11-07-2025 بسم الله الرحمن الرحيم
அஹ்லுல் பைத்துகளின் சிறப்பும்
கர்பலா சம்பவமும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி
قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣
;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமின்களே ! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை எடுத்துச் சொன்னதற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் [ ஷூரா =23 ]
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي (ترمذي
நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது சலவாத் சொல்லாமல் தொழுகை பரிபூரணம் அடைவதில்லை
عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد (بخاري
நபியின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்து காப்பாற்றும் என தஹாவி இமாமின் கூற்று,
ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).
وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة بضعة مني فمن أغضبها أغضبني "
وعن البراء قال : رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول : " اللهم إني أحبه فأحبه " متفق عليه
அஹ்லுல் பைத் என்றால் யார்
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719
நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “ இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள். அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ னது அந்தஸ்தான இட்த்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719
இந்நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறதுமருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால அந்த இடத்தில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள்.
அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வலஜமாஆவின் கருத்தாகும்.
நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விஷயமாக நபித்தோழர்கள் கருதினார்கள்
؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-
عَنْ كَثِيرِ بن عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَّ الْخَنْدَقَ مِنْ أَحْمَرَ الْبَسْخَتَيْنِ طَرَفِ بني حَارِثَةَ عَامَ حِزْبِ الأَحْزَابِ، حَتَّى بَلَغَ الْمَذَابِحَ، فَقَطَعَ لِكُلِّ عَشَرَةٍ أَرْبَعِينَ ذِرَاعًا، فَاحْتَجَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ فِي سَلْمَانَ الْفَارِسِيِّ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ رَجُلا قَوِيًّا، فَقَالَ الْمُهَاجِرُونَ: سَلْمَانُ مِنَّا، وَقَالَتِ الأَنْصَارُ: سَلْمَانُ مِنَّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ" .(طبراني
சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர். அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியக நின்றார். மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா)
ஸய்யித் வம்சம் என்று யாருக்குக் கூறப்படும்
السيد عند المسلمون من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]
ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக் கூறப்படும் .
அன்னை ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே அஹ்லே பைத்துகள் ஆவர்கள் ,என்று ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ்] அவர்கள் தாங்களின் ஹத்யா ஷரீஃபின் =302 ,ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
கர்பலா சம்பவமும் அதன் படிப்பினைகளும்
நபி ஸல் அவர்களின் காலத்தில் தீய சக்தி தோற்கடிக்கப்பட்டு அடங்கி மறைந்திருந்தாலும் அவர்களின் காலத்திற்குப் பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்க முயற்சி எடுக்கப்பட்டன. ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் முயற்சியால் அது தோற்கடிக்கப்பட்டது அடுத்து உமர் ரழி அவர்களின் ஆட்சியில் உலகின் பல பாகங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தாலும் எதிரிகளின் சூழ்ச்சி சற்று விஸ்வரூபம் எடுத்ததால் உமர் ரழி அவர்கள் கொல்லப்பட்டாலும் எதிரிகள் நினைத்தது போல் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்து விடவில்லை. பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான ரழி அவர்களின் காலத்தில் எதிரிகள் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்க மேலும் முயன்றனர் இந்நிலையில் யமன் நாட்டில் இருந்து இப்னுஸபா எனும் யூதன் முஸ்லிம் வேடம் தரித்து மதீனா வந்தான் குழப்பம் ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவன் அலீ ரழி அவர்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக் கொண்ட அவன் உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு அஹ்லே பைத் உடையவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் வாதாடினான். இவன் எல்லா இடங்களுக்கும் சென்று தனக்கு ஆதரவாளர்களை திரட்டினான். குறிப்பாக ஈரானிய மக்கள் இவனுடைய பிரச்சாரத்தை மிகவும் நம்பினர் இதனால் உஸ்மான் ரழி அவர்களுடைய ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களிடையே சண்டை சச்சரவுகள் பெருகி, அதன் விளைவாக உஸ்மான் ரழி கொல்லப்பட்டார்கள். பின்பு அலீ ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தன. அலீ ரழி அவர்கள் ஆட்சி செய்த முதல் 5 வருடங்களில் முஸ்லிம்களிடையே நடைபெற்ற ஜமல், சிஃப்பீன், நஹர்வான் ஆகிய சண்டைகளில் மட்டும் சுமார் 84 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் இறுதியாக அலீ ரழி அவர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முஆவியா ரழி அவர்கள் 20 வருடங்கள் ஆட்சி செய்தார்கள் அவர்களுடைய ஆட்சியில் முதல் 10 வருடங்களில் பிரச்சினைகள் இருந்தாலும் முஆவியா ரழி அவர்களின் கடும் முயற்சியால் அவைகள் முறியடிக்கப்பட்டு அமைதி நிலவியது. ஸபஇய்யான்கள் எனப்படும் இப்னுஸபாவின் ஆதரவாளர்கள் சற்று அடங்கிப் போயிருந்தனர் ஆனால் முஆவியா ரழி அவர்களின் கடைசி காலத்தில் அவரது மகன் யஜீதை ஆட்சிக்கு வாரிசாக நியமிக்க முடிவு செய்யப்பட்டதோ அப்போதிருந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது. காரணம் இந்த முடிவு ஜனநாயக முறையில் எடுக்கப்படவில்லை எனினும் இந்த முடிவை எடுத்தவர்களை முற்றிலும் குறை கூறி விட முடியாது. ஏனெனில் இந்த முடிவை எடுத்தவர்களில் முஙீரத் இப்னு ஷுஃபா ரழி போன்ற பெரும் சஹாபாக்களும் அடங்குவர் நபி ஸல் அவர்களிடம் மரத்திற்குக் கீழே பைஅத் செய்தவர்களில் இவரும் ஒருவர்
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18الفتح)
இவர்கள் அவசரமாக யஜீதை கலீஃபாவாக முடிவு செய்யக் காரணம் முஆவியா ரழி அவர்களின் மரணத்திற்குப் பின் கலீஃபா யார் என்று உடனே முடிவு செய்யா விட்டால் முன்பு நிகழ்ந்தது போல முஸ்லிம்களிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு விடும் என்று பயந்ததால் இந்த முடிவை எடுத்தனர்.
யஜீதை பல சஹாபாக்கள் எதிர்க்க காரணம்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழி, இப்னு உமர் ரழி, இப்னு அப்பாஸ் ரழி, அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்கர் ரழி போன்றோர் யஜீத் கலீஃபாவாக நியமிக்கப்பட்டதை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நியமனம் இஸ்லாமிய உணர்வுக்கு எதிரானது என்றும் கூறினர். யஜீதை கலீஃபாவாக ஏற்கும்படி கோரப்பட்ட போது அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்கர் ரழி அவர்கள் கூறிய விமர்சனம் முக்கியமானது அதாவது நபி ஸல் அவர்களுடைய, நேர்வழி நடந்த கலீஃபாக்களின் வழிமுறையை பின்பற்றாமல் ரோம, பாரசீக மன்னர்களின் வழிமுறையை பின்பற்றுகிறீர்களா என்று கேட்டார்கள்.
இனி அன்றைய சூழ்நிலையில் ஹுஸைன் இப்னு அலீ ரழி அவர்கள் எடுத்த முடிவைப் பற்றி காண்போம்.
யஜீத் கலீஃபாவாக நியமிக்கப்பட்டது நபிவழிக்கும், ஜனநாயக மரபுக்கும் முற்றிலும் மாற்றமானது என்றும், வாரிசு அரசியலுக்கு இது வழி வகுத்து விடும் என்றும் ஹுஸைன் ரழி கருதினார்கள் அதனால் தன் பலம் கொண்ட மட்டும் அதை எதிர்ப்பது என்று முடிவு செய்தார்கள் கூஃபாவில் இருந்து அவர்களுக்கு வந்த செய்திகள் கடிதங்கள் அனைத்தும் அன்னாரின் முடிவை ஆதரிப்பதாகவே இருந்தன. கூஃபா அன்றைய காலத்தில் முஸ்லிம்களின் முக்கிய நகரம் என்பதால் அங்குள்ளவர்களின் ஆதரவு கிடைத்தால் அரசியலமைப்பில் ஏற்டவிருக்கும் மாற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என்று இமாம் ஹுஸைன் ரழி கருதினார்கள். இந்நிலையில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு ஜுபைர் ரழி அவர்களும் இதே கருத்துடையவர்களாக இருந்தாலும் கூஃபா மக்களின் பேச்சை நம்பி அங்கு செல்ல வேண்டாம் என இமாம் ஹுஸைன் ரழி அவர்களை தடுத்தார்கள் ஏனெனில் இதற்கு முன்பும் ஹழ்ரத் அலீ ரழி அவர்களையும், அவர்களுடைய மகனார் ஹஸன் ரழி அவர்களையும் கூஃபா மக்கள் வஞ்சித்துள்ளார்கள் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள் ஆகவே அவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று இமாம் அவர்களை எச்சரித்தார்கள் இருப்பினும் இமாம் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அனைவரின் எச்சரிக்கைகளையும், வேண்டுகோளையும் புறந்தள்ளி விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து கூஃபா செல்ல தீர்மானித்தார்கள். எனினும் இமாம் அவர்கள் முதலில் தம் உறவினர் முஸ்லிம் இப்னு அகீலை கூஃபாவுக்கு முதலில் அனுப்பி வைத்தார்கள் அதாவது கூஃபாவிலிருந்து யஜீதுக்கு எதிராகவும் தமக்கு ஆதரவாகவும் வந்த கடிதங்கள் உண்மையா என்று அறிந்து வருவதற்காக அவரை அனுப்பி வைத்தார்கள் அங்கு சென்ற அவரும் கூஃபா மக்கள் உண்மையிலேயே இமாம் அவர்கள் மீது மிகவும் பற்றுள்ளவர்களாக இருப்பதாத தகவல் சொல்லியனுப்பினார். இமாம் அவர்கள் கூஃபா செல்ல தயாரானார்கள் அப்போதும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு அப்பாஸ் ரழி அவர்களும், இப்னு ஜுபைர் ரழி அவர்களும் இமாம் அவர்களை கூஃபாவுக்கு செல்ல வேண்டாம் என தடுத்தார்கள். அப்படியே அங்கு செல்வதாக தீர்மானித்தாலும் பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் மக்காவில் விட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார்கள்
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் கூஃபாவுக்கு புறப்பட்டார்கள். போகும் வழியில் தான் மிக வேதனையாக செய்தி வந்தது அதாவது யஜீதுடைய ஆட்கள் முஸ்லிம் இப்னு அகீலை கொலை செய்து விட்டார்கள் என்றும் இக்கொலை பற்றி அறிந்தும் கூஃபா மக்கள் அக்கறையில்லாமல் இருந்து விட்டார்கள் என்றும் கூஃபா மக்களைப் பற்றி எந்த அளவுக்கு அவர் நம்பிக்கையுடன் கடிதம் எழுதினாரோ அதற்கு நேர் மாற்றமாக அவர்கள் யஜீதுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள் என்ற செய்தி இமாம் அவர்களுக்கு கிடைத்தது. இவற்றையெல்லாம் அறிந்த இமாம் அவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள் கூஃபாவை நோக்கிச் செல்வதா அல்லது மக்காவுக்கு திரும்பி விடுவதா என்று யோசித்தார்கள் பொதுவாக தம் இனத்தவரில் யாரேனும் கொல்லப்பட்டு விட்டால் அதற்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு அரபியர்களுக்கு சர்வ சாதாரணமானது இந்த உணர்வை இமாம் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இப்னு அகீல் உடைய உறவினர்களும் அங்கு இருந்தனர் கொலையாளிகளை பழி வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தனர். இவர்களை அப்படியே விட்டு விட்டு மக்காவுக்கு திரும்புவது இமாம் அவர்களுக்கு கண்ணியமற்ற செயலாகும். எனவே அவர்களுடன் சேர்ந்து இமாம் அவர்களும் கூஃபா நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இந்நிலையில் இமாம் அவர்களின் உறவினர் அப்துல்லாஹிப்னு ஜஃபர் தய்யார் அவர்களின் இரு மகன்களும் அங்கு வந்து தங்களின் தந்தை அல்லாஹ்விற்காக நீங்கள் கூஃபா போக வேண்டாம் என்று சொன்னதாக அறிவித்தனர் அதையும் பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் அவ்விருவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் பிரயாணத்தை தொடர்ந்து கர்பலா மைதானம் சென்றடைந்தார்கள். கூஃபாவின் கவர்னர் இப்னு ஜியாத் ஆயிரம் படை வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். ஆட்சியாளரான யஜீத் ஏவிய படி, இப்னு ஜியாத்... இமாம் அவர்களுக்கு ஒரு கெடு விதித்தார். அதாவது நீங்கள் கூஃபாவை நோக்கியும் முன்னேறக்கூடாது. மக்காவுக்கும் போகக் கூடாது வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என இப்னு ஜியாத் அறிவித்தார். இந்நிலையில் இமாம் அவர்களுக்கு சாத்தியமான வழி ஒன்று தான். அதாவது தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைவது தான். ஆனால் இமாம் அவர்கள் கர்பலாவிலேயே தங்கியிருந்து அங்கு இப்னு ஜியாத் உடன் வந்திருந்த கூஃபா மக்களின் ஆதரவைப் பெற முயற்சித்தனர். தனக்கு ஆதரவுக் கடிதம் அனுப்பியவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து அவர்கள் வாக்களித்த படி தமக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரினார்கள். ஆனால் கொடுமைக்கு ஆளாகி விடுவோம் என பயந்த கூஃபா மக்கள் அப்படி எந்த கடிதத்தையும் நாங்கள் எழுதவேயில்லை பகிரங்கமாக மறுத்தனர். இதற்கிடையில் உமருப்னு ஜைத் என்பவருடைய தலைமையில் 4000 பேர் கொண்ட படை டமாஸ்கஸிலிருந்து வந்து சேர்ந்தது இவர் சற்று இமாம் அவர்களின் மீது அனுதாபம் கொண்டவர். அவர் வந்தவுடன் அங்கே இமாம் அவர்களுடன் தனிமையில் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது இமாம் அவர்களும் நிலைமையை உணர்ந்து மூன்று கோரிக்கையை முன் வைத்தார்கள். அதில் ஒரு கோரிக்கை தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்று யஜீதுடன் பேச அனுமதியுங்கள் என்பதாகும். அதன்படி உமருப்னு ஜைத் கூறினார் சரி.. நீங்கள் கூறியபடி உங்களை யஜீதிடம் அனுப்பி வைப்பதற்கு இப்னு ஜியாதிடம் நான் பேசுகிறேன் என்று கூறி சமாதானத்திற்கு முயன்ற போது இப்னு ஜியாத் அருகில் ஷமிருப்னு துல்-ஜவ்ஷன் என்பவன் இருந்தான். அவன் இப்னு ஸபா உடைய கைக்கூலி. (இப்னு ஸபா பற்றி ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.) அந்த ஷமிருப்னு துல்-ஜவ்ஷன் சமாதானம் நடைபெற விடாமல் தடுத்தான். இப்னு ஜியாதிடம் சாதுர்யமாக பேசி இமாம் அவர்களை முடக்கும்படி கூறினான். எவ்வித நிபந்தனையும் இன்றி அவரை சரணடையும்படி உத்தரவிடுங்கள். அல்லது போருக்கு தயாராகும்படி உத்தரவிடுங்கள் என்று இப்னு ஜியாதை தூண்டிய போது அவனுடைய பேச்சில் அவர் மயங்கினார். உமருப்னு ஜைத் உடைய சமாதானப்பேச்சு முறியடிக்கப்பட்டு ஸபஇய்யீன்களின் திட்டம் அங்கே நிறைவேறியது. எவ்வித நிபந்தனையும் இன்றி அவரை சரணடைவது இமாம் அவர்களுக்கு இடப்பட்ட நியாயமற்ற கோரிக்கை. அவ்வாறு சரணடைவதுஅவர்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல. ஆகவே போதிய ஆயுத பலமில்லாமலும், எண்ணிக்கை குறைவாக இருந்தும் எதிரிகளோடு மோத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இவ்விதமாக ஜமல், மற்றும் சிஃப்ஃபீன் யுத்தங்களுக்கு முன் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுக்களை எவ்வாறு ஸபஇய்யீன்கள் (இப்னு ஸபா வின் ஆதரவாளர்கள்) முறியடித்தார்களோ அவ்வாறே கர்பலாவிலும் முறியடித்தார்கள். இமாம் அவர்களும் உடன் இருந்த 72 பேரும் ஈவு இரக்கமில்லாமல் கொல்லபட்டார்கள். அவர்களில் யாரும் பின்வாங்காமல் போரிட்டு ஷஹீதானார்கள் வெள்ளிக்கிழமை காலையில் இது நடந்தது அதற்கு முந்திய தினம் வியாழக்கிழமை அன்று லுஹர், அசரை இமாம் அவர்கள் தொழ வைத்த போது யஜீதுடைய படையினர் அனைவரும் இமாம் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள்
ஹுஸைன் ரழி அவர்களின் ஷஹாத த் பற்றி நபிகளாருக்கு முன்பே தெரியும்
عن ام الفضل بنت الحارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت : يا رسول الله إني رأيت حلما منكرا الليلة . قال : " وما هو ؟ " قالت : إنه شديد قال : " وما هو ؟ " قالت : رأيت كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري . فقال رسول الله صلى الله عليه وسلم : " رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك " . فولدت فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم . فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه وسلم تهريقان الدموع قالت : فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال : " أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني بتربة من تربته حمراء " (مشكاة
முஸ்லிம்களிடம் ஏற்டபடவிருந்த ஒற்றுமையை எவ்வாறு இப்னு ஸபாவின் ஆதரவாளர்கள் முறியடித்தார்களோ
அதே போன்று இன்றும் மேற்கத்தியர்களின் சதியால் முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக் கொள்ளும் நிலை
குறிப்பாக நபி ஸல் அவர்களின் காலத்திலிருந்து கடந்த நூற்றாண்டு வரை நீடித்த உலகளாவிய முஸ்லிம் தலைமை மேற்குலகின் சதியால் வீழ்த்தப்பட்ட வரலாறு
முஸ்லிம்களின் ஒரே தலைமையாக விளங்கிய கிலாஃபா இஸ்லாமிய ஆட்சி துருக்கி இஸ்தான்புல் நகரில் துரோகி முஸ்தஃபா கமால் என்ற மேற்குலகின் அடிவருடியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28- ல் கி.பி. 1942 மார்ச் 3-ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்
கிலாஃபத்தை வீழ்த்த பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்றைய தினம் உலகமே அறியும். முஸ்லிம்களை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதால் சிந்தனை ரீதியாக வீழ்த்த நினைத்தனர். இஸ்லாமிய ஆட்சியினுள் தங்களுடைய மிஷினரிகளை அனுப்பி மேற்கத்திய பாணியில் நடைபெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், ஆகியவற்றை அமைத்தனர். புத்தகங்கள், ஊடகங்கள் மூலமாக மேற்கத்திய சிந்தனைகள் விதைக்கப்பட்டன. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் அதிகமாக கவனத்தைச் செலுத்தியதால் அதிகமாக பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மேற்கத்திய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். இவ்வாறாக கிலாஃபத்தை வீழ்த்தும் மேற்கத்தியர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்த து. துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிலாஃபத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கிலாஃபத் ஆட்சியில் முக்கிய இராணுவ தளபதிகளில் ஒருவனாக இருந்த முஸ்தஃபா கமால் என்பவன் பதவி வெறியால் உள்ளுக்குள் இருந்து கொண்டே இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனை ஒரு கருவியாக மேற்குலகம் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறாக முஸ்லிம்களின் வசமிருந்த நிலப்பகுதிகளை கைப்பற்றியதோடு அங்கு முஸ்லிம்களிலேயே மேற்கத்திய சிந்தனை கொண்டவர்களை பதவியில் அமர்த்தினர். இதனால் முஸ்லிம்களின் நிலப்பகுதிகள் பிளவுபட்டது. அங்கு முஸ்லிம்கள் என்ற போர்வையில் மேற்கத்திய அடிவருடிகள் ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் விவகாரங்களை மேற்குலகம் தான் தீர்மாணிக்க வேண்டும் என்ற இழிநிலை உருவானது. இறுதியாக ஹிஜ்ரி 1342 ரஜப் 28- ல் கி.பி. 1942 மார்ச் 3-ல் வீழ்த்தப்பட்டது.
கிலாஃபா வீழ்த்தப்பட்ட பின் 1924 ஜூன் 24-ல் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு பின்வருமாறு பேசினார்
இனி நாம் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உண்டாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதை ப் போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடம் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம். அது ஒருபோதும் மீண்டு எழுந்த வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை நாம் வீழ்த்தி விட்டோம்.
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يُوشِكُ الأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا ». فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ « بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِى قُلُوبِكُمُ الْوَهَنَ ». فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهَنُ قَالَ « حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ ».(ابوداود
விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வர் என நபி ஸல் கூறியவுடன் யாரஸூலல்லாஹ் அந்த அளவுக்கு எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் நீக்கி, உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ் பலவீனம் என்றால் என்ன என்று கேட்க உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். அபூதாவூத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக