வியாழன், 23 ஜூன், 2022

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்

 


24-06-2022

துல் கஃதா - 23

 

بسم الله الرحمن الرحيم 

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





விஷச் செடிகளைப் போன்று வேகமாக வளர்ந்து வரும் விரோதிகளுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا (31 الفرقان

முஃமின்களுக்கு விரோதிகள் ஒவ்வொரு காலத்திலும் இருந்துள்ளார்கள். குறிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்காவிலும் எதிரிகள் இருந்தனர். மதீனாவிலும் எதிரிகள் இருந்தனர். மக்காவை விட மதீனாவில் மூன்று வகையான எதிரிகள் இருந்தனர். இவர்களின் தீமைகளை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொள்கையில் மாறுபட்டவர்களுடனும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து எதிரிகளை சமாளித்தார்கள் என்பது நமக்குப் படிப்பினையான விஷயம்.   

எதிரிகளை வெல்வதற்காக கொள்கையில் மாறு பட்டவர்களுடன் கூட்டணி வைத்த நபி அலைஹி வஸல்லம்

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக, மதீனாவுக்குச் சென்றவுடன் யூதர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தைக் கூறலாம்.

பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் தரப்பட்டவர்கள் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம்.

الم (1) غُلِبَتِ الرُّومُ (2) فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ (3) فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (4)  ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோஷமடைந்தார்கள். காரணம் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதறகாக...

அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா  காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக்கெதிரான கூட்டணியில்  ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து,  அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயம் பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு  உலக விவகாரங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேசநலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயல்பட்டுள்ளார்கள்.

وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته .وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت .وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாட்களுடன் கஃபாவிற்குள்  நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலேவந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து  வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ (بخاري

பத்ருப் போரின் கைதிகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது இப்போது முத்இம்பின் அதி உயிரோடு இருந்து இந்த நாற்றமெடுத்தவர்கள் விஷயத்தில் சிபாரிசு செய்திருந்தால் அவருக்காக இவர்களை நான் விடுதலை செய்திருப்பேன்

மாற்றார்களையும் இணைத்துக் கொண்டு ஓரணியில் திரள வேண்டிய நாமே பல பிரிவுகளாப் பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை இலகுவாக அழித்து விடுவார்கள்.

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

அபூரஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம். ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும்  21 பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் அந்தப் பிரயாணத்த்தில் இருந்த அனைவரும் சாப்பிட்டோம்.  உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்கள்

கடந்த காலங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தபோது

 பாசிச சக்திகள்  தலை தூக்கவில்லை

காஞ்சி மடத்தின் பெரியவர்களில் ஒருவரான சந்திர சேகர சுவாமிகள் பற்றிய ஒரு குறிப்பு..

அவர் முஸ்லிம்களைச் சந்திக்கும்போது நீங்கள் எத்தனை நேரம் தொழுவீர்கள் என்று கேட்பார். அவர்கள் நாங்கள் ஐவேளைத் தொழுகிறோம் என்று கூறினால் அதற்கு அவர் இல்லை நீங்கள் ஆறு வேளை தொழ வேண்டும். அதாவது அதிகாலை தஹஜ்ஜத் தொழுகை மிக முக்கியமானது. உங்கள் மீது இரக்கப்பட்டுத் தான் அது உங்களுக்குக் கடமையாக்கப் படவில்லை. என்று கூறுவாராம். அதேபோல முன்பு காஞ்சி கோவிலுக்கு அருகில் பள்ளிவாசல் இருந்தது. ஐந்து வேளையும் அங்கு பாங்கு சொல்லப் படும். அப்போது அவரோடு இருந்தவர்கள் இந்த பாங்கு சப்தம் உங்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லவா? குறிப்பாக அதிகாலை பாங்கு உங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அல்லவா? அதை நிறுத்தும்படி நாங்கள் கூறலாமா? என்று கேட்டபோது காஞ்சிப் பெரியவர் தன் தோழர்களிடம்  இந்த சப்தம் கேட்டுத் தான் நான் தினமும் அதிகாலையில் எழுகிறேன். எனவே எக்காரணத்தைக் கொண்டும் அது நிறுத்தப்படக் கூடாது என்று பதில் கூறியுள்ளார்.  இச்சம்பவத்தை 1992-ல் பாபரி மஸ்ஜித் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவரைச் சந்திக்க வந்த மெளலானா துல்ஃபிகார் சாஹிப் அவர்களிடம் காஞ்சிப் பெரியவரே கூறியுள்ளார். 

இப்படியெல்லாம் முற்காலத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை இருந்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டிய செவிலித்தாய் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார்.

 

சேதுபதி மன்னர்களைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். (ஷீது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களைத் தான் சேதுபதி மன்னர்கள் என்றும் கூறப்படுகிறது.) இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களில் ஒருவர் விஜயரகுநாத சேதுபதி. இவர்  1713-ல் இருந்து 1725 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழ் அப்போது கீழக்கரையும் இருந்தது.  இவரது ஆட்சியின்போது கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவை தனது மந்திரி சபையில் இடம்பெற இவர் அழைத்தபோது எனக்கு அதில் விருப்பமில்லை. வேண்டுமானால் உங்களுக்கு நல்ல ஒரு நபரை நான் தருகிறேன் என்று கூறி வள்ளல் சீதக்காதி அவர்களை சதக்கத்துல்லா அப்பா அறிமுகப்படுத்தினார். அதன்படி வள்ளல் சீதக்காதி சேதுபதி மன்னரின் மந்திரி சபையில் இடம்பெற்றார். அப்போது இராமேஸ்வரம் தீவில் பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும் என்று மன்னர் ஆசைப்பட்ட போது அதற்கான பொறுப்பை வள்ளல் சீதக்காதியிடமே ஒப்படைத்தார். எந்தப் பகுதியில் இருந்து கற்களைச் சேகரித்துக் கட்டினால் கட்டிடம் நிலைத்திருக்கும் என்றெல்லாம் நன்கு ஆய்வு செய்து வள்ளல் சீதக்காதி அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். வாலி நோக்கம் பகுதியில் இருந்து சுமார் 100 யானைகளில் ஆலயம் கட்டத் தேவையான தூண்கள் இராமேஸ்வரத்திற்கு சுமந்து வரப்பட்டன. ஆலயம் கட்டி முடித்த பின் மிச்சத் தூண்கள் இருந்தன. அதை வைத்து கீழக்கரையில் ஒரு ஆலயம் எழுப்பி விடலாமா? என்று வள்ளல் சீதக்காதி கேட்டபோது வேண்டாம். கீழக்கரை என்பது முஸ்லிம்கள் நிறைந்த இடம். அங்கு கோவில் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் ஒரு பள்ளிவாசல் கட்டுங்கள் என்று மன்னர் கூறினார். அதன்படி அங்கு பள்ளிவாசல் கட்டப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டிய செவிலித்தாய் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார்.

இந்து -முஸ்லிம் ஒற்றுமை தழைத்தோங்கிய இம்மண்ணில் இன்று சில பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளால் அந்த ஒற்றுமைக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. மதத்தால் இந்த நாட்டு மக்களைப் பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் புதுப்புது சட்டங்கள் போட்டு முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நினைக்கும் தீய சக்திகள் மறுபுறம் முஸ்லிம்களின் மீதான வெறுப்பை மற்ற சகோதர சமய மக்களிடம் விதைத்து வருகிறார்கள். பாசிச சக்திகள் தங்களின் பிள்ளைகளுக்கு சிறிய வயதில் இருந்தே முஸ்லிம்கள் மீதான வெறுப்பை விதைத்தே வளர்க்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் இது பாடமாகவே போதிக்கப்படுகின்றது. நாளடைவில் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நன்கு பதிகின்றன. அவர்கள் வாலிப வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு முஸ்லிமைக் கண்டாலே வெறுக்கும் நிலை அவர்களிடம்  உருவாகி விடுகிறது.தமிழக மக்கள் அந்த சூழ்ச்சிக்கு ஒருபோதும் பலியாகி விட மாட்டார்கள். தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் மாற்றார்களும் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள் என்பதே அகற்கு சாட்சி. எனினும் நாம் இந்த நாட்டின் ஒற்றுமை நீடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்                             .    

 

இந்து - முஸ்லிம் ஒற்றுமை  (இந்தியஅளவில்)

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம். ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். பணம் தேவையில்லை என்றார்கள்.  

 

இந்து- முஸ்லிம் ஒற்றுமை நீடிக்க நாம் செய்ய வேண்டியவை

நம் வீட்டு வைபவங்களில் நமக்கு அருகிலுள்ள பிற சமய சகோதரர்களை அழைக்க வேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைப்பதில் நாம் பங்கெடுக்க வேண்டும். இதுவும் நபிகளார் காட்டித் தந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.

நமது மஹல்லா மஸ்ஜிதில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் பிற சமய சகோதரர்களை, குறிப்பாக மத குருமார்களையும் காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சமய நல்லிணக்க விழாக்கள் நடத்தி அவர்களை கண்ணியப் படுத்துவதுடன் அவர்களின் நாவினால் நம்முடைய இஸ்லாத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வைக்க வேண்டும்.ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் குழந்தைகளுக்கு ஓதிப் பார்க்க வரும் பிற சமய சகோதரர்கள் அமருவதற்கு சிறந்த இட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்தால் ஸ்நாக்ஸ் ஏதேனும் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். நமது வாகனங்களில் மாற்றார்களின் மனதை ஈர்க்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்ல நபிமொழிகளை எழுதி ஒட்ட வேண்டும். மத பாகுபாடு பார்க்காமல் நோயாளிகளை நலம் விசாரிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்கு ஒரு குழுவாகச் சென்று அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கித் தர வேண்டும். கிறிஸ்தவ மதம் பரவியது இப்படித்தான். மாற்றார்களுடன் வியாபாரம் செய்யும்போது நம்பிக்கை, நாணயம், குறைந்த லாபம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இஸ்லாம் இவ்வாறு தான் பரவியது.எல்லாவற்றும் மேலாக அனைத்து விஷயங்களிலும் நம்மிடம் இறையச்சம் மேலோங்க வேண்டும். நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக மாறி விட்டால் வெகு விரைவில் பாசிச ஆட்சியை அல்லாஹ் இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விடுவான் என்பது நிச்சயம்.

 

ஒற்றுமையின்மையால், ஒழுங்கான தலைமை இல்லாததால் இந்தியாவில் நாம் தலித்துகளை விட பின் தங்கி...

சச்சார் குழு அறிக்கையின் படி இந்தியாவில் முஸ்லிம்கள் சுமார் 14 கோடி. அதாவது இந்திய மக்கட் தொகையில் 14 சதவீதம். ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் எத்துறையிலும் நம்முடைய பங்களிப்பு இல்லை. முஸ்லிம்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 சதவீதமே. ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 சதவீதம் தான். சர்வதேச விவகாரங்களை தீர்மானிக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் ஒரு சதவீதம் தான். மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்புப்படை இரண்டிலும் 2 சதவீதமே. மாவட்ட நீதிபதிகள் 2 சதவீதமே. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 4 % தான்..... கல்வி நிலை: பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி செல்வோர் முஸ்லிம்களில் 4 சதவீதமே. மீதம் 7 சதவீதம் பேர் பள்ளிப்படிப்போடு நின்று..பொருளாதாரம் :  வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கணக்குப் பார்த்தால் முஸ்லிம்கள் தான் அதிகம்.தலித்துகளை விட– சராசரியாக தலித்களின் மாத வருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவு. நீதித்துறையில் தலித்கள் 20 சதவீதம் பேர் என்றால் முஸ்லிம்கள் 7 சதவீதம் மட்டுமே. ரயில்வே துறையில் முஸ்லிம்கள் 4 சதவீதம் மட்டுமே. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தலித்கள் 32 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் 22 சதவீதம் மட்டுமே. குடிநீர் குழாய் மூலம் நீர் சப்ளை பெறும் தலித்கள் 23 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் 19 சதவீதம் மட்டுமே. இது 2006-ல் சச்சார் குழு அளித்த அறிக்கை.                                                 

இந்தியாவின் 2-வது பெரும்பான்மை சமூகம், இந்தியாவை 800 வருடம் ஆண்ட சமூகம் இன்று அரசியலில்..

நம் சதவீதத்தின் படி 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 73 பேர் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ அதில் பாதியை விடக் குறைவு. சட்டமன்றத்தில் அதை விட மோசம். ஒரு காலத்தில் 27 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். 

பதவி ஆசையும். பண ஆசையும் தான் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் ஒன்றிணைவதை தடுக்கிறது

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

முஸ்லிம்கள் சிறு சிறு பதவிகளுக்கும்,பணத்துக்கும் அடிமைப்பட்டு கிடக்கும் வரை நம் அவல நிலை மாறாது

قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                                                              

பனீ இஸ்ராயீல் சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் திரும்பி வரும்வரை அமைதி காத்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قال الله تعالي قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ (85) فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي (86)قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِيُّ (87) فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ فَقَالُوا هَذَا إِلَهُكُمْ وَإِلَهُ مُوسَى فَنَسِيَ(88) أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَلَا نَفْعًا (89) وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِنْ قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنْتُمْ بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي (90) قَالُوا لَنْ نَبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّى يَرْجِعَ إِلَيْنَا مُوسَى (91) قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي(94)سورة طه

மக்களை வழி கெடுத்து திசை திருப்பும் தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள், அவர்களை வாள் கொண்டு வெட்ட ஆரம்பித்தால் கியாமத் வரை வெட்டிக்கொண்டே இருப்பேன் என்ற நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ أَوْ قَالَ إِنَّ رَبِّي زَوَى لِي الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ بِعَامَّةٍ وَلَا يُسَلِّطَ عَلَيْهِمْ

عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ8 وَإِنَّ رَبِّي قَالَ لِي يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ وَلَا أُهْلِكُهُمْ بِسَنَةٍ بِعَامَّةٍ وَلَا أُسَلِّطُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَلَوْ اجْتَمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنِ أَقْطَارِهَا أَوْ قَالَ بِأَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَحَتَّى يَكُونَ بَعْضُهُمْ يَسْبِي بَعْضًا وَإِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ قَالَ ابْنُ عِيسَى ظَاهِرِينَ ثُمَّ اتَّفَقَا لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ (أبوداود)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...