23-09-2022 |
|
بسم الله
الرحمن الرحيم பரக்கத்தான அதிகாலை நேரம் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
அதிகாலை நேரத்தில் நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு
எழுப்பி அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர
வேண்டும். அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம்
பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை
மதரஸாக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை
கண்டதையும் பார்த்து விட்டு பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை
எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால்
மார்க்கக் கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை
மாற ஒரே வழி இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு
எழுப்புவது தான்.
அதிகாலை நேரத்தின் மகத்துவம்
أَقِمِ الصَّلَاةَ
لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ
الْفَجْرِ كَانَ مَشْهُودًا (78) الاسراء
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ
وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْعَصْرِ وَصَلَاةِ الْفَجْرِ ثُمَّ يَعْرُجُ
الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِكُمْ فَيَقُولُ
كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ
وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ (بخاري
7429
சுருக்கம்- மனிதர்களின் நன்மைகளைப் பதிவு செய்யும் மலக்குமார்கள் பகலில் ஒரு
குழுவினர் இரவில் மற்றொரு குழுவினர் என இரு பிரிவாக உள்ளனர். இந்த இரு குழுவினரும்
ஒன்று சேரும் நேரங்களாக ஃபஜ்ரும் அஸரும் உள்ளன. இரவில் நன்மைகளைப் பதிவு செய்த
மலக்குகள் அதிகாலை ஃபஜ்ரின் நேரத்தில் இங்கிருந்து புறப்படுவார்கள். அவர்கள்
அல்லாஹ்வை சந்தித்து மனிதர்களின் நன்மைகளைப் பற்றிக் கூறும்போது அல்லாஹ்
மலக்குகளிடம் நீங்கள் இங்கு வரும்போது என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்று கேட்பான். உன் அடியார்கள் உன்னைத் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை
விட்டு வந்தோம் என மலக்குள் பதில் கூறுவார்கள்.
அல்லாஹ் தன் படைப்புகளில் சிறந்தவைகளைக் கொண்டு தான் சத்தியம் செய்வான்
وَالْفَجْرِ
(1) وَلَيَالٍ عَشْرٍ (2)
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ (المدثر34)- وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
(سورة التكوير18)-
அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...
நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக்
கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும்
அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக
இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின்
ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.
ஒரு
விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது
பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில் இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது,
தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள்.
பெண்களின்
வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை
சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில்
உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை
சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து
குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை
சமச்சீராக இருக்கும்.
அதிகாலையின் மகத்துவத்தை மனிதர்களை விட மற்ற உயிரினங்கள்
நன்கு அறிந்து வைத்துள்ளன.
أَلَمْ تَرَ أَنَّ
اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ
كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
(41)النور
மேற்படி வசனத்தின் அடிப்படையில் பறவைகளும் தஸ்பீஹ்
செய்கின்றன என்று அறிய முடிகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலை நேரத்தில் தான் அதிகமாக பறவைகள் தஸ்பீஹ்
செய்வதை நாம் பார்க்க முடியும்.
அதிகாலை
நேரத்தில் மலக்குகளின் அதிகப்படியான வருகையை அறிந்து சேவல் கூறுகிறது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ
فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ
فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ فَإِنَّهُ رَأَى شَيْطَانًا (بخاري)
باب خَيْرُ مَالِ الْمُسْلِمِ- كتاب بدء الخلق-قَالَ عِيَاض: كَانَ السَّبَب فِيهِ
رَجَاء تَأْمِين الْمَلَائِكَة عَلَى دُعَائِهِ وَاسْتِغْفَارهمْ لَهُ
وَشَهَادَتهمْ لَهُ بِالْإِخْلَاصِ
وَيُؤْخَذ مِنْهُ اِسْتِحْبَاب الدُّعَاء عِنْد حُضُور الصَّالِحِينَ تَبَرُّكًا
بِهِمْ (فتح الباري)
சேவல் கூவுவதைக் கேட்டால்
அல்லாஹ்விடம் அருளை வேண்டுங்கள். ஏனெனில் அது அதிகாலையின் மலக்குகளைக் கண்ணால்
கண்டு கூவுகிறது. கழுதையின் சப்தம் கேட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்பை வேண்டுங்கள்.
ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டு கத்துகிறது.
நல்லோர்கள் இருக்கும்
இடத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்கும். ஆகவே
அருளை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் என்பதும், தீயோர்கள்
இருக்குமிடத்தில் அல்லாஹ்வின் சாபம் இறங்கும். ஆகவே அதை விட்டும் அல்லாஹ்விடம்
பாதுகாவல் தேடவேண்டும் என்ற படிப்பினையும் இதில் உண்டு- மிர்காத் ஃபத்ஹுல்
பாரீ அதிகாலை
சுஃப்ஹு தொழுது விட்டுத் தொடங்கும் வியாபாரம் பரக்கத்தாக இருக்கும்.
عَنْ
صَخْرٍ الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا
وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ
وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ
النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابوداود)
அதிகாலை நேரத்தில் என் உம்மத்தினருக்கு பரக்கத் செய்வாயாக
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். அவர்கள் ஏதேனும்
படையை அனுப்புவதாக இருந்தாலும் காலை நேரத்தில் அனுப்புவார்கள். இதனடிப்படையில்
ஸஹ்ருல் ஙாமிதீ ரழி என்ற நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த
துஆவைக் கொண்டு பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வியாபாரச் சரக்குகளை
காலையில் சுப்ஹு முடித்துவிட்டு அனுப்புபவராக இருந்தார். அதனால் அவருடைய வருமானம்
பெருகியது.
குறிப்பு-
நமக்குச் சொல்லப்பட்டதை நாம் விட்டு விட்டோம். ஆனால் இன்று மற்றவர்கள் அதை கடை
பிடிக்கிறார்கள். இன்று பிராமணர்கள் உலக அளவில் முன்னேறி வருகிறார்கள் என்றால்
அவர்கள் அதிகாலை நேரத்தோடு எழுகிறார்கள் என்பதும் முக்கிய காரணம். ஆனால் இன்று
நம்மில் பலர் எழுவதே 7 அல்லது 8 மணிக்குத் தான்.
சுப்ஹுத் தொழுகையின்
முக்கியத்துவம்
عَنْ أَبِي
هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ
اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ
فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ
فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي
وَجْهِهِ الْمَاءَ (ابوداود)
எவர்
அதிகாலையில் எழுந்து தன் மனைவியையும் எழுப்பி தொழச் செய்கிறாரோ மேலும் அவள்
எழுந்திருக்கா விட்டால் நீரை முகத்தில் தெளித்து எழுப்புகிறாரோ அவர் மீது அல்லாஹ்
அருள் புரிவானாக எந்த மனைவி அதிகாலையில் எழுந்து தன் கணவரையும் எழுப்பி தொழச்
செய்கிறாரோ மேலும் அவர் எழுந்திருக்கா விட்டால் நீரை முகத்தில் தெளித்து எழுப்புகிறாரோ
அத்தகைய மனைவி மீதும் அல்லாஹ் அருள்
புரிவானாக.
உமர் ரழி தன் ஆட்சியில் சுப்ஹுக்கு ஒருவர் வரா விட்டாலும் அதைக்
கண்காணிப்பவர்களாக இருந்தார்கள்
عَنْ أَبِى بَكْرِ
بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِى حَثْمَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ
سُلَيْمَانَ بْنَ أَبِى حَثْمَةَ فِى صَلاَةِ الصُّبْحِ وَأَنَّ عُمَرَ بْنَ
الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ - وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ
وَالْمَسْجِدِ النَّبَوِىِّ - فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ
لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِى الصُّبْحِ فَقَالَتْ إِنَّهُ بَاتَ يُصَلِّى
فَغَلَبَتْهُ عَيْنَاهُ. فَقَالَ عُمَرُ لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ فِى
الْجَمَاعَةِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً. (مؤطا
சுலைமான்
என்பவர் ஒருநாள் மட்டும் சுப்ஹு தொழுகைக்கு வரவில்லை. அதன்பிறகு கடைவீதியில் அவரது
தாயாரைக் கண்டு இன்று ஏன் உங்கள் மகன் சுப்ஹு தொழுகைக்கு வரவில்லை என்று கேட்க,
என் மகன் இரவு முழுவதும் தொழுதார். களைப்பில் சுப்ஹு தொழாமல் தூங்கி விட்டார்
என்று தாயார் பதில் கூறினார்கள். அதற்கு உமர் ரழி அவர்கள் இரவெல்லாம் வணங்கும்
வணக்கத்தை விட சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது என்று
கூறினார்கள்.
சுப்ஹு தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்.
عَنْ أَنَسِ بْنِ
سِيرِينَ قَالَ سَمِعْتُ جُنْدَبَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي
ذِمَّةِ اللَّهِ فَلَا يَطْلُبَنَّكُمْ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ
فَيُدْرِكَهُ فَيَكُبَّهُ فِي نَارِ جَهَنَّمَ (مسلم 1050
சுப்ஹு தொழுதவுடன் மஸ்ஜிதில் சற்று நேரம் அமர்ந்து வணக்க ரீதியான காரியங்களில்
ஈடுபடுவது
عَنْ
جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ
حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ (ابوداود)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ரு தொழுதவுடன்
அதே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்து உபதேசம் செய்வது போன்ற அமல்களில்
ஈடுபடுவார்கள்.
عَنْ
عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا غَنَائِمَ
كَثِيرَةً وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَقَالَ رَجَلٌ مِمَّنْ لَمْ يَخْرُجْ مَا
رَأَيْنَا بَعْثًا أَسْرَعَ رَجْعَةً وَلَا أَفْضَلَ غَنِيمَةً مِنْ هَذَا
الْبَعْثِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا
أَدُلُّكُمْ عَلَى قَوْمٍ أَفْضَلُ غَنِيمَةً وَأَسْرَعُ رَجْعَةً قَوْمٌ شَهِدُوا
صَلَاةَ الصُّبْحِ ثُمَّ جَلَسُوا يَذْكُرُونَ اللَّهَ حَتَّى طَلَعَتْ عَلَيْهِمْ
الشَّمْسُ أُولَئِكَ أَسْرَعُ رَجْعَةً وَأَفْضَلُ غَنِيمَةً (ترمذي)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை நஜ்துக்கு
ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் சீக்கிரம் திரும்பியதுடன் நிறைய போர்ச்
செல்வங்களையும் கொண்டு வந்தார்கள். மக்கள் அவர்களின் விரைவான வருகையைக் கண்டு
ஆச்சரியம் அடைந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விடவும் சிறந்த
ஒன்றை அறிவிக்கட்டுமா அதாவது குறைந்த நேரத்தில் நிறைவான பலன்களைப் பெறும் வழியை
அறிவிக்கட்டுமா என்று கூறி, யார் ஃபஜ்ரு தொழுகையை முடித்து விட்டு அதே இடத்தில்
அமர்ந்து அமல்களில் ஈடுபடுவாரோ அவர் குறைந்த நேரத்தில் நிறைவான பலன்களைப் பெறுபவர்
என்றார்கள்.
ஒரு காலத்தில்
மின்சாரம் இல்லாத போது மக்கள் நேரத்தோடு உறங்கி, அதிகாலை நேரத்தோடு எழுந்தார்கள்.
அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்று இரவை பகலாக ஆக்கும் மின்சாரம்
வந்தது. அதனால் மக்களின் தூக்க நேரமும்
தாமதமானது. பாதி இரவுக்குப் பின்னால் உறங்கி
பாதி பகல் முடிந்த பின் எழுந்திருக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது.
உதாரணமாக ஒருவர் 10-ம் தேதி இரவு 12 மணிக்குத் தான் உறங்குகிறார் என்றால்
உண்மையில் அவர் 11-ம் தேதி ஆரம்பித்த பிறகு தான் அவர் உறங்குகிறார்.
இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நபிமொழி
عَنْ
أَبِي بَرْزَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا (أي قبل العشاء
وَالْحَدِيثَ بَعْدَهَا..(بخاري)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழாமல்
தூங்குவதையும் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதையும் தடுத்தார்கள்
لِأَنَّ النَّوْم قَبْلَهَا
قَدْ يُؤَدِّي إِلَى إِخْرَاجهَا عَنْ وَقْتهَا مُطْلَقًا أَوْ عَنْ الْوَقْت
الْمُخْتَار وَالسَّمَر بَعْدَهَا قَدْ يُؤَدِّي إِلَى النَّوْم عَنْ الصُّبْح
أَوْ عَنْ وَقْتهَا الْمُخْتَار أَوْ عَنْ قِيَام اللَّيْل (فتح الباري)
இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதால் அதிகாலையில்
எழுந்திருக்க முடியாமல் போகலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு தடுத்தார்கள். ஃபத்ஹுல்
பாரீ
அன்றைய காலத்தில் கூறப்பட்ட வீண் பேச்சுக்கள் என்ற
பட்டியலில் இன்றுள்ள பொழுது போக்கு சாதனங்களும் அடங்கும். இத்தகைய பொழுது போக்கு
சாதனங்களால் இன்று மக்களின் தூக்கம் தாமதமாகி விட்டது
عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ قَال:رَأَيْتُ
عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ
النَّاسَ عَلَى الْحَدِيثِ بَعْدَ الْعِشَاءِ وَيَقُولُ:أَسَمَرٌ أَوَّلَ
اللَّيْلِ وَنَوْمٌ آخِرَهُ ؟(مصنف ابن ابي شيبة)-
உமர் ரழி அவர்கள் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள்
பேசுபவர்களை அடிப்பவர்களாக ஆயிருந்தார்கள். மேலும் இரவில் துவக்கத்தில்
தூங்குவதற்கு பதிலாக பேசிக் கொண்டிருந்து விட்டு இரவில் கடைசிப் பகுதியில் தூங்கப்
போகிறீர்களா என்றும் கண்டிப்பார்கள்.
عَنْ
أَبِي وَائِلٍ وَإِبْرَاهِيمَ قَالاَ: جَاءَ رَجُلٌ إِلَى حُذَيْفَةَ فَدَقَّ
الْبَابَ فَخَرَجَ إِلَيْهِ حُذَيْفَةُ فَقَالَ:مَا جَاءَ بِكَ ؟فَقَالَ:جِئْت
لِلْحَدِيثِ فَسَفَقَ حُذَيْفَةُ الْبَابَ دُونَهُ ثُمَّ قَالَ:إِنَّ عُمَرَ جَدَبَ لَنَا
السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ(مصنف ابن ابي شيبة
ஹுதைபா ரழி அவர்களிடம் இரவில் ஒருவர் வந்து தகவைத்
தட்டினார். ஹுதைபா ரழி வெளியே வந்து இந்த நேரத்தில் எதற்காக வந்தீர்கள் என்று
கேட்க, உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வந்தேன் என்றார். அப்போது ஹுதைபா ரழி அவர்கள்
(அவரைக் கண்டிக்கும்
விதமாக) உமர் ரழி இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள்
பேசுவதை முற்றிலும் தடை செய்தார்கள் என்று கூறி விட்டு கதவைச் சாத்திக்
கொண்டார்கள்.
وَقَدِ
اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم
وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِى السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ
الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ
وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِى مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ
مِنَ الْحَوَائِجِ (ترمذي)
மார்க்க விஷயங்களுக்காக சில நேரம் விழித்திருக்கும் தேவை
ஏற்பட்டால் தவறில்லை
இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் என நமக்கு கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு
நேர் மாற்றமாக இன்று....
இரவு 7 மணிக்கு மேல் தான் முக்கியமான சீரியல்கள் ஒலி பரப்பப்படுகிறது. 11 மணி
வரை அவைகளை பார்த்து முடிக்காமல் பெரும்பாலான பெண்களுக்கு தூக்கம் வருவதில்லை.
இந்த சீரியல்கள் வருவதற்கு முன்பாவது கொஞ்சம் சீக்கிரம் தூங்கும் பழக்கம்
இருந்தது. இவைகள் வந்த பின்பு தூங்குவதற்கு இன்னும் தாமதமாகுவது மறுக்க முடியாத விஷயம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் பெண்களும், குழந்தைகளும் சீக்கிரம்
தூங்கி விடுவார்கள்
عَنْ
عَائِشَةَ رضي الله عنها قَالَتْ أَعْتَمَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالْعِشَاءِ
وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فَلَمْ يَخْرُجْ حَتَّى قَالَ عُمَرُ
نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ فَخَرَجَ فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ مَا
يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرَكُمْ (بخاري-
இரவில் சீக்கிரம் தூங்காமல், காலையில் நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும்
தீமைகள்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ
أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ
لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ
عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ
فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ
كَسْلَانَ.(بخاري)
ஷைத்தான் நீங்கள் தூங்கும்போது உங்களின் பிடரியில்
முடிச்சுப் போடுகிறான். இரவு நீளமாக உள்ளது. நன்றாக (விடியும் வரை)
தூங்கு என (மனிதனை மயக்கி வைக்கிறான்)
எப்போது ஒருவர் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை நினைப்பாரோ அப்போது முதல் முடிச்சு
அவிழும். எப்போது அவர் உளூச் செய்வாரோ
அப்போது இரண்டாவது முடிச்சு அவிழும். எப்போது அவர் ஃபஜ்ரு தொழுவாரோ அப்போது
மூன்றாவது முடிச்சு அவிழும். இம்மூன்றும் நடைபெறா விட்டால் அன்று முழுவதும்
ஷைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ளவராகவே இருப்பார்.
عن عَبْدَ اللهِ بْنَ
عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "النَّوْمُ
ثَلَاثَةٌ: فَنَوْمٌ خَرَقٌ، وَنَوْمٌ خَلَقٌ، وَنَوْمٌ حُمْقٌ، فَأَمَّا نَوْمُ
خَرَقٍ: فَنَوْمَةُ الضُّحَى يَقْضِي النَّاسُ حَوَائِجَهُمْ وَهُوَ نَائِمٌ،
وَأَمَّا نَوْمُ خَلَقٍ: فَنَوْمَةُ الْقَايِلَةِ نِصفِ النَّهَارِ، وَأَمَّا
نَوْمَةُ حُمْقٍ: نَوْمَةٌ حِينَ تَحْضُرُ الصلَاةُ ؟(مصنف
ابن ابي شيبة)
விளக்கம்-பண்புள்ள தூக்கம் என்றால் மதிய நேரத்தில் தூங்கும் கைலூலா தூக்கம்.
இது சுன்னத். 2,மடத்தனத் தூக்கம் என்றால் காலை நேரத்தில் தூங்குவது 3, மந்த புத்தியை ஏற்படுத்தும் தூக்கம் தொழுகை
நேரத்தில் தூங்குவது
கைலூலா தூக்கம் நல்லது.
عَنِ ابْنِ عَبَّاسٍ ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ , وَبِقَيْلُولَةِ
النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ.(ابن خزيمة
القيلولة وهي النوم
نصف النهار . (شرح النووي
சஹர் உண்ணுவதை நோன்புக்கு உறுதுணையாக ஆக்கிக்
கொள்ளுங்கள். கைலூலா தூக்கத்தை தஹஜ்ஜுத் தொழுகைக்கு உறுதுணையாக ஆக்கிக்
கொள்ளுங்கள். விளக்கம்- பகலில் சிறிது தூங்குவது அதிகாலையில் எழுந்து தஹஜ்ஜுத்
தொழுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
عن
سويد العدوى قال : كنا نصلى مع عمر بن الخطاب الظهر ثم نروح إلى رحالنا فنقيل( كنز
العمال)
நாங்கள் உமர் ரழி அவர்களுடன் இருந்த
போது சில நேரங்களில் லுஹருக்குப் பின்னாலும் கைலூலா தூங்குபவர்களாக இருந்தோம்
عن
أنس بن مالك قال: كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثم نَرجع
فنَقيلُ ( كنز العمال) نوم القيلولة وهي الفترة بين
الظهر والعصر
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஜும்ஆத் தொழுத பின் கைலூலா
தூங்குபவர்களாக இருந்தோம்
மக்களிடம்
பழமை மறைந்து புதியகண்டு பிடிப்புகள் உருவாகும்போது அதனால் நன்மை இருப்பினும்
தீமைகளும் உள்ளன. ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளை தாங்களே செய்தார்கள்.
அதனால் அவரகளின் உடலில் ஆரோக்கியம் இருந்தது. இன்று உட்கார்ந்த இடத்தில் இருந்து
பட்டனை தட்டினால் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என்கிற அளவுக்கு நவீன
சாதனங்கள் பெருகியது. அதனால் பெண்களின் உடம்பில் ஆரோக்கியம் குறைந்தது. தற்போது
பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் சிசேரியன் மூலம் பிறப்பதற்கு இதுவும்
காரணம்.
ஒரு காலத்தில்
குதிரையிலும், ஒட்டகத்திலும், மாட்டு வண்டியிலும் மக்கள் பிரயாணம் செய்தார்கள்.
அப்போது விபத்துகள் இல்லை. ஒரு மாட்டு
வண்டியும், இன்னொரு மாட்டு வண்டியும் மோதி இத்தனை பேர் இறந்தார்கள் என்று
சரித்திரம் இல்லை. ஆனால் இன்று கார், பைக், விமானம், பஸ் என நவீன வாகனங்கள் வந்தன.
அதனால் மக்களிடம் சிரமங்கள் குறைந்தாலும் விபத்துகள் பெருகி விட்டன.
ஒரு காலத்தில்
மக்கள் சாப்பிடுவதற்கு தட்டு, டம்ளரை பயன்படுத்தினார்கள். இன்று ஒரு தடவை
உபயோகித்த பொருளை மறுமுறை உபயோகிக்காத அளவுக்கு (USE AND THROW) எல்லாமே
பிளாஸ்டிக் மயம். அதனால் மக்களின் வேலை இலகுவாக முடிந்தாலும் பூமிக்கு ஆபத்தும்
அதனால் வந்தது. ஒரு வாழைப்பழத் தோல் பூமிக்குள் புதைந்தால் ஒரு வாரத்தில்
மக்கிப்போய் விடும். காகிதப்பை PAPER
பூமிக்குள் புதைந்தால் ஒரு மாதத்தில் மக்கிப்போய் விடும். பருத்தித் துணி பூமிக்குள் புதைந்தால் 5 மாதங்களிலும்,
கம்பளி ஆடை பூமிக்குள் புதைந்தால் 12 மாதங்களிலும், மரக்கட்டை பூமிக்குள்
புதைந்தால் 10 முதல் 15 ஆண்டுகளிலும், தோல் பொருட்கள் பூமிக்குள் புதைந்தால் 40
முதல் 50 ஆண்டுகளிலும், தகர பாத்திரம் பூமிக்குள் புதைந்தால் 50 முதல் 100
ஆண்டுகளிலும், அலுமினிய பாத்திரம் பூமிக்குள் புதைந்தால் 200 முதல் 500
ஆண்டுகளிலும் மக்கிப்போய் விடும். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்குள்
புதைந்தால் அவைகள் மக்கிப்போக 10 லட்சம் வருடங்களாகும்
இவ்வாறு பழமைகள் மறைந்து புதுமைகள் உருவாகும்போது
ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாத போது
மக்கள் நேரத்தோடு உறங்கி, அதிகாலை நேரத்தோடு எழுந்தார்கள். அதனால் ஆரோக்கியமாக
இருந்தார்கள். ஆனால் இன்று இரவை பகலாக ஆக்கும் மின்சாரம் வந்தது. அதனால் மக்களின் தூக்க நேரமும் தாமதமானது. ஆரோக்கியமும்
குறைந்தது.
Jazakallah Khair
பதிலளிநீக்கு