வியாழன், 27 ஏப்ரல், 2023

மார்க்கக் கல்வியில் ஆர்வமின்மை மனித குலத்துக்கே ஆபத்து

 


28-04-2023

ஷவ்வால்– 6

 

بسم الله الرحمن الرحيم 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




கண்ணியப் படுத்த வேண்டியவைகளை அலட்சியப் படுத்தும்போது பல்வேறு அழிவுகள் பூமிக்கு ஏற்படும்

நான்கு உதாரணங்கள் 1.கஃபா 2.குர்ஆன் 3.ஆலிம்கள் 4.மார்க்கக் கல்வி

கடைசி காலத்தில் கஃபா நீக்ரோக்களால் இடிக்கப்படும். அதன் பின் உலகமே அழிந்து விடும்

ع      َنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ.(بخاري)

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا . (بخاري)

அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் கொண்ட மனிதர்கள் கஃபாவை இடித்துப் பாழ் படுத்துவார்கள்” என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (வெளிப்பக்கமாக) வளைந்த கால்களுடைய கருப்பு நிறத்தவர்கள் கஃபாவின் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஃபாவை உடைப்பதை நான் பார்ப்பது போல் உள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் கூறினார்கள். (புகாரி)

அதற்கு முன்பு மற்றொரு கூட்டம் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள்

عن عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري

ஒரு கூட்டத்தினர் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள் அவர்களுடன் சேர்ந்து அங்கு வசிப்பவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று நபி ஸல் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே, தீயவர்கள் அழிக்கப்படுவது நியாயம். ஆனால் அழிக்கப்படும் இடத்தில் உள்ள நல்லவர்களும் அங்கு கடை வைத்திருப்பவர்களும் சேர்ந்து ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அது அப்படித்தான். ஆனால் அல்லாஹ் அவர்களை மீண்டும் எழுப்பும்போது அதற்கான சிறந்த நற்கூலியைத் தருவான் என்றார்கள்

படிப்பினை-முதல்தடவை கஃபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என கூறிய நபி ஸல் பின்பு கஃபாவை வளைந்த,  மெலிந்த கால்களையுடைய நீக்ரோக்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறினார்கள் ஒரு காலகட்டம் வரை கஃபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் கஃபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம்.அப்போது கஃபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை அல்லாஹ் தடுக்க மாட்டான். இது இறுதி நாளுக்கு மிக  நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த புனிதமான கஃபா ஆலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும்,  உம்ராவும் செய்யப்படும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தின் வருகைக்குப்பிறகும் கஃபா ஆலயம் இருக்கும் என்பது நபி(ஸல்) அவர்களின்  முன்னறிவிப்பு

عَنْ أَبِى هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « حُجُّوا قَبْلَ أَنْ لاَ تَحُجُّوا ». قِيلَ مَا شَأْنُ الْحَجِّ قَالَ « تَقْعُدُ أَعْرَابُهَا عَلَى أَذْنَابِ أَوْدِيَتِهَا فَلاَ يَصِلُ إِلَى الْحَجِّ أَحَدٌ ».(دار قطني)    شرح ( على أذناب أوديتها ) أي المواضع التي تنتهي اليها مسايل الماء فيحولون بين الناس وبين البيت ( فلا يصل إلى الحج أحد ) وذلك بعد رفع القرآن وموت عيسى (التيسير بشرح الجامع الصغير)

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வரும் முன்பு ஹஜ்ஜு செய்து கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியபோது ஏன் ஹஜ்ஜு செய்ய முடியாமல் போகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்அவர்கள் கூறினார்கள் அங்குள்ள காட்டரபிகள் பள்ளத்தாக்குகளின் எல்லையில் இருந்து கொண்டு யாரையும் ஹஜ்ஜுச் செய்ய விடாமல் தடுப்பார்கள். அதனால் யாரும் ஹஜ்ஜுச் செய்ய முடியாது என்றார்கள்.                                           

قَالَ اِبْن عَبَّاس  رضي الله عنه : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير)

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள்- ஏதாவது ஒரு வருடத்தில் யாருமே ஹஜ்ஜு செய்யா விட்டால் அல்லாஹ் வானத்தை அப்படியே பூமியின் மீது இறக்கி அழித்து விடுவான்

2.கடைசி காலத்தில் குர்ஆனுக்கு கண்ணியம் இல்லாதபோது குர்ஆனை அல்லாஹ் உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும்

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும் குர்ஆன் பிரதிகளில் இருந்தும் நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ ، وَذَلِكَ حِينَ يَقَعُ عَلَيْهِمُ الْقَوْلُ.  (دارمي

وقال عبد الله بن مسعود رضي الله عنه في تفسير هذه الاية "وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82)النمل: وقع القول يكون بموت العلماء وذهاب العلم ورفع القرآن (قرطبي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். இது கடைசி நேரமாக இருக்கும். அதாவது குர்ஆன் உயர்த்தப்படும், சிறந்த உலமாக்களின் தொடர் மரணம், கல்வி உயர்த்தப் படும் என்ற அல்லாஹ்வின் சொல்  உறுதியாகி விட்ட பிறகு இதுவெல்லாம் நடைபெறும். இதைத் தொடர்ந்துதான் அல்லாஹ் மக்காவுக்கும் மினாவுக்கும் இடையில் ஒரு அதிசயப் பிராணியை எழுப்பி இவர் காஃபிர் இவர் முஃமின் என அடையாளமிட வைப்பான்.

3.உலமாக்கள் இல்லாமல் போவதாலும் இந்த பூமிக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم إِنَّ اللَّهَ لاَ يَنْتَزِعُ الْعِلْمَ مِنَ النَّاسِ انْتِزَاعًا وَلَكِنْ يَقْبِضُ الْعُلَمَاءَ وَيُبْقِى فِى النَّاسِ رُءُوسًا جُهَّالاً يُفْتُونَهُمْ بِغَيْرِ عِلْمٍ فَيَضِلُّونَ وَيُضِلُّونَ ».(مسلم

அல்லாஹ் மக்களிடம் இருந்து ஒரேயடியாக இல்மை அப்புறப் படுத்த மாட்டான். மாறாக மார்க்க அறிஞர்களைக் கைப்பற்றுவதைக் கொண்டு இல்மை அப்புறப்படுத்துவான். பிறகு மார்க்கம் அறியாதவர்கள் தான் மீதமிருப்பர். மார்க்க அறிவின்றி ஃபத்வா வழங்குவார்கள். அவர்களும் வழி கெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பர்.

4.மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாலும் பூமிக்கு பல்வேறு பாதிப்புகள்..

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள். 

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை.                              

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ » (ترمذي

கருத்து-மேற்படி 15 விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் பெருகும்போது தஸ்பீஹ் மணி அறுந்து விழுந்தால் எப்படி தொடர்ச்சியாக விழுமோ அதுபோன்று தொடர்ந்து பூகம்பங்கள் மற்றும் நிலச்சரிவு எரிமலைச் சீற்றம் உருமாற்றப்படுதல் ஆகியவை ஏற்படும். 1.பொதுச் சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3.ஜகாத்தை இழுத்தடிப்பது 4. மார்க்கக் கல்வியை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுதல் 5.மனைவிக்குக் கீழ்படிதல் 6.தாயை ஒதுக்குதல் 7.நண்பனை நெருக்கமாக்கிக் கொள்ளுதல் 7.தந்தையை தூரமாக்குதல் 8.மஸ்ஜிதில் கூச்சல் 9.கெட்டவன் தலைவனாகுதல் 10.நல்லவன் ஓரங்கட்டப்படுதல் 11.ஒருவனின் தீமைக்கு பயந்து மரியாதை செய்தல் 12.பாடகிகள் பெருகுதல் 13. இசை பெருகுதல் 14.மது 15. முன்னோர்களைக் குறை கூறுதல்

இதில் நான்காவது தீமை மார்க்கக் கல்வியை சேவை நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளாமல் உலக ஆதாயத்திற்காக கற்றுக் கொள்வதும் ஒருவகையில் மார்க்கக் கல்வியை தரம் தாழ்த்துவதாக ஆகி விடும்.  

மார்க்கக் கல்வியின் தற்கால சூழ்நிலை. குறிப்பாக இந்தியாவில்..

 ஒரு மஹல்லாவில் சுமார் 200 முஸ்லிம் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அதில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே மக்தபுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள முஸ்லிம் பிள்ளைகள் குர்ஆனின் அடிப்படைக் கல்வி கூட இல்லாமல் துன்யாவின் சிந்தனையிலேயே வளருகின்றனர். இவர்களில் பலர் பிற்காலத்தில் மாற்று மதத்தவர்களைக் காதலித்து மதம் மாறி, கோவிலுக்கோ அல்லது சர்ச்சுக்கோ சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். சில பிள்ளைகள் இதிலிருந்து தப்பித்தாலும் மார்க்கம் அறியாததால் அவர்களால் தந்தை அல்லது தாயாரின் ஜனாஸா தொழுகை நடைபெறும்போத என்ன ஓத வேண்டும் என்று கூட அறியாதவர்களாக உள்ளனர்.

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் மதரஸாக்களை ஒழிக்க வேண்டும் என்ற எதிரிகளின் கோஷம் ஓங்கியுள்ளது.

மார்க்கம் கற்று மார்க்கப் பற்றுடன் வாழும் பிள்ளைகளால் தான் உலகம் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَهْلًا عَنِ اللَّهِ مَهْلًا، لَوْلا شَبَابٌ خُشَّعٌ، وشُيُوخٌ رُكَّعٌ، وَأَطْفَالٌ رُضَّعٌ، وبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا، ثُمَّ لَرُضَّ رَضًّا". (رواه الطبراني في المعجم الكبير

அல்லாஹ்வின் வேதனைக்கு அவசரப் படாதீர். இறையச்சமுள்ள வாலிபர்களும் ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிப் பருவக் குழந்தைகளும் கால்நடைகளும் இல்லா விட்டால் அல்லாஹ் எப்போதோ உலகை அழித்திருப்பான். 

மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த முன்னோர்களின் வரலாறுகள்

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம்சென்று என்ன...என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா?வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப் படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று எண்ணி சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்.

முகலாய மன்னர்களில் மார்க்கக் கல்வியால் உயர்ந்த ஒளரங்கசீப்  ரஹ்

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவருடைய தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும்அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். தாராஷிகோ. இளையவர் முராத் இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தனர். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். மக்தப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம் அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும்.

படிப்பினை-  மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு வசதி வாய்ப்பு தடையாக இருக்கவில்லை

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)

குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பது மாபெரும் துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)

 

கோடை விடுமுறையும் நம் பிள்ளைகளுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும்

ஓய்வு, உடல் ஆரோக்கியம் ஆகிய இரு அருட்கொடைகளை பயன்படுத்துவதில் ஏமாந்தவர்களாக பலர் உள்ளனர்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ رواه البخاري6412

பள்ளி விடுமுறை நாட்களிலேனும் மார்க்கக் கல்வியை,  நல்லொழுக்கத்தை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்

عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ رواه الترمذي

ஒரு ஹதீஸைத் தேடி ஓராயிரம் மைல்கள் பயணம் செய்த ஒரு காலம் இருந்தது

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ أَتَيْتُكَ مِنْ الْمَدِينَةِ مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ قَالَ لَا قَالَ وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ قَالَ لَا قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ ( ابن ماجة

 கஸீர் இப்னுகைஸ் ரழி அவர்கள் கூறினார்கள் சிரியா நாட்டின் திமிஷ்க் நகரில் நான் அபுத்தர்தா ரழி அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து அபுத்தர்தா அவர்களே நான் மதீனாவில் இருந்து ஒரு ஹதீஸைத் தேடி உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறியவுடன் அவரிடம் அபுத்தர்தா ரழி அவர்கள் வேறு ஏதேனும் வியாபார நோக்கத்திற்காகவும் வந்தீர்களா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். திரும்பவும் அபுத்தர்தா ரழி அவர்கள் இங்கு வந்த தற்கு வேறு ஏதாவது நோக்கமும் உள்ளதா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை. ஒரு ஹதீஸை கற்றுக் கொள்ள மட்டுமே நான் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தேன் என்று கூற, அப்போது அபுத்தர்தா ரழி அவர்கள் கூறினார்கள்.நபி ஸல்அவர்கள் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன். எவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை அல்லாஹ் இலகுவாக்குவான். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக மலக்குகள் தமது இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட வானம் பூமியில் உள்ள அனைத்தும் துஆச் செய்கின்றன. வணக்கசாலியின் சிறப்பை விட ஆலிமின் சிறப்பாகிறது நட்சத்திரங்களின் சிறப்பை விட சந்திரனின் சிறப்பைப் போன்றதாகும்....  

  மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்வதில் சஹாபாப் பெருமக்களுக்கு இருந்த ஆர்வம்.

عَنْ عُمَرَ رض قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنْ الْأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ الْوَحْيِ وَغَيْرِهِ وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ .....(بخاري89 ) 

 ஹழ்ரத் உமர் ரழி அவர்களின் வீடு மதீனாவின் உயரமான பகுதியில் இருந்த போது அவர்களால் அடிக்கடி மஸ்ஜிதுன் நபவிக்கு வர முடியாது. உமர் ரழி கூறினார்கள் நானும், என் அண்டை வீட்டு நண்பரும் நபி ஸல் அவர்கள் கூறும் விஷயங்கள் எதுவும் எங்களுக்கு தவறி விடக்கூடாது என்பதற்காக  முறை வைத்துக் கொண்டு கல்வியை கற்றோம். அவர் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவார். நான் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவேன். நான் வரும்போது நான் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை அவரிடம் சொல்வேன். அவர் வரும்போது அவர் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை என்னிடம் சொல்வார்.         

கல்விக்கு வயதில்லை. முதிய வயதிலும் கல்வி கற்கலாம்.

عَنْ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا قَبِيصَةُ مَا جَاءَ بِكَ قُلْتُ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَأَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مَا يَنْفَعُنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ قَالَ يَا قَبِيصَةُ مَا مَرَرْتَ بِحَجَرٍ وَلَا شَجَرٍ وَلَا مَدَرٍ إِلَّا اسْتَغْفَرَ لَكَ يَا قَبِيصَةُ إِذَا صَلَّيْتَ الْفَجْرَ فَقُلْ ثَلَاثًا سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ تُعَافَى مِنْ الْعَمَى وَالْجُذَامِ وَالْفَلِجِ يَا قَبِيصَةُ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَانْشُرْ عَلَيَّ رَحْمَتَكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ رواه احمد    فلجபக்க வாதம்     جذامகுஷ்டம்

முதியவரான கபீஸா ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் அப்போது நபி ஸல் அவர்கள் கபீஸா அவர்களே  உங்களை இங்கு வரவழைத்தது எது என நபி ஸல் அவர்கள் கேட்டாரகள். அதற்கு நான் என்னுடைய எலும்புகள் தேய்ந்து விட்டன. வயதாகி விட்டது. எனவே உங்களிடம் வந்து ஏதேனும் பயனுள்ள விஷயத்தைக் கற்றுக் கொள்ள வந்தேன் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் (இதற்குத் தான் வந்துள்ளீர்கள் என்றால்) நீங்கள் நடந்து வரும் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் மடுவும் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் என்று கூறி விட்டு, நீங்கள் ஃபஜ்ருத் தொழுது விட்டு சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ என்ற தஸ்பீஹை மூன்று முறை தினமும் ஓதி வந்தால் குஷ்டம், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள் என்று கூறி விட்டு மற்றொரு துஆவையும் அவருக்குக் கற்றுத் தந்தார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்            

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

 என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டபோது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும்.அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்.. நம்மில் சிலர் சிறுவயதில் குர்ஆனை ஓதக் கற்று பின்பு அவருக்கு அது மறந்திருக்கலாம். அப்படிப் பட்டவர் வயதானாலும் இந்த வயதில் கல்வி கற்பதா என்ற தயக்கம் இல்லாமல் எப்படியேனும் முயற்சி செய்து குர்ஆனை மீண்டும் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லெயெனில் அவரது அவல நிலையைப் பற்றி நபி ஸல் அவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டப்படும்.                                             

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...