வியாழன், 27 ஜனவரி, 2022

தஜ்ஜால் வருவதற்கு முன் ஏற்படும் சில சோதனைகள்

 


28-01-2022


بسم الله الرحمن الرحيم                     

தஜ்ஜால் வருவதற்கு முன் ஏற்படும் சில சோதனைகள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208)البقرة

உலகம் தற்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இந்த சோதனைகளைப் பார்க்கும்போது தஜ்ஜால் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது

தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ......   وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ.  (ابن ماجة)

அபூ உமாமா ரழி அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த  நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. .... 

தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம்  அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். 

மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை  முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர்,  தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)

தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم

தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.

தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டு அதை திருத்திக் கொள்ளாத சூழ்நிலை அதிகமானால் அதுவும் அழிவு நாளின் அறிகுறியாகும்.

عن أبي أمية الشعباني قال : سألت أبا ثعلبة عن هذه الآية { يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم } فقال أبو ثعلبة لقد سألت عنها خبيرا أنا سألت عنها رسول الله صلى الله عليه و سلم قبلا فقال : يا أبا ثعلبة مروا بالمعروف و تناهوا عن المنكر فإذا رأيت شحا مطاعا و هوى متبعا و دنيا مؤثرة و رأيت أمرا لا بد لك من طلبه فعليك نفسك و دعهم و عوامهم فإن وراءكم أيام الصبر صبر فيهن كقبض على الجمر للعامل فيهن أجر خمسين يعمل مثل عمله  (حاكم) وفي رواية ابن حبان إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك نفسك

அபூ உமய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் அபூ தஃலபா ரழி அவர்களிடம் இறைவசனமாகிய உங்களை மட்டும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்ற வசனம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்கள் உண்மையில் மிகப் பெரிய விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் இது பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு  அவர்கள்  என்னிடம்  அபூ தஃலபாவே நன்மையை ஏவிக் கொண்டே இரு.. தீமையைத் தடுத்துக் கொண்டே இரு.. ஆனால் எப்போது மக்களிடம் மாபெரும் கஞ்சத்தனத்தையும், மனோ இச்சைக்கு அடிமைப் படுதலையும், உலகமே கதி என்ற நிலையையும், ஒவ்வொருவரும் தன் சிந்தனையை மட்டுமே பெரிதாக க் கருதி மற்றவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தும் காலம் வருமோ அப்போது நீ உன்னை மட்டும் பார்த்துக் கொள். நெருப்புக் கங்கை பற்றிப் பிடித்திருப்பது போன்ற சிரமமான அந்த சூழ்நிலையிலும் நபியின் நடைமுறையை செயல் படுத்துபவருக்கு  அவரைப் போன்ற ஐம்பது பேரின் நன்மை வழங்கப்படும்.                            

  عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"أَنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ أَنْ يَقُولَ الرَّجُلُ لأَخِيهِ: اتَّقِ اللَّهَ، فَيَقُولُ: عَلَيْكَ نَفْسَكَ أَنْتَ تَأْمُرُنِي".- عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"كَفَى بِالْمَرْءِ إِثْمًا إِذَا قِيلَ لَهُ: اتَّقِ اللَّهَ غَضِبَ". (المعجم الكبير للطبراني

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- பாவங்களில் மிகப்பெரிய பாவமாகிறது தன் முஸ்லிமான சகோதரரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  நீ உன் வேலையைப் பார். நீ என்ன எனக்கு ஏவுவது என்று கூறுகிறானே அதுதான்  பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும்.

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- ஒருவரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  எவன் கோபமடைகிறானோ அவன் பாவி என்பதற்கு அதுவே போதுமானது. 

காலங்கள் வேகமாக நகருவதும் கியாமத்தின் அடையாளம்

عن أنس بن مالك قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار (ترمذي

தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள் பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம் நாள்  ஒரு மாதம் போன்றும்,  மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம் நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள் கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு மாதம் பகலாகவே இருக்கும்போது  இரண்டு தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது.  மாறாக சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர்  தொழுது கொண்டிருப்போம்.  நன்கு இருட்டு இருக்கும். லுஹர்  தொழுது கொண்டிருப்போம்.  

عن النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ  لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم

விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் நிகழ்ந்தால் உலகில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع " . رواه الترمذي

1.பொதுச்சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...