30-09-2022 ரபீஉல் அவ்வல்- 3 |
|
بسم الله الرحمن الرحيم புகழுக்குரிய பெருமானார் (ஸல்) |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஸலவாத்
மூலமாக நபி (ஸல்)
அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுவது போல்
வேறு
யாருடைய பெயரும் உச்சரிக்கப்படுவதில்லை.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ
يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ
وَسَلِّمُوا تَسْلِيمًا (56الاحزاب)
قَالَ الْبُخَارِيّ : قَالَ أَبُو
الْعَالِيَة صَلَاة اللَّه تَعَالَى ثَنَاؤُهُ عَلَيْهِ عِنْد الْمَلَائِكَة ,
صَلَاة الْمَلَائِكَة الدُّعَاء وَقَالَ اِبْن عَبَّاس : يُصَلُّونَ يُبَرِّكُونَ
(بخاري)
மலக்குகளின் சலவாத்
-
أن كعبا دَخل على عائشة فذكروا رسولَ الله صلى الله عليه و سلم فقال كعبٌ مَا مِنْ
نَجْمِ فَجْرٍ يَطْلُعُ إِلَّا نَزَلَ سَبْعُونَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ
حَتَّى يَحُفُّوا بالْقَبْرِ يَضْرِبُونَ بِأَجْنِحَتِهِمْ وَيُصَلُّونَ عَلَى
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا أَمْسَوْا عَرَجُوا ،
وَهَبَطَ مِثْلُهُمْ فَصَنَعُوا مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا انْشَقَّتِ الْأَرْضُ
خَرَجَ فِي سَبْعِينَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ يُوَقِّرُونَهُ "(شعب
الايمان)
கஃப் ரழி அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் முதல்
மாலை வரை 70,000 ஆயிரம் மலக்குகள் நபி ஸல் அவர்களின் கப்ரை சூழ்ந்து கொண்டு மாலை
வரை சலவாத் சொல்கின்றனர். அந்த மலக்குகள் சென்ற பிறகு அடுத்த நேர மலக்குகள் வருகை
தந்து நபி ஸல் அவர்களின் கப்ரை சூழ்ந்து கொண்டு காலை வரை சலவாத் சொல்கின்றனர்.
அழிவு நாள் வரை இவ்வாறு நடைபெறும்.
சலவாத்
சொல்வது சில நேரங்களில் வாஜிப், சில நேரங்களில் சுன்னத்,
சில
நேரங்களில் முஸ்தஹப்பு என பலவகை உள்ளது
தொழுகைக்குள்ளே சலவாத்
சில இமாம்களிடம் ஃபர்ளாகும்
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ
عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى
مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ
حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا
بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير
( قال الشَّافِعِيُّ ) فَرَضَ اللَّهُ عز وجل الصَّلَاةَ
على رَسُولِهِ صلى اللَّهُ عليه وسلم فقال { إنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ
يُصَلُّونَ على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلَّوْا عليه وَسَلِّمُوا
تَسْلِيمًا } + ( قال الشَّافِعِيُّ ) فلم يَكُنْ فَرْضُ الصَّلَاةِ عليه في
مَوْضِعٍ أَوْلَى منه في الصَّلَاةِ (الام
நபி ஸல் அவர்களின் பெயரைக் கேட்டால் சலவாத் சொல்வது
கடமையாகும்
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ
عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ (ترمذي) بَاب قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ- كِتَاب الدَّعَوَاتِ عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
பொருள்- என் பெயரைக் கேட்டும் எவர் சலவாத் கூறவில்லையோ அவர்
மாபெரும் கஞ்சன்
عن أبي هريرة رضي الله عنه أن النبي
صلى الله عليه و سلم صعد المنبر فقال : ( آمين آمين آمين ) قيل : يا رسول الله إنك
حين صعدت المنبر قلت : آمين آمين آمين قال : ( إن جبريل أتاني فقال : من أدرك شهر
رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ومن أدرك أبوية
أو أحدهما فلم يبرهما فمات فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ومن ذكرت
عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله قل : آمين فقلت : آمين ) (صحيح ابن
حبان)
சலவாத் சொல்வது மிகவும்
முக்கிய சுன்னத்தாக ஆக்கப்பட்ட வெள்ளிக் கிழமை
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ
أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ
وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ
مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا
عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ
وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ
عَلَيْهِمْ السَّلَام (نسائ) إِكْثَارُ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ-كِتَاب الْجُمْعَةِ
வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி நபி ஸல் அவர்கள்
கூறி விட்டு, அன்றைய தினம் என் மீது அதிகம் சலவாத் சொல்லுங்கள். உங்களுடைய சலவாத்
என்னுடைய வஃபாத்துக்குப் பின்பும் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கூறியவுடன்
அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வஃபாத்துக்குப் பின் மண்ணோடு மண்ணாக ஆகி விடுவீர்களே
பிறகு எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று தோழர்கள் கேட்டபோது
நபிமார்களின் உடலை மண் திண்பதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான் என நபி ஸல் கூறினார்கள்.
பாங்கு சொல்லப்பட்ட பின்பு ஓதும் துஆவுக்கு முன்பும் சலவாத்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ
سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ
فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى
عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي
الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ
مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي
الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ (مسلم) بَاب اسْتِحْبَابِ الْقَوْلِ مِثْلِ قَوْلِ
الْمُؤَذِّنِ لِمَنْ سَمِعَهُ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَسْأَلُ اللَّهَ لَهُ الْوَسِيلَةَ-
كِتَاب الصَّلَاةِ
முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் அவர் கூறுவது
போன்றே நீங்களும் கூறுங்கள். அதன் பிறகு என் மீது சலவாத் சொல்லுங்கள் அதன் பிறகு
எனக்கு வஸீலா என்ற ஷஃபாஅத்தை தரும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள். மறுமையில் மாபெரும்
ஷஃபாஅத் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். அது நானாக இருக்க விரும்புகிறேன். எவர்
என் மீது சலவாத் கூறுவாரோ அவருக்கு என்னுடைய ஷஃபாஅத் உறுதியாகி விட்டது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ
النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ
الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا
مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ (باب
الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ .) كتاب الأذان
தம்
மீது சலவாத் கூறுவதால் இந்த உம்மத்துக்கு கிடைக்கும் சிறப்பை அறிந்து அல்லாஹ்வுக்கு
நபி ஸல் நன்றி செலுத்திய விதம்
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ،
قَالَ : كَانَ لاَ يُفَارِقُ النَّبِيَّ صَلَّى الله عَلَيه وسَلَّم أَرْبَعَةٌ ،
أَوْ خَمْسَةٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى الله عَلَيه وسَلَّم لِمَا
يَنُوبُهُ مِنْ حَوَائِجِهِ بِاللَّيْلِ وَالنَّهَارِ ، قَالَ : فَجِئْتُهُ وَقَدْ
خَرَجَ فَاتَّبَعْتُهُ ، فَدَخَلَ حَائِطًا مِنْ حِيطَانِ الأَسْوَاقِ يُصَلِّي ،
فَسَجَدَ ، فَأَطَالَ ، فَبَكَيْتُ وَ قُلْتُ : أَرَى رَسُولَ اللهِ صَلَّى الله
عَلَيه وسَلَّم قَدْ قَبَضَ اللَّهُ رُوحَهُ ، فَرَفَعَ رَأْسَهُ فَدَعَانِي ،
فَقَالَ لِي : مَا شَأْنُكَ ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، أَطَلْتَ
السُّجُودَ ، فَقُلْتُ : قَدْ قَبَضَ اللَّهُ رُوحَ رَسُولِهِ لاَ أَرَاهُ أَبَدًا
، فَقَالَ : سَجَدْتُ شُكْرًا لِرَبِّي فِيمَا أَبْلاَنِي فِي أُمَّتِي ، مَنْ
صَلَّى عَلَيَّ صَلاَةً مِنْ أُمَّتِي كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ
عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ.( : إتحاف الخيرة المهرة)
நபி ஸல் அவர்களைச் சுற்றி எப்போதும் நான்கு அல்லது
ஐந்து பேர் இருப்போம். ஒருமுறை நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். தொழுகையில் சஜ்தா மிக
நீண்டதாக ஆகி விட்டது. நான் அழ ஆரம்பித்து விட்டேன். நபி ஸல் அவர்கள் அல்லாஹ்
அழைத்துக் கொண்டானோ என்று எண்ணி அழுதேன். நீண்ட நேரம் கழித்து நபி ஸல் அவர்கள்
தலையை உயர்த்தினார்கள். என் அழுகைக்குக் காரணம் கேட்க, நான் அதைக் கூறினேன்.
அப்போது நபி ஸல் அவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த இவ்வாறு சஜ்தா
செய்தேன். எவர் என் மீது சலவாத் கூறுவாரோ
அவருக்குப் பத்து நன்மைகள் எழுதப்பட்டு
பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என் உம்மத்துக்கு இத்தகைய நன்மைகள் கிடைக்கச்
செய்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த சஜ்தா செய்தேன் என்றார்கள்
முஸ்லிம்களின் ஒரு சபை
கூடும்போது சலவாத்
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا جَلَسَ قَوْمٌ
مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ ، وَلَمْ يُصَلُّوا فِيهِ عَلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِلا كَانَ عَلَيْهِمْ تِرَةً يَوْمَ
الْقِيَامَةِ ، إِنْ شَاءَ عَفَا عَنْهُمْ ، وَإِنْ شَاءَ أَخَذَهُمْ بِهَا هَذَا
حَدِيثٌ حَسَنٌ (شرح السنة)
عن أبي سعيد قال: ما من قوم يقعدون ثم
يقومون ولا يصلون على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم يوم القيامة حسرة
وإن دخلوا الجنة للثواب (الكتاب : فضل الصلاة على النبي صلى الله عليه وسلم)مؤلف: إسماعيل بن إسحاق القاضي الأزدي:تحقيق الالباني) ( صحيح )
ஒரு சபை ஒன்று கூடி அங்கு சலவாத் சொல்லப்படாமல் அந்த
சபை கலைந்தால் அவர்கள் சுவனம் சென்றாலும் வருத்தப்படுவார்கள். சபைகளில் சலவாத்
சொன்னவர்களுக்கு அல்லாஹ் தந்த சிறப்பைப் பார்த்து...
மன்னர்களை
புகழும் வழமையை மாற்றி அதற்கு பதிலாக சலவாத் கூறும்படி
சட்டம்
இயற்றிய உமரிப்னு அப்துல் அஜீஸ் ரஹ்
كتب عمر بن عبد العزيز:أما بعد فإن أناسا من الناس قد
التمسوا الدنيا بعمل الآخرة وإن الناس من القصاص قد أحدثوا في الصلاة على خلفائهم
وأمرائهم عِدْل صلاتهم على النبي صلى الله عليه وسلم فإذا جاءك كتابي هذا فمُرْهم
أن تكون صلاتهم على النبيين ودعاؤهم للمسلمين عامة ويدعوا ما سوى ذلك (مصنف ابن أبي
شبية
தவாஃபின் போது சலவாத்
قال عمر بن الخطاب: إذا قدمتم فطوفوا بالبيت سبعا وصلوا عند
المقام ركعتين ثم أتوا الصفا فقوموا من حيث ترون البيت فكبروا سبع تكبيرات بين كل
تكبيرتين حمد لله وثناء عليه وصلاة على النبي صلى الله عليه وسلم ومسألة لنفسك وعلى المروة مثل ذلك (الكتاب :
فضل الصلاة على النبي صلى
الله عليه وسلم)(صحيح)
துஆ
ஓதத் துவங்குவதற்கு முன்பும், துஆ ஓதிய பின்பும் ஹம்து, சலவாத் சொல்வது
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ
رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا
صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدْ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ
ثُمَّ ادْعُهُ قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ
وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ (ترمذي)
بَاب مَا جَاءَ فِي جَامِعِ الدَّعَوَاتِ-كتاب الدعوات- عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَجْعَلُونِي كَقَدَحِ
الرَّاكِبِ، إِنَّ الرَّاكِبَ يَمْلَأُ قَدَحَهُ مَاءً ثُمَّ يَضَعُهُ، ثُمَّ
يَأْخُذُ فِي مَعَالِيقِهِ حَتَّى إِذَا فَرَغَ جَاءَ إِلَى الْقَدَحِ، فَإِنْ
كَانَ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ شَرِبَ، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي
الشَّرَابِ تَوَضَّأَ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الْوُضُوءِ أَهْرَقَهُ
، وَلَكِنِ اجْعَلُونِي فِي أَوَّلِ الدُّعَاءِ وَفِي آخِرِ الدُّعَاءِ (شعب
الايمان)
கருத்து- ஒரு பயணி தான் கொண்டு வந்த தண்ணீரில் தன்
தேவைகளையெல்லாம் நிறைவு செய்த பின் மிச்சமிருக்கும் கடைசி தண்ணீரை இது வேண்டாம்.
தேவையில்லை என்று கீழே ஊற்றுவது போல் துஆவின் கடைசியில் சலவாத் தேவையில்லை என்று
நினைத்து விடாதீர்கள்
ஹஜ்ரத் ஃபழாலத்திப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள்
புரிவாயாக!” என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்)
அவர்கள், தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத்
தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக!” என்று
சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள்
மீது ஸலவாத் சொன்னார்’.நபி (ஸல்) அவர்கள் அவரிடம், இப்பொழுது துஆக் கேளும், ஏற்கப்படும் என்று கூறினார்கள்.
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ
مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى
تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ترمذي
நாயகம் ஸல் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா
துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த
திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத்
ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.
عن عبد الله بن أبي بكر قال : كنا بالخيف ومعنا عبد الله ابن
أبي عتبة : فحمد الله وأثنى عليه وصلى على النبي صلى الله عليه و سلم ودعا بدعوات
ثم قام فصلى بنا (الكتاب
: فضل الصلاة على النبي صلى الله
عليه وسلم)
ஜனாஸா தொழுகையில் சலவாத்
عن الشعبي قال:أول تكبيرة
من الصلاة على الجنازة ثناء على الله عز وجل
والثانية صلاة على النبي صلى الله عليه و سلم والثالثة دعاء للميت والرابعة السلام (فضل الصلاة
ஷாஃபியீ) குனூத்தின் போது நபி ஸல்
அவர்களின் மீது சலவாத்
عن قتادة عن عبد الله بن الحارث: أن أبا حليمة معاذ كان يصلي على
النبي صلى الله عليه وسلم في القنوت (الكتاب:فضل الصلاة على النبي صلى الله عليه وسلم
இப்னு உமர் ரழி
பிரயாணத்தில் இருந்து எப்போது திரும்பினாலும் முதலில் நபியவர்களின் கப்ருக்கு
வந்து சலாம் சொல்வார்கள்
عن عبد الله بن دينار قال : رأيت ابن
عمر إذا قدم من سفر دخل المسجد فقال : السلام عليك يا رسول الله السلام على أبي
بكر السلام على أبي ويصلي ركعتين (الكتاب:فضل الصلاة على النبي صلى الله عليه وسلم) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ عَبْدٍ يُسَلِّمُ
عَلَيَّ عِنْدَ قَبْرِي إِلَّا وَكَّلَ اللهُ بِهَا مَلَكًا يُبَلِّغُنِي، وَكَفَى
أَمْرَ آخِرَتِهِ وَدُنْيَاهُ وَكُنْتُ لَهُ شَهِيدًا وَشَفِيعًا يَوْمَ
الْقِيَامَةِ (شعب الايمان للبيهقي)
இம்மை, மறுமையின் கவலைகளைப்
போக்கும் சலவாத்
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ
فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا اللَّهَ اذْكُرُوا اللَّهَ جَاءَتْ
الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ جَاءَ
الْمَوْتُ بِمَا فِيهِ قَالَ أُبَيٌّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُكْثِرُ
الصَّلَاةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِي فَقَالَ مَا شِئْتَ قَالَ
قُلْتُ الرُّبُعَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ
النِّصْفَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قَالَ قُلْتُ
فَالثُّلُثَيْنِ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ
أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا قَالَ إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ
ذَنْبُكَ (ترمذي)كتاب صفة
القيامة - الراجفة النفخة الأولى التى يموت لها الخلائق -
الرادفة النفخة الثانية التى يحيون لها
يوم القيامة وفي مصنف عبد الرزاق والبزار (إذن
يكفيك الله هم الدنيا وهم الآخرة )
உபையிப்னு கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், யாரஸூலல்லாஹ், நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓத
விரும்புகிறேன். நான் துஆ, திக்ரு செய்யும் நேரத்தில் ஸலவாத்துக்காக எவ்வளவு நேரத்தை
நிர்ணயிப்பது?’ என்று
கேட்டேன். நீர் விரும்பிய அளவு” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
யாரஸூலல்லாஹ், நான்கிலொரு
பகுதி நேரம்?’ என்றேன்.
நீர் எவ்வளவு விரும்புவீரோ அவ்வளவு அதிகப்படுத்தினால் உமக்கு நல்லது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பாதி நேரம் ஒதுக்கட்டுமா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது” என நபி
(ஸல்) அவர்கள் நவின்றார்கள். மூன்றில் இரு பகுதிகள் ஒதுக்கவா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது
என்றார்கள். என் நேரம் முழுவதையும் தங்கள் மீது ஸலவாத் சொல்ல நிர்ணயித்துக்
கொள்கிறேன்” என்றேன். அப்படிச் செய்தீரென்றால், அல்லாஹுதஆலா உமது சகல கவலைகளையும்
தீர்த்துவைப்பான், உமது
பாவமும் மன்னிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ : 2754)
உலகின் எந்த மூலையில்
இருந்து கொண்டு நாம் சலவாத் சொன்னாலும் நபி ஸல் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது
عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَكِيعٌ إِنَّ لِلَّهِ فِي
الْأَرْضِ مَلَائِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ (مسند
أحمد) مُسْنَدُ
عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه- عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَتَّخِذُوا قَبْرِي
عِيدًا وَلَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَحَيْثُمَا كُنْتُمْ فَصَلُّوا
عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي (مسند أحمد) مُسْنَدُ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلّهِ
سَيَّارَةً مِّنَ الْمَلاَئِكَةِ يَطْلُبُونَ حِلَقَ الذِّكْرِ فَإِذَا أَتَوْا
عَلَيْهِمْ وَحَفُّوا بِهِمْ ثُمَّ بَعَثُوا رَائِدَهُمْ إِلَي السَّمَاءِ إِلَي
رَبِّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَي فَيَقُولُونَ: رَبَّنَا أَتَيْنَا عَلَي
عِبَادٍ مِنْ عِبَادِكَ يُعَظِّمُونَ آلاَءَكَ وَيَتْلُونَ كِتَابَكَ وَيُصَلُّونَ
عَلَي نَبِيِّكَ مُحَمَّدٍ ﷺ وَيَسْاَلُونَكَ لِآخِرَتِهِمْ وَدُنْيَاهُمْ
فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَيَقُولُونَ يَا رَبِّ
إِنَّ فِيهِمْ فُلاَناً الْخَطَّاءُ إِنَّمَا اِعْتَنَقَهُمْ اِعْتِنَاقاً
فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَهُمُ الْجُلَسَاءُ لاَ
يَشْقَي بِهِمْ جَلِيسُهُمْ.
(بزار
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
திக்ருடைய சபைகளைத் தேடி மலக்குகளின் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து
கொண்டிருக்கும், திக்ருடைய
சபைகளுக்கு அவர்கள் வந்துவிட்டால் சபையிலுள்ளோரைச் சூழ்ந்து கொள்கிறார்கள், தங்களின் சார்பாக தங்களில் ஒருவரை
அல்லாஹ்விடம் தூது அனுப்புகிறார்கள், எங்கள் இரட்சகனே! உன்னுடைய பாக்கியங்களைப்
பெருமைப்படுத்தியும், உன் வேதத்தை ஓதிக்கொண்டும், உன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது
ஸலவாத் ஓதியும், தமது
இம்மை மறுமையின் நலவுகளை உன்னிடம் வேண்டுகின்ற உனது அடியார்களிடமிருந்து நாங்கள்
வந்துள்ளோம்” என்பார்கள், அவர்களை எனது அருளைக் கொண்டு மூடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். எங்கள் இரட்சகா!
அவர்களுடன் ஒரு பாவியும் உள்ளான்!’ என மலக்குகள் சொல்வர், அவர்கள் அனைவரையும் எனது அருளை கொண்டு
மூடுங்கள், காரணம்
இச்சபையினருடன் அமர்பவனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) விலக்கப்படமாட்டான்” என்று
அல்லாஹ் கூறுவான்.
நபி ஸல் அவர்களின் புகழை அல்லாஹ் இன்னும்
பல்வேறு வகையிலும் சிறப்பாக்கியுள்ளான்.
மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச்
சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள்
மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை
பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும்,
அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும்
வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகம் அந்த
நூறு மனிதர்கள்.அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000
மனிதர்களில்
சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு
மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள்,
அரசியல்
தலைவர்கள் மற்றும் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும்
இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான
அம்சமாகும். இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப் படுத்திய விதம் குறித்து பல்வேறு
கருத்துக்களும் மறுப்புகளும் சில
மதவாதிகளால்
எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்து கிருத்துவ
கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம்.
பெரும்பான்மையான கிருத்தவர்கள்
மத்தியில்
வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில்
உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட்.
நபி ஸல் அவர்களைப் பற்றி பிற மத தலைவர்களின் கருத்து
பலாச்சுளையை
சுவைக்க முற்படுவோர், முதலில் மேல்
தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பின்
சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோல் மதக்கருத்துக்களையும்
உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காக பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்
கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக்
கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான்
இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா
நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது.
ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள்
நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து
பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்,
எல்லாப் பிரச்சினைகளுக்கும்
விடை காணமுடியும்.
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மத் அவர்களுக்கும் எனது
விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்கி ஒரேவிதமான
ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. –
நெப்போலியன்
முஹம்மத் நபியின் நற்குணங்கள் எனக்கு பிடித்திருக்கின்றன.
மனித வாழ்க்கை பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். கூடியவிரைவில்
பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று நம்புகிறேன். –
பெர்னாட்ஷா
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த
சீர்த்திருத்தங்களை பின் பற்றி நடக்க வேண்டும். – மகாத்மா காந்தி
மேலைநாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபிய பாலைவனத்தில் நபிகள் நாயகம் அவர்களால் விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சகங்களேயன்றி புதியது ஒன்றுமில்லை.– சரோஜினி நாயுடு