19-05-2023 |
|
بسم
الله الرحمن الرحيم
|
|
மறுமையை மக்களுக்கு ஞாபகப் படுத்தவே அல்லாஹ் வெப்பத்தை
ஏற்படுத்துகிறான்
حكي : أن
أبا يزيد البسطامي قدس سره : دخل الحمام يوماً فأصابه الحر ، فصاح فسمع نداء من
الزوايا الأربع : يا أبا يزيد ما لم تسلط عليك نار الدنيا لم تذكرنا ، ولم تستغث
بنا (تفسير روح البيان)
அபூ யஜீதுல் பிஸ்தாமீ ரஹ் அவர்கள் ஒரு நேரத்தில் முகடு
இல்லாத பொதுக் குளியலறையில்
நுழைந்தார்கள். மேல் முகடு இல்லாததால் வெயில் அவர்களைத் தாக்கியது.
சிரமத்தால் அழுதார்கள் அப்போது ஒரு அசரீரி சப்தம் கேட்டது. அபூ யஜீதே இந்த
வெப்பமும் உம்மைத் தாக்கா விட்டால் நீங்கள் அல்லாஹ்வை நினைப்பதை மறந்து
விடுவீர்கள். நம்மிடம் பாதுகாவல் கேட்கவும் மாட்டீர்கள் என அல்லாஹ்வின்
புறத்திலிருந்து அசரீரி சப்தம் கேட்டது.
கடும் வெயில் காலத்தில்
நரகத்தின் உஷ்ணம் நம் சிந்தனைக்கு வர வேண்டும்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا
فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي
الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ
وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا
مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ
الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ
زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)
கருத்து-வருடத்திற்கு ஒரு முறை நரகம் தன்னுடைய வைப்பத்தை
தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே கோடை காலத்தில் நாம் அனுபவிக்கிறோம். அதேபோல வருடத்தில்
மற்றொரு முறை நரகம் தன்னுடைய குளிரை தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே குளிர் காலத்தில் நாம் அனுபவிக்கிறோம். படிப்பினை-புஹாரீ ரஹ் அவர்கள்
“நரகம்
ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு
வருகிறார்கள். அதன்படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி
வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின்
வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில்
உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்த வெயிலை தாங்க முடியாமல் வாகனங்களிலும்
வீடுகளிலும் மஸ்ஜித்களிலும் எப்போதும் A.C. உடன் அமர்ந்திருக்கிறோம் என்றால் அந்த நரகத்தின் கடும் வெயிலை விட்டும்
நம்மை பாதுகாக்க எதை நாம் தயாரித்து வைத்திருக்கிறோம்.
நரக வெப்பம் எப்படி இருக்கும் என்பதை
புரிந்த கொள்ள ஒரு உதாரணம்
عَنْ أَنَسِ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُؤْتَى يَوْمَ الْقِيَامَةِ بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ الْكُفَّارِ
فَيُقَالُ اغْمِسُوهُ فِي النَّارِ غَمْسَةً فَيُغْمَسُ فِيهَا ثُمَّ يُقَالُ لَهُ
أَيْ فُلَانُ هَلْ أَصَابَكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لَا مَا أَصَابَنِي نَعِيمٌ
قَطُّ وَيُؤْتَى بِأَشَدِّ الْمُؤْمِنِينَ ضُرًّا وَبَلَاءً فَيُقَالُ اغْمِسُوهُ
غَمْسَةً فِي الْجَنَّةِ فَيُغْمَسُ فِيهَا غَمْسَةً فَيُقَالُ لَهُ أَيْ فُلَانُ
هَلْ أَصَابَكَ ضُرٌّ قَطُّ أَوْ بَلَاءٌ فَيَقُولُ مَا أَصَابَنِي قَطُّ ضُرٌّ
وَلَا بَلَاءٌ (ابن
ماجة) بَاب صِفَةِ النَّارِ- كِتَاب
الزُّهْدِ
விளக்கம்-
மனிதர்களில் மிகவும் சுகபோகமாக வாழ்ந்த, (அதாவது உலக வாழ்க்கை முழுவதும் சுகத்தை மட்டுமே அனுபவித்த) காஃபிரை நரகத்தில் நுழைய வைத்து, அதன் வேதனையை முதன் முறையாக
அனுபவித்த பின் அவனிடம் நீ உன் வாழ்வில்
ஏதேனும் சுகத்தை அனுபவித்திருக்காயா? என்று கேட்கப்படும்
போது “ இல்லை
நான் எந்த சுகத்தையும் அனுபவித்ததேயில்லை” என்று கூறுவான். அதாவது நரகத்தின் முதல் வேதனையை
அனுபவிக்க ஆரம்பித்தவுடன் துன்யாவில் அவன் அனுபவித்த அத்தனை சுகங்களும் அவனுக்கு
மறந்து விடும். அதேபோல் உலகில் மிகவும் சிரமத்தை அனுபவித்த முஃமினை சுவனத்தில்
நுழைய வைத்து சுவனத்தின் சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் அவரிடம் நீ உன்
வாழ்வில் ஏதேனும் துன்பத்தை அனுபவித்திருக்காயா? என்று
கேட்கப்படும்போது இல்லை நான் எந்த துன்பத்தையும்
அனுபவித்ததில்லை என பதில் கூறுவார். அதாவது சுவன இன்பத்தை அனுபவிக்க
ஆரம்பித்தவுடன் துன்யாவில் அவர் அனுபவித்த அத்தனை துன்பங்களும் மறந்து விடும்.
மஹ்ஷர் வெப்பமும், அதை
விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளும்
عن الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ
الْخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ فَيَكُونُ النَّاسُ عَلَى
قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ
وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى
حَقْوَيْهِ وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا قَالَ وَأَشَارَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى
فِيهِ (مسلم) بَاب فِي صِفَةِ يَوْمِ الْقِيَامَةِ
சுருக்கம்-மஹ்ஷரில்
சூரியன் அருகில் வரும்போது பாவத்திற்கேற்ப வியர்வை இருக்கும். சிலரின் கரண்டைக் கால்
வரை வியர்வை இருக்கும். சிலரின் கெண்டைக்கால் வரை வியர்வை இருக்கும். சிலரின்
முட்டிக்கால் வரை வியர்வையும் சிலரின் இடுப்பு வரை வியர்வையும் சிலரின்
வாய் வரை வியர்வையும் இருக்கும். வியர்வையில் மூழ்குவது கடிவாளமிடப்பட்டது போல்
வேதனையாக இருக்குமே தவிர நீரில் மூழ்குவது போன்று இருக்காது.
شرح:
عَنْ سَلْمَان قَالَ " تُعْطَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ حَرَّ عَشْرِ
سِنِينَ ثُمَّ تُدْنَى مِنْ جَمَاجِمِ النَّاسِ (فتح الباري)
சல்மான் ரழி அவர்கள் கூறினார்கள் அந்த நாளில்
சூரியனுக்கு பத்து வருடத்தின் வெப்பத்தை மொத்தமாக தரப்படும். அத்தோடு அது
மனிதர்களுக்கு அருகிலும் நெருக்கி வைக்கப்படும். வெப்பம் தாக்கிக் கொண்டே
இருக்கும். வியர்வை வழிந்து கொண்டேயிருக்கும். அவரவரின் பாவத்திற்கேற்ப வியர்வை
இருக்கும்.
மஹ்ஷர் வெப்பத்தை விட்டும் பாதுகாத்துக்
கொள்ளும் வழிகள். ஏழு கூட்டத்தினருக்கு மஹ்ஷர் வெப்பத்தை விட்டும் பாதுகாப்பு..
عَنْ أَبِي
هُرَيْرَةَ رضي الله عنه عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ
فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ
نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ
وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ
وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ
اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ
يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (بخاري)
باب مَنْ جَلَسَ فِى الْمَسْجِدِ-كتاب الأذان
வெயிலே இல்லாத சுவனத்தில் வாழ்ந்த ஆதம் அலை இந்த பூமிக்கு
வந்தவுடன் வெயிலின் கொடுமையை உணர்ந்து மிகவும் சிரமப்பட்டார்கள்.
عن أنس قال : قال رسول
الله - صلى الله عليه وسلم - هبط آدم وحواء عريانين جميعا عليهما ورق الجنة فأصابه الحر
حتى قعد يبكى .... فجاءه جبريل بقطن وأمرها أن تغزل وعلمها ، وأمر آدم بالحياكة
وعلمه وأمره أن ينسج (ابن عساكر
நபி ஆதம் அலை அவர்களும்
அவர்களின் துணைவி ஹவ்வா அலை இருவரும் இந்த பூமிக்கு இறக்கப்பட்ட நேரத்தில்
ஆடையின்றி இறக்கப்பட்டார்கள். சுவனத்தின் இலை தலைகள் தான் அவர்கள் மீது இருந்தன.
ஆடையும் இல்லாத நிலையில் முதன் முதலாக வெப்பம் அவர்கள் மீது பட்டவுடன் அவர்களால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்து வெப்பத்தை விட்டும் பாதுகாக்கும் ஆடையை உருவாக்கும்
முறையை சொல்லித் தந்தார்கள். முதன் முதலில் ஆடை நெய்தவர்கள் நபி ஆதம் அலை அவர்கள்
தான்.
வெயிலை விட்டும் நம்மைப் பாதுகாக்கும் ஆடைகளையும் அல்லாஹ்
அமைத்துள்ளான்
وَاللَّهُ
جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنَ الْجِبَالِ أَكْنَانًا
وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ
(81) النحل
மனிதனால் தாங்க முடியாத
வெப்பத்தை ஒரு கால்நடை தாங்கிக் கொள்கிறது. அதுதான் ஒட்டகம்
இன்றைய வாகனங்களின்
பெட்ரோல் டேங்குக்கு நிகராக ஒட்டகத்தின் வயிற்றில் அல்லாஹ் பொருத்திய அதிசய
வாட்டர் டேங்க். கடலைப் போல் பரந்து கிடக்கும் பாலைவனத்தில் கடும்
வெப்பத்தில் எந்த உயிரினமும் பயணிக்க முடியா விட்டாலும் ஒட்டகங்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைக் காண்கிறோம். அதற்கு ஏற்றவாறு ஒட்டகத்திற்குள் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்புத் தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தினால் உடலிலும் இரத்தத்திலும் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் எந்த
உயிரினமும் அழிந்து போய் விடும். உயிரினத்தின் இரத்தத்தில் தண்ணீரின் அளவு
குறைந்தால் இரத்தம் உறைந்து ஓட்டமின்றி அந்த உயிரினம் செத்து விடும். இந்த நிலை
ஏற்படாதவாறு பாலை வனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப் பட்டுள்ளன. ஒட்டகம், ஒரு நேரத்தில்
100
லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் உறிஞ்சி தன் உடலுக்குள் உள்ள சிறப்பான தண்ணீர்ப் பையில் தேக்கி வைத்துக் கொள்கிறது. அந்தப் பையிலிருந்து இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறையும் போதெல்லாம் இரத்தக் குழாய்க்கு பாய்ச்சுகிறது ஒட்டக இரத்தத்தின் ஒவ்வொரு சிகப்பு அணுவும் 200 மடங்கு விரிவடைகின்றது. இதனால் எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பையில் இருக்கும் தண்ணீர் தீரும் வரை இரத்தம் உறைந்து போகாமல் ஒட்டகத்தால் பயணிக்க முடியும்.
நீர்
கிடைக்காத வழியில் பயணிகளையும்,
சரக்குகளையும்
சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது இரத்த ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை
இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல்
உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு
குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன்
இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக
அமைத்தான். பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது
தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு
தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது.
வெயில் காலத்தில் நாம் செய்ய வேண்டிய சில
சேவைகள்
நிழல் தரும் மரங்களை நடுவதின் நன்மை, (நிழற்குடைகள் அமைப்பது உட்பட) மரங்களின் கீழ் சிறுநீர் கழிப்பதின் தீமை
عَنْ جَابِرٍ رضي
الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ مُبَشِّرٍ
الْأَنْصَارِيَّةِ فِي نَخْلٍ لَهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ غَرَسَ
هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ فَقَالَتْ بَلْ مُسْلِمٌ فَقَالَ لَا
يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا وَلَا يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ
وَلَا دَابَّةٌ وَلَا شَيْءٌ إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ (مسلم)
உம்மு முபஷ்ஷிர் என்ற
அன்சாரிப் பெண்ணை சந்திக்க நபி ஸல் அவர்கள் சென்ற போது அங்கே ஒரு மரம்
நடப்பட்டிருந்த தைக் கண்டு இதை யார் வைத்தார்கள் முஸ்லிமா காஃபிரா என்று
கேட்டார்கள் முஸ்லிம் தான் இதை நட்டார் என்று பதில் கூறப்பட்டது அப்போது நபி ஸல்
கூறினார்கள் ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை இவ்வாறு நட்டு அதிலிருந்து அதாவது அதன்
கனிகளை மனிதர் உண்டாலும் அல்லது மற்ற உயிரினங்கள் உண்டாலும் அது அவருக்கு தர்மமாக
மாறும். படிப்பினை-அந்த மரத்திலிருந்து எப்படி யார் பயனடைந்தாலும் அதை
நட்டியவருக்கு நன்மை உண்டு. அந்த மரத்தின் நிழலில் ஒருவர் ஒதுங்கினாலும்
நட்டியவருக்கு நன்மை உண்டு.
عَنْ جَابِرٍ رضي
الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا
إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ
وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتْ الطَّيْرُ
فَهُوَ لَهُ صَدَقَةٌ وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ (مسلم) باب فَضْلِ
الْغَرْسِ وَالزَّرْعِ- كتاب المساقاة
عَنْ أَبِي
هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ
قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ
(مسلم) بَاب النَّهْيِ عَنْ التَّخَلِّي فِي الطُّرُقِ
وَالظِّلَالِ- كِتَاب
الطَّهَارَةِ
மக்கள் நிழலுக்கு ஒதுங்கும் மரங்களுக்குக் கீழ்
அதற்குத் தடையாக இருக்கும் விதத்தில் அசிங்கம் செய்து வைப்பது பாதையில் அசிங்கம்
செய்து வைப்பதும் சாபத்திற்குரிய செயல். அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
படிப்பினை-
நிழல் தரும் மரத்தை நிர்பந்தம் இன்றி வெட்டுவது பாவம் என்ற கருத்தும் அந்த
இடங்களில் குப்பை கொட்டுவது பாவம் என்ற கருத்தும் இதற்குள் அடங்கும்.
கடும் வெயிலில் தாகத்தோடு வருபவருக்கு தண்ணீர் தந்து உதவுவதின் நன்மை. தண்ணீர் பந்தல் அமைப்பது உட்பட
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا
فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ
يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا
الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي فَنَزَلَ الْبِئْرَ
فَمَلَا خُفَّهُ مَاءً فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ
قَالُوا يَا رَسُولَ اللَّه وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا فَقَالَ فِي
كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ (بخاري)باب الآبَارِ عَلَى
الطُّرُقِ إِذَا لَمْ يُتَأَذَّ بِهَا-كتاب
المظالم
முற்காலத்தில்
ஒருவர் கடும் வெயில் காலத்தில் வழியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கிணற்றைக்
கண்டார். அதில் இறங்கி நீர் அருந்தி விட்டு வெளியே வந்த போது ஒரு நாய் தாகத்தால்
ஈர மண்ணில் தன்னுடைய நாக்கைப் புரட்டிக் கொண்டிருந்த தைக் கண்டு இந்த வெயில்
காலத்தில் எனக்கு ஏற்பட்ட தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது என்று எண்ணி தன்
காலுறையைக் கழற்றி கிணற்றில் விட்டு அது நிறைய
தண்ணீரை நிரப்பி நாயின் தாகத்தைப் போக்கினார். அதனால் அல்லாஹ் அவருடைய
பாவங்கள் அனைத்தையும் மன்னித்தான். என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின்
தூதரே நாய் போன்ற மிருகங்களுக்கு உபகாரம் செய்தாலும் நன்மையா என்று கேட்க, அதற்கு
நபி ஸல் அவர்கள் எதற்கெல்லாம் ஈரக் குலை உள்ளதோ அந்த அனைத்திற்கும் இது பொருந்தும்
என்று பதில் கூறினார்கள்.
கோடையில் தாகம் தணிக்க
நாம் வாங்கி அருந்தும் குளிர் பானங்களில் தவிர்க்க வேண்டியவைகள்
குளிர்
பானங்கள் என்றாலே பெரும்பாலும் பிரபலமாக இருப்பது பெப்ஸி, மிரிண்டா, போன்ற
அமெரிக்கத் தயாரிப்புகள் தான். ஒரு மீன் தொட்டிக்குள் இவற்றில் சிறிதளவு ஊற்றினால்
சற்று நேரத்தில் அந்த மீண்கள் செத்து விடும் என்ற அளவுக்கு இந்த குளிர் பானங்களில்
கெமிக்கல் உள்ளது. மேலும் அவற்றை காசு கொடுத்து நாம் வாங்கினால் அந்த இலாபத்தில்
ஒரு பகுதி அமெரிக்க யூதர்களைச் சென்றடைகிறது. அவற்றைக் கொண்டே அவர்கள் எத்தனையோ
முஸ்லிம்களை கொல்கிறார்கள். இங்கே ஒரு பெப்ஸி நம் குழந்தையின் தாகத்தை தணிக்கிறது
என்றால் அதன் வருமானம் அங்கே நம் சமுதாய மழலைகளை கொல்லுகிறது.
வெயிலை காரணம் காட்டி நம்மிடம்
அமல்கள் குறைந்து விடக்கூடாது
கடும் குளிர் காலத்தில்
சிலர் எப்படி ஃபஜ்ருக்கு வருவதற்கு சிரமப்படுவார்களோ அவ்வாறே வெயிலைக் காரணம்
காட்டி மஸ்ஜிதுக்கு வருவதற்கும் சிலர் தயங்கி வீட்டில் தொழுபவர்களும் உண்டு
தாங்க
முடியாத வெப்பத்தின் போதும் நபித்தோழர்கள் தொழுகையை விட்டதில்லை
சஜ்தாவில் நெற்றியை
தரையில் வைக்க முடியாத அளவுக்கு தரை சூடாக இருந்த போது நபித்தோழர்களின் நடைமுறை
عَنْ
أَنَسِ قَالَ كُنَّا نُصَلِّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِى شِدَّةِ
الْحَرِّ فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ جَبْهَتَهُ مِنَ
الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ (مسلم) باب اسْتِحْبَابِ تَقْدِيمِ الظُّهْرِ فِى أَوَّلِ الْوَقْتِ فِى
غَيْرِ شِدَّةِ الْحَرِّ.- المساجد - عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ كُنَّا نُصَلِّى مَعَ النَّبِىِّ صلى الله عليه وسلم فَيَضَعُ
أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِى مَكَانِ السُّجُودِ .(بخاري)
وَقَالَ الْحَسَنُ كَانَ الْقَوْمُ يَسْجُدُونَ عَلَى الْعِمَامَةِ
وَالْقَلَنْسُوَةِ وَيَدَاهُ فِى كُمِّهِ . (بخاري) ( بَاب السُّجُود عَلَى الثَّوْب فِي شِدَّة الْحَرّ ) كتاب الصلاة
சஜ்தா செய்யும் இடம் சூடாக இருந்தால் நபித்தோழர்கள்
கைகளில் மண்ணை எடுத்து வைத்துக் கொள்வர். கையில் இருக்கும்போது மண்ணின் சூடு
குறையும். பிறகு சஜ்தாவின் போது அந்த மண்ணை கீழே போட்டு அதன் மீது சஜ்தா
செய்வார்கள்
عن
أنس قال:كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم في شدة الحر فَيَأْخُذ أَحَدنَا الْحَصَى فِي يَده فَإِذَا بَرَدَ
وَضَعَهُ وَسَجَدَ عَلَيْهِ (مسند ابو يعلي
குறிப்பு –கடும் வெயில் காலத்திலும்
மேற்காணும் முறைகளில் கடமை தவறாமல் தொழுகையை நபித்தோழர்கள் நிறைவேற்றியிருக்க,
இன்று பள்ளிகள் தோறும் A/C இருந்தும் கூட வெயிலை காரணம் காட்டி தொழுகையை விடுபவர்கள்
பலர்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " ثَلَاثٌ مِنَ
الْإِيمَانِ: أَنْ يَحْتَلِمَ الرَّجُلُ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ فَيَقُومُ
فَيَغْتَسِلُ، لَا يَرَاهُ إِلَّا اللهُ، وَالصَّوْمُ فِي الْيَوْمِ الْحَارِّ،
وَصَلَاةُ الرَّجُلِ فِي الْأَرْضِ الْفَلَاةِ " (شعب الإيمان
ஹழ்ரத் அபூஹுரைரா ரழி கூறினார்கள்.
மூன்று விஷயங்கள் ஈமானின் நிறைவை அடையாளப்படுத்தும். 1.குளிர் காலத்திலும்
குளிப்புக் கடமையாகி அதிகாலையில் குளித்து விட்டுத் தொழுவது. 2.வெயில் காலத்தில்
நோன்பு வைப்பது 3.ஆளில்லாத வனாந்தரத்தில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவது. அதாவது
யாரும் பார்க்காத நிலையிலும் தொழுவது
كان
أبو الدرداء رضي الله عنه يقول: صلُّو في ظلمة الليل ركعتين لظلمة القبور، صوموا
يومًا شديدًا حرَّهُ لحرِّ يوم النشور، تصدقوا بصدقة السرِّ لهول يوم عسير. - (حلية الاولياء
கப்ரின் இருட்டை
நினைத்துப் பார்த்து இரவில் இரண்டு ரக்அத்தேனும் தொழுங்கள். மஹ்ஷர் மைதானத்தின் கடும் வெப்பத்தை எண்ணிப்
பார்த்து வெயில் காலத்தில் நோன்பு வைத்துப் பழகுங்கள். உலகின் சொத்துகள் பயன்தராத அந்த திடுக்கமான நாளை எண்ணி மறைவாக அதிகம் தர்மம் செய்யுங்கள்.
வெயில் காலத்தில்
நோன்பு வைக்க முடியவில்லையே என்று கவலைப்பட்ட சஹாபிகள்
عن
سعيد بن جبير قال لما أصيب ابن عمر قال : ما تركت خلفي شيئا من الدنيا آسي عليه
غير ظما الهواجر وغير مشي إلى الصلاة.
சகராத் நேரத்தில் இரண்டு
விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார்கள். 1.வெயில் காலத்தில் நோன்பு வைக்கும்
பாக்கியம் இனி கிடைக்காதே என்றும் தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம் இனி
கிடைக்காதே
عَنْ
قَتَادَةَ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ قَيْسٍ، لَمَّا حَضَرَهُ الْمَوْتُ جَعَلَ
يَبْكِي، فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ ؟، قَالَ: " مَا أَبْكِي جَزَعًا مِنَ
الْمَوْتِ وَلَا حِرْصًا عَلَى الدُّنْيَا، وَلَكِنْ أَبْكِي عَلَى ظَمَأِ
الْهَوَاجِرِ عَلَى قِيَامِ اللَّيْلِ فِي الشِّتَاءِ " ((شعب الإيمان
முஆத் ரழி அவர்கள் மரண
நேரத்தில் அழுத போது அதற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மவ்த்தை
நினைத்து வருந்தவில்லை. மாறாக வெயில் காலத்தில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனி
கிடைக்காதே என்றும் கடும் குளிரில் தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம் இனி
கிடைக்காதே என்று நினைத்து அழுகிறேன் என்றார்கள்.
ஹழ்ரத் உமர் ரழி அவர்கள் தன் மகனுக்குச் செய்த
உபதேசங்கள்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ،
قَالَ قال لِي عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: " عَلَيْكَ بِخِصَالِ
الْإِيمَانِ: الصَّوْمُ فِي الصَّيْفِ، وَضَرْبُ الْأَعْدَاءِ بِالسَّيْفِ،
وَتَعْجِيلُ الصَّلَاةِ فِي يَوْمِ الْغَيْمِ، وَإِبْلَاغُ الْوُضُوءِ فِي
الْيَوْمِ الشَّاتِ، وَالصَّبْرُ عَلَى الْمُصِيبَاتِ، وَتَرَكُ رَدْغَةِ
الْخَبَالِ "، قَالَ: وَمَا رَدْغَةِ الْخَبَالِ قَالَ: " شُرْبُ
الْخَمْرِ " (شعب الإيمان
உமர் ரழி அவர்கள் தன் மகனுக்கு உபதேசம்
செய்தார்கள். ஈமானுடைய நற்குணங்களை நீ அவசியமாக்கிக் கொள். 1.வெயில் காலத்தில்
நோன்பு வைத்துப் பழகு.. 2.எதிரிகளிடம் போரில் ஈடுபடு. 3.மேக மூட்டத்தின் போது
தொழுகையை பிற்படுத்தாமல் தொழு. 4.குளிர் காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக
நிறைவேற்று. 5.துன்பங்களின் போது பொறுமையாக இரு. 6.மதுவை அறவே விட்டு விடு.
இதில் இறுதியாகச் சொல்லப்பட்ட அறிவுரை முக்கியமானது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது. இதில் முஸ்லிம்களும் கட்டுப்படுவார்கள். சமீபத்தில் கள்ளச் சாராயம்
குடித்த 19 பேர் பலியான சம்பவம் நாடு
முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض
وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه
السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا
اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك
فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج
منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله
المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت
لأصحابي بخلاف ما قلت لك والثاني : بالحسد
، حسدت أصحابي والثالث : كانت بي علة فجئت
الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك
العلة فكنت اشرب الخمر تبعاً لقول
الطبيب ولهذه الأشياء الثلاثة التي كانت
فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل
الاخرة)
ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ்
அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ்
ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது
உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம்
கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை
விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார். இதைக் கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ்
அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும்
வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச்
செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம் ஃபுழைல் இப்னு
இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம்
பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம்
பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என்
நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள்
மீதே நான் பொறாமை கொள்வேன். 3. எனக்கு ஒரு
நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது
அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை
அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது
பாவங்களுக்கெல்லாம் தாய் என போதை வஸ்துக்களை உஸ்மான் ரழி அவர்கள்
வர்ணித்தார்கள்
عن عُثْمَانَ رض اجْتَنِبُوا الْخَمْرَ
فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ
تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا
فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا
فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى
امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي
وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ
أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ
قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ
زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ
فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ
وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ (نسائ
உஸ்மான் ரழி
அவர்கள் கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக்
கொள்ளுங்கள் முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு நடத்தை
கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.
ஒருநாள் அவள் தன் பணிப் பெண்ணை அனுப்பி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் தனக்காக
சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல
எண்ணத்தில் அங்கு வந்தார். ஆனால் அவர்
வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில் அவள் இருக்க
அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது. அப்போது
அப்பெண் அவரிடம் சாட்சி சொல்ல உம்மை
அழைக்கவில்லை. மாறாக நீ என்னிடம் உறவு
கொள்ள வேண்டும். அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல
வேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று
கூற, அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர் மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று
விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித்
தரக்கூறினார். சற்று நேரத்தில் போதை
ஏறியவுடன் அவளிடம் உறவும் கொண்டு விட்டார்.
போதையில் அக்குழந்தையையும் கொன்று விட்டார்.
எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக ஈமானும்
மதுப்பழக்கத்தில் மூழ்குவதும் ஒரு
மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என உஸ்மான் ரழி கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக