வெள்ளி, 31 மார்ச், 2023

9- ம் தராவீஹ் கூட்டு துஆ

 

9- ம் தராவீஹ்

கூட்டு துஆ

மூஸா (அலை) செய்த துஆவிற்கு ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள்.

‌وَقَالَ مُوْسٰى رَبَّنَاۤ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَ‌ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ  -  سورة  يونس
மூஸா அலை ( இறைவனை நோக்கி,) என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன்னுடைய வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று பிரார்த்தித்தார்கள்.
قَالَ قَدْ اُجِيْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِيْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِيْلَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ
அதற்கு (இறைவன், உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள் என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 10:89)

நபி மூஸா அலை மட்டும் தான் ஆ கேட்டார்கள் ஆனால் உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்பதன் விளக்கம் மூஸா அலை அவர்கள் துஆ கேட்க ஹாரூன் அலை ஆமீன் கூறினார்கள் என்று தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது.
வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, படைப்புகளில் சிறந்த நபி ஸல் அவர்கள் சொன்ன ஆமீன்

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِين آمِين آمِين» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِين آمِين آمِين، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، (رواه ابن خُزيمة                                             

 ஹதீஸின் சுருக்கம்: நபி ஸல் அவர்கள் மின்பர் பிரசங்க மேடையில் ஏறும் போது ஆமீன் என்று மூன்று முறை சொன்னார்கள். அப்போது அவர்களிடம் எதற்காக ஆமீன் மூன்று தரம் சொன்னீர்கள்? என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து ஒருவன் றமழான் மாதத்தை அடைந்தும் தனது பாவம் மன்னிக்கப்படாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அல்லாஹ் அவனை தூரமாக்குவானாக!என்று துஆ செய்து என்னிடம் ஆமீன் சொல்லுங்கள் என்றார்கள். நான் ஆமீன் சொன்னேன் என்றார்கள்.

 ஒருவன் தனது பெற்றோர் இருவரையும் அல்லது அவர்களில் ஒருவரை அடைந்து அவர்களுக்கு உதவியுபகாரம் செய்யாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அவனை அல்லாஹ் தூரமாக்குவானாக! என்று துஆ கேட்டு என்னிடம் ஆமீன் சொல்லுமாறு சொன்னார்கள். நான் ஆமீன் சொன்னேன் என்றார்கள். ஒருவனிடம் உங்கள் பெயர் சொல்லப்பட்டு அவன் உங்கள் மீது ஸலவாத் சொல்லாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அவனை அல்லாஹ் தூரமாக்குவானாக!என்று துஆ செய்து என்னிடம் ஆமீன் சொல்லுமாறு சொன்னார்கள். நான் ஆமீன் சொன்னேன் என்றார்கள்.

ஸஹாபாக்களின் துஆவிற்கு நபி ஸல் ஆமீன் கூறிய சம்பவம்

أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شئ فقال له زيد عليك أبا هريرة فإني بينما أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا فسكتنا فقال عودوا للذي كنتم فيه قال زيد فدعوت أنا وصاحبي قبل أبي هريرة وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك مثل ما سألك صاحباي هذان وأسألك علما لا ينسى فقال رسول الله صلى الله عليه وسلم آمين فقال يا رسول الله ونحن نسأل الله علما لا ينسى فقال سبقكم بها الغلام الدوسي السهر في العلم-  سنن الكبري (5871)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வானவர் ஜிப்ரயீல் அலை அவர்களின் கூட்டு துஆவிற்க்கு ஆமீன் கூறினார்களோ..அதே போன்று ஸஹாபா பெருமக்களின் துஆவிற்கும் ஆமீன் கூறினார்கள். ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார்.அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:
நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி)அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.உடனே நாங்கள்,அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்என்றார்கள்.நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

மனிதர்களின் துஆவிற்கு மலக்குள் ஆமீன் கூறுதல்

عن أُمّ الدَّرْدَاءِ قَالَتْ حَدَّثَنِى سَيِّدِى أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்! என்று கூறுகிறார். ஸஹீஹ் முஸ்லிம் : 5280.

தொழுகைக்குள்ளே கூட்டு துஆ

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ قَالَ: إِذَا قَالَ اْلإِمَامُ (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ۞) فَقُولُوا: آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري باب جهرالماموم بالتامين رقم:٧٨٢.
இமாம் (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) என்று சொன்னதும் ஆமீன்என்று கூறுங்கள், ஏனெனில் எவருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனுடன் சேர்ந்துவிடுகிறதோ,(இருவரும் ஒரேநேரத்தில் ஆமீன் என்று கூறினால்) அவருடைய முந்திய பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு விடுகின்றனஎன்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.- புகாரீ


عنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ يَقُولُ: لاَ يَجْتَمِعُ مَلَؤٌ فَيَدْعُوَ بَعْضُهُمْ وَيُؤَمِّنُ الْبَعْضُ إِلاَّ أَجَابَهُمُ اللهُ.
رواه الحاكم: ٣ /٣٤٧

ஒரு கூட்டம் ஒன்று கூடி, அவர்களில் ஒருவர் துஆச் செய்ய, மற்றவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹுதஆலா அவர்களின் துஆவை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹபீபிப்னு மஸ்லமா ஃபிஹ்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்தத்ரக் ஹாகிம்)

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...