29-08-2025
ரபீஉல் அவ்வல்- 5
بسم الله الرحمن الرحيم
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
{ وَمَا أرسلناك إِلاَّ رَحْمَةً للعالمين} ففيه مسائل :المسألة الأولى: أنه صلى الله عليه وسلم كان رحمة في الدين وفي الدنيا أما في الدين فلأنه عليه السلام بعث والناس في جاهلية وضلالة وأهل الكتابين كانوا في حيرة من أمر دينهم لطول مكثهم وانقطاع تواترهم ووقوع الاختلاف في كتبهم فبعث الله تعالى محمداً صلى الله عليه وسلم حين لم يكن لطالب الحق سبيل إلى الفوز والثواب فدعاهم إلى الحق وبين لهم سبيل الثواب وشرع لهم الأحكام وميز الحلال من الحرام (تفسير الرازي
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடை என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது
முதலாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீன் துனியா இரண்டுக்கும் ரஹ்மத் ஆக இருக்கிறார்கள்
தீனுடைய விஷயத்தில் அருட்கொடை என்பதன் விளக்கம் மக்காவாசிகள் நீண்ட நாட்கள் இறைத்தூதர் இல்லாத காரணத்தால் பெரும் வழிகேட்டில் இருந்த நேரத்தில் அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி அந்த குறையை தீர்த்து வைத்தான். அவர்களை இஸ்லாத்தின் பக்கம் இணையச் செய்தான்.
وثانيها :أن كل نبي قبل نبينا كان إذا كذبه قومه أهلك الله المكذبين بالخسف والمسخ والغرق وأنه تعالى أخر عذاب من كذب رسولنا إلى الموت أو إلى القيامة-عن ابن عباس رضي الله عنه في قول الله عز وجل "وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِّلْعَالَمِينَ" قال من آمن به تمت له الرحمة في الدنيا والآخرة ومن كفر به صرفت عنه العقوبة التي كان يعاقب بها الأمم يعني في الدنيا
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ (بخاري
விளக்கம்- இரண்டாவதாக துன்யாவுடைய விஷயத்தில் அருட்கொடை என்றால் அல்லாஹுத்தஆலா இதற்கு முன்பு பல சமுதாயங்களை அழித்திருக்கிறான் காரணம் அவர்களுடைய இறைத்தூதர்களை பொய் படுத்தியதன் காரணமாக அந்த இறைத்தூதர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அல்லாஹ் அந்த மக்களை அழித்தான் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அப்படி துஆ செய்யவில்லை ஒவ்வொரு நபிக்கும் ஒரே ஒரு முக்கியமான துஆ செய்து பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது பல நபிமார்கள் அந்த துஆவை தன் உம்மத்தில் அல்லாஹ்வின் அழைப்பை புறக்கணித்தவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அந்த துஆவை பத்திரப்படுத்தி வைத்து மறுமையில் பரிந்துரை செய்வதற்காக ஆக்கிக் கொண்டார்கள் அதனால் தான் மக்காவாசிகள் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய போதும் அந்த மக்காவாசிகள் மீது வேதனை இறங்காத காரணம் அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருட்கொடை என்பதால் தான்.
மக்கத்து காஃபிர்கள் பெருமானாரிடம் நீர் சொல்வது உண்மையானால் எங்கள் மீது வேதனை இறங்கட்டும் என்று கூறிய பிறகும் அவர்களின் மீது வேதனை இறங்காத காரணமும் அண்ணல் நபி ஸல் காஃபிரகளுக்கும் அருட்கொடை என்பதால் தான்
وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ (32) وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ (33)الانفال-لما قال أبو جهل:اللهم إن كان هذا هو الحق من عندك" الآية، نزلت"وما كان الله ليعذبهم وأنت فيهم"كذا في صحيح مسلم
وثالثها : أنه صلى الله عليه وسلم كان في نهاية حسن الخلق قال تعالى{وَإِنَّكَ لعلى خُلُقٍ عَظِيمٍ [القلم: 4] عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ:إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً، وَلَمْ أُبْعَثْ عَذَابًا (شعب الايمان,طبراني)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக துவா செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன் வேதனையாக அனுப்பப்படவில்லை என்றார்கள்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ قَالَ:لَمَّا كُسِرَتْ رُبَاعِيَّةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم َ وَشُجَّ فِي جَبْهَتِهِ فَجَعَلَتِ الدِّمَاءُ تَسِيلُ عَلَى وَجْهِهِ قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَبْعَثْنِي طَعَّانًا وَلَا لَعَّانًا، وَلَكِنْ بَعَثَنِي دَاعِيَةَ وَرَحْمَةٍ، اللهُمَّ اهْدِ قَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ(شعب الايمان- فظهر أنه يوم القيامة يقول:أمتي أمتي فهذا كرم عظيم منه في الدنيا وفي الآخرة وإنما حصل فيه هذا الكرم وهذا الإحسان لكونه رحمة كما قال تعالى..(تفسيرالرازي) - تمسكوا بهذه الآية في أنه أفضل من الملائكة قالوا : لأن الملائكة من العالمين . فوجب بحكم هذه الآية أن يكون عليه السلام رحمة للملائكة فوجب أن يكون أفضل منهم (تفسيرالرازي)
உஹதுப் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்கள்
ஷஹீதாக்கப்பட்டபோது அவர்களுடைய நெற்றியிலும் காயம் ஏற்பட்டது ரத்தம் அவர்களுடைய முகத்தின் வழியாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் இவர்களுக்கு எதிராக துஆ செய்யக்கூடாதா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் அல்லாஹ் என்னை சபிப்பவராக அனுப்பவில்லை மாறாக அழைப்பாளராக, அருட்கொடையாக அனுப்பியுள்ளான் என்று கூறியதுடன் யா அல்லாஹ் என் சமூகத்திற்கு நேர்வழி காட்டுவாயாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று துவா செய்தார்கள்
இந்த உம்மத்துக்கு அண்ணல் நபி மாபெரும் அருட்கொடை என்பதை விபரிக்கும் நபிமொழி
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنْ النَّارِ وَهُمْ يَقْتَحِمُونَ فِيهَا (بخاري) باب الاِنْتِهَاءِ عَنِ الْمَعَاصِى كتاب الرقاق
ஒரு மனிதர் நெருப்பை மூட்டினார். அதன் சூழ்பாகங்கள் நன்கு எரிய ஆரம்பித்தவுடன் அங்கிருந்த பூச்சிகளும், மற்ற உயிரினங்களும் அதில் விழ முயன்றன.அந்த மனிதரோ அவைகளை நெருப்பில் விழுவதை விட்டும் தடுக்கிறார். அவரை மீறிக் கொண்டு அவைகள் மீண்டும் போய் விழுகின்றன. அவர் தடுத்துக் கொண்டே இருக்கிறார். அதுபோலத்தான் நானும், நீங்களும். நரகத்தில் விழ நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நான் உங்களின் இடுப்பைப் பிடித்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறேன்.
சிறுவர்களுக்கும் அருட்கொடை. தனக்குப் பின்னால் குழந்தை அழும் சப்தம் கேட்டால் தொழுகையை சுருக்கிக் கொள்வார்கள்
عَنْ أَنَسِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلَاةِ فَأُرِيدُ إِطَالَتَهَا فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ (بخاري710
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري5998
மனிதர்கள் அல்லாத மற்ற ஜீவராசிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள் என்பதால் தான் அவைகள் தங்களின் சிரமங்களை பெருமானாரிடம் முறையிட்டன
عن الوضين بن عطاء أن جزارا فتح بابا على شاة ليذبحها فانفلتت منه حتى اَتَت النبيَّ صلى الله عليه و سلم واتبعها فأخذها يسحبها برجلها فقال لها النبي صلى الله عليه و سلم إصبري لأمر الله وأنت يا جزار فسقها إلى الموت سوقا رفيقا (مصنف عبد الرزاق)
கசாப்புக் கடைக்காரர் ஒருவர் தன் ஆட்டை அறுப்பதற்காக கதவை திறந்தவுடன் அது நழுவி ஓடி நபி ஸல் அவர்களிடம் வந்தது. அதன் பின்னாலேயே விரட்டி வந்த அவர் அதன் காலை பிடித்து இழுத்துச் சென்றார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சற்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். அதை அறுப்பதற்காகத் தான் கொண்டு செல்கிறீர்கள் என்றாலும் அதில் மென்மையை கடைபிடியுங்கள் என்றார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ (ابوداود)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அன்சாரி தோழரின் தோட்டத்தின் பக்கமாக சென்ற போது அப்போது ஒரு ஒட்டகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தவுடன் அழுத ஆரம்பித்தது அதன் கண்களில் கண்ணீர் வடிந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஒட்டகத்தின் திமில்களை தடவினார்கள். உடனே அது அழுகையை நிறுத்தியது அமைதியானது பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டார்கள் அப்போது ஒரு அன்சாரி தோழர் வந்தார் அவர் இந்த ஒட்டகம் என்னுடையது என்றார் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வாயில்லா ஜீவன்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா நிச்சயமாக இதை நீங்கள் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று என்னிடம் இது முறையிடுகிறது என்றார்கள்
மரம், செடி கொடிகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருட்கொடையாக இருக்கிறார்கள்
عن جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ كَانَ الْمَسْجِدُ مَسْقُوفًا عَلَى جُذُوعٍ مِنْ نَخْلٍ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ وَكَانَ عَلَيْهِ فَسَمِعْنَا لِذَلِكَ الْجِذْعِ صَوْتًا كَصَوْتِ الْعِشَارِ حَتَّى جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا فَسَكَنَتْ رواه البخاري باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب وفي رواية ..وصاح كما يصيح الصبي فنزل إليه فاعتنقه فجعل يهذي كما يهذي الصبي الذي يسكن عند بكائه فقال صلى الله عليه وسلم:لو لم أعتنقه لَحَنَّ إلى يوم القيامة"كان الحسن البصري إذا حدث بهذا الحديث بكى وقال:هذه خشبة تحن إلى رسول الله صلى الله عليه وسلم فأنتم أحق أن تشتاقوا إليه.(كتاب موسوعة الدفاع عن رسول الله صلى الله عليه وسلم)
பேரீத்த மர கிளைகள் மஸ்ஜிதுந் நபவியின் தூண்களாக இருந்தன. இருந்தது. அதில் ஒரு தூண் மீது சாய்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேருரை நிகழ்த்துவார்கள். பின்பு அவர்களுக்காக மிம்பர் தயாரானவுடன் அதில் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது இதுவரை எந்த தூண் மீது சாய்ந்து உரை நிகழ்த்தினார்களோ அந்த தூண் சிறு குழந்தை தேம்பி அழுவது போன்று அழ ஆரம்பித்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் இருந்து கீழே இறங்கி வந்து அதை கட்டியணைத்தவுடன் அழும் குழந்தையை அதன் தாய் கட்டியணைத்தால் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்துமோ அது போன்று அழுகையை நிறுத்தியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அதை கட்டியணைத்திருக்கா விட்டால் இறுதி நாள் வரை அழுது கொண்டு தான் இருக்கும் என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுய தேவையை நிறைவேற்றும்போது மரங்கள் மறைத்துக் கொண்டதும் அந்த மரங்களுக்கு அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்..
عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح
இந்தஹதீஸ் BAZZAR எனும் நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில் மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..
நபியவர்களின் அழைப்பை ஏற்று அருகில் வந்த மற்றொரு மரம்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ قَالَ إِنْ دَعَوْتُ هَذَا الْعِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَنْزِلُ مِنْ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ ارْجِعْ فَعَادَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ (ترمذي)
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார்.அவருக்கு நபி ஸல் அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்தார்கள். அதற்கு அவர் நீங்கள் இறைத்தூதர் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் இந்த பேரீத்த மரத்தின் ஒரு கிளையை நான் அழைத்து சாட்சி சொல்ல வைக்கட்டுமா என்று கேட்டு விட்டு, அந்தக் கிளையை அழைத்தார்கள். அந்தக் கிளை மரகத்தில் இருந்து இறங்கி வந்து நபிக்கு அருகில் மண்டியிட்டது. பின்பு நீ திரும்பிச் செல் என்று சொன்னவுடன் அது திரும்பவும் மேலே ஏறி அந்த மரத்துடன் இணைந்தது அந்த கிராமவாசி இஸ்லாத்தை ஏற்றார். நூல் திர்மிதீ
மற்றொரு அறிவிப்பில் அந்த மரமே நகர்ந்து வந்து மூன்று முறை கலிமா சொல்லி விட்டுச் சென்றதாக உள்ளது
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ:كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِى سَفَرٍ فَأَقْبَلَ أَعْرَابِىٌّ فَلَمَّا دَنَا مِنْهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:أَيْنَ تُرِيدُ؟ قَالَ: إِلَى أَهْلِى قَالَ:هَلْ لَكَ فِى خَيْرٍ؟قَالَ:وَمَا هُوَ؟قَالَ:تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ فَقَالَ:وَمَنْ يَشْهَدُ عَلَى مَا تَقُولُ ؟ قَالَ :هَذِهِ السَّلَمَةُ فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهِىَ بِشَاطِئِ الْوَادِى فَأَقْبَلَتْ تُخُدُّ الأَرْضَ خَدًّا حَتَّى قَامَتْ بَيْنَ يَدَيْهِ فَاسْتَشْهَدَهَا ثَلاَثاً فَشَهِدَتْ ثَلاَثاً أَنَّهُ كَمَا قَالَ ثُمَّ رَجَعَتْ إِلَى مَنْبَتِهَا وَرَجَعَ الأَعْرَابِىُّ إِلَى قَوْمِهِ وَقَالَ: إِنِ اتَّبَعُونِى أَتَيْتُكَ بِهِمْ وَإِلاَّ رَجَعْتُ فَكُنْتُ مَعَكَ(دارمي)
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வந்தார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதற்கடுத்து நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் குடும்பத்தார்களிடம் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் நல்லது நடைபெற வேண்டாமா என்று கேட்க, நான் என்ன செய்ய வேண்டும். என்று அவர் கேட்டார். கலிமா சொல்ல வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூற, நீங்கள் சொல்வதற்கு என்ன சாட்சி என்று கேட்டார். இந்த மரம் (சாட்சி சொல்லும்) என்று கூறி அந்த மரத்தை அழைத்தார்கள். அந்த மரம் அதன் வேர்களோடு பூமியைக் கிழித்தபடி நகர்ந்து வந்து நபி ஸ் அவர்களின் முன்னால் நின்றது அதனை சாட்சி சொல்லச் சொன்னார்கள் மூன்று முறை சாட்சி சொல்லி விட்டு அது திரும்பிச் சென்றது. அவர் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தை ஏற்ற அந்த கிராமவாசி “நான் சென்று என் சமூகத்தினரிடமும் இதைக் கூறுவேன். அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களையும் உங்களிடம் அழைத்து வருவேன். இல்லா விட்டால் நான் திரும்பி வந்து உங்களுடன் தங்கி விடுவேன்”என்று கூறினார். -தாரமீ
இறைச்சியில் விஷம் தடவப்பட்டுள்ளது என்ற விஷயத்தை அந்த இறைச்சியே நபியவர்களிடம் கூறியது எல்லாப் பொருட்களுக்கும் அவர்கள் ரஹ்மத் என்பதால் தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ ثُمَّ قَالَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ مَازِلْتُ أَجِدُ مِنْ الْأَكْلَةِ الَّتِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي(ابوداود
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது யூதப் பெண்ணொருத்தி (நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தாள். அதை நபி ஸல் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்தப்பெண்) பொறிக்கப்பட்ட விஷம் கலந்து ஆட்டிறைச்சியைப் பரிமாறினாள். அதில் சிறிதளவு நபி ஸல் சாப்பிட்டார்கள். பிஷ்ர் என்ற நபித் தோழரும் சாப்பிட்டார்.ஆனால் அவர் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவளை அழைத்து வரப்பட்டது. அவளிடம் உனக்கு என்ன கேடு. என்ன கலந்து கொடுத்தாய் என்று கேட்க, அதற்கு அவள் நான் அதில் விஷம் கலந்தேன். நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் உங்களுக்கு அது இடையூறு தராது. நீங்கள் நபியாக இல்லா விட்டால் இந்த விஷத்தால் நீங்கள் இறந்து உங்களிடமிருந்து மக்களை நிம்மதி பெற வைக்க விரும்பினேன் என்றாள். ஒருவரை விஷம் வைத்துக் கொன்ற காரணத்தால் அவளுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டது. நபி ஸல் அவர்களின் முஃஜிஸா காரணமாக அந்த விஷம் அப்போது எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நபி ஸல் அவர்களின் சகராத் வேளையில் மிகவும் சிரமப்பட்ட போது ஆயிஷாவே கைபரில் நான் உண்ட உணவின் விஷம் இப்போது என் தொண்டையை அறுக்கிறது என்றார்கள்.
அனைத்துப் பதவிகளையும் அண்ணல் நபிக்குத் தந்த அல்லாஹ் ஷஹாதத் என்ற பதவியையும் தருவதற்காக இவ்வாறு ஏற்படுத்தி யிருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.
وفي رواية "فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبْهَا وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنْ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنْ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ..( ابوداود)
மற்றொரு அறிவிப்பில் அவளை மன்னித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அவளுக்கும் நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்
وفي رواية ابي داود قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْفَعُوا أَيْدِيَكُمْ وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ لَهَا أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ قَالَتْ الْيَهُودِيَّةُ مَنْ أَخْبَرَكَ قَالَ أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي لِلذِّرَاعِ
மற்றொரு அறிவிப்பில் அவள் நபி ஸல் அவர்களிடம் நான் விஷம் கலந்ததாக உங்களுக்கு யார் அறிவித்தார்கள் என்று கேட்ட போது தன் கையில் இருந்த ஆட்டின் முன் சப்பையைக் காட்டி இது எனக்கு அறிவித்தது என்று கூறினார்கள் அப்படிப் பார்த்தால் அந்த இறைச்சிக்கும் நபி ஸல் அவர்கள் அருட்கொடை என்று கூறலாம்
وَقَالَ الْبَيْهَقِيُّ فِي سُنَنه : اِخْتَلَفَتْ الرِّوَايَات فِي قَتْلهَا وَمَا رُوِيَ عَنْ أَنَس أَصَحّ ، قَالَ وَيَحْتَمِل أَنَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي الِابْتِدَاء لَمْ يُعَاقِبهَا حِين لَمْ يَمُتْ أَحَد مِنْ الصَّحَابَة مِمَّنْ أَكَلَ فَلَمَّا مَاتَ بِشْر بْن الْبَرَاء أَمَرَ بِقَتْلِهَا ،
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பெரிய அருட்கொடை என்பதை இந்த உலகில் உணராத முஸ்லிம்களும் மறுமையில் உணருவார்கள்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوْ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو النَّاسِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلَائِكَتَهُ وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي ائْتُوا نُوحًا فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُوسَى عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ فَيَسْتَحِي مِنْ رَبِّهِ فَيَقُولُ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ فَيَأْتُونِي فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي فَيُؤْذَنَ لِي فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ - يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {خَالِدِينَ فِيهَا} (بخاري 4476
ஷபாஅத் கிடைக்க வேண்டுமானால் பாங்கு சொன்ன பின் சலவாத் ஓதி இந்த துஆ ஓத வேண்டும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ (مسلم) 875
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக