வியாழன், 15 செப்டம்பர், 2022

மத நல்லிணக்கத்திற்கும் வரையறை உண்டு

 


16-09-2022

 

 

 بسم الله الرحمن الرحيم 

மத நல்லிணக்கத்திற்கும் வரையறை உண்டு

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



மத நல்லிணக்கத்தைப் பேணுகிறோம் என்ற பெயரில் சில பெயர் தாங்கி முஸ்லிம்கள் முற்றிலுமாக மாற்று மதக் கலாச்சாரத்திற்கே மாறி விடுகின்றனர். கடந்த வாரம் நடந்த வினாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் சிலையை கையில் வைத்துக் கொண்டு சில பெயர் தாங்கி முஸ்லிம்கள் நாங்கள் சமய நல்லிணக்கத்தைப் பேணுகிறோம் என்று பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி மீடியாக்களும் இதைப் பெரிது படுத்தி மாற்றார்களுடன் சேர்ந்து வினாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுபவர்கள் மட்டுமே மத நல்லிணக்கம் பேணுபவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதை விபரிப்பது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமான விஷயமாகும். மத நல்லிணக்கம் மிகவும் தேவை. அதுவும் தற்போது முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரித்துக் காட்டி முஸ்லிம்கள் மீது நல்ல அபிப்ப்பிராயம் கொண்டுள்ள இந்து சகோத ர ர்களின் மனதையும் மாற்றி வரும் சூழ்நிலையில் மத நல்லிணக்கம் தேவை. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு.               

 

பொதுவான விஷயங்களில் உதவி உபகாரம் போன்றவைகளில் மத நல்லிணக்கம் பேண வேண்டும்

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ  (9)الممتحنة

 

 

மராட்டிய மன்னன் சிவாஜியின் மத உணர்வுகளை அவுரங்கசீப் அவர்கள் அரசர் என்ற அடிப்படையில் மதித்து நடந்தது முற்றிலும் அவர்கள் பக்கம் சாய்ந்து விட்டதாக ஆகாது

இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.                         

இஸ்லாமிய ஆட்சியில் மற்றவர்களுக்கான மத சுதந்திரத்தை வழங்குவது  இணைவைப்புக்குத் துணை போவதாக ஆகாது.

ஜெரூசலம் வெற்றி கொள்ளபட்ட போதும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் ஆலயங்களும் முழுமையான பாதுகாப்பு உண்டு. என்று எழுதிக் கொடுத்த உமர் ரழி.. அவர்கள்

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقة ظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهم وطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لا تُسَكَّن كنائسُهم ولا تُهْدَمُ ولا يُنقَضُ منها ولا من صلبانهم ولا شيء من أموالهم ولا يُكْرَهون على دينهم ولا يُضَارّ أحد منهم(دروس التاريخ

முஸ்லிமுக்கும் யூதனுக்குமான பிரச்சினையில் உண்மை யூதனின் பக்கம் இருந்ததால் அவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்த உமர் ரழி

 

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رض اخْتَصَمَ إِلَيْهِ مُسْلِمٌ وَيَهُودِيٌّ فَرَأَى عُمَرُ أَنَّ الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ رض بِالدِّرَّةِ(1 (ثُمَّ قَالَ وَمَا يُدْرِيكَ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ إِنَّا نَجِدُ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تَرَكَ الْحَقَّ عَرَجَا وَتَرَكَاهُ   1206مؤطا مالك    

 

وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟  (دروس التاريخ الاسلامي)

உமர் ரழி அவர்களின் ஆட்சியில் எகிப்தின் ஆளுனராக இருந்த அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மத த்தவரை அடித்து விட்டார். அடி வாங்கிய அவர் நேராக அம்ருப்னுல் ஆஸ் அவர்களிடம் கூற சொல்லாமல் உமர் ரழி அவர்களிடம் வந்து புகார் கூறினார். உடனே உமர் ரழி அந்த மகனையும் அழைத்துக் கொண்டு ஆளுனரையும் உடன் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் ரழி அவர்கள் அடி வாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார். பிறகு ஆளுனரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது ஆளுனரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுனர் அவர்கள் என் மகன் தானே உன்னை அடித்தான் நான் அடிக்கவில்லையே என்று கூற, அவர் சாட்டையைக் கீழே போட்டார். ஆளுனரை அடிக்கவில்லை. பிறகு உமர் ரழி அவர்கள் ஆளுனரையும் அவரது மகனையும் நோக்கி இவர்களின் தாய்மார்கள் இவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என்று கூறி எச்சரித்தார்கள்.                                     

பாதிக்கப்பட்ட மாற்று மதத்தவருக்கு நீதி வழங்குவதில் உமர் ரலி அவர்கள் காட்டிய அவசரம்

لما قارب الخليفة عمر رض بيت المقدس أتاه رجل نصراني (ذمي) وله بستان عنب :وقال له "كرمي هذا تعرضوا له وانا رجل ذمة ,فما كان من عمر الا أن طلب برذونا وركب مسرعا فرأي أبا هريرة يحمل عنبا فقال له وأنت أيضا يا ابا هريرة فقال ياامير المؤمنين أصابتنا مخمصة شديدة فكان أحق من اكلنا من ماله من حاربنا فتركه ثم جاء البستان فوجد الناس فيه فطلب عمر الذمي وقال له "بكم كنت تستغله؟ قال بكذا قال فخل سبيله ودفع له الثمن كما قال وأباحه للعسكر(دروس التاريخ)

உமர் ரழி அவர்களின் படை பைத்துல் முகத்தஸை நெருங்கிய நேரத்தில் ஒரு திம்மீ கிறிஸ்தவரின் தோட்டத்தில் சில முஸ்லிம்கள் பசியின் காரணமாக உள்ளே புகுந்து திராட்சைகளைச் சாப்பிட்டனர். இதுபற்றி அவர் உமர் ரழி அவர்களிடம் புகார் கொடுத்த போது  உடனே உமர் ரழி வேகமாக வர, அபூஹுரைரா ரழி அவர்கள் ஒரு திராட்சைக்குலையை கையில் வைத்திருப்பதைக் கண்டார்கள். கடும் பசியினால் நாங்கள் இப்படிச் செய்தோம் என்று அவர்கள் காரணம் கூற, உடனே உமர் ரழி அந்த திம்மீயிடம் உன் தோட்டத்தில் இவர்கள் பறித்தவற்றின் விலை என்ன என்று கேட்டு அதை தந்தார்கள். 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ (الانعام108) حكمها باق في هذه الأمة على كل حال فمتى كان الكافر في منعة وخيف أن يسب الإسلام أو النبي عليه السلام أو الله عز وجل فلا يحل لمسلم أن يسب صلبانهم ولا دينهم ولا كنائسهم ولا يتعرض إلى ما يؤدي إلى ذلك لأنه بمنزلة البعث على المعصية (قرطبي

சகோதர சமயத்தவர்களுடன் பொதுவான விஷயங்களில் நேசம் பாராட்டுவது நல்லது என்பது பற்றி எவ்வளவோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அதற்காக அவர்களின் கலாச்சாரமாக நம்முடைய கலாச்சாரம் மாறி விடக்கூடாது

 

மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பெருமளவில் பின்பற்றும் காலம் வரும் என்பதைப் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ فَقَالَ وَمَنْ النَّاسُ إِلَّا أُولَئِكَ رواه البخاري عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ رواه البخاري

முஷ்ரிகீன்களுடன் ஒப்பாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் கூறப்பட்ட விஷயங்கள் மார்க்கத்தில் ஏராளம் உள்ளன.

عَنْ ابْنِ عُمَرَ  رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ  (البخاري) باب تَقْلِيمِ الأَظْفَارِ-كتاب اللباس

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ (بخاري) باب الْخِضَابِ- كتاب اللباس

சூரிய உதயம்,உச்சம்,அஸ்தம் ஆகிய மூன்றுநேரங்களில் இப்லீஸை சிலர் வணங்குவர் என்பதால் அப்போது தொழக்கூடாது

عن عَبْدَ اللَّهِ بن مسعود رَضِي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عِنِ الصَّلَاةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا (بخاري) عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الشَّمْسَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ أَوْ قَالَ يَطْلُعُ مَعَهَا قَرْنَا الشَّيْطَانِ فَإِذَا ارْتَفَعَتْ فَارَقَهَا فَإِذَا كَانَتْ فِي وَسَطِ السَّمَاءِ قَارَنَهَا فَإِذَا زَالَتْ فَارَقَهَا فَإِذَا دَنَتْ لِلْغُرُوبِ قَارَنَهَا فَإِذَا غَرَبَتْ فَارَقَهَا فَلَا تُصَلُّوا هَذِهِ السَّاعَاتِ الثَّلَاث(ابن ماجة) وزاد البيهقي َ"وحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّار

குறிப்பிட்ட இடத்தில் பிராணியை அறுப்பதாக நேர்ச்சை செய்திருந்தாலும் அங்கு ஷிர்க் நடைபெறும் என்றிருந்தால் கூடாது

عن ثَابِت بْن الضَّحَّاكِ رضي الله عنه قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ رواه ابوداود

 

 

புது வீடு குடி போகும்போது மாற்றார்களைப் பின்பற்றி முஸ்லிம்களிடமும் பரவியுள்ள மூட நம்பிக்கைகள்.

1, வாஸ்து பார்ப்பது 2, இந்துக்களைப்போல் பாலை பொங்க விடுவது 3, திருஷ்டி பொம்மை வைப்பது 4,கட்டிடத் தொழிலாளர்கள் செய்யும் மாற்று மத சடங்குகளை அனுமதிப்பது, 5, பிராணியை அறுத்து அதன் இரத்தத்தை தெளிப்பதும், அதை முச்சந்தியில் வைத்து இரவோடு இரவாக எரிப்பதும் 7, திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது 8,பழங்காலத்தைப்போல் நடு வீட்டுக்குள் விறகு அடுப்பு எரிப்பதை சடங்காக கருதுவது 9, குத்து விளக்கு ஏற்றுவது

 

முடிவுரை- மார்க்கம் அனுமதித்த விஷயங்களில் மட்டும் சமய நல்லிணக்கத்தைப் பேணுபவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...