வியாழன், 6 ஜனவரி, 2022

 

07-01-2022

03-06-1443

 

بسم الله الرحمن الرحيم 

ஆலிமின் மரணம் பெரும் இழப்பு

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ (28) فاطر

சிறந்த ஆலிம் பெருமகனாரின் மரணம் என்பது இந்த உலகத்துக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த திறமையான ஆலிம்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டும் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا  (بخاري

திறமையான ஆலிம்கள் இருக்க்கும்போதே அவர்கள் மூலம் பயனடைந்து கொள்ள வேண்டும்

عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إن لقمان قال لابنه: يا بني عليك بمجالسة العلماء،واسمع كلام الحكماء،فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر". (مجمع الزوائد

லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள். மகனே உலமாக்களுடன் அமர்ந்து உபதேசம் செய்வதை அவசியமாக்கிக் கொள்.  மார்க்க மாமேதைகளில் தத்துவமாக மார்க்கத்தைப் பேசுபவர்களின் பேச்சைக்  கவனித்துக் கேள். ஏனெனில் இதுபோன்றவர்களின் பேச்சைக்  கொண்டு அல்லாஹ் உள்ளங்களை உயிராக்குவான். மழை மூலம் பயிர்களை செழிப்பாக்குவது போல..

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ:مَجَالِسُ الْعِلْمِ. (طبراني

சுவனப் பூங்காங்களை நீங்கள் கடந்து சென்றால் நன்றாக மேயந்து கொள்ளுங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி ஸல் சுவனப் பூங்காங்கள் என்றால் எது என்று கேட்க, உலமாக்களின் இல்முடைய மஜ்லிஸ் என நபி ஸல் பதில் கூறினார்கள்

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ فَإِنِّي خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ الْعُلَمَاءِ وَلَا تَقْبَلْ إِلَّا حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْتُفْشُوا الْعِلْمَ وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لَا يَعْلَمُ فَإِنَّ الْعِلْمَ لَا يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا  (بخاري- بَاب كَيْفَ يُقْبَضُ الْعِلْمُ

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள்  அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும்போது  நபி ஸல் அவர்களின் ஹதீஸ்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து எழுதுங்கள் ஏனெனில்  உலமாக்களின் மறைவை எண்ணி அஞ்சுகிறேன்.  இலமைப் பரப்புங்கள்.  இல்முடைய மஜ்லிஸில் அமருங்கள்.  ஏனெனில கல்வி என்பது மிக இரகசியமாகவே மக்களிடம் இருந்து எடுக்கப்படும்.

திறமையான ஆலிம்களை மக்கள்  மதிக்காததால்  ஆலிம்கள்  பல்வேறு  துறைகளில் ஈடுபடுகின்றனர். கடைசி காலத்தில் தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை  ஏற்படும்.

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود

شرح (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام. (مرعاة

மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது.  ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும்.

மார்க்கக் கல்வியை முறையாக கற்காத பாமரரின்  தவறான தீர்ப்பு பாவம் செய்தவரை திருத்தாமல் மீண்டும் பாவியாக்கியது

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ لَا فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فَقَالَ قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ قَالَ قَتَادَةُ فَقَالَ الْحَسَنُ ذُكِرَ لَنَا أَنَّهُ لَمَّا أَتَاهُ الْمَوْتُ نَأَى بِصَدْرِهِ (مسلم باب قَبُولِ تَوْبَةِ الْقَاتِلِ وَإِنْ كَثُرَ قَتْلُهُ.-كتاب التوبة

சுருக்கம்- 99 கொலைகள் செய்தவர் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில்  அது பற்றிய யாரிடம் விளக்கம் கேட்பது என விசாரித்தபோது ஒரு வணக்கசாலியை காட்டப்பட்டது. மார்க்கம் தெரியாத அவரிடம் வந்து  தனக்கு தவ்பா உள்ளதா என்று கேட்டபோது உனக்கெல்லாம் தவ்பா இல்லை என்று அவர் பதில் கூற, ஆத்திரத்தில் அவரையும் அந்த மனிதர் கொன்று தன் கணக்கை 100 ஆக பூர்த்தியாக்கினார். பின்பு சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு திருந்தும் எண்ணம் வந்தது. மார்க்கம் அறிந்த ஒருவரைப் பற்றி அவர் விசாரித்தார்.  அப்போது ஒரு சிறந்த ஆலிமை காட்டப்பட்டது. அவரிடம் விஷயத்தைக் கூற அவர் உமக்கு தவ்பா நிச்சயம் உண்டு என்று கூறியதுடன் உன்னுடைய தவறுகளுக்குக் காரணம் உமது ஊர் சரியில்லை. நல்லவர்கள் வாழும் ஒரு ஊரை நான் காட்டுகிறேன். நல்லவர்களின் தொடர்பில் நீ இருந்தால் பாவம் செய்யும் எண்ணம் உமக்கு வராது என்று அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே அவருக்கு மவ்த் வந்து விட்டது.  அப்போது நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். கெட்ட உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். இவரின் உயிரை யார் கைப்பற்றுவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது இறுதியாக மூன்றாவதாக ஒரு மலக்கு அங்கு வந்து  இவர் போக வேண்டிய தூரத்தையும் இவர் கடந்து வந்த தூரத்தையும் கணக்கிட்டு முடிவு செய்யுங்கள் என்று கூற அவ்வாறே கணக்கிட்ட போது  அவர் போக வேண்டிய தூரம் மிகச் சிறிய அளவில் மட்டுமே நெருக்கமாக இருந்த து. இறுதியில் நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அவரது உயிரைக் கைப்பற்றினர்.

மார்க்கத்தை முறையாக கற்றவர் ஷைத்தானின் பிடியில் இருந்து தன்னையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருப்பார். 

 

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (ابن ماجة

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمهالله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيماِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தியானத்தில் இருந்தபோது ஷைத்தான்  அல்லாஹ்வைப் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு அப்துல் காதிரே மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூற உடனே சுதாரித்துக் கொண்ட ஷைகு அவர்கள்  தஅவ்வுத் ஓதி, ஷைத்தானே இங்கிருந்து இழிவடைந்தவனாக சென்று விடு என்றார்கள். மீண்டும் அவன் பரவாயில்லையே உங்களுடைய திறமையால் தப்பி விட்டீர்கள் என்று கூற, அதற்கு ஷைகு அவர்கள் நான் என் திறமையால் தப்பிக்கவில்லை.அல்லாஹ்வின் அருளால் தப்பித்தேன் என்றார்கள்.  பின்பு ஷைத்தான் நான் இதுபோன்று எத்தனையோ பேரை வழி கெடுத்துள்ளேன் நீங்கள் எவ்வாறு தப்பித்தீர்கள் என்று கேட்க, நீ எப்போது மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறினாயோ அப்போது  நான் சுதாரித்துக் கொண்டேன் என  ஷைகு அவர்கள் பதில் கூறினார்கள். திறமையான ஆலிம்கள்  மட்டுமே இவ்வாறு ஷைத்தானின் சூழ்ச்சியை அறிந்து கொள்வார்கள்.                                                                                                                       

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...