வியாழன், 28 ஆகஸ்ட், 2025

அகிலத்தின் அருட்கொடை

 29-08-2025

ரபீஉல் அவ்வல்- 5


بسم الله الرحمن الرحيم  

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


{ وَمَا أرسلناك إِلاَّ رَحْمَةً للعالمين} ففيه مسائل :المسألة الأولى: أنه صلى الله عليه وسلم كان رحمة في الدين وفي الدنيا أما في الدين فلأنه عليه السلام بعث والناس في جاهلية وضلالة وأهل الكتابين كانوا في حيرة من أمر دينهم لطول مكثهم وانقطاع تواترهم ووقوع الاختلاف في كتبهم فبعث الله تعالى محمداً صلى الله عليه وسلم حين لم يكن لطالب الحق سبيل إلى الفوز والثواب فدعاهم إلى الحق وبين لهم سبيل الثواب وشرع لهم الأحكام وميز الحلال من الحرام (تفسير الرازي

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடை என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது

முதலாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீன் துனியா இரண்டுக்கும் ரஹ்மத் ஆக இருக்கிறார்கள்

தீனுடைய விஷயத்தில் அருட்கொடை என்பதன் விளக்கம் மக்காவாசிகள் நீண்ட நாட்கள் இறைத்தூதர் இல்லாத காரணத்தால் பெரும் வழிகேட்டில் இருந்த நேரத்தில் அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி அந்த குறையை தீர்த்து வைத்தான். அவர்களை இஸ்லாத்தின் பக்கம் இணையச் செய்தான்.                 

وثانيها :أن كل نبي قبل نبينا كان إذا كذبه قومه أهلك الله المكذبين بالخسف والمسخ والغرق وأنه تعالى أخر عذاب من كذب رسولنا إلى الموت أو إلى القيامة-عن ابن عباس رضي الله عنه في قول الله عز وجل "وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِّلْعَالَمِينَ" قال من آمن به تمت له الرحمة في الدنيا والآخرة ومن كفر به صرفت عنه العقوبة التي كان يعاقب بها الأمم يعني في الدنيا 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ (بخاري

      விளக்கம்- இரண்டாவதாக துன்யாவுடைய விஷயத்தில் அருட்கொடை என்றால் அல்லாஹுத்தஆலா இதற்கு முன்பு பல சமுதாயங்களை அழித்திருக்கிறான் காரணம் அவர்களுடைய இறைத்தூதர்களை பொய் படுத்தியதன் காரணமாக அந்த இறைத்தூதர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அல்லாஹ் அந்த மக்களை அழித்தான் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அப்படி துஆ செய்யவில்லை ஒவ்வொரு நபிக்கும் ஒரே ஒரு முக்கியமான துஆ செய்து பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது பல நபிமார்கள் அந்த துஆவை தன் உம்மத்தில் அல்லாஹ்வின் அழைப்பை புறக்கணித்தவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அந்த துஆவை பத்திரப்படுத்தி வைத்து மறுமையில் பரிந்துரை செய்வதற்காக ஆக்கிக் கொண்டார்கள் அதனால் தான் மக்காவாசிகள் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய போதும் அந்த மக்காவாசிகள் மீது வேதனை இறங்காத காரணம் அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருட்கொடை என்பதால் தான்.                          

மக்கத்து காஃபிர்கள் பெருமானாரிடம் நீர் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய பிறகும் அவர்களின் மீது வேதனை இறங்காத காரணமும் அண்ணல் நபி ஸல் காஃபிரகளுக்கும் அருட்கொடை என்பதால் தான்

وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ (32) وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ (33)الانفال-لما قال أبو جهل:اللهم إن كان هذا هو الحق من عندك" الآية، نزلت"وما كان الله ليعذبهم وأنت فيهم"كذا في صحيح مسلم


وثالثها : أنه صلى الله عليه وسلم كان في نهاية حسن الخلق قال تعالى{وَإِنَّكَ لعلى خُلُقٍ عَظِيمٍ [القلم: 4] عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ:إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً، وَلَمْ أُبْعَثْ عَذَابًا (شعب الايمان,طبراني) 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக துவா செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன் வேதனையாக அனுப்பப்படவில்லை என்றார்கள்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ قَالَ:لَمَّا كُسِرَتْ رُبَاعِيَّةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم َ وَشُجَّ فِي جَبْهَتِهِ فَجَعَلَتِ الدِّمَاءُ تَسِيلُ عَلَى وَجْهِهِ قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَبْعَثْنِي طَعَّانًا وَلَا لَعَّانًا، وَلَكِنْ بَعَثَنِي دَاعِيَةَ وَرَحْمَةٍ، اللهُمَّ اهْدِ قَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ(شعب الايمان- فظهر أنه يوم القيامة يقول:أمتي أمتي فهذا كرم عظيم منه في الدنيا وفي الآخرة وإنما حصل فيه هذا الكرم وهذا الإحسان لكونه رحمة كما قال تعالى..(تفسيرالرازي) - تمسكوا بهذه الآية في أنه أفضل من الملائكة قالوا : لأن الملائكة من العالمين . فوجب بحكم هذه الآية أن يكون عليه السلام رحمة للملائكة فوجب أن يكون أفضل منهم (تفسيرالرازي)

  உஹதுப் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்கள்

 ஷஹீதாக்கப்பட்டபோது அவர்களுடைய நெற்றியிலும் காயம் ஏற்பட்டது ரத்தம் அவர்களுடைய முகத்தின் வழியாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இவர்களுக்கு எதிராக துஆ செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் அல்லாஹ் என்னை சபிப்பவராக அனுப்பவில்லை மாறாக அழைப்பாளராக, அருட்கொடையாக அனுப்பியுள்ளான் என்று கூறியதுடன் யா அல்லாஹ் என் சமூகத்திற்கு நேர்வழி காட்டுவாயாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று துவா செய்தார்கள் 

இந்த உம்மத்துக்கு அண்ணல் நபி மாபெரும் அருட்கொடை என்பதை விபரிக்கும் நபிமொழி

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنْ النَّارِ وَهُمْ يَقْتَحِمُونَ فِيهَا (بخاري) باب الاِنْتِهَاءِ عَنِ الْمَعَاصِى كتاب الرقاق

ஒரு மனிதர் நெருப்பை மூட்டினார். அதன் சூழ்பாகங்கள் நன்கு எரிய ஆரம்பித்தவுடன் அங்கிருந்த பூச்சிகளும், மற்ற உயிரினங்களும் அதில் விழ முயன்றன.அந்த மனிதரோ அவைகளை நெருப்பில் விழுவதை விட்டும் தடுக்கிறார். அவரை மீறிக் கொண்டு அவைகள் மீண்டும் போய் விழுகின்றன. அவர் தடுத்துக் கொண்டே இருக்கிறார். அதுபோலத்தான் நானும், நீங்களும். நரகத்தில் விழ நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நான் உங்களின் இடுப்பைப் பிடித்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறேன்.


சிறுவர்களுக்கும் அருட்கொடை. தனக்குப் பின்னால் குழந்தை அழும் சப்தம் கேட்டால் தொழுகையை சுருக்கிக் கொள்வார்கள்

عَنْ أَنَسِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلَاةِ فَأُرِيدُ إِطَالَتَهَا فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ (بخاري710

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري5998

 

மனிதர்கள் அல்லாத மற்ற ஜீவராசிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள் என்பதால் தான் அவைகள் தங்களின் சிரமங்களை பெருமானாரிடம் முறையிட்டன

عن الوضين بن عطاء أن جزارا فتح بابا على شاة ليذبحها فانفلتت منه حتى اَتَت النبيَّ صلى الله عليه و سلم واتبعها فأخذها يسحبها برجلها فقال لها النبي صلى الله عليه و سلم إصبري لأمر الله وأنت يا جزار فسقها إلى الموت سوقا رفيقا (مصنف عبد الرزاق)

கசாப்புக் கடைக்காரர் ஒருவர் தன் ஆட்டை அறுப்பதற்காக கதவை திறந்தவுடன் அது நழுவி ஓடி நபி ஸல் அவர்களிடம் வந்தது. அதன் பின்னாலேயே விரட்டி வந்த அவர் அதன் காலை பிடித்து இழுத்துச் சென்றார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சற்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். அதை அறுப்பதற்காகத் தான் கொண்டு செல்கிறீர்கள் என்றாலும் அதில் மென்மையை கடைபிடியுங்கள் என்றார்கள்.                                                                                           

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ (ابوداود)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அன்சாரி தோழரின் தோட்டத்தின் பக்கமாக சென்ற போது அப்போது ஒரு ஒட்டகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தவுடன் அழுத ஆரம்பித்தது அதன் கண்களில் கண்ணீர் வடிந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஒட்டகத்தின் திமில்களை தடவினார்கள். உடனே அது அழுகையை நிறுத்தியது அமைதியானது பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டார்கள் அப்போது ஒரு அன்சாரி தோழர் வந்தார் அவர் இந்த ஒட்டகம் என்னுடையது என்றார் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வாயில்லா ஜீவன்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா நிச்சயமாக இதை நீங்கள் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று என்னிடம் இது முறையிடுகிறது என்றார்கள்

மரம், செடி கொடிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள்

عن جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ كَانَ الْمَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ مِنْ نَخْلٍ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ وَكَانَ عَلَيْهِ فَسَمِعْنَا لِذَلِكَ الْجِذْعِ صَوْتًا كَصَوْتِ الْعِشَارِ حَتَّى جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا فَسَكَنَتْ رواه البخاري باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب وفي رواية ..وصاح كما يصيح الصبي فنزل إليه فاعتنقه فجعل يهذي كما يهذي الصبي الذي يسكن عند بكائه فقال صلى الله عليه وسلم:لو لم أعتنقه لَحَنَّ إلى يوم القيامة"كان الحسن البصري إذا حدث بهذا الحديث بكى وقال:هذه خشبة تحن إلى رسول الله صلى الله عليه وسلم فأنتم أحق أن تشتاقوا إليه.(كتاب موسوعة الدفاع عن رسول الله صلى الله عليه وسلم)

பேரீத்த மர கிளைகள் மஸ்ஜிதுந் நபவியின் தூண்களாக இருந்தன. இருந்தது. அதில் ஒரு தூண் மீது சாய்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேருரை நிகழ்த்துவார்கள். பின்பு அவர்களுக்காக மிம்பர் தயாரானவுடன் அதில் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது இதுவரை எந்த தூண்  மீது சாய்ந்து உரை நிகழ்த்தினார்களோ அந்த தூண் சிறு குழந்தை தேம்பி அழுவது போன்று அழ ஆரம்பித்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் இருந்து கீழே இறங்கி வந்து அதை கட்டியணைத்தவுடன் அழும் குழந்தையை அதன் தாய் கட்டியணைத்தால் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்துமோ அது போன்று அழுகையை நிறுத்தியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அதை கட்டியணைத்திருக்கா விட்டால் இறுதி நாள் வரை அழுது கொண்டு தான் இருக்கும் என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுய தேவையை நிறைவேற்றும்போது மரங்கள் மறைத்துக் கொண்டதும் அந்த மரங்களுக்கு அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்..

عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح

  இந்தஹதீஸ் BAZZAR  எனும் நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில்  மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..                                            

நபியவர்களின் அழைப்பை ஏற்று அருகில் வந்த மற்றொரு மரம்

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ قَالَ إِنْ دَعَوْتُ هَذَا الْعِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَنْزِلُ مِنْ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ ارْجِعْ فَعَادَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ (ترمذي)

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார்.அவருக்கு நபி ஸல் அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்தார்கள். அதற்கு அவர் நீங்கள் இறைத்தூதர் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் இந்த பேரீத்த மரத்தின் ஒரு கிளையை நான் அழைத்து சாட்சி சொல்ல வைக்கட்டுமா என்று கேட்டு விட்டு, அந்தக் கிளையை அழைத்தார்கள். அந்தக் கிளை மரகத்தில் இருந்து இறங்கி வந்து நபிக்கு அருகில் மண்டியிட்டது. பின்பு நீ திரும்பிச் செல் என்று சொன்னவுடன் அது திரும்பவும் மேலே ஏறி அந்த மரத்துடன் இணைந்தது அந்த கிராமவாசி இஸ்லாத்தை ஏற்றார். நூல் திர்மிதீ     

                   

மற்றொரு அறிவிப்பில் அந்த மரமே நகர்ந்து வந்து மூன்று முறை கலிமா சொல்லி விட்டுச் சென்றதாக உள்ளது

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ:كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِى سَفَرٍ فَأَقْبَلَ أَعْرَابِىٌّ  فَلَمَّا دَنَا مِنْهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:أَيْنَ تُرِيدُ؟ قَالَ: إِلَى أَهْلِى قَالَ:هَلْ لَكَ فِى خَيْرٍ؟قَالَ:وَمَا هُوَ؟قَالَ:تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ فَقَالَ:وَمَنْ يَشْهَدُ عَلَى مَا تَقُولُ ؟ قَالَ :هَذِهِ السَّلَمَةُ فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهِىَ بِشَاطِئِ الْوَادِى فَأَقْبَلَتْ تُخُدُّ الأَرْضَ خَدًّا حَتَّى قَامَتْ بَيْنَ يَدَيْهِ فَاسْتَشْهَدَهَا ثَلاَثاً فَشَهِدَتْ ثَلاَثاً أَنَّهُ كَمَا قَالَ ثُمَّ رَجَعَتْ إِلَى مَنْبَتِهَا وَرَجَعَ الأَعْرَابِىُّ إِلَى قَوْمِهِ وَقَالَ: إِنِ اتَّبَعُونِى أَتَيْتُكَ بِهِمْ وَإِلاَّ رَجَعْتُ فَكُنْتُ مَعَكَ(دارمي)

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதற்கடுத்து நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் குடும்பத்தார்களிடம்  என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் நல்லது நடைபெற வேண்டாமா என்று கேட்க, நான் என்ன செய்ய வேண்டும். என்று அவர் கேட்டார். கலிமா சொல்ல வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூற, நீங்கள் சொல்வதற்கு என்ன சாட்சி என்று கேட்டார். இந்த மரம் (சாட்சி சொல்லும்) என்று கூறி அந்த மரத்தை அழைத்தார்கள். அந்த மரம் அதன் வேர்களோடு பூமியைக் கிழித்தபடி நகர்ந்து வந்து  நபி ஸ் அவர்களின் முன்னால் நின்றது அதனை சாட்சி சொல்லச் சொன்னார்கள் மூன்று முறை சாட்சி சொல்லி விட்டு அது திரும்பிச் சென்றது. அவர் இஸ்லாத்தை ஏற்றார்.  இஸ்லாத்தை ஏற்ற அந்த கிராமவாசி “நான் சென்று என் சமூகத்தினரிடமும் இதைக் கூறுவேன். அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களையும் உங்களிடம் அழைத்து வருவேன். இல்லா விட்டால் நான் திரும்பி வந்து உங்களுடன் தங்கி விடுவேன்”என்று கூறினார். -தாரமீ 

இறைச்சியில் விஷம் தடவப்பட்டுள்ளது என்ற விஷயத்தை அந்த இறைச்சியே நபியவர்களிடம் கூறியது எல்லாப் பொருட்களுக்கும் அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ ثُمَّ قَالَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ مَازِلْتُ أَجِدُ مِنْ الْأَكْلَةِ الَّتِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي(ابوداود

 கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது யூதப் பெண்ணொருத்தி (நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தாள். அதை நபி ஸல் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்தப்பெண்) பொறிக்கப்பட்ட விஷம் கலந்து ஆட்டிறைச்சியைப் பரிமாறினாள். அதில் சிறிதளவு நபி ஸல் சாப்பிட்டார்கள். பிஷ்ர் என்ற நபித் தோழரும் சாப்பிட்டார்.ஆனால் அவர் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவளை அழைத்து வரப்பட்டது. அவளிடம் உனக்கு என்ன கேடு. என்ன கலந்து கொடுத்தாய் என்று கேட்க, அதற்கு அவள் நான் அதில் விஷம் கலந்தேன். நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் உங்களுக்கு அது இடையூறு தராது.  நீங்கள் நபியாக இல்லா விட்டால் இந்த விஷத்தால் நீங்கள் இறந்து உங்களிடமிருந்து மக்களை நிம்மதி பெற வைக்க விரும்பினேன் என்றாள். ஒருவரை விஷம் வைத்துக் கொன்ற காரணத்தால் அவளுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டது.  நபி ஸல் அவர்களின் முஃஜிஸா காரணமாக அந்த விஷம் அப்போது எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நபி ஸல் அவர்களின் சகராத் வேளையில் மிகவும் சிரமப்பட்ட போது ஆயிஷாவே கைபரில் நான் உண்ட உணவின் விஷம் இப்போது என் தொண்டையை அறுக்கிறது என்றார்கள்.                   

அனைத்துப் பதவிகளையும் அண்ணல் நபிக்குத் தந்த அல்லாஹ் ஷஹாதத் என்ற பதவியையும் தருவதற்காக இவ்வாறு ஏற்படுத்தி யிருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.                                   

وفي رواية "فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبْهَا وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنْ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنْ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ..( ابوداود)

மற்றொரு அறிவிப்பில் அவளை மன்னித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அவளுக்கும் நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்

وفي رواية  ابي داود قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْفَعُوا أَيْدِيَكُمْ وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ لَهَا أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ قَالَتْ الْيَهُودِيَّةُ مَنْ أَخْبَرَكَ قَالَ أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي لِلذِّرَاعِ

மற்றொரு அறிவிப்பில் அவள் நபி ஸல் அவர்களிடம்  நான் விஷம் கலந்ததாக உங்களுக்கு யார் அறிவித்தார்கள் என்று கேட்ட போது தன் கையில் இருந்த ஆட்டின் முன் சப்பையைக் காட்டி இது எனக்கு   அறிவித்தது என்று கூறினார்கள் அப்படிப் பார்த்தால் அந்த இறைச்சிக்கும்  நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்

        

وَقَالَ الْبَيْهَقِيُّ فِي سُنَنه : اِخْتَلَفَتْ الرِّوَايَات فِي قَتْلهَا وَمَا رُوِيَ عَنْ أَنَس أَصَحّ ، قَالَ وَيَحْتَمِل أَنَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي الِابْتِدَاء لَمْ يُعَاقِبهَا حِين لَمْ يَمُتْ أَحَد مِنْ الصَّحَابَة مِمَّنْ أَكَلَ فَلَمَّا مَاتَ بِشْر بْن الْبَرَاء أَمَرَ بِقَتْلِهَا ، 

  

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை இந்த உலகில் உணராத முஸ்லிம்களும் மறுமையில் உணருவார்கள்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوْ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو النَّاسِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلَائِكَتَهُ وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي ائْتُوا نُوحًا فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُوسَى عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ فَيَسْتَحِي مِنْ رَبِّهِ فَيَقُولُ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ فَيَأْتُونِي فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي فَيُؤْذَنَ لِي فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ - يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {خَالِدِينَ فِيهَا} (بخاري 4476

ஷபாஅத் கிடைக்க வேண்டுமானால் பாங்கு சொன்ன பின் சலவாத் ஓதி இந்த துஆ ஓத வேண்டும் 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ  (مسلم) 875


வியாழன், 21 ஆகஸ்ட், 2025

பெருமானாரின் (ஸல்) பிறப்பின் சிறப்புகள்

   

22-08-2025

SAFAR- 27 بسم الله الرحمن الرحيم  

பெருமானாரின் (ஸல்) பிறப்பின் சிறப்புகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

தன்னுடைய  பிறப்பின் சிறப்பைப் பற்றி நபி ஸல் கூறிய மூன்று விஷயங்கள்

عن أَبي أُمَامَة رضي الله عنه قَالَ قُلْت يَا رَسُول اللَّه مَا كَانَ أَوَّل بَدْء أَمْرك ؟ قَالَ "دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبُشْرَى عِيسَى بِي وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد

அபூ உமாமா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் உங்களின் ஆரம்ப நிலை எவ்வாறிருந்தது  என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலனாகவும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட சுபச் செய்திக்குரியவராகவும் இருக்கிறேன் நான் பிறந்த போது என்னுடைய தாயாரிடமிருந்து ஒளி உருவாகி அந்த ஒளியில் ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்றார்கள். 

  மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட மூன்று விஷயங்களையும்  விபரித்துப் பேசலாம். 1. நபிகளாரின்  பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலன்  2. நபிகளாரைக் குறித்து  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய முன்னறிவிப்பு.  3. நபிகளார் ஸல் பிறந்த போது அவர்களின்  தாயார் கண்ட அதிசயங்கள்

1. நபி ஸல் அவர்களின் பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த  துஆவின் பலன் 

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ(129البقرة)

    நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன்களாக குர்ஆனில் கூறப்பட்டவர்கள் இரண்டு மகன்கள். 1. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஸாரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். 2. இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். இந்த இருவரில் இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் தான் நிறைய நபிமார்கள் வந்தார்கள். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் வந்த ஒரே நபி நம்முடைய நபி ஸல் அவர்கள் மட்டும் தான். அவர்கள் தான் நபி  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேற்படி துஆவுக்கு உரியவர்கள். 

  நபி இப்றாஹீம் அலை அவர்களை நினைவு கூரும்போதெல்லாம் தன் தந்தை என்று பெருமையுடன் கூறிய நபி ஸல்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود

தன் பேரப் பிள்ளைகளுக்கு நபி ஸல் மேற்காணும் வார்த்தைகளைக் கொண்டு நபி ஸல் ஓதிப் பார்ப்பார்கள். அப்போது பின்வருமாறு நினைவு கூருவார்கள்.   நபி இப்றாஹீம்  தன் பிள்ளைகளான  இஸ்ஹாக் அலை, இஸ்மாயில்  அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு இவ்வாறு தான் ஓதிப் பார்ப்பார்கள் என்றும் கூறுவார்கள்

2. நபிகளாரைக் குறித்து  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய முன்னறிவிப்பு.

பொதுவாக மற்ற மனிதர்கள் உலகில் பிறந்து வளர்ந்து பல சேவைகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைவார்கள். ஆனால் முன் வேதங்களின் முன்னறிவிப்பின் மூலமாக  பிறக்கும் முன்பே பிரபலம் அடைந்த மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

முன் வேதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்புகள்

   நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்ராத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது.  இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம்  29- ல் கூறப்பட்டுள்ளது.  இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.                 

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6 

மர்யமின் குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.”இஸ்ராயீல் மக்களே!  எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப் பவனாகவும்;  எனக்குப் பின் வரவிருக்கும் ”அஹ்மத் ” என்னும் பெயருடைய தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறியதை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக!) 

மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு-

         நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போதுஎன்றைக்கும் உங்களுடனே கூடஇருக்கும்படிக்கு சத்தியஆவியாக வேறொரு தேற்றரவாளரை அவர் உங்களுக்குத்தந்தருள்வார் (யோவான் 14:16) 'பிதாவிடத்திலிருந்து நான்உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)'அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி,. உன்னைப் போல ஒருதீர்க்க தரிசியை நான்அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என்வார்த்தைகளை அவர் வாயில்அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம்அவர்களுக்குச் சொல்லுவார்.என் நாமத்திலே அவர் சொல்லும்என் வார்த்தைகளுக்குச்செவிகேடாதவன் எவனோ அவனை நான்விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பர்.             



3. நபிகளார் ஸல் பிறந்த போது அவர்களின்  தாயார் கண்ட அதிசயங்கள்

وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد

 وهذا إِشَارَة إِلَى اِسْتِقْرَار دِينه وَنُبُوَّته بِبِلَادِ الشَّام وَلِهَذَا تَكُون الشَّام فِي آخِر الزَّمَان مَعْقِلًا لِلْإِسْلَامِ وَأَهْله وَبِهَا يَنْزِل عِيسَى اِبْن مَرْيَم إِذَا نَزَلَ بِدِمَشْق بِالْمَنَارَةِ الشَّرْقِيَّة الْبَيْضَاء مِنْهَا (تفسير ابن كثير)  وَلِهَذَا جَاءَ فِي الصَّحِيحَيْنِ"لَا تَزَال طَائِفَة مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقّ لَا يَضُرّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِي أَمْر اللَّه وَهُمْ كَذَلِك, قال معاذ رضي الله عنه "وَهُمْ بِالشَّامِ"(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ)كتاب المناقب  - " وبها تقع المحشر" وَانْحَشَرَ النَّاس مِنْ جِهَة الْمَشْرِق إِلَى الشَّام وَمِصْرَ 

ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்ற நபிமொழி பல கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறது. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் உமர் ரழி அவர்கள் காலத்தில் ஷாம் வெற்றி கொள்ளப்பட்டது என்பது மட்டுல்லாமல் கடைசி காலத்தில் இந்த ஷாம் தேசம் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் புகலிடமாக இருக்கும் என்பதோடு அங்குள்ள திமிஷ்க் நகரத்தின் மஸ்ஜிதில் கிழக்குப் பகுதியில் உள்ள மினாராவில் தான் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் இறங்குவார்கள் என்பதும் இந்த ஹதீஸில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.                              

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என் உம்மத்தில் ஒரு சாரார் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம்செய்பவர்களாலும் மாற்றுக்கொள்கை உடையவர்களாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு வரை இவர்கள் இவ்வாறு சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள்.                                                                    

முஆத் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறும்போது அவர்கள் ஷாமில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்

( حَتَّى يَأْتِي أَمْر اللَّه ) مِنْ الرِّيح الَّتِي تَأْتِي فَتَأْخُذ رُوح كُلّ مُؤْمِن وَمُؤْمِنَة .(شرح النووي

அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு என்பதற்கு விரிவுரைகள் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வந்து வாழ்ந்து அவர்கள் வஃபாத்தான பின்பு மீண்டும் மக்களிடம் பாவம்  பெருகி விடும்போது அல்லாஹ் முஃமின்களின் உயிரை மட்டும் இலகுவான முறையில் எடுத்துக் கொள்வான். அதன் பின்பு கெட்டவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தான் உலகம் அழியும். அவ்வாறு அல்லாஹ் முஃமின்களின் உயிரைக் கைப்பற்றும் வரை சத்தியத்தின் மீதே நிலைத்திருப்பார்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.  

நபி ஸல் அவர்களின் பிறப்பில் இன்னும் சில அதிசயங்கள்

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு, அந்த ஆண்டு அரேபியர்கள் மழையின்றி பசி மற்றும் தாகத்தால் கடும் நெருக்கடியில் இருந்தனர். ஆனால் ரசூல் அல்லா (ஸல்) அவர்களின் பிறப்புடன் எல்லாமே மாறியது. மழை பெய்தது. நிலம் பசுமையாகி பயிர்கள் ஆரோக்கியமாக இருந்தன. "அதனால்தான் அந்த ஆண்டு "வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டு" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அதற்கு முன்பு பானோ குரேஷ் நெருக்கடியில் இருந்தார். அப்போது நிலம் பசுமையாக இருந்தது. மரங்கள் பசுமையாக இருந்தன, எங்கும் திருப்தியும் செல்வமும் இருந்தது” (சீரத் ஹல்பியா, 1:47)

நபி(ஸல்) பிறந்த மாதம் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் ரபீஉல் அவ்வல் என்பது பெரும்பாலானோரின் கூற்று.

عن جابر وابن عباس  رضي الله عنهما  أنهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات وهذا هو المشهور عند الجمهور والله أعلم(السيرة النبوية - لابن كثير رح)

நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)

பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை

عن ابن عباس رضي الله عنه  أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية)  عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)

குழந்தையைக் கொடுத்தனுப்பி, அக்குழந்தை பற்றிய முன்னறிவிப்பையும் அப்துல் முத்தலிபிடம் கூறப்பட்ட போது.

قال محمد بن إسحاق: فلما وضعته بعثت إلى عبد المطلب جاريتهافلما جاءها أخبرته وحدثته بما كانت رأت حين حملت به وما قيل لها فيه وما أمرت أن تسميه فأخذه عبد المطلب فأدخله على هُبَلُ6 في جوف الكعبة فقام عبد المطلب يدعو ويشكر الله عزوجل ويقول: الحمد لله الذى أعطاني * هذا الغلام الطيب الاردان قد ساد في المهد على الغلمان * أعيذه بالبيت ذى الاركان حتى يكون بلغة الفتيان * حتى أراه بالغ البنيان أعيذه من كل ذى شنآن * من حاسد مضطرب العنان ذى همة ليس له عينان * حتى أراه رافع اللسان أنت الذى سميت في القرآن * في كتب ثابتة المثانى * أحمد مكتوب على اللسان (السيرة النبوية - لابن كثير) (دلائل النبوة للبيهقي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்

وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية  لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى  عليه  السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)

நான்கு தடவைகள் ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். 1.அவன் சபிக்கப்பட்ட போது 2. அவன் இறக்கப்பட்ட போது 3. நபி ஸல் அவர்கள் பிறந்த போது 4. அல்ஹம்து சூரா இறக்கப்பட்ட போது

மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறப்பதற்கு முன்பு ஏழு வானங்கள் வரை சென்று வருவதற்கு சக்தி தரப் பட்டிருந்த ஷைத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பின்பு மூன்றாவது வானத்தைக் கடந்து நான்காவது வானம் வரை மட்டுமே செல்ல அவனால் முடிந்தது. பிறகு நபி ஸல் என்றைக்கு பிறந்தார்களோ அன்று முதல் வானத்திற்கு மேல் செல்ல அவனால் முடியவில்லை. முதல் வானத்தை நெருங்கினாலே தீப்பந்தங்கள் மூலம் எரியப்படும்

3164 வருட பாரம்பரியமான கிஸ்ரா மன்னர்கள் ஆட்சி வீழ்வதன் அறிகுறியாக அம்மாளிகையின் ஸ்தூபிகள் சரிந்தன  பாரசீக நாட்டில் நெருப்பு வணங்கிகளின் சகாப்தம் வீழ்வதன் அடையாளமாக அணையா விளக்கு அணைந்தது

عن مخزوم بن هانئ المخزومى عن أبيه وأتت عليه خمسون ومائة سنة :لَمَّا وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَجَسَ إِيوَانُ كِسْرَى وَسَقَطَتْ مِنْهُ أَرْبَعَ عَشْرَةَ شُرْفَةً وَخَمَدَتْ نَارُ فَارِسَ وَلَمْ تَخْمَدْ قَبْلَ ذَلِكَ بِأَلْفِ سَنَةٍ وكانت مدة ملكهم ثلاثة آلاف سنة ومائة سنة وأربعا وستين سنة(سيرة ابن كثير)

பொருள் 1,குதிரை 2,நெற்றி முடி 3,மனம் அலைமோதுவது 4,முத்திரை 5,என் மீது விழும் 6,ஒரு பாறை 7,மூடி வைப்பது 8,உடைந்தது

நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்

قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك (السيرة النبوية لابن كثير)

இன்று இரவு ஒரு நபி பிறப்பார் என தவ்ராத் வேதத்தைக் கற்ற யூதர் சொன்ன சுபச்செய்தி

عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ ..فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)

ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள், “மக்காவில் ஒரு யூதர் இருந்தார், பிறந்த இரவில் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, “உங்களில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று குரைஷிக் குடும்பத்தைக் கேட்டார் மக்கள் இல்லை என்றார்கள்.  அவன் சொன்னான்“நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! இன்று இந்த உம்மத்தின் கடைசி தீர்க்கதரிசி பிறந்து விட்டார். நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.ஓ குரேஷ் பழங்குடியினரே! அவர் உங்களிடமிருந்து வந்தவர்" அவரது தோள்களில் தீர்க்கதரிசன முத்திரை உள்ளது. இந்த விஷயங்கள் பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளுக்குச் சென்று கேளுங்கள்” குரேஷி மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்,விரைவில் அவர்கள் அனைவரும் அப்துல் முத்தலிபுக்கு ஒரு பேரப்பிள்ளையை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் அவரது பிறப்பில் பல இயற்கைக்கு மாறான விஷயங்கள் மற்றும் அதிசயங்கள் நடக்கின்றன என்றும் அறிந்து கொண்டு, அவர்கள் மிக விரைவில் அவரிடம் திரும்பி வந்து,“நீங்கள் சொல்வது சரிதான்.  அப்துல்முத்தலிபுக்கு ஒரு பேரன் இருக்கிறார்”. என் சொந்தக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் அங்கு சென்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பார்த்தார் அப்போது அக்குழந்தையின் முதுகை நீக்கி காட்டப்பட்ட போது அவர்களின் முத்திரையைச் பார்த்து மயங்கி விழுந்து விட்டார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் காரணம் கேட்க, வருத்தத்துடன் கூறினார்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  நபித்துவம் பனீ இஸ்ரவேலிலிருந்து போய்விட்டது” ஓ குரேஷ் பழங்குடியினரே!  நிச்சயமாக பிற்காலத்தில் இவரின் புகழ் இந்த பூமியின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பரவும்.

என்றுமே தோன்றாத ஒரு நட்சத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பிறந்த தினத்தில் தோன்றிய போது இன்று ஒரு நபி பிறந்துள்ளார் என ஜுபைர் என்ற மாபெரும் யூத அறிஞர் சொன்னார்

قال الزبير بن باطا:قد طلع الكوكب الاحمر الذى لم يطلع إلا لخروج نبى أو ظهوره ولم يبق أحد إلا أحمد وهذا مهاجره.قال أبو سعيد فلما قدم النبي صلى الله عليه وسلم أخبره أبى هذا الخبر فقال رسول الله صلى الله عليه وسلم لو أسلم الزبير لاسلم ذووه من رؤساء اليهود إنما هم له تَبَعٌ (السيرة النبوية - لابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ تَابَعَنِي عَشَرَةٌ مِنْ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلَّا أَسْلَمَ (مسلم)

நபி(ஸல்)அவர்களின் மதீனா பிறப்பைப் பற்றி 700 வருடம் முன்பே யூதர்கள் “துBப்பஃ “மன்னரிடம் கூறினர்

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ (سورة الدخان37) وتُبَّع كان رجلاً من ملوك العرب من حِمير سُمّي تُبَّعاً لكثرة من تبعه وَاسْمه أَسْعَد أَبُو كُرَيْب بْن مليكرب الْيَمَانِيّ ذَكَرُوا أَنَّهُ مَلَكَ عَلَى قَوْمه ثَلَاثمِائَةِ سَنَة وَسِتًّا وَعِشْرِينَ سَنَة وَلَمْ يَكُنْ فِي حِمْيَر أَطْول مُدَّة مِنْهُ وَتُوُفِّيَ قَبْل مَبْعَث رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوٍ مِنْ سَبْعمِائَةِ سَنَة .وَذَكَرُوا أَنَّهُ لَمَّا ذَكَرَ لَهُ الْحَبْرَانِ مِنْ يَهُود الْمَدِينَة أَنَّ هَذِهِ الْبَلْدَة مَهَاجِر نَبِيّ فِي آخِر الزَّمَان اِسْمه أَحْمَد قَالَ فِي ذَلِكَ شِعْرًا وَاسْتَوْدَعَهُ عِنْد أَهْل الْمَدِينَة فَكَانُوا يَتَوَارَثُونَهُ وَيَرْوُونَهُ خَلَفًا عَنْ سَلَف وَكَانَ مِمَّنْ يَحْفَظهُ أَبُو أَيُّوب خَالِد بْن زَيْد الَّذِي نَزَلَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي دَاره وَهُوَ :شَهِدْت عَلَى أَحْمَد أَنَّهُ ... رَسُول مِنْ اللَّه بَارِي النَّسَم.. فَلَوْ مُدَّ عُمْرِي إِلَى عُمْره ... لَكُنْت وَزِيرًا لَهُ وَابْن عَم...وَجَاهَدْت بِالسَّيْفِ أَعْدَاءَهُ ... وَفَرَّجْت مِنْ صَدْره كُلّ غَم -وعن النبي صلى الله عليه وسلم: لا تسبوا تبعاً فإنه كان قد أسلم ما أدري أكان تبع نبياً أو غير نبي وقال كعب : ذم الله قومه ولم يذمه (تفسير ابن كثير)

துப்பஃ என்ற மன்னர் நபி ஸல் அவர்களுக்கு 700 வருடங்களுக்கு முந்தைய ஆட்சியாளர். 326 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். அந்தக் காலத்தில் இதுவெல்லாம் ச்ரவ சாதாரணம். ஃபிர்அவ்ன் 300 வருடங்கள் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடதக்கது. அத்தகைய துப்பஃ என்ற மன்னர் மதீனாவுக்கு வந்த போது  மதீனாவில் உள்ள தவ்ராத்தை கற்ற அறிஞர்கள் அவரிடம் இந்த ஊர் கடைசி காலத்தில் ஒரு நபி ஹிஜ்ரத் செய்து வருகை தரப் போகும் ஊர் என்றெல்லாம் கூற, அதைக் கேட்ட அவர் நபி ஸல் அவர்களைப் புகழ்ந்து சில கவிதைகளை எழுதி அதை மதீனாவாசிகளிடம் ஒப்படைத்தார். அதை காலங்காலமாக பாதுகாத்து வைத்திருந்தனர். முக்கியமாக அதைப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் தான் அபீ அய்யூபுல் அன்சாரி ரழி அவர்கள் 

(நபி ஸல் மதீனாவுக்கு வந்தபோது பலரும் தங்களின் வீட்டைத் தருவதற்கு முயன்ற போது  நபி ஸல் அவர்கள் இந்த ஒட்டகம் அல்லாஹ்வினால் உத்தரவிடப்பட்டுள்ளது இது எங்கே சென்று அமருமோ அது தான் நான் தங்கப் போகும் வீடு என்று கூறுவார்கள். அந்த ஒட்டகம் இந்த சஹாபீ வீட்டுக்கு முன்னால் தான் மண்டியிட்டது என்பது வரலாறு. மற்றொரு அறிவிப்பில் அந்த வீடும் அந்த அரசர் எழுதி வைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.)

நபி ஸல் அவர்களின் பிறப்பில் நமக்குப் படிப்பினைகள்

நபி ஸல் அவர்கள் பிறக்கும்போதே பல சோதனைகளை சந்தித்தார்கள். அல்லாஹ் தனக்குப் பிடித்தமானவர்களை அதிகம் சோதிப்பான்

தாயின் வயிற்றில் இருக்கும் போதே  தந்தையை இழந்தார்கள்

عن أيوب بن عبد الرحمن قال: خرج عبد الله بن عبد المطلب إلى الشام إلى غزة في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينة وعبد الله بن عبد المطلب يومئذ مريض فقال أتخلف عند أخوالى بنى عدى بن النجار.فأقام عندهم مريضا شهرا ومضى أصحابه فقدموا مكة فسألهم عبد المطلب عن ابنه عبد الله فقالوا:خلفناه عند أخواله بنى عدى بن النجار وهو مريضفبعث إليه عبد المطلب أكبر ولده الحارث فوجده قد توفى ودفن في دار النابغة فرجع إلى أبيه فأخبرهفوجد عليه عبد المطلب وإخوته وأخواته وجدا شديداورسول الله صلى الله عليه وسلم يومئذ حمل ولعبد الله بن عبد المطلب يوم توفى خمس وعشرون سنة(السيرة النبوية - لابن كثير

 வியாபார விஷயமாக மற்றவர்களுடன் அப்துல்லாஹ் அவர்கள் ஷாம் சென்ற போது வரும் வழியில் மதீனாவைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டதால் நான் மதீனாவில் என் மாமன்மார்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு வருகிறேன் என்றார் மற்றவர்கள் மக்கா திரும்பினர். அப்துல் முத்தலிப் மகனைப் பற்றி விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை கேட்டு அப்துல் முத்தலிப் கவலைப்பட்டு தன் மூத்த மகன் ஹாரிஸை மதீனாவிற்கு அனுப்பினார். அங்கு வந்த பின்பு தான் அப்துல்லாஹ் இறந்த விபரமும் அவரை தாருன் னாபிஙா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்தது அவ்விஷயத்தை கேட்டு அப்துல் முத்தலிப் அவர்களும் மற்றவர்களும் மிகவும் கவலைப்பட்டனர். அந்நேரத்தில் அவரின் வயது 25 மட்டுமே. மேலும் அந்நேரத்தில் நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார்கள்.

படிப்பினை- இன்றைக்கும் பலர் சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலும் பொறுமையிழந்து ஈமானுக்கு மாற்றமான வார்த்தைகளைக் கூற ஆரமபித்து விடுகின்றனர் அத்தகையவர்கள் நபி ஸல் அவர்களின் வாழக்கையை சிந்திக்க வேண்டும். பிறக்கும் முன் தந்தையை இழந்து, பிறந்த பின் ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டனாரையும் எட்டு வயதில் இழந்தார்கள்

பின்பு நபி ஸல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்தனர். மற்ற நான்கு பெண் மக்களில் மூன்று பேர் நபி ஸல் அவர்களின் ஜீவிய காலத்திலேயே இறப்பெய்தினர். ஆக இவ்வளவு சோதனைகள்ஏற்பட்ட்டன. இத்தனைக்கும் அவர்கள் தான் படைப்பினங்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்

புகழப்படுவதற்காகவே முஹம்மத் என்ற பெயர் வைக்கப்பட்ட சரித்திரம் 

فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا، فلما أكلوا قالوا: يا عبد المطلب، أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه، ما سميته ؟ قال: سميته محمدا.قالوا: فما رغبتَ به عن أسماء أهل بيته؟ قال: أردتُ أن يحمده الله في السماء وخَلْقُه في الارض.(السيرة النبوية لابن كثير)

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அப்துல் முத்தலி ஆடு அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார் அப்போது அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதான பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே இந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க முஹம்மத் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாரும் வைக்கவில்லையே என்று கேட்டனர் அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் உலக மக்கள் அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார். 

ومحمد معناه: المحمود في كل صفاته.-قال أهل اللغة: كل جامع لصفات الخير يسمى محمدا- قال بعض العلماء: ألهمهم الله عزوجل أن سموه محمدا لما فيه من الصفات الحميدة، ليلتقي الاسم والفعل، ويتطابق الاسم والمسمى في الصورة والمعنى، كما قال عمه أبو طالب، ويروى لحسان: وشق له من إسمه ليجله * فذو العرش محمود وهذا محمد (السيرة النبوية لابن كثير)


மலர்ந்த முகமும் மாநபி(ஸல்) அவர்களும்

 12-09-2025 ரபீஉல் அவ்வல்-  19 بسم الله الرحمن الرحيم    மலர்ந்த முகமும் மாநபி (ஸல்) அவர்களும் https://chennaijamaathululama.blogspot...