26-05-2023 துல்கஃதா |
|
بسم
الله الرحمن الرحيم
|
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஹஜ்ஜைப்
பற்றிப் பேசப்பட்டாலும் இங்குள்ள சில விஷயங்கள் பொதுவாக மற்றவர்களுக்கும்
பொருந்தும்
ஹாஜி
முதன்முதலில் செய்ய வேண்டிய தயாரிப்பு
ஹஜ்ஜைப் பற்றி அல்லாஹ் விபரிக்கத் துவங்கும்போதே “லில்லாஹி” என்று தான் துவங்குகிறான். எனவே ஹாஜிகள் செய்ய வேண்டிய
தயாரிப்புகளில் உளத்தூய்மை மிக முக்கியமானது
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ
اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (ال عمران 97
عن
انس رض عن النبي صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة
وأوساطهم للتجارة وقراؤهم للرياء والسمعة وفقراؤهم للمسئلة. (كنز العمال
கடைசியில் ஒரு காலம் வரும் அப்போது பணக்காரர்கள் சுற்றுலாவுக்குச் செல்வது
போன்றும் நடுத்தர வர்க்கத்தினர் வியாபார நோக்கத்தோடும் ஆலிம்கள் புகழுக்காகவும்
ஏழைகள் யாசகம் கேட்பதற்காகவும் ஹஜ் செய்வார்கள்.
قال ابن القيم رح انّ الله اذا اراد بعبد خيرا
سلب رؤية اعماله الحسنة من قلبه والاخبار بها من لسانه وشغله برؤية ذنبه
فأنّ ما تُقُبِّلَ من الاعمال رفع من القلب رؤيته ومن اللسان ذكره
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்
ஒரு அடியானுக்கு நல்லதை நாடி விட்டால் முதலில் அவர் செய்த நல்ல அமல்களை நினைத்து
அவரே பெருமைப் படும் சிந்தனையை அவருடைய உள்ளத்தில் இருந்தே அல்லாஹ் நீக்கி
விடுவான். அதைப் பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசாமல் அவருடைய நாவையும் பாதுகாத்து
விடுவான். இதற்கு மாறாக அவர் தனது பாவங்களை நினைத்து மட்டுமே கவலைப் படும் நிலையை
அவருடைய உள்ளத்தில் உருவாக்கி விடுவான். காரணம் ஒரு அமல் அல்லாஹ்விடம் மக்பூல் ஆகி
விட்டதற்கான அடையாளம் அதுபற்றிய பெருமையான சிந்தனை மனதை விட்டும் நாவை விட்டும்
நீங்குவதாகும்
உளத்தூய்மைக்கு எடுத்துக் காட்டான
தாபிஈ. வரலாற்றில் ஸாஹிபுன் னக்பு என பெயர் பெற்றவர்
قال الأصمعي: حاصر مسلمة بن عبد الملك حصناً، فأصابهم
فيه جهد عظيم، فندب الناس إلى نقب منه، فما دخله أحد، فجاء رجل من الجند فدخله،
ففتح الله عليهم، فنادى مسلمة: أين صاحب الثقب؟ فما وجد أحد، حتى نادى مرتين أو
ثلاثاً أو أربعً. فجاء في الرابعة رجل فقال: أنا أيها الأمير صاحب النقب، آخذ
عهوداً ومواثيقاً ثلاثاً؛ لا تسودوا اسمي في صحيفة، ولا تأمروا لي بشيء، ولا
تشغلوني عن أمري. قال: فقال مسلمة: قد فعلنا ذلك بك. قال: فغاب بعد ذلك فلم ير؛
فكان مسلمة بعد ذلك يقول في دبر صلاته: اللهم اجعلني مع صاحب النقب. (الكتاب : مختصر تاريخ
دمشق)
ஹிஜ்ரி 98-ல் துருக்கியின்
முக்கியமான நகரத்தின் மீது மஸ்லமா ரஹ் அவர்களின் தலைமையில் ஒரு படை போர்
தொடுத்தது. அப்போது அவர்கள் கடுமையான சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.
எதிரிகளின் கோட்டைக்குள் இலகுவாக நுழைய முடியவில்லை. கோட்டைச் சுவரின் ஏதேனும் ஒரு
பகுதியில் துவாரமிட்டு உள்ளே நுழையும் வாய்ப்பு இருந்தாலும் துவாரமிட்ட பிறகு
அங்கே யாரேனும் எதிரிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்தால் உள்ளே நுழைபவரின் உயிர்
போய் விடும் என்று அஞ்சி யாரும் செல்லவில்லை. ஆனால் அது ஒன்று தான் கோட்டையைப்
பிடிப்பதற்கான ஆலோசனையாக இருந்தது. அப்போது தான் படையில் இருந்து ஒரு நபர்
துணிச்சலோடு வந்து துவாரமிட்டார்.அல்லாஹ்வின் நாட்டம் அங்கு எதிரிகள் நிற்கவில்லை.
அவர் துவாரமிட்டவுடன் மளமளவென முஸ்லிம் படை வீர ர்கள் அதன் வழியாக உள்ளே
நுழைந்தார்கள். அல்லாஹ் இறுதியில் வெற்றியைத் தந்தான். இந்த வெற்றிக்குக் காரணம்
துணிச்சலோடு துவாரமிட்ட அந்த நபர் தான். அவர் துணிச்சலுடன் அக்காரியத்தை
செய்திருக்கா விட்டால் முஸ்லிம்கள் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர் யாரென்று அடையாளம் தெரியாத அளவு அவர் தன் முகத்தை
மூடியிருந்தார். போர் முடிந்து அனைவரும் ஒன்று கூடியிருக்கும்போது படைத் தளபதி
மஸ்லமா ரஹ் அவர்கள் மூன்று தடவைகள் அழைப்பு விடுத்தார்கள். அந்த நபர் முன்னால் வர
வேண்டும் என மூன்று முறை அழைப்பு விடுத்தும் அவர் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.
மற்றொரு அறிவிப்பின் படி படைத்தளபதி மஸ்லமா ரஹ் தனியாக இருக்கும்போது அவர்
வந்தார். நீங்கள் அழைத்தால் நான் பதில் தர வேண்டும் என்பதற்காவே இப்போது நான்
வந்தேன் என்று கூறி தளபதியிடம் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார். 1.எக்காரணத்தைக்
கொண்டும் என்னுடைய பெயரைப் பிரபலப் படுத்தக் கூடாது 2.இதற்குப் பிறகு என்னை
மட்டும் தனியாக அழைத்து ஏதேனும் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடாது 3.என்னை
மட்டும் தனியாக அழைத்து என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்கக்கூடாது என் பெயரைக் கூட
நீங்கள் கேட்கக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். அதை மஸ்லமா ரஹ் அவர்கள்
ஏற்றுக் கொண்டார்கள்.
விளக்கம்-
மக்களெல்லாம் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கும்போது
மேற்கூறிய மூன்று காரியங்களில் எதை தளபதி செய்தாலும் அவர் இன்னார் என்று தெரிந்து
விடும் அல்லாஹ்விடம் நன்மை குறைந்து விடும் என்று அவர் எண்ணியுள்ளார்.
இதற்குப் பிறகு மஸ்லமா ரஹ் அவர்கள் எப்போது துஆச் செய்தாலும் யா அல்லாஹ் என்னை
ஸாஹிபுன் நக்பு துவாரத்திற்குரியவரோடு மறுமையில் என்னை சேர்த்து வைப்பாயக என்று
துஆச் செய்வார்கள்
ஹாஜியின் உள்ளத்தில்
நாம் செய்யப் போகும் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில்
நம்முடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும்.
பயபக்தி உள்ளவர் தன்னுடைய அமலைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள மாட்டார்
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا
وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (السجدة16) وَادْعُوهُ خَوْفًا
وَطَمَعًا (56الاعراف) عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّ عُمَرَ بْنَ
الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ اشْتَكَى فَدَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَالَ: كَيْفَ تَجِدُكَ يَا عُمَرُ ؟
فَقَالَ:أَرْجُو وَأَخَافُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَا اجْتَمَعَ الرَّجَاءُ وَالْخَوْفُ فِي قَلْبِ مُؤْمِنٍ إِلَّا
أَعْطَاهُ اللهُ الرَّجَاءَ وَأَمَّنَهُ الْخَوْفَ (شعب الايمان للبيهقي)
உமர்
ரழி அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர்களை நலம் விசாரிக்க நபி ஸல் அவர்கள்
சென்றார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் உமரே எப்படி இருக்கிறீர்கள் என்று
கேட்டார்கள். அதற்கு உமர் ரழி அவர்கள் நான் ஒருவேளை இந்த நோயில் இறந்து விட்டால்
அல்லாஹ் என்னை மன்னிப்பான் என்று ஆதரவும் அதே நேரத்தில் அல்லாஹ் மன்னிக்கா
விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் எனக்குள் இருக்கிறது என உமர் ரழி அவர்கள்
கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் எந்த முஃமினுடைய உள்ளத்தில் ஆதரவும் அச்சமும்
கலந்து இருக்குமோ அல்லாஹ் அவரது அச்சத்தைப் போக்கி அவர் ஆதரவு வைத்ததை நிறைவேற்றித்
தருவான் என்றார்கள்.
சிறப்பு வாய்ந்த உமர் ரழி அவர்கள் தன்னுடைய
அமல், மற்றும் தக்வாவின் நிலை குறித்து பயந்த விதம் நயவஞ்சகர்களின்
பட்டியல் யாரிடம் இருந்ததோ அந்த ஹுதைஃபா ரழி அவர்களிடம் சென்று என்னிடம் பெயர்
அதில் உள்ளதா என்று அழுது கொண்டே கேட்டார்கள்
عن حذيفة رضي الله عنه قال: مَرَّ بي عمرُ رضي
الله عنه وأنا جالسٌ في المسجد فقال
لي:يا حذيفة إن فلانا قد مات فاشْهد قال:
ثم مضى حتى إذا كاد أن يخرج من المسجد اِلْتَفَتَ إليَّ، فرآني، وأنا جالسٌ فعرف،
فرجع إلي فقال :يا حذيفة أَنشُدُك بالله أَمِنَ الْقَوْمِ أنا ؟ قال: قلتُ اللهم
لا، ولن أبرِّئ أحدا بعدك قال :فرأيتُ عَيْنَيْ عمرَ جادَتا (كنز العمال)
நயவஞ்சகர்களின் பட்டியல் யாரிடம்
இருந்ததோ அந்த ஹுதைஃபா ரழி அவர்கள்
கூறினார்கள். உமர் ரழி அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். நான் அப்போது
மஸ்ஜிதில் அமர்ந்திருந்தேன். என்னிடம் உமர் ரழி அவர்கள் இன்ன மனிதர் இறந்து
விட்டார். அவரைக் குறித்து (அதாவது
அவர் முனாஃபிக்கீன்களில் உள்ளவரா என) நீங்கள் சாட்சி கூற
வேண்டும் என்று கூறி விட்டு, சற்று தூரம் சென்று மஸ்ஜிதை விட்டும் வெளியேறவதற்கு
நெருங்கிய பின்பு மீண்டும் என்னிடம் வந்து அல்லாஹ்வை முன்வைத்து நான் கேட்கிறேன்.
ஹுதைஃபா அவர்களே நான் அந்தப் பட்டியலில் இருக்கிறேனா என நீங்கள் தான் கூற வேண்டும்
என அழுதபடி கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் அந்தப் பட்டியலில் இல்லை என்று கூறி
விட்டு, (யார் யார் முனாஃபிக் யார் முனாஃபிக் அல்ல என்ற
இரகசியத்தைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலும்
உங்களிடம் மட்டும் நான் சொல்லி விட்டேன்.) இனிமேல் இதுபோன்று
யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்றேன்.
எத்தகைய சிறப்புக்குரிய
உமர் ரழி அவர்கள்....
عَنْ جَابِرِ
رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ دَخَلْتُ الْجَنَّةَ أَوْ أَتَيْتُ
الْجَنَّةَ فَأَبْصَرْتُ قَصْرًا فَقُلْتُ
لِمَنْ هَذَا قَالُوا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ
فَلَمْ يَمْنَعْنِي إِلَّا عِلْمِي بِغَيْرَتِكَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ
يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا نَبِيَّ اللَّهِ أَوَعَلَيْكَ
أَغَارُ (بخاري)
நபி ஸல் அவர்கள்
கூறினார்கள் நான் சுவனத்தில் நுழைந்தேன் அங்கே ஒரு மாளிகையைக் கண்டேன். இது
யாருடையது என்று கேட்டேன். இது உமர் ரழி உடைய மாளிகை என்று எனக்குக் கூறப்பட்டது
அதில் உள்ளே சென்று பார்க்கலாம் என நான் நினைத்தாலும் உமர் ரழி உடைய ரோஷம் என்னை
உள்ளே நுழைய விடாமல் தடுத்தது. என்று கூறியபோது அதற்கு உமர் ரழி அவர்கள்
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது நான் ரோஷம் கொல்வேன் என்னுடைய மாளிகையில் உள்ளே
சென்று நீங்கள் பார்த்திருக்கலாமே என்றார்கள்
யாரிடமும் பகைமை இல்லாத
நிலையில் உறவினர்களின் துஆவோடு ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும்
உம்ராவுக்கு புறப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம்
தனக்காக துஆ செய்ய சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ ابْنِ
عُمَرَ عَنْ عُمَرَ رض أَنَّهُ
اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي
الْعُمْرَةِ فَأَذِنَ لَهُ وَقَالَ لَهُ يَا أُخَيَّ أَشْرِكْنَا فِي شَيْءٍ مِنْ
دُعَائِكَ وَلَا تَنْسَنَا(ابن ماجة
நபி ஸல் அவர்களை
மிஃராஜுக்கு அழைத்துச் செல்லும்போது முதன் முதலில் பைத்துல் முகத்தஸுக்கு
அழைத்துச் சென்ற நோக்கம் முந்தைய நபிமார்களின் துஆவைப் பெறுவதற்காக
سُبْحَانَ الَّذِي أَسْرَى
بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى
الَّذِي بَارَكْنَا حَوْلَهُ(1) الاسراء باركنا
حوله ؛ لأنهمواضع الأنبياء ومهبط الملائكة
تفسير
السمعاني
பயணத்தில் தான் சிலரின்
சுயரூபம் தெரியும் என்பார்கள் அதுபோல் போகும்போது நண்பர்களாக சென்று திரும்பி
வரும்போது பகைவர்களாக வருவார்கள். ஹஜ்ஜில் நம்முடைய தோழர்கள் அப்படி அமைந்து
விடக்கூடாது
ஆண்கள் அந்நியப் பெண்களிடம் முஸாஃபஹா
செய்யலாமா ? குறிப்பாக ஹாஜிகள்
அவ்வாறு செய்யலாமா ?
عَنْ
أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ مِنْ الْأَنْصَارِ نُبَايِعُهُ فَقُلْنَا
يَا رَسُولَ اللَّهِ نُبَايِعُكَ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَلَا
نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَأْتِيَ بِبُهْتَانٍ نَفْتَرِيهِ بَيْنَ
أَيْدِينَا وَأَرْجُلِنَا وَلَا نَعْصِيكَ فِي مَعْرُوفٍ قَالَ فِيمَا
اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ قَالَتْ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا
هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ إِنَّمَا قَوْلِي لِمِائَةِ
امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ أَوْ مِثْلُ قَوْلِي لِامْرَأَةٍ
وَاحِدَةٍ (نسائ) بَيْعَةُ النِّسَاءِ- كِتَاب الْبَيْعَةِ عن عَائِشَةَ رَضِي الله عنها قالت وَاللَّهِ
مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ
امْرَأَةٍ قَطُّ غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالْكَلَامِ (بخاري) باب إِذَا
أَسْلَمَتِ الْمُشْرِكَةُ- كتاب الطلاق
لا يجوز شرعا
مصافحة النساء إِلاَّ أن يكنَّ من محارمَه كأمِّه وأُخْتِه وبنتِه ونحوهن (فتاوي
الجنة الدائمة)
சுருக்கம்- நபி ஸல்
அவர்களிடம் பைஅத் உறுதிப் பிரமாணம் செய்வதற்காக பெண்கள் வருவார்கள். நாங்கள் இணை
வைக்க மாட்டோம். திருட மாட்டோம். விபச்சாரம் செய்ய மாட்டோம். அவதூறு
நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றெல்லாம் பைஅத் செய்யும்போது அதில் ஒரு பெண்
அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய கரங்களை நீட்டுங்கள் உங்களிடம் முஸாஃபஹா செய்தபடி
நாங்கள் பைஅத் செய்கிறோம் என்று கூற. அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக நான்
பெண்களிடம் கரம் பிடித்து பைஅத் செய்ய மாட்டேன் பெண்களிடம் என்னுடைய பைஅத் என்பது
நாவினால் மட்டும் தான் என்று கூறினார்கள்.
அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்
அவர்கள் பைஅத் செய்யும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை
ஆனால் மஹ்ரமான பெண்களிடம் முஸாஃபஹா மட்டும்
செய்வது தவறல்ல.
மக்கா, மதீனாவில்
இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் விலை மதிக்க முடியாதவை. அங்கு நம்முடைய நேரங்களை
வீணாக்குவது கூடாது
மக்காவில் இருக்கும் வரை அதிகமான தவாஃப் நல்லது.உலகில்
வேறு எங்கும் தவாஃப் செய்ய முடியாது.
عَنِ ابْنِ عَبَّاسٍ، رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ اللَّهَ تَعَالَى يُنْزِلُ فِي كُلِّ
يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ
سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ.
(طبراني
நினைவிடங்களைச் சென்று
பார்க்கலாம் ஆனால் ஜமாஅத் தொழுகைக்கு ஹரமுக்கு வந்து விட வேண்டும்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي
هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ.
(بخاري
عن أبي الدرداء رضي الله عنه قال : قال رسول الله صلى
الله عليه وسلم : " فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة وفي
مسجدي ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة " (البزار .
குபா மஸ்ஜிதில் தொழுவது சுன்னத்
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا
وَمَاشِيًا. عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.رواه البخاري
மதீனாவின் சிறப்புகள்
நபி
ஸல் அவர்கள் நேசித்த பூமி:
كَانَ رَسُولُ
اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ
الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً
حَرَّكَهَا مِنْ حُبِّهَا .
عَنِ أَنَس رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ دَرَجَاتِ
الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ وَإِنْ
كَانَتْ دَابَّةً حَرَّكَهَا
[ صحيح البخاري ] ( حركها من حبها ) حثها على الإسراع لجهة المدينة والدخول إليها
لكثرة حبه لها .
நபி ஸல் அவர்கள் எந்த
பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து
வாகனத்தை ஓட்டுவார்கள்.ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம்.
மரணத்தை
கேட்பது நல்லதல்ல. ஆனால் மதீனாவில் மரணிக்க ஆசைப்படுவது நல்லது
عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ
فَلْيَفْعَلْ ، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا. سنن
النسائي
மதீனாவில்
மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் அங்கு மரணிப்பவருக்கு
நான் ஷபாஅத்…….
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اللَّهُمَّ ارْزُقْنِي
شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ [ صحيح البخاري ] 1890
மதீனாவின்
மண்ணுக்கும் நோயை குணப்படுத்தும் தன்மை உண்டு
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى الْإِنْسَانُ الشَّيْءَ مِنْهُ
أَوْ كَانَتْ بِهِ قَرْحَةٌ أَوْ جُرْحٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِصْبَعِهِ هَكَذَا وَوَضَعَ سُفْيَانُ سَبَّابَتَهُ
بِالْأَرْضِ ثُمَّ رَفَعَهَا بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ
بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا [مسلم ]
ومعنى
الحديث أنه يأخذ من ريق نفسه على إصبعه السبابة ثم يضعها على التراب فيعلق بها منه
شيء فيمسح به على الموضع الجريح أو العليل ويقول هذا الكلام في حال المسح ] عن أَبي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ وَهِيَ الْمَدِينَةُ
تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ (بخاري)
மதீனாவில்
நபி ஸல் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதின் சிறப்பும் அதன் ஒழுக்கங்களும்
عن عمر رض قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:من زار قبري أو
قال:من زارني كنتُ له شفيعا أو شهيدا(مسند
أبي داود الطيالسي
آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -أ- أَنْ
يَنْوِيَ زِيَارَةَ الْمَسْجِدِ النَّبَوِيِّ أَيْضًا لِتَحْصِيل سُنَّةِ
زِيَارَةِ الْمَسْجِدِ وَثَوَابِهَا لِمَا فِي الْحَدِيثِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : لاَ تُشَدُّ
الرِّحَال إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ
مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْحَرَامِ ، وَمَسْجِدِ الأْقْصَى ب -
الاِغْتِسَال لِدُخُول الْمَدِينَةِ الْمُنَوَّرَةِ ، وَلُبْسِ أَنْظَفِ
الثِّيَابِ ، وَاسْتِشْعَارُ شَرَفِ الْمَدِينَةِ لِتَشَرُّفِهَا بِهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
ج - الْمُوَاظَبَةُ عَلَى صَلاَةِ الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ النَّبَوِيِّ
مُدَّةَ الإْقَامَةِ فِي الْمَدِينَةِ ، عَمَلاً بِالْحَدِيثِ الثَّابِتِ عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَال : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا
سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ
.د - أَنْ يُتْبِعَ زِيَارَتَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِزِيَارَةِ صَاحِبَيْهِ شَيْخَيِ الصَّحَابَةِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
وَعَنْهُمْ جَمِيعًا ، أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، وَقَبْرُهُ إِلَى الْيَمِينِ
قَدْرَ ذِرَاعٍ ، وَعُمَرَ يَلِي قَبْرَ أَبِي بَكْرٍ إِلَى الْيَمِينِ أَيْضًا .(
آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)
جبل أُحَد: عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ
نَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ فَقَالَ إِنَّ أُحُدًا جَبَلٌ
يُحِبُّنَا وَنُحِبُّهُ (رواه مسلم)
மஸ்ஜிதுன்
நபவியின் தூண்களின் வரலாறு
மஸ்ஜிதுன் நபவி
பழைய பள்ளியைச் சுற்றி நிறைய தூண்கள் உண்டு அத்தனை தூண்களுக்கும் தனித்தனி
வரலாறுகள் உண்டு. 1.உஸ்துவானதே அபீலுபாபா.அல்லது உஸ்துவாதே தவ்பா அபூலுபாபா என்ற
சஹாபீ நபிகளாருக்கு பிடிக்காத தவறை செய்து விடுவார். பின்பு தவறை உணர்ந்து அவராகவே
மஸ்ஜிதுன் நபவியின் இந்த தூணில் தன்னை கட்டி வைத்து அல்லாஹ் என்னை மன்னித்து நபி
ஸல் அவர்களே வந்து என் கட்டைஅவிழ்த்து விடும் வரை நான் இதை அவிழ்க்க மாட்டேன்
என்பார். அதன் பின்பு அவரை மன்னித்த விஷயமாக அல்லாஹ் ஆயத்தை இறக்கினான்.
وَآخَرُونَ
اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ
يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (102)التوبة
இதன் பின்பு நபி ஸல் அவர்களே வந்து அவருடைய கயிறை
அவிழ்த்து விட்டார்கள். மன்னிப்புக் கிடைத்த இடம் என்பதால் இந்த தூணுக்கு இப்பெயர்
வந்தது.
عَنِ
ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّهُ كَانَ
إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ ، أَوْ وُضِعَ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أُسْطُوَانَةِ التَّوْبَةِ. (سنن ابن ماجة
2. உஸ்துவானதே
முகல்லகா அத்தர் தேய்க்கப்பட்ட தூண். மஸ்ஜிதுன் நபவியில் இந்த தூணில் எச்சில்
துப்பியிருப்பதை பார்த்து அதை நபி ஸல் அவர்களே சுத்தம் செய்வார்கள். அதைப் பார்த்த
சஹாபி அந்த தூணுக்கு அத்தர் தேய்த்து விடுவார்.அதனால் அப்பெயர் வந்த து. 3. உஸ்துவானதே
ஆயிஷா அதாவது ஆயிஷா ரழி அந்த தூணைப் பற்றி கூறும்போது நபி ஸல் அவர்கள் இங்கு நின்று தான் அதிகம்
வணங்குவார்கள் என்று ஆயிஷா ரழி அவர்களால் அடையாளப் படுத்தப்பட்ட தூண். 4.
உஸ்துவானதே ஹர்ஸ் பாதுகாப்புத் தூண் நபிகள் நாயகம் அவர்களை எதிரிகளிடமிருந்து
பாதுகாப்பதற்காக அலீ ரழி அவர்கள் இந்த தூணுக்கு அருகில் நின்று இதை தாண்டி யாரும்
வரக்கூடாது என்று பாதுகாத்த தால் இதற்கு இப்பெயர் வந்தது 5. உஸ்துவானதே ஸரீர் நபி ஸல் அவர்கள் படுக்கும் இடம். இந்த தூண் பாதி
ரவ்ழாவில் இருக்கும். பாதி ரவ்ழாவுக்கு வெளியில் இருக்கும். 6. உஸ்துவானதே முரப்பஆ
இந்த தூண் நபி ஸல் அவர்களின் கப்ரோடு இணைந்து இருக்கும். 7, உஸ்துவானதே தஹஜ்ஜுத்
நபி ஸல் அவர்கள் தஹஜ்ஜத் கடமையை நிறைவேற்றும் இடம். இந்த ஏழு தூண்களுக்கு
அருகிலும் வணங்குவது நல்லது. நபி ஸல் அவர்களுடைய காலத்து தூண்கள் எதுவும் அப்புறப்
படுத்தப்படவில்லை அவைகள் உள்ளேயே வைக்கப்பட்டு அதற்கு மேல் தான் இப்போதைய தூண்கள்
உருவாக்கப்பட்டுள்ளன
உஸ்துவானதே முகல்லகாவை உஸ்துவானதே ஹன்னானா அழுது
முனகிய தூண் என்றும் சொல்லப்படும்
فمنها
الأسطوانة التي هي علم على المصلى الشريف وتقدّم إنها تعرف بالمخلق وإن الجذع الذي
كان يخطب عليه صلى الله عليه وسلم ويتكئ عليه كان أمامها وإنه كان في محل كرسي
السمعة هناك وإن سلمة بن الأكوع كان يتحرّى الصلاة عندها.
يزيد
بن أبي عبيد قال : كان سلمة يعني بن الأكوع يتحرى الصلاة عند الإسطوانة
التي عند المصحف قلت يا أبا مسلم أراك تتحرى الصلاة عند هذه الإسطوانة
قال رأيت النبي صلى الله عليه و سلم يتحرى الصلاة عندها رواه البخاري
عن جَابِر رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ الْمَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ
مِنْ نَخْلٍ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ
يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ وَكَانَ عَلَيْهِ
فَسَمِعْنَا لِذَلِكَ الْجِذْعِ صَوْتًا كَصَوْتِ الْعِشَارِ حَتَّى جَاءَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا
فَسَكَنَتْ (بخاري ولأحمد وأبن ماجه فلما جاوزه خار
الجذع حتى تصدع وأنشق وفيه فأخذ أبي بن كعب ذلك الجذع لما هدم المسجد فلم يزل عنده
حتى بلى وعاد رفاتا وعند الدارميّ فأمر به صلى الله عليه وسلم أن يحفر له ويدفن
فزعم أبن بريدة عن أبيه إن النبيّ صلى الله عليه وسلم
حين سمع حنينه رجع إليه فوضع يده عليه وقال اختر أن أغرسك في المكان الذي كنت فيه
فتكون كما كنت وأن شئت أن أغرسك في الجنة فتشرب من أنهارها وعيونها فنحن زينتك
وتثمر فيأكل أولياء الله من ثمرتك وتخلد فعلت فزعم أنه سمع من النبيّ صلى الله
عليه وسلم وهو يقول له نعم قد فعلت مرتين فسئل النبيّ صلى الله عليه وسلم فقال
أختار أن أغرسه في الجنة وفيه عند عياض قال اختار دار البقاء على دار الفناء وكان
الحسن إذا حدث به بكى وقال يا عباد الله الخشبة نحن إلى رسول الله صلى الله عليه
وسلم شوقا إليه لمكانه فأنتم أحق أن تشتاقوا إلى لقائه (الكتاب :
خلاصة الوفا بأخبار دار المصطفى)