வியாழன், 4 மே, 2023

வியாபார ஒழுங்கு முறைகள்

 

05-05-2023

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

     



  மே-5 வணிகர் தினம்

வியாபார ஒழுங்கு முறைகள்  - தொடர்-1

ஃபிக்ஹ் நூல்களில் வியாபாரம் Unlimited கொடுக்கல் வாங்கல் பற்றியும் கூறப்பட்ட விஷயங்கள் தான் அதிகம். குர்ஆனில் நீளமான வசனம் கடன் பற்றிய விபரங்களைப் பேசும் வசனம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.     

ஒருவர் சிறந்த முஃமின் என்பதற்கான அடையாளமே அவர் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான் என உமர் ரழி அவர்களின் கூற்று இருக்கிறது. எனவே அத்தகைய கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒழுங்குமுறைகளை வணிகர் தினமான இன்று நாம் அறிந்து கொள்வோம்.

   நேர்மையான வியாபாரி நபிமார்கள், நல்லோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (ترمذي

நபிமார்கள் செய்த வியாபாரங்களைப் பற்றி....

وكان نوح عليه السلام كان نجارا  بدليل صنع الفلك بوحي الله  عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال : « كان زكريا نجاراً » (ابن ماجة)  عن أنس قال : قال رسول الله صلى الله عليه و سلم : هبط آدم وحواء عريانين جميعا عليهم ورق الجنة قعد يبكي ويقول لها : يا حواء قد آذاني الحر فجاءه جبريل بقطن وأمرها أن تغزل وعلمها وأمر آدم بالحياكة وعلمه (البداية والنهاية [ الدر المنثور - السيوطي ] عن أنس مرفوعا [ أول من حاك آدم عليه السلام ] (فتح القدير  وروي أنه إدريس عليه السلام كان خياطا وكان يسبح الله تعالى عند إدخال الإبرة ويحمده عند إخراجها : المحرر الوجيز  وكان ابراهيم عليه السلام كان بناء وقد بني الكعبة 

சுருக்கம்- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் ஆசாரியாக  இருந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வின் உத்தரவுப்படி அவர்களே கப்பல் கட்டியதால் அவர்களும் ஆசாரியாக  இருந்தார்கள்.  நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆடையின்றி சுவனத்து இலைகளுடன் இறக்கப்பட்டார்கள். இந்த பூமிக்கு வந்த பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து பருத்தியில் இருந்து ஆடை நெய்யும் விதத்தைக் கற்றுத் தந்தார்கள். எனவே முதன் முதலில் நெசவுத் தொழில் செய்தவர்கள் நபி ஆதம் அலை அவர்கள் தான்.

நபி இத்ரீஸ் அலை அவர்கள் டைலராக இருந்தார்கள். ஊசியை துணியில் உள்ளே செலுத்தி வெளியே எடுக்கும் ஒவ்வொரு தடவையிலும் தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நபி இப்றாஹீம் அலை அவர்களை கட்டிடக் கலை நிபுணர் என்று கூறலாம். காரணம் அவர்கள் கஃபாவைக் கட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நமது நபி ஸல் அவர்கள் கதீஜா ரழி அவர்களுக்காக வியாபாரம் செய்த சம்பவங்கள் பிரபலமானதாகும்.               

தாவூத் அலை இரும்புக் கவச உடை தயாரித்து விற்பனை செய்தது பற்றி குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10 (سبأ) وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله، ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من اتخذ الدروع وصنعها  (قرطبي

வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

 நபி தாவூத் அலை அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம். அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலை அவர்களின் வழிபாடு நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை) விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகி விடுவார் என பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்குமான உணவு ஆதாரத்தை பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார். அப்போது நபி தாவூத் அலை அவர்கள் இறைவனிடம் துஆவில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள்.  அதனடிப்படையில் ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான். கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுத் தந்தான். கவச ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முதல் நபர் இவர்கள் தான். ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள கவசஉடைகளை தினமும் தயாரிப்பார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர்)

வியாபாரத்தின் ஒழுங்கு முறைகள்

உண்மை சொல்லி விற்றால் பரக்கத் இருக்கும். பொய் சொல்லி விற்பது பரக்கத்தை நீக்கும்

عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري

விற்பவரும், வாங்குபவரும் அந்த இடத்தை விட்டும் பிரியாத வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை உண்டு

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ رواه البخاري (اِخترْ உறுதிப்படுத்துவதோ, முறிப்பதோ உமது விருப்பம் என்று கூறியிருந்தாலே தவிர

ஏதேனும் பொய்யைச் சொல்லி ஒரு பொருளை விற்க நினைப்பதும், தேவையில்லாமல் சத்தியம் செய்வதும்  கூடாது

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ رواه النسائ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَقَامَ سِلْعَةً وَهُوَ فِي السُّوقِ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِ لِيُوقِعَ فِيهَا رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ فَنَزَلَتْ{ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِاللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا }[سورة آل عمران: 77]الْآيَةَ رواه البخاري2088

மூன்று சாராரை அல்லாஹ் மறுமையில் கருணை கொண்டு பார்க்க மாட்டான். அவர்களை பாவத்தை விட்டும் பரிசுத்தப்படுத்த மாட்டான். 1.எதை தர்மம் செய்தாலும் சொல்லிக் காட்டுபவர் 2.கரண்டைக் கீழ் ஆடை உடுத்துபவர் பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பவர். ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனை செய்யும்போது சத்தியமாக வேறு யாரும் கொடுக்காத விலைக்கு நான் தருகிறேன் என சத்தியம் செய்தார். அப்போது அற்பமான காசுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்பவர்களைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.            

படிப்பினை- பொய்ச் சத்தியமாக இல்லா விட்டாலும் அற்பமான விஷயங்களுக்காக சத்தியம் செய்யக்கூடாது

விற்பவரும், வாங்குபவரும் தர்க்கித்துக் கொண்டால்..

عَنْ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ بَاعَ مِنْ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ رَقِيقًا مِنْ رَقِيقِ الْإِمَارَةِ فَاخْتَلَفَا فِي الثَّمَنِ فَقَالَ ابْنُ مَسْعُودٍ بِعْتُكَ بِعِشْرِينَ أَلْفًا وَقَالَ الْأَشْعَثُ بْنُ قَيْسٍ إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ بِعَشْرَةِ آلَافٍ فَقَالَ عَبْدُ اللَّهِ إِنْ شِئْتَ حَدَّثْتُكَ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هَاتِهِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا اخْتَلَفَ الْبَيِّعَانِ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ وَالْبَيْعُ قَائِمٌ بِعَيْنِهِ فَالْقَوْلُ مَا قَالَ الْبَائِعُ أَوْ يَتَرَادَّانِ الْبَيْعَ قَالَ فَإِنِّي أَرَى أَنْ أَرُدَّ الْبَيْعَ فَرَدَّهُ رواه ابن ماجة

இப்னு மஸ்ஊத் ரழி அவர்களுக்கும் அஷ்அஸ் இப்னு கைஸ் ரழி இருவருக்குமிடையே ஒரு வியாபார ஒப்பந்தம் நடைபெற்றது. பொருள் இன்னும் கை மாறவில்லை. இதற்கிடையில் பேசப்பட்ட விலை விஷயத்தில் இருவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது. இருபது திர்ஹங்களுக்கு நான் விற்றேன் என இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூற, இல்லை பத்து திர்ஹங்களுக்குத் தான் எனக்கு நீங்கள் விற்பனை செய்தீர்கள் என அஷ்அஸ் இப்னு கைஸ் ரழி அவர்கள் கூறினார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நான் ஒரு ஹதீஸை நீங்கள் விரும்பினால் நினைவு படுத்தவா என்று கேட்க, சரி கூறுங்கள் என அஷ்அஸ் இப்னு கைஸ் ரழி சொன்னார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள். நபி ஸல் கூறினார்கள். விற்பவரும், வாங்குபவரும் தர்க்கித்துக் கொண்டால் அவ்விருவரில் யாருக்கும் சாதகமான ஆதாரம் இல்லா விட்டால் பொருளும் இன்னும் கை மாறா விட்டால் இருவரில் விற்பவரின் சொல்லே ஏற்கப்படும் அல்லது வியாபாரம் கேன்சல் செய்யப்படும் என நபி ஸல் கூறினார்கள். எனவே நான் இதில் 2வது நிலையைத் தேர்ந்தெடுக்கிறேன்.இந்த வியாபாரத்தை ரத்து செய்கிறேன்.

ஒரு பொருளை ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில்

இன்னொருவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَلَا تَنَاجَشُوا وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا رواه البخاري2140 (حاضرஉள்ளூர் வாசி வெளியூர் வாசிக்கு விற்றுத் தருவது

1.உள்ளூரின் விலை நிலவரம் தெரியாமல் வெளியூரில் இருந்து சரக்குகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிக்காக உள்ளூர் வியாபாரி விற்றுத் தரக்கூடாது காரணம் அதில் வெளியூர்வாசி ஏமாந்து விட வாய்ப்புண்டு. அவர் வந்து விலையை விசாரித்து அதற்குப்பின் சுயமாக ஒரு இலாபத்தை வைத்து விற்பார்.அது அவர் விருப்பம். ஆனால் அவர் வரும் வழியிலேயே உள்ளூர்வாசி வழி மறித்து இன்ன விலை தான் மார்க்கெட்டில் உள்ளது அந்த விலைக்குத் தந்து விடுங்கள் என்று என்று பொய் சொல்லி குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்புண்டு அதனால் வெளியூர் வியாபாரி ஏமாந்து விட வாய்ப்புண்டு. ஆனால் வெளியூர் வாசிக்கு இங்குள்ள விலை நிலவரம் தெரிந்தே அவர் தருகிறார் என்றால் தவறில்லை. 2.வாங்கும் நோக்கம் இல்லாமல் விலையை ஏற்றி விடுவது கூடாது. 3.ஒரு பொருளை ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில் மற்றவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது. 4.ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி அது நிலுவையில் இருக்கும்போது அது கேன்சல் ஆகாமல் மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது கூடாது.  5.தன் தகோதரியின் மண வாழ்க்கையை மற்றொரு சகோதரி கெடுத்து விடக்கூடாது. அதாவது தனது சகோதரியின் கணவன் அவளை தலாக் சொல்லி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கவும் கூடாது. அதற்கான தந்திரங்களிலும் ஈடுபடக் கூடாது. عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِ فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ (البخاري)2167

வெளியூர் வியாபாரி பொருளைக் கொண்டு வரும்போது கடைவீதி துவங்கும் இடத்திலேயே வாங்கி அதை விற்பார்கள். அவ்வாறு செய்வதை நபி ஸல் தடுத்தார்கள்.சந்தைக்கு வந்து அங்குள்ள நிலவரம் தெரிந்து விற்கட்டும்

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பது கூடாது

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّجْشِ رواه البخاري2142عن معقل بن يسار قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول "من دخل في شيء من أسعار المسلمين ليغلي عليهم كان حقا على الله أن يقذفه في معظم جهنم رأسه أسفله رواه الحاكم

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பதை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள். விலையை ஏற்றி விடும் காரியத்தில் யார் ஈடுபட்டாரோ அவரை நரகத்தில் நுழைத்து தலை கீழாகவும் கால் மேலாகவும் இருக்க வைதனை செய்வது அல்லாஹ்வின் ஹக்காக ஆகி விட்டது.  விற்க நினைத்த விலையை விட அதிகமாக சொல்லி பின்பு குறைக்கலாமா?

عَنْ قَيْلَةَ أُمِّ بَنِي أَنْمَارٍ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ عُمَرِهِ عِنْدَ الْمَرْوَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَبِيعُ وَأَشْتَرِي فَإِذَا أَرَدْتُ أَنْ أَبْتَاعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَقَلَّ مِمَّا أُرِيدُ ثُمَّ زِدْتُ ثُمَّ زِدْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ وَإِذَا أَرَدْتُ أَنْ أَبِيعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَكْثَرَ مِنْ الَّذِي أُرِيدُ ثُمَّ وَضَعْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَفْعَلِي يَا قَيْلَةُ إِذَا أَرَدْتِ أَنْ تَبْتَاعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أُعْطِيتِ أَوْ مُنِعْتِ وَإِذَا أَرَدْتِ أَنْ تَبِيعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أَعْطَيْتِ أَوْ مَنَعْتِ رواه ابن ماجة

 கைலா ரழி என்ற பெண்மணி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விற்பதும் வாங்குவதிலும் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுகிறேன் அதாவது நான் ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு வாங்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் குறைந்த விலைக்குக் கேட்பேன். வியாபாரி தர மறுப்பார். நான் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கேட்பேன். அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையை கடைசியாக கேட்பேன்.அவர் தந்தால் வாங்குவேன் அதேபோல் அதாவது நான் ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு விற்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் அதிக விலையைச் சொல்லுவேன். வாங்குபவர் அந்த விலைக்கு வாங்க மறுப்பார். பிறகு நான் இன்னும் சற்று குறைப்பேன் அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையைக் கூறுவேன் அந்த விலைக்கே அவருக்கு விற்பேன் இவ்வாறு செய்வது கூடுமா என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு நீ வாங்க நினைக்கிறாயோ அதையே முதலாவதாக கேள். அது உனக்கு அந்த விலைக்கு கிடைத்தாலும் சரி. கிடைக்கா விட்டாலும் சரி. அதேபோல ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு நீ விற்க நினைக்கிறாயோ அதையே முதலில் கூறு. வாங்குபவர் அதை வாங்கினாலும்  சரி. வாங்கா விட்டாலும் சரி.

ஒரு பொருளுக்கு முன் அட்வான்ஸ் கொடுப்பவர் பொருளின் அளவையும், தன்மையையும் குறிப்பிட வேண்டும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ الْعَامَ وَالْعَامَيْنِ أَوْ قَالَ عَامَيْنِ أَوْ ثَلَاثَةً شَكَّ إِسْمَاعِيلُ فَقَالَ مَنْ سَلَّفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ رواه البخاري2239

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பே குறிப்பிட்ட  மரத்தின் கனிகளுக்கு எந்த அளவு என்பதையெல்லாம் குறிப்பிடாம்ல அட்வான்ஸ் தருபவர்களாக இருந்தார்கள் அப்போது நபி ஸல் அவர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். அட்வான்ஸ் தருவதாக இருந்தால்  இன்ன பொருளுக்கு இத்தனை கிலோவுக்கு என குறிப்பிட்டே அட்வான்ஸ் தர வேண்டும் என கட்டளையிட்டார்கள்.     

இன்னும் உற்பத்தியாகாத பொருளுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூடாது

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا .(بخاري

ولا يجوز السلم حتى يكون المسلم فيه موجودا من حين العقد إلى حين المحل حتى لو كان منقطعا عند العقد موجودا عند المحل أو على العكس أو منقطعا فيما بين ذلك لا يجوز ولنا قوله عليه الصلاة والسلام لا تسلفوا في الثمار حتى يبدو صلاحها (هداية

எதற்கு அட்வான்ஸ் தரப்படுமோ அந்தப் பொருள் வியாபார ஒப்பந்தம் நாளுக்கும் பொருளை ஒப்படைக்கும் நாளுக்கும் இடையே அறவே இல்லாமல் ஆகி விடுவது கூடாது.

தடுக்கப்பட்ட வியாபாரங்களில் சில....

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنْ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ [سورة البقرة: 275]

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا رواه البخاري2085  

வியாபார ஒப்பந்தம் முடிந்தாலும் பொருள் கைக்கு வரும் முன் அதை அடுத்தவருக்கு விற்பது கூடாது

 عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ (بخاري2133)

عن جَابِر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تُشَقِّحَ فَقِيلَ وَمَا تُشَقِّحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا (بخاري2196   

ஒரு மரத்தில் உள்ள பழங்களை அது காயாக இருக்கும் நிலையில் அதாவது பழுக்காத நிலையில் அது மரத்தில் இருக்கவே விலை பேசுவதை நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள்.

عن أَبي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْمُنَابَذَةِ وَهِيَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ قَبْلَ أَنْ يُقَلِّبَهُ أَوْ يَنْظُرَ إِلَيْهِ وَنَهَى عَنْ الْمُلَامَسَةِ وَالْمُلَامَسَةُ لَمْسُ الثَّوْبِ لَا يَنْظُرُ إِلَيْهِ رواه البخاري2144

முனாபதா எனும் வியாபாரத்தை நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். முனாபதா என்பதற்கு உதாரணம் ஒரு துணி வியாபாரி தனது துணியை வாங்குபவரிடம் தூக்கிப் போட்டாலே வியாபாரம் முடிந்து விட்டதாக கருதுவதாகும் வாங்குபவர் அதை சற்றும் பரிசோதிக்காத நிலையில் துணியைப் பார்த்ததற்காகவே அவர் தலையில் கட்டுவது. (ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாலே காசு என்பதைப் போல) அதேபோல் முலாமஸா எனும் வியாபாரத்தை நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். முலாமஸா என்பதற்கு உதாரணம் ஒரு துணி வியாபாரி தனது துணியை வாங்குபவரிடம் நீட்டி அதை அவர் தொட்டு போட்டாலே வியாபாரம் முடிந்து விட்டதாக கருதுவதாகும் வாங்குபவர் அதை சற்றும் பரிசோதிக்காத நிலையில் துணியைத் தொட்டதற்காகவே அவர் தலையில் கட்டுவது.                                                   

உருவப்படங்களை வரையும் தொழிலும், சிலைகளை விற்பதும், மதுவை விற்பதும், இசைக்கருவிகளை விற்பதும் கூடாது

இறந்த பிராணிகளை விற்பது கூடாது

பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படும்போதே குறைந்த ஆயுளுடன் தான் வளர்க்கப்படுகின்றன. கறிக்கடைகளுக்கு லாரியில் வந்து இறங்கும் முன்பே அவற்றில்  சில கோழிகள் இறந்து விடுகின்றன. ஆனால் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி அதையும் விற்பதாக கேள்விப்படுகிறோம். அதை விற்பதும் கூடாது. வாங்குவதும் கூடாது.

عن جَابِر بْن عَبْدِ اللَّهِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالْأَصْنَامِ فَقِيلَ لَهُ عِنْدَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهُ يُدْهَنُ بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ قَالَ لَا هُنَّ حَرَامٌ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَأَجْمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ  رواه البخاري2236   يستصبحவிளக்கு எரிக்கப் பயன்படுத்....

நபிஸல் அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் உபதேசம் செய்தார்கள் நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மதுவையும் இறந்த பிராணிகளையும் பன்றியையும் விற்பதை தடை செய்துள்ளார்கள் என்று கூறியபோது தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரே இறந்த பிராணிகளின் கொழுப்புகள் விளக்கு எரித்தல், தோல்களைப் பதனிடுதல் கப்பல் கட்டுதல் போன்ற வெளி உபயோகங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறதே என்று கேட்க, அதற்கு நபிஸல் அவர்கள் கூறினார்கள். எப்படியிருந்தாலும் அவை ஹராம் என்று கூறினார்கள். மேலும் நபிஸல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக இறந்த பிராணிகளின் கொழுப்புகளை அல்லாஹ் ஹராமாக்கிய நிலையில் அவர்கள் அதை ஆகுமாக்கி விற்றார்கள். அதன் பணத்தை உண்டார்கள்.                        

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பது கூடாது

عَنْ عُمَرَرضي الله عنه قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ (ابن ماجة)

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பவரை அல்லாஹ் வறுமையைக் கொண்டும் வெண் குஷ்டத்தைக் கொண்டும் சோதிப்பான்.

عَنْ فَرُّوخَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُمَرَ رَضِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا مَنْثُورًا فَقَالَ مَا هَذَا الطَّعَامُ فَقَالُوا طَعَامٌ جُلِبَ إِلَيْنَا قَالَ بَارَكَ اللَّهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ قِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَإِنَّهُ قَدْ احْتُكِرَ قَالَ وَمَنْ احْتَكَرَهُ قَالُوا فَرُّوخُ مَوْلَى عُثْمَانَ وَفُلَانٌ مَوْلَى عُمَرَ فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا فَقَالَ مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ قَالَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا وَأَمَّا مَوْلَى عُمَرَ فَقَالَ إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ قَالَ أَبُو يَحْيَى فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا (مسند أحمد

உமர் ரழி கலீஃபாவாக இருக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு முன்பு நிறைய தானிய மூட்டைகள் இருப்பதைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள் அப்போது இதுவெல்லாம் இத்தனை நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பின் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்று பதில் கூறப்பட்டது. அப்போது உமர் ரழி அவர்கள் இந்த தானியங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக இதை நம்மிடம் கொண்டு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக என்று கூறினார்கள். அதற்கடுத்து அதைப் பதுக்கி வைத்த இருவரைப் பற்றி தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்விருவரும் அடிமைகள். ஒருவர் உமர் ரழி அவர்களின் அடிமை. மற்றொருவர் உஸ்மான் ரழி அவர்களின் அடிமை. (அடிமைகள் சுயமாக வியாபாரம் செய்ய முதலாளி அனுமதி தந்தால் கூடும்.)

அவ்விருவரையும் உமர் ரழி அவர்கள் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவ்விருவரும் எங்களின் பணத்தைக் கொடுத்து நாங்கள் பொருளை கொள்முதல் செய்கிறோம். அதை நாங்கள் விரும்பும்போது விற்போம். இதிலென்ன தவறு என்றனர். அவ்விருவருக்கும் உமர் ரழி அவர்கள் மேற்படி ஹதீஸைக்கூறி புத்திமதி கூற, அவ்விருவரில் உஸ்மான் ரழி அவர்களின் அடிமையான ஃபர்ரூஹ் திருந்தி நீங்கள் இவ்வாறு கூறியபின்பு இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன் என்றார். தன்னுடைய வியாபார இடத்தையே மாற்றி விட்டார். ஆனால் மற்றொருவர் தாம் கூறிய அதே வாதத்தையே முன் வைத்தார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா ரஹ் அவர்கள் கூறும்போது நான் பிற்காலத்தில் வீண் வாதம் பேசிய அந்த அடிமையை குஷ்டரோகியாக நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.  

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ  (ابن ماجة)  الجالب الذي يجلب السلعة بربح يسير

மக்களின் நலன் கருதி குறைந்த  இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் மூலம் மறைமுகமாக ரிஜ்க் வழங்கப்படுவார். யார் பதுக்கி வைக்கிறாரோ அவர் சபிக்கப்பட்டவர்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...