14-01-2022 |
|
بسم
الله الرحمن الرحيم
நோய்களைக் கட்டுப்படுத்துபவன்
அல்லாஹ் ஒருவனே
|
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
إُ
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (80) وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ (81) الشعراء
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தன் தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறியபோது எனக்கு நோய் வந்தால் என்னை குணப்டுத்துபவனும் அவனே என்று கூறினார்கள்
عَنْ جَابِرٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ (مسلم
நோயை விட்டும் தப்பிக்க ஊரை விட்டு ஓடிய மக்கள் மரணத்தை விட்டும் தப்பவில்லை
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ (243) البقرة
عَنْ اِبْن عَبَّاس " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْت " قَالَ : كَانُوا أَرْبَعَة آلَاف خَرَجُوا فِرَارًا مِنْ الطَّاعُون قَالُوا : نَأْتِي أَرْضًا لَيْسَ بِهَا مَوْت حَتَّى إِذَا كَانُوا بِمَوْضِعِ كَذَا وَكَذَا قَالَ اللَّه لَهُمْ" مُوتُوا " فَمَاتُوا فَمَرَّ عَلَيْهِمْ نَبِيّ مِنْ الْأَنْبِيَاء فَدَعَا رَبّه أَنْ يُحْيِيَهُمْ فَأَحْيَاهُمْ فَذَلِكَ قَوْله عَزَّ وَجَلَّ " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوف حَذَرَ الْمَوْت " الْآيَة ذَكَرَ غَيْر وَاحِد مِنْ السَّلَف أَنَّ هَؤُلَاءِ الْقَوْم كَانُوا أَهْل بَلْدَة فِي زَمَان بَنِي إِسْرَائِيل اِسْتَوْخَمُوا أَرْضهمْ وَأَصَابَهُمْ بِهَا وَبَاء شَدِيد فَخَرَجُوا فِرَارًا مِنْ الْمَوْت هَارِبِينَ إِلَى الْبَرِّيَّة فَنَزَلُوا وَادِيًا أَفْيَح فَمَلَئُوا مَا بَيْن عُدْوَتَيْهِ فَأَرْسَلَ اللَّه إِلَيْهِمْ مَلَكَيْنِ أَحَدهمَا مِنْ أَسْفَل الْوَادِي وَالْآخَر مِنْ أَعْلَاهُ فَصَاحَا بِهِمْ صَيْحَة وَاحِدَة فَمَاتُوا عَنْ آخِرهمْ مَوْتَة رَجُل وَاحِد (تفسير ابن كثير)
قال الحسن : أماتهم الله قبل آجالهم عقوبة لهم ثم بعثهم إلى بقية آجالهم وقيل : إنما فعل ذلك بهم معجزة لنبي من أنبيائهم قيل : كان اسمه شمعون - قال مجاهد: إنهم لما أحيوا رجعوا إلى قومهم يعرفون أنهم كانوا موتى ولكن سحنة الموت على وجوههم، ولا يلبس أحد منهم ثوبا إلا عاد كفنا حتى ماتوا لآجالهم التي كتبت لهم. (قرطبي)
பனீ இஸ்ராயீல் சந்ததிகளில் 4000 பேர் கொண்ட ஒரு சமூகம் அவர்களின் ஊரில் ஏற்பட்ட காலரா நோயை விட்டும் தப்பிக்க வேறு ஊருக்கு கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள். அந்த ஊருக்குச் சென்றவுடன் அல்லாஹ் அங்கு வைத்து அவர்களை மொத்தமாக மவ்த்தாக்கினான். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை அடைந்து அங்கு வசிப்பிடத்தை ஆக்கியவுடன் அங்கு இரு மலக்குகளை அல்லாஹ் நியமித்தான். ஒருவர் அந்த பள்ளத்தாக்கின் மேல் பகுதியிலுருந்தும் மற்றொருவர் அதன் கீழ் பகுதியிலிருந்தும் சப்தமிட்டனர். அவ்வாறு சப்தமிட்டவுடன் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். குர்துபீ தஃப்ஸீரில் அவர்கள் தங்களுடைய மவ்த்துக்கான தவணை வரும் முன்பே தண்டனை என்ற அடிப்படையில் இறந்தனர்.
பிறகு சில காலங்கள் கழித்து அந்த வழியாகச் சென்ற நபி ஷம்ஊன் அலை அந்த மனித்ரகளை மறுபடியும் உயிராக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ் உயிராக்கினான். அந்த நபியின் மூலம் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டவே அல்லாஹ் அந்த மக்களின் ஆயுட்காலம் முடியும் முன்பே மவ்த்தாக்கி பிறகு எழுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிராக்கப்பட்ட அவர்கள் அவர்களின் உண்மையான ஆயுட்காலம் முடியும் வரை வாழ்ந்தாலும் மவ்த்தின் அடையாளம் அவர்கள் மீது இருக்கும் நிலையில் தான் வாழ்ந்தார்கள். பிண வாடையும் அவர்கள் மீது இலேசாக இருந்தது. அவர்கள் எத்தகைய சிறந்த உடை அணிந்தாலும் அது உடனே கஃபனாக மாறி விடும். – குர்துபீ
நோய்கள் நீங்க ஆன்மீக மருத்துவமும் மிக அவசியம்
وعن زينب امرأة عبد الله بن مسعود أن عبد الله رأى في عنقي خيطا فقال : ما هذا ؟ فقلت : خيط رقي لي فيه قالت : فأخذه فقطعه ثم قال : أنتم آل عبد الله لأغنياء عن الشرك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " إن الرقى والتمائم والتولة شرك " فقلت : لم تقول هكذا ؟ لقد كانت عيني تقذف وكنت أختلف إلى فلان اليهودي فإذا رقاها سكنت فقال عبد الله : إنما ذلك عمل الشيطان كان ينخسها بيده فإذا رقي كف عنها إنما كان يكفيك أن تقولي كما كان رسول الله صلى الله عليه وسلم يقول : " أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما " . رواه أبو داود - مشكاة
ஹழ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் மனைவி அறிவித்துள்ளார்கள் என் கணவர் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் என் கழுத்தில் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிற்றைப் பார்த்து விட்டு இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிறு என்று பதில் கூறினேன். உடனே அதைக் கழற்றி விட்டு, இந்த அப்துல்லாஹ்வின் குடும்பத்தினராகிய நீங்கள் ஷிர்க்கை விட்டும் அப்பாற்பட்டவர்கள். நபி ஸல் அவர்கள் ஷிர்க்கான வாசகங்கள் மூலம் மந்திரித்தல், ஷிர்க்கான எழுத்துக்களால் கயிறு போடுதல், கணவனுக்கு எதிரான சூனியம் ஆகியவை ஷிர்க் என எச்சரித்துள்ளார்கள் என்று என் கணவர் கூற, அதற்கு நான் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்
அறியாமைக் காலத்தில் எனக்குக் கண்வலி இருந்தது. நான் அந்தப் பாதிரியாரிடம் சென்று அந்த தாயத்தை அணிந்தவுடன் அந்த கண் வலி சரியாகி விட்டது. என்று கூற அதற்கு அப்துல்லாஹ் ரழி அவர்கள் இது ஷைத்தானுடைய வேலை தான். அவன் உன்னை அந்தப் பாதிரியாரிடம் செல்ல வைப்பதற்காக உன் கண்ணில் குத்தி விடுவான். நீ அங்கே சென்று அவர் தரும் தாயத்தை அணிந்தவுடன் அவன் குத்துவதை நிறுத்திக் கொள்வான். இனி உனக்கு அந்த மாதிரி ஏற்பட்டால் நபி ஸல் அவர்கள் ஓதியது போல பின்வருமாறு ஓதினால் போதும். என்று அந்த துஆவை சொல்லிக் கொடுத்தார்கள்.
நம்முடைய சோதனைகள் நீங்குவதற்கு நோன்பும் ஒரு கேடயம். பெண்களுக்கும் தற்போதைய சூழ்நிலையை விளக்கிச் சொல்லி வாரம் ஒருமுறையேனும் திங்கட்கிழமை நோன்பு வைக்கச் சொல்ல வேண்டும்.
தனக்கு ஒரு வேதம் வேண்டும் என்று மூஸா அலை கேட்ட போது நோன்பு வைக்கும்படி அல்லாஹ் ஏவினான். அந்த வேதத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது மக்கள் இணை வைப்பதைக் கண்டு, கடும் கோபத்தில் தவ்ராத்தை வீசினார்கள். பல துண்டுகளாக வேதம் சிதறியது. எத்தனை துண்டுகளாகச் சிதறியதோ அத்தனைக்கும் பகரமாக அல்லாஹ் நோன்பு வைக்கச் சொன்னான்.
ஒவ்வொரு நோன்பு முடியும் போது ஒவ்வொரு துண்டுகளும் ஒட்டின. இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்தன.
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)........ وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ (150)الاعراف
قال ابن القاسم: سمعت مالكا يقول: كان موسى عليه السلام إذا غضب طلع الدخان من قلنسوته، ورفع شعر بدنه جبته.– قرطبي
قال ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح (قرطبي – تفسير الرازي)
யூனுஸ் அலை ஓதிய துஆவை சோதனையான நேரத்தில் ஓதும் முஃமின்கள் அனைவருக்கும் ஈடேற்றம் கிடைக்கும்
فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88) أَيْ إِذَا كَانُوا فِي الشَّدَائِد وَدَعَوْنَا مُنِيبِينَ إِلَيْنَا وَلَا سِيَّمَا إِذَا دَعَوْا بِهَذَا الدُّعَاء فِي حَال الْبَلَاء.. عن سَعْد اِبْن أَبِي وَقَّاص رَضِيَ اللَّه عَنْهُ قَالَ مَرَرْت بِعُثْمَان بْن عَفَّان رَضِيَ اللَّه عَنْهُ فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام فَأَتَيْت عُمَر بْن الْخَطَّاب فَقُلْت يَا أَمِير الْمُؤْمِنِينَ هَلْ حَدَثَ فِي الْإِسْلَام شَيْء مَرَّتَيْنِ قَالَ لَا وَمَا ذَاكَ قُلْت لَا إِلَّا أَنِّي مَرَرْت بِعُثْمَان آنِفًا فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام قَالَ فَأَرْسَلَ عُمَر إِلَى عُثْمَان فَدَعَاهُ فَقَالَ مَا مَنَعَك أَنْ لَا تَكُون رَدَدْت عَلَى أَخِيك السَّلَام قَالَ مَا فَعَلْت قَالَ سَعْد قُلْت بَلَى حَتَّى حَلَفَ وَحَلَفْت قَالَ ثُمَّ إِنَّ عُثْمَان ذَكَرَ فَقَالَ بَلَى وَأَسْتَغْفِر اللَّه وَأَتُوب إِلَيْهِ إِنَّك مَرَرْت بِي آنِفًا وَأَنَا أُحَدِّث نَفْسِي بِكَلِمَةٍ سَمِعْتهَا مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَا وَاَللَّه مَا ذَكَرْتهَا قَطُّ إِلَّا تَغْشَى بَصَرِي وَقَلْبِي غِشَاوَة قَالَ سَعْد فَأَنَا أُنَبِّئك بِهَا إِنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ أَعْرَابِيّ فَشَغَلَهُ حَتَّى قَامَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّبَعْته فَلَمَّا أَشْفَقْتُ أَنْ يَسْبِقنِي إِلَى مَنْزِله ضَرَبْتُ بِقَدَمِي الْأَرْض فَالْتَفَتَ إِلَيَّ رَسُول اللَّه فَقَالَ "مَنْ هَذَا أَبُو إِسْحَاق" قَالَ قُلْت نَعَمْ يَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
"فَمَه " قُلْت لَا وَاَللَّه إِلَّا أَنْ ذَكَرْت لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ هَذَا الْأَعْرَابِيّ فَشَغَلَك قَالَ " نَعَمْ دَعْوَة ذِي النُّون إِذْ هُوَ فِي بَطْن الْحُوت "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي كُنْت مِنْ الظَّالِمِينَ" فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا مُسْلِم رَبّه فِي شَيْء قَطُّ إِلَّا
اِسْتَجَابَ لَهُ "(أحمد-باب:مسند سعد بن ابي وقاص
ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரழி அவர்கள் ஒரு முறை மஸ்ஜிதில் உஸ்மான் ரழி அவர்களை பார்த்து ஸலாம் கூற, அப்போதுஏதோ ஓதிக் கொண்டிருந்த உஸ்மான் ரழி அவர்கள் ஸஃது ரழி அவர்களை நன்றாக பார்த்த பிறகும் ஸலாமுக்கு பதில் கூறாமல் இருந்து விட, உடனே ஸஃது ரழி அவர்கள் ஜனாதிபதி உமர் ரழி அவர்களிடம் இஸ்லாத்தில் ஏதேனும் புதிய கட்டளைகள் வந்துள்ளதா ? என்று கூறி முறையிட, உடனே அவர்கள் உஸ்மான் ரழி அவர்களை அழைத்து விசாரிக்கிறார்கள் அப்போது உஸ்மான் ரழி அவர்கள் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என மறுக்க, ஸஃது ரழி அவர்கள் நடந்ததை சத்தியமிட்டு கூறிய போது, சற்று யோசித்து விட்டு உஸ்மான் ரழி அவர்கள் “ நான் யூனுஸ் அவர்களுடைய துஆவை மன ஓர்மையுடன் ஓதிக் கொண்டிருந்ததால் என் கண்கள் குருடாகி விட்டதைப் போன்றாகி விட்டது. என் உள்ளம் முழுவதும் அந்த தஸ்பீஹ் நிரம்பி இருந்ததால் நீங்கள் ஸலாம் சொன்னதை நான் கவனிக்கவில்லை என உஸ்மான் ரழி கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பும் கேட்டார்கள். அப்போது ஸஃது ரழி அவர்கள் அந்த துஆவைப் பற்றி தனக்குத் தெரிந்த தகவலையும் கூறுகிறார்கள்.
அதாவது நபி ஸல் அவர்கள் ஒரு முறை “ முதல் துஆ...என்று ஏதோ துஆவின் சிறப்பை சொல்ல ஆரம்பித்த போது ஒரு கிராமவாசி வந்து ஏதோ கேட்டு, நபி ஸல் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, நபி ஸல்அவர்கள் அவர் பின்னால் சென்று விட்டார்கள்.நபி ஸல் வீட்டுக்குப்புறப்படும் போது நான் என் காலால் தரையில் தட்டி அவர்களுக்கு நினைவூட்டினேன்.அப்போது தான் அவர்கள் மீன் வயிற்றுக்குள் நபி யூனுஸ் அலை ஓதிய துஆ தான் அந்த துஆ..எவர் அதை ஓதி துஆ கேட்பாரோ அவருடைய கோரிக்கை நிறைவேறும் என்றார்கள்.
=====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக