வியாழன், 3 பிப்ரவரி, 2022

கண்ணியமான ரஜப் மாதம்


04-02-2022

ரஜப்-2

 

بسم الله الرحمن الرحيم                     

கண்ணியமான ரஜப் மாதம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 




ரஜப் மாதம் அறியாமைக காலத்திலும் கண்ணியப்படுத்தப்பட்டது.

وكان أهل الجاهلية يعظمون هذه الأشهر الحرم وخاصة شهر رجب فكانوا لا يقاتلون فيهن (فضائل الاوقات للبيهقي) عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه و سلم إن رجبا شهر الله ويدعى الأصم (لأنه كان لا يسمع فيه قعقعة السلاح) وكان أهل الجاهلية إذا دخل رجب يعطلون أسلحتهم ويضعونها فكان الناس يأمنون وتأمن السبل ولا يخافون بعضهم بعضا حتى ينقضي (فضائل الاوقات للبيهقي)

وإنما سميت حُرماً لأن العرب في الجاهلية كانت تعظمها وتحرم فيها القتال حتى لو أن أحدهم لقي قاتل أبيه وابنه وأخيه في هذه الأربعة الأشهر لم يهجه ولما جاء الإسلام لم يزدها إلا حرمة وتعظيماً (تفسير خازن)

அறியாமைக் காலத்திலும் ரஜப் மாதம் வந்து விட்டால் குரைஷிகள் சண்டையிட மாட்டார்கள். பழி வாங்கும் உணர்ச்சி அதிகம் கொண்ட அரபிகளாக இருந்தும் தந்தையைக் கொன்றவன் எதிரில் வந்தாலும் இந்த ரஜப் மாத த்தின் கண்ணியம் கருதி  உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

பிற்காலத்தில் அந்த ரஜப் மாதத்திலும் சண்டையிடுவதை ஆகுமாக்குவதற்காக மாதத்தின் பெயரையே மாற்றி வைத்துக் கொள்ள ஆரம்பித்த போது அல்லாஹ் அதை கண்டித்து வசனத்தை இறக்கினான்

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ..(37التوبة)

ஆரம்பத்தில் ரஜப் மாதத்தை கண்ணியப்படுத்திய காஃபிர்கள் பிற்காலத்தில் தம் எதிரிகளுடன் போர் தொடுக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டால் அல்லது அதற்கு முந்தைய மாதங்களில் துவங்கிய போர் ரஜப் மாதமும் நீடித்தால் இந்த ஆண்டு புனித மாதங்களில் ரஜபுக்கு பதிலாக ஷஃபான் இருக்கும் என்று அறிவித்து விட்டு போரைத் துவக்குவர். அல்லது இப்போது நாம் ரஜப் மாதத்தில் இல்லை. ஜமாதுல் ஆகிரில் தான் இருக்கிறோம் என்று பிரகடனப்படுத்துவர். இதை கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான்

 

ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்ததன் தாத்பரியம்

 عن أنس رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ  وَكَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ الجُمُعَةِ قالَ هذِهِ لَيْلَةٌ غَرَّاءُ وَيَوْمٌ أَزْهَرُ (بزار,كنز العمال)(مشكاة, باب الجمعة) عن أنس بن مالك رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس)

(اللهم بارك لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال الصالحة فيهما(مرعاة شرح مشكاة)

ரஜப் மாத த்திலும் ஷஃபான் மாத த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்பதன் தாத்பரியம் இந்த இரண்டு மாதங்களிலும் அதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தருவாயாக என்பதாகும். இந்த இரண்டு மாதங்களிலும் அமல் செய்வதன் மூலமாக ரமழானில் இன்னும் அதிகமாக அமல் செய்யும் பாக்கியம்  கிடைக்கும். 

وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير) قال الطيبي:الأزهر الأبيض ومنه أكثروا الصلاة عليّ في الليلة الغراء، واليوم الأزهر أي ليلة الجمعة ويومها والنورانية فيهما معنوية لذاتهما،

ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று கேட்பதன் நோக்கம் அதுவரை அல்லாஹ் நம்மை ஹயாத்தாக வைத்திருக்க வேண்டும். என்பதாகும்.

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார்.தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப்பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.             

துஆ ஏற்கப்படுவதில் குறிப்பிட்ட நேரங்கள், மாதங்கள் உண்டு.

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ أَنَّكُمْ تَكُونُونَ إِذَا خَرَجْتُمْ مِنْ عِنْدِي كُنْتُمْ عَلَى حَالِكُمْ ذَلِكَ لَزَارَتْكُمْ الْمَلَائِكَةُ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ كَيْ يُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ......ثُمَّ قَالَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الْغَمَامِ وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (ترمذي

கண்ணியமான மாதங்களில், நேரங்களில் அதிகம் துஆச் செய்வது  துஆ ஏற்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.

நபி யஃகூப் அலை அவர்களின் பிள்ளைகள் தங்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி வேண்டிய போது குறிப்பிட்ட நேரம் வரும். அந்த நேரத்தில் துஆச் செய்வேன் என்றார்கள்.

தமக்கு அநீதம் செய்தவர்களுக்கு எதிராக சங்கையான மாதத்தில் துஆ செய்ததால் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம்

மக்தப் பிள்ளைகளுக்கு கீழ்காணும் சம்பவத்தை சொல்லிக்காட்டுவது படிப்பினையாக அமையும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي يَوْمٍ يَعْرِضُ فِيهِ الدِّيوَانَ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ أَعْمَى أَعْرَجُ قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ حِينَ رَآهُ وَأَعْجَبَهُ شَأْنُهُ:" مَنْ يَعْرِفُ هَذَا؟"، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: هَذَا مِنْ بَنِي صَنْعَاءَ بَهْلَةَ بَرِيقٍ قَالَ:" وَمَا بَرِيقٌ؟"، قَالَ: رَجُلٌ مِنَ الْيَمَنِ: قُلْتُ زَادَ غَيْرُهُ فِيهِ اسْمُهُ عِيَاضٌ، قَالَ:" أَشَاهِدٌ؟"، قَالَ: نَعَمْ، فَأُتِيَ بِهِ عُمَرَ فَقَالَ:" مَا شَأْنُكَ وَشَأَنُ بَنِي صَنْعَا؟" فَقَالَ: إِنَّ بَنِي صَنْعَا كَانُوا اثْنَيْ عَشَرَ رَجُلًا، وَإِنَّهُمْ جَاوَرُونِي فِي الْجَاهِلِيَّةِ فَجَعَلُوا يَأْكُلُونَ مَالِي، وَيَشْتُمُونَ عِرْضِي اسْتَنْهَيْتُهُمْ فَنَاشَدْتُهُمُ اللهَ وَالرَّحِمَ فَأَبَوْا فَأَمْهَلْتُهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَوْتُ اللهَ عَلَيْهِمْ...فَلَمْ يَحُلِ الْحَوْلُ حَتَّى هَلَكُوا غَيْرَ وَاحِدٍ وَهُوَ هَذَا كَمَا تَرَى قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ: سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا"،

فَقَالَ رَجُلٌ آخَرُ مِنَ الْقَوْمِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُحَدِّثُكَ مِثْلَ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟ قَالَ:" بَلَى" قَالَ: فَإِنَّ نَفَرًا مِنْ خُزَاعَةَ جَاوَرُوا رَجُلًا مِنْهُمْ فَقَطَعُوا رَحِمَهُ، وَأَسَاءُوا مُجَاوَرَتَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا  أَعْفَوْهُ مِمَّا يَكْرَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا جَاءَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ عِنْدَ قَلِيبٍ يَنْزِفُونَهُ فَمِنْهُمْ مَنْ هُوَ فِيهِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فَوْقَهُ تَهَوَّرَ الْقَلِيبُ بِمَنْ كَانَ عَلَيْهِ وَعَلَى مَنْ كَانَ فِيهِ فَصَارَ قُبُورَهُمْ حَتَّى السَّاعَةِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذِهِ لَعِبْرَةً وَعَجَبًا"،

 

فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ آخَرُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُخْبِرُكَ بِمِثْلِ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ: بَلَى، قَالَ: إِنَّ رَجُلًا مِنْ هُذَيْلٍ وَرِثَ فَخْذَهُ الَّذِي هُوَ فِيهَا حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ غَيْرُهُ فَجَمَعَ مَالًا كَثِيرًا، فَعَمِدَ إِلَى رَهْطٍ مِنْ قَوْمِهِ يُقَالُ لَهُمْ بَنُو الْمُؤَمَّلِ، فَجَاوَرَهُمْ لِيَمْنَعُوهُ وَلْيَرُدُّوا عَلَيْهِ مَاشِيَتَهُ، وَإِنَّهُمْ حَسَدُوهُ عَلَى مَالِهِ، وَنَفَسُوهُ مَالَهُ، فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ مَالِهِ وَيَشْتُمُونَ عِرْضَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا عَدَلُوا عَنْهُ مَا يَكْرَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَجَعَلَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ رَبَاحٌ يُكَلِّمُهُمْ فِيهِ، وَيَقُولُ: يَا بَنِي الْمُؤَمَّلِ ابْنُ عَمِّكُمُ اخْتَارَ مُجَاوَرَتَكُمْ عَلَى مَنْ سِوَاكُمْ فَأَحْسِنُوا مُجَاوَرَتَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ ذَاتَ يَوْمٍ نُزُولٌ إِلَى أَصْلِ جَبَلٍ انْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ لَا  تَمُرُّ بِشَيْءٍ إِلَّا طَحَنَتْهُ حِينَ مَرَّتْ بَأَبْيَاتِهِمْ فَطَحَنَتْها طَحْنَةً وَاحِدَةً إِلَّا رَبَاحًا الَّذِي اسْتَثْنَاهُ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ هَذَا لَعِبَرًا وَعَجَبًا"،

 

فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَلَا أُخْبِرُكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِثْلَهُ وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ:" بَلَى"، قَالَ: فَإِنَّ رَجُلًا مِنْ جُهَيْنَةَ جَاوَرَ قَوْمًا مِنْ بَنِي ضَمْرَةَ فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ رَجُلٌ مِنْ بَنِي ضَمْرَةَ يُقَالُ لَهُ رِيشَةُ يَعْدُو عَلَيْهِ، فَلَا يَزَالُ يَنْحَرُ بَعِيرًا مِنْ إِبِلِهِ، وَإِنَّهُ كَلَّمَ قَوْمَهُ فِيهِ، فَقَالُوا: إِنَّا قَدْ خَلَفْناهُ فَانْظُرْ أَنْ تَقْتُلَهُ، فَلَمَّا رَآهُ لَا يَنْتَهِي أَمْهَلَهُ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِ، فَسَلَّطَ اللهُ عَلَيْهِ أُكْلَةً فَأَكَلَتْهُ حَتَّى مَاتَ قَبْلَ الْحَوْلِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا، وَإِنْ كَانَ اللهُ لَيَصْنَعُ هَذَا بِالنَّاسِ فِي جَاهِلِيَّتِهِمْ لِيَنْزِعَ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ فَلَمَّا أَتَى اللهُ بِالْإِسْلَامِ أَخَّرَ الْعُقُوبَةَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَذَلِكَ أَنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: { إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ } [الدخان: 40]، وَإِنَّ مَوْعِدَهُمُ السَّاعَةُ، { وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ } [القمر: 46]، وَقَالَ: { وَلَوْ يُؤَاخِذُ اللهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى } [فاطر: 45](بيهقي في شعب الايمان)

 

உமர் ரழி அவர்களின் சபையை ஒருவர் கடந்து சென்றார். குருடராகவும் நொண்டியாகவும் அவர் இருந்தார். மற்றவரின் தயவு இல்லாமல் அவரால் எங்கும் செல்ல முடியாதவராக இருந்தார். அவரைப் பற்றி உமர் விசாரித்த போது இவர் பனீ ஸன்ஆ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சாபத்தின் காரணமாக அந்தக் குடும்பமே இப்படி ஆகி விட்டது என்று கூறப்பட்டது. அது கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரழி இதற்கு சாட்சி உண்டா என்று கேட்க, யார் சபித்தாரோ அந்த  நபரையே அழைத்து வரப்பட்டது. அவரிடம் உமர் ரழி அவர்கள் நடந்ததை விசாரித்தார்கள். அப்போது அவர் கூறினார்.  பனீ ஸன்ஆ குடும்பத்தாருக்கு அருகில் வசிப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் 12 பேர். அவர்கள் எனக்கு நிறைய அநீதம் செய்தனர். என் சொத்துகளை அனுபவித்தனர். என் குடும்பம் பற்றி அவதூறாகப் பேசினர். நான் எவ்வளவோ தூரம் பொறுமை கொண்டேன். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்தேன். குறிப்பிட்ட சிறந்த கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்தேன். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அக்குடும்பத்தில் ஒருவன் பின் ஒருவராக இறந்தனர். கடைசியில் நீங்கள் பார்த்த இவர் மட்டும் தான் மிச்சமிருக்கிறார். அவரும் இந்நிலையில் இருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இது  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                           

  இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் கூறினார் இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் தெரியும். குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்தைச் சார்ந்த, அண்டை வீட்டாரான மற்றொருவருக்கு  நிறைய அநீதம் செய்தனர். அவரும் முடிந்த வரை பொறுமை கொண்டார். இறுதியில் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக ஒரு பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்திற்குள் சிலரும் பள்ளத்திற்கு மேலே சிலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதி அப்படியே குலுங்க ஆரம்பித்தது. இதில் பள்ளத்திற்கு மேல்  இருந்தவர்களுடன் பள்ளத்திற்குள் இருந்தவர்களும் சேர்ந்து அனைவரும் புதையுண்டு போயினர். அதுவே அவர்களின் கப்ராக மாறி விட்டது. என்று கூறியவுடன் அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.        

                                                                                              

இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாரிசுரிமை என்ற அடிப்படையில் நிறைய சொத்துக்கள் கிடைத்த து. அந்தக் குடும்பத்த்துக்கு அவர் மட்டும் தான் வாரிசு என்பதால் கால்நடைகள் உட்பட நிறைய சொத்துக்களை அவர் பெற்றார்.  அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கோத்திரத்தின் ஒரு பிரிவான பனூ முஅம்மல் குடும்பம் வசிக்கும் இடத்தில் தன்னுடைய வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு குடி பெயர்ந்தார். ஆனால் அவர்கள் அதற்கு நேர் மாற்றமாக இவர் மீது பொறாமை கொண்டனர். இவரது சொத்துக்களை அநியாயமாக இவரிடமிருந்து பிடுங்கினர்.  எனக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. ஆனால் அவர்களிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் பெயர் ரபாஹ். அவர் அந்தக் குடும்பத்தாரிடம் நம்மை நம்பி வந்தவருக்கும் துரோகம் செய்யாதீர்கள் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறி பரிந்து பேசினார். ஆனால் அதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட அந்த நபர்  பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஒருநேரத்தில்  அனைவரும் மலையடிவாரத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்கியிருந்த போது மலை உச்சியில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து வழியில் உள்ள அனைத்தையும் நிர்மூலமாக்கியது. அந்தப் பாறை இவர்களின் மீது விழுந்து அவர்களை நசுக்கி சாகடித்தது. இதில் ரபாஹ் மட்டும் தப்பித்தார். அவருக்கு மட்டும் எதுவும் ஆகிவில்லை. என்று கூறியவுடன் உமர் ரழி அவர்கள்  சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                                            

                                                                                                       

இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர்  பனீ ழம்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு அருகில் வசித்தார். ரீஷா என்பது அவரின் பெயர். ரீஷா இவருக்கு மிகவும் அநீதம் செய்தார். இவரின் ஒட்டகங்களை அவ்வப்போது பிடித்து அறுத்து  உணவாக்கி விடுவார். இறுதியில் அந்த ரீஷாவின் உறவினர்களிடம் சென்று இவர் முறையிட்ட போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் தடுத்தாலும் அவன் கேட்க மாட்டான்.  எங்களுடைய  பங்காளிகளில் ஒருவன் என்பதால் அவன் விஷயத்தில்  நாங்கள் தலையிட மாட்டோம்.நீ  வேண்டுமானால் அவனைக்  கொன்று விடு. என்று கூறினார்கள். ஆனால் இவர் குறிப்பிட்ட மாதம் வருவதை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் கையேந்தினார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அதன் விளைவாக அல்லாஹ் வைரஸ் கிருமியை ரீஷா என்பவன் மீது சாட்டினான். அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அழித்து துஆ கேட்ட ஒரு வருடத்திற்குள் அவனை சாகடித்தது. என்றவுடன் இதையெல்லாம கேட்ட உமர் ரழி அவர்கள் அல்லாஹ் முந்தைய காலங்களில் பிறருக்கு அநியாயம் செய்பவர்களை இப்படியெல்லாம் உடனுக்குடன் தண்டித்துள்ளான். ஆனால் இஸ்லாம் வந்த பின்பு, நபியின் துஆ காரணமாக அநியாயம் செய்பவர்களுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்கியுள்ளான் என்றுகூறி சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள். 

      

திண்டுக்கல் உலமா- உமரா  மாநாட்டில் மாநிலத் தலைவர்  ஹழ்ரத் அவர்கள் பேசியது

மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது.  

 

இன்று நம்முடைய துஆக்கள் அவ்வாறு ஏற்கப்படுவதில்லை. என்ன காரணம்?

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ (مسلم)

நபி மூஸா அலை அவர்கள் ஒருமுறை மழைக்காக துஆ செய்ய மக்களை ஒன்று கூட்டியபோது அல்லாஹ்  மூஸா நபியவர்களிடம்  மூஸாவே..இந்தக் கூட்டத்தில் ஒருவன் தன் நெருங்கிய உறவினரோடு பகைமை கொண்ட நிலையில் வந்துள்ளான் அவன் இருக்கும் வரை நான் உமது துஆவை ஏற்க மாட்டேன் ஆகவே ஒரு பொது அறிவிப்புச் செய்து இந்தக் கூட்டத்தினரை கலைந்து போகச் செய்யுங்கள் அதாவது உங்களில் யாரேனும் உறவைத் துண்டித்தவர் இருந்தால் உடனே சென்று பேசி விட்டு வாருங்கள் என்று அறிவிக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அவ்வாறே மூஸா அலை அறிவிக்க, கூட்டம் கலைந்தது. சம்பந்தப்பட்ட நபர் தன் தவறை உணர்நது உடனே சென்று நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த தனது சிறிய தாயாரிடம் பேசி உறவை புதுப்பித்தார். பிறகு மீண்டும் மக்களை ஒன்று கூட்டி நபி மூஸா அலை துஆ செய்ய மழை பெய்தது. அந்த நபர் யார் என்பதை தனக்கு அறிவிக்கும்படி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டதற்கு நான் எனது அடியானின் இரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

முடிவுரை – நாம் செய்யும் துஆக்கள் ஏற்கப்பட வேண்டுமானால் நாம் ஹராமான அல்லது அதன் சாயல் கொண்ட அனைத்தையும் விட்டு ஒதுங்க வேண்டும். நொறுக்குத் தீனிகள், மற்றும் பல உணவுப் பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மை நிலையை அறிந்து கொள்ள முயற்சி எடுக்கப்பட வேண்டும். எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும். யாரையும் ஒதுக்கக்கூடாது. மேலும் கீழ்காணும் துஆவை அடிக்கடி தொழுகைக்குப் பின்னால் ஓதி வர வேண்டும்

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا (مسلم)



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...