லது அல்லாஹ்வை வணங்குகிறீர்களா ? நீங்கள் ரமழானை
வணங்குகிறீர்கள் என்றால் ரமழான் முடிந்து விட்டது. நீங்கள் போய் விட்டு அடுத்த
ரமழான் வந்தால் போதும். மாறாக நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள் என்றால் அல்லாஹ்
எப்போதும் இருக்கிறான்....
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள்
பற்றி......
عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ رضى الله عنه
أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ
كَانَ كَصِيَامِ الدَّهْرِ(مسلم) باب اسْتِحْبَابِ صَوْمِ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ- كتاب
الصيام -قال أصحابنا والأفضل أن
تصام الستة متوالية عقب يوم الفطر فان فرقها أو أخرها عن أوائل شوال إلى اواخره
حصلت فضيلة المتابعة لأنه يصدق أنه أتبعه ستا من شوال قال العلماء وانما كان ذلك كصيام الدهر لان الحسنة بعشر
امثالها فرمضان بعشرة أشهر والستة بشهرين (شرح النووي)
பிரிந்த சொந்தங்களை
வலியச் சென்று சேர்த்துக் கொள்ள வேண்டிய நாள் இந்த ஈதுப் பெருநாள்
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ
يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ
بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين
فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين
خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ
دَمِهِ (ابوداود)
கருத்து- மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின்
இன்னொரு முஃமினிடம் பேசாமல் இருப்பது கூடாது. குறைந்த பட்சம் ஸலாம் கூறுவதாலும்
அந்தப் பாவம் நீங்கும். இருவரில் யார் முதலில் சலாம் கூறுகிறாரோ அவரே
சிறந்தவராவார்.
أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا
قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) أي المجازي غيره بمثل فعله
அவர் பேசினால் தான் நானும் பேசுவேன்
என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்
போன உறவுகளையும் வலியச் சென்று சேர்த்துக் கொள்பவரே உண்மையில் உறவைப் பேணுபவர்.
عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً
تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ
وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا
تَظْلِمُوا (ترمذي)
மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டால்
நானும் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்து
கொண்டால் நானும் அவர்களிடம் தீய முறையில் நடந்து கொள்வேன் என்று கூறும்
சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். மாறாக மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து
கொண்டாலும் நான் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக
நடந்து கொண்டாலும் நான் அவர்களிடம் நல்ல முறையிலேயே நடந்து கொள்வேன் என்று கூறும்
பொதுநலவாதிகளாக இருங்கள்.
அனைவரிடமும் முக மலர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய
நாள்
மலக்குகள் விண்ணுலகில்
நபி ஸல் அவர்களை வரவேற்ற போது முக மலர்ச்சியுடன் வரவேற்றார்கள்
قَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي بَعْضُ
أَهْلِ الْعِلْمِ عَمّنْ حَدّثَهُ عَنْ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ
وَسَلّمَ أَنّهُ قَالَ تَلَقّتْنِي الْمَلَائِكَةُ حِينَ دَخَلْت السّمَاءَ
الدّنْيَا ، فَلَمْ يَلْقَنِي مَلَكٌ ؟ إلّا ضَاحِكًا مُسْتَبْشِرًا ، يَقُولُ
خَيْرًا وَيَدْعُو بِهِ حَتّى لَقِيَنِي مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ . فَقَالَ
مِثْلَ مَا قَالُوا ، وَدَعَا بِمِثْلِ مَا دَعَوْا بِهِ إلّا أَنّهُ لَمْ
يَضْحَكْ وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ مَا رَأَيْت مِنْ غَيْرِهِ .
فَقُلْت لِجِبْرِيلَ يَا جِبْرِيلُ مَنْ هَذَا الْمَلَكُ الّذِي قَالَ لِي كَمَا
قَالَتْ الْمَلَائِكَةُ وَلَمْ يَضْحَكْ ( إلَيّ ) ، وَلَمْ أَرَ مِنْهُ مِنْ
الْبِشْرِ مِثْلَ الّذِي رَأَيْتُ مِنْهُمْ ؟ قَالَ فَقَالَ لِي جِبْرِيلُ : أَمَا
إنّهُ لَوْ ضَحِكَ إلَى أَحَدٍ كَانَ قَبْلَك ، أَوْ كَانَ ضَاحِكًا إلَى أَحَدٍ
بَعْدَك ، لَضَحِكَ إلَيْك ، وَلَكِنّهُ لَا يَضْحَكُ هَذَا مَالِكٌ خَازِنُ
النّارِ (سيرة ابن هشام
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் முதல் வானில் நான் நுழைந்த
போது என்னை சந்தித்த மலக்குகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். எனக்காக
துஆ செய்தனர். அவர்களில் ஒரு மலக்கு மட்டும் எல்லோரையும் போல் வாழ்த்தினார் ஆனால்
அவர் முகத்தில் மட்டும் முகமலர்ச்சியைக் காண முடியவில்லை அதற்கு நான் காரணம்
கேட்டபோது அவர் தான் நரகத்தின் காவலாளி மாலிக் அலைஹ்ஸ்ஸலாம் அவர் இதற்கு முன்பு
யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்தாலோ அல்லது இதற்குப் பின்பும் யாரையும்
பார்த்து சிரிப்பவராக இருந்திருந்தால் நிச்சயம் உங்களைக் கண்டு சிரித்திருப்பார்.
அவர் இதுவரை சிரித்த தில்லை. காரணம் நரகத்தைக் கண்டதில் இருந்து அவர்
சிரித்ததில்லை. என்று பதில் கூறப்பட்டது.
நபி ஸல் அவர்கள்
மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்
عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا
تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى
الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ
وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089
1608. நான் இஸ்லாத்தைத்
தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத்
தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப்
பார்த்ததில்லை. ‘என்னால்
குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி
காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று
பிரார்த்தனை செய்தார்கள்.
சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும்
சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதை
(புன்னகைப்பதை) மார்க்கம் வலியுறுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ
جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ
لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ
مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ
الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ
فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم
மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி
மற்றவர்களையும் ஏவினார்கள்
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ
وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ
الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ
الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ
الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ
صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة
கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை
செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில்
வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம்
உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ, முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில்
போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர்
ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).
நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப்
பார்க்க முடியாது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ
جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي
தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக
இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.
عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا
دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا :
حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ :
كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ
فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا
وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ
ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى
ஜைதுப்னு தாபித் ரழி
கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக
இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை
எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.)
நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு
கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை
நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன்
இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ
وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ
اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ
بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ
نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ
فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ
الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا
فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ
فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348
ஒருமுறை
நபி ஸல் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும்
நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன்
இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ
விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று
கேட்பான். அதற்கு அவர்,
ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று
கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார்.
கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத்
தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக்
கொள்,
ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று
கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச்
செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக!அந்த
மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க
முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார்.
இதனைக் கேட்ட நபி ஸல் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348
முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப்
போன்றில்லாமல் யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.
عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ
يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا
صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي
يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن
ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ
தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத்
திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும்
முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை
விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும்
நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள்
முந்தியிருப்பதைக் காண முடியாது.
மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச்
சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்
عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى
عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً
فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ
لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ
حَاجَتِهَا. (مسلم
மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது
என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது
முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல
விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை
நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள்.
பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல்
قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي
يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ
لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ
وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ
يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ
أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ
تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا
وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري
அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன்.
அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த
எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள்
ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.
அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா
மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ
أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا
وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ
لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ
ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ
وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي
الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ
لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)
நபி ஸல் அவர்களிடம் ஒரு
வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து
தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள்
தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை
நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி
விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை
நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக
திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே
தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக் கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள்
தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர்
அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை
மதிப்பற்ற செல்லாக் காசாகவே என்னை நீங்கள்
பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும்
விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள்
விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக