வியாழன், 11 செப்டம்பர், 2025

மலர்ந்த முகமும் மாநபி(ஸல்) அவர்களும்

 12-09-2025

ரபீஉல் அவ்வல்-  19 بسم الله الرحمن الرحيم  

 மலர்ந்த முகமும் மாநபி (ஸல்) அவர்களும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

நற்குணங்கள் என்று எதுவெல்லாம் இருக்குமோ அத்தகைய அனைத்து  நற்குணங்களுக்கும் நபி ஸல் அவர்கள் உரித்தானவர்களாக இருந்தார்கள். 

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« إِنَّمَا بُعِثْتُ لأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلاَقِ (سنن الكبري للبيهقي 

பொதுவாக நற்குணத்தின் சிறப்பு

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا ».(سنن الكبري للبيهقي

عَنْ مَسْرُوقٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَضِىَ اللَّهُ عَنْهُ يَقُولُ : إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَأَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ أَخْيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا. رَوَاهُ مُسْلِمٌ

இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي

நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]

உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின் அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.               

படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம்

திருமணம் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிய வருகிறது

நற்குணத்தின் அடையாளங்களில் ஒன்று மலர்ந்த முகம் 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الْأَذَى (ترمذي

நற்குணம் என்பது மலர்ந்த முகத்துடன் இருப்பது, உபகாரம் செய்வது, யாருக்கும் தீங்கு தராமல் இருப்பது என அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறினார்கள்.

மலக்குகள் விண்ணுலகில் நபி ஸல் அவர்களை வரவேற்ற போது முக மலர்ச்சியுடன் வரவேற்றார்கள்

قَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي بَعْضُ أَهْلِ الْعِلْمِ عَمّنْ حَدّثَهُ عَنْ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنّهُ قَالَ تَلَقّتْنِي الْمَلَائِكَةُ حِينَ دَخَلْت السّمَاءَ الدّنْيَا ، فَلَمْ يَلْقَنِي مَلَكٌ ؟ إلّا ضَاحِكًا مُسْتَبْشِرًا ، يَقُولُ خَيْرًا وَيَدْعُو بِهِ حَتّى لَقِيَنِي مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ . فَقَالَ مِثْلَ مَا قَالُوا ، وَدَعَا بِمِثْلِ مَا دَعَوْا بِهِ إلّا أَنّهُ لَمْ يَضْحَكْ وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ مَا رَأَيْت مِنْ غَيْرِهِ . فَقُلْت لِجِبْرِيلَ يَا جِبْرِيلُ مَنْ هَذَا الْمَلَكُ الّذِي قَالَ لِي كَمَا قَالَتْ الْمَلَائِكَةُ وَلَمْ يَضْحَكْ ( إلَيّ ) ، وَلَمْ أَرَ مِنْهُ مِنْ الْبِشْرِ مِثْلَ الّذِي رَأَيْتُ مِنْهُمْ ؟ قَالَ فَقَالَ لِي جِبْرِيلُ : أَمَا إنّهُ لَوْ ضَحِكَ إلَى أَحَدٍ كَانَ قَبْلَك ، أَوْ كَانَ ضَاحِكًا إلَى أَحَدٍ بَعْدَك ، لَضَحِكَ إلَيْك ، وَلَكِنّهُ لَا يَضْحَكُ هَذَا مَالِكٌ خَازِنُ النّارِ (سيرة ابن هشام

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் முதல் வானில் நான் நுழைந்த போது என்னை சந்தித்த மலக்குகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். எனக்காக துஆ செய்தனர். அவர்களில் ஒரு மலக்கு மட்டும் எல்லோரையும் போல் வாழ்த்தினார் ஆனால் அவர் முகத்தில் மட்டும் முகமலர்ச்சியைக் காண முடியவில்லை அதற்கு நான் காரணம் கேட்டபோது அவர் தான் நரகத்தின் காவலாளி மாலிக் அலைஹ்ஸ்ஸலாம் அவர் இதற்கு முன்பு யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்தாலோ அல்லது இதற்குப் பின்பும் யாரையும் பார்த்து சிரிப்பவராக இருந்திருந்தால் நிச்சயம் உங்களைக் கண்டு சிரித்திருப்பார். அவர் இதுவரை சிரித்த தில்லை. காரணம் நரகத்தைக் கண்டதில் இருந்து அவர் சிரித்ததில்லை. என்று பதில் கூறப்பட்டது.                                     

நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்

عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். 

كان النبي صلى الله عليه وسلم كالرجل من رجالكم ، إلا أنه كان أكرم الناس ، وألين الناس ضحّاكا بسّاما [ مكارم الأخلاق لابن أبي الدنيا

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).    

சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதை (புன்னகைப்பதை) மார்க்கம் வலியுறுத்துகிறது. 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم

நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي

அநாகரீகமாக நடந்து கொண்ட கிராமவாசியிடமும் புன்னகையை வெளிப்படுத்திய நபி ஸல்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري) باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ-كتاب اللباس 5809

அனஸ் ரழி கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். நூல்: புகாரி 5809

தோழர்களிடம் கடுகடுப்பாக இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.

عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا : حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ : كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى

ஜைதுப்னு தாபித் ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.) நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன் இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.                                  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348

ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348

முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல் யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.

عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.         

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள். 

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல் அவர்கள்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.

அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்

عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.


வியாழன், 4 செப்டம்பர், 2025

நபி நேசம் நம் சுவாசத்தை விட..

 05-09-2025

ரபீஉல் அவ்வல்-12 بسم الله الرحمن الرحيم  

நபி நேசம் நம் சுவாசத்தை விட மேலானது

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

உயிருக்கும் மேலாக நபிகளாரை நேசிக்க வேண்டும்

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ (6) الاحزاب -  

அல்லாஹ் ரஸூலை விட மற்றவைகளை அதிகமாக நேசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதால் கிடைக்கும் பலன்கள்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ (بخاري3688

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கியாமத் எப்போது வரும் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கியாமத் நாளுக்காக நீர் என்ன தயாரித்து வைத்துள்ளீர் என்று கேட்க, அதற்கு அவர் |(பெரிதாக) எதுவும் என்னிடம் இல்லை. எனினும் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நேசிக்கிறேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள்  நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடன் சுவனத்தில் இருப்பீர் என்று பதில் கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கியது.நான் நபி ஸல் அவர்களையும், அபூபக்கர் (ரழி) உமர்  (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். அவர்கள் அளவுக்கு நான் அமல் செய்யவலில்லை. எனினும் அவர்களை நான் நேசிப்பதால் அவர்களுடன் சுவனத்தில் இருப்பேன் என்பதை ஆதரவு வைக்கிறேன். புகாரீ3688                           

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் வெளிப்பாடாக

அவர்களுடன் சுவனத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபித்தோழர்கள்

عَنْ عَائِشَة قَالَتْ جَاءَ رَجُل إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُول اللَّه : إِنَّك لَأَحَبّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبّ إِلَيَّ مِنْ أَهْلِي وَأَحَبّ إِلَيَّ مِنْ وَلَدِي وَإِنِّي لَأَكُون فِي الْبَيْت فَأَذْكُرك فَمَا أَصْبِر حَتَّى آتِيك فَأَنْظُر إِلَيْك وَإِذَا ذَكَرْت مَوْتِي وَمَوْتك عَرَفْت أَنَّك إِذَا دَخَلْت الْجَنَّة رُفِعْت مَعَ النَّبِيِّينَ وَإِنْ دَخَلْت الْجَنَّة خَشِيت أَنْ لَا أَرَاك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى حَتَّى نَزَلَتْ عَلَيْهِ وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ( تفسير ابن كثير

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் நீங்கள் எனக்கு என் உயிரை விடவும் என் மனைவியை விடவும் என் பிள்ளைகளை விடவும் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள். நான் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி உங்களின் ஞாபகம் வந்தால் உடனே உங்களை வந்து  பார்த்து விடுகிறேன். இந்த நிலையில் ஒரு விஷயம் என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனக்கும் மவ்த் உண்டு. உங்களுக்கும் மவ்த் உண்டு. எனினும் உங்களின் வஃபாத்துக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். நாங்கள் கீழ்நிலையில் இருப்போம் எனவே இந்த உலக வாழ்வுக்குப் பிறகு உங்களைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலை என்னை வாட்டியது. இதன் விளக்கம் தெரியாமல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அதனால் ஓடோடி வந்தேன் என்றார். நபி ஸல் அவர்கள் சற்று மவுனமாக இருந்தார்கள். சற்று நேரத்தில் மேற்படி வசனம் இறங்கியது. 

عَنْ سَعِيد بْن جُبَيْر قَالَ : جَاءَ رَجُل مِنْ الْأَنْصَار إِلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَحْزُون فَقَالَ لَهُ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " يَا فُلَان مَالِي أَرَاك مَحْزُونًا " فَقَالَ يَا نَبِيّ اللَّه شَيْء فَكَّرْت فِيهِ فَقَالَ مَا هُوَ ؟ قَالَ نَحْنُ نَغْدُو عَلَيْك وَنَرُوح نَنْظُر إِلَى وَجْهك وَنُجَالِسك وَغَدًا تُرْفَع مَعَ النَّبِيِّينَ فَلَا نَصِل إِلَيْك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَتَاهُ جِبْرِيل بِهَذِهِ الْآيَة " وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ " الْآيَة فَبَعَثَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَبَشَّرَهُ . (تفسير ابن كثير)

மற்றொரு அறிவிப்பில் (நன்கு திடகாத்திரமாக இருந்த) ஒரு சஹாபீ  கவலையுடன் (உடல் மெலிந்து) நபிகளாரிடம் வந்தபோது ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்க, யாரஸூலல்லாஹ் நாங்கள் காலையிலும் மாலையிலும் உங்களுடனே இருக்கிறோம் உங்களின் திருமுகத்தை தினமும் காண்பதிலும் உங்களுடன் அமருவதிலும் நாங்கள் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் உங்களின் மறைவுக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். உங்களை நெருங்க முடியாதவர்களாக மறுமையில் ஆகி விடுவோமோ என்ற கவலைப் படுகிறோம் என்று கூற, சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இந்த வசனத்துடன் இறங்கினார்கள்                                              

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தோழர்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا (مسلم4742

உஹதுப்போரில் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஏழு அன்சாரித் தோழர்கள் மற்றும் இரண்டு குரைஷித் தோழர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிரிகளுடன் தனித்து விடப்பட்டார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்ட  அந்த சூழ்நிலையில்  (நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தில்) தமது தோழர்களிடம் கூறினார்கள். உங்களில் யார் எதிரிகளிடமிருந்து இறைத்தூதரைப் பாதுகாக்கும் கேடயமாக இப்போது செயல்படுகிறாரோ அவருக்கு சுவனம் உண்டு என்றவுடன் முதலில் ஒரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட  நிலையில் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த சுபச்செய்தியைக் கூறினார்கள்.  அதற்குப் பின் மற்றொரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இப்படியாக ஏழு அன்சாரித்தோழர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். (இறுதியில் அல்லாஹ்வின் அருளால் நபி(ஸல்) அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்) அப்போது நபி(ஸல்)அவர்கள் அவ்விரு குரைஷித் தோழர்களிடம் கூறினார்கள். குரைஷித் தோழர்களான நாம் நமது அன்சாரித்தோழர்களுக்கு சரி சமமாக நடந்து கொள்ளவில்லை. அதாவது அந்த ஏழு பேர் மட்டுமே ஷஹாத த்திலும் சுவனத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முந்திக் கொண்டார்கள்.                        

விளக்கம்- அனைத்து நபித் தோழர்களுக்கும் நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை இருந்தது. இருப்பினும் அதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி இருந்தது.ஒருவர் ஷஹீதாக்கப்பட்டவுடன் உடனே வேகமாக களத்தில் இறங்குவதில் அன்சாரித்தோழர்கள் மிக வேகமாக இருந்தார்கள்.                                                       

عن مخرمة بن بكير عن أبيه قال : بعثني رسول الله صلى الله عليه و سلم يوم أحد لطلب سعد بن الربيع و قال لي : إن رأيته فاقرئه مني السلام و قل له : يقول لك رسول الله صلى الله عليه و سلم : كيف تجدك ؟ قال : فجعلت أطوف بين القتلى فأصبته وفي آخر رمق و به سبعون ضربة ما بين طعنة برمح و ضربة بسيف و رمية بسهم فقلت له : يا سعد إن رسول الله صلى الله عليه و سلم يقرأ عليك السلام و يقول لك : خبرني كيف تجدك ؟ قال على رسول الله السلام و عليك السلام قل له : يا رسول الله أجدني أجد ريح الجنة و قل لقومي الأنصار لا عذر لكم عند الله أن يخلص إلى رسول الله صلى الله عليه و سلم و فيكم شفر يطرف قال : و فاضت نفسه رحمه الله [ مستدرك الحاكم   وفي رواية يقول سعد : جزاك الله عنا و عن جميع الأمة خيرا 

ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி (ஸல்) அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ (ரழி) எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது (ரழி) அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்  

நபிகளாரின் மீதுள்ள பிரியத்தால் அவர்களின் புனித உடம்பை முத்தமிடும் பாக்கியம் பெற்ற சஹாபீ

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي فَقَالَ اصْطَبِرْ قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ (ابن ماجة- بَاب فِي قُبْلَةِ الْجَسَدِ- كِتَاب الْأَدَبِ

உஸைத் இப்னு ஹுழைர் என்ற நபித்தோழர் தமாஷாகப் பேசுவார்.  ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களும் விளையாட்டாக அவரது இடுப்பில் ஒரு குச்சியால் குத்தினார்கள். இதன் பின்பு அந்த சஹாபீ யாரஸூலல்லாஹ் என்னுடைய இடுப்பில் நீங்கள் குத்தி வலியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே அதற்குப் பழிக்குப் பழியாக நான் உங்களை அதே போன்று குத்துவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும் என்ற போது நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவர் யாரஸூலல்லாஹ் நீங்கள் என்னைக் குத்தும்போது என் உடம்பில் சட்டை இருந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்பில் சட்டை உள்ளதே என்று கூற, நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை உயர்த்திக் காண்பிக்க, அவர் நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் புனித மேனியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ் இதைத் தான் நான் விரும்பினேன் என்றார்.                                                              

மேற்படி ஹதீஸ் பின்வரும் அறிவிப்பில் ஸவாத் ரழி என்ற சஹாபீ விஷயமாக வருகிறது

عن سَوَاد بْن عَمْرٍو قَالَ : أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَأَنَا مُتَخَلِّقٌ بِخَلُوقٍ فَلَمَّا رَآنِى قَالَ لِى :« يَا سَوَادُ بْنَ عَمْرٍو خَلُوقُ وَرْسٍ أَوَلَمْ أَنْهَ عَنِ الْخَلُوقِ؟ ». وَنَخَسَنِى بِقَضِيبٍ فِى يَدِهِ فِى بَطْنِى فَأَوْجَعَنِى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْقِصَاصَ قَالَ الْقِصَاصَ فَكَشَفَ لِى عَنْ بَطْنِهِ فَجَعَلْتُ أُقَبِّلُهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَدَعُهُ شَفَاعَةً لِى يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري للبيهقي

ஸவாத் இப்னு அம்ர் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒரு நறுமணத்தைப் பூசிய படி நான் வந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த போது அவர்களின் கையில் வைத்திருந்த குச்சியைக் கொண்டு என் வயிற்றில் இடித்து விட்டார்கள். எனக்கு வலித்தது. நான் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே என்னை அடித்ததற்கு நான் உங்களைப் பழி வாங்க வேண்டும் என்றேன். நபி(ஸல்)அவர்கள் தன் வயிற்றைத் திறந்து காட்டினார்கள், நான் அவர்களின் வயிற்றை முத்தமிட்டு, யாரஸூலல்லாஹ் மறுமையில் என் சிபாரிசுக்காக விட்டு வைக்கிறேன் என்றேன்                                                                 

நபி (ஸல்) அவர்களை உளமாற நேசிப்பவர்களின் அடையாளங்களில் சில

யார் மீதும் சிறிதளவும் பொறாமை கொள்ளாமல் எதார்த்தமான உள்ளத்துடன் இருப்பது நபிகளார் சுன்னத். 

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ ثُمَّ قَالَ لِي يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ (ترمذي) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

அனஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்கள் உன்னால் இயன்ற வரை யார் மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளாமல் இரு அது தான் எனது சுன்னத்தாகும். எனது இந்த நடைமுறையை எவர் பின்பற்றுவாரோ அவர் என்னை நேசித்தவர் ஆவார். என்னை நேசித்தவர் என்னோடு சுவனத்தில் இருப்பார் என்றார்கள் - நூல் திர்மிதீ                                                             

عن ابن مسعود رضي الله عنه قال  قال  رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يُبَلِّغُنِي احدٌ من اصحابي عن احد شيئا فاِنِّي اُحبُّ ان أَخْرُجَ اليكم وانا سليم الصدر  (ابوداود)

உங்களில் யாரும் யாரைப் பற்றியும் குறையாக என்னிடம் வந்து பேச வேண்டாம். காரணம் நான் உங்களிடமிருந்து விடை பெறும்போதும் யாரைப் பற்றியும் தவறான எண்ணம் இல்லாமல் விடைபெற நினைக்கிறேன்.

أَنَسُ بْنُ مَالِكٍ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ مِنْ هَذَا الْفَجِّ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، قَالَ : فَطَلَعَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وَضُوئِهِ قَدْ عَلَّقَ نَعْلَهُ فِي يَدِهِ الشِّمَالِ ، فَسَلَّمَ ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ مَرَّتِهِ الأُولَى ، فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الأُولَى ، فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : إِنِّي لاحَيْتُ أَبِي ، فَأَقْسَمْتُ أَلا أَدْخُلَ عَلَيْهِ ثَلاثًا ، فَإِنْ رَأَيْتَ أنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَنْقَضِيَ الثَّلاثَةُ ، فَعَلْتَ ، قَالَ : نَعَمْ ، قَالَ أَنَسٌ : فَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ ثَلاثَ لَيَالٍ ، قَال : فَلَمْ يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا ، غَيْرَ أَنَّهُ إذَا تَعَارَّ مِنَ اللَّيْلِ ، وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ، ذَكَرَ اللَّهَ ، وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلاةِ الْفَجْرِ غَيْرَ أَنَّهُ لا يَقُولُ إِلا خَيْرًا قَالَ : فَلَمَّا مَضَتِ الثَّلاثُ لَيَالٍ ، وَكِدْتُ أَحْتَقِرُ عَمَلَهُ ، قُلْتُ : يَا عَبْدَ اللَّهِ إِنَّهُ لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ وَالِدِي غَضَبٌ ، وَلا هَجْرٌ ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ ثَلاثَ مَرَّاتٍ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، فَطَلَعْتَ أَنْتَ الثَّلاثَ مَرَّاتٍ ، فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لأَنْظُرَ مَا عَمَلُكَ ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ ، فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ قَالَ : فَانْصَرَفْتُ عَنْهُ ، فَلَمَّا وَلَّيْتُ ، دَعَانِي ، فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لا أَجِدُ فِي نَفْسِي عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا ، وَلا أَحْسُدُهُ عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ : فَهَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ ، وَهِيَ الَّتِي لا تُطَاقُ  (أحمد

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம், நபி (ஸல்) அவர்கள். அப்போது உங்கள் முன் ஒரு சுவனவாசி வருகை தருவார். என்றார்கள்அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளூச் செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.

மறுநாள் நபிஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதால் அதே மனிதர் கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம் மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம் மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் நான் என் தந்தையைிடம் வாக்கு வாதம் செய்து, மூன்று நாட்கள் அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டேன். அந்த மூன்று நாட்கள் வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா என்று கேட்டார் அதற்கு அந்த அன்சாரித் தோழர் சரி என பதிலளித்தார்.

அனஸ் (ரலி அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் (ரலி அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை, ஆனால், தூக்கத்தில் விழிப்பு ஏற்பட்டு புரண்டு படுத்தால் அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார்

அப்துல்லாஹ் (ரலி அவர்கள் கூறினார்கள் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன், மூன்று இரவுகள் கடந்த பின் அவரது அமல்கள் மிகக் குறைவானது என நினைத்து அவரிடம் நான் கூறினேன். அல்லாஹ்வின் அடியாரே எனக்கும் என் தந்தைக்குமிடையே கோபமோ, வெறுப்போ கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார் என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள் தான் வந்தீர்கள் நான் உங்களது செயல்களை கவனித்து நான் உம்மை பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன் ஆனால் உமது செயல்கள் எதுவும் எனக்கு பெரிதாக தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல் அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்? என்று கேட்டேன் அதற்கு அவர் நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்ற போது என்னை அழைத்த அவர். நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும் நான் எந்த மனிதனையும் மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி அதனால் தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள் என்று கூறினார்கள்

மக்களிடம் விடுபட்டுப் போன ஒரு சுன்னத்தை உயிர்ப்பிப்பவருக்கு கிடைக்கும் நற்கூலி

عن كَثِير بْن عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنْ ابْتَدَعَ بِدْعَةً لَا يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ شَيْئًا (ابن ماجة) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

عن أبي هريرةَ ( رضي اللَّه عنه ) ، عن النبيِّ صلى الله عليه وسلم قَالَ : " المُسْتَمْسِكُ بسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي ، لَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ " ،(طبراني

காலம் கெட்டு விட்ட இந்த உம்மத்தின் கடைசிக் காலத்தில் என்னுடைய ஒரு சுன்னத்துக்கு உயிர் கொடுப்பவர் அதாவது நடைமுறைப் படுத்துபவரின் நற்கூலி நூறு ஷஹீதுகளின் நற்கூலியைப் போன்றதாகும். -  

கடைசி காலத்தில் ஒரே ஒரு சுன்னத்தைக் கடை பிடிப்பவருக்கு  இவ்வளவு சிறப்பை நபி ஸல் கூறுவதன் காரணம் அத்தகைய காலத்தில்  சுன்னத்தைப் பின்பற்றுவதில்  மிகப் பெரும் வெற்றிடம் இருக்கும் என்பதால்தான்

சுன்னத்துக்களைப் பின்பற்றுபவரால் தான் ஃபர்ளுகளை பரிபூரணமாக நிறைவேற்ற முடியும்.

உளூவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் உளூவில் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஷர்த். ஆனால் துவக்கத்தில் முகத்தைக் கழுவுதல் என்ற ஃபர்ளை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதற்கு முன்பு வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல் என்ற சுன்னத்துகளை நிறைவேற்றி விட்டு பிறகு முகத்தைக் கழுவுகிறோம். காரணம் வாய் கொப்பளிக்கும்போது தண்ணீரில் ஏதேனும் டேஸ்ட் மாறியிருந்தால் நாசிக்கு நீர் செலுத்தும்போது ஏதேனும் தண்ணீரில் ஏதேனும் வாடை மாறியிருந்தால் தெரிந்து விடும். வேறு தண்ணீரை மாற்றிக் கொள்ளலாம். ஃபர்ளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக சுன்னத்துக்கள் உள்ளன.              

நபிகளாரின் சுன்னத்தை சஹாபாக்கள் சின்னச் சின்ன விஷயங்களிலும் பின்பற்றினார்கள்

நபி ஸல் நடந்து போகும்போது குறிப்பிட்ட இடத்தில் பாதையை மாற்றிச் செல்வது போல் நடந்தார்கள் என்பதற்காக அவ்வாறே நடந்த சஹாபி 

عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ فَسُئِلَ لِمَ فَعَلْتَ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا فَفَعَلْتُ (احمد)  عَن ابن عُمَر  أنه كان يأتي شجرة بين مكة والمدينة ، فيقيل تحتها ، ويُخْبِرُ أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك.(بزار) الترغيب والترهيب (يقيل -قيلولة

நபி ஸல் அவர்களை சந்தித்த போது அவர்களின் சட்டையில் ஒரு சில பட்டன்கள் திறந்திருந்தது என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் கடும் குளிரிலும் அந்த குறிப்பிட்ட சட்டை பட்டன்களை பூட்டாத நபித் தோழர்கள்

عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ حَدَّثَنِي  مُعَاوِيَة بْن قُرَّةَ حَدَّثَنِي أَبِي قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعْنَاهُ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ قَالَ فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتَمَ قَالَ عُرْوَةُ ( اَحَدُ  الرواة) "فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا (ابوداود) بَاب فِي حَلِّ الْأَزْرَارِ - كِتَاب اللِّبَاسِ

நபி ஸல் அவர்கள் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டதால் அதையே தினமும் தன்னுடைய உணவாக ஆக்கியவர்

عن انس إِنَّ خَيَّاطًا2 دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسٌ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَتَتَبَّعُ6 الدُّبَّاءَ مِنْ حَوَالَيْ الْقَصْعَةِ قَالَ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ (بخاري) وفي رواية لمسلم فَمَا صُنِعَ لِى طَعَامٌ بَعْدُ أَقْدِرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ (مسلم) باب جَوَازِ أَكْلِ الْمَرَقِ- كتاب الأشربة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதை வெறுத்தார்களோ அதை முற்றிலும் வெறுத்த நபித்தோழர்கள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺوَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ رواه مسلم كتاب اللباس والزينة4238

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ ﷺرَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ ﷺخُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ قَالَ لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ ﷺرواه مسلم كتاب اللباس والزينة4243

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். தங்கத்தாலான மோதிரம் அவருடைய கையில் இருந்த து. அதைக் கழற்றி நபி ஸல் அவர்கள் வீசி எறிந்தார்கள். பிறகு கூறினார்கள். யார் நெருப்புக் கங்கு அணிவிக்கப் படுவதை விரும்புவாரோ அவர் தனது கையில் அதை அணிந்து கொள்ளட்டும். என்றும் எச்சிரித்தார்கள். பிறகு நபி ஸல் சென்ற பிறகு  அந்த மனிதரிடம் அந்த மோதிரத்தை எடுத்து வேறு வகையில் பயனடைந்துகொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர் அல்லாஹ் மீது சத்தியமாக  நபி ஸல் அவர்கள் வெறுத்து வீசி  எறிந்த  ஒன்றை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்.  என்றார்

عَنْ أَنَسٍ رضي الله عنه  قَالَ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتْ الْخَمْرُ قَالَ وَكَانَ أَبُو طَلْحَةَ قَدْ اجْتَمَعَ إِلَيْهِ بَعْضُ أَصْحَابِهِ فَجَاءَ رَجُلٌ فَقَالَ أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ قَالَ فَخَرَجْتُ فَنَظَرْتُ فَسَمِعْتُ مُنَادِيًا يُنَادِي أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَأَخْبَرْتُهُ قَالَ فَاذْهَبْ فَأَهْرِقْهَا قَالَ فَجِئْتُ فَأَهْرَقْتُهَا رواه احمد

மலர்ந்த முகமும் மாநபி(ஸல்) அவர்களும்

 12-09-2025 ரபீஉல் அவ்வல்-  19 بسم الله الرحمن الرحيم    மலர்ந்த முகமும் மாநபி (ஸல்) அவர்களும் https://chennaijamaathululama.blogspot...