வியாழன், 28 மார்ச், 2024

இஃதிகாஃபின் சிறப்புகளும் சட்டங்களும்

 ரமழான் கடைசி பத்து நாட்களின் சிறப்பு

عن عَائِشَة رض كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ(مسلم) باب الاِجْتِهَادِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ – كتاب الاعتكاف 

மற்ற நாட்களை விட ரமழான் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் அதிகம் வணகத்தில் ஈடுபடுவார்கள்

عَنْ عَائِشَةَ رَضِ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَه(بُخاري) باب الْعَمَلِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-كتاب فضل ليلة القدر- قِيلَ لأَبِي بَكْرٍ مَا رَفْعُ الْمِئْزَرِ؟ قَالَ:اعْتِزَالُ النِّسَاءِ (مصنف ابن ابي شيبة) 

இஃதிகாஃப் என்பதன் பொருள்

وَالِاعْتِكَافُ فِي اللُّغَةِ مُشْتَقٌّ مِنْ الْعُكُوفِ وَهُوَ الْمُلَازَمَةُ وَالْحَبْسُ وَالْمَنْعُ وَمَحَاسِنُ الِاعْتِكَافِ ظَاهِرَةٌ فَإِنَّ فِيهِ تَسْلِيمَ الْمُعْتَكِفِ كُلِّيَّتَهُ إلَى طَاعَةِ اللَّهِ لِطَلَبِ الزُّلْفَى وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (جوهرة النيرة)

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனைதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு. இஸ்லாத்தில் ‘இஃதிகாஃப்’ என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு பெயராகும். அவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளையும் பேசாமலும் பள்ளியில் தங்கியிருந்து தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும்.

இஃதிகாஃபின் நன்மைகள்

عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. (شعب الايمان-لبيهقى-3680)

ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு  ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-

عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم, والبيهقى-3965)

இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருப்பவருக்கு, அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, ஹாகிம், பைஹகீ-

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)

ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)

இஃதிகாஃப் மூன்று வகை 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்]  2, சுன்னத் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3,  நஃபில்

الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف-

வாஜிபான இஃதிகாஃப் என்பது நேர்ச்சை இஃதிகாஃபைக் குறிக்கும் செய்யும் உமர் ரழி அவர்கள் நபி ஸல்அவர்களிடம் நான் மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்தேன் அதை இப்போது நிறைவேற்றவா என கேட்க, ஆம் நிறைவேற்றுங்கள் என்றார்கள்            

الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ- 

சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப். இதுதான் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்]   

நபி (ஸல்) அவர்கள் கடைசி காலம் வரை ரமளான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்துவந்தனர்.

-الثالث  فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)

மஸ்ஜிதில் நுழையும் போது இஃதிகாஃப் நிய்யத்தில் நுழைவது. சிறிது நேரமாக இருந்தாலும் சரி. இதற்கு காலம் நிர்ணயம் இல்லை. எப்போது அவர் வருவாரோ அத்தோடு அது நிய்யத் முடிந்து விடும்.          

கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாக ஆகாது 

قَالَ الزُّهْرِيُّ  يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة

ஆச்சரியமாக இருக்கிறது. நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்பு  ஒரு வருடம் கூட விடாத இந்த சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃபை மக்கள் எவ்வாறு விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது இந்த இஃதிகாஃப் நோன்பு என்ற வணக்கத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இரண்டு வணக்கமாக நிறைவேறுகிறது. உள்ளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பதும் உலக சிந்தனைகளில் இருந்து தூரமாக இருப்பதும் இதில் இருக்கிறது 

இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்

وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ  (الجوهرة)

இஃதிகாஃப் ஆரம்பித்த பின் நிர்பந்தத்தால் விடுபட்டால் அதை இன்னொரு நாளில் களா செய்ய வேண்டுமா ?

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري) بَاب مَنْ أَرَادَ أَنْ يَعْتَكِفَ ثُمَّ بَدَا لَهُ أَنْ..

 ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை  அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப்  பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது  நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன  என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை  ஆயிஷா , ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற , இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன.  பின்பு நபி ஸல் அவர்கள் நான்  இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் புஹாரீ – 2041, 2045, 2031,                                 

இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி ஸல் அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில்  நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல.. 

அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன ?

கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் ( ஃபத்ஹுல் பாரீ)                  

இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும்

ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள் 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ..قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ1 فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ2 تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)(باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى الطِّينِ)كتاب الأذان

 ஒரே ஒரு லைலத்துல் கத்ரு இரவை பத்து நாட்களிலும் தேட வேண்டுமா என்று சங்கடப்பட்டு 27-ம் இரவில் மட்டும் அமல் செய்தால் அந்த இரவு கிடைத்து விடும் என்று எண்ணுபவர்களுக்கு மேற்படி ஹதீஸ் பகதிலடியாக  அமைந்துள்ளது. நபி ஸல் அவர்களை மூன்று பத்து நாட்களிலும் அந்த இரவை அல்லாஹ் தேட வைத்துள்ளான் 

இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்- 

عن ابن عباس والحسن رض قالا  لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي)

ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود) بَاب الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ-الصَّوْمِ- 

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை நலம் விசாரிக்க வெளியே செல்ல மாட்டார். ஜனாஸாவில் கலந்து கொள்ள வெளியே வர மாட்டார். மனைவியைத் தொடக் கூடாது. மனைவியைதக் கட்டித் தழுவக் கூடாது. அவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். நோன்பு இல்லாமல் இந்த இஃதிகாஃப் கூடாது- ஆயிஷா ரழி 

المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة  قاله ابن خويز منداد عن مالك (قرطبي)

குர்துபி யில் உள்ள வாசகம்.  இஃதிகாஃப் இருப்பவர் பெரும்பாவம் செய்து விட்டால் அவரின் இஃதிகாஃப் முறிந்து விடும். காரணம் பெரும்பாவம் என்பது இஃதிகாஃபின் நோக்கத்திற்கு நேர் மாற்றமான செயலாகும் எவ்வாறு காற்றுப் பிரிந்தால் சுத்தம் இல்லாமல் ஆகி விடுமோ அதுபோல. -  இமாம் மாலிக் ரஹ்

வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும் இது பற்றி எல்லா சட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.                                               

பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்

أَنْ لاَ يَعُودَ مَرِيضًا : عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ4 يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ  أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)

நபி ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது  நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிப்பார்கள் நின்று கொண்டு நலம் விசாரிக்க மாட்டார்கள்

மலம்,ஜலம் கழிக்கச் செல்பவர் யாரிடமும் தேவையின்றி பேசிக் கொண்டிருக்காமல் உடனே திரும்பி விடுவது நல்லது

وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ  مِنْ الطَّهُورِ (الهداية)

கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது

நபி[ஸல்] ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது அதுவரை இறங்கிய குர்ஆனை முழுவதும் வானவர் ஓதிக்காட்டுவார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ (ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ

இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு

மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது

عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)

மஸ்ஜிதில் நான்கு செயல்களை நபி ஸல் தடுத்தார்கள்.1.விற்பது வாங்குவது 2.(அல்லாஹ்வை நினைவு படுத்தாத) கவிகள் படிப்பது 3.காணாமல் போன பொருளை சப்தமிட்டுத் தேடுவது4. தொழுகைக்கு முன்னால் மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பது                                        

இஃதிகாஃப் இருப்பவர் யாரிடமும் பேசக் கூடாது என்று கருதுவதும் தவறாகும், முந்திய உம்மத்தினருக்கு அந்த அனுமதி இருந்தது

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم) 26فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.(اضواء البيان) 

عَنْ حَارِثَةَ قَالَ:كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلاَنِ فَسَلَّمَ أَحَدُهُمَا وَلَمْ يُسَلِّمِ الآخَرُ فَقُلْنَا أَوْ قَالَ مَا بَالُ صَاحِبِكَ لَمْ يُسَلِّمْ قَالَ : إِنَّهُ نَذَرَ صَوْمًا لاَ يُكَلِّمُ الْيَوْمَ إِنْسِيًّا. قَالَ عَبْدُ اللَّهِ بِئْسَمَا قُلْتَ إِنَّمَا كَانَتْ تِلْكَ امْرَأَةً قَالَتْ ذَلِكَ لِيَكُونَ لَهَا عُذْرا وَكَانُوا يُنْكِرُونَ أَنْ يَكُونَ وَلَدٌ مِنْ غَيْرِ زَوْجٍ إِلاَّ زِنًا - فَسَلِّمْ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ خَيْرٌ لَكَ(تفسير ابن كثير

ஹாரிஸா ரழி கூறினார்கள் நான் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அமர்ந்திருந்தேன் அப்போது இரு நபர்கள் வந்தார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் ஸலாம் கூற, மற்றவர் ஸலாம் கூறவில்லை. அப்போது நாங்கள் அதுபற்றி எங்களுக்கு சலாம் சொன்ன நபரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறினார் அந்த நபர் நோன்பு வைத்துள்ளார் அதனால் யாரிடமும் பேச மாட்டார் என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. மர்யம் அலைஹிஸ்ஸலாம் என்ற பெண்ணுக்கு மட்டும் அந்த அனுமதி இருந்த து. கணவன் இல்லாமல் குழந்தை பெற்றதால் அந்த சமூகம் அதைப் பழித்துப் பேசியதால் அல்லாஹ் அவ்வாறு உத்தரவிட்டான். இது நமக்குக் கிடையாது எனவே நீங்கள் பேசுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையைத் தடுங்கள் நன்மை கிட்டும்.  

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ فَرَآهَا لَا تَكَلَّمُ فَقَالَ مَا لَهَا لَا تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً5 قَالَ لَهَا تَكَلَّمِي فَإِنَّ هَذَا لَا يَحِلُّ هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ فَتَكَلَّمَتْ (بخاري) باب أَيَّامِ الْجَاهِلِيَّةِ – كتاب مناقب الأنصار عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ وَلَا يَسْتَظِلَّ6 وَلَا يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ (بخاري)باب النَّذْرِ فِيمَا لاَ يَمْلِكُ وَفِى مَعْصِيَةٍ- كتاب الَأيمان والنذور

ஜைனப் என்ற பெண்ணிடம் அபூபக்கர் ரழி வருகை தந்தார்கள் அவர் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கண்டு இவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டது. உடனே அபூபக்கர் ரழி அவர்கள் அதைக் கண்டித்து இது அறியாமைக் காலத்தின் செயல் என்றார்கள் அதன் பிறகு அவர் பேசினார்

இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியின் வாசலில் நின்று நபி ஸல் மனைவியிடம் பேசிய சம்பவம்

عن صَفِيَّةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بُخاري)2038 باب هَلْ يَخْرُجُ الْمُعْتَكِفُ لِحَوَائِجِهِ إِلَى بَابِ الْمَسْجِدِ- كتاب الاعتكاف-شرح : (ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ )أَيْ تَرُدُّ إِلَى بَيْتِهَا(فَقَامَ مَعَهَا يَقْلِبُهَا )أَيْ يَرُدُّهَا إِلَى مَنْزِلِهَا (عَلَى رِسْلِكُمَا )أَيْ عَلَى هِينَتِكُمَا فِي الْمَشْي فَلَيْسَ هُنَا شَيْءٌ تَكْرَهَانِهِ (فتح الباري) وَالْمُحَصَّلُ مِنْ هَذِهِ الرِّوَايَات أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْسُبْهُمَا إِلَى أَنَّهُمَا يَظُنَّانِ بِهِ سُوءًا لِمَا تَقَرَّرَ عِنْده مِنْ صِدْقِ إِيمَانِهِمَا وَلَكِنْ خَشِيَ عَلَيْهِمَا أَنْ يُوَسْوِسَ لَهُمَا الشَّيْطَان ذَلِكَ لِأَنَّهُمَا غَيْرُ مَعْصُومَيْنِ فَقَدْ يُفْضِي بِهِمَا ذَلِكَ إِلَى الْهَلَاكِ فَبَادَرَ إِلَى إِعْلَامهمَا (فتح الباري)

நம் மீது தவறு இல்லா விட்டாலும் பிறர் தவறாக எண்ணும்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற பாடமும்  இதில் உண்டு

பொருள்-1,எந்த இரவைத் தேடுகிறீர்களோ அந்த இரவு இனிமேல் தான் வரவிருக்கிறது, 2, மூக்கின் நுனி 3, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது 4,நிற்க மாட்டார்கள் 5,மவுனமாகவே இருந்து ஹஜ் செய்வதாக, 6,நிழலில் ஒதுங்க மாட்டேன் 7,சிறைக்கைதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...