01-07-2022 துல்ஹஜ் - 1 |
|
بسم
الله الرحمن الرحيم العشر من ذي الحجة وفضائل الأضحية |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من
بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي
والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال
الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين}
துல்ஹஜ் முதல் பத்து
நாட்களின் சிறப்பு
عن جابر ، رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر
وليال عشر} عشر الأضحية والوتر يوم عرفة- والشفع يوم النحر « هذا
حديث صحيح رواه
الحاكم في المستدرك عن ابن عباس ، قال : « الليالي التي أقسم الله عز وجل بهن
العشر الأول من ذي الحجة ، والشفع يوم النحر
، والوتر يوم عرفة رواه البيهقي
عن مسروق : ( وليال عشر ، قال : « العشر عشر الأضحى التي وعد الله عز وجل
موسى عليه السلام ( وأتممناها بعشر » رواه البيهقي
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ
أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ
الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي
سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا
الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ
يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ رواه الترمدي
குர்பானி
கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.
عَنْ
عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ
وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ
بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ
اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا
بِهَا نَفْسًا (ابن ماجة)
கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச்
சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம்
செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு
வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு
அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி
கொடுங்கள்.
عَنْ
زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ
أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ
بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ
شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)
குர்பானி என்பது நபி
இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என
நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல்
கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக
இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல்
பதில் கூறினார்கள்.
عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع
فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله
عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم
فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر
لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما
هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال
الي الجنة فغاب عن بصري {سنانية}
அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் கூறினார்கள் எனக்கு
ஒரு ஏழை சகோதரர் இருந்தார். அவர் ஏழ்மை நிலையிலும் வருடா வருடம் குர்பானி
கொடுப்பார். அவர் இறந்த பின் நான் பிரத்தியேகமாக இரண்டு ரக்அத் தொழுது
அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் அவரை என் கனவில் காட்டு என துஆ செய்தேன். அவ்வாறே நான்
உளூச் செய்து விட்டு தூங்கிய போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டது போலவும்
மக்கள் அவரவர் கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போலவும் அப்போது அவர் உயர்
தரமான குதிரையில் வருவது போன்றும் அவருக்கு முன்னால் பல சவாரி வாகனங்கள் அணி
வகுத்து வருவது போலவும் கண்டு அவரிடம் நான் அல்லாஹ் உம்மிடம் எப்படி நடந்து
கொண்டான் என்று கேட்டேன். அதற்கு அவர் அல்லாஹ் மன்னித்தான் என்றார். எதனால் என்று
நான் கேட்க, ஒரு மூதாட்டிக்கு நான் செய்த தர்ம ம் என்றார். இந்த வாகனங்கள் ஏது
என்று கேட்க, இவை எனது குர்பானிப் பிராணிகள். நான் ஏறிச் செல்வது நான் முதன்
முதலில் கொடுத்த குர்பானிப் பிராணி என்றார். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்றேன்
அதற்கு அவர் சுவனத்தை நோக்கி.. என்றார்கள்.
கருத்து- குர்பானிப் பிராணிகள் ஆடுகளாக
இருந்தாலும் பயணம் செய்ய உகந்ததாக மாற்ற அல்லாஹ்வினால் முடியும்.
குர்பானி என்பது தியாகம்.
அந்த தியாகத்தை யார் உளத்தூய்மையுடன் செய்கிறார்கள் என்பதை அந்தக் காலத்தில்
பகிரங்கப்படுத்தப்பட்டது.
உலகின் முதல் குர்பானி உளத்தூய்மை உள்ளவரிடம்
மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது
உளத்தூய்மையுடன் ஹாபீல் கொடுத்த ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ்
பாதுகாத்தான்
وَاتْلُ عَلَيْهِمْ
نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ
مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ
إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة -
عَنْ عَبْد اللَّه بْن عَمْرو
قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ
أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر
صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب
الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً
بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن
وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ
تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا
قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ
خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ
السَّلَام(تفسير ابن كثير)
காபீல்
ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில்
தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால்
தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை.
அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை
வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக்
கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில்
அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது
அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.
அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல்
ஙனீமத் பொருட்களையும் மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது
அக்கால நடைமுறை
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ
لَا يَتْبَعْنِي رَجُلٌ
مَلَكَ بُضْعَ امْرَأَةٍ
وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى
بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ
خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ
الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ
وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ
اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا
فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ
قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ
فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ
فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ
الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ
لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب
قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم
أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب
فرض الخمس
சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை
முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய
மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள்
குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர் எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச்
சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து
விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக
மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல்
இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும்
சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை
பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை
கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி
இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால்
கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர
வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை
நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு
குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து
அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக்
கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும்
என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின்
கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன.
மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள்
மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு
வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது
குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க
வைப்பதின் சிறப்பு
ذَلِكَ
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة
الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا
وَاسْتِحْسَانهَا
{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا
نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ
الْبُخَارِيّ
இப்னு அப்பாஸ் ரழி
அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை
கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில் கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே
வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப்
பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர்.
நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம் குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய
நபித்தோழர்கள்
عن يُونُس بْن
مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَخَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا
قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ
بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا
كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ
யூனுஸ்
இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி
ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த,
நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம்
இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.
குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்
குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான,
முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட
ஆடு சிறந்தது.
காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. வால், காது ஆகியவை பாதிக்குக் கீழ்
அறுபட்டிருந்தால் குர்பானி
கொடுக்கலாம். கொம்பும் இவ்வாறே பாதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி
கொடுக்கலாம். பாதிக்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது.
அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம்.
ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.
أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ
الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم
ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ
بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً
وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ
يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ
رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ
الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ
الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال
الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى
விளக்கம்-நவவீ இமாம்
கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி
உரிமை விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம்
ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய்
மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த
அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட 500
ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும்
அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின்
மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ
அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம்
மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது
குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி
பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ
فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب
الأضاحى
அபூசயீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை
வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன்
காதை) ஒரு
ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் நாங்கள்
கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள்.
வாங்கிய
பிறகு ஏற்படும் குறை சம்பந்தமான அபூர்வமான மஸாயில்
وفي مَجْمُوعِ النَّوَازِلِ أَرْبَعَةُ نَفَرٍ اشْتَرَى كُلُّ وَاحِدٍ منهم
شَاةً وَلَبَنُهَا وَسَمْنُهَا وَاحِدٌ فَحَبَسُوهَا في بَيْتٍ فلما أَصْبَحُوا
وَجَدُوا وَاحِدَةً منها مَيِّتَةً وَلَا يدري لِمَنْ هِيَ فَإِنَّهَا تُبَاعُ هذه
الْأَغْنَامُ جُمْلَةً ويشتري بِقِيمَتِهَا أَرْبَعُ شِيَاهٍ لِكُلِّ وَاحِدٍ منهم
شَاةٌ ثُمَّ يوكل كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ بِذَبْحِ كل وَاحِدَةٍ منها
وَيُحَلِّلُ كُلُّ وَاحِدٍ منهم صَاحِبَهُ لِتَجُوزَ عن الْأُضْحِيَّةِ (البحر
الرائق شرح كنز الدقائق)
மஜ்மூஉன்
நவாஜில் என்ற நூலில் ஒரு மஸாயில் உள்ளது. நான்கு நபர்கள் சேர்ந்து ஒரே மாதிரியான
உருவ அமைப்பு கொண்ட நான்கு ஆடுகளை தனித்தனியாக வாங்கினார்கள் என்றால் அதை அடைத்து
வைத்திருக்கும்போது அதில் ஒரு ஆடு இறந்து விட்டது என்றால் அது யாருடைய ஆடு என்பது
தெரியா விட்டால் மீதமுள்ள மூன்று ஆடுகளையும் விற்க வேண்டும். அந்தப் பணத்தை
மொத்தமாக சேர்த்தால் எவ்வளவு வருமோ அந்தப் பணத்துக்கு நான்கு ஆடுகள் வாங்க
வேண்டும். அதாவது மூன்று ஆடுகளுக்கான பணத்தில் நான்கு ஆடுகள் வாங்க வேண்டும்.அதை
நான்கு பேரும் குர்பானி கொடுக்க வேண்டும். எனினும் அவரவர் ஆட்டை அவரவர் அறுத்தார்
என்று முழுமையாக கூறி விட முடியாது. அதாவது அவர் அறுக்கும் ஆடு அவருடையது தான்
என்று உறுதியாக கூறி விட முடியாது. எனவே ஒவ்வொருவரும் ஆட்டை அறுக்கும்போது
இன்னொருவருக்கு வக்கீலாக இருக்கிறார் நிய்யத் வேண்டும்.